Tnpsc Current Affairs in Tamil & English – 31st July 2024
1. அண்மையில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற NITI ஆயோக்கின் இந்த ஆண்டு ஆளும் குழுக் கூட்டத்தின் கருப்பொருள் என்ன?
அ. விக்சித் பாரத்@2047
ஆ. விக்சித் சமாஜ்@2056
இ. டிஜிட்டல் இந்தியா@2034
ஈ. இந்தியாவில் தயாரிப்போம்
- புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின்கண் அமைந்துள்ள கலாச்சார மையத்தில் NITI ஆயோகின் ஒன்பதாவது ஆளும் குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. வளர்ச்சியடைந்த பாரதம்@2047 (விக்சித் பாரத்@2047) என்ற கருப்பொருள், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறது.
- வளர்ச்சியடைந்த பாரதம்@2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து ஆளும் குழுக்கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை & ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2047 ஆம் ஆண்டிற்குள் $30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர்கள், நடுவண் அமைச்சர்கள் மற்றும் NITI ஆயோக் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
2. GROWTH-India தொலைநோக்கியின் முதன்மை நோக்கம் என்ன?
அ. சூரியனை ஆராய்வது
ஆ. பூமிக்கருகிலுள்ள சிறுகோள்கள் உட்பட வெடிக்கும் நிலையற்ற மற்றும்
மாறக்கூடிய மூலங்களைக் கண்காணிப்பது
இ. வானிலை முறைகளைக் கண்காணிப்பது
ஈ. செயற்கைக்கோள் இயக்கங்களைக் கண்காணிப்பது
- GROWTH-India தொலைநோக்கி அண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க கூராய்வை மேற்கொண்டது. 116 மீ அளவுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும்போது அதை GROWTH-India படமெடுத்தது. இந்தியாவின் முதல் முழு ரோபோடிக் ஆப்டிகல் ஆராய்ச்சி தொலைநோக்கியான இதன் முதன்மை பணியானது, பூமிக்கு மிக அருகில் உள்ள சிறுகோள்கள் உட்பட, வெடிக்கும் நிலையற்ற மற்றும் மாறக்கூடிய மூலங்களைக் கூர் நோக்குவதாகும்.
- கடல் மட்டத்திலிருந்து 4500 மீ உயரத்தில் லடாக்கின் ஹன்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள இது, உலக அளவில் மிக உயரத்தில் அமைந்துள்ள கண்காணிப்புத் தளங்களில் ஒன்றாகும். இந்திய வானியற்பியல் நிறுவனம் மற்றும் IIT பாம்பே ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மைமூலம் DST மற்றும் இந்தோ-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இது, பன்னாட்டு வளர்ச்சி வலையமைப்பின் ஒருபகுதியாகும். இது வானியல் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணிக்கிறது.
3. அண்மையில், ஒலிம்பிக்கின் 33ஆவது பதிப்பு தொடங்கப்பட்ட இடம் எது?
அ. லண்டன்
ஆ. பாரிஸ்
இ. பெய்ஜிங்
ஈ. சென்னை
- 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கின். இதில் 32 வெவ்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. 1896ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.
- இந்த விளையாட்டுப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். ஐந்து ஒலிம்பிக் வளையங்கள் ஒலிம்பிக் இயக்கம் நிலவும், ‘உலகின் ஐந்து பகுதிகளை’ அடையாளப்படுத்துகின்றன. ‘Citius-Altius-Fortius’ என்ற ஒலிம்பிக் வாசகம் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் ‘Faster-Higher-Stronger’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
4. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக கல்லீரல் அழற்சி நோய் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 28 ஜூலை
ஆ. 27 ஜூலை
இ. 25 ஜூலை
ஈ. 24 ஜூலை
- உலக கல்லீரல் அழற்சி நோய் நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.28 அன்று அனுசரிக்கப்படுகிறது. கடும் கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் கல்லீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. உலகளவில் கல்லீரல் அழற்சிதொடர்பான நோய்களால் லட்சக் கணக்கானோர் மரணிக்கின்றனர். இது இந்நோய்க்கானச் சிறந்த தடுப்பு, நோயறிதல் முறை மற்றும் சிகிச்சையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
- கல்லீரல் அழற்சி பொதுவாக வைரஸ் நோய்த்தொற்றுகளால் ஏற்படுகிறது; ஆனால் தன்னுடல் தாக்க நிலைமைகள், மருந்துகள், நச்சுகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றாலும் இது ஏற்படலாம். நடப்பு 2024இல் வரும் உலக கல்லீரல் அழற்சி நோய் நாளுக்கானக் கருப்பொருள், “It’s Time for Action” என்பதாகும்.
5. இந்தியா, எந்த ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது?
