TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 4th September 2024

1. அண்மையில் புது தில்லியில், ‘AgriSURE’ என்ற நிதியத்தையும் ‘கிருஷி நிவேஷ்’ இணைய நுழைவையும் அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் புது தில்லியில், ‘AgriSURE’ நிதியம் மற்றும் கிருஷி நிவேஷ் இணைய நுழைவைத் தொடக்கிவைத்தார். சிறந்தமுறையில் செயல்படும் வங்கிகள் & மாநிலங்களுக்கு வேளாண்மை உள்கட்டமைப்பு நிதிய சிறப்பு விருதுகளை அவர் வழங்கினார். அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் சமூக வேளாண் சொத்துக்களை மேம்படுத்துவதற்காக 2022இல் வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியம் தொடங்கப்பட்டது.

2. சமீபத்தில், நடுவணமைச்சரவையால் எண்ம வேளாண் இயக்கத்திற்கு எவ்வளவு நிதி ஒப்புதலளிக்கப்பட்டது?

அ. ரூ 500 கோடி

ஆ. ரூ 2,500 கோடி

இ. ரூ 2,817 கோடி

ஈ. ரூ 1,500 கோடி

  • எண்ம வேளாண் இயக்கம்: எண்ம பொது உள்கட்டமைப்பின் அடிப்படையில், எண்ம வேளாண் இயக்கம் உழவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த இயக்கத்திற்கு மொத்தம் `2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண் பரப்பு டிஜிட்டல் பயிர் மதிப்பீடு; டிஜிட்டல் மகசூல் மாடலிங்; பயிர் கடனுக்கான இணைப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற IT தொழில்நுட்பங்கள். எண்ம பொது உள்கட்டமைப்பின்கீழ், அக்ரிஸ்டாக், கிருஷி டெசிஷன் சப்போர்ட் சிஸ்டம் (DSS) மற்றும் மண்விவரக்குறிப்பு வரைபடங்கள் ஆகிய மூன்று முக்கிய கூறுகள் இடம்பெற்றுள்ளன.
  • இந்தக்கூறுகள் உழவர்களுக்கு பல்வேறு சேவைகளை அணுகுவதற்கான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அக்ரிஸ்டாக் ஆனது விவசாயிகளின் பதிவேடு, இடஞ்சார் கிராம வரைபடங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் பயிர் விதைக்கப்பட்ட பதிவு ஆகியவற்றை உள்ளடக்கும்.

3. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் வட்டெறிதல் போட்டியில் யோகேஷ் கதுனியா வென்ற பதக்கம் என்ன?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • 2024–பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவருக்கான வட்டெறிதல் F56 இறுதிப்போட்டியில் யோகேஷ் கதுனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிகழ்வு ஸ்டேட் டி பிரான்ஸ் அரங்கில் நடந்தது. யோகேஷ் கதுனியா (27) 42.22 மீட்டருக்கு வட்டை எறிந்தார். பிரேசிலின் கிளாடினி பாடிஸ்டா டோஸ் சாண்டோஸ் 46.86 மீட்டர் தூரம் எறிந்து பாராலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். கிரீஸ் வீரர் கான்ஸ்டான்டினோஸ் சூனிஸ் 41.32 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். ஸ்லோவாக்கியாவின் டுசன் லாஸ்கோ 41.20 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். செர்பியாவின் நெபோஜ்சா டூரிக் தகுதிபெற்றாலும் இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை.

4. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் மகளிருக்கான 400 மீ T20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வென்ற பதக்கம் என்ன?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் மகளிருக்கான 400 மீ T20 போட்டியில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் போட்டியை 55.82 விநாடிகளில் நிறைவுசெய்தார். தீப்தி ஜீவன்ஜி 55.16 விநாடிகளில் கடந்து உக்ரைனைச் சேர்ந்த யூலியா ஷுலியாரைப் பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 55.23 விநாடிகளில் பந்தயதூரத்தை கடந்து உலக சாதனை படைத்த துருக்கியைச் சேர்ந்த அய்சல் ஒன்டர் இரண்டாவது இடத்தைப்பிடித்தார்.

