TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 7th & 8th September 2024

1. சம்ரித் திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் ஒரு முதன்மையான திட்டமாகும்?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், Startup Accelerators of MeitY for PRoduct Innovation, Development and GrowtH (SAMRIDH) திட்டத்திற்கான MeitYஇன் புத்தொழில் முடுக்கிகளின் 2ஆவது கூட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. SAMRIDH என்பது மென்பொருள் தயாரிப்புகளுக்கான தேசியக்கொள்கை – 2019இன்கீழ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2021 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட முதன்மைத் திட்டமாகும். இத்திட்டம் நான்கு ஆண்டுகளில் `99 கோடி மதிப்பீட்டில் 300 மென்பொருள் புத்தொழில்களை ஆதரிக்கிறது. இது ஏற்கனவே உள்ள மற்றும் புதிய முடுக்கிகளுக்கு சாத்தியமான தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான புத்தொழில்களைத் தேர்ந்தெடுத்து அளவிட உதவுகிறது.

2. Carrhotus piperus’ என்பது சார்ந்த இனம் எது?

அ. மீன்

ஆ. தவளை

இ. சிலந்தி

ஈ. பல்லி

  • தமிழ்நாட்டின் கீழ் பழனிமலைப்பகுதியில் புதிய குதிக்கும் சிலந்தி இனமான, ‘Carrhotus piperus’ கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மிளகுச்செடிகளில், தரையிலிருந்து இரண்டு மீ உயரத்தில் காணப்பட்டது. ‘piperus’ என்ற பெயர் அதன் வாழ்விடத்தைப் பிரதிபலிக்கும் ‘Piper nigrum’ என்ற தாவரத்திலிருந்து வந்தது. இந்தக் கண்டுபிடிப்பு இப்பகுதியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தை காட்டுகிறது. இந்தியாவில் மொத்த ‘Carrhotus’ இனங்களின் எண்ணிக்கையை 10ஆகவும், உலகளவில் 37ஆகவும் இது மாற்றியுள்ளது. பழனிமலைகள் மேற்குத்தொடர்ச்சிமலைகளின் ஒருபகுதி ஆகும் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள ஆனைமலை மலைகளின் தொடர்ச்சியாகும் இது.

3. அண்மையில், ஜோதி பெர்வால், U20 உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 76 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவில் எந்தப் பதக்கத்தை வென்றார்?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • ஸ்பெயினின் பொன்டெவெட்ராவில் நடைபெற்ற U20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​பிரிவின் இறுதிப்போட்டியில் உக்ரைனின் மரியா ஓர்லெவிச்சை தோற்கடித்து ஜோதி பெர்வால் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 2023இல் பிரியா மாலிக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்தப்பிரிவில் இந்தியாவின் தொடர்ச்சியான இரண்டாவது U20 உலகப்பட்டம் இதுவாகும். இந்திய மல்யுத்த வீரர்களான கோமல் மற்றும் ஸ்ரீஸ்தி முறையே 59 கிலோ மற்றும் 68 கிலோ பிரிவுகளில் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.

4. அண்மையில், எந்த அமைச்சகம், இந்தியாவில், GNSS அடிப்படையிலான மின்னணு முறை சுங்கக்கட்டண வசூலிப்பு நடைமுறையை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது இந்தியாவில் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான மின்னணு முறை சுங்கக்கட்டண வசூலிப்பு நடைமுறை (Electronic Toll Collection) அமைப்பை அறிவித்தது. சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க இந்திய நெடுஞ்சாலைகள் மேலாண்மை நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது நிகழ்நேரப் போக்குவரத்து தரவை வழங்குகிறது மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை திறமையாக நிர்வகிக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது. வரம்பு மீறிய நெரிசலின் போது இது எச்சரிக்கைகளை அனுப்பும். சிறந்த போக்குவரத்து மேலாண்மைக்காக இது GIS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கின்றது.

