TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 8th August 2024

1. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்ட துறை எது?

அ. நிதி சேவைகள் துறை

ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

இ. அஞ்சல் துறை

ஈ. தொலைத்தொடர்பு துறை

  • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான நினைவு அஞ்சல் தலைகளை அஞ்சல் துறை வெளியிட்டது. இந்த குறிப்பிட்ட கால அஞ்சல் தலைகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மற்றும் ஆளுமைகளைக் கொண்டாடுகின்றன. அவற்றை அஞ்சல் தலை செயலகம் மற்றும் அஞ்சல் தலை வைப்பு கணக்குத் திட்டத்தின்மூலம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வஞ்சல் தலைகள் முக்கிய ஆண்டுவிழாக்கள், தேசிய/பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் மற்றும் பாரம்பரிய தளங்களை கௌரவிக்கின்றன. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப்பின்பற்றி, எந்தவொரு இந்திய குடிமகனும் அஞ்சல் தலைகளுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.

2. Methylocucumis oryzae’ என்றால் என்ன?

அ. வைரஸ்

ஆ. பாக்டீரியா

இ. புரோட்டோசோவா

ஈ. பூஞ்சை

  • இந்தியாவின் முதல் உள்நாட்டு மெத்தனோட்ரோப் ஆன Methylocucumis oryzae-ஐ, மேற்கு இந்தியாவில் உள்ள நெல் வயல்களில் இருந்தும் ஈரநிலங்களிலிருந்தும் ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்துள்ளனர். மீத்தேன் நுகர்வுக்கு முக்கியமான இந்த வெள்ளரி வடிவ பாக்டீரியா, ஈரநிலங்கள் மற்றும் நெல் வயல்களில் அதிகமாக காணப்படுகிறது. இது பெரும்பாலான பாக்டீரியாக்களைவிட பெரியது மற்றும் 37ºC-க்கு கீழே மட்டுமே வளரும் தன்மையுடையது. Methylocucumis ஆனது நெற்பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் தானிய விளைச்சலை அதிகரிக்கிறது.

3. ‘PARIVESH’ என்ற இணைய நுழைவை உருவாக்கிய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. விவசாய அமைச்சகம்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் அமைச்சகம்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட நடுவண் அரசின் ‘பரிவேஷ்’ இணைய நுழைவு 50,000 ஒப்புதல்களைக் கடந்துள்ளது. Pro Active and Responsive Facilitation by Interactive and Virtuous Environmental Single-window Hub என்பதன் சுருக்கமான PARIVESH, நாடு முழுவதும் சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல்களைப் பெறுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு ஒற்றைச் சாளர இணைய நுழைவாக விளங்கி வருகிறது.

4. அண்மையில், பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை எதிர்த்துப்போராட டிஜிட்டல் சக்தி மையத்தைத் தொடக்கியுள்ள சட்டப்பூர்வ அமைப்பு எது?

அ. தேசிய பெண்கள் ஆணையம்

ஆ. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம்

இ. தேசிய மனித உரிமைகள் ஆணையம்

ஈ. தேசிய பசுமை தீர்ப்பாயம்

  • பெண்களுக்கு எதிரான இணையவெளிக்குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய பெண்கள் ஆணையம் (NCW) புது தில்லியில் டிஜிட்டல் சக்தி மையத்தைத் தொடக்கியது. இவ்வசதி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2018இல் தொடங்கப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் சக்தி இயக்கத்தின் அடிப்படையில், அடையாள திருட்டு மற்றும் சைபர் பின்தொடரல்போன்ற இணையவெளிக் குற்றங்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த மையம் உதவும்.

5. தோட்டக்கலை கொத்துக்கள் என்றால் என்ன?