5. அண்மையில், ‘அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகள் மசோதா – 2024’ஐ நிறைவேற்றிய மாநில அரசு எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மேற்கு வங்காளம்

ஈ. அஸ்ஸாம்

  • ஆகஸ்ட்.09 அன்று RG கர் மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட குற்றத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்க சட்டமன்றம் பாதுகாப்பை வலுப்படுத்த ‘அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க மாநில குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா, 2024’ஐ நிறைவேற்றியது. இது பாரதிய நியாய சன்ஹிதா-2023 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்-2012 உட்பட பல குற்றவியல் சட்டங்களைத் திருத்துகிறது. பாலியல் வன்புணர்வு வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரிப்பதை இம்மசோதா கட்டாயமாக்குகிறது. இது நீதிமன்ற நடவடிக்கைகளை அங்கீகரிக்காமல் வெளியிடுதற்கு அபராதம் விதிப்பதோடு குற்றவாளிகள் பாதிக்கப்பட்டோரின் மருத்துவச்செலவை ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்கிறது.

6. அண்மையில், “India Development Update: India’s Trade Opportunities in a Changing Global Context” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. பன்னாட்டுச் செலாவணி நிதியம்

இ. ஐநா வளர்ச்சித் திட்டம்

ஈ. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு

  • உலகளாவிய நிலைமைகள் சவாலானதாக இருந்தபோதிலும் இந்தியாவின் நடுத்தர காலக்கண்ணோட்டம் நேர்மறையானதாகவே உள்ளது என உலக வங்கி கூறியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 7% ஆகவும், 2025-26 மற்றும் 2026-27ஆம் ஆண்டுகளில் வலுவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2024 செப்.03 அன்று “இந்திய வளர்ச்சி புதுப்பிப்பு: மாறும் உலகளாவிய சூழலில் இந்தியாவின் வர்த்தக வாய்ப்புகள்” என்ற அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. வலுவான வருவாய் வளர்ச்சி மற்றும் நிதி ஒருங்கிணைப்புடன், 2023-24 காலகட்டத்தில் 83.9%ஆக உள்ள கடன்-GDP விகிதம் 2026-27இல் 82%ஆகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2026-27 வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 முதல் 1.6% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. Phrynarachne decipiens சார்ந்த இனம் எது?

அ. சிலந்தி

ஆ. தவளை

இ. பாம்பு

ஈ. மீன்

  • அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த விலங்கியல் வல்லுநர்கள் அண்மையில் இந்தியச் சிலந்தி இனங்களின் பட்டியலில் ‘Phrynarachne decipiens’ என்ற புதிய சிலந்தி இனத்தைச்சேர்த்துள்ளனர். பொதுவாக பறவை எச்சம் (அ) பறவை எச்ச நண்டு சிலந்தி என்று அழைக்கப்படும் இது, பறவையின் எச்சம் போன்று வலையைப் பின்னுகிறது. முன்னர் மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ராவில் காணப்பட்ட இது, இப்போது அஸ்ஸாமின் சோனாபூர் மற்றும் சிராங் காப்புக்காடுகளில் காணப்பட்டுள்ளது. Phrynarachne இனத்தில் 35 அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் உள்ளன.

8. அண்மையில், “இந்தியப்பெருங்கடல் பல்லுயிர் தகவலமைப்பு (IndOBIS)” குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம் நடத்தப்பட்ட இடம் எது?

அ. தேசிய கடல்சார் நிறுவனம்

ஆ. கடல்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE), கொச்சி

இ. பெருங்கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம், ஹைதராபாத்

ஈ. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், கொச்சி

  • கடல்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) அண்மையில் கொச்சியில் இந்தியப்பெருங்கடல் பல்லுயிர் தகவலமைப்பு (IndOBIS) குறித்த தேசிய பயிலரங்கை நடத்தியது. IndOBIS என்பது உலகளாவிய பெருங்கடல் பல் -உயிர் தகவலமைப்பின் (OBIS) இந்திய பிராந்திய மையமாகும். CMLREஆல் நடத்தப்படும், IndOBIS ஆனது இந்தியப் பெருங்கடலில் உள்ள கடலினங்கள்பற்றிய தரவுகளைச்சேகரித்து OBISக்கு தருகிறது. OBIS என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு பங்களிப்பாளர்களிடமிருந்து இலட்சக்கணக்கான கடல் உயிரினங்களின் பதிவுகளைக் கொண்ட ஒரு பெரிய உலகளாவிய தகவல் களஞ்சியமாகும். இது உலகின் பெருங்கடல்கள் முழுவதும் இனங்கள் பரவல், வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தரவுபற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.

