Tnpsc Current Affairs in Tamil & English – 4th October 2024
1. சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை மற்றும் NALSA ஆகியவற்றால் அண்மையில் தொடங்கப்பட்ட, ‘SARTHIE 1.0′ என்ற முன்னெடுப்பின் நோக்கம் என்ன?
அ. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது
ஆ. விழிப்புணர்வு மற்றும் சட்ட உதவியின்மூலம் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகாரமளிப்பது
இ. இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிப்பது
ஈ. இளைஞர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவது
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் தேசிய சட்ட சேவைகள் ஆணையமும் இணைந்து பின்தங்கிய சமூகங்களான பட்டியலின சாதிகள், 3ஆம் பாலினத்தோர் மற்றும் நாடோடி பழங்குடியினரை மேம்படுத்துவதற்காக ‘SARTHIE 1.0’ என்ற முன்னேப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.
- சமூகநலத்திட்டங்களை திறம்பட அணுகுவதை ஊக்குவிப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் சட்ட ஆதரவை வழங்குவது இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். இது சமூக நீதியை முன்னேற்றுவதற்கு நிர்வாக மற்றும் நீதித்துறைக்கு இடையேயான ஒத்துழைப்பை எளிதாக்குகிறது. NALSA ஆனது 1987இன் சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டத்தின்கீழ் நிறுவப்பட்டது. இது தகுதியான நபர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குகிறது மற்றும் மக்கள் நீதிமன்றத்தை நடத்துகிறது.
2. அண்மையில், மிகவும் அருகிவிட்ட இருவாழ்விகளான, Micrixalus spelunca மற்றும் Nyctibatrachus indraneili ஆகிய இரண்டும் காணப்பட்ட புலிகள் காப்பகம் எது?
அ. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
ஆ. ஆனைமலை புலிகள் காப்பகம்
இ. முதுமலை புலிகள் காப்பகம்
ஈ. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
- முதுமலை புலிகள் சரணாலயத்தில் மிகவும் அருகிவிட்ட இருவாழ்வி இனங்களான, Micrixalus spelunca (குகையில் ஆடும் தவளை) மற்றும் Nyctibatrachus indraneili (இரவு தவளை) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகமானது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது; இது நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒருபகுதியாகும். இந்த உயிர்க்கோள காப்பகத்தில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு வனவிலங்கு சரணாலயம், கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப்பூங்கா, தமிழ்நாட்டின் முக்கூர்த்தி தேசியப்பூங்கா மற்றும் அமைதிப்பள்ளத்தாக்கு ஆகியவை அடங்கும்.
3. அண்மையில், “உலக வளர்ச்சி அறிக்கையை” வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. IMF
இ. FAO
ஈ. UNEP
- உலக வங்கியின் சமீபத்திய உலக வளர்ச்சி அறிக்கை நடுத்தர வருமானப் பொறியில் கவனம் செலுத்துகிறது; தற்போது இந்தப்பொறியிலிருக்கும் பொருளாதாரங்கள் முன்னேற்றம் அடைய கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் ஆகலாம் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. கடந்த 1987 முதல், உலக வங்கி பொருளாதாரங்களை நான்கு வகைகளாக வகைப்படுத்தியுள்ளது: உயர் வருமானம், மேல் நடுத்தர வருமானம், குறைந்த நடுத்தர வருமானம் மற்றும் குறைந்த வருமானம். அதிக வருமானங்கொண்ட நாடுகள் 41இலிருந்து 86ஆக இரட்டிப்பாகும் அதே வேளையில், குறைந்த வருமானங்கொண்ட நாடுகள் 49இலிருந்து 26ஆக குறைந்துள்ளன.
- தற்போது, 108 நடுத்தர வருமான நாடுகள் உள்ளன; உலக மக்கள்தொகையில் 75% மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38% அவை பங்களிப்பு செய்கின்றன.
