TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 9th July 2024

1. இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சியான, ‘ஜைவா கிராமம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஹரியானா

இ. பஞ்சாப்

ஈ. கேரளா

  • கேரள மாநிலத்தின் கருமல்லூரில் தொடங்கப்பட்ட, ‘ஜைவா கிராமம்’ இயக்கம் கரிம வேளாண்மை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரிமா சங்கத்தால் ஆதரிக்கப்படும் இது ஓணத்திற்கு காய்கறிகளை வளர்ப்பதற்கு மக்களை ஊக்குவிக்கிறது.
  • பங்கேற்பாளர்கள் மரக்கன்றுகள், உரங்கள் மற்றும் கருவிகளுக்கு மானியங்களைப் பெறுவதோடு அனுபவம் வாய்ந்த விவசாயிகளிடமிருந்து வேளாண்மையைக் கற்றுக்கொள்வார்கள். இந்த முயற்சி நிலையான வேளாண் வளர்ச்சி, காய்கறி உற்பத்தியில் தன்னிறைவு மற்றும் விவசாயிகளின் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கேரள மாநிலத்தின் விவசாய பாரம்பரியத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முதன்மை திட்டமாகும்?

அ. நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையிலான மற்றும் DRDOஆல் ‘மேக் இன் இந்தியா’இன்கீழ் செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டமானது பாதுகாப்பில் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது. தற்போது உள்நாட்டில் கிடைக்காத பாதுகாப்பு மற்றும் இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இந்திய தொழில்கள், MSMEகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இது மானியங்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் தனியார் துறைகளிடையே இராணுவ தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியின் கலாச்சாரத்தை வளர்க்கிறது. மேலும், முன்னோடி முதன்மை தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதப்படைகள், ஆராய்ச்சி அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதில் இது கவனம் செலுத்துகிறது.

3. அண்மையில், பேரிடர் நிர்வாகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக, Advanced Land Observing Satellite-4 “DAICHI-4” (ALOS-4)ஐ வெற்றிகரமாக ஏவிய விண்வெளி நிறுவனம் எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

  • ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமை (JAXA) 2024 ஜூலை.1 அன்று, தனகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ஏவுகலத்தைப் பயன்படுத்தி Advanced Land Observing Satellite-4 “DAICHI-4” (ALOS-4)ஐ வெற்றிகரமாக ஏவியது. ALOS-4 ஆனது Phased Array type L-band Synthetic Aperture Radar-3 (PALSAR-3) மற்றும் Space-அடிப்படையிலான AIS Experiment (SPAISE3) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இது உயர்தெளிவுத்திறன், அனைத்து வானிலை கூர்நோக்குத்திறனை மேம்படுத்துகிறது. இந்தச்செயற்கைக்கோள் பேரிடர் நிர்வாகத்திற்கு முக்கியமானதாகும். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பைத் தணிக்க விரிவான கண்காணிப்புத் திறன்களை இது கொண்டுள்ளது.

4. எந்த வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் நோய் பரவுகிறது?

அ. அனோபீலஸ் கொசுக்கள்

ஆ. ஏடிஸ் கொசுக்கள்

இ. கியூலெக்ஸ் கொசுக்கள்

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அதுல் கோயல், மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கினார். சிறுதலை மற்றும் கருவிலுள்ள நரம்பியல் பிரச்சினைகள் ஆகியவற்றுடனான ஜிகா வைரசின் தொடர்பு காரணமாக இந்த ஆலோசனை விழிப்புணர்வை வலியுறுத்துகிறது.
  • கர்ப்பிணிப் பெண்களுக்கு ஜிகா வைரஸ் உள்ளதா? என்பதை கண்காணிக்கவும், சுகாதார மையங்கள் கொசு இல்லா நிலையை உறுதிப்படுத்தவும், நடுவண் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதன்மையாக பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசுக்கள் வழியாக பரவுகிற ஜிகாவின் அறிகுறிகளில், ​​காய்ச்சல், சொறி மற்றும் மூட்டு வலி ஆகியவை அடங்கும்.