9. சமீபத்தில், “பிருந்தாவன் கிராமம்” திட்டம் மற்றும் “கீதா பவன்” திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. உத்தரபிரதேசம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. குஜராத்

ஈ. அஸ்ஸாம்

  • முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான மத்திய பிரதேச அரசு, பசு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக்கொண்ட மாதிரி கிராமங்களை மேம்படுத்த ‘பிருந்தாவன் கிராமம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் 313 தொகுதிகளிலிருந்து ஒரு கிராமப்பஞ்சாயத்து தெரிவு செய்யப்பட்டு, ‘பிருந்தாவன் கிராமம்’ என பெயர் மாற்றப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கிராமமும் பசு நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஒரு கோசாலையை அமைக்கும். இத்திட்டம் கிராமப்புற பால் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பகவத் கீதை மற்றும் பகவான் கிருஷ்ணரின் போதனைகள் மற்றும் பிற ஆன்மீக நூல்களுடன் சேர்ந்து ஆன்மீக அறிவைப்பரப்புவதற்காக மத்திய பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் ‘கீதா பவன்’ மையங்கள் நிறுவப்படவுள்ளது.

10. விஷானு யுத் அபயாஸ் என்பது கீழ்க்காணும் எந்த இயக்கத்தின்கீழ் நடத்தப்பட்ட ஒத்திகையாகும்?

அ. நிலையான வாழ்விடத்திற்கான தேசிய இயக்கம்

ஆ. தேசிய ஒரே சுகாதார இயக்கம்

இ. தேசிய நீர் இயக்கம்

ஈ. அடல் புத்தாக்க இயக்கம்

  • தேசிய ஒரே சுகாதார இயக்கத்தின் ஆதரவின்கீழ், தொற்றுநோய் ஆயத்தநிலையை மதிப்பிடுவதற்காக, “விஷானு யுத் அபியாஸ்” என்ற விரிவான தேசிய மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டது. மனித சுகாதாரம், கால்நடை வளர்ப்பு மற்றும் வனவிலங்கு பராமரிப்பு துறைகளைச்சேர்ந்த நிபுணர்களைக்கொண்ட தேசிய தொற்று பரவல் தடுப்புக்குழுவின் (NJORT) ஆயத்தநிலை மற்றும் பதிலை மதிப்பீடு செய்வதை இப்பயிற்சி நோக்கமாகக்கொண்டது. நிஜ உலகளாவிய பரவலை உருவகப்படுத்த ஒரு போலி விலங்குவழி நோய்ப்பரவல் காட்சி உருவாக்கப்பட்டது. இந்தப்பயிற்சியில் ICMR, AIIMS, ஜோத்பூர் BSL-3 ஆய்வகம் மற்றும் மாநில நிர்வாகங்கள் உட்பட பல தேசிய & மாநில முகமைகள் ஈடுபட்டன.

11. ஓசியானிக் நினோ இண்டெக்ஸ் (ONI) என்பது கீழ்க்காணும் எந்த அமைப்பின் முதன்மைக் குறிகாட்டியாகும்?

அ. UNEP

ஆ. தேசிய பெருங்கடலுக்குரிய மற்றும் வளிமண்டலத்திற்குரிய நிர்வாகம்

இ. உலக வானிலை அமைப்பு

ஈ. உலக வங்கி

  • இந்திய பருவமழையில் எல் நினோ மற்றும் லா நினாவின் தாக்கம்குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. Oceanic Nino Index (ONI) எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கு மிகமுக்கியமானதாகும். ONI என்பது ENSOஐ கண்காணிப்பதற்காக ஓர் அமெரிக்க நிறுவனமான தேசிய பெருங்கடலுக்குரிய மற்றும் வளி மண்டலத்திற்குரிய நிர்வாகத்தால் (NOAA) பயன்படுத்தப்படும் ஒரு முதன்மை குறிகாட்டியாகும். பன்னாட்டுத்தேதிக் கோட்டுக்கருகில் கிழக்கு-மத்திய வெப்பமண்டல பசிபிக்கின் மேற்பரப்பு நீரில், மூன்று (3) மாத சராசரி வெப்பநிலை வேறுபாட்டை ONI அளவிடுகிறது. ONI மதிப்பு +0.5 அல்லது அதற்கு மேற்பட்டது என்றால் அது எல் நினோவைக் குறிக்கிறது; அதே சமயம் -0.5 அல்லது அதற்கும் குறைவானது என்றால் அது லா நினாவைக் குறிக்கிறது.

12. கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ், தேசிய சோதனையகம் செயல்படுகிறது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகம்

இ. மின்சார அமைச்சகம்

ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • தேசிய சோதனையகமானது இந்தியாவில் ஆற்றல் திறனை மேம்படுத்துவதற்காக எரிசக்தித்திறன் பணியகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தேசிய சோதனையகம் (NTH) என்பது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனமாகும். இது கடந்த 1912ஆம் ஆண்டில் அரசாங்க சோதனையகமாக நிறுவப்பட்டது. NTH என்பது நடுவணரசின் கீழுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பலதரப்பட்ட சோதனை ஆய்வகமாகும். இது பன்னாட்டு மற்றும் தேசிய தரங்களைப் பின்பற்றி தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான சோதனை, அளவுத்திருத்தம் மற்றும் தரமதிப்பீடு ஆகியவற்றைக் கையாள்கிறது. சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான (NABL) தேசிய அங்கீகார வாரியத்திற்கு NTH ஆதரவை வழங்குகிறது. இந்தியாவில் டிரோன்களுக்குச் சான்றளிக்கும் முதல் அரசு-நிறுவனம் இதுவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாராலிம்பிக் பாட்மின்டன்: தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு 2 பதக்கங்கள்.

பாட்மின்டன் விளையாட்டில் இந்தியாவின் நிதேஷ் குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பாட்மின்டனில் தமிழ்நாட்டு வீராங்கனைகளான துளசிமதி முருகேசனுக்கு வெள்ளிப்பதக்கமும், மனீஷா ராமதாஸுக்கு வெண்கலப்பதக்கமும் கிடைத்தன. மகளிருக்கான 200 மீ ஓட்டத்தில் பிரீத்தி பால் வெண்கலப்பதக்கம் பெற்றார். பிரீத்தி பால், பாராலிம்பிக் வரலாற்றில் ஒரே போட்டியில் இருபதக்கங்கள் வென்ற 2ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் ஏற்கெனவே 100 மீட்டரிலும் வெண்கலப்பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.

2. `14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

வேளாண்மை மற்றும் அதைச்சார்ந்த துறைகளின் வளர்ச்சி, உழவர்களின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட `14,000 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, `3,979 கோடி மதிப்பீட்டில் பயிர் அறிவியல் திட்டமும் `2,817 கோடி மதிப்பில் எண்ம வேளாண்மை இயக்கத் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளன.

பயிர் அறிவியல் திட்டத்தைப் பொருத்தவரை, வரும் 2047ஆம் ஆண்டுக்குள் காலநிலையைத் தாங்கும் பயிர்களைப் பயிரிடும் நடைமுறையைப் பரவலாக்கி, உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த விவசாயிகளைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய கல்வித்துறைகளை வலுப்படுத்தும் திட்டத்துக்கு `2,291 கோடி ஒதுக்கப்படவுள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனமயமாக்குவதே இதன் நோக்கமாகும். நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேளாண்மை அறிவியல் மையங்களான கிருஷி விக்யான் கேந்திரங்களை (KVK) வலுப்படுத்த `1,202 கோடி திட்டத்துக்கும், இயற்கை வள மேலாண்மைக்கான `1,115 கோடி திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

3. இரைப்பை புண் மருத்துவ அமர்வு: நோபல் விருதாளர் மார்ஷெல் பங்கேற்பு.

நோபல் பரிசுபெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், இரைப்பை புண்களுக்கு வித்திடும் ஹெலிகோபேக்டர் பைரோலி நுண்கிருமியை கண்டறிந்தவருமான Dr பேரி ஜெ. மார்ஷல் பங்கேற்கும் மருத்துவ அமர்வு சென்னையில் நடைபெற உள்ளது.

4. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7%: உலக வங்கி கணிப்பு.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. வேளாண்துறை மற்றும் கிராமப்புற தேவைகள் மீண்டுவருவதைக் கருத்தில்கொண்டு நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்துக்கான வளர்ச்சிக் கணிப்பை உலக வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது.

