TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 8th October 2024

1. ஒன்பது நாள் நிகழும் ‘பிரம்மோற்சவம்’ கீழ்க்காணும் எந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது?

அ. அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்

. திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோவில்

இ. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில்

ஈ. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில்

  • திருப்பதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோவில், 9 நாள் நிகழும் ‘பிரம்மோற்சவம்’ திருவிழாவிற்காக தயாராகி வருகிறது. இது திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருக்கோவிலில் சுவாமி புஷ்கரிணி ஏரியில் கொண்டாடப்படுகிறது. மனிதகுலத்தைக்காத்த வெங்கடேசப்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்ம தேவர் இவ்விழாவைத்தொடங்கினார். கூடுதல் மாதத்துடன்கூடிய சந்திர மாதங்களில், இரண்டு பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அவை சாலகத்லா மற்றும் நவராத்திரி ஆகும். 2024இல், அதிக மாதம் இல்லாததால் ஒரேயொரு பிரம்மோற்சவம் (சலகட்லா) நடைபெற்றது. பாரம்பரிய தூய்மைப்படுத்தல் நிகழ்வான கோவில் ஆழ்வார் திருமஞ்சன சடங்கானது, பிரம்மோற்சவம் மற்றும் பிற முக்கிய திருவிழாக்களுக்கு முந்தைய செவ்வாய் கிழமைகளில் நிகழ்கிறது.

2. சிஞ்சோலி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கர்நாடகா

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிஸா

  • கல்யாண-கர்நாடக பகுதியிலுள்ள சிஞ்சோலி வனவுயிரி சரணாலயத்தில் செந்நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிஞ்சோலி வனவிலங்கு சரணாலயம் கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் சந்திரம்பள்ளி அணையைச்சுற்றி அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் வறண்டநில வனவிலங்கு சரணாலயமான இது, 2011ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இந்தச் சரணாலயம் வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகள், கருவேலம் மற்றும் தேக்கு தோட்டங்களைக் கொண்டுள்ளது. கர்நாடகாவின் வடக்கே பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள இங்கு, சந்தனம், சிவப்பு மணற்பரப்பி, வெளிமான், வரிகழுதைப்புலி, ஓநாய் மற்றும் பழந்தின்னி வெளவால்கள் உள்ளிட்ட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.

3. கீழ்க்காணும் எந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார்?

அ. பஹாமாஸ்

ஆ. மெக்ஸிக்கோ

இ. வியட்நாம்

ஈ. ஜமைக்கா

  • மெக்ஸிக்கோ நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றார். பெண்களின் உரிமைகளை வலுப்படுத்தவும், பன்னாட்டு முதலீட்டிற்கான பாதுகாப்பான இடமாக மெக்ஸிக்கோவை மாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். 62 வயதான கிளாடியா ஷீன்பாம், ஓர் அறிவியலாளரும் மெக்ஸிக்கோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். பதவியேற்ற நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியை வகிப்பார்.

4. “EnviStats India 2024: Environment Accounts” வெளியீட்டின் 7ஆவது தொடர் இதழை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. வேளாண்மை அமைச்சகம்

  • பிரதமர் உள்ளகப் பயிற்சி திட்டமானது (PM Internship Scheme) அண்மையில் இந்தியாவில் உள்ள இளையோர்க்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் வணிகச்சூழல்களில் நடைமுறை அனுபவத்தை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் முன்னணி 500 நிறுவனங்களில் சுமார் 1 கோடி இளையோருக்கு உள்ளகப் பயிற்சி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது இணைய நுழைவின்மூலம் இச்சோதனைத் திட்டத்தை மேற்பார்வையிடும். பயிற்சியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து `4,500 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள்; மேலும் CSRமூலம் நிறுவனங்களிடமிருந்து `500 பெறுவார்கள். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின்கீழ், ஒருமுறை வழங்கப்படும் `6,000 மானியமும் காப்பீடும் வழங்கப்படும்.