4. கிட்டத்தட்ட இரு மாதங்களுக்குப் பூமியைச் சுற்றிவரவுள்ள, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘சிறு திங்களின்’ பெயர் என்ன?
அ. 2024 PT5
ஆ. அர்ஜுனா
இ. சாஸ்த்ரா
ஈ. NEO 2024
- “2024 PT5” என்பது பூமியின் ஈர்ப்புவிசையால் அண்மையில் உள்ளிழுக்கப்பட்ட ஒரு சிறு சிறுகோள் ஆகும்; இது தோராயமாக 53 நாட்களுக்கு பூமியைச் சுற்றிவரும். “அர்ஜுனா சிறுகோள் பாதை” எனப்படும் சிறுகோள்களின் குழுவைச் சேர்ந்தது இது. இந்த நிகழ்வானது அறிவியல் ஆய்வுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தச் சிறு கோளை வெறுங்கண்ணால் காணமுடியாத அளவுக்கு மங்கலானதாக இருக்கும். 2024 நவ.25 அன்று பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து அது வெளி செல்லும்.
5. அண்மையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி எவ்வளவு?
அ. 600 கோடி ரூபாய்
ஆ. 675 கோடி ரூபாய்
இ. 700 கோடி ரூபாய்
ஈ. 750 கோடி ரூபாய்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து `675 கோடி வழங்க நடுவணரசு ஒப்புதலளித்துள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக குஜராத்துக்கு `600 கோடியும், மணிப்பூருக்கு `50 கோடியும், திரிபுராவுக்கு `25 கோடியும் கிடைக்கும். உள்துறை அமைச்சகம் இந்த மாநிலங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தியது. அஸ்ஸாம், மிசோரம், கேரளா, நாகாலாந்து, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
6. NITI ஆயோக் ஆனது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் பெண்கள் தொழில்முனைவோர் தளத்தின் முதல் மாநில அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியது?
அ. தெலுங்கானா
ஆ. கேரளா
இ. மகாராஷ்டிரா
ஈ. ஒடிஸா
- NITI ஆயோக் தெலுங்கானாவில் பெண்கள் தொழில்முனைவோர் தளத்தின் (WEP) முதல் மாநில அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியது. இது WE Hub மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டது. நிதிப்பற்றாக்குறை மற்றும் வழிகாட்டுதல்போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதன்மூலம் இந்தத் தளம் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கிறது. இது டிஜிட்டல் திறன்கள், நிதிச்சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளில் கவனஞ்செலுத்துகிறது. 30,000க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் மற்றும் 400 வழிகாட்டிகள் இந்தத் தளத்தின் ஒருபகுதியாக உள்ளனர். WE Hub மாநிலத்தில் WEP தொடர்பான செயல்பாடுகளை வழிநடத்தும்.
7. ஐந்நூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி (FAST) அமைந்துள்ள நாடு எது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. இந்தியா
- ஐந்நூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கியை (Five-Hundred Aperture Spherical Telescope) விரிவுபடுத்தும் இரண்டாம்கட்ட பணியை சீனா தொடங்கியுள்ளது. குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ள FAST, 500 மீட்டர் விட்டம் மற்றும் 30 கால்பந்து மைதானங்களுக்கு சமமான ஒரு பெறும்பகுதிகொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் உணர்திறன்கொண்ட ரேடியோ தொலைநோக்கி ஆகும்.
- நடுநிலை ஹைட்ரஜனைக் கண்டறிதல், துடிப்பு விண்மீன் கண்டறிதல், புவியீர்ப்பு அலை கண்டறிதலில் பங்கேற்பது மற்றும் வேற்றுலக நுண்ணறிவைத் தேடுதல் ஆகியவை இதன் இலக்குகளில் அடங்கும். உயர்தெளிவுத்திறன் கொண்ட வானாய்வுகளுக்காக FAST பன்னாட்டு வலையமைப்புகளிலும் இணைகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ICRAR மற்றும் ஐரோப்பிய தென் கூர்நோக்ககம் ஆகியவற்றுடன் இணைந்து தரவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
8. அண்மையில், இந்தியாவின் முதல் மீ மின்தேக்கி உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ள இடம் எது?
