TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 6th September 2024

1. அண்மையில், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சுற்றுலாவை அதிகரிக்க புதிய நம்பகமான சுற்றுலா இயக்கி திட்டத்தை அறிவித்துள்ள நாடு எது?

அ. நியூசிலாந்து

. தென்னாப்பிரிக்கா

இ. சிலி

ஈ. ஜப்பான்

  • தென்னாப்பிரிக்கா இந்தியா மற்றும் சீனாவை மையமாகக் கொண்டு புதிய நம்பகமான சுற்றுலா இயக்கி திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் இந்தத் திட்டம், விசா நடைமுறையை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சுற்றுலாசார்ந்த வேலைகளை அதிகரிப்பதோடு உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் விருப்பமான இடமாக தென்னாப்பிரிக்காவை மாற்ற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​​தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு சுற்றுலாப்பயணிகளில் இந்திய சுற்றுலாப்பயணிகள் 3.9% மட்டுமே உள்ளனர்.

2. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வில்லாளி யார்?

அ. ஹர்விந்தர் சிங்

ஆ. மணீஷ் நர்வால்

இ. நிஷாத் குமார்

ஈ. சுமித் ஆன்டில்

  • 2024 – பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கத்தை வென்றார். இவ்வெற்றி இவ்விதமான நிகழ்வில் இந்தியாவின் 22ஆவது பதக்கத்தை குறிக்கிறது. இறுதிப் போட்டியில் போலந்தின் லுகாஸ் சிசெக்கை தோற்கடித்து ஹர்விந்தர் சிங் பதக்கம் வென்றார். குண்டு எறிதல் மற்றும் மட்டை எறிதல்போன்ற மற்ற பாராலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியாவின் வெற்றியுடன் அவரது சாதனையும் தற்போது சேர்க்கிறது.

3. காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 5% கூடுதல் தொகைக்கும் ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?

அ. மணிப்பூர்

ஆ. கர்நாடகா

இ. இராஜஸ்தான்

ஈ. ஹிமாச்சல பிரதேசம்

  • காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டிற்கு இராஜஸ்தான் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 70-75 வயதுடைய ஓய்வூதியம் பெறுவோர்க்கு 5% கூடுதல் தொகை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக இராஜஸ்தான் மாநில காவல்துறை துணை சேவைகள் விதிகள், 1989இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இராஜஸ்தான் குடிமை சேவைகள் ஓய்வூதிய விதிகள், 1996இன் விதிகள் 67 & 87, மத்திய ஓய்வூதிய விதிகளின் கீழ் திருத்தப்பட்டன. அரசூழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை `20 இலட்சத்திலிருந்து `25 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. இராசாசி தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. ஒடிஸா

இ. உத்தரகண்ட்

ஈ. பீகார்

  • இராசாசி தேசியப்பூங்காவின் இயக்குநராக வன அதிகாரி ஒருவரை நியமித்த உத்தரகண்ட் மாநில முதலமைச்சரை உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இராசாசி தேசியப்பூங்கா உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 820 சதுர கிலோ மீ பரப்பளவில் சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 1983இல் இராசாசி, மோட்டிச்சூர் மற்றும் சிலா சரணாலயங்களை இணைத்து நிறுவப்பட்ட இது, சுதந்திரப்போராட்ட வீரர் சி இராசகோபாலாச்சாரியின் நினைவாக பெயரிடப்பட்டது. ஆசிய யானைகளின் வடமேற்கு வாழ்விட எல்லையாக விளங்கும் இப்பூங்கா பல்வேறு வகையான காடுகளைக் கொண்டுள்ளது. 2015இல் புலிகள் காப்பகமாக இராசாசி தேசியப்பூங்கா அறிவிக்கப்பட்டது.

5. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது அண்மையில் எந்த மாநிலத்தில், ‘கிராஃபீன்-அரோரா திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கேரளா

ஈ. அஸ்ஸாம்

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது கேரளாவில் கிராஃபீன்-அரோரா திட்டத்தின் (GAP) ஒரு பகுதியாக, இந்தியா கிராபீன் பொறியியல் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை (I-GEIC) தொடங்கியுள்ளது. GAP ஆனது கேரளாவின் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. IGEIC என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாபநோக்கற்ற அமைப்பாகும். கிராஃபீனின் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான முன்னணி மையமாக மாறுவதே இதன் குறிக்கோள். IGEIC, துளிர் நிறுவல்கள் மற்றும் தொழில்களுக்கு விரிவான வசதிகளை வழங்குவதன்மூலம் ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு இடையேயுள்ள இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. ஸ்ட்ராபெர்ரி திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?

அ. விவசாயம்

ஆ. செயற்கை நுண்ணறிவு

இ. நிதி

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • OpenAI ஆனது அதன் அதிநவீன AI மாதிரியை வெளியிட தயாராகி வருகிறது; இது ‘ஸ்ட்ராபெரி திட்டம்’ என அழைக்கப்படும் ChatGPT-5இன் ஒருபகுதியாக இருக்கலாம். இந்த மாதிரியானது AIஇன் பகுத்தறிவு, கணிதம் மற்றும் நிரலாக்கத்திறன்களை பெரிதும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்ட்ராபெரி திட்டம்’ மெய்யுலக தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் பயிற்சி துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் உயர்தர செயற்கைத்தரவை உருவாக்க முடியும். செயற்கை பொது நுண்ணறிவு என்பது மனித மூளையுடன் ஒப்பிடக்கூடிய திறன்களைக்கொண்ட செயற்கை நுண்ணறிவைக் (AI) குறிக்கிறது.

7. அண்மையில், முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. காந்திநகர்

ஆ. லக்னோ

இ. போபால்

ஈ. பாட்னா

  • லக்னோவில், “Sashakt and Surakshit Bharat: Transforming Armed Forces” என்ற கருப்பொருளில் முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடு நடைபெற்றது. மாறிவரும் செயல்பாட்டு சூழலுக்கு இந்திய இராணுவத்தை தயார்படுத்துவதில் இது தனது கவனத்தைச் செலுத்தியது. பாதுகாப்புப் படைத்தலைவர் ஜெனரல் அனில் சௌகான் மற்றும் இராணுவம், கடற்படை, வான்படையின் தலைவர்கள் இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கினர். ஜெனரல் அனில் சௌகான் பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்ததோடு நவீன போருக்கான எதிர்கால ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

8. அஸ்ஸாம் மாநில அரசாங்கத்தால் கீழ்க்காணும் எந்தத் தேதி, ‘சூட்டியா நாள்’ அனுசரிக்கப்படவுள்ளது?

அ. 15 ஜூலை

ஆ. 20 ஆகஸ்ட்

இ. 18 செப்டம்பர்

ஈ. 5 அக்டோபர்

  • பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள சூட்டியா காவல் நிலையத்திற்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விஜயம் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தியாகிகளுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். ஆகஸ்ட்.20ஆம் தேதி ‘சூட்டியா நாள்’ கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்தார். அந்த இடத்தில் ஒரு பாரம்பரிய நினைவுச்சின்னத்தை கட்டுவதற்கான திட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். இத்திட்டத்திற்கு `5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

9. அண்மையில், முதல் ‘சர்வதேச சூரிய திருவிழா’ நடத்தப்பட்ட இடம் எது?

அ. ஜெய்ப்பூர்

ஆ. போபால்

இ. புது தில்லி

ஈ. லக்னோ

  • இந்தியாவின் சூரிய ஆற்றல் திறன் கடந்த பத்தாண்டுகளில் 32 மடங்கு அதிகரித்துள்ளது. புது தில்லியில் நடைபெற்ற முதல் சர்வதேச சூரிய ஒளி விழாவில், காணொலிக்காட்சிமூலம் பிரதமர் நரேந்திர மோதி இதனை எடுத்துரைத்தார். 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற திறனை அடைவதற்கான பாதையில் இந்தியா உள்ளது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடையும் முதல் G20 நாடு இதுவாகும். 2015இல் நிறுவப்பட்ட சர்வதேச சோலார் அலையன்ஸ் (ISA) இப்போது 100 உறுப்புநாடுகளைக் கொண்டுள்ளது.

