TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 9th August 2024

1. ‘நந்தினி சகாகர் திட்டத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. பெண்கள் தலைமையிலான கூட்டுறவுக்கு நிதியுதவி வழங்குவது

. மகளிர் கூட்டுறவுகள்மூலம் பெண்களின் சமூகப்பொருளாதார நிலையை மேம்படுத்துவது

இ. இளையோரிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பது

ஈ. கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது

  • NCDCஇன் நந்தினி சகாகர் திட்டம் என்பது பெண்களை மையமாகக்கொண்ட ஒரு கட்டமைப்பாகும். இது பெண்கள் தலைமையில் உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கு நிதியுதவி, திட்ட உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை வழங்குகிறது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட இது, தொழில்முனைவுமூலம் பெண்களின் சமூகப்பொருளாதார நிலையை மேம்படுத்தலை நோக்கமாகக்கொண்டுள்ளது. நிதியுதவிக்கு வரம்பு இல்லை. 31-03-2024 நிலவரப்படி, இந்தியா முழுவதும் பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்களுக்கு NCDC `6426.36 கோடியை வழங்கியுள்ளது.

2. அண்மையில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. K கைலாசநாதன்

ஆ. சுஹீல் குமார் திரிவேதி

இ. தமிழிசை சௌந்தரராஜன்

ஈ. அர்தேந்து சென்

  • இராஜ் நிவாஸில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் பதவியேற்றார். செயல் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்; முதலமைச்சர் N இரங்கசாமி மற்றும் பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக பதவியேற்றுள்ள K கைலாச நாதனது தலைமை மற்றும் வழிகாட்டுதலின்கீழ் புதுச்சேரி நிர்வாகம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

3. அண்மையில், இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் GAIL (இந்தியா) நிறுவனம் ஆகியவை மேற்கு வங்கத்தின் எப்பகுதியில் நிலக்கரியிலிருந்து செயற்கையான முறையில் இயற்கை எரிவாயுவை உற்பத்திசெய்யும் ஆலையை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?

அ. இராணிகஞ்ச்

ஆ. பாங்குரா

இ. நதியா

ஈ. மால்டா

  • இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் GAIL (இந்தியா) நிறுவனம் ஆகியவை மேற்கு வங்கத்தில் உள்ள ராணிகஞ்சில் நிலக்கரியிலிருந்து செயற்கையான முறையில் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க, மேற்பரப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கோடு கூட்டு சேர்ந்துள்ளன. இந்த ஆலை 1.9 மில்லியன் டன் நிலக்கரியிலிருந்து 633.6 மில்லியன் Nm³/மணிக்கு எரிவாயுவை உற்பத்தி செய்யும். தேசிய நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தின்கீழ் வரும் இந்தக் கூட்டு முயற்சியானது, இயற்கை எரிவாயு மற்றும் வேதி மற்றும் உர உற்பத்திக்கான பாதுகாப்பான மூலப்பொருட்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அண்மையில், வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கமால் அகமது மஜூம்தார்

ஆ. முஹம்மது யூனுஸ்

இ. முகமது சஹாபுதீன்

ஈ. திபு மோனி

  • 2006ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ், எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1940இல் பிறந்த முகமது யூனுஸ், 1983இல் நிறுவப்பட்ட கிராமீன் வங்கிமூலம் முன்னோடியாக நுண்கடன் வழங்குவதற்குப் பெயர்பெற்ற ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். அந்த வங்கியானது 97% திருப்பிச் செலுத்தும் விகிதத்துடன், $34 பில்லியன் டாலர்களை கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது. முகமது யூனுஸின் நியமனம் நாட்டின் அமைதியின்மையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. ‘பிரதமர் ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM)’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்புடைய அமைச்சகம் எது?