அ. கண்ணூர், கேரளா
ஆ. இந்தூர், மத்திய பிரதேசம்
இ. சென்னை, தமிழ்நாடு
ஈ. நாசிக், மகாராஷ்டிரா
- கேரள மாநிலத்தின் கண்ணூரில் அமைந்துள்ள கெல்ட்ரானில் இந்தியாவின் முதல் மீ மின்தேக்கி (super capacitor) உற்பத்தி ஆலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். ISROஇன் ஒத்துழைப்புடன் `42 கோடி முதலீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இது கேரளாவின் மின்னணு தொழிற்துறையை மேம்படுத்தும், பாதுகாப்பு மற்றும் மின்சார வாகனங்கள்போன்ற துறைகளை ஆதரிக்கும். நாள்தோறும் 2,000 மீ மின்தேக்கிகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்ட இந்த ஆலை உலகளாவிய தரத்தை பூர்த்திசெய்கிறது.
9. 2025-26ஆம் ஆண்டுக்குள் தேசிய சமையல் எண்ணெய் – பனையெண்ணெய் (NMEO-OP) திட்டத்தின்கீழ், எத்தனை லட்சம் லிட்டர் கச்சா பனையெண்ணெய் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?
அ. 5 இலட்சம் டன்
ஆ. 11.20 இலட்சம் டன்
இ. 2.50 இலட்சம் டன்
ஈ. 16.50 இலட்சம் டன்
- NMEO-OPஇன்கீழ் நிலையான எண்ணெய்ப்பனை சாகுபடிகுறித்த தேசிய அளவிலான ஆலோசனை அரங்கம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் எண்ணெய்ப்பனை சாகுபடி மற்றும் கச்சா பனையெண்ணெய் உற்பத்தியை மேம்படுத்துவதுகுறித்து இந்த அரங்கம் கவனம் செலுத்தியது. தேசிய சமையல் எண்ணெய் – பனையெண்ணெய் (NMEO-OP) திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலையான நடைமுறைகள் மற்றும் உத்திகள்பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை இது உள்ளடக்கியிருந்தது.
- எண்ணெய்ப்பனை சாகுபடி மற்றும் கச்சா பனையெண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கோடு 2021 ஆகஸ்டில் இந்தியாவால் NMEO-OP தொடங்கப்பட்டது. இது வடகிழக்குப்பகுதி மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் நிதிச்செலவு நடுவணரசின் `8,844 கோடியையும் சேர்த்து `11,040 கோடியாகும். 2025-26ஆம் ஆண்டுக்குள் எண்ணெய்ப்பனை சாகுபடியை 3.5 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 10 இலட்சம் ஹெக்டேராகவும், கச்சா பனையெண்ணெய் உற்பத்தியை 11.20 இலட்சம் டன்னாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
10. அன்ன தர்பன் அமைப்புடன் தொடர்புடைய அமைப்பு எது?
அ. NITI ஆயோக்
ஆ. இந்திய உணவுக்கழகம் (FCI)
இ. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
ஈ. APEDA
- இந்திய உணவுக்கழகம் அதன் டிஜிட்டல் மாற்றத்திட்டமான அன்ன தர்பனுக்கான கணினி ஒருங்கிணைப்பாளராக கோஃபோர்ஜ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஊடாடும், பயனர் நட்பு வடிவமைப்புடன் விநியோகச் சங்கிலி நிர்வாகத்தை நெறிப்படுத்தவும் மேம்படுத்தவும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உத்திசார்ந்த மற்றும் செயல்பாட்டு முடிவுகளை ஆதரிக்க தரவு பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தும். இந்தத் திட்டம் திறன்பேசியிலிருந்து அணுகுவதற்கு முன்னுரிமை அளிப்பதோடு உள் மற்றும் வெளிப்புற அமைப்புகளை ஒருங்கிணைக்கும்.
