TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 5th September 2024

1. அண்மையில், இந்தியா மற்றும் கென்யா இடையேயான 3ஆவது கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. லக்னோ

. புது தில்லி

இ. கொல்கத்தா

ஈ. சென்னை

  • இந்தியா மற்றும் கென்யா இடையேயான கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு (JDCC) கூட்டத்தின் 3ஆவது பதிப்பு, 2024 செப்.03 அன்று புது தில்லியில் நடந்தது. இருநாடுகளும் ராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி, பாதுகாப்பு தொழில்கள், ஆராய்ச்சி & மேம்பாடுபோன்ற துறைகளில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பரந்த அளவிலான வாய்ப்புகள்குறித்து விவாதித்தன. கென்ய தூதுக்குழு, இந்திய பாதுகாப்பு தொழில்துறை பிரதிநிதிகளை தில்லியில் சந்தித்தது. இந்தத் தூதுக்குழு, புனேவுக்கும் செல்லவுள்ளது.
  • கென்யா-இந்தியாவுக்கு இடையே 2016 ஜூலையில் கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பரஸ்பர நலனுக்காக, பாதுகாப்புத்துறையின் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பதற்கான சட்டரீதியான கட்டமைப்பை வழங்கியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரச்சினைகள்குறித்து விரிவாக விவாதிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான பயனுள்ள திட்டத்தை உருவாக்குவதற்கும் இந்த JDCC ஒரு சிறந்த முயற்சியாகும். இந்திய தரப்புக்கு இணைச்செயலாளர் அமிதாப் பிரசாத் அவர்களும், கென்ய தரப்புக்கு மேஜர் ஜெனரல் டேவிட் கிப்கெம்போய் கெட்டரும் தலைமைதாங்கினர்.

2. அண்மையில், புது தில்லியில் புதிய சான்றுறுதி இணைய நுழைவைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகமானது புது தில்லியில் புதிய சான்றுறுதி வலைதளத்தை (https://notary.gov.in) தொடங்கியது. சான்றுறுதி அலுவலர்களாக நியமனஞ்செய்தற்கான விண்ணப்பங்களைச்சமர்ப்பித்தல், நடைமுறைச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், நடைமுறைப் பகுதியை மாற்றுதல், வருடாந்திர அறிக்கைகளை சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு சான்றுறுதி அலுவலர்களுக்கும் அரசுக்கும் இடையே இணையதள இடைமுகத்தை சான்றுறுதி தளம் வழங்குகிறது.
  • இந்த வலைதளம்மூலம், மத்திய சான்றுறுதி அலுவலர்கள் விண்ணப்பங்கள் / கோரிக்கைகளை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்; அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கலாம் மற்றும் அவர்களின் டிஜிலாக்கர் கணக்குகளில் இருந்து டிஜிட்டல் கையொப்பமிட்ட நடைமுறைச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இது தாளற்ற, நேரில் வரத்தேவையற்ற மற்றும் திறமையான அமைப்பை வழங்குவதற்கான ஒரு முதன்மையான நடவடிக்கையாகும்.

3. ஜாகர் லோக் சமற்கிருதி உத்சவம் என்பது கீழ்க்காணும் எந்த வடமாநிலத்தின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு திருவிழாவாகும்?

அ. அஸ்ஸாம்

ஆ. உத்தரகாண்ட்

இ. இமாச்சல பிரதேசம்

ஈ. சிக்கிம்

  • ஜாகர் லோக் சமற்கிருதி உத்சவத்தின்மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தின் வளமான நாட்டுப்புறக் கலாச்சாரத்தை அம்மாநில அரசாங்கம் சமீபத்தில் கொண்டாடியது. உத்தரகாண்ட் மாநிலத்தின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தின் விளம்பரத் தூதரான சச்சிதானந்த செம்வால் எழுதிய “உத்தரகாண்ட் கா லோக் புத்ரா பிரீதம் பாரத்வான்” என்ற நூல் அப்போது வெளியிடப்பட்டது. இந்தத் திருவிழா தெய்வங்களுக்கான பரிகாரங்களுக்காக எழுப்பப்படும் சடங்குகளை உள்ளடக்கியது.

