Tnpsc Current Affairs in Tamil & English – 3rd October 2024
1. NAMASTE திட்டத்துடன் தொடர்புடைய தொழிலாளர் குழு எது?
அ. வேளாண் தொழிலாளர்கள்
ஆ. தூய்மைப் பணியாளர்கள்
இ. சுகாதாரப் பணியாளர்கள்
ஈ. கட்டுமானத் தொழிலாளர்கள்
- சாக்கடை & அழுகுத்தொட்டி தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும், சாக்கடை தூய்மைப்படுத்தலை இயந்திரமயமாக்குவதற்கும் இந்திய அரசாங்கம் NAMASTE திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 38,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பட்டியலின சாதியிலிருந்து (SC) 68.9% பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து 14.7% பேரும் மற்றும் பட்டியல் பழங்குடியினரிலிருந்து 8.3% பேரும் இந்தப் பணியில் உள்ளனர். கையால் சுத்தஞ்செய்த காரணத்தால் 2019 மற்றும் 2023க்கு இடையில் மட்டும் 377 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. கையால் சுத்தஞ்செய்வதால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. அண்மையில், நகர்ப்புற ஆளுகைக் குறியீட்டில் முதலிடத்தைப் பிடித்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. மகாராஷ்டிரா
- இந்தியாவிலுள்ள நகரங்களை மதிப்பிடும் பிரஜா அறக்கட்டளையின் நகர்ப்புற ஆளுகைக் குறியீட்டில் (UGI) கேரள மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. 59.31/100 மதிப்பெண்கள் பெற்று, நிதி அதிகாரம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் கேரளம் சிறந்து விளங்கியது. 55.10 மதிப்பெண்களுடன் ஒடிஸா மாநிலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது இந்தியா முழுவதும் நகர்ப்புற நிர்வாகத்தின் போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
3. இந்தியாவில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிபி போக்குவரத்து அமைச்சகத்தால் அண்மையில் தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
அ. கலாஷ் திட்டம்
ஆ. குரூஸ் பாரத் திட்டம்
இ. சமுத்ராயன் திட்டம்
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் குரூஸ் பாரத் மிஷனை 2024 செப்டம்பர்.30 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் தொடக்கினார். சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகமானது பல்வேறு ஒழுங்குமுறை நிறுவனங்களின் உதவியுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தும். இந்தத் திட்டம் 2024 அக்டோபர்.01 முதல் 2029 மார்ச்.31 வரை மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.
4. ‘எரிபஸ்’ மலை அமைந்துள்ள கண்டம் எது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. ஐரோப்பா
இ. அண்டார்டிகா
ஈ. ஆப்பிரிக்கா
- அண்டார்டிகாவின் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையான எரிபஸ், எதிர்பாராதவிதமாக தங்கத்தூளைக் கக்கி, அறிவியலாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, எரிமலையானது நீராவி, வாயுக்கள் மற்றும் பாறைகளைக் கக்கும், ஆனால் இதிலிருந்து சிறிய படிகப்படுத்தப்பட்ட தங்கத்துகள்கள் வெளிவருகின்றன. இந்தத் துகள்கள் எரிமலையிலிருந்து 621 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன; இதன் மதிப்பு சுமார் $6,000 (`5 லட்சம்) ஆகும். மற்ற எரிமலைகள் வாயு அல்லது திரவ வடிவில் தங்கத்தை உற்பத்தி செய்யும்போது, எரிபஸ் மலை தனித்தன்மையுடன் காற்றில் பறக்கும் திடமான தங்கத்துகள்களை வெளியிடுகிறது.
5. இந்தியாவிற்கும் கீழ்க்காணும் எந்த நாட்டிற்கும் இடையே ‘KAZIND’ பயிற்சி நடத்தப்படுகிறது?
