TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 8th July 2024

1. மின்னலால் நிகழும் இறப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக கிட்டத்தட்ட 19 இலட்சம் பனை மரங்களை நடும் திட்டத்தை அறிவித்துள்ள மாநில அரசு எது?

அ. பீகார்

ஆ. ஹரியானா

இ. பஞ்சாப்

ஈ. ஒடிசா

  • ஒடிசா மாநில அரசு 2024-25இல் மின்னலால் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக சுமார் 19 இலட்சம் பனை மரங்களை நடத் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வனத்தொகுதி எல்லைக்கும் `7 கோடி செலவில் 4 பனைமரங்கள் வழங்கப்படும். தென்னை மற்றும் பனைபோன்ற மரவகைகள் வெப்பமண்டல சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. பனைமரம் தமிழ்நாடு அரசின் மாநில மரமாகும். மின்னல் தாக்குதலின்போது அவை இயற்கைக்கடத்திகளாகச் செயல்பட்டு உயிர்களைக் காக்கிறது. ஆண் பனை மரங்கள் பூக்களைத் தாங்குகின்றன; அதே நேரத்தில் பெண் பனை மரங்கள் கனிகளைத் தருகின்றன.

2. அண்மையில், ‘Noble Initiative for Rewarding Mains Aspirants of National Civil Services Examination (NIRMAN)’ என்ற இணையதளத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம், NIRMAN என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. குடிமைப்பணித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா நிலக்கரி நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • குடும்ப ஆண்டு வருமானம் `8 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் அல்லது 3ஆம் பாலினத்தவருக்கு `1,00,000/- வரை நிதியுதவி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ள 39 மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நிரந்தரமாக வசிக்கும் மேற்குறிப்பிட்ட பிரிவினர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

3. அண்மையில், IAF தலைவரால் ஆயுதப்பயிற்சிப்பள்ளி திறந்து வைக்கப்பட்ட நகரம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. ஹைதராபாத்

இ. கொல்கத்தா

ஈ. போபால்

  • ஹைதராபாத், பேகம்பேட்டையில் உள்ள விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயுதப்பயிற்சிப்பள்ளியை, விமானப்படைத்தளபதி திறந்து வைத்தார். இந்திய விமானப்படையை, எதிர்காலத்திற்கேற்ற படைபலம்வாய்ந்த பிரிவாக மாற்றியமைப்பதே இதன் நோக்கம். இந்தப்புதிய பயிற்சிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் ஆயுதப் படைகள், குறிப்பாக விமானப்படை மேலும் வேகத்துடன் செயல்பட உதவிகரமாக இருக்கும்.

4. அண்மையில், ஏர் இந்தியா நிறுவனம், தெற்காசியாவின் மிகப்பெரிய விமானப்பயிற்சிப்பள்ளியை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் நிறுவவுள்ளது?

அ. இராஜஸ்தான்

ஆ. மகாராஷ்டிரா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. மேகாலயா

  • ஏர் இந்தியா நிறுவனம் தெற்காசியாவின் மிகப்பெரிய விமானப் பயிற்சிப் பள்ளியை மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் `200 கோடி முதலீட்டில் நிறுவவுள்ளது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படவுள்ள இது, ஆண்டுதோறும் 500-700 விமானிகளுக்கான பயிற்சித் தேவையைப் பூர்த்தி செய்யும். மகாராஷ்டிர மாநில விமான நிலைய மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, 10 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தப் பயிற்சிப் பள்ளி, 31 ஒற்றை-இயந்திர ஃபைபர் விமானங்கள் மற்றும் மூன்று இரட்டை-என்ஜின் டயமண்ட் விமானங்களைப் பயன்படுத்தி 180 வணிக விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும்.

5. அண்மையில், வானிலிருந்து மேற்பரப்பு இலக்கைத் தாக்கும் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான, ‘ருத்ரம்-1’ஐ வெற்றிகரமாகச் சோதனை செய்த நாடு எது?