5. அண்மையில், ஆங்கிலக்கால்வாயை நீந்திக்கடந்த மூத்த இந்தியர் யார்?

அ. சித்தார்த்தா அகர்வால்

ஆ. விக்ராந்த் காஷ்யப்

இ. ஆனந்த் குமார்

ஈ. விகாஸ் ராவ்

  • பெங்களூருவைச் சேர்ந்த 49 வயதான சித்தார்த்தா அகர்வால் என்ற நீச்சல் வீரர், ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த இந்தியர்களுள் மிகவும் வயதானவர். ஆக.29 அன்று இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையேயான 42 கிமீ தூரத்தை 15 மணி 6 நிமிடங்களில் அவர் நீந்திக்கடந்தார். பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் விஸ்வநாதன், அவரது 46ஆம் வயதில், ஆங்கிலக்கால்வாயைத் தனியாக நீந்தியவர் என்ற முந்தைய சாதனையைப் படைத்தார்.

6. “கருப்பு மேலங்கி நோய்க்குறி” என்றால் என்ன?

அ. நீதி அமைப்புடன் தொடர்புகொள்ளும்போது குடிமக்கள் அனுபவிக்கும் கவலை மற்றும் பயம்

ஆ. நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்களுக்கான ஆடைக்குறியீடு

இ. வழக்குகளுக்கு விரைவான தீர்வு வழங்கும் முறை

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டில் இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டாடினார். நீதிமன்றத்தின் புதிய கொடி மற்றும் சின்னங்களை வெளியிட்ட அவர், இந்தியாவில் நீதியின் பாதுகாவலராக அதன் பங்கைப் பாராட்டினார். மெய் மற்றும் நீதிக்கான நீதிமன்றத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, மகாபாரதத்திலிருந்து ஒரு பொன்மொழியை எடுத்துக்காட்டினார்: “எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி இருக்கிறது”. “கருப்பு மேலங்கி நோய்க்குறி” என்ற பதமானது சிக்கலான நடைமுறைகள், தாமதங்கள் மற்றும் அதிக செலவுகள், குறிப்பாக நீதியைநாடும் விளிம்பு நிலை சமூகங்களைப் பாதிக்கும் சட்ட அமைப்பைக் கையாளும்போது மக்கள் உணரும் கவலையைக் குறிக்கிறது.

7. அண்மையில், “கிழக்குப் பொருளாதார மன்றம் – 2024” நடைபெற்ற இடம் எது?

அ. போபால், இந்தியா

ஆ. விளாடிவோஸ்டாக், ரஷ்யா

இ. சென்னை, இந்தியா

ஈ. டோக்கியோ, ஜப்பான்

  • கிழக்குப்பொருளாதார மன்றம் – 2024 ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்றது. இது ரஷ்யாவின் தூரக் கிழக்கில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2015இல் தொடங்கப்பட்ட வருடாந்திர பன்னாட்டு நிகழ்வாகும். ரஷ்யா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கிடையே முதலீடு மற்றும் ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கிறது. பொருளாதார வாய்ப்புகளைப்பற்றி விவாதிக்கவும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும் இது அரசு அதிகாரிகள், வணிகத்தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை அணிதிரட்டுகிறது. இந்த நிகழ்வு பொருளாதார உத்திகளை வடிவமைக்கவும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டாண்மைகளை உருவாக்கவும் உதவுகிறது. ரஷ்ய தூரக்கிழக்கு என்பது இரண்டு பெருங்கடல்கள், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் மற்றும் ஐந்து நாடுகளை (சீனா, ஜப்பான், மங்கோலியா, அமெரிக்கா மற்றும் வட கொரியா) எல்லையாகக் கொண்டுள்ளது.

8. அண்மையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், எந்த ஆண்டுக்குள் 500 மில்லியன் டன் உள்நாட்டு எஃகு உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது?