அ. ஆண்டுதோறும் வெவ்வேறு பயிர்கள் சுழற்சி செய்யப்படும் பகுதிகள்

. குறிப்பிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் நிலப்பகுதிகள்

இ. கால்நடை வளர்ப்புக்கென உள்ள பகுதிகள்

ஈ. பெருநகரங்களில் உள்ள நகர்ப்புற தோட்டங்கள்

  • 5 ஆண்டுகளில் 100 ஏற்றுமதிசார்ந்த தோட்டக்கலை கொத்துக்களை நிறுவ `18,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சர் அறிவித்தார். தோட்டக்கலைக் கொத்துக்கள் என்பது குறிப்பிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பகுதிகளாகும். இந்த முதலீடு ஆப்பிள் மற்றும் மாம்பழம்போன்ற பயிர்களின் தரம் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்றுமதித் தரங்களில் கவனம் செலுத்துவதன்மூலம், தோட்டக்கலைத் துறையில் இந்தியாவின் உலகளாவிய பங்கை அதிகரிக்கவும், பண்ணை வருமானத்தை அதிகரிக்கவும் இந்தக் கொத்துக்கள் உதவும்.

6. தரநிலைப்படுத்தப்பட்ட மழைப்பொழிவு குறியீட்டின் (Standardized Precipitation Index) முக்கிய நோக்கம் என்ன?

அ. வெப்பநிலை மாறுபாடுகளை மதிப்பிடுவது

ஆ. மழைப்பொழிவு தரவுகளின் அடிப்படையில் ஈரமான அல்லது வறண்ட நிலைகளை மதிப்பிடுதல்

இ. மண்ணின் ஈரப்பதத்தை அளவிடுவது

ஈ. வளி வடிவங்களை பகுப்பாய்வு செய்வது

  • இந்திய வானிலை ஆய்வுமையமானது (IMD) தரநிலைப்படுத்தப்பட்ட மழைப்பொழிவு குறியீட்டை (SPI) பயன்படுத்தி மழைப்பொழிவு மற்றும் வறட்சி போக்குகளை ஆய்வுசெய்துள்ளது.
  • நீண்டகால மழைப்பொழிவு தரவுகளின் அடிப்படையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈரமான அல்லது வறண்ட நிலைகளை இக்குறியீடு மதிப்பிடுகிறது. இது வறட்சிக்கு எதிர்மறை மதிப்புகளையும் ஈரமான நிலைமைகளுக்கு நேர்மறை மதிப்புகளையும் வழங்குகிறது. நிலைமைகளின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கு 1 முதல் 72 மாதங்கள் வரையிலான பல்வேறு கால அளவுகளை இக்குறியீடு பயன்படுத்துகிறது.

7. ஆண்டுதோறும், ‘ஹிரோஷிமா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 5 ஆகஸ்ட்

ஆ. 6 ஆகஸ்ட்

இ. 7 ஆகஸ்ட்

ஈ. 8 ஆகஸ்ட்

  • ஆகஸ்ட்.06, 1945 அன்று அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதை நினைவுகூரும் ஹிரோஷிமா நாள், ஆகஸ்ட்.06 அன்று அனுசரிக்கப்பட்டது. B-29 குண்டுவீச்சு விமானமான எனோலா கேலிருந்து வீசப்பட்ட, “லிட்டில் பாய்” என்ற குண்டு, 70,000-80,000 பேரை பலிவாங்கியது. ஆகஸ்ட்.09 அன்று நாகசாகியில் வீசப்பட்ட இரண்டாவது குண்டு, ஆகஸ்ட்.15, 1945 அன்று ஜப்பான் சரணடைய வழிவகுத்தது. அதன்பின் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த இரண்டாம் உலகப்போரில்தான் முதன்முதலில் அணுவாயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

8. அருள்மிகு தளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • தமிழ்நாட்டில் உள்ள தளீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, கல்வெட்டுப்படி முறையில் நகலெடுக்கும் பணியை இந்திய தொல்லியல் துறை தொடங்கியுள்ளது. கற்களைச் சுத்தம் செய்தல், வேலைப்பாடுகளை மேப்லிதோ காகிதத்திற்கு மாற்றுதல், மை பூசுதல் மற்றும் விவரங்களை பதிவுசெய்தல் ஆகியவை இதிலடங்கும். 9 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று வாழ்க்கை முறைகள் மற்றும் ஒரு சேர ஆட்சியாளரால் திருக்கோவில் கட்டப்பட்டதைப்பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

9. அண்மையில், ஃபிஜியின் மிகவுயரிய குடிமக்கள் விருதான, ‘Companion of the Order of Fiji’ வழங்கப்பெற்றவர் யார்?