5. ICC மகளிர் T20 உலகக்கோப்பையின் 9ஆவது பதிப்பை நடத்துகிற நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

. ஐக்கிய அரபு அமீரகம்

இ. இங்கிலாந்து

ஈ. இந்தியா

  • 9ஆவது ICC மகளிர் T20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் தொடங்கியது. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தப்போட்டி அக்.03-20 வரை நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுடன் ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ‘B’ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் உள்ளன. ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்தியா, இந்த நிகழ்வில் தனது முதல் ICC பட்டத்தை வெல்ல எண்ணுகிறது.

6. அண்மையில், இந்தியப்பிரதமரால் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ‘பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம்’ திறந்து வைக்கப்பட்டது?

அ. ஒடிஸா

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. மத்திய பிரதேசம்

  • மகாராஷ்டிர மாநிலம், வாஷிமில் உள்ள போகர்தேவியில் பஞ்சாரா சமூகத்தின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் ‘பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை’ பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். நான்கடுக்கு பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை அவர்களின் தலைவர்களின் உருவப்படங்கள் மற்றும் வரலாற்று மரபுகள்மூலம் காட்சிப்படுத்துகிறது.

7. ‘Pseumenes siangensis’ என்ற புதிய வகை குயவக்குளவியானது கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

அ. அஸ்ஸாம்

ஆ. நாகாலாந்து

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. மிசோரம்

  • பூச்சியியல் வல்லுநர்கள் அருணாச்சல பிரதேசத் மாநிலத்தில் ஒரு புதிய வகை குயவக்குளவி உயிரினத்தைக் கண்டுபிடித்து அதற்கு ‘Pseumenes siangensis’ என்று பெயரிட்டுள்ளனர். ‘Eumeninae’ என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ‘Pseumenes’ இனத்தைச் சேர்ந்த இது, முதன்மையாக கீழைப்பகுதியில் காணப்படுகிறது.
  • தனித்து வாழும் இக்குளவிகள் தங்கள் இளமுயிரிகளுக்காக சிறிய, பானைபோன்ற மண் கூடுகளைக் கட்டுகின்றன. அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் காணப்பட்ட இந்த இனம், அம்மாநிலத்தின் சியாங் பள்ளத்தாக்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. 30.2 மிமீ நீளமே உள்ள இது, கம்பளிப்பூச்சிகள் மற்றும் பூச்சிகளை உண்பதன்மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

8. தேசிய வேளாண் குறியீட்டை (NAC) உருவாக்கியுள்ள அமைப்பு எது?

அ. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (NABARD)

ஆ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

இ. இந்தியத் தரநிலைகள் பணியகம் (BIS)

ஈ. வேளாண் அமைச்சகம்

  • இந்தியத் தரநிலைகள் பணியகமானது (BIS) தேசிய கட்டிடம் மற்றும் மின்சாரக் குறியீடுகளைப் போலவே தேசிய வேளாண் குறியீட்டை (National Agricultural Code) உருவாக்கி வருகிறது. பயிர் தேர்வு முதல் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் வரை முழு வேளாண்மை சுழற்சியையும் NAC உள்ளடக்கும். இது இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும்: அனைத்து பயிர்களுக்கும் பொதுவான கொள்கைகள் மற்றும் நெல், கோதுமை, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான பயிர்-குறிப்பிட்ட தரநிலைகள். இது உழவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண்மையில் அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய வேளாண்மையில் தரமான தரநிலைகள், முடிவெடுத்தல் மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரிக்கும்.

9. சமீபத்தில், “இணை மாவட்டம்” முன்னெடுப்பு என்ற புதிய நிர்வாக மாதிரியை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. அஸ்ஸாம்

இ. கேரளா

ஈ. இராஜஸ்தான்

  • அஸ்ஸாம் மாநிலம் “இணை மாவட்டம்” என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய சிவில் துணைப் பிரிவு முறையை மாற்றியமைக்கும் புதிய ஆளுகை மாதிரியான் இதில், உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டிற்கு மாவட்ட ஆணையர்களுக்கு இருக்கும் அதே அதிகாரங்களை இணை-மாவட்ட ஆணையர்களுக்கு இருக்கும். நிர்வாகத்தைப் பரவலாக்குவதையும், நிர்வாகத்திற்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, இந்தியாவிலேயே முதல் முறையாக இதுபோன்று தொடங்கப்பட்ட முதல் முயற்சி இதுவாகும்.