அ. 2025

ஆ. 2028

இ. 2030

ஈ. 2035

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் 5ஆவது ISA எஃகு மாநாட்டில் 2034ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டன் எஃகு உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயித்தார். கச்சா எஃகு உற்பத்தியில் 2018இல் ஜப்பானை விஞ்சிய இந்தியா 2ஆவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. 2023-24 நிதியாண்டில், இந்தியா 143.6 மில்லியன் டன்கள் (MT) கச்சா எஃகு மற்றும் 138.5 MT முடிக்கப்பட்ட எஃகு உற்பத்தி செய்தது. இந்தியாவின் முடிக்கப்பட்ட எஃகு நுகர்வு 2023-24 நிதியாண்டில் 138.5 MTஆக உயர்ந்தது; அது 2022-23இல் 119.17 MTஆக இருந்தது. 2023-24இல், முடிக்கப்பட்ட எஃகு ஏற்றுமதி 7.49 MTஆகவும், இறக்குமதி 8.32 MTஆகவும் இருந்தது. இந்தியாவில் தனிநபர் எஃகு நுகர்வு 2022-23இல் 86.7 கிலோவாக இருந்தது.

9. அக்னி-4 ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. HAL

ஈ. BHEL

  • DRDOஆல் உருவாக்கப்பட்ட அக்னி-4 ஏவுகணை, ஒடிஸாவின் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து 2024 செப்.06 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய இடைநிலை தொலைவு செல்லும் ஏவுகணையின் (IRBM) ஒன்பதாவது சோதனை இதுவாகும். அனைத்து அணு ஆயுதங்களையும் மேற்பார்வையிடும் இந்தியாவின் மூலோபாயப் படைகளின் பிரிவால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அக்னி-4 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது மற்றும் மூலோபாயப் படைகளின் பிரிவால் இது கட்டுப்படுத்தப்படும்.

10. அண்மையில், செந்தலைக்கழுகுகளுக்கான இந்தியாவின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் திறக்கப்பட்ட இடம் எது?

அ. முசோரி, இமாச்சல பிரதேசம்

ஆ. கோரக்பூர், உத்தர பிரதேசம்

இ. இந்தூர், மத்திய பிரதேசம்

ஈ. ஜெய்சல்மர், இராஜஸ்தான்

  • செந்தலைக்கழுகுகளுக்கான இந்தியாவின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் கோரக்பூரில் உள்ள கேம்பியர்கஞ்ச் மலைத்தொடரில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால் திறந்து வைக்கப்பட்டது. ஜடாயு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம், 2007ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த அருகிவரும் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கம் எனக்கொண்டு செயலாற்றி வருகிறது. `2.80 கோடியில் பல்வேறு பறவைகள், கால்நடை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடங்கள் அங்கு உள்ளன. அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் நாற்பது இணைகளை விடுவிக்கும் திட்டத்துடன், ஆறு கழுகுகள் இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

11. “Globba tyrnaensis மற்றும் Globba janakiae” என்றால் என்ன?

அ. புதிய வகை மருத்துவ மூலிகைகள்

ஆ. இஞ்சி குடும்பத்தின் புதிய வகை தாவரங்கள்

இ. அரிய வகை கற்றாழை

ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனங்கள்

  • மேகாலயாவின் ஈரடுக்கு வாழும் பாலம் உள்ள பகுதியில் ‘Globba tyrnaensis மற்றும் Globba janakiae’ ஆகிய இரு புதிய இஞ்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தாவரங்கள், அவற்றின் பூ இயக்கத்திற்காக, “நடனமாது” என்று அழைக்கப்படுகின்றன; இவையிரண்டும் இஞ்சி குடும்பத்தில் உள்ள அலங்கார தாவரங்களின் ‘Globba’ இனத்தைச் சேர்ந்தவை. ‘Globba tyrnaensis’ ஆனது 731 மீட்டர் உயரத்தில் உள்ள ‘Tyrna’ கிராமத்திலும், தங்கராங் பூங்காவிற்கருகிலும் காணப்பட்டது. ‘Globba janakiae’ ஆனது தாவரவியலாளர் EK ஜானகியம்மாளின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

