TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 3rd September 2024

1. சமீபத்தில், சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (ITTF) முதல் இந்திய தூதராக அறிவிக்கப்பட்டவர் யார்?

அ. யூகி பாம்ப்ரி

. சரத் கமல்

இ. அசோக் அமிர்தராஜ்

ஈ. சுமித் நாகல்

  • சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) அறக்கட்டளையின் முதல் இந்திய தூதராக சரத் கமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 நவம்பரில் ITTFஇன் தடகள ஆணையத்திற்கு சரத் கமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2022 – பர்மிங்காம் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்கள் உட்பட13 பதக்கங்களுடன், டேபிள் டென்னிஸிற்கான காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

2. ஆண்டுதோறும், ‘உலக தேங்காய் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. 1 செப்டம்பர்

ஆ. 2 செப்டம்பர்

இ. 3 செப்டம்பர்

ஈ. 4 செப்டம்பர்

  • தென்னையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.02ஆம் தேதி உலக தேங்காய் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தென்னையின் பல்வேறு பயன்பாடுகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நிலையான விவசாய முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் உலக தேங்காய் நாளுக்கானக் கருப்பொருள், “Coconut for a Circular Economy: Building Partnership for Maximum Value” என்பதாகும். இந்த நாள் முதன்முதலில் கடந்த 2009இல் கொண்டாடப்பட்டது.

3. சமீபத்தில், இந்திய வான்படையின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்றவர் யார்?

அ. ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங்

ஆ. ஏர் மார்ஷல் VR சௌதாரி

இ. ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங்

ஈ. ஏர் மார்ஷல் அர்ஜன் சிங்

  • ஏர் மார்ஷல் தேஜிந்தர் சிங் புதுதில்லியில் உள்ள இந்திய விமானப்படையின் துணைத்தளபதியாகப் பதவியேற்றார். தேசிய பாதுகாப்பு அகாதெமியின் முன்னாள் மாணவரான தேஜிந்தர் சிங், கடந்த 1987 ஜூன்.13இல் இந்திய விமானப் படையில் இணைந்தார். பாதுகாப்பு சேவைப் பணியாளர் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் அவர் படித்துள்ளார். 2007இல் ‘வாயு சேனா’ பதக்கத்தையும், 2022இல் ‘அதி விஷிஷ்ட்’ சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

4. இ-ஷ்ரம் என்ற இணைய நுழைவைத் த்வடங்கிய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகமானது 2021 ஆகஸ்ட்.26 அன்று இ–ஷ்ரம் என்ற இணைய நுழைவைத் தொடங்கியது. 3 ஆண்டுகளில், 30 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ–ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். சமூகப்பாதுகாப்புத்திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக நடப்பு 2024-25 பட்ஜெட் உரையில் இது சிறப்பிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் PMJJBY, PMSBY, AB-PMJAY மற்றும் பிற திட்டங்களை அணுக இ–ஷ்ரம் உதவும்.

5. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில், நிதிஷ் குமார், கீழ்க்காணும் எந்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்?

அ. பூப்பந்து

ஆ. மல்யுத்தம்

இ. குத்துச்சண்டை

ஈ. டென்னிஸ்

  • 2024 – பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பூப்பந்து SL3 வகுப்பில் இந்தியாவின் 2ஆவது தங்கப்பதக்கத்தை நிதிஷ் குமார் வென்றார். முன்னதாக, மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் ஸ்டேண்டிங் SH1 போட்டியில் அவனி லெகாரா இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். 17ஆவது கோடைகால பாராலிம்பிக்ஸ் 2024 ஆக.28 முதல் செப்.08 வரை பிரான்சின் பாரிஸில் நடைபெறுகிறது.

6. ‘வருணா’ பயிற்சி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான இருதரப்பு கடற்படை பயிற்சியாகும்?

அ. ரஷ்யா

ஆ. ஆஸ்திரேலியா

இ. இலங்கை

ஈ. பிரான்ஸ்

  • 2024 செப்.02-04 வரை மத்தியத்தரைக்கடலில், மேம்பட்ட உத்திசார் பயிற்சிகளை உள்ளடக்கிய இந்தோ-பிரெஞ்சு இருதரப்பு கடற்படை பயிற்சியான ‘வருணா’ பயிற்சி நடைபெறுகிறது. இந்தியக்கடற்படையின் P-8I விமானம் அதன் முதல் ஐரோப்பிய பங்கேற்பிற்காக பிரான்சில் உள்ள விமானத்தளமான 125 ஐடிரெஸ்-லே டியூபில் தரையிறங்கியது. இது வருணா பயிற்சியின் 22ஆவது பதிப்பாகும். 1993இல் தொடங்கிய இந்தப் பயிற்சி, 2001இல் ‘வருணா’ என்று பெயரிடப்பட்டது.