அ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • 2019 – இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமர் ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் LIC மற்றும் CSCமூலம் 2019 பிப்.15 முதல் செயல்படுத்தப்பட்ட இது, தோராயமாக 42 கோடி தொழிலாளர்களை இலக்காகக் கொண்டது. LIC ஓய்வூதிய நிதி மற்றும் கொடுப்பனவுகளை நிர்வகிக்கிறது. 2024 ஜூலை இறுதிவரை, 50 இலட்சத்துக்கும் அதிகமான அமைப்புசாராத் துறை தொழிலாளர்கள் இந்த மத்தியத் துறை திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

6. காட்கில் குழு அறிக்கையுடன் தொடர்புடைய நிலப்பகுதி எது?

அ. ஆறுகள் இணைப்பு

ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு

இ. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்பு

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • பல்லுயிர் பெருக்கத்திற்கு முதன்மையான மேற்குத்தொடர்ச்சிமலைகள் குறித்த 2011ஆம் ஆண்டின் காட்கில் குழு அறிக்கை வழங்கப்பட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதி என மேற்குத்தொடர்ச்சிமலைகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 2011ஆம் ஆண்டு காட்கில் குழு அறிக்கை அல்லது மேற்குத்தொடர்ச்சிமலைகள் சூழலியல் நிபுணர் குழு (WGEEP) அறிக்கை, இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. வளமான பல்லுயிர் மற்றும் சுற்றுச் சூழல் முக்கியத்துவத்திற்கு பெயர்பெற்ற மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சூழலியல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைத்தது.

7. ‘புவிக்கண்காணிப்புச் செயற்கைக்கோள்-8 (EOS-8)’ பணியுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

  • ISROஇன் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்-8 (EOS-8) ஆனது ஆக.15 அன்று தேதி ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறிய செயற்கைக்கோள் ஏவுகலத்தின்மூலம் ((SSLV)-D3) ஏவப்படவுள்ளது.
  • நுண்செயற்கைக்கோளை வடிவமைத்து உருவாக்குதல், பொருந்தக்கூடிய சுமைதாங்கு கருவிகளை உருவாக்கல் மற்றும் எதிர்கால செயல்பாட்டு செயற்கைக்கோள்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை இப்பணி நோக்கமாகக் கொண்டுள்ளது. EOS-8 செயற்கைக்கோள் திறன்களை மேம்படுத்துவதிலும் புவிக் கண்காணிப்பு முன்னெடுப்புகளை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

8. அண்மையில், “CAVA மகளிர் கைப்பந்து தேசிய லீக் – 2024”ஐ வென்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. பூடான்

ஈ. ஈரான்

  • காத்மாண்டுவில் நடைபெற்ற CAVA மகளிர் கைப்பந்து தேசிய லீக் இறுதிப்போட்டியில் நேபாளத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வென்றது. இந்த வெற்றியின்மூலம் லீக்கில் இந்தியா இரண்டாவது பட்டத்தை வென்றது. முன்னதாக லீக் சுற்றில் நேபாளத்திடம் தோல்வியடைந்தாலும், இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை உறுதிசெய்தது. இப்போட்டியில் இந்தியா தங்கமும், நேபாளம் வெள்ளியையும், ஈரான் வெண்கலத்தையும் வென்றன.

9. அண்மையில், இந்திய இராணுவத்தால் எந்தப் பகுதியில், ‘பர்வத பிரஹார்’ என்ற உத்திசார் முக்கியத்துவம் மிக்க இராணுவப்பயிற்சி நடத்தப்பட்டது?

அ. சென்னை

ஆ. விசாகப்பட்டினம்

இ. லடாக்

ஈ. ஜெய்சால்மர்

  • இந்திய இராணுவமானது லடாக்கில், ‘பர்வத பிரஹார்’ பயிற்சியை நடத்தியது. இந்தியா-சீனா எல்லைக்கு அருகே கரடுமுரடான நிலப்பரப்புகளில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது. போர் உருவகப்படுத்துதல்களை உள்ளடக்கிய இது, தனித்துவமான சவால்களில் வீரர்களுக்குப் பயிற்சியளித்தது. பதினைந்து நாட்கள் நீடிக்கும் இப்பயிற்சியில் காலாட் படை, பீரங்கி மற்றும் கவசப்படைகள் உட்பட பல்வேறு இராணுவப்பிரிவுகள் பங்கேற்கும். மேலும் டாங்கிகள், K-9 வஜ்ரா பீரங்கி மற்றும் UAV-கள் போன்ற இராணுவ சொத்துக்கள் காட்சிப்படுத்தப்படும்.