அ. எகிப்து
ஆ. ஆஸ்திரேலியா
இ. கஜகஸ்தான்
ஈ. தஜிகிஸ்தான்
- KAZIND பயிற்சியின் 8ஆவது பதிப்பு செப்.30 முதல் அக்.13 வரை உத்தரகண்ட் மாநிலம் ஆலியில் நடைபெறுகிறது. இது இந்தியாவுக்கும் கஜகஸ்தானுக்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப்பயிற்சியாகும். இந்தியாவின் தரப்பில் குமான் படைப்பிரிவு மற்றும் இந்திய வான்படையைச்சேர்ந்த 120 பேர் பங்கேற்கின்றனர். கஜகஸ்தானின் குழுவில் தரைப்படை மற்றும் வான்வழித் தாக்குதல் துருப்புக்களின் பணியாளர்கள் உள்ளனர். இந்தப்பயிற்சியானது அரை-நகர்ப்புற மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான கூட்டு ராணுவ திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6. மொராக்கோவில் ஒருங்கிணைப்பு செய்யப்படும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கவச வாகனத்தின் பெயரென்ன?
அ. BMP-2
ஆ. Wheeled Armoured Platform (WhAP)
இ. ஸ்ட்ரைக்கர்
ஈ. சர்வத்ரா
- வீல்டு ஆர்மர்டு பிளாட்ஃபார்ம் 8×8 என்பது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிட் மற்றும் மொராக்கோ ராயல் ஆர்ம்ட் ஃபோர்சஸ் ஆகியவற்றுக்கு இடையேயான உத்திசார் கூட்டாண்மையின் ஒருபகுதியாக மொராக்கோவின் காசா பிளாங்காவில் இறுதி ஒருங்கிணைப்புக்கு உட்பட்ட ஓர் இந்திய வாகனமாகும். இந்த இலகுரக கவச வாகனத்தால் துருப்புக்களைக் கொண்டுசெல்லமுடியும். கண்காணிப்பு உட்பட பல்வேறு செயல்களை இதனால் செய்யமுடியும்.
7. 2024-25இல் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் எவ்வளவு இருக்கும்?
அ. 5.6%
ஆ. 4.9%
இ. 6.5%
ஈ. 3.8%
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இது 2023-24இல் 5.6%ஆகக்குறையும். வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே உள்ள இடைவெளியை வலியுறுத்தி, நிதிப்பற்றாக்குறையை `16,13,312 கோடியாகக் கட்டுப்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது. அரசின் கடன் தேவைகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு நிதிப்பற்றாக்குறை முக்கியமானது; ஏனெனில் இது மொத்த செலவினத்திற்கும் மொத்த வருவாய்க்கும் இடையிலான வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.
8. ஒவ்வோர் ஆண்டும், ‘சர்வதேச முதியோர் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 1
ஆ. அக்டோபர் 2
இ. அக்டோபர் 3
ஈ. அக்டோபர் 4
- 34ஆவது சர்வதேச முதியோர் நாள் 2024 அக்.01 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் முதுமையின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இது முதியோரின் பங்களிப்புகளையும் ஞானத்தையும் அங்கீகரிக்கிறது. 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஐநா வயது முதிர்ந்தோர் என வரையறுக்கிறது. இந்தியாவில் இந்த வரையறை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டதாக உள்ளது. 1990ஆம் ஆண்டு ஐநா தீர்மானத்திற்குப் பிறகு, 1991 அக்.01 முதல் இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. “Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.
9. தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரியத்திற்கான UNESCO கூட்டமைப்பிடமிருந்து அண்மையில் அங்கீகாரம் பெற்ற யக்ஷகானா தொடர்பான நிறுவனம் எது?
அ. கெரமானே இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகா மண்டலி
ஆ. ஸ்ரீமாயா யக்ஷகானா கலாகேந்திரா
இ. யக்ஷகான குருகுலம்
ஈ. யக்ஷகானா ஆராய்ச்சி மையம்
- 1934இல் மறைந்த கெரமானே சிவராம ஹெக்டேவால் நிறுவப்பட்ட கெரமானே இடகுஞ்சி மகாகணபதி யக்ஷகானா மண்டலிக்கு UNESCO அங்கீகாரமளித்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு கல்வி கற்பிப்பது மற்றும் யக்ஷகானத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பது, அதன் பொருத்தத்தையும் உயிர்ச்சக்தியையும் உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும். யக்ஷகானா என்பது ஒரு பாரம்பரிய நாடக வடிவமாகும்; இது 11 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கடலோர கர்நாடகம் மற்றும் கேரளத்தின் சிலபகுதிகளில் தோன்றியது. வைஷ்ணவ பக்தி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இது நடனம், இசை, உரையாடல்கள், ஆடைகள் மற்றும் அதீத அலங்காரம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
10. சமீபத்தில், 2022ஆம் ஆண்டிற்கான ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றவர் யார்?