10. அண்மையில், மூன்றாவது 25T பொல்லார்ட் புல் (BP) இழுபடகான, ‘அஷ்வா’ பணியில் இணைக்கப்பட்ட நகரம் எது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. மும்பை

இ. கொல்கத்தா

ஈ. சென்னை

  • 3ஆவது 25T பொல்லார்ட் புல் இழுபடகான, ‘அஷ்வா’ 2024 அக்.03 அன்று கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘அஷ்வா’ இந்திய அரசின் “இந்தியாவில் தயாரிப்போம்” முயற்சியின் ஒருபகுதியாகும். இது இந்திய கப்பல் பதிவேடு வகைப்பாடு விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த இழுபடகு இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுத் திறன்களை உயர்த்தும், முக்கியமான பணிகளுக்கு உதவும் மற்றும் கடல்சார் ஆதரவு உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

11. “2024 – வறட்சி தாங்குந்தன்மை+10 மாநாடு” நடைபெற்ற இடம் எது?

அ. ஜெனீவா, சுவிட்சர்லாந்து

ஆ. பாரிஸ், பிரான்ஸ்

இ. லண்டன், ஐக்கிய இராச்சியம்

ஈ. புது தில்லி, இந்தியா

  • 2024 செப்.30 முதல் அக்.02 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற வறட்சி தாங்குந்தன்மை+10 (DR +10) மாநாடு, உலகளாவிய வறட்சிக்கான தயார்நிலை மற்றும் தாங்கும் தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது. தேசிய வறட்சிக்கொள்கை குறித்த முதல் உயர்மட்டக் கூட்டம் தொடங்கி பத்தாண்டு நிறைவை இது குறிக்கிறது. இம்மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்து வறட்சி மேலாண்மையில் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தது. தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக வறட்சி அடிக்கடி ஏற்படுவதால், வறட்சி இடர்களுக்கு முறையான தீர்வுகாண்பதற்கும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பயனுள்ள கொள்கைகள் மற்றும் உலகளாவிய வழிமுறைகளின் அவசியத்தை இம்மாநாடு வலியுறுத்தியது.

12. முக்கியமான தாதுப்பொருட்களுக்கான விநியோகச்சங்கிலியை மேம்படுத்துவதற்காக, இந்தியா, அண்மையில் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா

இ. ஆஸ்திரேலியா

ஈ. பிரான்ஸ்

  • இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான கனிம விநியோகச்சங்கிலிகளை விரிவுபடுத்துவதற்கும் பன்முகப்படுத்து -வதற்குமான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்தத் துறையில் நெகிழ்திறனுக்கான இவ்விருநாடுகளின் வலிமையை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உபகரணங்கள், சேவைகள், கொள்கைகள் மற்றும் முக்கியமான கனிமங்களின் ஆய்வு & செயலாக்கத்தின் வணிக வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகளில் கவனம் செலுத்துகிறது. 2024 அக்டோபரில் நடைபெற்ற ஆறாவது அமெரிக்க-இந்திய வர்த்தக உரையாடலின்போது நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, குறைகடத்திகள் மற்றும் தூய எரிசக்தியில் புதுமையான சூழலமைப்புகளை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒருபகுதியாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐநா விருது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும், “மக்களைத்தேடி மருத்துவம்” என்ற திட்டத்துக்கு ஐநா அமைப்பு விருது அறிவித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்றாநோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதற்காக ஐநா அமைப்பின் விருது தமிழ்நாட்டின் சுகாதாரத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட்.05 அன்று “மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்” தொடங்கப்பட்டது.