அ. சீனா

. இந்தியா

இ. ஜப்பான்

ஈ. நேபாளம்

  • இந்திய வான்படைக்காக DRDO உருவாக்கிய அதன் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான, ‘ருத்ரம்-1’ஐ இந்தியா வெற்றிகரமாகச் சோதனைசெய்தது. சுகோய்-30 MKI போர் விமானத்தில் இருந்து ஏவுதல், INS-GPS வழிசெலுத்தல் அமைப்பைப் பெற்றிருத்தல் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களில் அடங்கும். 100-250 கிமீ தூர வரம்பைக் கொண்டுள்ள இதால் மாக் 2 வேகம் வரை செல்ல முடியும். ருத்ரம்-1 ஆனது இந்திய வான்படையின் (IAF) Suppression of Enemy Air Defence (SEAD) திறனை மேம்படுத்துவதோடு ஒரு படை பெருக்கியாகவும் செயல்படுகிறது.

6. அண்மையில், கேரள மாநிலத்தில் உள்ள எந்த மாவட்டப் பஞ்சாயத்து, நீலோற்பலத்தின் அச்சுறுத்தலுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்தது?

அ. கோட்டயம்

ஆ. கண்ணூர்

இ. வயநாடு

ஈ. திருச்சூர்

  • கோட்டயம் (கேரளா) மாவட்டப் பஞ்சாயத்து, நீலோற்பலத்தின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒரு தொழில்நுட்ப குழுவை அமைத்துள்ளது. நீலோற்பலம் (Eichhornia crassipes) என்பது பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட வேகமாக வளரும் ஒரு நீர்வாழ் தாவரமாகும்; இது விதைகள் மற்றும் தாவர இனப்பெருக்கம்மூலம் பரவுகிறது. இது நீர்ப்பரப்புகளில் அடர்த்தியாக படிந்து சூரியவொளியை முற்றாகத் தடுக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் (O2) அளவைக் குறைக்கிறது. இதன் காரணாமக மீன்பிடி, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் சீர்குலைகின்றன. அதன் ஆக்கிரமிப்பு தன்மை காரணமாக இது பெரும்பாலும், “வங்காளத்தின் பயங்கரம்” என்று அழைக்கப்படுகிறது.

7. ‘பன்னாட்டு நெகிழிப்பை இல்லாத நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.03

ஆ. ஜூலை.05

இ. நவம்பர்.05

ஈ. நவம்பர்.03

  • ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியைத் தவிர்ப்பதற்கும் நெகிழி மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்குமாக ஜூலை 03ஆம் தேதியன்று பன்னாட்டு நெகிழிப்பை இல்லாத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பேக் ஃப்ரீ வேர்ல்டுமூலம் நிறுவப்பட்ட இந்நாள், கடந்த 2008ஆம் ஆண்டில், ஜீரோ வேஸ்ட் ஐரோப்பாவின் உறுப்பினரான ரெஸெரோவால் முதல் முதலாக அனுசரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான ஆணைகளை நிறைவேற்றியது. 2022ஆம் ஆண்டில் இப்பைகளை தடைசெய்த முதல் நாடாக வங்காளதேசம் ஆனது. அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பிற நாடுகள் நிறைவேற்றின.

8. சிக்கிமில் பேரேலக்காய் நோய்களைக்கண்டறிந்து வகைப்படுத்துவதற்கான AI கருவிகளை உருவாக்குவதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனங்கள் எவை?

அ. தேசிய தகவலியல் மையம் (NIC) மற்றும் இந்திய மசாலா வாரியம்

ஆ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) மற்றும் இந்திய மசாலா வாரியம்

இ. தேசிய தகவலியல் மையம் (NIC) மற்றும் வேளாண் அமைச்சகம்

ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் இந்திய மசாலா வாரியம்

  • சிக்கிமில் பேரேலக்காய் நோய்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதற்கான AI கருவிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசிய தகவலியல் மையமும் (NIC) இந்திய மசாலா வாரியமும் கையெழுத்திட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள NICஇன் AI-க்கான சிறப்பு மையம் தலைமையிலான இத்திட்டம் நோய்களை முன்கூட்டியே கண்டறிய ஏலக்காய் இலைகளின் படங்களை பகுப்பாய்வு செய்கிறது.

9. அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்புநாடுகளின் தலைவர்கள் கூட்டமைப்பின் 24ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. தெஹ்ரான், ஈரான்

ஆ. அஸ்தானா, கஜகஸ்தான்

இ. பெய்ஜிங், சீனா

ஈ. புது தில்லி, இந்தியா

  • 24ஆவது SCO உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் கஜகஸ்தானின் அஸ்தானாவில் 2024 ஜூலை.04 அன்று நடைபெற்றது. தலைவர் டோகாயேவால் தொகுத்து வழங்கப்பட்ட இந்த உச்சிமாநாடு, பெலாரஸை பத்தாவது முழு நேர உறுப்பினராக ஏற்றுக்கொண்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குப் பதிலாக இக்கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர், பயங்கரவாதத்திற்கு எதிரான நரேந்திர மோதியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். புதின், ஜி ஜின்பிங், எர்டோகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு, பயங்கரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் முன்னுரிமையை வலியுறுத்தினர்.

10. அண்மையில், ‘சம்பூர்ணதா அபியானைத்’ தொடங்கிய அரசு நிறுவனம் எது?

அ. தேசிய தகவலியல் மையம்

ஆ. NABARD

இ. NITI ஆயோக்

ஈ. நிதி அமைச்சகம்

  • ‘சம்பூர்ணதா அபியான்’ என்ற இயக்கத்தை NITI ஆயோக் தொடங்கியது. இதில் நாடு முழுவதுமுள்ள குடிமக்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு காணப்பட்டது. முன்னேற விரும்பும் 112 மாவட்டங்கள் மற்றும் 500 முன்னேற விரும்பும் வட்டாரங்களில் தொடக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 2024 ஜூலை .04 முதல் செப்டம்பர்.30 வரை இயங்கும் இந்த விரிவான மூன்று மாத பிரச்சாரம், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களில் 12 முக்கிய சமூகத்துறை குறிகாட்டிகளின் 100% செறிவூட்டலை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பரப்புரையின் முதல் நாளில் ஜம்மு-காஷ்மீர் முதல் அந்தமான், நிக்கோபார் தீவுகள் வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக, மாவட்ட, வட்டார அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து கிராம சபைகள், சுகாதார முகாம்கள், ஐ.சி.டி.எஸ் முகாம்கள், விழிப்புணர்வு அணிவகுப்புகள், பேரணிகள், கண்காட்சிகள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை 12 கருப்பொருட்களில் நடத்துவர்.

11. UNESCO உலக பாரம்பரியக் குழுவின் 46ஆவது அமர்வை நடத்துகிற நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. பிரான்ஸ்

இ. இந்தியா

ஈ. ரஷ்யா

  • 2024 ஜூலை.21-31 வரை, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 46ஆவது UNESCO உலக பாரம்பரியக் குழு அமர்வை இந்தியா நடத்தவுள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வில் 195 நாடுகளைச் சார்ந்த 2,500 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில், உலக பாரம்பரிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள், ஆலோசனை அமைப்புகள், மூத்த இராஜதந்திரிகள், பாரம்பரிய நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்பர். உலகளாவிய கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதித்து முடிவெடுப்பதை இந்தக்கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. கரிமப்பாஸ்பேட் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளை திறம்பட நடுநிலையாக்கும் பூச்சிக்கொல்லி-எதிர்ப்பு துணியை உருவாக்கியுள்ள இந்திய ஆராய்ச்சி நிறுவனம் எது?

அ. உலர்நில வேளாண்மைக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம்

ஆ. குருத்தணு அறிவியல் மற்றும் மீளாக்க மருத்துவத்திற்கான நிறுவனம் (inStem)