அ. இரஜினிகாந்த்
ஆ. மிதுன் சக்ரவர்த்தி
இ. கமல்ஹாசன்
ஈ. சத்யராஜ்
- பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி 2022ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகவுயரிய சினிமா விருதான “தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்” விருதைப் பெற்றார். திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தால் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகளில் வழங்கப்படுகிற இது, இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கியோரை அங்கீகரிக்கிறது. இந்த விருது தங்கத்தாமரை, `10 லட்சம் ரொக்கப்பரிசு, சால்வை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட இந்த விருது முதன்முதலில் 1969இல் நடிகை தேவிகா இராணிக்கு வழங்கப்பட்டது.
11. அண்மையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தண்ணீரை பயனுள்ள வகையில் மறுபயன்பாடு செய்வதை ஊக்குவிப்பதற்காக, “ஜல் ஹி அமிர்தம்” என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
ஆ. ஜல் சக்தி அமைச்சகம்
இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஈ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம்
- வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நகர்ப்புறங்களில் அதன் மறுசுழற்சியை மேம்படுத்துவதற்கும், ‘AMRUT 2.0’இன்கீழ், “ஜல் ஹி அமிர்தம்” திட்டத்தைத் தொடங்கியது. நல்ல தரமான மறுசுழற்சி செய்யக்கூடிய தண்ணீரை உற்பத்தி செய்வதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிர்வகிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரங்களுக்கிடையே போட்டியை வளர்ப்பதற்கும், பயனுள்ள நீர்மேலாண்மைக்கான அவற்றின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது சுத்தமான நீர் வழங்கு அமைப்பை அறிமுகப்படுத்துகிறது.
12. அண்மையில் இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் அரசாங்க நிதியுதவியுடன்கூடிய பன்முகட்டு பெருமொழி போல்மத்தின் (Multimodal Large Language Model) பெயர் என்ன?
அ. அந்த்ரிக்ஷ்
ஆ. GTS-5
இ. பாரத்ஜென்
ஈ. இந்தியாPT5
- பொதுச்சேவை வழங்கல் மற்றும் குடிமக்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ‘பாரத்ஜென்’ Aiஐ மத்திய அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் புது தில்லியில் தொடங்கினார். இது உலகின் முதல் அரசாங்க நிதியுதவி பெறும் பன்முகட்டு பெருமொழி போல்மமாகும்; இது இந்திய மொழிகளில் திறமையான மற்றும் உள்ளடக்கிய AIஐ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்தத்திட்டம் முடிவடைய ஈராண்டுகள் ஆகும். அரசு, தனியார், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இது பயனளிக்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாடு 13 துறைகளில் தேசிய அளவில் முதலிடம்.
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் வகிப்பதாக நடுவணரசின் NITI ஆயோக் புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி, மத்திய அரசின் புள்ளியியல் துறை சார்பில் வெளியான புள்ளிவிவரத்தில் இந்தியாவில் அதிக தொழிற்சாலை நிறுவல்களைக்கொண்ட மாநிலம் தமிழ்நாடு எனவும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2. ஐந்து பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழ்நாடு அரசு.
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து பேருக்கு காந்தியடிகள் காவலர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ஒவ்வொருவருக்கும் `40 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.02) கிராமசபைக்கூட்டங்கள்.
காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் (அக்.2) நடைபெறவுள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. கிராமசபைக் கூட்ட நிகழ்வுகளை, ‘நம்ம கிராம சபை’ என்னும் திறன்பேசி செயலிமூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
4. பேறுகால உயிரிழப்புகளைத் தடுக்க சிறப்பு செயலாக்கக் குழு: அரசாணை வெளியீடு.
தமிழ்நாட்டில் பேறுகால உயிரிழப்பு விகிதம் 1 லட்சம் பிரசவங்களுக்கு 45.5 என்ற விகிதத்தில் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. தேசிய நலவாழ்வு குழும இயக்குநரகத்தின் பரிந்துரையின்படி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட பதினெட்டு பேர்கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. இதேபோன்று மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் 10 பேர்கொண்ட குழு அமைக்கப்படும்.
5. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பில் தமிழ்நாடு முதலிடம்.
2022-23 நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது NITI ஆயோக் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், மதிப்புக் கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன உருவாக்கம் போன்றவற்றின் அடிப்படையில், தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆய்வு அறிக்கையில் 2022-23ஆம் ஆண்டின் விலை நிலவரம் அடிப்படையில், மொத்த மதிப்பு கூட்டுதல் (GVA) அதற்கு முந்தைய (2021-22) ஆண்டைவிட 7.3% அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில் உள்ளீட்டுப் பொருள்களின் அளவு 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், உற்பத்திப் பொருளின் அளவு 21.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மதிப்புக்கூட்டுதலில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது. அடுத்து இரண்டாவது, மூன்றாவது இடத்தில் முறையே குஜராத், தமிழ்நாடு உள்ளன. அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு (15%) முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்கள் முறையே மகாராஷ்டிரம் (12.8%), குஜராத் (12.6%), உத்தர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
6. இராணுவ மருத்துவப்பிரிவில் முதல் பெண் இயக்குநர் பொறுப்பேற்பு.
இந்திய இராணுவ மருத்துவச் சேவைகளின் முதல் பெண் இயக்குநராக கடற்படை துணைத்தளபதியும் மருத்துவருமான ஆர்த்தி சரின் பொறுப்பேற்றுக்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதிப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தால் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய பணிக் குழுவில் ஆர்த்தி சரின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1. NAMASTE Scheme is related to which group of workers?
A. Agricultural workers
B. Sanitation workers
C. Health workers
D. Construction workers
- The Indian government launched the NAMASTE programme to support sewer and septic tank workers (SSWs) and mechanize sewer cleaning. Over 38,000 workers have been profiled, with 68.9% from Scheduled Castes, 14.7% from Other Backward Classes, and 8.3% from Scheduled Tribes. The programme aims to prevent deaths caused by hazardous manual cleaning, with 377 deaths recorded between 2019 and 2023.
2. Recently, which state secured the top rank in the Urban Governance Index (UGI)?
A. Tamil Nadu
B. Kerala
C. Karnataka
D. Maharashtra
- Kerala has achieved the top rank in the Urban Governance Index (UGI), a study by the Praja Foundation assessing cities in India. Scoring 59.31 out of 100, it excelled in fiscal empowerment and local governance. Odisha followed in second place with a score of 55.10, highlighting the competitive nature of urban governance across India.
3. What is the name of mission recently launched by Ministry of Ports, Shipping, and Waterways to promote cruise tourism in India?
A. Kalash mission
B. Cruise Bharat Mission
C. Samudrayaan mission
D. None of the Above
- Union Minister Sarabanand Sonowal launched the Cruise Bharat Mission on 30 September 2024 in Mumbai, Maharashtra. The mission aims to make India a global hub for cruise tourism and top cruise destination. The Union Ministry of Ports, Shipping, and Waterways will implement the mission with support from various regulatory agencies. The mission will run from 1 October 2024 to 31 March 2029 in three phases.
4. ‘Mount Erebus’ is located in which continent?
A. Australia
B. Europe
C. Antarctica
D. Africa
- Mount Erebus, Antarctica’s second-largest volcano, is unexpectedly spewing gold dust, surprising scientists. Typically, the volcano releases steam, gases, and rocks, but now tiny crystallized gold particles are also emerging. These particles have been found 621 miles from the volcano, valued at around $6,000 (Rs 5 lakh). While other volcanoes produce gold in gas or liquid form, Mount Erebus uniquely releases solid gold particles carried by the wind.
5. Exercise KAZIND is conducted between India and which country?
A. Egypt
B. Australia
C. Kazakhstan
D. Tajikistan
- The 8th edition of Exercise KAZIND takes place from 30th September to 13th October 2024 in Auli, Uttarakhand. It is an annual joint military exercise between India and Kazakhstan. The Indian side will be represented by 120 personnel from the KUMAON Regiment and the Indian Air Force. Kazakhstan’s contingent includes personnel from Land Forces and Airborne Assault Troopers. The exercise aims to enhance joint military capabilities for counterterrorism operations in semi-urban and mountainous terrain.