2. `16,800 கோடி முதலீட்டில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே உணவு வழித்தடம்.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே $2 பில்லியன் டாலர்கள் (சுமார் `16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித் தடம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

3. இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் ஆம்புரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் மரபணு செயல்பாடுகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிவதற்கு அடிப்படையான ‘மைக்ரோ RNA’ என்ற செல்லை கண்டுபிடித்ததற்காக இவர்கள் இந்த உயரிய பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு, COVID-19 பாதிப்புக்கு எதிரான பயனுள்ள ‘mRNA’ தடுப்பூசியை உருவாக்கியதற்காக ஹங்கேரியைச் சேர்ந்த சாகன் பல்கலை பேராசிரியர் கேட்டலின் கரிக்கோ, அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டுரூ வீஸ்மேன் ஆகிய இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிகவுயரிய நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. பரிசு அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டாக்ஹோமில் வரும் டிசம்பர்.10 அன்று நடைபெறும் விருதை நிறுவிய ஆல்பிரெட் நோபலின் நினைவு நாள் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

1. Nine-day festival Brahmotsavam is celebrated at which temple annually?

A. Arulmigu Ramanathaswamy Temple

B. Tirumala Tirupati Sri Venkateswara Temple

C. Arulmigu Meenakshi Amman Temple

D. Arulmigu Ranganathaswamy Temple

  • Sri Venkateswara temple in Tirupati is preparing for Brahmotsavam, a nine-day festival. It is celebrated at the Tirumala Tirupati Sri Venkateshwara Temple by the Swami Pushkarini Lake. The festival was initiated by Lord Brahma to thank Lord Venkateshwara for protecting mankind. In lunar months with an extra month, two Brahmotsavams are held: Salakatla and Navarathri.
  • In 2024, only one Brahmotsavam (Salakatla) held due to the absence of Adhika Maasa. The Koil Alwar Tirumanjanam ritual, a traditional cleansing, occurs on Tuesdays before Brahmotsavam and other major festivals.

2. Chincholi Wildlife Sanctuary is located in which state?

A. Maharashtra

B. Karnataka

C. Madhya Pradesh

D. Odisha

  • Dholes have been found in Chincholi Wildlife Sanctuary in the Kalyana-Karnataka region. Chincholi Wildlife Sanctuary is located around the Chandrampalli Dam in Kalaburagi district, Karnataka. It is the first dry-land wildlife sanctuary in South India and was notified in 2011. The sanctuary features dry and moist deciduous forests, acacia and teak plantations. It is Karnataka’s northernmost protected area, home to diverse flora and fauna, including sandalwood, red sanders, blackbuck, striped hyena, wolf, and fruit bats.

3. Claudia Sheinbaum took oath as first female president of which country?

A. Bahamas

B. Mexico

C. Vietnam

D. Jamaica

  • Claudia Sheinbaum was sworn in as Mexico’s first woman president. She pledged to strengthen women’s rights and maintain Mexico as a secure destination for international investment. Sheinbaum, aged 62, is a scientist and former mayor of Mexico City. The oath-taking ceremony took place in Mexico’s Congress, marking the beginning of her six-year term.

4. Which ministry released the 7th consecutive issue of the publication “EnviStats India 2024: Environment Accounts”?

A. Ministry of Environment, Forest and Climate Change

B. Ministry of Statistics and Programme Implementation

C. Ministry of Finance

D. Ministry of Agriculture

  • The Ministry of Statistics and Programme Implementation released the 7th issue of “EnviStats India 2024: Environment Accounts.” EnviStats covers information on natural resources, environmental degradation, and government efforts for management. It follows the System of Environmental-Economic Accounting (SEEA) framework for compiling environmental accounts.
  • Coverage of mangroves increased by about 8% from 2013 to 2021. There has been a 72% increase in the number and a 16% increase in the area of protected lands from 2000 to 2023. The report also updates the Soil Nutrient Index using Soil Health Card data for 2023-24.

5. Which country hosts the 9th edition of ICC women’s T20 World Cup?

A. Australia

B. UAE

C. England

D. India

  • The 9th ICC Women’s T20 World Cup started in Sharjah, UAE. The tournament runs from October 3rd to 20th, with ten teams participating. India is in Group A with Australia, New Zealand, Pakistan, and Sri Lanka. Group B includes Bangladesh, England, Scotland, South Africa, and West Indies. India, led by Harmanpreet Kaur, seeks its first-ever ICC title in this event.

