Tnpsc Current Affairs in Tamil & English – 6th August 2024
1. இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்காக $200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுக்கு ஒப்புதலளித்த நிறுவனம் எது?
அ. பன்னாட்டுச் செலாவணி நிதியம்
ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி
இ. உலக வங்கி
ஈ. உலக பொருளாதார மன்றம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) தூய்மை பாரத இயக்கம் 2.0இன்கீழ் நூறு இந்திய நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக $200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியானது கழிவுகளைப் பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். ஜூஹி முகர்ஜி மற்றும் மியோ ஓகா ஆகியோர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம், நகர்ப்புற கழிவு மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்துவதையும், இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் பொதுச்சுகாதார இலக்குகளை முன்னேற்றுவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. உலகளாவிய வேளாண் ஏற்றுமதியில் இந்தியாவின் தரநிலை என்ன?
அ. 6ஆவது
ஆ. 8ஆவது
இ. 10ஆவது
ஈ. 12ஆவது
- 2022ஆம் ஆண்டில் 55 பில்லியன் டாலரிலிருந்த ஏற்றுமதி 51 பில்லியன் டாலராக குறைந்த போதிலும், 2023ஆம் ஆண்டில் இந்தியா வேளாண்பொருட்களை ஏற்றுமதி செய்யும் எட்டாவது பெரிய நாடாக இருந்தது. ஏற்றுமதி செய்யும் முதல் பத்து நாடுகளில் வேளாண் ஏற்றுமதியில் பொதுவான சரிவுக்கு இடையில் இது நிகழ்ந்தது. WTO வர்த்தக புள்ளிவிவரங்கள் 2023 அறிக்கை பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தாய்லாந்து மட்டுமே வளர்ச்சியைக் கண்டதாகக் காட்டுகிறது. பிரேசிலின் ஏற்றுமதி 6% அதிகரித்து $157 பில்லியன் டாலராகவும், ஐரோப்பிய ஒன்றியம் 5% அதிகரித்து $836 பில்லியன் டாலராகவும், தாய்லாந்தின் ஏற்றுமதி 0.2%ஆகவும் உயர்ந்துள்ளது.
3. சமீபத்தில், எந்த நகரத்தில், “14ஆவது இந்தியா-வியட்நாம் பாதுகாப்புக்கொள்கை பேச்சுவார்த்தையை” இந்தியா நடத்தியது?
அ. சென்னை
ஆ. ஹைதராபாத்
இ. புது தில்லி
ஈ. பெங்களூரு
- 2024 ஆக.01 அன்று புது தில்லியில் 14ஆவது இந்தியா-வியட்நாம் பாதுகாப்புக்கொள்கை பேச்சுவார்த்தையினை இந்தியா நடத்தியது. இந்தச் சந்திப்பு இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்ஹின் வருகையுடன் இணைந்தது. இதற்கு இந்திய பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானே மற்றும் வியட்நாமின் தேசிய பாதுகாப்பு துணை அமைச்சர் ஹோங் சுவான் சியென் ஆகியோர் தலைமைதாங்கினர். இருதரப்பினரும் ஒத்துழைப்புப் பகுதிகளை மதிப்பாய்வு செய்து, பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கான கடிதத்தில் கையெழுத்திட்டனர்.
4. “கடற்களை மதிப்புச்சங்கிலியின் வளர்ச்சிக்கான உத்தி” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
அ. உலக வங்கி
ஆ. NABARD
இ. NITI ஆயோக்
ஈ. RBI
- NITI ஆயோகின், “கடற்களை மதிப்புச்சங்கிலியின் வளர்ச்சிக்கான உத்தி” என்ற அறிக்கையானது நீர்நிலைகளில் செழித்து வளரும் கடல் தாவரங்களான கடற்களைகள் குறித்தும் நீர்வேளாண்மையில் அவற்றின் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புத்துறை 1.5%பங்களிக்கிறது. கடற்களைகள் வளர்ப்பானது உணவு மற்றும் மருந்துப்பொருட்களிலுள்ள உயிரியக்கக்கலவைகள், கரிமத்தன்மயமாக்கம் மற்றும் தட்பவெப்பநிலை மீள்தன்மை ஆகியவற்றில் சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்ட ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றிற்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