11. இந்திய இராணுவத்தால் நடத்தப்படும், “சாணக்யா பாதுகாப்பு உரையாடல் – 2024”இன் கருப்பொருள் என்ன?
அ. Drivers in Nation Building: Fuelling Growth through Comprehensive Security
ஆ. India’s Path to Viksit Bharat
இ. Securing India and Indo-Pacific Region
ஈ. Innovations in Military Technology
- இந்திய ராணுவம், நில போர் ஆய்வுகள் மையத்துடன் இணைந்து, ‘சாணக்யா பாதுகாப்பு உரையாடல்–2024’இன் இரண்டாவது பதிப்பை, “தேசத்தைக் கட்டமைப்பதில் ஓட்டுநர்கள்: விரிவான பாதுகாப்பின்மூலம் வளர்ச்சியைத் தூண்டுதல்” என்ற கருப்பொருளில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு, 2024 அக்டோபர்.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புது தில்லியில் நடத்தப்படும்.
- “2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்திற்கான இந்தியாவின் பாதையை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளில் ராணுவத்தளபதி உபேந்திர திவிவேதி தமது எண்ணங்களை கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார். சாணக்யா பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஆழமான விவாதங்களுக்கு வழிவகுக்கும், உத்திசார் கூட்டாண்மைகளை வளர்க்கும் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான செயல் நுண்ணறிவுகளை உருவாக்குவதில் பங்களிக்கும். தேசிய மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் தங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளவும், வளர்ச்சியின்மூலம் பாதுகாப்புகுறித்த சொற்பொழிவில் பங்களிக்கவும் இது ஒரு தளத்தை வழங்கும்.
12. அண்மையில், அஸ்ஸாமின் போடோ சமூகத்தினரால் உற்பத்தி செய்யப்படும் எந்தப் பாரம்பரிய பானத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது?
அ. போடோ டோன்பா
ஆ. போடோ ஜோ குவ்ரன்
இ. போடோ அபோர்
ஈ. போடோ அரோனை
- சென்னையில் உள்ள புவிசார் குறியீடுகள் பதிவகம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படும் எட்டுத்தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடுகளை வழங்கியுள்ளது. இதில் 16.11% மதுசாரங்கொண்ட அரிசியில் உற்பத்தி செய்யப்படும் பொங்கு மதுவகையான, ‘போடோ ஜோ குவ்ரன்’ மற்றும் புளித்த மீனுணவான ‘போடோ நாபம்’ ஆகியவை அடங்கும்.
- சிவபெருமானின் வழித்தோன்றல்கள் என நம்பப்படும் போடோ சமூகம், அரிசியில் உற்பத்தி செய்யப்படும் பொங்கு மதுவைக் காய்ச்சும் மற்றும் உட்கொள்ளும் ஒரு நீண்ட நெடிய வழக்கத்தைக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு.
மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் 1 லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 55ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓராண்டுக்குள் 55லிருந்து 46ஆகக்குறைந்துள்ளது. நடப்பாண்டில் ஒரே ஆண்டில் 9ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் முழுமையாக மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புரமும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. SC., ST மாநில ஆணைய தலைவர் நியமனம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி S. தமிழ்வாணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு தலைவராகச் செயல்படுவார்.
1. What is the objective of ‘SARTHIE 1.0’ initiative, recently launched by Department of Social Justice and Empowerment and NALSA?
A. Increase the GDP of the country
B. Empower disadvantaged communities through awareness and legal support
C. Promote tourism in India
D. Enhance digital literacy among youth
- The Department of Social Justice and Empowerment and the National Legal Services Authority launched SARTHIE 1.0 to empower disadvantaged communities like Scheduled Castes, Transgenders, and Nomadic Tribes.