அ. திரௌபதி முர்மு

ஆ. நரேந்திர மோதி

இ. S ஜெய்சங்கர்

ஈ. அமித் ஷா

  • ஆக.05 – 07 வரை ஃபிஜிக்கு தனது முதல் அலுவல்பூர்வ பயணமாகச் சென்றிருந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, ஃபிஜியின் மிகவுயரிய குடிமக்கள் விருதான ‘Companion of the Order of Fiji’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஃபிஜிக்குச் சென்ற முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான அவர், அங்கு பிரதமர் சிதிவேனி ரபுகா மற்றும் குடியரசுத் தலைவர் ரது வில்லியம் மைவலிலி கட்டோனிவேரைச் சந்தித்தார். இந்தியாவின் ஆதரவுடன் கட்டப்படவுள்ள 100 படுக்கைகள்கொண்ட மீசிறப்புமிக்க மருத்துவமனைக்கான நிலத்தையும் ஃபிஜி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

10. ‘சுக்ராலோஸ்’ என்றால் என்ன?

அ. ஒரு வகை உப்பு

ஆ. கலோரி ஏதுமில்லாத இனிப்பு

இ. ஒரு பழம்

ஈ. ஒரு வகை கொழுப்பு

  • கலோரி இல்லா செயற்கை இனிப்பான உணவுக்குப் பயன்படுத்தும் சர்க்கரையிலிருந்து (சுக்ரோஸ்) தயாரிக்கப்படும் ‘சுக்ரோலோஸ்’, குளுக்கோஸ் அல்லது HbA1c அளவுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது மற்றும் உடல் நிறை குறியீட்டெண்ணை (BMI) இது மேம்படுத்தலாம். இது சர்க்கரையைவிட சுமார் 600 மடங்கு இனிமையானது மற்றும் விதிவிலக்காக நிலையானதாகும். பெரும்பாலான நுகரப்படும் சுக்ரோலோஸ் (85%) உடல் முழுவதும் நிலையாக மாறாமல் செல்கிறது, மீதமுள்ள 15% உறிஞ்சப்பட்ட சுக்ரோலோஸ் எந்தக் கலோரிகளையும் வழங்காமல் சிறுநீரில் விரைவாக வெளியேற்றப்படுகிறது.

11. மால்வா கால்வாய் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. பஞ்சாப்

ஈ. குஜராத்

  • பஞ்சாபில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள மால்வா கால்வாய் திட்டம், ஏழு மாவட்டங்களில் உள்ள 2 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 149.53 கிமீ நீளமுள்ள இக்கால்வாய் சட்லஜ் ஆற்றின் ஹரிகே ஹெட்வொர்க்ஸில் உருவாகி 2,000 கன அடி நீரைக்கொண்டுசெல்லும். இந்தத் திட்டம் முடிவடைய 5 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு இடையில் கால்வாய் கட்டுமானத்திற்கு குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும் நிலை உள்ளது.

12. 2024-பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து சமீபத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் சார்ந்த விளையாட்டு எது?

அ. குத்துச்சண்டை

ஆ. பூப்பந்து

இ. மல்யுத்தம்

ஈ. டேபிள் டென்னிஸ்

  • இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற யுய் சுசாகி மற்றும் ஐரோப்பிய சாம்பியன் ஒக்ஸானா லிவாச் ஆகிய மல்யுத்த வீராங்கனைகளை வீழத்தி இறுதிப்போட்டிக்கு வந்த வினேஷ் போகத், மல்யுத்த விதிகளின்படி 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரபல உயிரிவேதியியல் வல்லுநர் – கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு நாட்டின் முதல் ‘விஞ்ஞான் ரத்னா’ விருது.