5. அண்மையில், எதிர்கால தொற்றுநோய்களுக்கு இந்திய சுகாதார அமைப்பின் தயார்நிலையை ஒருங்கிணைத்து வலுப்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி

இ. இந்திய ரிசர்வ் வங்கி

ஈ. பாரத வங்கி

  • எதிர்கால தொற்றுநோய்களுக்கான இந்தியாவின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $170 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூஹி முகர்ஜி மற்றும் மியோ ஓகா ஆகியோர் இதில் கையொப்பமிட்டவர்களாவர். “நெகிழக்கூடிய மற்றும் உருமாறும் சுகாதார அமைப்புகள் திட்டத்திற்கான பலப்படுத்தப்பட்ட மற்றும் அளவிடக்கூடிய நடவடிக்கைகள்” ஆனது நோய் கண்காணிப்பு, நலத்திற்கான மனித வளங்கள் & காலநிலை-நெகிழ்திறன்மிக்க பொதுச்சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய சுகாதார கொள்கை-2017 மற்றும் PM-ABHIM போன்ற முன்னெடுப்புகளை ஆதரிக்கிறது.

6. அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்?

அ. ஒடிசா

ஆ. ஜார்க்கண்ட்

இ. பீகார்

ஈ. மத்திய பிரதேசம்

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் (JMM) ஹேமந்த் சோரன் மூன்றாவது முறையாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் CP இராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக 2013-2014 மற்றும் 2019-2024 ஆகிய காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன், 2024 ஜனவரியில் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜினாமா செய்தார். 2024 ஜூனில் பிணை பெற்ற அவர், JMM, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை உள்ளடக்கிய மககத்பந்தன் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறார்.

7. அண்மையில், சர் கெய்ர் ஸ்டார்மர் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்?

அ. ஐக்கிய இராச்சியம்

ஆ. ஆஸ்திரேலியா

இ. நியூசிலாந்து

ஈ. போலந்து

  • மூன்றாம் சார்லஸ் அரசரால் சர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் 58ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது தொழிலாளர் கட்சி 412/650 இடங்களில் வென்று ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றது. பழைமவாத தலைவர் ரிஷி சுனக் 119 இடங்களை மட்டுமே வென்றார். கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான 10, டௌனிங் தெருவில் இனி வசிப்பார்.

8. துரந்த் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கூடைப்பந்து

ஆ. ஹாக்கி

இ. கிரிக்கெட்

ஈ. கால்பந்து

  • ஆசியாவின் மிகப்பழமையான சங்கம் அடிப்படையிலான கால்பந்து போட்டியான 133ஆவது துரந்த் கோப்பையானது 2024 ஜூலை.27 தொடங்கி ஆக.31 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் கொல்கத்தா, கோக்ராஜர், ஜாம்ஷெட்பூர் மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. போட்டியை முதல் முறையாக ஜாம்ஷெட்பூர் நடத்துகிறது. இந்தப்போட்டியில் இந்திய சூப்பர் லீக், ஐ-லீக் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த 24 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் தொடக்கப்போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை கொல்கத்தாவில் நடைபெறும். மோகன் பாகன் அணி நடப்புச் சாம்பியனாக உள்ளது.

9. காவேரியாறு மாசுபடுவதை விசாரிப்பதற்காக ஒன்பதுபேர்கொண்ட குழுவை அமைத்துள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • காவேரியாறு மாசுபடுவதை விசாரிப்பதற்காக கர்நாடக மாநில அரசு ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்துக்களின் புனித ஆறான காவேரி மேற்குத்தொடர்ச்சிமலையில் பிரம்மகிரி மலையிலிருந்து 1,341 மீ உயரத்தில் உருவாகிறது. இது வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன்பு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக 800 கிமீ நீளத்திற்குப் பாய்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி முழுவதும் 81,155 சதுர கிமீ பரப்பளவிற்கு இது நன்மைபயக்கிறது. இதன் முதன்மை துணையாறுகளில் ஹேரங்கி, ஹேமாவதி, சிம்சா, அரக்காவதி, லட்சுமன தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகியவை அடங்கும். இதன் முக்கிய அணைகள் கிருஷ்ணராஜ சாகரம், மேட்டூர் மற்றும் பனசுரா சாகர் ஆகும்.

10. அண்மையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் தென்பட்ட பொதுவான புல் மஞ்சள் என்பது சார்ந்த இனம் எது?