7. துரந்த் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கூடைப்பந்து

ஆ. கால்பந்து

இ. ஹாக்கி

ஈ. கிரிக்கெட்

  • நார்த் ஈஸ்ட் யுனைடெட் FC பெனால்டி ஷூட் அவுட்டில் மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட்டை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் துரந்த் கோப்பை பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டி 2024 ஆகஸ்ட்.31 அன்று கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யுவபாரதி கிரிரங்கனில் நடைபெற்றது. ஆசியாவின் மிகப் பழைமையான கால்பந்து போட்டியான 133ஆவது துரந்த் கோப்பை, கொல்கத்தா, கோக்ரஜார், ஜாம்ஷெட்பூர் மற்றும் ஷில்லாங்கில் 2024 ஜூலை.27 முதல் ஆக.31 வரை நடைபெற்றது.

8. அண்மையில், “வல்ச்சர் கௌண்ட் – 2024” என்ற முன்னெடுப்பைத் தொடக்கிய அமைப்பு எது?

அ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

ஆ. குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க்

இ. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் – இந்தியா

ஈ. கிரீன்பீஸ்

  • WWF-இந்தியா 2024 செப்.07 முதல் அக்.06 வரை “வல்ச்சர் கௌண்ட் – 2024” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னெடுப்பு பன்னாட்டு பாறுகள் விழிப்புணர்வு நாளுடன் ஒத்துப்போகிறது. இந்தியாவிலுள்ள பாறுகளின் எண்ணிக்கையை எண்ணி மதிப்பிடுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறிப்பாக ஆபத்தான நிலையில் உள்ள பாறினங்கள்மீது கவனம் செலுத்துகிறது. சுற்றுச்சூழலமைப்புகளில் பாறுகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தத் திட்டம் எண்ணுகிறது.

9. அண்மையில், “உலக காது கேளாதோர் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் – 2024” நடைபெற்ற இடம் எது?

அ. பெய்ஜிங், சீனா

ஆ. ஹனோவர், ஜெர்மனி

இ. புது தில்லி, இந்தியா

ஈ. பாரிஸ், பிரான்ஸ்

  • 2024 உலக காது கேளாதோர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்சிப்பில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். உலக காது கேளாதோர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் – 2024 ஜெர்மனியின் ஹனோவரில் நடைபெறுகிறது. காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சாம்பியன்ஷிப், 2024 ஆக.29 முதல் செப்.08 வரை நடைபெறுகிறது.

10. அண்மையில், “இந்தியா உயிரி–ஆற்றல் & தொழில்நுட்பம் கண்காட்சி – 2024” தொடங்கப்பட்ட இடம் எது?

அ. புது தில்லி

ஆ. காந்திநகர்

இ. போபால்

ஈ. சென்னை

  • மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் 2024 செப்டம்பர்.02 அன்று புது தில்லியில் இந்தியா பயோ-எனர்ஜி & டெக் எக்ஸ்போ – 2024ஐத் தொடக்கி வைத்தனர். இந்தக் கண்காட்சி 2024 செப்.02 முதல் 04 வரை நடைபெறுகிறது. உயிரி ஆற்றல் துறையில் தங்கள் பங்களிப்பிற்காக நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவில் உயிரி-ஆற்றல் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்துகிறது. இந்திய பசுமை ஆற்றல் கூட்டமைப்பு, MMACTIV Sci-Tech Communications லிட் உடன் இணைந்து இதனை ஏற்பாடுசெய்தது. உயிர் ஆற்றல் தொழில்நுட்பங்களின் எதிர்காலம்பற்றிய விவாதங்களுக்கு இது ஒரு தளத்தை வழங்குகிறது.

11. அண்மையில், “சாலைப்பாதுகாப்புகுறித்த தென்கிழக்காசிய பிராந்திய நிலை அறிக்கையை” வெளியிட்ட அமைப்பு எது?