நாட்டின் முதலாவது தேசிய அறிவியல் விருதுகளை நடுவணரசு அறிவித்தது. அதன்படி, உயரிய ‘விஞ்ஞான் ரத்னா’ விருது பிரபல உயிரிவேதியியல் வல்லுநர் கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறையில் ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் தலைசிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் நோக்கில் தேசிய அறிவியல் விருதுகள் வழங்கப்படும் என்று நடுவண் அரசு நடப்பாண்டு தொடக்கத்தில் அறிவித்தது. ‘விஞ்ஞான் ரத்னா’, ‘விஞ்ஞான் ஸ்ரீ’, ‘விஞ்ஞான் யுவா’, ‘விஞ்ஞான் குழு’ என 4 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நாட்டின் அறிவியல் துறையில் மிகவுயரிய விருதான, ‘விஞ்ஞான் ரத்னா’வைப்பெறும் முதல் நபர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.

சந்திரயான்-3 திட்ட குழுவினருக்கு விருது:

‘விஞ்ஞான் குழு’ விருது, சந்திரயான்-3 திட்ட குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விண்வெளி தினமான ஆக.23ஆம் தேதி இவ்விருதுகளை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஆக.15இல் விண்ணில் பாய்கிறது SSLV D-3 ஏவுகணை!

புவிக்கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோளுடன் SSLV D-3 ஏவுகணை ஆந்திர பிரதேச மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஆக.15ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

EOS-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிகி எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கிமீ தொலைவில் உள்ள புவி தாழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் – ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

EOIR கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவும். இதே போல், GNSS-R கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகளை கண்டறிதல்போன்ற பணிகளுக்குப் பயன்படும். சிக் யுவி டோசிமீட்டர் விண்ணில் புற ஊதாக் கதிர்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.

1. Which department recently released a set of commemorative postage stamps to celebrate the Paris Olympics 2024?

A. Department of Financial Services

B. Department of Science and Technology

C. Department of Posts

D. Department of Telecommunications

  • The Department of Posts released commemorative stamps for the Paris Olympics. These limited-edition stamps celebrate significant events, personalities, and issues. They are available at Philatelic Bureaux and through the Philatelic Deposit Account Scheme. Stamps can honor institutions on major anniversaries, personalities of national/international importance posthumously, and heritage sites. Proposals for stamps can be submitted by any Indian citizen, following specific guidelines by the Ministry of Communications.

2. What is ‘Methylocucumis oryzae’?

A. Virus

B. Bacteria

C. Protozoa

D. Fungi

  • Researchers have isolated India’s first indigenous methanotroph, Methylocucumis oryzae, from rice fields and wetlands in Western India. This cucumber-shaped bacterium, abundant in wetlands and rice fields, is important for methane consumption. It is larger than most bacteria and grows only below 37ºC. Methylocucumis promotes rice plant growth by inducing early flowering and increasing grain yield, though its slow growth limits large-scale applications.

3. ‘PARIVESH Portal’ is developed by which ministry?

A. Ministry of Defence

B. Ministry of Power

C. Ministry of Agriculture

D. Ministry of Environment, Forest and Climate Change

  • The Centre’s PARIVESH portal, developed by the Ministry of Environment, Forest and Climate Change, has crossed 50,000 clearances. PARIVESH, which stands for Pro Active and Responsive Facilitation by Interactive and Virtuous Environmental Single-window Hub, is a single-window portal for obtaining and monitoring Environment, Forest, Wildlife, and Coastal Regulation Zone (CRZ) clearances across the nation.

4. Recently, which statutory body has inaugurated the Digital Shakti Center to combat cyber crimes against women?

A. National Commission for Women

B. National Commission for Minorities

C. National Human Rights Commission

D. National Green Tribunal

  • The National Commission for Women (NCW) inaugurated the Digital Shakti Center in New Delhi to combat cyber crimes against women. This facility aims to raise awareness and provide technical support for addressing complaints. Building on the successful Digital Shakti campaign launched in 2018, the center will help women protect themselves from cyber crimes like identity theft and cyberstalking.

