Tnpsc Current Affairs in Tamil & English – 5th and 6th October 2024
1. Volatiles Investigating Polar Exploration Rover (VIPER) திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
அ. ISRO
ஆ. NASA
இ. CNSA
ஈ. ESA
- தாமதம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக NASA Volatiles Investigating Polar Exploration Rover (VIPER) திட்டத்தை இரத்து செய்தது. இரத்து செய்வதற்குமுன் VIPER முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு பகுதியளவுக்குச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. நீர்க்கட்டி மற்றும் பிற வளங்களுக்காக திங்களின் தென்துருவத்தை ஆராய்வது NASAஇன் இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. VIPER திட்டமானது, இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்க தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் ஒருபகுதியாக இருந்தது.
2. தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 ஆனது கீழ்க்காணும் எந்த ஆண்டுக்குள் பேற்று நிலநிரப்பல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
அ. 2025
ஆ. 2026
இ. 2027
ஈ. 2028
- 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0, 2025-2026 காலகட்டத்திற்குள் இந்தியாவிலுள்ள அனைத்து பேற்று நிலநிரப்பல்களையும் அகற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2,421 பேற்று நிலநிரப்பல்களில் 474 அகற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 2,617 ஏக்கர் நிலமானது பூங்கா மற்றும் ஒருங்கிணைந்த கழிவுமேலாண்மைத் திட்டங்கள்போன்ற மாற்றுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆமதாபாத், நாக்பூர், புனே மற்றும் லக்னோ போன்ற நகரங்கள் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத் தன்மையில் இத்திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இத்தளங்களை மாற்றியமைத்துள்ளன.
3. RoDTEP (ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளைக் குறைத்தல்) திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. நிதி அமைச்சகம்
ஆ. வெளியுறவு அமைச்சகம்
இ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- RoDTEP (ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளைக் குறைத்தல்) திட்டமானது உள்நாட்டு கட்டண வீத பகுதி (DTA) அலகுகளுக்கு 2025 செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரியில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட RoDTEP, ஏற்றுமதியாளர்களின் சுங்கங்கள் மற்றும் வரிகளை திருப்பிச் செலுத்துகிறது. உலகளாவிய வர்த்தக விதிகளுக்கு இணங்காததற்காக உலக வர்த்தக அமைப்பில் சவால் செய்யப்பட்ட Merchandise Exports from India Scheme (MEIS)க்கு மாற்றாக இந்தத்திட்டம் உள்ளது. உற்பத்தி மற்றும் விநியோகத்தின் போது ஏற்படும் செலவுகளுக்கு ஏற்றுமதியாளர்கள் இழப்பீடு பெறுவதை RoDTEP உறுதிசெய்கிறது.
4. “எதிர்கால தொற்றுநோய்க்கான தயார்நிலை & அவசரகால பதிலளிப்பு—செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பு” என்ற தலைப்பிலான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
அ. NITI ஆயோக்
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி
இ. இந்திய உணவுக் கழகம்
ஈ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்
- “எதிர்கால தொற்றுநோய்க்கான தயார்நிலை மற்றும் அவசரகால பதிலளிப்பு — செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பு” என்ற தலைப்பிலான நிபுணர் குழு அறிக்கையை NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. எதிர்கால பொதுச் சுகாதார அவசர நிலைகளுக்கு விரைவாக பதிலளிப்பதற்கான ஒரு செயல்திட்டத்தை இந்த அறிக்கை வழங்குகிறது.
- COVID-19 என்பது கடைசி தொற்றுநோய் அல்ல எனவும்; எதிர்கால அச்சுறுத்தல்களில் 75% விலங்குவழி பரவல் நோய்களாகவே இருக்கலாம் என இந்த அறிக்கை கூறுகிறது. தொற்றுநோய்களுக்கான நூறு நாள் பதிலளிப்பு திட்டத்தை வழங்குகிற இந்த அறிக்கை, நிர்வாகம், தரவு மேலாண்மை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சட்டத்தை வலுப்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் திறனை வளர்ப்பதை இது பரிந்துரைக்கிறது. எதிர் கால பாதிப்புகளை திறம்பட நிர்வகிப்பதை இந்தக் கட்டமைப்பு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. அண்மையில், எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், விழித்திரை கண்ணீர் மற்றும் நீரிழிவால் ஏற்படும் விழித் திரை அழிவுக்கான சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளனர்?