5. Axiom-4 திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரண்டு இந்தியர்கள் யார்?
அ. சுபான்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
ஆ. மெஹர் சிங் மற்றும் தீபக் சந்திரா
இ. பிரதீப் குமார் யாதவ் மற்றும் கிருஷ்ண குமார்
ஈ. சூர்யா காந்த் மற்றும் விக்ரம் சிங்
- ஆக்ஸியம்-4 திட்டத்திற்கு இந்தியா குரூப் கேப்டன்களான சுபான்ஷு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பயிற்சிபெறவுள்ள அவ்விருவருவரின் அனுபவம் இந்திய நாட்டின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்குப் பயனளிக்கும். ஆக்ஸியம்-4 என்பது NASA மற்றும் ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆகியவற்றின் நான்காவது தனிப்பட்ட விண்வெளிப்பயணமாகும்; இது பதினான்கு நாட்களுக்கு ISSஉடன் இணைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஏவுகல வழங்குநராக SpaceX உள்ளது.
6. சாளியாறு உருவாகின்ற மலை எது?
அ. எளம்பலேரி மலைகள்
ஆ. நெல்லியம்பதி மலைகள்
இ. கல்ராயன் மலைகள்
ஈ. குன்னூர் மலைகள்
- கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழையால் 169 கிமீ நீளமுள்ள சாளியாறு ஆற்றங்கரையில் நிலச்சரிவு ஏற்பட்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டின் எளம்பலேரி மலையில் இருந்து உருவாகும் இந்த ஆறு மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்கள் வழியாகச் சென்று பேப்பூர் துறைமுகத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. மரப் போக்குவரத்துக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் தங்க வயல்களுக்கு பெயர்பெற்றதுமான இவ்வாறு, மாவூரில் உள்ள கூழ் தொழிற்சாலையால் குறிப்பிடத்தக்க மாசுபாட்டை எதிர்கொண்டது.
7. 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட இரண்டு நாடுகள் எவை?
அ. ரஷ்யா மற்றும் பெலாரஸ்
ஆ. ருமேனியா மற்றும் பல்கேரியா
இ. ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்
ஈ. ஆஸ்திரியா மற்றும் சைப்ரஸ்
- ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் தேசியக்கொடியின்கீழ் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் Athletes Individuals Neutres (AIN), அல்லது தனிப்பட்ட நடுநிலை விளையாட்டு வீரர்கள் என்றவாறு போட்டியிடுகின்றனர். பன்னாட்டு ஒலிம்பிக் குழுமமானது (IOC) 2022 இல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு இந்தத் தடையை விதித்தது.
8. ஷோம்பென் பழங்குடியினர் சார்ந்த இந்தியப்பகுதி எது?
அ. டாமன் & டையூ
ஆ. அந்தமான் நிக்கோபார்
இ. லடாக்
ஈ. இலட்சத்தீவுகள்
- நடுவணரசின் `72,000 கோடி மதிப்பிலான கிரேட் நிக்கோபார் தீவுகள் திட்டத்தில் வானூர்தி நிலையம், பன்னாட்டு கொள்கலன் முனையம், நகரியம் ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஷோம்பென் மற்றும் நிக்கோபரீய பழங்குடியினர் மீதான போதிய தாக்க மதிப்பீடுகள் மற்றும் முறையற்ற அனுமதிகள் காரணமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் சட்ட சவால்களை அத்திட்டம் எதிர்கொண்டு வருகிறது. வேட்டையாடிகளான ஷோம்பென்கள் மற்றும் நிகோபாரீய மக்களின் பூர்வீக நிலங்களை இத்திட்டம் பாதிக்கலாம்.
9. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் தொடங்கப்பட்ட மகளிர் தொழில்முனைவோர் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. இலவச மருத்துவச்சேவைகளை வழங்குதல்
ஆ. 25 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்கவும் வளரவும் அதிகாரமளித்தல்
இ. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குதல்
ஈ. வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துதல்
- இந்தியாவில் 25 இலட்சம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) மகளிர் தொழில்முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், இரண்டு கட்டங்களாக, NIESBUDஆல் ஆதரிக்கப்படும் ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (SIDH) மூலம் இலவச ஆன்லைன் தொழில்முனைவோர் படிப்புகளை வழங்குகிறது. இரண்டாவது கட்டத்தில், 100 வணிக மாதிரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 போட்டியாளர்களுக்கு NSDC அடைவக ஆதரவை வழங்குகிறது.
10. “விலை கண்காணிப்பு அமைப்பின் திறன்பேசி செயலியின் பதிப்பு 4.0”ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
அ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
ஆ. வேளாண் அமைச்சகம்
இ. மின்சார அமைச்சகம்
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
- மத்திய நுகர்வோர் விவகார அமைச்சர் விலை கண்காணிப்பு அமைப்பின் (Price Monitoring System) திறன்பேசி செயலியின் பதிப்பு 4.0ஐ அறிமுகப்படுத்தினார். இது 38 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை தரவு தரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 22 பொருட்களுக்கான விலை தரவே இதிலிருந்தது. கடந்த 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, 550 மையங்களில் இருந்து தினசரி சில்லறை மற்றும் மொத்த விலைகளைப் பெறுகிறது. CPI பணவீக்கம், அரிசி, கோதுமை, எண்ணெய்கள், பால் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கத்தரி மற்றும் வாழைப்பழம்போன்ற பொருட்களை உள்ளடக்கிய கொள்கை முடிவுகளில் இந்தத் தரவு அரசுக்கும் ஆய்வாளர்களுக்கும் உதவுகிறது.
11. கீழ்க்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே கடல்சார் கூட்டாண்மை பயிற்சி நடத்தப்பட்டது?
அ. சீனா மற்றும் இந்தியா
ஆ. ரஷ்யா மற்றும் இந்தியா
இ. இந்தியா மற்றும் எகிப்து
ஈ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
- இந்தியாவும் ரஷ்யாவும் 328ஆவது ரஷ்ய கடற்படை நாளன்று புனித பீட்டர்ஸ்பர்க்கில் கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தின. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் INS தபார் மற்றும் ரஷ்யாவின் சூப்ரஸிடேல்னி ஆகியவை பங்கேற்றன. இதன் சமயம் தகவல் தொடர்பு பயிற்சிகள், தேடல் மற்றும் மீட்பு உத்திகள் போன்ற கடற்படை உத்திகள் நிகழ்த்தப்பட்டன. இப்பயிற்சி வலுவான இருதரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்தியதோடு பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான இருநாடுகளின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
12. அண்மையில் எந்தத் தேசியப்பூங்காவில் நான்கு வளையங்கள்கொண்ட பட்டாம்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது?
அ. இந்திரா காந்தி தேசியப்பூங்கா
ஆ. நம்தபா தேசியப்பூங்கா
இ. தடோபா தேசியப்பூங்கா
ஈ. கிண்டி தேசியப்பூங்கா
- 61 ஆண்டுகளுக்குப்பிறகு நம்தபா தேசியப்பூங்காவில் நான்கு வளையங்கள் கொண்ட பட்டாம்பூச்சி (Ypthima cantliei), மீண்டும் தென்பட்டது. கடைசியாக அஸ்ஸாமில் 1957ஆம் ஆண்டில் காணப்பட்ட இவ்வகை பட்டாம்பூச்சி, 2018-19 கணக்கெடுப்பின்போது நிழற்படத்தில் பதிவுசெய்யபட்டது. அதன் உருவவியல் மற்றும் வாழ்விடத்தால் அடையாளம் காணப்படுகிற இந்தப் பட்டாம்பூச்சி 6,000 இனங்களைக்கொண்ட ‘Nymphalidae’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சூலூர் விமானப்படை தளத்தில் இந்தியா – பிரான்ஸ் விமானப்படையின் கூட்டுப் போர்ப்பயிற்சி.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில், ‘தரங் சக்தி – 2024’ விமானப்படையின் கூட்டுப் போர் பயிற்சி ஒருவாரம் நடைபெறுகிறது. இந்தியப் பாதுகாப்புத்துறையின் சார்பில் முப்படைகளின் சார்பில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதன்மை NATO நாடுகள் மற்றும் இந்திய விமானப்படையும் இணைந்து, ‘தரங் சக்தி – 2024’ என்ற விமானப் படையின் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் போர்பயிற்சிமூலம் விமானிகளின் தனித்திறமை, கூட்டுப்படை பயிற்சி ஆகியவை மேம்பட உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சுதந்திர தின விழாவில் 100 அயலகத் தமிழர்கள்.