4. ‘நா அங்கா’ பஞ்சத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

  • தாமஸ் எட்வர்ட் ரேவன்ஷாவின் பதவிக்காலத்தில் ஏற்பட்ட ‘நா அங்கா’ பஞ்சத்துடன் அதன் தொடர்புகாரணமாக ராவென்ஷா பல்கலைக்கழகத்தை மறுபெயரிட மத்திய கல்வி அமைச்சர் முன்மொழிந்தார். 1868இல் ராவென்ஷா பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பு 1866ஆம் ஆண்டில் ஏற்பட்ட “பெரும் ஒடிஸா பஞ்சம்” என்றழைக்கப்படும் “நா அங்கா” பஞ்சம், ஒடிஸாவின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. பஞ்சம் மிகவும் கடுமையாக இருந்த காரணத்தால் ஒடிசாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்தனர். இது ஒரிசாவின் மன்னர் திவ்ய சிங்க தேவாவின் 9ஆம் ஆட்சி ஆண்டில் நிகழ்ந்தது. பிரிட்டிஷ் அதிகாரத்துவவாதியும் ஒடிஸா காலனித்துவ ஆணையருமான தாமஸ் எட்வர்ட் ராவன்ஷா, அக்கோரப்பஞ்சத்தின் பேரழிவு தாக்கத்தை நேரில் கண்டவராவார்.

5. அண்மையில், கீழ்க்காணும் எந்த நகரத்தில், ‘வேதிக்-3D’ அருங்காட்சியகம் கட்டுவதாக உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்தது?

அ. கான்பூர்

. வாரணாசி

இ. அயோத்தி

ஈ. லக்னோ

  • உத்தர பிரதேச மாநில அரசு வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமற்கிருத பல்கலைக்கழகத்தில் வேதிக்-3D அருங்காட்சியகத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் இந்திய சோதிடம், வானியல் மற்றும் வேத இலக்கியங்களில் கவனஞ்செலுத்துகிறது; இது 16 சம்ஸ்காரங்கள், 64 கலைகள் மற்றும் 18 வித்யா ஸ்தானங்கள்போன்ற வேத மரபுகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகிறது. இது சரசுவதி பவனில் பாதுகாக்கப்பட்ட அரிய கையெழுத்துப் பிரதிகளை (“ராஸ் பஞ்சாத்யாயி”, “ஸ்ரீமத் பகவத் கீதை” மற்றும் “துர்காசப்தசதி” உட்பட) தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த அருங்காட்சியகம் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் வேத இலக்கிய அறிவை ஆழப்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. டிஜிட்டல் பேருந்து என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய இரண்டு நிறுவனங்கள் எவை?

அ. தேசிய டிஜிட்டல் இந்தியா இயக்கம் மற்றும் NIIT அறக்கட்டளை

ஆ. கல்வி அமைச்சகம் மற்றும் இன்ஃபோசிஸ் அறக்கட்டளை

இ. NITI ஆயோக் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

ஈ. டிஜிட்டல் இந்தியா இயக்கம் மற்றும் TCS

  • டிஜிட்டல் பேருந்து முன்னெடுப்பானது கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் 3 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றுசேர்ந்துள்ளது. தொலைதூரப் பகுதிகளுக்கு தொழில்நுட்பத்தை கொண்டுவந்து புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்ட இது, தேசிய டிஜிட்டல் இந்தியா இயக்கம் மற்றும் NIIT அறக்கட்டளையின் கூட்டு முயற்சியாகும்.
  • இம்முன்னெடுப்பானது டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும், அரசாங்கத் திட்டங்களுடன் மக்களை இணைக்கவும், கற்றல் ஆர்வத்தை மேம்படுத்தவும், கூட்டுக் கற்றலை மேம்படுத்தவும், தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தவும் எண்ணுகிறது. சூரிய ஆற்றலில் இயங்கும் 5G-தொழில்நுட்பம் உடைய இப் பேருந்துகள், கணினிகள், இணைய அணுகல் மற்றும் மின்-நூல்களுடன் கூடிய நடமாடும் வகுப்பறைகளாகச் செயல்படுகின்றன.