6. What is the name of the Indian-origin armoured vehicle being assembled in Morocco?
A. BMP-2
B. Wheeled Armoured Platform (WhAP)
C. Stryker
D. Sarvatra
- The Wheeled Armoured Platform (WhAP) 8×8 is an Indian-origin vehicle undergoing final assembly in Casablanca, Morocco, as part of a strategic partnership between Tata Advanced Systems Limited and the Moroccan Royal Armed Forces. This light armoured vehicle can transport troops and perform various roles, including surveillance.
7. What is the projected fiscal deficit for India in 2024-25 as a percentage of GDP?
A. 5.6%
B. 4.9%
C. 6.5%
D. 3.8%
- The fiscal deficit for India in the 2024-25 financial year is projected to be 4.9% of the GDP, a reduction from 5.6% in 2023-24. The government aims to contain the fiscal deficit at ₹16,13,312 crore, emphasizing the gap between revenue and expenditure. The fiscal deficit is crucial for understanding the government’s borrowing needs and overall economic health, as it reflects the difference between total expenditure and total revenue.
8. When is the ‘International Day of Older Persons’ observed every year?
A. October 1
B. October 2
C. October 3
D. October 4
- The 34th International Day of Older Persons is observed on 1 October 2024. The day highlights the challenges and opportunities of population ageing. It recognizes the contributions and wisdom of older persons. The UN defines older persons as 65 years or older; in India, it’s 60 years or older.
- The day was first observed on 1 October 1991, after a 1990 UN resolution. The 2024 theme is “Ageing with Dignity: The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide.”
9. Which institution related to Yakshagana was recently accredited by the UNESCO Convention on Intangible Cultural Heritage?
A. Keremane Idagunji Mahaganapati Yakshagana Mandali
B. Srimaya Yakshagana Kalakendra
C. Yakshagana Gurukula
D. Yakshagana Research Centre
- UNESCO has accredited the Keremane Idagunji Mahaganapati Yakshagana Mandali, founded in 1934 by Late Keremane Shivarama Hegde. The objective is to educate future generations and safeguard Yakshagana from decline, ensuring its relevance and vitality. Yakshagana is a traditional theatre form that originated between the 11th and 16th centuries in coastal Karnataka and parts of Kerala. It combines dance, music, dialogues, colorful costumes, and heavy make-up, inspired by the Vaishnava Bhakti movement.
10. Recently, who received the ‘Dadasaheb Phalke Lifetime Achievement Award’ for the year 2022?
A. Rajinikanth
B. Mithun Chakraborty
C. Kamalhassan
D. Sathyaraj
- Legendary actor Mithun Chakraborty receives the Dadasaheb Phalke Lifetime Achievement Award for 2022, India’s highest cinema honor. Presented annually at the National Film Awards by the Directorate of Film Festivals, it recognizes outstanding contributions to Indian cinema. The award includes a golden lotus, a ₹10 lakh cash prize, and a shawl. Established by the Government of India to honor Dadasaheb Phalke, the father of Indian cinema, the award was first given in 1969 to actress Devika Rani.
11. Recently, which ministry has launched the “Jal hi AMRIT” program to incentivise states/UTs to promote efficient reuse of water?
A. Ministry of Housing and Urban Affairs
B. Ministry of Jal Shakti
C. Ministry of Urban Development
D. Ministry of Environment, Forest and Climate change
- The Ministry of Housing and Urban Affairs (MoHUA) launched the “Jal Hi AMRIT” program under AMRUT 2.0 to enhance the quality of treated wastewater and promote its recycling in urban areas. The program aims to incentivize states and union territories to manage sewage treatment plants (STPs) for producing good quality recyclable water. It introduces a Clean Water Credit System to foster competition among cities and develop their capacities for effective water management.
12. What is the name of world’s first government-funded Multimodal Large Language Model, recently launched by India?
A. Antriksh
B. GTS-5
C. BharatGen
D. IndiaPT5
- BharatGen was inaugurated by Union Minister Dr. Jitendra Singh in New Delhi as a generative AI aimed at improving public service delivery and citizen engagement. It is the world’s first government-funded multimodal large language model, focusing on developing efficient and inclusive AI in Indian languages. The project will take two years to complete and will benefit government, private, educational, and research institutions.