அ. சிலந்தி

ஆ. பட்டாம்பூச்சி

இ. தவளை

ஈ. எறும்பு

  • முதுமலை புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட 3 நாள் கணக்கெடுப்பின்போது, முதல் முறையாக, பொதுவான புல் மஞ்சள் பட்டாம்பூச்சிகள் காணப்பட்டன. பொதுவான புல் மஞ்சள் (Eurema hecabe) பட்டாம்பூச்சி என்பது ஆசியா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் காணப்படும் ஒரு சிறிய பட்டாம்பூச்சி ஆகும். அவை திறந்த புல்வெளி அல்லது புதர் நிலப்பரப்புகளில் பெரிதும் வாழ்கின்றன. அவை கண்கவர் மஞ்சள் இறக்கைகளைக் கொண்டுள்ளன. பரவலாக காணப்பட்டபோதிலும், அவை IUCNஇன் செம்பட்டியலில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் அவை இந்தியாவின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் கீழ் பாதுகாக்கப்படாத இனமாகும்.

11. அண்மையில், எஃகுக்கழிவு சாலை குறித்த முதல் பன்னாட்டு மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. போபால்

ஆ. புது தில்லி

இ. கோயம்புத்தூர்

ஈ. சென்னை

  • அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR), மத்திய சாலை ஆராய்ச்சிக்கழகம், (CRRI) வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் PHD கூட்டமைப்பு ஆகியவை எஃகுக்கழிவு கலந்த சாலை அமைத்தல் குறித்த முதலாவது பன்னாட்டு மாநாட்டிற்கு புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தன. இதில் கலந்துகொண்ட NITI ஆயோக் (அறிவியல்) உறுப்பினர் Dr V K சரஸ்வத், எஃகுக்கழிவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார்.
  • எஃகுக்கழிவுகளைப் பயன்படுத்தி சாலை அமைத்தல், பராமரித்தல் ஆகியவற்றுக்கான இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வதன்மூலம், மலிவு, சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் குறைத்தல், மேம்பட்ட சாலை அமைப்பு உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். கட்டுமானம், பராமரிப்புப் பணிகளுக்காக நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1.8 பில்லியன் டன், இயற்கை வளப்பொருட்கள் தற்போது தேவைப்படுகின்றன. இந்தியாவின் முதல் எஃகுக்கழிவுச்சாலை சூரத்தில் போடப்பட்டது.

12. கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையச் செயற்குழுவின் (CCEXEC) 86ஆம் அமர்வு நடத்தப்பட்ட இடம் எது?

அ. லண்டன்

ஆ. பாரிஸ்

இ. ரோம்

ஈ. ஜெனீவா

  • ரோமில் 2024 ஜூலை.01-05 வரை நடந்த கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையச்செயற்குழுவின் 86ஆவது அமர்வில் இந்தியா பங்கேற்றது. FSSAI தலைமைச்செயலதிகாரி G கமலா வர்தனா ராவ் பிரதிநிதித்துவப்படுத்திய இந்த அமர்வில் மசாலா, தாவர எண்ணெய்கள் மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கான தரங்களை இந்தியா ஆதரித்தது. முதன்மை முன்னெடுப்புகளில் ஷிகா-நச்சினை உற்பத்தி செய்யும் ஈ.கோலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், உணவுப்பதப்படுத்துதலில் பாதுகாப்பான நீர் பயன்பாடு மற்றும் உணவுப் பொட்டலம் போடுவதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். FAOஆல் 1963ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் ஆணையம், 1964 முதல் இந்தியா உட்பட 189 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. NITI ஆயோக்கின் மகளிர் தொழில்முனைவோர் திட்ட தளமும் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனமும் இணைந்து பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்க புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

NITI ஆயோக்கின் பெண் தொழில்முனைவோர் திட்ட தளமும் டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனமும், ‘SEHER’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலுள்ள பெண் தொழில்முனைவோருக்கு நிதி தொடர்பான தகவல்களை வழங்குதல், வணிகத்திறன்களை அதிகரித்தல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பெண் தொழில்முனைவோர் திட்ட தளம் என்பது NITI ஆயோகால் நிறுவப்பட்ட ஒரு பொது-தனியார் கூட்டு தளமாகும். இது இந்தியாவில் பெண் தொழில்முனைவோருக்கு ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் உதயம் பதிவு தளத்தின் தகவல்படி, இந்தியாவில் 63 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 20.5% பெண்களுக்குச் சொந்தமானது. கடன் மற்றும் நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன்மூலம், SEHER திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு பெரிதும் பயனளிக்கும்.

2. ஜூலை.27இல் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் NITI ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் NITI ஆயோக் நிர்வாகக்குழு கூட்டம் ஜூலை.27ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கும், ‘விக்ஷித் பாரத்-2047’ திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. இந்திய விடுதலையின் நூறாவது (௧௦௦) ஆண்டைக் கொண்டாடும்போது முப்பது (௩௦) டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தைக் கொண்ட வளர்ந்த நாடாக உருவாக்குவே விக்ஷித் பாரத் – 2047 திட்டத்தின் நோக்கமாகும்.

