TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 3rd and 4th August 2024

1. “ஜுமுர்” என்பது எந்த மாநிலத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய நடனமாகும்?

அ. நாகாலாந்து

ஆ. சிக்கிம்

இ. அஸ்ஸாம்

ஈ. மணிப்பூர்

  • அஸ்ஸாம் மாநில அரசாங்கம் 8,000 தேயிலை பழங்குடி கலைஞர்களைக்கொண்டு பிரமாண்டமான ஜுமூர் நடன நிகழ்ச்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஜுமுர் என்பது அஸ்ஸாமின் தேயிலை பழங்குடியினரின் பாரம்பரிய நடனமாகும்; இது இலையுதிர் காலத்தில் ஆடப்படுகிறது. நடனத்தில் பங்கேற்கும் ஆண்கள் மடல் மேளம், குழல் மற்றும் தால்போன்ற இசைக்கருவிகளை வாசிக்க, அதற்கேற்ப பெண்கள் வயல்களில் அல்லது மரங்களுக்கு அடியில் நடனமாடுகிறார்கள். இந்த நடனம் அன்றாட வாழ்க்கை, மகிழ்ச்சி, துக்கம் மற்றும் அபிலாஷைகளை சித்தரிக்கிறது.

2. அண்மையில், 6-8ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்க்கு பையில்லா நாட்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

இ. கல்வி அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • தேசிய கல்விக்கொள்கை-2020 பரிந்துரைத்தபடி, 6-8ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்க்கு பையில்லா நாட்களுக்கான வழிகாட்டுதல்களை நடுவண் கல்வியமைச்சகம் வெளியிட்டது. இதில் 10 நாட்களுக்கு மாணாக்கர் உள்ளூர் தொழில் வல்லுநர்களான தச்சர்கள் மற்றும் பிற கலைஞர்களிடம் பயிற்சி பெறுவார்கள். கண்காணிப்பு அடிப்படையிலான கற்றலை மேம்படுத்துதல், சமூகம் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதைப் புரிந்துகொள்வது மற்றும் சந்தைக்குச் சென்று பார்வையிடுதல், தொண்டுகள் மற்றும் அறிக்கை எழுதுதல்போன்ற செயல்பாடுகளின்மூலம் உழைப்பின் கண்ணியத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

3. தேஜாஸ் என்ற இலகுரக போர் விமானத்தை உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. BHEL

ஈ. JAXA

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் நிறுவனத்திடமிருந்து தேஜாஸ் இலகுரக போர் விமானங்களைப் பெறுவதில் இந்திய விமானப்படை தாமதங்களை எதிர்கொள்கிறது; இது அதன் தயார்நிலை மற்றும் திறன்களைப் பாதிக்கிறது. 4.5ஆம் தலைமுறை ஓரிருக்கை மீயொலி பலபாத்திர போர் விமானமான தேஜாஸ், DRDOஇன் ஏரோநாட்டிகல் மேம்பாட்டு முகமை மற்றும் HAL ஆகியவற்றால் உருவாக்கப்பட்டதாகும். பழைய MiG-21 மற்றும் Su-7 ஜெட் விமானங்களுக்கு மாற்றாக, 2016இல் இது இந்திய வான்படையில் இணைக்கப்பட்டது.

4. இந்தியாவின் நிலச்சரிவு வரைபட ஏட்டைத் தயாரித்த அமைப்பு / அமைச்சகம் எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. NDRF

ஈ. புவி அறிவியல் அமைச்சகம்

  • கேரள மாநிலத்தின் வயநாடு, கிட்டத்தட்ட 200 பேரின் மரணத்திற்குக் காரணமான பயங்கர நிலச்சரிவினால் தாக்குண்டது. இந்நிலச்சரிவு, ISROஆல் 2023இல் வெளியிடப்பட்ட இந்தியாவின் நிலச்சரிவு வரைபட ஏட்டில் 13ஆம் இடத்தைப் பிடித்தது. ISROஇன் தேசிய தொலையுணரி மையத்தால் தயாரிக்கப்பட்ட இது, 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 147 மாவட்டங்களின் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் சேதங்களை விவரிக்கிறது. இது 1998 முதல் 2022 வரையிலான 80,000 நிலச்சரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

5. அண்மையில், எந்த நகரத்தில் வைத்து ‘சுவிதா மென்பொருள் பதிப்பு 1.0’ஐ இந்தியக் கடலோரக் காவல்படை அறிமுகப்படுத்தியது?

