TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 7th October 2024

1. 26ஆவது நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி (WETEX) நடத்தப்பட்ட இடம் எது?

அ. சென்னை

. துபாய்

இ. கோயம்புத்தூர்

ஈ. மாஸ்கோ

  • துபாயில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 26ஆவது நீர், ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சியில் (WETEX) 29 முன்னணி இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தால் (DEWA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர் சுத்திகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களில் புதுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அக்.03 வரை நடைபெறுகிறது. 2022 மே மாதத்தில் ஏற்பட்ட விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா பொருளாதார உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக அளவு $84.5 பில்லியனை எட்டும் என்றும் 2027ஆம் ஆண்டில் $100 பில்லியனாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. புளூட்டோவின் எந்த நிலவில், கரியமில வாயு (CO2) மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) வாயுக்கள் இருப்பதை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்?

அ. சரோன்

ஆ. நிக்ஸ்

இ. ஹைட்ரா

ஈ. கெர்பரோஸ்

  • புளூட்டோவின் மிகப்பெரிய நிலவான சரோனில் கரியமில வாயு (CO2) மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2) வாயுக்கள் இருப்பதை அறிவியலாளர்கள் அண்மையில் கண்டறிந்தனர். 1,214 கிமீ விட்டத்துடன் புளூட்டோவில் பாதி அளவுடைய சரோன், கடந்த 1978இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிரேக்க புராணங்களில் இறந்த ஆத்மாக்களின் படகு வீரரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சரோனின் நிறை புளூட்டோவின் பத்தில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளது, அது இரட்டை குள்ளக்கோள் அமைப்பை உருவாக்குகின்றது. புளூட்டோவிற்கும் சரோனுக்கும் இடையிலான தூரம் 19,640 கிமீ ஆகும். சரோன் ஆனது புளூட்டோவை 6.4 பூமி நாட்களில் சுற்றிவருகிறது.

3. அண்மையில், இந்தியாவின் கடல்சார் கரிமநீக்க மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. பெங்களூரு

ஆ. புது தில்லி

இ. ஹைதராபாத்

ஈ. சென்னை

  • மத்திய துறைமுக அமைச்சகமும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து நடத்திய இந்தியாவில் கடல்சார் கரிமநீக்க மாநாடு புது தில்லியில் நடந்து முடிந்தது. பசுமையான கப்பல் போக்குவரத்து மற்றும் வளங்குன்றா துறைமுக செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது. இது இந்தியாவின் கடல்சார் துறையை உலகளாவிய தட்பவெப்பநிலை இலக்குகளுடன் ஒருங்கமைப்பதை நோக்கமாகக்கொண்டது. ஹரித் சாகர் பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் மற்றும் 2070ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய கரியமில வாயு உமிழ்வை அடைவதற்கான இலக்கு போன்ற முன்முயற்சிகளைப்பற்றியும் இம்மாநாடு விவாதித்தது.

4. இந்தியாவில் இளையோரின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக நடுவணரசு தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?

அ. PM உள்ளகப் பயிற்சி திட்டம்

ஆ. இளையோர் அதிகாரமளிக்கும் முன்னெடுப்பு

இ. டிஜிட்டல் உள்ளகப் பயிற்சி திட்டம்

ஈ. திறன் இந்தியா திட்டம்

  • பிரதமர் உள்ளகப் பயிற்சி திட்டமானது (PM Internship Scheme) அண்மையில் இந்தியாவில் உள்ள இளையோர்க்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் வணிகச்சூழல்களில் நடைமுறை அனுபவத்தை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் முன்னணி 500 நிறுவனங்களில் சுமார் 1 கோடி இளையோருக்கு உள்ளகப் பயிற்சி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகமானது இணைய நுழைவின்மூலம் இச்சோதனைத் திட்டத்தை மேற்பார்வையிடும். பயிற்சியாளர்கள் அரசாங்கத்திடமிருந்து `4,500 மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவார்கள்; மேலும் CSRமூலம் நிறுவனங்களிடமிருந்து `500 பெறுவார்கள். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின்கீழ், ஒருமுறை வழங்கப்படும் `6,000 மானியமும் காப்பீடும் வழங்கப்படும்.

5. மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களின்மூலம் வேளாண்மை அமைச்சகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட இரண்டு குடைத்திட்டங்கள் யாவை?

அ. பிரதமர் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் கிரிஷோன்னதி யோஜனா (KY)

ஆ. எண்ணெய் வித்துக்கள் மற்றும் டிஜிட்டல் வேளாண்மைக்கான தேசிய திட்டம்

இ. பிரதமர் கிஸ்ஸான் சம்மன் நிதி மற்றும் பிரதமர் ஃபசல் பீமா யோஜனா

ஈ. மண் சுகாதார மேலாண்மை மற்றும் தேசிய தோட்டக்கலை திட்டம்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில், வேளாண் & உழவர்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மத்திய அரசு பொறுப்பேற்கும் அனைத்து திட்டங்களையும் பிரதமரின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் திட்டம், உணவு விடுதி திட்டம் மற்றும் கிரிஷோன்னதி திட்டம் ஆகிய இரண்டு குடைத்திட்டங்களாக சீரமைப்பதற்கான வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • பிரதம அமைச்சரின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் திட்டம் நீடித்த வேளாண்மையை ஊக்குவிக்கும். அதேநேரத்தில் கிரிஷோன்னதி திட்டம், உணவுப்பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவு குறித்து பேசும். பல்வேறு கூறுகளின் திறமையான & திறம்பட்ட அமலாக்கத்தை உறுதிசெய்ய அனைத்து கூறுகளும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும். பிரதமரின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் திட்டம், கிரிஷோன்னதி திட்டம் ஆகியவை மொத்தம் முன்மொழியப்பட்ட `1,01,321.61 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மாநில அரசுகள்மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
  • திட்டங்களைச் சீரமைப்பதன்மூலம், மாநிலத்தின் வேளாண்மைத் துறைகுறித்த விரிவான செயல்முறைத் திட்ட ஆவணத்தை முழுமையான முறையில் தயாரிக்க மாநிலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த உத்திசார் ஆவணம் பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மற்றும் வேளாண் பொருட்களுக்கான மதிப்புச் சங்கிலி அணுகுமுறையை உருவாக்குதல் போன்ற வளர்ந்து வரும் பிரச்சினைகளையும் கையாள்கிறது.

6. ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (DG AFMS) தலைமை இயக்குநராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி யார்?

அ. பரிஷா சந்தோஷி

ஆ. புனிதா அரோரா

இ. ஆர்த்தி சரின்

ஈ. ஷாலிசா தாமி

  • அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின், ஆயுதப்படை மருத்துவ சேவைககளின் (DG AFMS) தலைமை இயக்குநராகப் பணியாற்றிய முதல் பெண்மணி ஆனார். DG AFMS ஆனது ஆயுதப்படைகளுக்கான மருத்துவக்கொள்கை விஷயங்களை மேற்பார்வையிடுகிறது மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிக்கை செய்கிறது. இந்தப் பதவிக்கு வருவதற்குமுன், அவர் கடற்படை மற்றும் வான்படைக்கான DG மருத்துவ சேவைகள் மற்றும் புனே ஆயுதப்படை மருத்துவக்கல்லூரியின் இயக்குநர் உட்பட முக்கிய பதவிகளை வகித்தார். அவரது 38 ஆண்டுகால வாழ்க்கையில், அவர் இந்திய ஆயுதப்படையின் மூன்று கிளைகளிலும் பணியாற்றினார். 2024இல் ‘அதி விஷிஸ்ட் சேவா’ பதக்கம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

7. உள்நாட்டு எரிசக்தித் திறனை அதிகரிப்பதற்காக, இந்தியா, கீழ்க்காணும் எதனுடன் இணைந்துள்ளது?

அ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் தூய்மையான தொழில்நுட்பத்திற்கான சங்கம்

ஆ. பன்னாட்டு எரிசக்தி திறன் மையம்

இ. அமெரிக்க எரிசக்தித் துறை

ஈ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, எரிசக்தி திறன் மையத்தில் இந்தியா உறுப்பினராவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2020இல் நிறுவப்பட்ட இந்த உலகளாவிய தளம், உலகம் முழுவதும் எரிசக்தி செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த மையம் அறிவு, சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ள அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. இந்த மையத்தில் இணைவதன்மூலம், வல்லுநர்கள் மற்றும் வளங்களின் பரந்த வலையமைப்பிற்கான அணுகலை இந்தியா பெறும், இது அதன் உள்நாட்டு எரிசக்தி திறன் முன்முயற்சிகளை மேம்படுத்த உதவும்.
  • 2024 ஜூலை நிலவரப்படி, பதினாறு நாடுகள் (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, டென்மார்க், ஐரோப்பிய ஆணையம், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, லக்சம்பர்க், ரஷ்யா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்) மையத்தில் இணைந்துள்ளன. இந்த மையத்தின் உறுப்பினர் என்ற முறையில், மற்ற உறுப்புநாடுகளுடன் ஒத்துழைப்பு, தனது சொந்த நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள்மூலம் இந்தியா பயனடையும். எரிசக்தி திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன்மூலம் காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கும் நாடு பங்களிக்கும். இந்த மையத்தை செயல்படுத்தும் அமைப்பாக இந்தியாவின் சார்பில் எரிசக்தி திறன் மேம்பாட்டு அமைப்பு (BEE) நியமிக்கப்பட்டுள்ளது.

8. அண்மையில், நடுவணரசால் கீழ்க்காணும் எந்தெந்த மொழிகளுக்கு செம்மொழித்தகுதி வழங்கப்பட்டுள்ளது?

அ. மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி மற்றும் வங்காளம்

ஆ. உருது, கொங்கனி மற்றும் மைதிலி

இ. பஞ்சாபி, டோக்ரி, நேபாளி மற்றும் போடோ

ஈ. காஷ்மீரி மற்றும் மெய்டே

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, வங்காளம் ஆகிய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2004 அக்.12 அன்று “செம்மொழிகள்” என்ற புதிய பகுப்பை உருவாக்க நடுவணரசு முடிவுசெய்தது. இதையடுத்து செம்மொழித்தகுதிக்கு முன்மொழியப்பட்ட மொழிகளை ஆய்வுசெய்ய 2004 நவம்பரில் சாகித்திய அகாதமியின்கீழ் கலாச்சார அமைச்சகத்தால் மொழியியல் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. 2005 நவம்பரில் அளவுகோல்கள் திருத்தப்பட்டன. இதன் பின்னர் மத்திய அரசு, இதுவரை கீழ்க்கண்ட மொழிகளுக்கு செம்மொழித்தகுதியை வழங்கியுள்ளது: தமிழ் – 12/10/2004, சமற்கிருதம் – 25/11/2005, தெலுங்கு & கன்னடம் – 31/10/2008, மலையாளம் – 08/08/2013, ஒடியா-01/03/2014.
  • செம்மொழிகளுக்கான மாநிலங்கள்: மகாராஷ்டிரா (மராத்தி), பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் (பாலி, பிராகிருதம்), மேற்கு வங்கம் (வங்காளம்), அஸ்ஸாம் (அஸ்ஸாமி) ஆகியவை சம்பந்தப்பட்ட முதன்மை மாநிலங்கள்.

9. அண்மையில், இந்தியாவுடன் இணைந்த, “பன்னாட்டு மருத்துவ சாதன ஒழுங்குமுறை மன்றத்தின்” நோக்கம் என்ன?

அ. மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிப்பது

ஆ. மருத்துவச் சாதன விதிமுறைகளைச் சீரமைப்பது

இ. மருத்துவச் சாதனங்களை உற்பத்தி செய்வது

ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை

  • மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது பன்னாட்டு மருத்துவச் சாதன ஒழுங்குமுறை மன்றத்தின் இணை உறுப்பினரானது. பன்னாட்டு மருத்துவச் சாதன கட்டுப்பாட்டாளர்கள் மன்றம் (IMDRF), 2011இல் நிறுவப்பட்டது, இது சர்வதேச மருத்துவச் சாதன ஒழுங்குமுறைகளின் ஒத்திசைவு மற்றும் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய மருத்துவ சாதன கட்டுப்பாட்டாளர்களின் கூட்டுக்குழுவாகும்.
  • IMDRF உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகிய நாடுகளின் தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்குவர். IMDRFஇல் இணை உறுப்பினர் அந்தஸ்து பெறுவது, நம்பகத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதுடன், உலகெங்குமுள்ள ஒழுங்குமுறை ஆணையங்களுடன் ஒத்துழைப்பையும் வழங்கும். ஓர் இணை உறுப்பினராக, IMDRFஇன் திறந்த அமர்வுகளில் இந்தியா பங்கேற்கும்.

10. சமீபத்தில், ‘உலகளாவிய உத்திசார் ஆயத்தநிலை, தயார்நிலை மற்றும் பதிலளிப்புத் திட்டத்தைத்’ தொடங்கிய அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. உலக சுகாதார நிறுவனம் (WHO)

இ. UNEP

ஈ. ILO

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) “உலகளாவிய உத்திசார் ஆயத்தநிலை, தயார்நிலை மற்றும் பதிலளிப்புத் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. டெங்கு மற்றும் ஜிகா மற்றும் சிக்குன்குனியாபோன்ற ஏடிஸ்மூலம் பரவும் கொசு வழி பரவும் வைரஸ்களை ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நடவடிக்கையின்மூலம் எதிர்த்துப் போராடுவதே இதன் நோக்கமாகும். இத்திட்டமானது 2025 செப்டம்பர் வரை ஓராண்டுக்குமேல் இயங்கும். இது ஐந்து முக்கிய கூறுகளில் கவனஞ்செலுத்துகிறது. அவை, அவசரகால ஒருங்கிணைப்பு, கூட்டு கண்காணிப்பு, சமூகப்பாதுகாப்பு, பாதுகாப்பான மற்றும் அளவிடக்கூடிய பராமரிப்பு மற்றும் எதிர் நடவடிக்கைகளுக்கான அணுகல்.

11. இந்திய இராணுவத்திற்கு முதலாவது, ‘ஆகாசதீரன் வான் பாதுகாப்பு அமைப்பை’ வழங்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. பாரத் மின்னணு நிறுவனம் (BEL)

இ. HAL

ஈ. BHEL

  • பாரத் மின்னணு நிறுவனமானது (BEL) வான் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் அறிக்கையிடல் அமைப்புக்கான 100 கட்டுப்பாட்டு மையங்களை (ஆகாசதீரன்) இந்திய இராணுவத்திற்கு வழங்கியுள்ளது. எறிகணை மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்போன்ற வான்வழி அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதில் இக்கட்டுப்பாட்டு மையங்கள் முக்கிய பங்குவகிக்கும்.

12. அண்மையில், காவல்துறையினருக்கான சைபர் கமாண்டோ பயிற்சியைத் தொடங்கிய நிறுவனம் எது?

அ. ஐஐடி பம்பாய்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி ரூர்க்கி

  • IIT-மெட்ராஸின் பிரவர்தக், காவல்துறையினருக்கான சைபர் கமாண்டோ பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த 6 மாத திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இது இந்தியா முழுவதும் உள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு சிறப்பு சைபர் பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள சைபர் கிரைம் செல்களைப் போலல்லாமல், எதிர்வினை நடவடிக்கைகளில் இது கவனம் செலுத்துகிறது. இத்திட்டம் இணைய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஒரு செயலூக்கப் படையை உருவாக்கும். சைபர் குற்றங்களை திறம்பட எதிர்த்துப்போராடுவதற்கும் தடுப்பதற்கும் காவல்துறையின் திறன்களை இந்தப்பயிற்சி மேம்படுத்தும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய கடற்படை, ஓமன் இராயல் கடற்படையுடன் 5 நாள் கடல்சார் பாதுகாப்பு கூட்டுப்பயிற்சி.

இந்திய கடற்படை நீண்டதூரப்பயிற்சிக்கு முதன்முறையாக ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப்படைப்பிரிவும், இந்திய கடலோரக் காவல்படை வீரர்களும் 5 நாள் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பயிற்சி நடைபெற்று வருகிறது.

2. மதுரையில் நவ.21இல் உலக கவிஞர்கள் மாநாடு.

இந்தியாவிலேயே முதல்முறையாக உலக கவிஞர்கள் மாநாடு மதுரையில் நவ.21ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. 1980இல் அமெரிக்காவில் ரோஸ்மேரி என்பவர் உலக கவிஞர்கள் மாநாட்டை முதன்முறையாக நடத்தினார்.

1. Where was the 26th Water, Energy, Technology and Environment Exhibition (WETEX) organized?

A. Chennai

B. Dubai

C. Coimbatore

D. Moscow

  • The 26th Water, Energy, Technology and Environment Exhibition (WETEX) 2024 started at the Dubai World Trade Centre with 29 leading Indian companies participating. Organized by Dubai Electricity and Water Authority (DEWA), the event runs until October 3, showcasing innovations in renewable energy, water treatment, and environmental technologies. The UAE-India economic relationship has strengthened since the Comprehensive Economic Partnership Agreement in May 2022, with trade volume reaching $84.5 billion and projections of $100 billion by 2027.

2. Scientists have recently detected the gases carbon dioxide and hydrogen peroxide on which moon of Pluto?

A. Charon

B. Nix

C. Hydra

D. Kerberos

  • Scientists found carbon dioxide and hydrogen peroxide on Pluto’s largest moon, Charon. Charon is half the size of Pluto, measuring 1,214 km across, discovered in 1978. It’s named after the ferryman of dead souls in Greek mythology. Charon’s mass is over one-tenth of Pluto’s, and the two form a double dwarf planet system. The distance between Pluto and Charon is 19,640 km. Charon completes one orbit of Pluto in 6.4 Earth days.

3. Recently, where was India’s Maritime Decarbonization Conference held?

A. Bengaluru

B. New Delhi

C. Hyderabad

D. Chennai

  • The Conference on Maritime Decarbonization in India, co-hosted by the Ministry of Ports and the Asian Development Bank, concluded in New Delhi. It emphasized the importance of green shipping and sustainable port operations. It aimed to align India’s maritime sector with global climate goals, discussing initiatives like the Harit Sagar Green Port Guidelines and the goal of achieving net-zero carbon emissions by 2070. This reflects India’s commitment to transforming its maritime industry for a sustainable future.

4. What is the name of new scheme launched by central government to enhance youth employability in India?

A. PM Internship Scheme

B. Youth Empowerment Initiative

C. Digital Internship Scheme

D. Skill India Scheme

  • The Prime Minister’s Internship Scheme was recently launched to improve youth employability in India by giving practical experience in business environments. It aims to offer internships to one crore youth in the top 500 companies over five years. The Ministry of Corporate Affairs will oversee the pilot project via an online portal. Interns will receive a ₹4,500 monthly stipend from the government, plus ₹500 from companies through CSR. A one-time grant of ₹6,000 and insurance under PM Jeevan Jyoti Bima Yojana and PM Suraksha Bima Yojana will also be provided.

5. What are the two umbrella schemes created by the rationalization of Centrally Sponsored Schemes (CSS) under the Ministry of Agriculture?

A. Pradhan Mantri Rashtriya Krishi Vikas Yojana (PM-RKVY) and Krishonnati Yojana (KY)

B. National Mission on Oil Seeds and Digital Agriculture

C. Pradhan Mantri Kissan Samman Nidhi and Pradhan Mantri Fasal Bima Yojana

D. Soil Health Management and National Horticulture Mission

  • The Union Cabinet, led by Prime Minister Narendra Modi, approved the rationalization of Centrally Sponsored Schemes into two main umbrella schemes: Pradhan Mantri Rashtriya Krishi Vikas Yojana (PM-RKVY) and Krishonnati Yojana (KY).
  • PM-RKVY aims to promote sustainable agriculture, while Krishonnati Yojana focuses on food security and agricultural self-sufficiency. This restructuring allows state governments to create comprehensive strategic plans tailored to their agricultural needs, addressing challenges like climate resilience and value chain development. The total proposed expenditure for these schemes is Rs 1,01,321.61 crore, enhancing the efficiency of agricultural programs across India.

6. Who became the first woman officer to serve as the Director-General of the Armed Forces Medical Services (DG AFMS)?

A. Parisha Santoshi

B. Punita Arora

C. Arti Sarin

D. Shaliza Dhami

  • Surgeon Vice Admiral Arti Sarin became the first woman to serve as Director General, Armed Forces Medical Services (DGAFMS).
  • The DGAFMS oversees medical policy matters for the Armed Forces and reports to the Ministry of Defence. Before this role, she held key positions, including DG Medical Services for the Navy and Air Force, and Director of Armed Forces Medical College, Pune. Over her 38-year career, she served in all three branches of the Indian Armed Forces. She has received several awards, including the Ati Vishist Seva Medal in 2024.

7. India has recently joined which global platform to enhance its domestic energy efficiency?

A. Association for Renewable Energy and Clean Technology

B. International Energy Efficiency Hub

C. United States Department of Energy

D. Renewable Energy Agency

  • The Union Cabinet, led by the Prime Minister of India, has approved India’s membership in the Energy Efficiency Hub. This global platform, established in 2020, promotes energy efficiency worldwide. The hub connects governments, international organizations, and private entities to share knowledge and solutions. Sixteen countries, including the U.S., U.K., and China, are members.
  • The Bureau of Energy Efficiency (BEE) will represent India in the Hub. India’s participation will enhance its energy efficiency initiatives and contribute to climate change efforts. This aligns with India’s goals for sustainable development and reducing greenhouse gas emissions.

8. Recently, which languages have conferred the status of Classical Language by the union government?

A. Marathi, Pali, Prakrit, Assamese and Bengali

B. Urdu, Konkani and Maithili

C. Punjabi, Dogri, Nepali and Bodo

D. Kashmiri and Meitei

  • The Union Cabinet of India, led by the Prime Minister, has approved Classical Language status for Marathi, Pali, Prakrit, Assamese, and Bengali. The recognition is based on criteria set by a Linguistic Experts Committee. The language must also have knowledge texts, including prose, alongside poetry and inscriptional evidence. Other recognized classical languages are Tamil (2004), Sanskrit (2005), Telugu (2008), Kannada (2008), Malayalam (2013), and Odia (2014).

9. What is the purpose of the “International Medical Device Regulators Forum (IMDRF)”, recently joined by India?

A. Promote medical tourism

B. Harmonize medical device regulations

C. Manufacturing medical devices

D. None of the above

  • India has recently become an affiliate member of the International Medical Device Regulators Forum (IMDRF). The IMDRF was established in 2011 to promote international medical device regulatory harmonization. Its members include regulatory authorities from countries like the U.S., Australia, Canada, the EU, Japan, and WHO.
  • Membership reduces complexity for manufacturers and promotes public health through collaboration. It supports innovation and timely access to new medical devices. India will participate in IMDRF Open Sessions to share experiences and discuss regulatory strategies. This will strengthen India’s medical device regulatory system and ensure public health protection.

10. Which organization recently launched “Global Strategic Preparedness, Readiness and Response Plan (SPRP)”?

A. World Bank

B. World Health Organization (WHO)

C. UNEP

D. ILO

  • The World Health Organization (WHO) has launched the Strategic Preparedness and Response Plan (SPRP). The aim is to combat dengue and other Aedes-borne arboviruses like Zika and chikungunya through a coordinated global response. The SPRP will run for over a year, until September 2025. It focuses on five key components: emergency coordination, collaborative surveillance, community protection, safe and scalable care, and access to countermeasures.

11. Which organization successfully delivered the first ‘Akashteer Air Defence System’ to the Indian Army?

A. DRDO

B. Bharat Electronics Limited (BEL)

C. HAL

D. BHEL

  • Bharat Electronics Limited (BEL) has delivered 100 Control Centres for the Air Defence Control and Reporting system (Akashteer) to the Indian Army. These control centres will play a crucial role in protecting the country from aerial threats like missile and rocket attacks.

12. Which institution has recently launched a cyber commandos training for police?

A. IIT Bombay

B. IIT Kanpur

C. IIT Madras

D. IIT Roorkee

  • IIT-Madras Pravartak has launched a cyber commandos training program for police. This six-month residential program is an initiative of the Union Home Ministry. It aims to provide specialized cyber training for law enforcement agencies across India.
  • Unlike existing cybercrime cells that focus on reactive measures, this program will develop a proactive force to tackle cyber threats. The training will enhance the capabilities of police in effectively combating and preventing cybercrimes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!