12. “INDIAsize திட்டம்” என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. ஜவுளி அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

  • இந்திய உடல் வகைகளுக்கு ஏற்றவாறு தரப்படுத்தப்பட்ட உடல் அளவீடுகளை நிறுவுவதற்கு, ‘இந்தியாசைஸ்’ என்ற முன்னெடுப்பை இந்திய அரசாங்கம் தொடங்கவுள்ளது. தற்போது, ​​இந்தியாவிலுள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பிராண்டுகள் US மற்றும் UK உருவளவு அட்டவணையைப் பயன்படுத்துகின்றன; அவை இந்திய உடலமைப்புகளில் இருந்து வேறுபட்டு, பொருத்த சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ‘INDIAsize’, ஜவுளி அமைச்சகத்தின் தலைமையில், இந்திய நுகர்வோருக்கு நிலையான அளவுகளை உருவாக்குவதன்மூலம் இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 3D உடல் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 15 முதல் 65 வயதுடைய 25,000 இந்தியர்களிடமிருந்து இந்தத்திட்டம் அளவுகளைச் சேகரிக்கும். இந்த உருவளவு அட்டவணை, இந்தியாவில் நன்கு பொருந்தக்கூடிய ஆடைகளுக்கான தேவை மற்றும் விநியோகத்தை சமநிலைப்படுத்த, சிறந்த பொருத்தமுள்ள ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு பிராண்டுகளுக்கு உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. காற்றாலை மின் திட்டத்துக்கான புதிய கொள்கை வெளியீடு.

தமிழ்நாட்டில் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல், ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று திட்டங்களுக்கு வழிசெய்யும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்படுகிறது. அதன்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலையின் ஆயுள்காலத்தை நீட்டிக்க முடியும். இக்கொள்கை வரும் 2030 மார்ச்.31 அன்று வரையோ, அடுத்த கொள்கை வெளியிடும் வரையோ அமலில் இருக்கும்.

இதன்மூலம் தமிழ்நாட்டின் காற்றாலை மின்னுற்பத்தியை மேலும் 25% அதிகரிக்க முடியும். 2030இல் தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பில் 50% பசுமை மின்னுற்பத்தி என்ற உயரிய இலக்கை அடைய புதிய கொள்கை வழிசெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.

2. தேசிய அளவில் 25% கண் விழிகள் தமிழ்நாட்டிலிருந்து பெறப்படுகின்றன – அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தேசிய அளவில் கண்தானம்மூலம் சேகரிக்கப்படுகிற மொத்த கண் விழிகளில் 25% தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே பெறப்படுகின்றன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உலகின் 2ஆவது மிகப்பழைமையான கண் மருத்துவமனை ஆகும். இந்தியாவின் முதல் கண் வங்கி இந்த மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது.

தேசிய நலக்குழும நிதி உதவியுடன் 2021-2022ஆம் ஆண்டு 5,542, 2022-2023ஆம் ஆண்டு 8,274, 2023-2024இல் 9,400 கண் விழிகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. பள்ளிக்குழந்தைகளுக்கு ஆர்பிஎஸ்கே திட்டத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு இதுவரை 4,87,469 குழந்தைகளுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

3. சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்.

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். “மிகத் தொன்மையான மொழியாகிய தமிழில் உலகுக்கு வழிகாட்டும் கருத்துகளைத் தந்தவர் திருவள்ளுவர். அவரது படைப்பான திருக்குறள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகும். அதன் கருத்துகள் இன்றளவும் பொருத்தமாக உள்ளன” எனக் கூறிய பிரதமர்,

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு

(நீதியையும், நன்மையையும் விரும்பி, பிறருக்கு பயன்பட வாழும் பெரியோரின் நற்பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்) என்ற திருக்குறளைக் குறிப்பிட்டார்.