6. Recently, the Prime Minister of India inaugurated ‘Banjara Virasat Museum’ in which state?

A. Odisha

B. Maharashtra

C. Karnataka

D. Madhya Pradesh

  • Prime Minister Narendra Modi inaugurated the Banjara Virasat Museum in Pohardevi, Washim, Maharashtra, highlighting the Banjara community’s heritage. The four-story Banjara Virasat Museum showcases the rich heritage of the Banjara community through portraits of their leaders and historical legacies.

7. New species of potter wasp, Pseumenes siangensis, was discovered in which northeastern state?

A. Assam

B. Nagaland

C. Arunachal Pradesh

D. Mizoram

  • Entomologists discovered a new species of potter wasp in Arunachal Pradesh, named Pseumenes siangensis. It belongs to the genus Pseumenes within the subfamily Eumeninae and is mainly found in the Oriental region. These solitary wasps build small, pot-like mud nests for their larvae. The species was found in the Upper Siang District and named after Siang Valley, Arunachal Pradesh. At 30.2 mm in length, it has unique features and plays a role in controlling pest populations by feeding on caterpillars and insects.

8. Which organization has formulated a National Agriculture Code (NAC)?

A. National Bank for Agriculture and Rural Development (NABARD)

B. Indian Council of Agricultural Research (ICAR)

C. Bureau of Indian Standards (BIS)

D. Ministry of Agriculture

  • The Bureau of Indian Standards (BIS) is developing a National Agriculture Code (NAC) similar to the National Building and Electrical Codes. The NAC will cover the entire agriculture cycle, from crop selection to post-harvest operations. It will have two parts: general principles for all crops and crop-specific standards for paddy, wheat, oilseeds, and pulses. It aims to guide farmers, universities, and officials in agriculture. It will support quality standards, decision-making, and capacity building in Indian agriculture.

9. Which state recently launched a new governance model called the “co-district” initiative?

A. Tamil Nadu

B. Assam

C. Kerala

D. Rajasthan

  • Assam has launched the “co-district” initiative, a new governance model that replaces the traditional civil sub-division system. Co-district commissioners will have the same powers as district commissioners for more localized control. It is the first initiative of its kind in India, aiming to decentralize administration and improve accessibility to governance.

10. Recently, the third 25T Bollard Pull (BP) Tug, Ashva was launched in which city?

A. Visakhapatnam

B. Mumbai

C. Kolkata

D. Chennai

  • The Third 25T Bollard Pull Tug, named Ashva, was launched on October 3, 2024, in Kolkata. Ashva is part of the Government of India’s “Make in India” initiative. It was built following the Indian Register of Shipping (IRS) classification rules. The tug will boost the Indian Navy’s operational capabilities, aiding in critical tasks and enhancing maritime support infrastructure.

11. Where was the “Drought Resilience +10 Conference 2024” held?

A. Geneva, Switzerland

B. Paris, France

C. London, United Kingdom

D. New Delhi, India

  • The Drought Resilience+10 (DR+10) Conference, held from September 30 to October 2, 2024, in Geneva, Switzerland, focused on enhancing global drought preparedness and resilience. It marked a decade since the first High-Level Meeting on National Drought Policy and brought together policymakers, experts, and practitioners to discuss advancements in drought management.
  • With droughts becoming more frequent due to climate change, the conference emphasized the need for effective policies and global mechanisms to address systemic drought risks and promote sustainable development.

12. India recently signed an MoU with which country to enhance supply chains for critical minerals?

A. Russia

B. United States of America

C. Australia

D. France

  • India and the USA have signed a new memorandum of understanding (MoU) to expand and diversify critical minerals supply chains, aiming to leverage their complementary strengths for resilience in the sector. This agreement focuses on equipment, services, policies, and best practices for the commercial development of critical minerals exploration and processing. The MoU is part of broader efforts to enhance innovation ecosystems and secure supply chains in semiconductors and clean energy, following discussions held during the 6th US-India Commercial Dialogue in October 2024.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!