இ. தேசிய உயிரி-மருத்துவ மரபணுத்தொகுதியியல் நிறுவனம்

ஈ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்

  • பெங்களூருவில் அமைந்துள்ள குருத்தணு அறிவியல் மற்றும் மீளாக்க மருத்துவத்திற்கான நிறுவனம் (inStem) ஒரு புதுமையான பூச்சிக்கொல்லி-எதிர்ப்பு துணியை உருவாக்கியுள்ளது. இந்தத் துணியானது நியூக்ளியோபிலிக் சிறிய மூலக்கூறுகளைப் பயன்படுத்துகிறது. இது 150 முறை துவைத்தலுக்குப் பிறகும், கரிமப்பாஸ்பேட்-அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகளைத் தொடர்புகொள்ளும்போது அதை நடுநிலையாக்க இணைப்பிணைப்பைப் பயன்படுத்துகிறது. மின்னணு மிகுபொருள் மருந்தூட்டப்பட்ட நீராற்பகுப்பு முறை (Nucleophile-mediated Hydrolysis)மூலம் பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மையிலிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பளிப்பதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கிராண்ட் பிரீ மல்யுத்தம்: வினேஷ் போகத்துக்கு தங்கம்.

ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் பிரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 50 கிகி எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் 10-5 என்ற கணக்கில் ரஷ்யாவைச் சேர்ந்த மரியா டியுமெரிகோவாவை வீழ்த்தினார்.

1. Which state government recently announced plan to plant nearly 19 lakh palm trees to combat lightning deaths?

A. Bihar

B. Haryana

C. Punjab

D. Odisha

  • The Odisha government plans to plant nearly 19 lakh palm trees in 2024-25 to mitigate lightning risks. Each forest block boundary will receive four palm trees, costing Rs 7 crore. Palm trees like Coconut and Palmyrah are part of tropical ecosystems, with Palmyrah designated as Tamil Nadu’s State Tree. They act as natural conductors during lightning strikes, potentially saving lives. Male palm trees bear flowers, while females produce fruits.

2. Which ministry recently launched a portal ‘Noble Initiative for Rewarding Mains Aspirants of National Civil Services Examination (NIRMAN)’?

A. Ministry of Coal and Mines

B. Ministry of Education

C. Ministry of Home Affairs

D. Ministry of Defence

  • The Union Minister for Coal and Mines launched the NIRMAN Portal, part of Mission Karmayogi. Announced by Coal India Limited (CIL), the portal aims to support UPSC Preliminary exam qualifiers from SC, ST, female, or third gender candidates with an annual family income under Rs 8 lakh. Eligible candidates, permanent residents of CIL’s 39 operational districts, will receive Rs 1 lakh.

3. Recently, IAF chief inaugurated Weapon Systems School (WSS) in which city?

A. Jaipur

B. Hyderabad

C. Kolkata

D. Bhopal

  • The Chief of the Air Staff inaugurated the Weapon Systems School (WSS) at Air Force Station Begumpet, Hyderabad. The WSS aims to modernize the Indian Air Force (IAF) by providing effect-based, contemporary training to officers of the newly formed branch. Flight Cadets in the WS Branch will undertake their second semester of training at this institute here.

4. Recently, Air India is establishing South Asia’s largest flight training school in which state?

A. Rajasthan

B. Maharashtra

C. Andhra Pradesh

D. Meghalaya

  • Air India is establishing South Asia’s largest flight training school in Maharashtra’s Amravati district with an investment of over ₹200 crore. Opening in the next financial year’s first quarter, it will address the airline’s need for 500-700 pilots annually, following a large aircraft order. In partnership with Maharashtra Airport Development Company (MADC), the 10-acre facility will train 180 commercial pilots yearly using 31 single-engine Piper aircraft and three twin-engine Diamond aircraft.

5. Recently, which country successfully test-fired an air-surface anti-radiation missile ‘Rudram-1’?

A. China

B. India

C. Japan

D. Nepal

  • India successfully test-fired the Rudram-1, its first indigenous anti-radiation missile developed by DRDO for the Indian Air Force (IAF). Key features include a launch platform on Sukhoi-30MKI fighter jets, INS-GPS navigation, and a Passive Homing Head. It has a range of 100-250 km and speeds up to Mach 2. Rudram-1 enhances the IAF’s Suppression of Enemy Air Defence (SEAD) capability, acts as a force multiplier.

6. Recently, which district’s Panchayat in Kerala has constituted a technical committee to address the menace of water hyacinth?