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஜன.01ஆம் தேதி NITI ஆயோக் நடுவணரசால் உருவாக்கப்பட்டது. தேசிய வளர்ச்சிக்கான கொள்கையை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

3. கோடைக்கால நெல் சாகுபடி 19% அதிகரிப்பு: நடுவணரசு.

நடப்பு ஆண்டு காரீப் (கோடை) பருவக்கால நெல் சாகுபடி பரப்பளவு 19.35% உயர்ந்து, 59.99 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என நடுவணரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு, 50.26 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டது. காரீப் காலப்பயிர்களானது தென்மேற்குப்பருவமழை தொடங்கும் ஜூனில் விதைக்கப்பட்டு, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும்.

4. புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய குழு.

நடுவணரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்ய நாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், நடுவணரசால் அவை, “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, 01-7-2024 முதல் இச்சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்தக்குழு இந்தப் புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒருமாதகாலத்திற்குள் அரசுக்கு வழங்கும்.

1. ‘Jaiva Gramam’ campaign, a new initiative to promote organic farming, recently launched in which state?

A. Bihar

B. Haryana

C. Punjab

D. Kerala

  • The ‘Jaiva Gramam’ campaign launched in Karumalloor, Kerala, aims to promote organic farming. Supported by the local panchayat and Lions Club, it encourages households to grow vegetables for Onam. Participants receive subsidies for saplings, fertilizers, and tools, and learn from experienced farmers. The initiative aims for sustainable agricultural growth, self-sufficiency in vegetable production, and preserving Kerala’s farming heritage to boost farmers’ economic prospects.

2. Technology Development Fund scheme is a flagship programme of which ministry?

A. Ministry of Coal and Mines

B. Ministry of Education

C. Ministry of Home Affairs

D. Ministry of Defence

  • The Technology Development Fund (TDF) scheme, led by the Ministry of Defence and executed by DRDO under ‘Make in India’, promotes self-reliance in defence. It provides grants to Indian industries, MSMEs, start-ups, and academic institutions to develop defence and dual-use technologies not currently available domestically.
  • The scheme fosters a culture of military technology design and development among private sectors, focusing on pioneering niche technologies and fostering collaboration among Armed Forces, research bodies, academia, and private entities.

3. Recently, which space agency has successfully launched the Advanced Land Observing Satellite-4 “DAICHI-4” (ALOS-4) to revolutionize disaster management?

A. NASA

B. ISRO

C. JAXA

D. CNSA

  • The Japan Aerospace Exploration Agency (JAXA) launched the Advanced Land Observing Satellite-4 “DAICHI-4” (ALOS-4) on July 1, 2024, using the H3 Launch Vehicle from Tanegashima Space Center. ALOS-4 features a Phased Array type L-band Synthetic Aperture Radar-3 (PALSAR-3) and Space-based AIS Experiment (SPAISE3), enhancing its capability for high-resolution, all-weather observations. This satellite is pivotal for disaster management, offering extensive monitoring capabilities crucial for mitigating natural disasters and environmental monitoring.

4. Zika Virus Disease is a mosquito borne disease transmitted by which mosquitoes?

A. Anopheles mosquitoes

B. Aedes mosquitoes

C. Culex mosquitoes

D. None of the above

  • Dr Atul Goel, Director General of Health Services, Ministry of Health and Family Welfare, issued an advisory to states following reported Zika virus cases in Maharashtra. The advisory emphasizes vigilance due to Zika’s association with microcephaly and neurological issues in fetuses. States are instructed to monitor pregnant women for Zika, ensure health facilities are mosquito-free, and follow central guidelines. Zika primarily spreads via infected Aedes mosquitoes, and symptoms, when present, include fever, rash, and joint pain.

5. Recently, the government of India signed a loan agreement with which institution to consolidate and strengthen Indias health system preparedness to future pandemics?

A. Asian Development Bank

B. World Bank

C. Reserve Bank of India

D. State Bank of India

  • The Government of India and the Asian Development Bank (ADB) signed a $170 million loan to enhance India’s health system for future pandemics. Key signatories were Ms. Juhi Mukherjee and Ms. Mio Oka. The “Strengthened and Measurable Actions for Resilient and Transformative Health Systems Programme” aims to improve disease surveillance, human resources for health, and climate-resilient public health infrastructure, supporting initiatives like the National Health Policy 2017 and PM-ABHIM.