அ. IMF

ஆ. WHO

இ. உலக வங்கி

ஈ. UNDP

  • WHOஇன், “சாலைப்பாதுகாப்புகுறித்த தென்கிழக்காசிய பிராந்திய நிலை அறிக்கை” காயம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகுறித்த 15ஆவது உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது. உலகளாவிய சாலைப் போக்குவரத்து இறப்புகளில் 28% (330,222 இறப்புகள்) தென்கிழக்காசியப்பகுதியில் நிகழ்கிறது. இந்தியாவில், கடந்த 2021ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து இறப்புகள் சுமார் 216,618 என மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த இறப்புகளில் 45.1% பேர் இருசக்கர மற்றும் முச்சக்கர வாகன ஓட்டிகளாவர். இந்தியாவின் சாலைப் போக்குவரத்து இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 15.4ஆக உள்ளது; இது உலகளாவிய 15 விகிதத்தைவிட அதிகமாகும்.

12. அண்மையில், ‘வீர மகாசாம்ராட்’ என்ற பெயரில் உலகின் முதல் விரைவு மின்னேற்ற வசதி கொண்ட இ-பஸ் அறிமுகப்படுத்தப்பட்ட இடம் எது?

அ. பெங்களூரு

ஆ. ஹைதராபாத்

இ. மும்பை

ஈ. கோயம்புத்தூர்

  • உலகின் முதல் விரைவு மின்னேற்ற வசதி கொண்ட இ-பேருந்துக்கு ‘வீர மகாசாம்ராட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை வீர வாகனா மற்றும் எக்ஸ்போனென்ட் எனர்ஜி பெங்களூருவில் அறிமுகப்படுத்தியது. விரைவு மின்னேற்ற வசதிமூலம் தொலைதூரம் செல்லும் அச்சத்தை நீக்கி பயணத்தை மேம்படுத்துவதை இந்தப் பேருந்து நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலில் பெங்களூரு – ஹைதராபாத் வழித்தடத்தில் இது இயக்கப்படும். இந்த இ-பேருந்துக்கு உதவும் வகையில் இந்த வழித்தடத்தில் நான்கு மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘உயர்வுக்குப்படி’ சிறப்பு முகாம்.

+2 படித்த மாணவர்களில், உயர்கல்வியில் சேராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை உயர்கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், ‘உயர்வுக்குப்படி’ என்ற நிகழ்ச்சி பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தை, உயர் கல்வி வழிகாட்டி குழு, பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர் குழு ஆகியவை செயல்படுத்தவுள்ளன. தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான வருவாய் கோட்டங்களைக் கொண்ட இடங்களில் ’உயர்வுக்குப்படி’ என்னும் திட்டத்துக்கான முகாம்கள் நடைபெறவுள்ளன.

2. விவேகானந்தர் மண்டபம் 54ஆவது ஆண்டு விழா.

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 54ஆவது ஆண்டு விழா அண்மையில் நடந்தது. சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடலில் நீந்திச்சென்று தவம் புரிந்த பாறைமீது 1964இல் நினைவு மண்டபம் கட்டும்பணி தொடங்கியது. ஆறு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் பணி நிறைவுபெற்று 1970 செப்.02ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1. Recently, who was announced as the first Indian ambassador of the International Table Tennis Federation (ITTF)?

A. Yuki Bhambri

B. Sharath Kamal

C. Ashok Amritraj

D. Sumit Nagal

  • Sharath Kamal has been named the first Indian ambassador of the International Table Tennis Federation (ITTF) Foundation. Sharath was elected to the ITTF’s Athlete’s Commission in November 2022. He holds the record for the most medals in Commonwealth Games history for table tennis, including 13 medals with three golds at the 2022 Birmingham Games.

2. Which day is observed as ‘World Coconut Day’ annually?

A. 1 September

B. 2 September

C. 3 September

D. 4 September

  • World Coconut Day is observed every year on September 2nd to highlight the importance of coconuts. It aims to raise awareness about various uses of coconuts and promote sustainable farming practices. The theme for World Coconut Day 2024 is “Coconut for a Circular Economy: Building Partnership for Maximum Value.” The day was first celebrated in the year 2009.

3. Recently, who took over as Deputy Chief of the Air Staff of the Indian Air Force?

A. Air Marshal Rakesh Kumar Singh

B. Air Marshal VR Chaudhari

C. Air Marshal Tejinder Singh

D. Air Marshal Arjan Singh

  • Air Marshal Tejinder Singh became the Deputy Chief of the Air Staff of the Indian Air Force in New Delhi. Tejinder Singh is an alumnus of the National Defence Academy and joined the IAF fighter stream on June 13, 1987. He studied at the Defence Service Staff College and National Defence College. He received the Vayu Sena Medal in 2007 and the Ati Vishisht Seva Medal in 2022.