ஆக.15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் 100 அயலகத் தமிழர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்கள், ‘வேர்களைத்தேடி’ என்னும் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டின் பாரம்பரிய இடங்களில் பண்பாட்டுச்சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர். ‘வேர்களைத்தேடி’ திட்டத்தின்கீழ், இரண்டாம் கட்டமாக 100 அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
1. Which institution recently approved a $200 million loan to improve solid waste management in India?
A. International Monetary Fund
B. Asian Development Bank
C. World Bank
D. World Economic Forum
- The Asian Development Bank (ADB) has approved a $200 million loan to improve solid waste management and sanitation in 100 Indian cities under the Swachh Bharat Mission 2.0. This funding will be used for building waste processing facilities and community sanitation projects. The agreement, signed by Juhi Mukherjee and Mio Oka, aims to strengthen urban waste management systems and advance India’s environmental and public health goals.
2. What is the rank of India in the Global Agriculture Export?
A. 6th
B. 8th
C. 10th
D. 12th
- India remained the eighth-largest exporter of agricultural products in 2023, despite exports dropping from $55 billion in 2022 to $51 billion. This occurred amid a general decline in agricultural exports among most top ten exporting nations. The WTO Trade Statistics 2023 report shows that only Brazil, the European Union (EU), and Thailand saw growth. Brazil’s exports increased by 6% to $157 billion, the EU’s rose by 5% to $836 billion, and Thailand’s grew by 0.2%.
3. Recently, India hosted “14th India-Vietnam Defence Policy Dialogue” in which city?
A. Chennai
B. Hyderabad
C. New Delhi
D. Bengaluru
- India hosted the 14th India-Vietnam Defence Policy Dialogue in New Delhi on August 1, 2024. The meeting aimed to strengthen bilateral defence ties and coincided with Vietnamese Prime Minister Pham Minh Chinh’s visit. It was co-chaired by Indian Defence Secretary Giridhar Aramane and Vietnam’s Deputy Minister of National Defence, Hoang Xuan Chien. Both sides reviewed cooperation areas and signed a Letter of Intent to enhance training exchanges.
4. Which institution recently published a report titled “Strategy for the development of Seaweed Value Chain”?
A. World Bank
B. NABARD
C. NITI Aayog
D. RBI
- NITI Aayog’s report, “Strategy for the development of Seaweed Value Chain,” highlights the importance of seaweeds, marine plants thriving in water bodies, cultivated in aquaculture. The fishing and aquaculture sector contributes 1.5% to India’s GDP. Seaweed farming has economic significance for bioactive compounds in food and pharmaceuticals, environmental benefits in carbon sequestration and climate resilience, and nutritional value with essential minerals and vitamins.
5. Which two Indians have been selected for Axiom-4 mission?
A. Shubhanshu Shukla and Prasanth Balakrishnan Nair
B. Mehar Singh and Deepak Chandra
C. Pradeep Kumar Yadav and Krishna Kumar
D. Surya Kant and Vikram Singh
- India selected Group Captains Shubhanshu Shukla and Prasanth Balakrishnan Nair for the Axiom-4 mission. They will train in the U.S., and their experience will benefit India’s human space program. Axiom-4 is the fourth private astronaut mission by NASA and Axiom Space, expected to dock with the ISS for fourteen days. SpaceX is the launch provider for this mission.