1. Which ministry recently launched the ‘AgriSURE Fund’ and ‘Krishi Nivesh Portal’ in New Delhi?

A. Ministry of Agriculture & Farmers Welfare

B. Ministry of New and Renewable Energy

C. Ministry of Rural Development

D. Ministry of Power

  • Union Agriculture and Farmers’ Welfare Minister Shivraj Singh Chouhan launched the AgriSURE Fund and Krishi Nivesh Portal in New Delhi. He conferred the Agriculture Infrastructure Fund (AIF) Excellence Awards to top-performing banks and states. The AIF was launched in 2022 to develop post-harvest management infrastructure and community farming assets.

2. Recently, how much fund has been approved for the Digital Agriculture Mission by the Union Cabinet of India?

A. Rs 500 Crore

B. Rs 2,500 Crore

C. Rs 2,817 Crore

D. Rs 1,500 Crore

  • The Union Cabinet, chaired by the Prime Minister, approved the Digital Agriculture Mission with a budget of Rs. 2817 Crore. The central share for this mission is Rs. 1940 Crore. The mission supports digital agriculture initiatives through Digital Public Infrastructure (DPI), Digital General Crop Estimation Survey (DGCES), and other IT projects.
  • Three main components under DPI are AgriStack, Krishi Decision Support System (DSS), and Soil Profile Maps. These components aim to provide solutions for farmers to access various services. AgriStack will include a Farmers’ Registry, Geo-referenced Village Maps, and a Crop Sown Registry managed by state governments.

3. Yogesh Kathuniya won which medal in the men’s discus throw event at the 2024 Paris Paralympics?

A. Gold

B. Silver

C. Bronze

D. None of the above

  • Yogesh Kathuniya won the silver medal in the men’s discus F56 final at the Paris 2024 Paralympics. The event took place at Stade de France. Kathuniya, 27 years old, achieved his season-best throw of 42.22 meters.
  • Brazil’s Claudiney Batista dos Santos won gold with a Paralympic Record of 46.86 meters. Greece’s Konstantinos Tzounis secured the bronze medal with a throw of 41.32 meters. Slovakia’s Dusan Laczko finished fourth with a throw of 41.20 meters. Serbia’s Nebojsa Duric qualified but did not participate in the final.

4. Deepti Jeevanji won which medal in the women’s 400m T20 event at the 2024 Paris Paralympics?

A. Gold

B. Silver

C. Bronze

D. None of the Above

  • India’s Deepthi Jeevanji won a bronze medal in the women’s 400m T20 race at the Paris Paralympics 2024. She completed the race in 55.82 seconds. Jeevanji secured third place, finishing behind Yuliia Shuliar from Ukraine, who clocked 55.16 seconds. The second-place finisher was Aysel Onder from Turkey, who holds the world record and finished in 55.23 seconds.

5. Which state government recently passed ‘Aparajita Women and Child Bill 2024’?

A. Gujarat

B. Uttar Pradesh

C. West Bengal

D. Assam

  • In response to a tragic crime of the rape and murder of a trainee doctor at RG Kar Medical Centre and Hospital on August 9, the West Bengal Assembly passed the Aparajita Woman and Child (West Bengal Criminal Laws Amendment) Bill, 2024, to strengthen protections for women and children.
  • The bill amends several criminal laws, including the Bharatiya Nyay Sanhita 2023 and the Protection of Children from Sexual Offences Act 2012. The bill mandates time-bound investigations of rape cases within 21 days. It also imposes penalties for unauthorized publication of court proceedings and ensures convicts bear victims’ medical costs.

6. Which organization recently released “India Development Update: India’s Trade Opportunities in a Changing Global Context” report?

A. World Bank

B. International Monetary Fund

C. United Nations Development Programme

D. International Labour Organization

  • The World Bank stated that India’s medium-term outlook remains positive despite challenging global conditions. India’s growth is expected to reach 7% in the financial year 2024-25 and stay strong in 2025-26 and 2026-27.
  • The World Bank released a report ‘India Development Update: India’s Trade Opportunities in a Changing Global Context’ on 3 September 2024. With strong revenue growth and fiscal consolidation, the debt-to-GDP ratio is projected to decrease from 83.9% in 2023-24 to 82% by 2026-27. The current account deficit is expected to remain around 1 to 1.6% of GDP until 2026-27.