10. வக்ஃப் என்றால் என்ன?

அ. மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் அர்ப்பணிக்கப்பட்ட சொத்து

ஆ. அரசுக்குச் சொந்தமான சொத்து

இ. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்து

ஈ. சொத்துக்கான தற்காலிக நன்கொடை

  • வக்ஃப் அமைப்புகளில் இசுலாம் அல்லாத தனிநபர்கள் மற்றும் இசுலாம் பெண்களைச்சேர்க்கும் நோக்கில், 1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சர்ச்சைக்குரிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 1954ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டம் ‘வக்ஃப்’ என்பது “மதம் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்து” என வரையறுக்கிறது. இது ஆவணம் அல்லது நீண்டகால பயன்பாடு மற்றும் மசூதிகள் மற்றும் பள்ளிகள்போன்ற நிதி நிறுவனங்களால் நிறுவப்படலாம். வக்ஃப்கள் மாற்ற முடியாதவை, நிரந்தரமானவை மற்றும் வக்ஃப் சட்டம், 1995இன்கீழ் ஒரு முத்தவாலியால் அது நிர்வகிக்கப்படுகின்றது.

11. படைச்சிறுத்தை என்பது எந்த வடகிழக்கு மாநிலத்தின் மாநில விலங்காகும்?

அ. மணிப்பூர்

ஆ. மேகாலயா

இ. நாகாலாந்து

ஈ. அஸ்ஸாம்

  • பன்னாட்டு படைச்சிறுத்தைகள் நாளில் வனவிலங்குப் பாதுகாப்புச் சவால்களை மிசோரம் ஆளுநர் எடுத்துரைத்தார். இமயமலையிலிருந்து தென்கிழக்காசியாவரை காணப்படும் படைச்சிறுத்தைகள், இரு இனங்களை உள்ளடக்கியது: Neofelis nebulosa மற்றும் Neofelis diardi. அதன் வாழ்விடம் சீனா, பூடான், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பரவி, வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் வறண்ட காடுகள் வரை உள்ளது. இந்த நடுத்தர அளவிலான பூனையினம், 60-110 செமீ நீளமும் 11-20 கிலோ எடையும் கொண்டது. அதன் படைபோன்ற புறவடிவங்கள் மற்றும் நீண்ட வால் ஆகியவற்றால் இது அறியப்படுகிறது. இது மேகாலயா மாநிலத்தின் மாநில விலங்காகும்.

12. ‘தேசிய கடலோரப்பணி திட்டத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?

அ. கடலோரப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவது

ஆ. கடலோர & கடல்சார் சூழலமைப்புகளில் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்தை நிவர்த்தி செய்வது

இ. கடலோர நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பது

ஈ. மீன்வள உற்பத்தியை அதிகரிப்பது

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான இணையமைச்சர் சமீபத்தில் மக்களவையில் தேசிய கடலோரப்பணி திட்டம் குறித்து தெரிவித்தார். காலநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டத்தின் ஒருபகுதியாக 2014ஆம் ஆண்டு தேசிய கடலோரப்பணி திட்டம் தொடங்கப்பட்டது. ஏற்பு மற்றும் தணிப்புமூலம் கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களில் காலநிலை மாற்ற தாக்கங்களை நிவர்த்தி செய்வதே இதன் குறிக்கோளாகும். இந்தத் திட்டம் கடலோர மாநிலங்களின் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களால் செயல்படுத்தப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தகவலறியும் உரிமைச்சட்டம்மூலம் அரசுப்பணியாளர்கள் ஊதிய விவரங்களை அறியலாம் – தகவல் ஆணையர் ஆணை.