- The initiative aims to raise awareness and provide legal support to promote effective access to social welfare schemes. It facilitates collaboration between the executive and judiciary to advance social justice. NALSA, established under the Legal Services Authorities Act of 1987, provides free legal services to eligible individuals and organizes Lok Adalats.
2. Recently, two critically endangered species of amphibians, Micrixalus spelunca and Nyctibatrachus indraneili, were found in which tiger reserve?
A. Kalakad Mundanthurai Tiger Reserve
B. Anamalai Tiger Reserve
C. Mudumalai Tiger Reserve
D. Sathyamangalam Tiger Reserve
- Two critically endangered amphibian species, Micrixalus spelunca (cave dancing frog) and Nyctibatrachus indraneili (Indraneil’s night frog), were discovered in Mudumalai Tiger Reserve. Mudumalai Tiger Reserve is located in the Nilgiris District of Tamil Nadu and is part of the Nilgiri Biosphere Reserve. This biosphere reserve includes Wayanad Wildlife Sanctuary in Kerala, Bandipur National Park in Karnataka, Mukurthi National Park, and Silent Valley, making it a vital area for biodiversity conservation.
3. Which organization recently released the “World Development Report”?
A. World Bank
B. IMF
C. FAO
D. UNEP
- The World Bank’s latest World Development Report focuses on the middle-income (MI) trap, highlighting that it may take nearly 75 years for economies currently in this trap to progress. Since 1987, the World Bank has classified economies into four categories: high income, upper middle income, lower middle income, and low income.
- While high-income countries have doubled from 41 to 86, low-income countries have reduced from 49 to 26. Currently, there are 108 middle-income countries, making up 75% of the global population and contributing about 38% of global GDP.
4. What is the name of the recently discovered ‘mini-moon’ that will orbit Earth for nearly two months?
A. 2024 PT5
B. Arjuna
C. Sastra
D. NEO 2024
- The 2024 PT5 is a small asteroid recently captured by Earth’s gravity, set to orbit for approximately 53 days. It belongs to a group of asteroids known as the Arjuna asteroid belt. This event is significant as it provides a rare opportunity for scientific observation. The asteroid is too faint to be seen with the naked eye and will depart Earth’s orbit on November 25, 2024.
5. Recently, how much total financial assistance has the Centre approved for the flood-affected states?
A. 600 crore rupees
B. 675 crore rupees
C. 700 crore rupees
D. 750 crore rupees
- The Centre has approved ₹675 crore to support flood-affected states Gujarat, Manipur, and Tripura from the National Disaster Response Fund. Gujarat will receive ₹600 crore, Manipur ₹50 crore, and Tripura ₹25 crore due to heavy rainfall, floods, and landslides this monsoon. The Ministry of Home Affairs emphasized its commitment to assist these states. Other affected states include Assam, Mizoram, Kerala, Nagaland, Andhra Pradesh, Telangana, and Bihar.
6. NITI Aayog launched the first State Chapter of the Women Entrepreneurship Platform in which state?
A. Telangana
B. Kerala
C. Maharashtra
D. Odisha
- NITI Aayog launched the first State Chapter of the Women Entrepreneurship Platform (WEP) in Telangana. It was done in collaboration with WE Hub and the state government. The platform supports women entrepreneurs by tackling issues like lack of finance and mentorship. It focuses on digital skills, financial services, and market connections. Over 30,000 women entrepreneurs and 400 mentors are part of the platform. WE Hub will lead WEP-related activities in the state.