அ. ஜெய்சால்மர்

. விசாகப்பட்டினம்

இ. கொச்சி

ஈ. மும்பை

  • இந்தியக் கடலோரக் காவல்படையானது விசாகப்பட்டினத்தில் நடந்த முதல், ‘வருடாந்திர செயல்பாட்டு கடற்பயிற்சி மாநாட்டில்’ ‘சுவிதா மென்பொருள் பதிப்பு 1.0’ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருள் ICG தளங்களில் பயிற்சி நெறிமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துணை தலைமை இயக்குநர் அனுபம் இராய் இதன் சிறப்பையும், தகவமைப்புத் திறனையும் குறித்துப் பேசினார். மூத்த அதிகாரிகள், கடல்சார் பாதுகாப்பிற்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகள் குறித்து விவாதித்தனர்.

6. கீழ்க்காணும் எந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கு லெகெம்பி மருந்து (Leqembi) பயன்படுகிறது?

அ. டெங்கு

ஆ. முதுமறதி

இ. காசநோய்

ஈ. இரத்தப்புற்றுநோய்

  • நினைவுக் குறைபாட்டு நோயான அல்சைமருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும், ‘லெகெம்பி’ மூன்று ஆண்டுகளில் நோயின் வளர்ச்சியைக் குறைப்பதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. லெகெம்பி (Leqembi) என்பது ஒரு IV ஆன்டிபாடி சிகிச்சையாகும்; இது மூளையிலுள்ள பீட்டா-அமிலாய்டை நீக்குகிறது. அல்சைமர் என்பது மிகவும் பொதுவான ஒரு முதுமறதி நோயாகும். இது லேசான நினைவாற்றல் இழப்புடன் தொடங்கி கடுமையான தகவல் தொடர்பு மற்றும் துலங்கல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பொதுவாக அறுபது வயதிற்குப்பிறகு தோன்றும் இந்த அறிகுறிகள் வயதுக்கு ஏற்ப மாறுபடும்.

7. அண்மையில், இந்தியாவின் இரண்டாவது பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகஸ்தரான நாடு எது?

அ. ஈராக்

ஆ. ஈரான்

இ. ஆஸ்திரேலியா

ஈ. அமெரிக்கா

  • ஐக்கிய அரபு அமீரகத்தைப் (UAE) பின்னுக்குத்தள்ளி, இந்தியாவின் இரண்டாவது பெரிய LNG விநியோகஸ்தராக அமெரிக்கா ஆனது. முதலிடத்தில் கத்தார் உள்ளது. பசுமை ஆற்றலாக LNG வளர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், திரவமாக்கலில் மேற்கொள்ளப்பட்ட கடந்தகால முதலீடுகள் காரணமாக அமெரிக்கா கத்தார் & ஆஸ்திரேலியாவை விஞ்சி, உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. குறைந்த LNG விலை மற்றும் நன்னம்பிக்கை முனை வழியாக இந்தியாவுடன் அமெரிக்கா வணிகம் மேற்கொள்வதே இந்த விநியோகம் அதிகரிப்புக்குக் காரணம்.

8. அண்மையில், மக்களவையில், ‘பாரதிய வாயுயான் விதேயக் – 2024’ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. மின்சார அமைச்சகம்

  • மத்திய உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சரால் மக்களவையில், ‘பாரதிய வாயுயான் விதேயக் – 2024’ அறிமுகப்படுத்தப்பட்டது. வானூர்தி விபத்துக்கள் மற்றும் நிகழ்வுகளை விசாரிப்பதற்கும், வானூர்தி வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு, பயன்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் விதிகளை அமைக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளிப்பதை இந்த மசோதா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. 1934ஆம் ஆண்டின் வானூர்தி சட்டம் பலமுறை திருத்தப்பட்டு, குழப்ப வடிவில் தற்போது உள்ளது. இந்த மசோதா இந்த விதிமுறைகளை நெறிப்படுத்தவும், தெளிவுபடுத்தவும் எண்ணுகிறது.