முதலீடு திட்ட அலுவலகம்: வர்த்தகம்-முதலீட்டை ஊக்குவிக்க ‘இந்தியாவில் முதலீடு’ திட்ட அலுவலகம் சிங்கப்பூரில் திறக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்தார்.

1. SAMRIDH scheme is a flagship programme of which ministry?

A. Ministry of Electronics and Information Technology

B. Ministry of New and Renewable Energy

C. Ministry of Earth Sciences

D. Ministry of Science and Technology

  • The Union Ministry of Electronics & IT launched the 2nd Cohort of the Startup Accelerators of MeitY for Product Innovation, Development and Growth (SAMRIDH) scheme. SAMRIDH, started in August 2021, is a flagship program of Ministry of Electronics and Information Technology under the National Policy on Software Products – 2019. The program supports 300 software startups with a ₹99 crore budget over 4 years. It helps existing and new accelerators select and scale potential IT-based startups.

2. Carrhotus piperus belongs to which species?

A. Fish

B. Frog

C. Spider

D. Lizard

  • A new jumping spider species, Carrhotus piperus, has been discovered in the lower Palani Hills of Tamil Nadu. It was found on pepper plants, about two meters above the ground. The name piperus comes from the plant Piper nigrum, reflecting its habitat. This discovery adds to the rich biodiversity of the region and brings the total Carrhotus species in India to 10, and globally to 37. The Palani Hills are part of the Western Ghats and are a continuation of the Anaimalai Hills in Kerala.

3. Recently, Jyoti Berwal won which medal in the women’s 76 kg freestyle category at the U20 World Championships?

A. Gold

B. Silver

C. Bronze

D. None of the above

  • Jyoti Berwal won a gold medal in the women’s 76 kg freestyle category at the U20 World Championships in Pontevedra, Spain. She defeated Ukraine’s Mariia Orlevych in the final. This is India’s second consecutive U20 world title in this category, following Priya Malik’s win in 2023. Indian wrestlers Komal and Sristhi won bronze medals in the 59 kg and 68 kg categories, respectively.

4. Recently, which ministry has announced the implementation of GNSS-based Electronic Toll Collection (ETC) system in India?

A. Ministry of Defence

B. Ministry of Road Transport and Highways

C. Ministry of Urban Development

D. Ministry of Home Affairs

  • The Ministry of Road Transport & Highways (MoRTH) announced a Global Navigation Satellite System (GNSS)-based Electronic Toll Collection (ETC) system in India. The system was developed by the Indian Highways Management Company Limited (IHMCL) to reduce congestion at toll plazas. It provides real-time traffic data, enabling officials to manage traffic flow efficiently. Alerts are sent when congestion exceeds limits, suggesting lane adjustments. Toll plazas are mapped using GIS technology for better traffic management.

5. Recently, who became the oldest Indian to swim across the English Channel?

A. Siddhartha Agarwal

B. Vikrant Kashyap

C. Anand Kumar

D. Vikas Rao

  • Siddhartha Agarwal, a 49-year-old swimmer from Bengaluru, became the oldest Indian to swim across the English Channel. He completed the 42-km swim between England and France on August 29 in 15 hours and six minutes. Srikaanth Viswanathan, also from Bengaluru, held the previous record at 46, becoming the oldest to swim the Channel solo.

6. What is “Black Coat Syndrome”?

A. Anxiety and fear experienced by citizens when interacting with the judicial system

B. The dress code for lawyers in courtroom

C. Quick resolution of cases

D. None of the above

  • President Droupadi Murmu celebrated the Supreme Court’s 75-year legacy at the National Conference of the District Judiciary. She unveiled the court’s new flag and insignia and praised its role as a guardian of justice in India. President Murmu emphasized the court’s commitment to truth and justice, highlighting its motto from the Mahabharata: “Where there is Dharma, there is victory.” The term “Black Coat Syndrome” was discussed, referring to the anxiety people feel when dealing with the legal system, due to complex procedures, delays, and high costs, especially affecting marginalized communities seeking justice.

