TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 5th August 2024

1. அண்மையில், மருத்துவச் சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

அ. லெப்டினன்ட் ஜெனரல் புனிதா அரோரா

. லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர்

இ. லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனித்கர்

ஈ. லெப்டினன்ட் ஜெனரல் கவிதா சஹாய்

  • Lt.Gen சாதனா சக்சேனா நாயர் ஆக.01 அன்று இந்திய இராணுவத்தின் மருத்துவச்சேவைகளுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். மூன்றாம் தலைமுறை ஆயுதப்படை உறுப்பினரான இவர், ஆயுதப்படை மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்று கடந்த 1985இல் இராணுவ மருத்துவப்படையில் சேர்ந்தார். மருத்துவமனை சேவைகளுக்கான தலைமை இயக்குநராக பணியாற்றியுள்ள அவர், விசிஷ்ட சேவா பதக்கம் உட்பட பல்வேறு கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

2. அண்மையில், ‘52ஆவது ஆளுநர்கள் மாநாடு’ நடைபெற்ற இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. புது தில்லி

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • 2024 ஆக.02 அன்று, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த 52ஆவது ஆளுநர்களின் மாநாட்டிற்குத் தலைமைதாங்கினார். குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இரண்டு நாள் நடைபெற்ற இந்நிகழ்வில் NITI ஆயோக் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசாங்க உறுப்பினர்களும் பங்குபெற்றனர். முதன்முதலில் 1949ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆளுநர்களின் மாநாடு, இந்தியாவில் ஆட்சி மற்றும் நிர்வாகப் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது.

3. ஷராவதி நீரேற்றித் தேக்கல் புனல்மின்னுற்பத்தி நிலையம் கட்டப்பட்டுள்ள ஆறு எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • இந்தியாவில் இரண்டு புதிய நீரேற்றித் தேக்கல் ஆலைகளுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 2000 மெகாவாட் திறன்கொண்ட ஷராவதி நீரேற்றித் தேக்கல் புனல்மின்னுற்பத்தி நிலையம், மாநிலத்தின் மின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், தலகலலே மற்றும் ஜெருசப்பா அணைகளைப் பயன்படுத்தும். KPCL மற்றும் மேகா எஞ்சினியரிங்மூலம் உருவாக்கப்பட்ட இது, இந்தியாவிலேயே மிகப்பெரியது ஆகும். ஒடிஸா புனல்மின்னுற்பத்தி நிறுவனம்மூலம் கட்டப்பட்ட 600 மெகாவாட் (MW) திறன்கொண்ட இந்திராவதி நீரேற்றித்தேக்கல் நிலையமானது, மேல் இந்திராவதி நீர்த்தேக்கத்தின் நீரைப்பயன்படுத்தும். 2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின்படி, இவ்விருதிட்டங்களுக்கும் மத்திய மின்சார ஆணையத்தின் அனுமதி கட்டாயம் தேவை.

4. அண்மையில், குஜராத் மாநிலத்தின் லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்காக, இந்தியா, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. இந்தோனேசியா

ஆ. எகிப்து

இ. வியட்நாம்

ஈ. பிரான்ஸ்

  • ஜூலை.30 முதல் ஆக.1 வரை வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் இந்தியாவிற்கு வருகைதந்தபோது, ​​வியட்நாமின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசாங்கம், $300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனை வழங்குவதாக அறிவித்தது. வியட்நாம் பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இணைவது மற்றும் குஜராத் மாநிலத்தின் லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்கும் திட்டம் உட்பட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

5. குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் முதன்மை அமைப்பாக விளங்கும் அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

. ஆயுஷ் அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • அடுத்த 10 ஆண்டுகளுக்கு குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் உள்ள உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை ஆதரிப்பதற்காக AYUSH அமைச்சகம் WHO உடனான $85 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நிதியானது அம்மையத்தை விரிவுபடுத்துவதோடு அதன் ஆராய்ச்சிக்கும் உதவும்.
  • ஜெனிவாவில் அமைந்துள்ள WHO தலைமையகத்தில் அரிந்தம் பாக்சி மற்றும் டாக்டர் புரூஸ் ஐல்வர்ட் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மொத்தம் $250 மில்லியன் முதலீட்டில் நிறுவப்பட்ட இந்த மையம், நவீன அறிவியலுடன் பாரம்பரிய மருத்துவம்மூலம் உலகளாவிய நலத்தை மேம்படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய AYUSH அமைச்சகம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் உள்ள WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் முதன்மை மைய அமைப்பாகும்.