அ. ஐஐடி பம்பாய்
ஆ. ஐஐடி தில்லி
இ. ஐஐடி மெட்ராஸ்
ஈ. ஐஐடி கான்பூர்
- மெட்ராஸ் ஐஐடியின் ஆராய்ச்சியாளர்கள், விழித்திரையில் மருந்து உள்ளிடலை மேம்படுத்துதற்காக லேசான லேசர் தூண்டப்பட்ட வெப்பச்சலனத்தைப் பயன்படுத்தி விழித்திரை கண்ணீர் மற்றும் நீரிழிவால் ஏற்படும் விழித்திரை அழிவு நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புதுமையான அணுகுமுறை இந்தியாவில் விழித்திரை கோளாறுகளுள்ள சுமார் பதினொரு மில்லியன் மக்களுக்குப் பயனளிக்கும். தற்போது, லேசர் அடிப்படையிலான நுட்பங்கள் விழித்திரை கண்ணீர், நீரிழிவு நீரிழிவால் ஏற்படும் விழித்திரை அழிவு, விழிப்புள்ளி திரவக்கோர்வை மற்றும் விழித்திரை நரம்படைப்புபோன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
6. ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய கடற்படை மாநாடான ‘இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல்–2024’இன் கருப்பொருள் என்ன?
அ. Resource-Geopolitics and Security in the Indo-Pacific
ஆ. Evolving Maritime Strategies within the Indo-Pacific
இ. Operationalising the Indo-Pacific Oceans Initiative
ஈ. Geopolitical Impacts Upon Indo-Pacific Maritime Trade and Connectivity
- 2024 – இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் என்பது புது தில்லியில் நடைபெற்ற வருடாந்திர இந்திய கடற்படை மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் கருப்பொருள், “இந்தோ-பசிபிக் பகுதியில் வள-புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு” என்பதாகும். இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் என்பது இந்திய-பசிபிக் கடல்சார் பாதுகாப்பைப்பற்றி விவாதம் மேற்கொள்ளும் சர்வதேச மூலோபாய ஈடுபாட்டிற்கான இந்தியக் கடற்படையின் முக்கிய தளமாகும்.
- இந்த ஆண்டின் மாநாடு புவிசார் அரசியலில் பாரம்பரிய மற்றும் புதிய கடல்சார் வளங்களின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது; எதிர்கால புவிசார் அரசியலை வடிவமைக்கும் ஹைட்ரோ-கார்பன்கள்போன்ற கடல்சார் ஆற்றல் வளங்களில் இது கவனம் செலுத்துகிறது.
7. கனரக தொழில்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, ‘PM E-DRIVE’ திட்டத்தின் நோக்கம் என்ன?
அ. மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் மின்னேற்ற உள்கட்டமைப்பை நிறுவுவது
ஆ. பொதுப்போக்குவரத்து பயன்பாட்டைக் குறைப்பது
இ. பெட்ரோல் வாகன உற்பத்தியை அதிகரிப்பது
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- மத்திய கனரக தொழில்துறை அமைச்சகமானது PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் மின்சார வாகன (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் மாசில்லா போக்குவரத்திற்காக நாடு முழுவதும் அத்தியாவசிய மின்னேற்ற (charging) உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், அவசர ஊர்திகள், சரக்குந்துகள் மற்றும் பிற வளர்ந்துவரும் EVகளுக்கான மானியங்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய கூறுகளில் அடங்கும். ஈராண்டுகளில் `10,900 கோடி நிதிச்செலவில், அதிக EV பயன்பாடு உள்ள நகரங்களில் பொது மின்னேற்ற நிலையங்கள் நிறுவப்படும்.
8. அண்மையில், மக்கள் திட்ட பரப்புரையைத் (ஜன்-யோஜனா அபியான்) தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஆ. வேளாண் அமைச்சகம்
இ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஜன்-யோஜனா அபியான் எனப்படும் மக்கள் திட்ட பரப்புரையைத் தொடங்கியுள்ளது. ‘சப்கி யோஜனா சப்கா விகாஸ்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ள இப்பரப்புரையானது, 2025-26க்கான கிராமப்பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறது. 2.55 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராமசபைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதும், கிராமப்புற இந்தியாவில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
9. முப்பத்து மூன்று (33) ஊர்வன இனங்கள் மற்றும் முப்பத்து ஆறு (36) இருவாழ்வி இனங்கள் பதிவுசெய்யப்பட்ட ஊர்வன-இருவாழ்வி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட புலிகள் காப்பகம் எது?