6. Recently, Hemant Soren took oath as the Chief Minister of which state?

A. Odisha

B. Jharkhand

C. Bihar

D. Madhya Pradesh

  • Hemant Soren of Jharkhand Mukti Morcha (JMM) was sworn in as Jharkhand’s Chief Minister for the third time by Governor C.P. Radhakrishnan. Previously CM from 2013-2014 and 2019-2024, Soren resigned in January 2024 before his arrest in a money laundering case. Granted bail in June 2024, he leads the Mahagathbandhan alliance, which includes JMM, Congress, Rashtriya Janata Dal, and left parties.

7. Recently, Sir Keir Starmer has been appointed as the new Prime Minister of which country?

A. United Kingdom

B. Australia

C. New Zealand

D. Poland

  • Sir Keir Starmer has been appointed as the UK’s 58th Prime Minister by King Charles III on 5 July 2024. His Labour Party won a landslide victory, securing 412 out of 650 House of Commons seats. He replaces Conservative leader Rishi Sunak, whose party won only 119 seats. Starmer will reside at 10 Downing Street, the official residence of the UK Prime Minister.

8. Durand Cup is associated with which sports?

A. Basketball

B. Hockey

C. Cricket

D. Football

  • The 133rd Durand Cup, Asia’s oldest club-based football tournament, starts on 27 July 2024 and ends on 31 August 2024. Matches will be held in Kolkata, Kokrajhar, Jamshedpur, and Shillong, with Jamshedpur hosting for the first time. The tournament features 24 teams from the Indian Super League, I-League, and Armed Forces. The opening match, semi-finals, and final will be in Kolkata. Mohun Bagan Super Giant is the reigning champion.

9. Which state government has recently established a nine-member committee to investigate the contamination of the Kaveri River?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Andhra Pradesh

  • The Karnataka state government formed a nine-member committee to investigate Kaveri River contamination. The Kaveri River, also known as the Cauvery, is sacred to Hindus and originates from Brahmagiri Hill in the Western Ghats at 1,341m elevation. It flows 800 km through Karnataka and Tamil Nadu before emptying into the Bay of Bengal.
  • The river basin covers 81,155 sq. km across Tamil Nadu, Karnataka, Kerala, and Puducherry. Major tributaries include the Harangi, Hemavati, Shimsha, Arkavati, Lakshmantirtha, Kabbani, Suvarnavati, Bhavani, Noyil, and Amaravati. Key dams are Krishna Raja Sagara, Mettur, and Banasura Sagar.

10. Common Grass Yellow, recently seen in Mudumalai Tiger Reserve, belongs to which species?

A. Spider

B. Butterfly

C. Frog

D. Ant

  • For the first time, a large-scale migration of Common Grass Yellow butterflies was observed during a three-day survey at Mudumalai Tiger Reserve (MTR). The Common Grass Yellow (Eurema hecabe) is a small butterfly found across Asia, North America, Africa, and Australia. They prefer open grassy or bushy terrains and exhibit vibrant yellow wings with seasonal color variations. Despite their widespread presence, they are listed as Least Concern on the IUCN Red List and are not protected under India’s Wild Life (Protection) Act, 1972.

11. Recently, where was the first International Conference On Steel Slag Road held?

A. Bhopal

B. New Delhi

C. Coimbatore

D. Chennai

  • The 1st International Conference on Steel Slag Road was held in New Delhi by CSIR, where NITI Aayog released guidelines for using steel slag in road construction. This technology repurposes steel production waste, creating strong, durable, and eco-friendly roads.
  • Processed steel slag offers high strength, hardness, abrasion resistance, and drainage capacity. It can partially meet India’s annual demand for 1.8 billion tonnes of natural aggregates. India’s first steel slag road was built in Surat.

12. Where was the 86th session of the Codex Alimentarius Commission’s Executive Committee (CCEXEC) organized?

A. London

B. Paris

C. Rome

D. Geneva

  • India participated in the 86th session of the Executive Committee of Codex Alimentarius Commission (CAC) from July 1-5, 2024, in Rome. Represented by FSSAI CEO Shri G Kamala Vardhana Rao, India supported standards for spices, vegetable oils, and food safety. Key initiatives included guidelines for controlling Shiga Toxin-Producing E. coli, safe water use in food processing, and recycled materials in food packaging. The CAC, established by FAO and WHO in 1963, has 189 members, including India since 1964.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!