6. சமீபத்திய தரவுகளின்படி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலுமினியம் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. மெக்ஸிக்கோ

இ. கனடா

ஈ. சீனா

  • 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில், உற்பத்தியானது 1.2% அதிகரித்து மொத்தம் 10.43 இலட்சம் டன் என்ற உற்பத்தி அளவுடன் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய அலுமினிய உற்பத்தியாளராக ஆனது. இது அலுமினிய உற்பத்தித்துறையில் சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. கூடுதலாக, மற்ற முக்கிய தாதுக்களின் உற்பத்தியும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதில், இரும்புத்தாது 79 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) மற்றும் சுண்ணாம்பு 116 MMT என்ற அளவில் உயர்ந்துள்ளது.

7. Schistura sonarengaensis என்பது சார்ந்த இனம் எது?

அ. ஒரு வகை அயிரை மீன்

ஆ. சிலந்தி

இ. தவளை

ஈ. பல்லி

  • வங்காளதேச எல்லைக்கு அருகில் மேகாலயாவின் தெற்கு காரோ மலைப்பகுதியில் Schistura sonarengaensis என்ற புதிய அயிரை மீனினத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடியாழத்தில் வசிக்கும் இந்நன்னீர் மீனினம், மூன்று குகைகளில் காணப்பட்டது. வெளிறிய உடல் தோற்றத்துடன் சாம்பல்-கருப்பு பட்டைகளையும் 13-26 கரும் புள்ளிகளையும் இது கொண்டுள்ளது. குகையில் வாழும் வழமையான மீனினங்கள் போலல்லாமல், இது கண் உறுப்பைக் கொண்டுள்ளது. இது Schistura synkai தவிர்த்து, இப்பகுதியில் உள்ள மற்ற Schistura இனங்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

8. வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) முதன்மை நோக்கம் என்ன?

அ. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மந்தகாலங்களில் சந்தை விலைகளைக் கட்டுப்படுத்துதல்

ஆ. உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பது

இ. உலக அளவில் உணவு தானிய விலையைக் குறைப்பது

ஈ. உணவு தானிய நுகர்வு குறைப்பது

  • வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் மின்-ஏலமின்றி இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) நேரடியாக அரிசி வாங்குவதற்கு மாநில அரசுகளுக்கு நடுவணரசு அனுமதியளித்துள்ளது. வெளிச்சந்தை விற்பனைத் திட்டமானது FCI-க்கு நடுவணரசின் தொகுப்பிலிருந்து உபரியான கோதுமை மற்றும் அரிசியை வணிகர்கள், மொத்த நுகர்வோர் மற்றும் மாநிலங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் விற்க உதவுகிறது. இது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) மற்றும் பிற நலத்திட்டங்களுக்கான தாங்கிருப்புகளை பராமரிப்பதுடன் கூடுதலாகும். இத் திட்டம் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்வதையும், மந்தகாலங்களில், குறிப்பாக பற்றாக்குறைப் பகுதிகளில் சந்தை விலைகளைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. NFSA ஒதுக்கீடுகளுக்கு அப்பால் மாநிலங்கள் தங்கள் தேவைகளுக்கு உணவு தானியங்களை வாங்கிக்கொள்ளலாம்.