அ. ஆனைமலை புலிகள் காப்பகம்
ஆ. முதுமலை புலிகள் காப்பகம்
இ. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈ. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
- தற்போது, ‘MTR மசினகுடி பிரிவு’ என்று அழைக்கப்படும் முதுமலை புலிகள் காப்பகத்தில் அண்மையில் ஊர்வன-இருவாழ்வி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது அறிவியலுக்குப் புதியதும், பல்லுயிரிகளும் கண்டறியப்பட்டன. கடல்மட்டத்திலிருந்து 300 முதல் 2,000 மீ உயரத்தில் உள்ள வாழ்விடங்களை இக்கணக்கெடுப்பு உள்ளடக்கியது. இது 33 ஊர்வன இனங்களையும், 36 இருவாழ்வி இனங்களையும் இனம் கண்டுள்ளது; அதில் பல்வேறு இனங்கள் மேற்குத்தொடர்ச்சிமலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவை.
10. அண்மையில், “உலக பசுமைப்பொருளாதார மன்றம்” தொடங்கப்பட்ட இடம் எது?
அ. துபாய்
ஆ. புது தில்லி
இ. பாரிஸ்
ஈ. லண்டன்
- சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கோடு உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைக்கும் உலக பசுமைப் பொருளாதார மன்றம் துபாயில் தொடங்கப்பட்டது. ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் ஆதரவின்கீழ், “Empowering Global Action: Unlocking Opportunities and Advancing Progress” என்பதாகும். தட்பவெப்பநிலை தணிப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகள் குறித்து இதன் அமர்வுகள் கவனஞ்செலுத்தின.
11. 2025ஆம் ஆண்டு கோ-கோ உலகக்கோப்பையை நடத்துகிற நாடு எது?
அ. இந்தியா
ஆ. நேபாளம்
இ. பூடான்
ஈ. சீனா
- கோ-கோ உலகக்கோப்பைப் போட்டியானது எதிர்வரும் 2025இல் இந்தியாவில் நடைபெறுமென இந்திய கோ-கோ கூட்டமைப்பும் பன்னாட்டு கோ-கோ கூட்டமைப்பும் அறிவித்தன. இந்நிகழ்வில் 6 கண்டங்களைச்சேர்ந்த 24 நாடுகள் பங்கேற்கின்றன; இதில் ஆடவர் மற்றும் மகளிர் என 16 அணிகள் பங்கேற்கின்றன. கோ-கோவை ஊக்குவிக்க, KKFI ஆனது 10 நகரங்களில் உள்ள 200 பள்ளிகளில் கோ-கோவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
12. 25ஆவது இருவாச்சி திருவிழாவிற்காக வேல்சுடன் கூட்டிணைந்துள்ள மாநில அரசு எது?
அ. அஸ்ஸாம்
ஆ. மிசோரம்
இ. நாகாலாந்து
ஈ. மணிப்பூர்
- 25ஆவது இருவாச்சி திருவிழாவிற்காக நாகாலாந்து மாநிலம் வேல்ஸை பங்குதாரராக ஒப்பந்தம் செய்துள்ளது. நாகாலாந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ தனது வேல்ஸ் பயணத்தின்போது, வேல்ஸ் அரசு, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் வேல்ஸ் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார். இது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், பொதுமக்களிடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், இளையோர்க்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மு. மேத்தா, பி. சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு. மேத்தா, பின்னணிப்பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில், “கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது” ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன்.03ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு `10 லட்சமும், நினைவுப்பரிசும் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சகம் கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தது.
2. வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அவசியம்: வனத்துறை அமைச்சகம்.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்.2 முதல் அக்.8 வரை ஒரு வாரம் வனவுயிரின வாரமாக வனத்துறையினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்தும், மனித-விலங்கு மோதல்களை தடுப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தற்போது 20.31% வனப்பகுதி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 5 தேசியப்பூங்காக்கள், 17 வனவுயிரின சரணாலயங்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 3 உயிர்கோள பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் 5 புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளன. 2017-18ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 2,761 யானைகள் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 302 யானைகள் அதிகரித்துள்ளன. அதேபோல், 2022-23 ஆண்டுகளின் தரவுகளின்படி தமிழ்நாட்டு வனப்பகுதிகளில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 306ஆக உயர்ந்துள்ளது.