5. What are Horticulture Clusters?

A. Areas where different crops are rotated annually

B. Geographical areas where specific crops are cultivated, processed, and marketed

C. Regions dedicated to livestock farming

D. Urban gardens in metropolitan areas

  • The Union Agriculture Minister announced an ₹18,000 crore plan to establish 100 export-oriented horticulture clusters over five years. Horticulture clusters are areas where specific crops are grown, processed, and marketed. This investment aims to improve quality and competitiveness of crops like apples and mangoes. By focusing on export standards, these clusters will help boost India’s global share in horticulture and increase farm income.

6. What is the main purpose of the Standardized Precipitation Index (SPI)?

A. To estimate temperature variations

B. To estimate wet or dry conditions based on precipitation data

C. To measure soil moisture

D. To analyze wind patterns

  • The India Meteorological Department (IMD) has analyzed precipitation and drought trends using the Standardised Precipitation Index (SPI). The SPI estimates wet or dry conditions based on long-term precipitation data, ideally over 30 years. It provides negative values for droughts and positive values for wet conditions. The index includes various timescales ranging from 1 to 72 months to assess the severity of conditions.

7. Which day is observed as ‘Hiroshima Day’ every year?

A. 5 August

B. 6 August

C. 7 August

D. 8 August

  • Hiroshima Day, observed on August 6th, commemorates the atomic bombing of Hiroshima, Japan, by the US on August 6, 1945. The bomb, “Little Boy,” dropped from the B-29 bomber Enola Gay, instantly killed 70,000-80,000 people. A second bomb on Nagasaki on August 9 led to Japan’s surrender on August 15, 1945, ending World War II and marking the first use of nuclear weapons in warfare.

8. Thalishwarar Temple is located in which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Maharashtra

D. Andhra Pradesh

  • The Archaeological Survey of India (ASI) has started copying stone inscriptions at the Thalishwarar temple in Tamil Nadu using the estampage method. This involves cleaning the stones, transferring the engravings to maplitho paper, inking it, and recording details. The replicated inscriptions, including those in ancient Tamil scripts from the 9th and 12th centuries, offer insights into historical lifestyles and the temple’s construction by a Chera ruler.

9. Recently, who has been conferred with Fiji’s highest civilian award ‘Companion of the Order of Fiji’?

A. Droupadi Murmu

B. Narendra Modi

C. S Jaishankar

D. Amit Shah

  • During her first official visit to Fiji from August 5 to 7, 2024, President Droupadi Murmu was honored with Fiji’s highest civilian award, the Companion of the Order of Fiji. She is the first Indian President to visit Fiji, where she met with Prime Minister Sitiveni Rabuka and President Ratu William Maivalili Katonivere. The Fiji government also allocated land for a 100-bed Super Speciality Hospital, supported by India.

10. What is ‘Sucralose’?

A. A type of salt

B. A no-calorie sweetener

C. A natural fruit

D. A type of fat

  • Sucralose, a no-calorie artificial sweetener made from table sugar (sucrose), has been found to have no adverse impact on glucose or HbA1c levels and may even improve body mass index (BMI). It’s approximately 600 times sweeter than sugar and exceptionally stable. Most consumed sucralose (85%) passes through the body unchanged while the remaining 15% absorbed sucralose gets excreted quickly in urine without providing any calories.

11. Malwa canal project is associated with which state?

A. Uttar Pradesh

B. Rajasthan

C. Punjab

D. Gujarat

  • The proposed Malwa canal project in Punjab aims to irrigate 2 lakh acres of land across seven districts. The 149.53-km canal will originate at Harike Headworks on the Sutlej river and carry 2,000 cusecs of water. The project is expected to take five years to complete but faces concerns over technical viability and funding. The canal’s construction will require significant investment amidst Punjab’s current funds crunch.

12. Vinesh Phogat, who recently disqualified from Paris Olympics 2024, is associated with which sports?

A. Boxing

B. Badminton

C. Wrestling

D. Table Tennis

  • Indian wrestler Vinesh Phogat has been disqualified from competing in women’s freestyle wrestling finals at Paris Olympics due to being overweight by just100 grams exceeding limit set by wrestling rules governing weight categories. She had reached finals after defeating wrestlers including Tokyo Olympic gold medalist Yui Susaki & European champion Oksana Livach.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!