9. “World Development Report 2024: The Middle Income Trap” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. IMF

ஆ. உலக வங்கி

இ. UNDP

ஈ. UNEP

  • உலக வங்கியின் 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை, “நடுத்தர-வருமானப்பொறியை” எடுத்துக்காட்டுகிறது; அது நடுத்தர வருமான நிலைகளில் சிக்கித்தவிக்கும் நாடுகள் உயர் வருமான நிலைக்கு முன்னேற போராடும் நிலை தனை விளக்குகிறது. இந்தப் பொறி பெரும்பாலும் தனிநபர் $8,000 GDPஇல் ஏற்படுகிறது. 1990 முதல், 108 நடுத்தர வருமான நாடுகளில் 34 மட்டுமே உயர் வருமான நிலைக்கு நகர்ந்துள்ளன. முக்கிய சவால்களில் வயதான மக்கள் தொகை, அதிகரித்து வரும் காப்புவாதம் மற்றும் விரைவான ஆற்றல்மாற்றங்களின் தேவை ஆகியவை அடங்கும். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் குறைந்த-நடுத்தர வருமானம்கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்ட இந்தியா, GNI தனிநபர் $2,540-ஐக் கொண்டுள்ளது. தற்போதைய போக்குகளின்படி, அமெரிக்க தனிநபர் வருமானத்தில் கால் பகுதியை இந்தியா அடைய இன்னும் 75 ஆண்டுகள் தேவைப்படும்.

10. அண்மையில், வளைந்த கால்கள்கொண்ட ஆறு புதிய வகை சிறிய மரப்பல்லி இனத்தை, இந்தியாவின் எந்தப் பகுதியில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்?

அ. வடகிழக்கு

ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

இ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

ஈ. லடாக்

  • வடகிழக்கிந்தியாவில் வளைந்த கால்கள் கொண்ட ஆறு புதிய சிறிய மரப்பள்ளி இனங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் இந்த வகை மரப்பல்லிகள் ஓடைகள், பாறைகள் மற்றும் தாவரங்களுக்கு மிக அருகில் வசிக்கின்றன. வடகிழக்குப்பகுதியில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் இந்த வகை மரப்பல்லிகளின் தனித்துவமான இனங்களைக் கொண்டுள்ளன. வடகிழக்கிந்தியாவில் மொத்தமாக 30 வெவ்வேறு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

11. அண்மையில், இந்திய கதிரலை வானியலாளர்கள், கீழ்க்காணும் எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி 34 புதிய மாபெரும் கதிரலை மூலங்களை (Giant RAdio Sources – GRASs) கண்டறிந்தனர்?

அ. GROWTH-இந்தியா தொலைநோக்கி

ஆ. மாபெரும் மீட்டர் வேவ் கதிரலை தொலைநோக்கி

இ. கேஸ்கிரேன் தொலைநோக்கி

ஈ. இமயமலை சந்திர தொலைநோக்கி (HCT)

  • இந்திய வானியலாளர்கள் புனே அருகே உள்ள மாபெரும் மீட்டர் வேவ் கதிரலை தொலைநோக்கியைப் (GMRT) பயன்படுத்தி 34 புதிய மாபெரும் கதிரலை மூலங்களை கண்டுபிடித்துள்ளனர். தேசிய கதிரலை வானியற்பியல் மையத்தால் இயக்கப்படுகிற GMRT என்பது கதிரலைகளை ஆராயும் முப்பது பெரிய பரவளையங்களைக் கொண்டு உள்ளது. கதிரலை மூலங்கள் என்பன அவற்றின் மையங்களில் மிகப்பெரிய கருந்துளைகளைக் கொண்ட மா பெரும் அண்டப்பொருள்களாகும்.

12. பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024இன் முதன்மை நோக்கம் என்ன?

அ. ஒரு விரிவான பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்குதல் மற்றும்

நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை நிறுவுதல்

ஆ. பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்தல்

இ. பேரிடர் மேலாண்மை நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்

ஈ. பேரிடர் மீட்புக் குழுக்களின் தேவையை நீக்குதல்

  • பேரிடர் மேலாண்மை (திருத்தம்) மசோதா, 2024ஐ மக்களவையில் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா ஒரு விரிவான பேரிடர் தரவுத்தளத்தை உருவாக்குவதையும், மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் நகர்ப்புற பேரிடர் மேலாண்மை ஆணையங்களை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் (SDMAs) தன்னிச்சையாக பேரிடர் திட்டங்களைத் தயாரிக்கவும் நிபுணர்களை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கும். தேசிய நெருக்கடி மேலாண்மைக்குழுபோன்ற அமைப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவும், மாநில அரசுகளால் மாநில பேரிடர் மீட்புப்படைகளை நிறுவவும் இந்த மசோதா எண்ணுகிறது. இந்தத் திருத்தம் 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளுடன் ஒத்துப்போகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகிலுள்ள முருகபக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இம்மாநாட்டின் நிறைவுநாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச்சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகன் அடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படவுள்ளது.