9. 2024 – உலக நுரையீரல் புற்றுநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care

ஆ. A breath of prevention is better than expectation of long-term survival

இ. Care for your Lungs

ஈ. Measures to prevent lung cancer

  • நுரையீரல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவும் அதன் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும் மற்றும் அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வி கற்பிக்கவுமாக உலக நுரையீரல் புற்றுநோய் நாளானது ஆண்டுதிரும் ஆக.1 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் முன்கூட்டியே கண்டறிதல், சிறந்த சிகிச்சை தேர்வுகள் மற்றும் அதிக ஆராய்ச்சி நிதி ஆகியவற்றை பரிந்துரைக்கிறது. “Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

10. அண்மையில், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டுப் போட்டியில், ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்?

அ. துப்பாக்கிச்சுடுதல்

ஆ. குத்துச்சண்டை

இ. மல்யுத்தம்

ஈ. பூப்பந்து

  • 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கில், ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார். 2008இல் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கம், 2012இல் ககன் நரங் வென்ற வெண்கலம் ஆகியவற்றைத் தொடர்ந்து ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா பெற்ற மூன்றாவது ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும். சீனாவின் லியு யுகுன் தங்கமும், உக்ரைனின் செர்ஹி குலிஷ் வெள்ளியும் வென்றனர். பாரீஸ் நகரில் உள்ள சாட்யூரோக்ஸில் உள்ள தேசிய துப்பாக்கிச்சுடுதல் மையத்தில் இந்தப்போட்டி நடைபெற்றது.

11. அண்மையில், தமிழ்நாட்டின் எந்தச் சங்ககால தொல்லியல் தளத்தில், சுடுமண்ணாலான ஓர் உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் அமைப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது?

அ. வெம்பக்கோட்டை

ஆ. மாங்குளம்

இ. கீழடி

ஈ. கொடுமணல்

  • தமிழ்நாட்டின் சங்ககால தொல்லியல் தளமான கீழடியில் மேற்கொள்ளப்பட்ட பத்தாம்கட்ட அகழாய்வின் போது தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுடுமண்ணாலான ஓர் உருளை வடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் அமைப்பைக் கண்டுபிடித்தனர். இந்தக் கண்டுபிடிப்பானது 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மேம்பட்ட தண்ணீர் மேலாண்மை நடைமுறைகளை எடுத்தியம்புகிறது. மதுரைக்கருகில் அமைந்துள்ள கீழடியிலிருந்து இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சங்ககாலம் நினைத்ததைவிட முன்னதாகவே பொஆமு 600இல் தொடங்கியது புலனானது. 3,200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் உமிகள் மற்றும் ஆரம்பகால இரும்பு தொழில்நுட்பத்தின் சான்றுகள் ஆகியவையும் கண்டுபிடிப்புகளில் அடங்கும்.

12. 2024 – ‘பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குறியீட்டில்’ இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 36ஆவது

ஆ. 37ஆவது

இ. 38ஆவது

ஈ. 39ஆவது

  • உலகப் பொருளாதார மன்றத்தின் 2024-பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா 39ஆம் இடத்தில் உள்ளது. கடந்த 2021இல் 38ஆம் இடத்தில் இந்தியா இருந்தது. பயண முன்னுரிமை, பாதுகாப்பு மற்றும் நலம் ஆகியவற்றில் நாட்டின் மதிப்பெண்கள் மேம்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில், இந்தியா 14.3 மில்லியன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டிருந்தது; அது உலக சந்தையில் 1.47% மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் 15.66% ஆகும். ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் பயண கண்காட்சிகளில் பங்கேற்பதன்மூலம் சுற்றுலா அமைச்சகம் உள்நாட்டிலும் பன்னாட்டளவிலும் இந்தியாவை மேம்படுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. உலக சுகாதார அமைப்பின் தர அளவைவிட இந்தியாவில் கூடுதல் மருத்துவர்கள்: நடுவணரசு.