அ. 2025
ஆ. 2030
இ. 2035
ஈ. 2040
- 2030ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரியை வாயுவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. நிலக்கரி வாயுவாக்கம் என்பது நிலக்கரியை கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜனாக மாற்றி, சின்காஸ், டைமிதில் ஈதர், அம்மோனியம் நைட்ரேட் மற்றும் மெத்தனால் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வெப்ப-வேதியியல் செயல்முறையாகும். சின்காஸ் LPG மற்றும் மின்சார உற்பத்திக்கு மாற்றாக இருக்கும், அதே சமயம் டைமெத்தில் ஈதர் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக உள்ளது; மேலும் அம்மோனியம் நைட்ரேட்டை வெடிபொருட்களுக்குப் பயன்படுத்தலாம். இந்த முன்னெடுப்பு இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பது, அந்நியச் செலாவணியைப் பாதுகாப்பது மற்றும் இந்தியாவின் எண்ணெய், எரிவாயு, உரம் மற்றும் பெட்ரோ-கெமிக்கல் துறைகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியா தனது எண்ணெய் தேவையில் 83%, மெத்தனால் தேவையில் 90% மற்றும் அம்மோனியா தேவையில் 13-15%ஐ இறக்குமதி செய்கிறது.
6. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது?
அ. சேலம்
ஆ. ஈரோடு
இ. தருமபுரி
ஈ. கரூர்
- நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு அருகில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்; இது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது; அங்கு காவேரி ஆறு சமவெளியில் நுழைகிறது.
- இது 1700 மீட்டர் நீளம், அதிகபட்ச அளவு 120 அடி மற்றும் 93.4 டிஎம்சி அடி கொள்ளளவு கொண்ட கற்கட்டமைப்பு ஈர்ப்பணையாகும்; இது ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இந்த அணை மேட்டூர் நீர்மின் மற்றும் அனல் மின் நிலையத்திற்கு துணைபுரிந்து 32 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதன்மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 271,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
7. ‘டெல் உம் அமர்’ அமைந்துள்ள பகுதி எது?
அ. லண்டன்
ஆ. மாஸ்கோ
இ. பாலஸ்தீனம்
ஈ. ஈரான்
- உலகப் பாரம்பரியக்குழு அண்மையில் டெல் உம் அமெரின் பாலஸ்தீன தளத்தை UNESCOஇன் உலகப் பாரம்பரிய தலப் பட்டியல் மற்றும் ஆபத்திலுள்ள உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. காசா நகரத்துக்கு தெற்கே கடலோர குன்றுகளில் அமைந்துள்ள டெல் உம் அமெர், புனித ஹிலாரிய மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது; இது நான்காம் நூற்றாண்டில் ஹிலாரியன் தி கிரேட் என்பவரால் நிறுவப்பட்டது. புனித பூமியின் முதல் துறவற சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற இது, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான முக்கிய வர்த்தக வழிகளில் அமைந்துள்ளது. 1946இல் நிறுவப்பட்ட UNESCO என்பது ஐநா சிறப்பு நிறுவனமாகும். அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தில் பன்னாட்டு ஒத்துழைப்பை வளர்ப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. ஒவ்வோர் ஆண்டும், ‘பன்னாட்டு புலிகள் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 27 ஜூலை
ஆ. 28 ஜூலை
இ. 29 ஜூலை
ஈ. 30 ஜூலை
- கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.29ஆம் தேதியன்று பன்னாட்டு புலிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சட்டத்துக்குப்புறம்பான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்புகளால் புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை இந்நாள் ஏற்படுத்துகிறது.
- கடந்த 2010ஆம் ஆண்டு ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த பன்னாட்டு உச்சிமாநாட்டிலிருந்து இந்த நாள் உருவானது; இதில் இந்தியா உட்பட புலிகள் வாழும் 13 நாடுகள் கலந்துகொண்டன. மனித ஆக்கிரமிப்பால் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாடு, 2022ஆம் ஆண்டிற்குள் காட்டுப்புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க TX2 இலக்கை அறிமுகப்படுத்தியது. நடப்பு 2024 இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Call for Action” என்பதாகும்.
9. அண்மையில், பாரிஸில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?
அ. வேதிகா சர்மா
ஆ. மனு பாக்கர்
இ. அஞ்சலி பகவத்
ஈ. மனிஷா கீர்
- 2024 ஜூலை.28 அன்று பாரிஸில் நடந்த 33வது கோடைகால ஒலிம்பிக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர், 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கிச்சுடும் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். 2024 ஜூலை.26 முதல் ஆகஸ்ட்.11 வரை நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் 32 விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன; இதில் இந்தியா 16 பிரிவுகளில் போட்டியிடுகிறது. எட்டுப் பெண்கள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் 22 வயதான பாக்கர் 221.7 புள்ளிகளைப்பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
- தென் கொரிய வீரர் ஓ யே ஜின் 243.2 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரிய வீரர் யேஜி கிம் 241.3 புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர்.