3. 72 விமானங்களின் கண்கவர் சாகச ஒத்திகை.
இந்திய வான்படை தொடங்கப்பட்டு 92ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில், மெரீனா கடற்கரையில், அக்.06ஆம் தேதி பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
4. TN Alert செயலி.
வானிலை முன்னெச்சரிக்கை, மழையின் அளவு, ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அறிய, “TN Alert” என்ற செயலியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
5. அக்.05: ‘தனிப்பெருங்கருணை நாள்’:: திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள்.
6. அனைத்து அரசுப்பள்ளிகளிலும், ‘மகிழ் முற்றம்’ மாணவர் அமைப்பு: `2 கோடியில் செயல்படுத்த முடிவு.
அனைத்து அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப்பண்பை வளர்க்கும் வகையில் மாணவர் குழு அமைப்பு, ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திட்டத்தின் நோக்கம்: குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை மாணவர் குழு அமைப்பின் முதன்மை நோக்கமாகும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர் குழு அமைப்பை, ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
1. Volatiles Investigating Polar Exploration Rover (VIPER) mission is associated with which space organization?
A. ISRO
B. NASA
C. CNSA
D. ESA
- NASA cancelled the Volatiles Investigating Polar Exploration Rover (VIPER) mission due to delays and high costs. VIPER was fully assembled and partially tested before cancellation. It was a NASA mission to explore the Moon’s south pole for water ice and other resources. VIPER was part of the U.S.-led Artemis Accords, involving India.
2. Swachh Bharat Mission-Urban 2.0 aims to clear legacy landfills by which year?
A. 2025
B. 2026
C. 2027
D. 2028
- The Swachh Bharat Mission-Urban 2.0, launched in 2021, targets the remediation of all legacy landfills in India by 2025-2026. As of now, 474 out of 2,421 legacy landfills have been cleared, reclaiming over 2,617 acres of land for alternate uses such as parks and integrated waste management projects. Cities like Ahmedabad, Nagpur, Pune, and Lucknow are transforming these sites, showcasing the mission’s impact on urban development and environmental sustainability.
3. RoDTEP (Remission of Duties and Taxes on Exported Products) scheme, recently in news, comes under which ministry?
A. Ministry of Finance
B. Ministry of External Affairs
C. Ministry of Commerce and Industry
D. Ministry of Agriculture
- The RoDTEP (Remission of Duties and Taxes on Exported Products) scheme is extended for domestic tariff area (DTA) units until September 30, 2025.
- Launched in January 2021 by the Ministry of Commerce and Industry, RoDTEP refunds un-reimbursed taxes, duties, and levies to exporters. It replaced the Merchandise Exports from India Scheme (MEIS), which was challenged at the World Trade Organization (WTO) for non-compliance with global trade rules. RoDTEP ensures that exporters receive compensation for costs incurred during production and distribution.
4. Which institution released a report titled ‘Future Pandemic Preparedness and Emergency Response —A Framework for Action’?
A. NITI Aayog
B. Reserve Bank of India
C. Food Corporation of India
D. Council of Scientific and Industrial Research
- NITI Aayog released an Expert Group report titled ‘Future Pandemic Preparedness and Emergency Response —A Framework for Action’. The report offers a blueprint for rapid response to future public health emergencies.
- COVID-19 is not the last pandemic; 75% of future threats could be zoonotic. The report offers a 100-day response plan for pandemics, focusing on governance, data management, and partnerships. The report recommends strengthening legislation, surveillance, and capacity-building. The framework aims to better prepare and manage future outbreaks effectively.
5. Researchers of which institution has recently developed a method to treat retinal tears and diabetic retinopathy?
A. IIT Bombay
B. IIT Delhi
C. IIT Madras
D. IIT Kanpur
- Researchers at IIT Madras have discovered a new method to treat retinal tears and diabetic retinopathy using mild laser-induced convection to improve drug delivery into the retina. They conducted simulations to study different treatment types, focusing on heat and mass transfer. This innovative approach could benefit around 11 million people in India with retinal disorders. Currently, laser-based techniques are employed to treat conditions like retinal tears, diabetic retinopathy, macular edema, and retinal vein occlusion.