இந்தியாவில் 836 மக்களுக்கு ஒரு மருத்துவர் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் 1,000 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்னும் தர அளவைவிட இது சிறந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் 56,825 சகிமீ சூழலியல் பாதுகாப்புப்பகுதி: 6ஆவது வரைவு அறிக்கை வெளியீடு.

குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரை நீண்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் 56,825 சதுர கிமீ பரப்பை சூழலியல் பாதுகாப்புப்பகுதியாக அறிவிப்பது தொடர்பாக 6ஆவது வரைவறிக்கையை நடுவணரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழநாட்டில் 6,914 சகிமீ பரப்பை சூழலியல் பாதுகாப்புப்பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

குடியிருப்புகளுக்கு கட்டுப்பாடு இல்லை: பெரிய அளவிலான கட்டுமானங்கள் மற்றும் நகர விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதிக்கப்படும். அதேநேரம், ஏற்கெனவே உள்ள கட்டடங்களின் பழுதுபார்ப்பு – புதுப்பிப்புப் பணிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் பாதுகாப்பு தொடர்பாக கடந்த 2013இல் விண்வெளி ஆய்வாளர் கே கஸ்தூரிரங்கன் தலைமையில் உயர்நிலை பணிக்குழுவை நடுவணரசு அமைத்தது. இக்குழுவானது, மேற்குத்தொடர்ச்சி மலையின் 37% பரப்பை அதாவது 59,940 சதுர கிமீ பரப்பை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அடையாளம் கண்டது.

3. 03-08-2024: ‘தீரன்’ சின்னமலை நினைவு நாள்.

1. “Jhumur” is a traditional dance performed in which state?

A. Nagaland

B. Sikkim

C. Assam

D. Manipur

  • The Assam government is planning a grand Jhumur dance performance with 8,000 tea tribe artists. Jhumur is a traditional dance of Assam’s tea tribes, performed during autumn. It features young girls dancing in fields or under trees, with male members playing instruments like the Madal drum, flute, and Taals. The dance depicts daily life, joys, sorrows, and aspirations.

2. Recently, which ministry has introduced guidelines for bagless days for students in classes 6 to 8?

A. Ministry of Home Affairs

B. Ministry of Women and Child Development

C. Ministry of Education

D. Ministry of Power

  • The Union Ministry of Education announced guidelines for bagless days for students in Classes 6 to 8, as recommended by the National Education Policy 2020. This involves a 10-day period where students intern with local vocational experts like carpenters and artists. The objectives are to enhance observation-based learning, understand community interdependence, and promote dignity of labor through activities like market visits, charity work, and report writing.

3. Tejas Light Combat Aircraft is developed by which organization?

A. DRDO

B. ISRO

C. BHEL

D. JAXA

  • The Indian Air Force faces delays in receiving Tejas light combat aircraft from Hindustan Aeronautics Limited, affecting its readiness and capabilities. Tejas, a 4.5-generation single-seat supersonic multirole fighter, was developed by DRDO’s Aeronautical Development Agency and HAL. Intended to replace older MiG-21 and Su-7 jets, it joined the IAF in 2016.

4. Landslide Atlas of India is prepared by which organization / ministry?

A. DRDO

B. ISRO

C. NDRF

D. Ministry of Earth Sciences

  • Wayanad, Kerala, struck by a deadly landslide killing nearly 200 people, ranked 13th in ISRO’s 2023 Landslide Atlas of India. Prepared by National Remote Sensing Centre (NRSC) of ISRO, the atlas details landslide occurrences and damage in 147 districts across 17 states and two Union Territories. It includes 80,000 landslides mapped from 1998 to 2022.

5. Recently, Indian Coast Guard (ICG) launched ‘Suvidha Software Version 1.0’ in which city?

A. Jaisalmer

B. Visakhapatnam

C. Kochi

D. Mumbai

  • The Indian Coast Guard (ICG) launched ‘Suvidha Software Version 1.0’ at its first ‘Annual Operational Sea Training Conference’ in Visakhapatnam. This software aims to improve training protocols across ICG platforms. Deputy Director General Anupam Rai emphasized excellence and adaptability. Senior officers discussed best practices and strategies for maritime security.