7. அண்மையில், ‘விஷ்வஸ்யா-பிளாக்செயின் தொழில்நுட்ப அடுக்கு’ என்பதை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ஒரு சேவையாக வழங்கும் நோக்கோடு விஸ்வஸ்யா-பிளாக்செயின் தொழில்நுட்ப அடுக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல்வேறு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிளாக்செயின் பயன்பாடுகளை ஆதரிக்கும் வகையில், ஒரு வடிவமைக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட உள்கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகமானது NBFLite என்ற ஒரு இலகுரக பிளாக்செயின் இயங்குதளத்தையும் அறிமுகப்படுத்தியது. தேசிய பிளாக்செயின் கட்டமைப்பு ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு மேம்பாடுமூலம் டிஜிட்டல் நம்பிக்கை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. NBF ஆனது ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் API நுழைவு வாயிலைப் பயன்படுத்தி பாதுகாப்பான, வெளிப்படையான சேவைகளை வழங்குகிறது.

8. அண்மையில், மகாராட்டிரத்தின் எம்மாவட்டத்தில், இந்தியக்குடியரசுத்தலைவர், ‘விசுவசாந்தி புத்த விகாரையை’ திறந்து வைத்தார்?

அ. கோலாப்பூர்

ஆ. இராய்காட்

இ. லத்தூர்

ஈ. கோண்டியா

  • மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டம் உத்கிரில் விசுவசாந்தி புத்த விகாரையை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். இந்த விகாரைக்குள் கௌதம புத்தரின் சிலையை நிறுவி, Dr பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பாரம்பரிய புத்தர் வழிபாடு நிகழ்வு இடம்பெற்றது. ஆளுநர் CP இராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 15 ஹெக்டேர் பரப்பளவில் கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் உள்ள புத்த விகாரையின் பிரதியாக இந்த விகாரை உள்ளது. இது 1,200 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தைக் கொண்டுள்ளது; மேலும் அதன் பிரதான நுழைவாயில் சாஞ்சி ஸ்தூபியைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

9. 2023-24 நிதியாண்டில், எந்தெந்த மாநிலங்கள் மெய்யான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதிக வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன?

அ. தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் இராஜஸ்தான்

ஆ. மணிப்பூர், ஒடிஸா மற்றும் ஜார்கண்ட்

இ. குஜராத், அஸ்ஸாம் மற்றும் பஞ்சாப்

ஈ. மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா

  • தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் இராஜஸ்தான் ஆகியவை பத்து பெரிய மாநிலங்களில் 2023-24 நிதியாண்டில் மெய்யான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதிக வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. ஒன்பதாவது பெரிய மாநிலமான தெலுங்கானா, 9.2% வளர்ச்சியடைந்து, `7.9 லட்சம் கோடியை எட்டி தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.2% வளர்ச்சியை விஞ்சியது. மூன்றாவது பெரிய மாநிலமான தமிழ்நாடு 8.2% வளர்ச்சிகண்டு `15.7 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஏழாவது பெரிய மாநிலமான ராஜஸ்தான் 8% வளர்ச்சிகண்டுள்ளது. ஓராண்டில் ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் உற்பத்திசெய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை GSDP அளவிடுகிறது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் காலப்போக்கில் வளர்ச்சிப் போக்குகளைப் புரிந்துகொள்வதற்கு GSDP மிகமுக்கியமானதாகும்.