6. Chaliyar River originates from which hills?
A. Elambaleri Hills
B. Nelliyampathy Hills
C. Kalrayan Hills
D. Coonoor Hills
- Heavy rainfall in Kerala’s Wayanad region triggered landslides and rescue operations along the 169 km Chaliyar River. Originating from the Elambalari Hills in Tamil Nadu, the river passes through Malappuram and Kozhikode districts and drains into the Arabian Sea at Beypore port. Historically vital for timber transport and known for goldfields, the river has faced significant pollution from a pulp factory at Mavoor.
7. Which two countries have been banned from participating in the Paris Olympics 2024?
A. Russia and Belarus
B. Romania and Bulgaria
C. Germany and France
D. Austria and Cyprus
- Athletes from Russia and Belarus are banned from competing under their national flags at the Paris Olympics. Instead, they compete as Athlètes Individuals Neutres (AIN), or Individual Neutral Athletes. The International Olympic Committee (IOC) imposed this ban after Russia’s invasion of Ukraine in 2022.
8. Shompen tribes belongs to which region of India?
A. Daman & Diu
B. Andaman and Nicobar
C. Ladakh
D. Lakshadweep
- The Central government’s Rs 72,000 crore Great Nicobar Island (GNI) project plans to build an airport, an international container terminal, and a township. However, it faces legal challenges from the National Green Tribunal (NGT) and the Calcutta High Court due to inadequate impact assessments on Shompen and Nicobarese tribes and improper permissions. The Shompens are hunter-gatherers, and the project could affect the Nicobarese people’s ancestral lands.
9. What is the main objective of the Women Entrepreneurship Programme launched by National Skill Development Corporation?
A. To provide free medical services
B. To empower 25 lakh women to start and grow businesses
C. To offer free education for children
D. To improve agricultural practices
- The National Skill Development Corporation (NSDC) launched the Women Entrepreneurship Programme to empower 25 lakh women in India. The program, in two phases, offers free online entrepreneurship courses through Skill India Digital Hub (SIDH), supported by NIESBUD. In the second phase, NSDC will provide incubation support to 10,000 selected contestants across 100 business models.
10. Which ministry recently launched “Version 4.0 of Price Monitoring System (PMS) Mobile app”?
A. Ministry of Consumer Affairs, Food and Public Distribution
B. Ministry of Agriculture
C. Ministry of Power
D. Ministry of Rural Development
- The Union Minister of Consumer Affairs launched Version 4.0 of the Price Monitoring System (PMS) Mobile app, developed to enhance price data quality for 38 essential commodities, up from 22. The app, initially launched in 2021, receives daily retail and wholesale prices from 550 centers. This data aids government and analysts in policy decisions regarding CPI inflation, covering items like rice, wheat, oils, milk, and newly added produce like brinjal and banana.
11. Maritime Partnership Exercise was conducted between which two countries?
A. China and India
B. Russia and India
C. India and Egypt
D. India and Australia
- India and Russia conducted a maritime partnership exercise (MPX) in St Petersburg on the 328th Russian Navy Day. The exercise featured India’s INS Tabar and Russia’s Soobrazitelny, showcasing naval maneuvers like communication drills, search and rescue tactics, and replenishment at sea. This MPX reinforced strong bilateral naval ties, highlighting both nations’ commitment to regional peace, stability, and security.
12. Four-ringed butterfly was discovered in which national park?
A. Indira Gandhi National Park
B. Namdapha National Park
C. Tadoba National Park
D. Guindy National Park
- A four-ringed butterfly, the great four-ring (Ypthima cantliei), was rediscovered in Namdapha National Park after 61 years. Last seen in Assam in 1957, it was photographed during a 2018-19 survey. Identified by its morphology and habitat, this butterfly belongs to the Nymphalidae family, which has 6,000 species.