6. Leqembi Drug is used to treat which disease?

A. Dengue

B. Alzheimer

C. Tuberculosis

D. Blood Cancer

  • A study found that Alzheimer’s drug Leqembi slowed disease progression over three years. Leqembi is an IV antibody therapy that removes beta-amyloid from the brain. Alzheimer’s is the most common dementia, starting with mild memory loss and potentially leading to severe communication and response issues. Symptoms typically appear after age 60, with the risk increasing with age.

7. Recently, which country has become India’s second-largest Liquefied Natural Gas (LNG) supplier?

A. Iraq

B. Iran

C. Australia

D. US

  • The US became India’s second-largest LNG supplier, overtaking the UAE, but Qatar still the largest supplier. LNG is growing as a green energy substitute. In 2023, the US also became the world’s top LNG exporter, surpassing Qatar and Australia due to past investments in liquefaction. Increased US supply is due to lower LNG prices and closer proximity to India via the Cape of Good Hope.

8. Which ministry recently introduced ‘Bhartiya Vayuyan Vidheyak 2024’ in Lok Sabha?

A. Ministry of Home Affairs

B. Ministry of Civil Aviation

C. Ministry of Defence

D. Ministry of Power

  • The Bharatiya Vayuyan Vidheyak 2024 was introduced in the Lok Sabha by the Union Civil Aviation Minister. This bill aims to empower the government to set rules for investigating air accidents and incidents, and regulating aircraft design, manufacture, maintenance, use, and safety. The Aircraft Act of 1934 has been amended many times, creating confusion. This bill seeks to streamline and clarify these regulations.

9. What is the theme of ‘World Lung Cancer Day 2024’?

A. Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care

B. A breath of prevention is better than expectation of long-term survival

C. Care for your Lungs

D. Measures to prevent lung cancer

  • World Lung Cancer Day, observed on August 1st, raises awareness about lung cancer, highlighting its impact and educating the public on risks, symptoms, and treatments. The day advocates for early detection, better treatment options, and more research funding. This year’s theme is “Close the Care Gap: Everyone Deserves Access to Cancer Care”.

10. Swapnil Kusale recently won a bronze medal in which sports event at Paris Olympics 2024?

A. Shooting

B. Boxing

C. Wrestling

D. Badminton

  • At the 2024 Paris Olympics, Swapnil Kusale won a bronze medal in the men’s 50m rifle 3 Positions event. This is India’s third Olympic medal in rifle shooting, following Abhinav Bindra’s gold in 2008 and Gagan Narang’s bronze in 2012. Liu Yukun of China won gold, and Ukraine’s Serhiy Kulish took silver. The competition was held at the National Shooting Center in Châteauroux, Paris.

11. Recently, archaeologists have unearthed a terracotta pipeline at which Sangam Era site in Tamil Nadu?

A. Vembakottai

B. Mankulam

C. Keeladi

D. Kodumanal

  • Archaeologists have discovered a terracotta pipeline during the 10th phase of excavation at Keeladi, a Sangam Era site in Tamil Nadu. This find highlights advanced water management practices from over 2,600 years ago.
  • Keeladi, located near Madurai, has revealed over 20,000 artifacts, suggesting the Sangam Era began around 600 BCE, earlier than previously thought. Additional discoveries include rice husks from 3,200 years ago and evidence of early iron technology.

12. What is rank of India in ‘Travel & Tourism Development Index 2024’?

A. 36th

B. 37th

C. 38th

D. 39th

  • India ranks 39th in the 2024 Travel and Tourism Development Index by the World Economic Forum, up from an adjusted 38th in 2021. The country’s scores improved in travel prioritization, safety, and health. In 2022, India had 14.3 million international tourists, 1.47% of the global market, and 15.66% in Asia-Pacific. The Ministry of Tourism promotes India domestically and internationally through integrated marketing and participation in travel fairs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!