7. Recently, where was the “Eastern Economic Forum 2024” held?

A. Bhopal, India

B. Vladivostok, Russia

C. Chennai, India

D. Tokyo, Japan

  • The Eastern Economic Forum 2024 was held in Vladivostok, Russia. It is an annual international event, started in 2015, aimed at boosting economic development in Russia’s Far East. The forum encourages investment and cooperation between Russia and Asia-Pacific nations. It gathers government officials, business leaders, investors, and policymakers to discuss economic opportunities and enhance regional connectivity. The event helps shape economic diplomacy and build partnerships in the Asia-Pacific region. The Russian Far East borders two oceans, the Pacific and the Arctic, and five countries: China, Japan, Mongolia, the United States, and North Korea.

8. Recently, the Ministry of Commerce and Industry sets 500 million tonnes domestic steel production target by which year?

A. 2025

B. 2028

C. 2030

D. 2035

  • The Union Minister of Commerce and Industry set a target of 500 million tonnes of steel production by 2034 at the 5th ISA Steel Conclave. India is the second-largest producer of crude steel, surpassing Japan in 2018. In FY24, India produced 143.6 million tonnes (MT) of crude steel and 138.5 MT of finished steel. India’s finished steel consumption rose to 138.5 MT in FY24, up from 119.17 MT in FY23. In FY24, finished steel exports stood at 7.49 MT, while imports were 8.32 MT. The per capita steel consumption in India was 86.7 kg in FY23.

9. Agni-4 Missile is developed by which organization?

A. DRDO

B. ISRO

C. HAL

D. BHEL

  • The Agni-4 missile, developed by DRDO, was successfully tested on 6 September 2024 from Odisha’s Integrated Test Range. This was the ninth test of the nuclear-capable intermediate-range ballistic missile (IRBM). The test was conducted by India’s Strategic Forces Command, which oversees all nuclear weapons. Agni-4 can carry nuclear weapons and will be controlled by the Strategic Forces Command.

10. Recently, where was the India’s first conservation and breeding centre for the Asian King Vultures inaugurated?

A. Mussoorie, Himachal Pradesh

B. Gorakhpur, Uttar Pradesh

C. Indore, Madhya Pradesh

D. Jaisalmer, Rajasthan

  • India’s first conservation and breeding centre for the Asian King Vultures was inaugurated in Gorakhpur’s Campierganj Range by Chief Minister Yogi Adityanath. The Jatayu Conservation and Breeding Centre aims to boost the population of this critically endangered species, listed in the International Union for Conservation of Nature’s red list since 2007. The ₹2.80 crore facility includes various aviaries, a veterinary section, and administrative buildings. Six vultures have been introduced to the centre, with a plan to release 40 pairs over the next 8 to 10 years.

11. What are “Globba tyrnaensis and Globba janakiae”?

A. New species of medicinal herbs

B. New species of plants from the ginger family

C. Rare species of cactus

D. Newly discovered species of frogs

  • Two new ginger species, Globba tyrnaensis and Globba janakiae, were discovered in Meghalaya’s Double Decker Living Root Bridge area. These plants, called “dancing girls” for their flower movement, belong to the Globba genus of ornamental plants in the ginger family. Globba tyrnaensis was found in Tyrna village at 731 meters elevation and also near Thangkharang Park. Globba janakiae honors botanist EK Janaki Ammal.

12. “INDIAsize project” is an initiative of which ministry?

A. Ministry of Textiles

B. Ministry of Defence

C. Ministry of Science and Technology

D. Ministry of Agriculture

  • The government is set to launch the ‘INDIAsize’ initiative to establish standardized body measurements suited for Indian body types. Currently, international and domestic brands in India use US and UK size charts, which differ from Indian body structures, causing fitting issues. INDIAsize, led by the Ministry of Textiles, aims to resolve these disparities by creating standard sizes for Indian consumers. The project will collect data from 25,000 Indians aged 15 to 65 using 3D body scanning technology. This size chart will help brands produce better-fitting garments, balancing demand and supply for well-fitted clothes in India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!