6. What is the theme of an annual Indian Navy conference, “Indo-Pacific Regional Dialogue – 2024”?
A. Resource-Geopolitics and Security in the Indo-Pacific
B. Evolving Maritime Strategies within the Indo-Pacific
C. Operationalising the Indo-Pacific Oceans Initiative
D. Geopolitical Impacts Upon Indo-Pacific Maritime Trade and Connectivity
- The 2024 Indo-Pacific Regional Dialogue (IPRD), an annual Indian Navy conference, held in New Delhi. The conference’s theme is “Resource Geopolitics and Security in the Indo-Pacific”.
- IPRD is the Indian Navy’s key platform for international strategic engagement, discussing maritime security in the Indo-Pacific. This year’s conference highlights the impact of traditional and new marine resources on geopolitics, with a focus on offshore energy resources like hydrocarbons shaping future geopolitics.
7. What is the objective of ‘PM E-DRIVE Scheme’, launched by Ministry of Heavy Industries?
A. Promote Electric Vehicle (EV) adoption and establish charging infrastructure
B. Reduce public transportation usage
C. Increase petrol vehicle production
D. None of the above
- The Ministry of Heavy Industries launched the PM Electric Drive Revolution in Innovative Vehicle Enhancement (PM E-DRIVE) Scheme. The scheme aims to boost the adoption of Electric Vehicles (EVs) and create essential charging infrastructure nationwide for cleaner transportation. Key components include subsidies for electric two-wheelers, three-wheelers, ambulances, trucks, and other emerging EVs. Public charging stations will be established in cities with high EV use, supported by a financial outlay of ₹10,900 crore over two years.
8. Which ministry recently launched the People’s Plan Campaign (Jan Yojana Abhiyan)?
A. Ministry of Rural Development
B. Ministry of Agriculture
C. Ministry of Panchayati Raj
D. Ministry of Home Affairs
- The Ministry of Panchayati Raj launched the People’s Plan Campaign, also known as Jan Yojana Abhiyan. The campaign is themed ‘Sabki Yojana Sabka Vikas’ and focuses on preparing Gram Panchayat Development Plans (GPDPs) for 2025–26. Special Gram Sabhas are being organized in over 2.55 lakh Gram Panchayats. The aim is to strengthen grassroots democracy and promote inclusive development in rural India.
9. In which tiger reserve was a herpetofauna survey conducted that recorded 33 reptile species and 36 amphibian species?
A. Anamalai Tiger Reserve
B. Mudumalai Tiger Reserve
C. Sathyamangalam Tiger Reserve
D. Kalakkad Mundanthurai Tiger Reserve
- A recent herpetofauna survey in the Mudumalai Tiger Reserve, now called the MTR Masinagudi Division, found rich biodiversity, including species likely new to science. The survey covered habitats at altitudes of 300 to 2,000 meters above sea level. It identified 33 reptile species and 36 amphibian species, many endemics to the Western Ghats.
10. Recently, where was the “World Green Economy Forum” launched?
A. Dubai
B. New Delhi
C. Paris
D. London
- The World Green Economy Forum launched in Dubai, bringing together global leaders to address environmental challenges. Under Sheikh Mohammed bin Rashid Al Maktoum’s patronage, the theme was “Empowering Global Action: Unlocking Opportunities and Advancing Progress.” Sessions focused on international cooperation for climate mitigation and integrated approaches to meet sustainable development goals.
11. Which country hosts the inaugural Kho Kho World Cup in 2025?
A. India
B. Nepal
C. Bhutan
D. China
- The inaugural Kho Kho World Cup will be held in India in 2025, announced by the Kho Kho Federation of India and the International Kho Kho Federation. The event will feature 24 countries from 6 continents, with 16 teams for both men and women. To promote the sport, the KKFI plans to introduce Kho Kho in 200 schools across 10 cities.
12. Which state government has partnered with Wales for 25th edition of the Hornbill Festival?
A. Assam
B. Mizoram
C. Nagaland
D. Manipur
- Nagaland signed Wales as a Country Partner for the 25th Hornbill Festival. Chief Minister Neiphiu Rio, during his visit to Wales, announced the agreement with the Welsh Government, British Council, and Wales Arts International. The partnership aims to strengthen bilateral ties, enhance people-to-people contact, and create opportunities for youth.