4. e-Shram Portal was launched by which ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of Labour and Employment

C. Ministry of Rural Development

D. Ministry of Finance

  • The Ministry of Labour & Employment launched the eShram portal on 26th August 2021. In just three years, over thirty crore unorganised workers registered on eShram. eShram will help un organised workers access schemes like PMJJBY, PMSBY, AB-PMJAY, and others.

5. Nitish Kumar won gold medal in which event at the 2024 Paris Paralympics?

A. Badminton

B. Wrestling

C. Boxing

D. Tennis

  • Nitish Kumar won India’s second gold medal at the 2024 Paris Paralympics in men’s singles Badminton SL3 class. Earlier, Avni Lekhara won India’s first gold medal in the Women’s 10m air rifle standing SH1 event. The 17th Summer Paralympics is taking place in Paris, France, from 28 August to 8 September 2024.

6. ‘Exercise Varuna’ is the bilateral naval exercise between India and which country?

A. Russia

B. Australia

C. Sri Lanka

D. France

  • The 2024 edition of Indo-French bilateral naval ‘Exercise Varuna’ held in the Mediterranean Sea from September 2-4, 2024, involving advanced tactical exercises. The Indian Navy’s P-8I aircraft landed at Air Base 125 Istres-Le Tube in France for its first-ever European deployment. This was for the 22nd edition of Exercise Varuna with the French Navy. The India-France naval exercise began in 1993, was named ‘Varuna’ in 2001.

7. Durand cup is associated with which sports?

A. Basketball

B. Football

C. Hockey

D. Cricket

  • NorthEast United FC won its first Durand Cup title by beating Mohun Bagan Super Giant 4-3 in a penalty shootout. The final was held at Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata on 31 August 2024. The 133rd Durand Cup, Asia’s oldest football tournament, was played in Kolkata, Kokrajhar, Jamshedpur, and Shillong from 27 July to 31 August 2024.

8. Which organization recently launched “Vulture Count 2024” initiative?

A. United Nations Environment Programme

B. Global Footprint Network

C. World Wide Fund for Nature – India

D. Greenpeace

  • WWF-India launched the “Vulture Count 2024” project from September 7 to October 6, 2024. This initiative aligns with International Vulture Awareness Day. The project aims to count and assess the vulture population in India. It focuses particularly on critically endangered vulture species. The project also seeks to raise public awareness about the importance of vultures in ecosystems.

9. Recently, where was the “World Deaf Shooting Championship 2024” held?

A. Beijing, China

B. Hanover, Germany

C. New Delhi, India

D. Paris, France

  • Indian shooter Dhanush Srikanth won three gold medals at the 2024 World Deaf Shooting Championship. World Deaf Shooting Championship 2024 being held at Hanover in Germany. The championship, organized by the International Committee of Sports for the Deaf, is being held from August 29 to September 8, 2024.

10. Recently, where was the “India Bio-Energy & Tech Expo 2024” inaugurated?

A. New Delhi

B. Gandhinagar

C. Bhopal

D. Chennai

  • Union Ministers Nitin Gadkari and Hardeep Singh Puri inaugurated the India Bio-Energy & Tech Expo 2024 in New Delhi on 2 September 2024. The Expo is held from 2 to 4 September 2024. Awards were given to companies for their contributions to the bioenergy industry and enhancing bioenergy production and supply in India. The Indian Federation of Green Energy, in partnership with MMACTIV Sci-Tech Communications Ltd, organized the Expo. The Expo provides a platform for discussions on the future of bioenergy technologies.

11. Which organization recently released “South-East Asia Regional Status Report on Road Safety” report?

A. IMF

B. WHO

C. World Bank

D. UNDP

  • The WHO’s “South-East Asia Regional Status Report on Road Safety” was released at the 15th World Conference on Injury Prevention and Safety Promotion. The South-East Asia Region accounts for 28% of global road traffic deaths, with an estimated 330,222 fatalities.
  • In India, there were about 216,618 estimated road traffic deaths in 2021. Two- and three-wheeler drivers/riders make up 45.1% of these deaths. India’s road traffic death rate is 15.4 per 100,000 people, higher than the global rate of 15.

12. Recently, where was the world’s first fast-charging e-bus named ‘Veera Mahasamrat’ launched?

A. Bengaluru

B. Hyderabad

C. Mumbai

D. Coimbatore

  • The world’s first fast-charging e-bus is named ‘Veera Mahasamrat.’ It was launched in Bengaluru by Veera Vahana and Exponent Energy. The bus aims to improve travel by eliminating range anxiety with its fast charging. It will first operate on the Bengaluru-Hyderabad route. Four charging stations will be set up along this route to support the e-bus.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin