TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 7th August 2024

1. அண்மையில், இந்தியாவின் முதல் செவ்வாய் மற்றும் திங்கள் உருவக ஆராய்ச்சி நிலையத்திற்கான இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியப்பகுதி எது?

அ. சென்னை

ஆ. பொக்ரான்

இ. கொச்சி

ஈ. லடாக்

  • லடாக் அறிவியலாளர்கள் லடாக்கை செவ்வாய் அல்லது திங்களுக்கான உருவக ஆராய்ச்சி நிலையத்திற்கான சாத்தியமான தளமாக அடையாளம் கண்டுள்ளனர். இத்தகைய நிலையங்கள் விண்வெளி தொழில்நுட்பங்களைச் சோதிப்பதற்கும், தீவிர சூழல்களில் மனித நடத்தையை ஆராய்வதற்குமாக கோளின் நிலைமைகளை உருவகப்ப-டுத்துகின்றன. லடாக்கின் வறண்ட, குளிர் மற்றும் பாறை நிலப்பரப்பு நிலத்தடி உறைபனி, எரிமலை பாறைகள் மற்றும் உப்பேரிகள் போன்ற அம்சங்களுடன் ஆரம்பகால செவ்வாய் மற்றும் திங்களை ஒத்துள்ளது. அதீத கதிர்வீச்சு மற்றும் குறைந்த வளிமண்டல அழுத்தம் உள்ளிட்ட அதன் நிலைகள் இந்த ஆராய்ச்சிக்கு சிறந்த இடமாக அமைகிறது.

2. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ. ஜன்னிக் பாவி

ஆ. நோவக் ஜோகோவிச்

இ. கார்லோஸ் அல்கராஸ்

ஈ. மத்தேயு எப்டன்

  • 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றதன்மூலம், கார்லோஸ் அல்கராஸை நேர் செட்களில் தோற்கடித்து கோல்டன் ஸ்லாம் பெற்ற ஐந்தாவது டென்னிஸ் வீரர் ஆனார் நோவக் ஜோகோவிச். இந்த வெற்றி, ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் US ஓபன் ஆகியவற்றில் அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் சேர்த்து, அவரை ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், ஆண்ட்ரே அகாஸி மற்றும் ஸ்டெஃபி கிராஃப் போன்ற மேதைகளுடன் இணைத்துள்ளது. நோவக் ஜோகோவிச் இதற்கு முன்பு 2008 – பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார், ஆனால் அதன்பின் நடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை.

3. ‘அஸ்ட்ரா மார்க்-1 (Mk-1)’ என்பது என்ன வகையான ஏவுகணையாகும்?

அ. தரையிலிருந்து வானிலக்கைத் தாக்கும் ஏவுகணை

ஆ. கட்புல நெடுக்கத்திற்கு அப்பால் வானிலிருந்தே வானிலுள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை

இ. வானிலிருந்து தரையிலக்கைத் தாக்கும் ஏவுகணை

ஈ. தரையிலிருந்தே தரையிலக்கைத் தாக்கும் ஏவுகணை

  • துணைத்தலைமை ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்தின் பாரத் டைனமிக்ஸ் லிட் (BDL) வருகைக்குப் பிறகு, Su-30 MKI மற்றும் தேஜாஸ் விமானங்களுக்கான 200 Astra Mk-1 ஏவுகணைகளைத் தயாரிக்க இந்திய விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது. DRDOஆல் உருவாக்கப்பட்ட மற்றும் BDLஆல் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா Mk-1 என்பது 80-110 கிமீ தூரம் மற்றும் மாக் 4.5 வேகம் வரை செல்லும் கட்புல நெடுக்கத்திற்கு அப்பால் வானிலிருந்தே வானிலுள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும்.

4. அண்மையில், உழவர்களிடமிருந்து அனைத்துப் பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கிய முதல் மாநிலமாக மாறிய மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. பஞ்சாப்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

  • இந்தியாவிலேயே முதல்முறையாக மாநிலத்தின் அனைத்துப்பயிர்களையும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) கொள்முதல் செய்வதாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், `133 கோடி பாசனக் கட்டணத்தை தள்ளுபடி செய்ததோடு, இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு நிலுவையில் உள்ள இழப்பீடாக `137 கோடி வழங்குவதாக அவர் உறுதியளித்தார். வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் பரிந்துரைத்த MSP, வேளாண் மக்களுக்கு நியாயமான விலையை உறுதிசெய்கிறது மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை அது ஊக்குவிக்கிறது.

5. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் தாடூ பழங்குடியினர் முதன்மையாக வசிக்கின்றனர்?

அ. பீகார்

ஆ. ஒடிசா

இ. மணிப்பூர்

ஈ. ஹரியானா

  • தாடூ மாணவர்கள் சங்கம், குறிப்பாக மணிப்பூரில் உள்ள தாடூ சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலகளாவிய தளத்தை தொடங்கியுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பழங்குடி இனமான தாடூ, முதன்மையாக மணிப்பூரிலும் பரவலாக அசாம், நாகாலாந்து, மிசோரம் மற்றும் மியான்மர் ஆகிய மாநிலங்களிலும் காணப்படுகின்றனர். அவர்கள் ஜும் வேளாண்மையைப் பின்பற்றுகின்றனர். வனக்குடியிருப்புகளில் வாழுமவர்கள், முக்கியமாக கிறித்தவத்தை பின்பற்றுகிறார்கள். தாடூ மொழி திபெட்டோ-பர்மிய குடும்பத்தின் ஒருபகுதியாகும்.

6. ‘VIRAASAT’ என்ற கண்காட்சியை புது தில்லியில் ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?

அ. விவசாய அமைச்சகம்

ஆ. ஜவுளி அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • 10ஆவது தேசிய கைத்தறி நாளைக்கொண்டாடும், “VIRAASAT” கண்காட்சி, 2024 ஆக.03-16 வரை புது தில்லியில் நடைபெறுகிறது. ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள தேசிய கைத்தறி மேம்பாட்டுக்கழகம் (NHDC) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி, இந்தியாவின் வளமான கைத்தறி மரபுகளை ஊக்குவிக்கிறது மற்றும் நெசவாளர்களை ஆதரிக்கிறது. ஆக.07 2015 அன்று நிறுவப்பட்ட தேசிய கைத்தறி நாள், 1905இன் சுதேசி இயக்கம் மற்றும் கைத்தறி துறையின் சமூக-பொருளாதார பங்களிப்புகளை நினைவுகூருகிறது.

7. அருண் நீர்மின் திட்டத்துடன் தொடர்புடைய நாடு எது?

அ. பூட்டான்

ஆ. நேபாளம்

இ. மியான்மர்

ஈ. ஆப்கானிஸ்தான்

  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, நேபாளத்தின் 669 மெகாவாட் (MW) கீழ் அருண் நீர்மின் திட்டத்தில் `5,792 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்தது. சங்குவசபா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டம், SJVN லிட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, ஆண்டுக்கு 2,900 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அண்டை நாடுகளுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த முன்னெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

8. ‘பிட்ச் பிளாக் – 2024’ என்ற பயிற்சியை நடத்திய நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. ஆஸ்திரேலியா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • ராயல் ஆஸ்திரேலிய விமானப் படையால் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பன்னாட்டுப் பயிற்சியான, ‘பிட்ச் பிளாக்-2024’ ஆஸ்திரேலியாவின் டார்வினில் முடிவடைந்தது. இருபது நாடுகள், 140க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 4,400 ராணுவ வீரர்கள் பங்கேற்ற இந்த ஆண்டுப்பயிற்சி, 43 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியது. இரவு நேர பறத்தல் பயிற்சியை மையமாகக்கொண்ட இந்தப்பயிற்சியில், இந்திய விமானப்படை பங்கேற்றது. 2018 மற்றும் 2022 பதிப்புகளிலும் இந்தியா பங்கேற்றது.

9. அண்மையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்காக, சண்டிகரில் இ-சாக்ஷியா, நியாய சேது, நியாய ஷ்ருதி மற்றும் இ-சம்மன் ஆகிய செயலிகளை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • ஆக.04 அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களுக்கு உதவும் விதமாக சண்டிகரில் இ-சாக்ஷியா, நியாய சேது, நியாய ஷ்ருதி மற்றும் இ-சம்மன் ஆகிய 4 செயலிகளை அறிமுகப்படுத்தினார். இச்செயலிகள் ஆதாரங்களை நிர்வகிக்கும், மின்னணு சம்மன்களை அனுப்பும், பல்வேறு அதிகாரிகளை இணைக்கும் மற்றும் காணொளி வடிவ சாட்சியத்தை அனுமதிக்கும்.
  • ஜூலை.01 முதல் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள், குற்றவியல் நீதி அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

10. அண்மையில், ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் (AITIGA) கூட்டுக்குழுவின் 5ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. ஜாகர்த்தா