1. Recently, who has become the first woman to be appointed the Director General of Medical Services?

A. Lt Gen Punita Arora

B. Lt Gen Sadhna Saxena Nair

C. Lt Gen Madhuri Kanitkar

D. Lt Gen Kavita Sahai

  • Lieutenant General Sadhna Saxena Nair became the first woman to lead the Indian Army’s Medical Services on August 1, 2024. A third-generation armed forces member, she graduated from the Armed Forces Medical College and joined the Army Medical Corps in 1985. She previously served as Director General of Hospital Services and has received numerous honors, including the Vishisht Seva Medal.

2. Recently, where was the ’52nd Conference of Governors’ held?

A. Hyderabad

B. New Delhi

C. Chennai

D. Bengaluru

  • On August 2, 2024, President Droupadi Murmu presided over the 52nd Conference of Governors at Rashtrapati Bhavan, her first time leading the event. The conference, attended by key leaders like Vice-President Jagdeep Dhankhar, Prime Minister Narendra Modi, and Home Minister Amit Shah, also included state governors, lieutenant governors, and administrators of union territories.
  • The two-day event featured participation from NITI Aayog officials and senior government members. The Conference of Governors, first held in 1949, addresses governance and administrative issues in India.

3. Sharavathy Pumped Storage hydroelectric plant is built on which river?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Andhra Pradesh

  • The Central Electricity Authority has approved two new hydro-pumped storage plants in India. The 2000 MW Sharavathi Hydro-Pumped Storage plant in Karnataka will use the Talakalale and Gerusoppa dams, aiming to address the state’s power issues.
  • Developed by KPCL and Megha Engineering, it’s the largest of its kind in India. The 600 MW Upper Indravati Pumped Storage Plant in Odisha will utilize the Upper Indravati Reservoir’s released water, with construction by Odisha Hydropower Corporation Limited. Both projects require Central Electricity Authority approval as per the Electricity Act of 2003.

4. Recently, India signed an agreement with which country to develop National Maritime Heritage Complex (NMHC) at Lothal, Gujarat?

A. Indonesia

B. Egypt

C. Vietnam

D. France

  • During Vietnamese Prime Minister Pham Minh Chinh’s visit to India from July 30 to August 1, 2024, the Indian government announced $300 million in loans to strengthen Vietnam’s maritime security. Nine agreements were signed, including Vietnam joining the Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) and a plan to develop the National Maritime Heritage Complex (NMHC) at Lothal, Gujarat.

5. Which ministry is the nodal body for the WHO Global Traditional Medicine Centre (GTMC) in Gujarat?

A. Ministry of Science and Technology

B. Ministry of AYUSH

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Home Affairs

  • The Ministry of Ayush signed an $85 million agreement with the WHO to support the Global Traditional Medicine Centre (GCTM) in Jamnagar, Gujarat, over the next 10 years. This funding will expand the centre and support its research. The agreement was signed by Arindam Bagchi and Dr Bruce Aylward at WHO headquarters in Geneva. The GCTM, established with a total investment of $250 million, aims to enhance global health through traditional medicine combined with modern science. The Union Ministry of Ayush is the nodal body for the WHO Global Traditional Medicine Centre (GTMC) in Jamnagar, Gujarat.

6. According to recent data, which country is the second-largest aluminium producer in the world?

A. India

B. Mexico

C. Canada

D. China

  • India has become the world’s second-largest aluminium producer, with a 1.2% increase in production to 10.43 lakh tons in the first quarter of FY 2024-25. This highlights India’s growth in the aluminium sector, just behind China. Additionally, production of other key minerals has risen significantly, with iron ore reaching 79 million metric tons (MMT) and limestone 116 MMT.