10. அண்மையில், இந்தியப்பிரதமர், ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி’ திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. அஸ்ஸாம்

இ. இராஜஸ்தான்

ஈ. கேரளா

  • இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி குஜராத் மாநிலம் சூரத்தில், ‘ஜல் சஞ்சய் ஜன் பகிதாரி’ திட்டத்தை காணொலிக் காட்சிமூலம் தொடக்கி வைத்தார். நீர்வளங்குன்றாதன்மையை மேம்படுத்துவதற்காக சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிர்மாணிப்பது இந்தத் திட்டத்தில் அடங்கும். வருங்கால சந்ததியினருக்கு நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நீர் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். நீரைப்பற்றிய நமது அணுகுமுறையின் அடிப்படையில் எதிர்கால சந்ததியினர் நம்மை மதிப்பிடுவர் என்று அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அடல் பூஜல் யோஜனாபோன்ற முன்னெடுப்புகளுடன், இந்தியாவின் கலாச்சாரத்தில் நீர் பாதுகாப்பு ஆழமாக வேரூன்றியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்க புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

11. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தவர் யார்?

அ. சகினா காதுன்

ஆ. சச்சின் சின்ஹா

இ. கபில் பர்மர்

ஈ. பரம்ஜீத் குமார்

  • 2024 – பாரிஸ் பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ ஆடவர் ஜே1-660 கிலோகிராம் போட்டியில் கபில் பர்மர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜூடோவில் இந்தியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கத்தைக் குறிக்கும் வகையில், பிரேசிலின் எலியேல்டன் டி ஒலிவேராவை ஐப்பன்மூலம் 10-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். கபில் பர்மர் இதற்குமுன் 2022 ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். காலிறுதியில் வெனிசுலாவின் மார்கோ டென்னிஸ் பிளாங்கோவை 10-0 என்ற கணக்கில் வென்றார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஷிவோர் கிராமத்தைச் சேர்ந்த கபில் பர்மர், சிறார் பருவத்தில் மின்சாரம் தாக்கிய கடுமையான விபத்தில் உயிர்பிழைத்து ஆறு மாதங்கள் கோமா நிலையில் இருந்தார்.

12. அண்மையில், ‘VisioNxt’ என்ற இணைய நுழைவைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. ஜவுளி அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • ‘VisionNxt’ என்பது தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT) முன்கணிப்பு முன்முயற்சியாகும். உலக அளவிலான ஆரோக்கியமான போட்டி, இந்திய கலாசாரம் மற்றும் வடிவமைப்பை உலகளவில் உச்சத்திற்கு கொண்டுசெல்லுதல் ஆகியவையே இதன் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு, உணர்வுபூர்வ நுண்ணறிவு ஆகியவற்றிலிருந்து வடிவமைப்புத் தொழில் பயனடையும். இது வெளிநாட்டு முன்கணிப்பு நிறுவனங்களைச் சார்ந்திருந்ததலைக் குறைக்கும். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களால் 2024 செப்.05 அன்று புது தில்லியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியாவுக்கே உரிய நயப்புப் போக்கு நூலான, ‘பரிதி 24×25’ வெளியிடப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. திரிபுரா தீவிரவாத குழுக்களுடன் நடுவண் அரசு அமைதி ஒப்பந்தம்.

திரிபுரா மாநிலத்தில் வன்முறையைக் கைவிட்டு அமைதி, வளர்ச்சிக்கு ஆதரவளிக்க அந்த மாநிலத்தில் இயங்கும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (NLFT), அகில திரிபுரா விடுதலைப் படை (ATTF) ஆகிய இரு தீவிரவாத குழுக்களுடன் நடுவண் அரசும், திரிபுரா மாநில அரசும் இணைந்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்வு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தில்லியில் நடைபெற்றது. வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான நடுவணரசு இதுவரை 12 ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளது. அதில், மூன்று ஒப்பந்தங்கள் திரிபுரா மாநிலம் சார்ந்தவை.

2. அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1 முதல் +2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, ‘வாசிப்பு இயக்கம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் 53 நூல்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

3. சென்னையில் முதல் உலகளாவிய திறன் மையம்.

`200 கோடி முதலீட்டில், 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதி விரிவாக்கம், ஆராய்ச்சி & மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையம் நிறுவுவதற்கும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1. Recently, which country has announced a new Trusted Tour Operator Scheme (TTOS) to increase tourism from India and China?

A. New Zealand

B. South Africa

C. Chile

D. Japan

  • South Africa announced a new Trusted Tour Operator Scheme (TTOS), focusing on India and China. The scheme will start in January next year and aims to reform the visa system. It is expected to boost tourism jobs and help South Africa become a preferred destination for tourists from two of the world’s largest economies. Currently, Indian tourists make up only 3.9% of South Africa’s international visitors.

2. Who became the first Indian archer to win gold medal at the 2024 Paris Paralympics?

A. Harvinder Singh

B. Manish Narwal

C. Nishad Kumar

D. Sumit Antil

  • Harvinder Singh won a historic gold medal in men’s individual recurve archery at the Paris Paralympics 2024. This win marked India’s 22nd medal in the event. He defeated Poland’s Lukasz Ciszek in the final. His achievement adds to India’s successes in other Paralympic sports like shot put and club throw.

3. Which state government recently approved 33% reservation to women in the police force and 5% additional allowance to pensioners?

A. Manipur

B. Karnataka

C. Rajasthan

D. Himachal Pradesh

  • The Rajasthan government approved 33% reservation for women in the police force. A 5% additional allowance was approved for pensioners aged 70 to 75. Amendments were made to the Rajasthan Police Subordinate Services Rules, 1989. Rules 67 and 87 of the Rajasthan Civil Services Pension Rules, 1996, were amended under central pension rules. Gratuity and death gratuity for state employees were increased from ₹20 lakh to ₹25 lakh.

4. Rajaji National Park is located in which state?

A. Haryana

B. Odisha

C. Uttarakhand

D. Bihar

  • The Supreme Court criticized Uttarakhand’s Chief Minister for appointing a forest officer as the Director of Rajaji National Park. Rajaji National Park is located in Haridwar, Uttarakhand, covering 820 sq km in the Shivalik foothills. Established in 1983 by merging Rajaji, Motichur, and Chila sanctuaries, it was named after freedom fighter C. Rajgopalachari. The park is the northwestern habitat limit for Asian elephants and features diverse forest types. Rajaji was declared a Tiger Reserve in 2015.

5. Ministry of Electronics & Information Technology has recently launched the ‘Graphene-Aurora program’ in which state?

A. Tamil Nadu

B. Andhra Pradesh

C. Kerala

D. Assam

  • The Ministry of Electronics and Information Technology (MeitY) launched the India Graphene Engineering and Innovation Centre (I-GEIC) as part of the Graphene Aurora program (GAP) in Kerala. The GAP is managed by Digital University Kerala. The IGEIC is a non-profit organization based in Trivandrum, Kerala. Its goal is to become a leading center for the commercialization of graphene technology. The IGEIC aims to bridge the gap between research and commercialization by offering comprehensive facilities for startups and industries.

6. Project Strawberry is related to which field?

A. Agriculture

B. Artificial Intelligence

C. Finance

D. None of the above

  • OpenAI is preparing to release its most advanced AI model, potentially part of ChatGPT-5, known as Project Strawberry. This model is expected to greatly enhance AI’s reasoning, math, and programming skills. Project Strawberry can generate high-quality synthetic data to address gaps in real-world data and improve training accuracy. Artificial General Intelligence refers to AI with capabilities comparable to the human brain.

7. Recently, where was the first Joint Commanders’ Conference (JCC) held?

A. Gandhinagar

B. Lucknow

C. Bhopal

D. Patna

  • The first Joint Commanders’ Conference held in Lucknow with the theme ‘Sashakt and Surakshit Bharat: Transforming Armed Forces’. The focus is on preparing India’s military for the changing operational environment. Chief of Defence Staff General Anil Chauhan and the chiefs of the Army, Navy, and Air Force are leading the event. General Chauhan reviewed the security situation and stressed the importance of jointness and future integration for modern warfare.

8. Which day will be observed and celebrated as ‘Sootea Day’ by the Assam government?

A. 15 July

B. 20 August

C. 18 September

D. 5 October

  • Chief Minister Himanta Biswa Sarma visited Sootea Police Station in Biswanath District. He paid tribute to the martyrs of the 1942 Quit India Movement. He announced that August 20 will be celebrated as Sootea Day. Sarma revealed plans to build a heritage monument at the site. Rs 5 crores have been allocated for this project.

9. Recently, where was the first ‘International Solar Festival’ organized?

A. Jaipur

B. Bhopal

C. New Delhi

D. Lucknow

  • India’s solar energy capacity has increased 32 times in the last decade. Prime Minister Narendra Modi highlighted this during the first International Solar Festival in New Delhi, held via video conferencing. India is on track to achieve 500 GW of non-fossil capacity by 2030 and is the first G20 nation to meet Paris Agreement goals on renewable energy. The International Solar Alliance (ISA), established in 2015, now has 100 member countries.

10. Recently, the Prime Minister of India launched ‘Jal Sanchay Jan Bhagidari’ in which state?

A. Gujarat

B. Assam

C. Rajasthan

D. Kerala

  • Prime Minister Narendra Modi launched the ‘Jal Sanchay Jan Bhagidari’ initiative in Surat, Gujarat, via video conferencing. The program involves constructing around 24,800 rainwater harvesting structures to enhance water sustainability. He emphasized the importance of public participation in water conservation to secure a sustainable future for upcoming generations.
  • He stated that future generations will evaluate us based on our approach to water. Water conservation is deeply rooted in India’s culture, with initiatives like Jal Jivan Mission and Atal Bhujal Yojana supporting this cause. He called for adopting new technologies to address water scarcity issues.

11. Who has created history by becoming the first Indian to win a medal in Judo at the 2024 Paris Paralympics?

A. Sakina Khatun

B. Sachin Sinha

C. Kapil Parmar

D. Paramjeet Kumar

  • Kapil Parmar won a bronze medal at the Paris Paralympics 2024 in the Para Judo Men’s J1-660 Kilogrammes event. He defeated Elielton de Oliveira from Brazil 10-0 via an Ippon, marking India’s first Paralympic medal in Judo. Parmar had previously won a silver medal in the 2022 Asian Games. He also won against Venezuela’s Marco Dennis Blanco 10-0 in the quarterfinals. Parmar, from Shivor village in Madhya Pradesh, survived a severe childhood accident involving an electric shock and spent six months in a coma.

12. Which ministry has recently launched the ‘VisioNxt web portal’?

A. Ministry of Science and Technology

B. Ministry of Textiles

C. Ministry of Defence

D. Ministry of Home Affairs

  • The Union Ministry of Textiles launched the VisioNxt web portal to make India a global fashion leader. The portal provides real-time, India-specific fashion trend insights, reducing reliance on foreign forecasting agencies. It was launched by Union Minister Giriraj Singh on 5 September 2024 in New Delhi. The India-specific Fashion Trend Book ‘Paridhi 24×25’ was also unveiled at the event. The VisioNxt portal was developed by the National Institute of Fashion Technology (NIFT).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!