தகவலறியும் உரிமைச்சட்டத்தின்மூலமாக, அரசுப்பணியாளர்களின் ஊதிய விவரங்களைப்பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமையுள்ளதாக மாநில தகவலாணையர் ஆணையிட்டுள்ளார். தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவின்படி, பணியாளர்களின் ஊதிய விவரங்கள் பொது அதிகார அமைப்பினால் தாமாக முன்வந்து வெளியிட வேண்டிய தகவல்களாகும். ஒவ்வொரு இந்திய குடிமனும் இந்தத்தகவல்களை கேட்டுப்பெற உரிமையுண்டு.

2. ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!

கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் `1,000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை கோயம்புத்தூரில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (ஆக.09) தொடக்கிவைத்தார். ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின்மூலமாக, அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் 3.28 இலட்சம் மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.

இந்தத்திட்டத்தின்படி, 3.28 லட்சம் மாணவர்களுக்கும் மாதம் `1,000 வழங்கப்படவுள்ளது. இந்தத்திட்டத்தின்படி, 6 முதல் +2 வரை அரசுப்பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயர்கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் `1,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. What is the main objective of the ‘Nandini Sahakar Scheme’?

A. To provide financial assistance to women-led cooperative

B. To improve the socio-economic status of women through women cooperatives

C. To promote entrepreneurship among youth

D. To support rural development projects

  • The Nandini Sahakar Scheme by NCDC is a women-focused framework providing financial assistance, project formulation, and capacity development to women cooperatives. Launched under Atmanirbhar Bharat, it aims to improve socio-economic status of women through entrepreneurship. There is no limit on financial assistance. As of 31.03.2024, NCDC has disbursed Rs.6426.36 crore to women-led cooperative societies across India.

2. Recently, who has been appointed as the Lieutenant Governor of Puducherry?

A. K. Kailashnathan

B. Suheel Kumar Trivedi

C. Tamilisai Soundararajan

D. Ardhendu Sen

  • K Kailashnathan has taken oath as the Lieutenant Governor of Puducherry at a ceremony held at Raj Nivas. Acting Chief Justice D Krishnakumar administered the oath, while Chief Minister N Rangasamy and other officials attended. Kailashnathan has assumed office as the new Lieutenant Governor of Puducherry, marking a new chapter in the union territory’s administration under his leadership and guidance.

3. Recently, Coal India Ltd and GAIL (India) Ltd have signed a pact to establish a coal-to-synthetic natural gas plant in which region of West Bengal?

A. Raniganj

B. Bankura

C. Nadia

D. Malda

  • Coal India Ltd and GAIL (India) Ltd have partnered to set up a coal-to-synthetic natural gas plant in Raniganj, West Bengal, using surface coal gasification technology. The plant will produce 633.6 million Nm³/hour of gas from 1.9 million tonnes of coal. This joint venture under the National Coal Gasification Mission aims to reduce import dependency on natural gas and secure raw materials for chemical and fertilizer production.

4. Recently, who has been appointed as the chief adviser to Bangladesh’s interim government?

A. Kamal Ahmed Majumder

B. Muhammad Yunus

C. Mohammed Shahabuddin

D. Dipu Moni

  • Muhammad Yunus, 2006 Nobel Peace Prize winner, has been appointed chief adviser to Bangladesh’s interim government following Prime Minister Sheikh Hasina’s resignation amid protests. Yunus, born in 1940, is an economist known for pioneering microcredit through Grameen Bank, founded in 1983. The bank has loaned over $34 billion to nearly 10 million people, with a 97% repayment rate, inspiring global microfinance initiatives. Yunus’s appointment aims to address unrest over government job quotas.

5. Which ministry is responsible for implementing the ‘Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM) Scheme’?

A. Ministry of Labour and Employment

B. Ministry of Social Justice and Empowerment

C. Ministry of Rural Development

D. Ministry of Finance

  • The Pradhan Mantri Shram Yogi Maan-dhan (PM-SYM), announced in the 2019 Interim Budget, aims to provide social security to unorganized workers. Implemented by the Ministry of Labour and Employment through LIC and CSCs since February 15, 2019, it targets approximately 42 crore workers. LIC manages the pension fund and payouts. By the end of July 2024, over 50 lakh unorganised sector workers had enrolled in this Central Sector Scheme.