7. Schistura sonarengaensis belongs to which species?

A. Loach

B. Spider

C. Frog

D. Lizard

  • Scientists discovered a new loach species, Schistura sonarengaensis, in Meghalaya’s South Garo Hills near the Bangladesh border. This freshwater, bottom-dwelling fish was found in three cave-dwelling populations. It has prominent eyes and 13-26 black blotches on a greyish-black stripe over a pale body. Unlike typical cave species, it retains eyes and has reduced pigmentation. It differs from other Schistura species in the region, except for Schistura syngkai.

8. What is the main objective of Open Market Sale Scheme (OMSS)?

A. To ensure food security and control market prices during lean seasons

B. To increase food grain production

C. To reduce food grain prices globally

D. To reduce food grain consumption

  • The Centre has allowed state governments to directly buy rice from the Food Corporation of India (FCI) without e-auctions under the Open Market Sale Scheme (OMSS).
  • The OMSS enables FCI to sell surplus wheat and rice from the central pool at predetermined prices to traders, bulk consumers, and states. This is in addition to maintaining buffer stocks for the National Food Security Act (NFSA) and other welfare schemes. The scheme aims to ensure food security and control market prices during lean seasons, especially in deficit regions. States can procure food grains for their needs beyond NFSA allocations.

9. Which organization recently released “World Development Report 2024: The Middle-Income Trap”?

A. IMF

B. World Bank

C. UNDP

D. UNEP

  • The World Bank’s 2024 report highlights the “Middle-Income Trap,” where countries stuck in middle-income status struggle to advance to high-income levels. This trap often occurs around $8,000 GDP per capita. Since 1990, only 34 of 108 middle-income countries have moved to high-income status. Key challenges include aging populations, rising protectionism, and the need for faster energy transitions.
  • India, classified as a lower-middle-income country since 2007, has a GNI per capita of $2,540 and would need 75 years to reach one-quarter of US income per capita at current trends.

10. Recently, scientists have discovered six new species of bent-toed gecko, a type of small lizard, in which region of India?

A. Northeastern

B. Western Ghats

C. Eastern Ghats

D. Ladakh

  • Scientists have discovered six new lineages of bent-toed geckos in Northeast India. These geckos, found in Arunachal Pradesh, Nagaland, Manipur, and Mizoram, are nocturnal and live near forest streams, rocks, and vegetation. Each state in the region hosts its own unique species of these geckos, with 30 different species identified in Northeast India overall.

11. Recently, Indian radio astronomers have identified 34 new giant radio sources (GRASs) using which telescope?

A. GROWTH-India Telescope

B. Giant Metrewave Radio Telescope

C. Cassegrain Telescope

D. Himalayan Chandra Telescope (HCT)

  • Indian astronomers have discovered 34 new Giant Radio Sources (GRSs) using the Giant Metrewave Radio Telescope (GMRT) near Pune. Operated by the National Centre for Radio Astrophysics (NCRA), GMRT has 30 large parabolic dishes that study radio waves. GRSs are massive cosmic objects with supermassive black holes at their centers.

12. What is the main objective of the Disaster Management (Amendment) Bill, 2024?

A. To create a comprehensive disaster database and establish Urban Disaster Management Authorities

B. To increase disaster relief funds

C. To reduce the number of disaster management agencies

D. To eliminate the need for disaster response teams

  • The Indian government plans to introduce the Disaster Management (Amendment) Bill, 2024, in the Lok Sabha. This bill aims to create a comprehensive disaster database and set up Urban Disaster Management Authorities in state capitals and major cities.
  • It will empower the National Disaster Management Authority (NDMA) and State Disaster Management Authorities (SDMAs) to independently prepare disaster plans and appoint experts. The bill also seeks to grant statutory recognition to bodies like the National Crisis Management Committee and propose the establishment of State Disaster Response Forces by state governments. This amendment aligns with the 15th Finance Commission’s recommendations.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!