ஆ. புது தில்லி

இ. மாஸ்கோ

ஈ. பெய்ஜிங்

  • ஐந்தாவது ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் (AITIGA) கூட்டுக்குழு கூட்டம் ஜகார்த்தாவில் ஜூலை.29 முதல் ஆக.01 வரை நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு AITIGA-ஐ மதிப்பாய்வு செய்வதன்மூலம் ASEAN மற்றும் இந்தியா இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. கணிசமான வர்த்தக அளவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறையுடன் ASEAN இந்தியாவின் முதன்மை வர்த்தக பங்காளியாக உள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவது மற்றும் ஆழமான பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

11. BIMSTEC வணிக உச்சிமாநாடு – 2024ஐ நடத்துகிற நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. பூட்டான்

ஈ. மியான்மர்

  • இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவை 1ஆவது BIMSTEC வணிக உச்சிமாநாட்டை ஆகஸ்ட் 6-8, 2024 வரை புது தில்லியில் நடத்துகின்றன. Dr S ஜெய்சங்கர் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாடு, பிராந்திய வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் விவாதிப்பார்கள்.

12. ஆண்டுதோறும் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 5 ஆகஸ்ட்

ஆ. 6 ஆகஸ்ட்

இ. 7 ஆகஸ்ட்

ஈ. 8 ஆகஸ்ட்

  • தேசிய கைத்தறி நாளானது ஆகஸ்ட்.07 அன்று கொண்டாடப்படுகிறது; இது இந்தியாவின் கைத்தறி பாரம்பரியத்தை மதிக்கிறது மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்கிறது. சுதேசி இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2015இல் தொடங்கப்பட்ட இது, உள்நாட்டு கைவினைகளை ஊக்குவிக்கிறது மற்றும் நெசவாளர்களுக்கு அதிகாரமளிக்கிறது. 2024இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும் கைவினைஞர்களுக்கான திறன்மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. விபத்தில்லாத தினம்.

நாட்டிலேயே முதன்முறையாக, சாலை விபத்துகளைக் குறைக்க, வாகன ஓட்டிகளிடையே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ‘விபத்தில்லா தினம்’ பெயரில் மிகப்பெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு தொடங்கியது. சென்னையில் ஆக.26 வரை இருபது நாள்கள் விபத்தில்லா தினம் கொண்டாடப்படவுள்ளது. முதல்வரின், ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக சென்னை போக்குவரத்து காவல்துறையால் இந்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

1. Recently, which region of India has been chosen as the location for India’s first Mars and Moon analogue research station?

A. Chennai

B. Pokhran

C. Kochi

D. Ladakh

  • Ladakh Scientists have identified Ladakh as a potential site for a Martian or Lunar analogue research station. Such stations simulate planetary conditions for testing space technologies and studying human behavior in extreme environments. Ladakh’s dry, cold, and rocky landscape resembles early Mars and the Moon, with features like permafrost, volcanic rocks, and saline lakes. Its conditions, including high radiation and low atmospheric pressure, make it an ideal location for this research.

2. Who won the gold medal in men’s single tennis title at the 2024 Paris Olympics?

A. Jannik Sinner

B. Novak Djokovic

C. Carlos Alcaraz

D. Matthew Ebden

  • Novak Djokovic became the fifth tennis player to achieve a Golden Slam by winning the men’s singles gold medal at the 2024 Paris Olympics, defeating Carlos Alcaraz in straight sets. This victory, added to his Grand Slam titles at the Australian Open, French Open, Wimbledon, and the US Open, places him alongside legends like Rafael Nadal, Serena Williams, Andre Agassi, and Steffi Graf. Djokovic had previously won a bronze medal in the 2008 Beijing Olympics but did not medal in the subsequent Olympics.

3. What kind of missile is ‘Astra mark-1 (Mk-1) missile’?

A. Surface-to-Air missile

B. Air-to-Air Beyond Visual Range (BVR) missile

C. Air-to-Surface missile

D. Surface-to-Surface missile

  • The Indian Air Force has approved the production of 200 Astra Mk-1 missiles for Su-30 MKI and Tejas aircraft after Deputy Chief Air Marshal Ashutosh Dixit’s visit to Bharat Dynamics Limited (BDL). Developed by DRDO and made by BDL, Astra Mk-1 is an air-to-air missile with a range of 80-110 km and a speed of Mach 4.5.

4. Which state recently became the first in India to buy all crops from farmers at MSP?

A. Haryana

B. Punjab

C. Uttar Pradesh

D. Bihar

  • Haryana’s Chief Minister announced the state’s procurement of all crops at Minimum Support Price (MSP), making it the first in India to do so. Additionally, he waived Rs 133 crore in irrigation charges and promised Rs 137 crore in pending compensation for crop damage due to natural calamities. MSP, recommended by the Commission for Agricultural Costs and Prices (CACP), ensures fair prices for farmers and promotes crop diversification.