6. Gadgil Committee Report is associated with which geographical area?

A. Linking of Rivers

B. Protection of Western Ghats

C. Protection of Eastern Ghats

D. None of the above

  • The Western Ghats, crucial for biodiversity, still lack official ecologically sensitive area notifications from the Union environment ministry, 14 years after the 2011 Gadgil Committee Report. The 2011 Gadgil Committee Report, or Western Ghats Ecology Expert Panel (WGEEP) Report, was commissioned by India’s Ministry of Environment and Forests. It recommends measures for the sustainable development and ecological preservation of the Western Ghats, a region noted for its rich biodiversity and environmental importance.

7. ‘Earth Observation Satellite-8 (EOS-8)’ mission is associated with which space agency?

A. NASA

B. ISRO

C. JAXA

D. CNSA

  • ISRO’s Earth Observation Satellite-8 (EOS-8) is set to launch on August 15 by the Small Satellite Launch Vehicle (SSLV)-D3 from Sriharikota, Andhra Pradesh. The mission aims to design and develop a microsatellite, create compatible payload instruments, and integrate new technologies for future operational satellites. EOS-8 represents a significant step in advancing satellite capabilities and enhancing Earth observation efforts.

8. Recently, which country won “CAVA Women’s Volleyball Nations League 2024”?

A. India

B. Nepal

C. Bhutan

D. Iran

  • India won the CAVA Women’s Volleyball Nations League final, defeating Nepal 3-2 in Kathmandu. This victory marked India’s second title in the league. Despite a previous loss to Nepal in the league stage, India secured the championship in the finals. India took Gold, Nepal secured Silver, and Iran settled for Bronze in the tournament.

9. Recently, the Indian Army has conducted a strategic military exercise ‘Parvat Prahaar’ in which region?

A. Chennai

B. Visakhapatnam

C. Ladakh

D. Jaisalmer

  • The Indian Army conducted the ‘Parvat Prahaar’ exercise in Ladakh, focusing on high-altitude warfare. The exercise highlights operations in rugged terrains near the India-China border. It involves real-world combat simulations to train soldiers for unique challenges. This fortnight-long drill involves various Army units, including infantry, artillery, and armoured forces, and showcases military assets like tanks, K-9 Vajra artillery, and UAVs.

10. What is Waqf?

A. A property dedicated in the name of God for religious and charitable purposes

B. A government-owned property

C. A property dedicated for personal use

D. A temporary donation of property

  • A contentious bill to amend the Waqf Act of 1995, aiming to include non-Muslim individuals and Muslim women in Waqf bodies, is set to be presented in the Lok Sabha. The Waqf Act of 1954 defines a Waqf as a property dedicated for religious and charitable purposes. It can be established by deed or long-term usage and fund institutions like mosques and schools. Waqfs are non-transferable, perpetual, and managed by a mutawali under the Waqf Act, 1995.

11. Clouded Leopard is the state animal of which northeastern state?

A. Manipur

B. Meghalaya

C. Nagaland

D. Assam

  • The Mizoram governor highlighted wildlife conservation challenges on International Clouded Leopard Day. The clouded leopard, found from the Himalayas to Southeast Asia, includes two species: Neofelis nebulosa and Neofelis diardi. Its habitat spans countries like China, Bhutan, India, and others, thriving in tropical rainforests and dry forests. This medium-sized cat, 60-110 cm long, weighs 11-20 kg, and is known for its cloud-like coat patterns and long tail. It is the state animal of Meghalaya.

12. What is the primary objective of the ‘National Coastal Mission Scheme’?

A. To boost tourism in coastal areas

B. To address the impact of climate change on coastal and marine ecosystems

C. To promote coastal urban development

D. To enhance fisheries productivity

  • The Minister of State for Environment, Forest, and Climate Change recently informed the Lok Sabha on the National Coastal Mission Scheme. The National Coastal Mission Scheme was launched in 2014 as part of the National Action Plan on Climate Change. Its goal is to address climate change impacts on coastal and marine ecosystems, infrastructure, and communities through adaptation and mitigation. The scheme is implemented by State Governments of Coastal States and Union Territory Administrations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!