10. ஊட்டச்சத்து கண்காணிப்பு முன்முயற்சிக்காக, அண்மையில், மின்னாளுகை-2024ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

  • ஊட்டச்சத்து கண்காணிப்பு முன்முயற்சிக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மின்-ஆளுகை 2024-க்கான தேசிய விருதைப் (தங்கம்) பெற்றது. சரியான ஊட்டச்சத்தை உறுதிசெய்வதற்காக நிகழ்நேர தரவு மற்றும் WHO வளர்ச்சி அட்டவணையைப் பயன்படுத்தி 0-6 வயதுடைய குழந்தைகளின் வளர்ச்சியை ஊட்டச்சத்து கண்காணிப்பு முன்முயற்சி கண்காணிக்கிறது. அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பிடுகின்றனர் மற்றும் வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்படும்போது தலையிடுகின்றனர்.
  • துல்லியமான கண்காணிப்பிற்காக அங்கன்வாடி மையங்களில் மேம்பட்ட ICT கருவிகள் மற்றும் வளர்ச்சி அளவீட்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போஷன் 2.0இன்கீழ் மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய இது குழந்தைகளின் நலவிளைவுகளை மேம்படுத்துகிறது. இது கர்ப்பிணிப்பெண்கள், தாய்மார்கள் & சிறார்களுக்கான சேவைகளை நிர்வகிக்கிறது.

11. அண்மையில், இரண்டாங்கட்ட ‘தரங் சக்தி-24’ பயிற்சி நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. ஜோத்பூர்

இ. ஷில்லாங்

ஈ. பிரயாக்ராஜ்

  • ‘தரங் சக்தி – 24’ பயிற்சியின் இரண்டாம் கட்டம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்றது. மூன்று EA-18G உறுமி விமானங்கள் மற்றும் 120 பணியாளர்களை வழங்கிய ஆஸ்திரேலியா உட்பட பன்னாட்டு பங்கேற்பை இது உள்ளடக்கியது. ஆக.30 முதல் செப்.13 வரை நடைபெற்ற இந்தப் பயிற்சி, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. கிரேக்கம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்றன.

12. பொதுத்துறை தணிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அண்மையில் இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. மியான்மர்

இ. வங்காளதேசம்

ஈ. ஈரான்

  • பொதுத்துறை தணிக்கையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொறுப்பு ஆணையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தலைவர் (CAG) கையெழுத்திட்டார். இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கற்றல் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தக் கூட்டாண்மை அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் பொதுத்துறை தணிக்கையில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது. UAE பொறுப்புக்கூறல் ஆணையத்தின் தலைவர் ஹூமைத் ஓபைட் கலீபா, இருநாடுகளிலும் நிர்வாக மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தத்தின் பங்கை எடுத்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தணிக்கை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு அரசாங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘டாக்டர்’ இராதாகிருஷ்ணன் விருது.

முன்னாள் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.05ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், சிறந்த ஆசிரியரை தேர்வுசெய்து ‘டாக்டர்’ இராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது. விருது பெறுபவர்களுக்கு `10,000 ரொக்கமும், வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும்.

2. தூத்துக்குடி கடல் பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை.

தூத்துக்குடி கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவுவதைத் தடுக்கும் வகையில், ‘சாகர் கவாச்’ எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்றது. மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை சாகர் கவாச் எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

1. Recently, where was the third edition of Joint Defence Cooperation Committee (JDCC) meeting between India and Kenya held?

A. Lucknow

B. New Delhi

C. Kolkata

D. Chennai

  • The third Joint Defence Cooperation Committee (JDCC) meeting between India and Kenya was held in New Delhi. Discussions covered military cooperation, training, defence industries, and research and development. The Kenyan delegation met Indian defence industry representatives in Delhi and will visit Pune to explore their capabilities.
  • India and Kenya share a longstanding, friendly relationship, strengthened by a 2016 MoU on Defence Cooperation. JDCC serves as a key platform to discuss and enhance defence ties. The Indian delegation was led by Joint Secretary Amitabh Prasad, and the Kenyan side was led by Major General David Kipkemboi Ketter.