5. Thadou tribes are primarily resides in which state?

A. Bihar

B. Odisha

C. Manipur

D. Haryana

  • The Thadou Students’ Association has launched a global platform to address key issues facing the Thadou community, particularly in Manipur. The Thadou are indigenous people in northeastern India, mainly in Manipur, and also found in Assam, Nagaland, Mizoram, and Myanmar. They practice jhum agriculture, live in forest settlements, and predominantly follow Christianity. The Thadou language is part of the Tibeto-Burman family.

6. ‘VIRAASAT’ exhibition is organized by which ministry in New Delhi?

A. Ministry of Agriculture

B. Ministry of Textiles

C. Ministry of Defence

D. Ministry of Power

  • The “VIRAASAT” exhibition, celebrating the 10th National Handloom Day, is being held from August 3 to August 16, 2024, at Handloom Haat, Janpath, New Delhi. Organized by the National Handloom Development Corporation Ltd (NHDC) under the Ministry of Textiles, this event promotes India’s rich handloom traditions and supports weavers. National Handloom Day, established on August 7, 2015, commemorates the Swadeshi Movement of 1905 and the handloom sector’s socio-economic contributions.

7. Arun Hydroelectric Project is associated with which country?

A. Bhutan

B. Nepal

C. Myanmar

D. Afghanistan

  • The Indian government, chaired by Prime Minister Narendra Modi, approved a Rs 5,792 crore investment in Nepal’s 669 MW Lower Arun Hydroelectric Project. Located in Sankhuwasabha district, this project, awarded to SJVN Ltd., will generate 2,900 million units of energy annually. This initiative highlights India’s commitment to enhancing renewable energy collaboration with neighboring countries.

8. Which country hosted the ‘Exercise Pitch Black 2024’?

A. Russia

B. Australia

C. China

D. Japan

  • Exercise Pitch Black 2024, a biennial multinational exercise hosted by the Royal Australian Air Force, concluded in Darwin, Australia. This year’s edition was the largest in its 43-year history, with 20 countries, over 140 aircraft, and 4,400 military personnel participating. The exercise, focused on night-time flying, saw the Indian Air Force participate, continuing its involvement from the 2018 and 2022 editions.

9. Recently, which ministry has launched e-Sakshya, Nyaya Setu, Nyaya Shruti and e-Summon App for three new criminal laws in Chandigarh?

A. Ministry of Home Affairs

B. Ministry of Law and Justice

C. Ministry of Defence

D. Ministry of Urban Development

  • On August 4, 2024, Union Home Minister Amit Shah launched four apps—e-Sakshya, Nyaya Setu, Nyaya Shruti, and e-Summon—in Chandigarh to support the new criminal laws in India. These apps will manage evidence, send electronic summons, link various authorities, and allow video testimony. The new laws, effective from July 1, 2024, include Bharatiya Nyaya Sanhita, Bharatiya Nagarik Suraksha Sanhita, and Bharatiya Sakshya Adhiniyam, aiming to enhance the criminal justice system.

10. Recently, where was the 5th meeting of the ASEAN-India Trade in Goods Agreement (AITIGA) Joint Committee held?

A. Jakarta

B. New Delhi

C. Moscow

D. Beijing

  • The fifth ASEAN-India Trade in Goods Agreement (AITIGA) Joint Committee meeting in Jakarta from July 29 to August 1, 2024, aimed to enhance economic cooperation between ASEAN and India by reviewing the 2009 AITIGA. ASEAN is a key trade partner for India, with significant trade volumes and a notable trade deficit. The meeting focused on improving the trade agreement and fostering deeper economic collaboration.

11. Which country hosts BIMSTEC Business Summit 2024?

A. India

B. Nepal

C. Bhutan

D. Myanmar

  • India’s Ministry of External Affairs and the Confederation of Indian Industries hosts the 1st BIMSTEC Business Summit in New Delhi from August 6-8, 2024. The summit, inaugurated by Dr. S. Jaishankar and attended by key leaders, aims to boost regional trade and investment among BIMSTEC countries. Over 300 stakeholders will discuss trade, connectivity, energy security, inclusive growth, and sustainable development.

12. Which day is celebrated as ‘National Handloom Day’ every year?

A. 5 August

B. 6 August

C. 7 August

D. 8 August

  • National Handloom Day, celebrated on August 7th, honors India’s handloom heritage and supports artisans. Launched in 2015 to mark the Swadeshi Movement’s centenary, it promotes indigenous crafts and empowers weavers. The 2024 theme focuses on integrating technology and innovation to expand market access and enhance skill development for artisans.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!