A. Kottayam

B. Kannur

C. Wayanad

D. Thrissur

  • The District Panchayat of Kottayam (Kerala) has formed a technical committee to tackle the water hyacinth problem. Water hyacinth (Eichhornia crassipes) is a fast-growing aquatic plant from Brazil that spreads through seeds and vegetative reproduction. It forms dense mats on water surfaces, blocking sunlight and reducing oxygen levels, which disrupts fisheries, transportation, and recreation. It’s often called the “terror of Bengal” due to its invasive nature.

7. Which day is observed as ‘International Plastic Bag Free Day’?

A. July.03

B. July.05

C. November.05

D. November.03

  • International Plastic Bag Free Day is observed on July 3 to encourage avoiding single-use plastics and combat plastic pollution. Established by Bag Free World, the day saw its first observance in 2008, initiated by Rezero, a member of Zero Waste Europe. In 2015, the EU passed directives to reduce single-use plastic bags. Bangladesh was the first country to ban these bags in 2022, followed by India and others.

8. Which two organizations recently signed an MoU to develop AI tools for detecting and classifying large cardamom diseases in Sikkim?

A. National Informatics Centre (NIC) and the Spices Board of India

B. Indian Council of Agricultural Research (ICAR) and the Spices Board of India

C. National Informatics Centre (NIC) and the Ministry of Agriculture

D. Indian Space Research Organisation (ISRO) and the Spices Board of India

  • The National Informatics Centre (NIC) and the Spices Board of India have signed an MoU to develop AI tools for detecting and classifying large cardamom diseases in Sikkim. Led by NIC’s AI Centre of Excellence in Kolkata, the project analyzes images of cardamom leaves to identify diseases early.

9. Recently, where was the 24th Meeting of the Council of Heads of State of the Shanghai Cooperation Organization (SCO) held?

A. Tehran, Iran

B. Astana, Kazakhstan

C. Beijing, China

D. New Delhi, India

  • The 24th SCO Heads of State Meeting was held on July 4, 2024, in Astana, Kazakhstan. Hosted by President Tokayev, the summit admitted Belarus as the 10th full member. Indian Prime Minister Narendra Modi skipped the meeting, represented by External Affairs Minister Dr. S Jaishankar, who reiterated Modi’s stance against terrorism. Key leaders, including Putin, Xi Jinping, and Erdogan, attended, emphasizing the priority of combating terrorism and radicalization.

10. Recently, which government agency has launched the ‘Sampoornata Abhiyaan’?

A. National Informatics Centre

B. NABARD

C. NITI Aayog

D. Ministry of Finance

  • NITI Aayog launched the ‘Sampoornata Abhiyan’ on July 4, 2024, targeting 100% saturation of 12 key social sector indicators across 112 Aspirational Districts and 500 Aspirational Blocks. Running until September 30, the campaign saw enthusiastic participation from officials, frontline workers, and citizens nationwide. Events included health camps, cultural programs, and awareness yatras, emphasizing community involvement and commitment to the campaign’s goals from Jammu and Kashmir to the Andaman and Nicobar Islands.

11. Which country hosts 46th session of the UNESCO World Heritage Committee?

A. Australia

B. France

C. India

D. Russia

  • India will host the 46th UNESCO World Heritage Committee session from July 21-31, 2024, at Bharat Mandapam in New Delhi. This significant cultural diplomacy event will draw over 2,500 delegates from 195 countries, including state parties to the World Heritage Convention, advisory bodies, senior diplomats, heritage experts, and scholars. The gathering aims to discuss and decide on matters of global cultural significance.

12. Which research institute of India has recently developed an anti-insecticide fabric that effectively neutralises organophosphate-based pesticides?

A. Central Research Institute for Dryland Agriculture

B. Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem)

C. National Institute of Biomedical Genomics

D. Indian Institutes of Science Education and Research

  • In Bengaluru, the Institute for Stem Cell Science and Regenerative Medicine (inStem) has developed an innovative anti-insecticide fabric. This fabric utilizes nucleophilic small molecules that covalently bond to neutralize organophosphate-based pesticides upon contact, even after 150 washes. It aims to protect farmers from chronic pesticide toxicity by detoxifying pesticides through nucleophile-mediated hydrolysis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!