2. Recently, which ministry launched the new ‘Notary Portal’ in New Delhi?

A. Ministry of Law and Justice

B. Ministry of Home Affairs

C. Ministry of Defence

D. Ministry of Power

  • Ministry of Law and Justice launched the new Notary Portal in New Delhi, enhancing digital services in line with Digital India. The portal offers a paperless, faceless, and efficient system, benefiting both notaries and the public.
  • It provides online services, including applications for appointment as notaries, issuance and renewal of Certificates of Practice, change of practice area, and submission of annual returns. Notaries can now submit applications online, monitor their progress, and download digitally signed Certificates of Practice via Digilocker, eliminating the need for physical submissions.

3. Jagar Lok Sanskriti Utsav is a festival celebrating the folk culture of which northern state?

A. Assam

B. Uttarakhand

C. Himachal Pradesh

D. Sikkim

  • The government recently celebrated Uttarakhand’s rich folk culture at the Jagar Lok Sanskriti Utsav. A book titled Uttarakhand ka Lok Putra Pritam Bharatwan by Sachidanand Semwal was released, honoring Pritam Bharatwan as the brand ambassador of the state’s folk culture. Jagar Lok Sanskriti Utsav highlights Uttarakhand’s folk traditions. This festival involves rituals where gods and deities are awakened for favors or remedies.

4. Na Anka famine was associated with which state?

A. Haryana

B. Odisha

C. Jharkhand

D. Bihar

  • The Union Education Minister proposed renaming Ravenshaw University due to its association with the Na Anka Famine during Thomas Edward Ravenshaw’s tenure. The Na Anka Famine, also known as the Great Odisha Famine, devastated Odisha in 1866, two years before Ravenshaw University was founded in 1868. The famine was so severe that about one-third of Odisha’s population died. It occurred during the 9th Regnal year of King Divya Singha Deva of Orissa. Thomas Edward Ravenshaw, a British bureaucrat and colonial commissioner of Odisha, witnessed the famine’s devastating impact firsthand.

5. Recently, the Uttar Pradesh government has announced the construction of Vedic-3D Museum in which city?

A. Kanpur

B. Varanasi

C. Ayodhya

D. Lucknow

  • The Uttar Pradesh government announced a Vedic-3D Museum at Sampurnanand Sanskrit University in Varanasi. The museum will focus on Indian astrology, astronomy, and Vedic literature, showcasing the evolution of Vedic traditions like the 16 Sanskars, 64 arts, and 18 Vidya Sthans. It will display rare manuscripts preserved in Saraswati Bhawan, including “Raas Panchadhyayi,” Shrimad Bhagwat Gita, and Durgasaptashati. The museum aims to revive spiritual discourse and deepen knowledge in Vedic literature.

6. Digital Bus initiative is launched by which two organizations?

A. National Digital India Mission and NIIT Foundation

B. Ministry of Education and Infosys Foundation

C. NITI Aayog and Department of IT

D. Digital India Mission and TCS

  • The Digital Bus initiative has impacted over three lakh beneficiaries across India since its launch in 2017. It is a joint venture between the National Digital India Mission and the NIIT Foundation, aiming to bring technology to remote areas and foster innovation.
  • The initiative seeks to reduce the digital divide, connect people to government programs, enhance learning interest, promote collaborative learning, and develop interpersonal skills. The solar-powered, 5G-enabled buses serve as mobile classrooms with computers, internet access, and preinstalled e-courses.

7. Recently, which ministry has launched the ‘Vishvasya-Blockchain Technology Stack’?

A. Ministry of Electronics and Information Technology

B. Ministry of New and Renewable Energy

C. Ministry of Urban Development

D. Ministry of Defence

  • The Ministry of Electronics and Information Technology (MeitY) launched the Vishvasya-Blockchain Technology Stack to provide Blockchain-as-a-Service (BaaS). It is built on a distributed infrastructure, designed to support different permissioned blockchain applications.
  • MeitY also introduced NBFLite, a lightweight blockchain platform, and Praamaanik, a solution for verifying mobile app origins. The National Blockchain Framework (NBF) aims to enhance digital trust and service delivery through research and application development. NBF offers secure, transparent services using smart contracts and an API gateway.