7. Five-hundred-meter Aperture Spherical Telescope (FAST) is located in which country?
A. Australia
B. Russia
C. China
D. India
- China has begun the second phase of expanding the Five-Hundred Aperture Spherical Telescope (FAST). FAST, located in Guizhou Province, is the world’s largest and most sensitive radio telescope, with a diameter of 500 meters and a receiving area equal to 30 football fields. Its goals include detecting neutral hydrogen, discovering pulsars, participating in gravitational wave detection, and searching for extraterrestrial intelligence. FAST also joins international networks for high-resolution celestial studies. The data system is developed in collaboration with ICRAR in Australia and the European Southern Observatory (ESO).
8. Recently, where was India’s first supercapacitor manufacturing facility inaugurated?
A. Kannur, Kerala
B. Indore, Madhya Pradesh
C. Chennai, Tamil Nadu
D. Nashik, Maharashtra
- Kerala CM Pinarayi Vijayan inaugurated India’s first supercapacitor manufacturing facility at Keltron, Kannur, Kerala. The plant was developed with ISRO’s collaboration and an initial investment of Rs 42 crore. It will boost Kerala’s electronics industry, supporting sectors like defence and electric vehicles. The facility aims to produce 2,000 supercapacitors daily, meeting global standards.
9. What is the target production of crude palm oil under National Mission on Edible Oils – Oil Palm (NMEO-OP) by 2025-26?
A. 5 lakh tonnes
B. 11.20 lakh tonnes
C. 2.50 lakh tonnes
D. 16.50 lakh tonnes
- A National Level Multi-Stakeholder Consultative Workshop on Sustainable Oil Palm Cultivation under the NMEO-OP was recently held. The workshop focused on enhancing oil palm cultivation and production of crude palm oil in India. It involved various stakeholders to discuss sustainable practices and strategies for implementing the National Mission on Edible Oils-Oil Palm (NMEO-OP).
- NMEO-OP was launched by India in August 2021 to boost oil palm cultivation and crude palm oil production. It focuses on the Northeast region and Andaman and Nicobar Islands. The scheme has a financial outlay of Rs 11,040 crore, with Rs 8,844 crore from the central government. It aims to increase oil palm cultivation from 3.5 lakh hectares to 10 lakh hectares by 2025-26 and crude palm oil production to 11.20 lakh tonnes.
10. ANNA DARPAN system is an initiative of which organization?
A. NITI Aayog
B. Food Corporation of India (FCI)
C. National Disaster Management Authority
D. APEDA
- Food Corporation of India (FCI) selected Coforge Limited as the system integrator for its digital transformation project, Anna DARPAN. The project aims to streamline and improve supply chain management with an interactive, user-friendly design. It will use data analytics to support strategic and operational decisions. The system will integrate with internal and external systems, prioritizing mobile access.
11. What is the theme of “Chanakya Defence Dialogue-2024”, hosted by Indian Army?
A. Drivers in Nation Building: Fuelling Growth through Comprehensive Security
B. India’s Path to Viksit Bharat
C. Securing India and Indo-Pacific Region
D. Innovations in Military Technology
- The Indian Army, along with the Centre for Land Warfare Studies (CLAWS), holds the Chanakya Defence Dialogue-2024 on October 24-25, 2024 in New Delhi. The event will focus on “Drivers in Nation Building: Fuelling Growth through Comprehensive Security.” Army Chief General Upendra Dwivedi emphasized a vision for a secure and prosperous India by 2047 at the curtain-raiser event.
- The dialogue aims to promote discussions, build strategic partnerships, and create actionable insights for national security and development. It will provide a platform for national and international leaders, policymakers, and experts to share their knowledge on security through development.
12. What is the name of traditional beverage that recently received a GI tag from Assam’s Bodo community?
A. Bodo Tonba
B. Bodo Jou Gwran
C. Bodo Apor
D. Bodo Aronai
- The Geographical Indications Registry in Chennai granted GI tags to eight products from Assam, including ‘Bodo Jou Gwran’, a rice beer variant with about 16.11% alcohol, and ‘Bodo Napham’, a fermented fish dish. The Bodo community has a rich tradition of brewing and consuming rice beer, believing it originated from Lord Shiva.