7. Phrynarachne decipiens belongs to which species?

A. Spider

B. Frog

C. Snake

D. Fish

  • Zoologists in Assam have recently added a new spider species, Phrynarachne decipiens, to India’s list of arachnids. Commonly known as the bird dung or bird-dropping crab spider, it mimics bird excrement with its web. Previously found in Malaysia and Indonesia’s Java and Sumatra, it has now been recorded in Assam’s Sonapur and Chirang Reserve Forest. The genus Phrynarachne has 35 accepted species.

8. Recently, where was the national-level workshop on the “Indian Ocean Biodiversity Information System (IndOBIS)” conducted?

A. National Institute of Oceanography

B. Centre for Marine Living Resources & Ecology (CMLRE), Kochi

C. Indian National Centre for Ocean Information Services, Hyderabad

D. Central Marine Fisheries Research Institute, Kochi

  • The Centre for Marine Living Resources and Ecology (CMLRE) recently held a national workshop on the Indian Ocean Biodiversity Information System (IndOBIS) in Kochi. IndOBIS is the Indian regional node of the global Ocean Biodiversity Information System (OBIS).
  • Hosted by CMLRE, IndOBIS collects data on marine species in the Indian Ocean and contributes to OBIS. OBIS is a large global repository with millions of marine species records from various contributors worldwide. It provides detailed information on species distribution, habitats, and environmental data across the world’s oceans.

9. Which state government recently introduced the “Brindavan Gram Scheme” and the “Gita Bhavan Project”?

A. Uttar Pradesh

B. Madhya Pradesh

C. Gujarat

D. Assam

  • The Madhya Pradesh government, led by Chief Minister Mohan Yadav, launched the ‘Brindavan Gram’ scheme to develop model villages focused on cow protection and rural development.
  • One gram panchayat from each of the state’s 313 blocks will be selected and renamed ‘Brindavan Gram.’ Each chosen village will establish a gaushala (cow shed) to promote cow welfare and protection. The scheme aims to increase rural milk production, boosting farmers’ incomes. ‘Gita Bhavan’ centers will be established in every urban area of Madhya Pradesh to spread spiritual knowledge, focusing on the teachings of the Bhagavad Gita and Lord Krishna, along with other spiritual texts.

10. Vishanu Yuddh Abhyas was conducted under which mission?

A. National Mission on Sustainable Habitat

B. National One Health Mission

C. National Water Mission

D. Atal Innovation Mission

  • “Vishanu Yuddh Abhyas” is a mock drill conducted under the National One Health Mission (NOHM) to prepare for pandemic situations. NOHM focuses on the “One Health” approach, integrating disease control across human health, animal husbandry, and wildlife sectors. The exercise aimed to assess the readiness and response of the National Joint Outbreak Response Team (NJORT).
  • A simulated scenario of a zoonotic disease outbreak was created to mimic a real-world situation. The drill involved multiple national and state agencies, including ICMR, AIIMS Jodhpur BSL-3 Lab, and state administrations.

11. Oceanic Nino Index (ONI) is primary indicator of which organization?

A. UNEP

B. National Oceanic and Atmospheric Administration

C. World Meteorological Organization

D. World Bank

  • The impact of El Niño and La Niña on the Indian monsoon is under study. The Oceanic Niño Index (ONI) is crucial for understanding the El Niño-Southern Oscillation (ENSO) dynamics. ONI is the primary indicator used by the National Oceanic and Atmospheric Administration (NOAA), a U.S. agency, to monitor ENSO. ONI measures the rolling 3-month average temperature difference in the surface waters of the east-central tropical Pacific near the International Dateline. An ONI value of +0.5 or higher indicates El Niño, while -0.5 or lower indicates La Niña.

12. National Test House (NTH) operates under which ministry?

A. Ministry of Science and Technology

B. Ministry of Consumer Affairs, Food & Public Distribution

C. Ministry of Power

D. Ministry of Environment, Forest and Climate Change

  • The National Test House (NTH) signed an MoU with the Bureau of Energy Efficiency to promote energy efficiency in India. NTH is a premier institution under the Ministry of Consumer Affairs, Food & Public Distribution. It was established in 1912 as the Government Test House. NTH is India’s largest multi-location, multidisciplinary testing laboratory under the Central Government.
  • It deals with testing, calibration, and quality evaluation for industry, commerce, and trade, following international and national standards. NTH provides support to the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL). It is the first government body to certify drones in India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!