8. Recently, the President of India inaugurated the ‘Vishwashanti Buddha Vihar’ in which district of Maharashtra?

A. Kolhapur

B. Raigad

C. Latur

D. Gondia

  • President Droupadi Murmu inaugurated the Vishwashanti Buddha Vihara in Udgir, Latur district. She installed a statue of Gautama Buddha inside the vihara and paid tribute to Dr. Babasaheb Ambedkar by offering flowers at his statue.
  • The event featured a traditional Buddha worship ceremony. Governor C.P. Radhakrishnan, Chief Minister Eknath Shinde, and other leaders attended the event. The vihara is a replica of the Buddha Vihara in Kalburgi, Karnataka, spread over 15 hectares. It has a meditation center for 1,200 followers, and its main entrance is inspired by the Sanchi Stupa.

9. Which states have recorded the highest growth in real gross state domestic product (GSDP) in FY24?

A. Tamil Nadu, Telangana and Rajasthan

B. Manipur, Odisha and Jharkhand

C. Gujarat, Assam and Punjab

D. Madhya Pradesh, Bihar and Haryana

  • Telangana, Tamil Nadu, and Rajasthan recorded the highest growth in real Gross State Domestic Product (GSDP) in FY24 among the 10 largest states. Telangana, the ninth largest state, grew at 9.2%, reaching ₹7.9 lakh crore, surpassing national GDP growth of 8.2%. Tamil Nadu, the third largest state, saw an 8.2% growth, reaching ₹15.7 lakh crore.
  • Rajasthan, the seventh largest state, grew by 8%. GSDP measures the total value of all goods and services produced within a state’s boundaries in a year. GSDP is crucial for understanding a state’s economic growth and development trends over time.

10. Which ministry recently won the national award for e-Governance 2024 for Poshan Tracker initiative?

A. Ministry of Rural Development

B. Ministry of Women and Child Development

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Agriculture

  • The Ministry of Women and Child Development won the National Award for e-Governance 2024 (Gold) for the Poshan Tracker initiative. The Poshan Tracker monitors the growth of children aged 0-6 years using real-time data and WHO growth charts to ensure proper nutrition.
  • Anganwadi Workers (AWWs) assess children’s health and intervene when growth issues arise. Advanced ICT tools and Growth Measuring Devices (GMD) are used at Anganwadi Centers for accurate monitoring. The app improves child health outcomes, covering millions under Mission Poshan 2.0. It also manages services for pregnant women, mothers, and childre.

11. Recently, where was the second phase of ‘Exercise Tarang Shakti 24’ held?

A. New Delhi

B. Jodhpur

C. Shillong

D. Prayagraj

  • The second phase of ‘Exercise Tarang Shakti 24’ was held at Air Force Station Jodhpur. It involved international participation, including Australia, which contributed three EA-18G Growler aircraft and 120 personnel. The exercise took place from Aug.30 to Sep.13 and aimed to strengthen regional security cooperation. Other participating nations included Greece, Sri Lanka, the UAE, Japan, Singapore, and the US.

12. Which country recently signed an MoU with India to enhance bilateral cooperation in public sector auditing?

A. United Arab Emirates

B. Myanmar

C. Bangladesh

D. Iran

  • The Comptroller and Auditor General of India (CAG) signed an MoU with the UAE Accountability Authority to enhance collaboration between the two countries in public sector auditing. This MoU will create opportunities for learning and cooperation. The partnership focuses on knowledge exchange, capacity building, and best practices in public sector auditing.
  • UAE Accountability Authority President, Humaid Obaid Khalifa, highlighted the MoU’s role in improving governance and accountability in both nations. This agreement strengthens audit cooperation, promoting transparency and efficiency in government operations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!