10. அண்மையில், தனது முதல் மகளிர் ஆசியக்கோப்பை பட்டத்தை வென்ற நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. இலங்கை
ஈ. வங்காளதேசம்
- நடப்புச்சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி, போட்டியை நடத்திய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, தங்களது முதல் மகளிர் கிரிக்கெட் ஆசியக்கோப்பையை வென்றது. இலங்கையின் தம்புள்ளையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு மைதானத்தில் 2024 ஜூலை.28 அன்று நடைபெற்ற 9ஆவது மகளிர் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில், இலங்கை அணி இந்தியாவை 8 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா (ஏழு முறை) மற்றும் வங்காளதேசம் (ஒரு முறை) ஆகியவற்றைத் தொடர்ந்து, மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பையை வென்ற மூன்றாவது அணியாக இலங்கை ஆனது.
11. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. இலவச மருத்துவச்சேவைகளை வழங்குவது
ஆ. பரவலாக்கப்பட்ட ஆய்வக அடிப்படையிலான தகவல் தொழில்நுட்பத்துடன்கூடிய
நோய்க் கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்துவது & பராமரிப்பது
இ. தடுப்பூசி திட்டங்களை ஊக்குவிப்பது
ஈ. அரிதான நோய்கள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி நடத்துவது
- கடந்த ஆண்டில் (2023) மட்டும் 1,862 நோய் பாதிப்புகள் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத்திட்டத்தில் (IDSP) பதிவாகியுள்ளன; கேரளாவில் அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2004 நவம்பரில் உலக வங்கி உதவியுடன் தொடங்கப்பட்ட IDSP, இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் பரவலாக்கப்பட்ட, மாநில அடிப்படையிலான ஒரு திட்டமாகும். அதன் நோக்கங்களில் நோய் போக்குகளைக் கண்காணித்தல் மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட விரைவு பதிலளிப்புக் குழுக்கள்மூலம் பாதிப்புகளுக்குப் பதிலளிப்பது ஆகியவை அடங்கும்.
- இத்திட்டம் மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது; தரவு மேலாண்மைக்கு ICT-ஐப் பயன்படுத்துகிறது மற்றும் பொதுச்சுகாதார ஆய்வகங்களை வலுப்படுத்துகிறது. தொற்று நோய்-பாதிப்பு நோய்கள்பற்றிய வாராந்திர தரவு சேகரிப்பு போக்குகளை அடையாளம் காண உதவுகிறது.
12. இ-உபஹார் என்ற இணையதளத்தை உருவாக்கிய அமைச்சகம் எது?
அ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- குடியரசுத்தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுப்பொருட்களை குடியரசுத்தலைவர் மாளிகை இ-உபஹார் என்ற இணையதளம்மூலம் ஏலம் விடும். இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2024 ஜூலை.25 அன்று தனது குடியரசுத்தலைவர் பதவியின் ஈராண்டுகளை நிறைவு செய்ததையொட்டி இந்த இணையதளத்தை தொடக்கி வைத்தார். இ-உபஹார் ஆனது தேசிய தகவலியல் மையம் (NIC), மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
- இந்த முன்னெடுப்பின் நோக்கம் குடிமக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உன்னத காரணத்தை ஆதரிப்பதும் ஆகும். ஏலத்தின்மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவ நன்கொடையாக வழங்கப்படும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள்: மானு பாக்கர் புதிய சாதனை.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் இரண்டாவது வெண்கலம் வென்றார். இதன்மூலம், விடுதலை இந்தியாவில் ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை மானு பாக்கர் படைத்திருக்கிறார். 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப் பதக்கச் சுற்றிலும், 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவிலும் மானு பாக்கர் வெண்கலம் வென்றுள்ளார். சரப்ஜோத் சிங் தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
2. சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை:
24 ம.நேரத்தில் 20 செமீக்கும் மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றால் சிவப்பு எச்சரிக்கையும், 11 செமீ முதல் 20 செமீ வரை கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் 6 செமீ முதல் 11 செமீ வரையிலான மழைக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றன.
1. What is the theme of this year’s Governing Council Meeting of NITI Aayog, recently chaired by Prime Minister Narendra Modi?
A. Viksit Bharat@2047
B. Viksit Samaj@2056
C. Digital India@2034
D. Make in India
- Prime Minister Narendra Modi chaired the 9th Governing Council Meeting of NITI Aayog at the Rashtrapati Bhavan Cultural Centre, New Delhi. The theme is Viksit Bharat@2047, focusing on making India a developed nation. Discussions will include the approach paper for the Vision Document on Viksit Bharat, fostering participative governance and collaboration between the Centre and States to enhance the quality of life. The meeting will address states’ roles in achieving this goal. With aspirations to become a $30 trillion economy by 2047, attendees include Chief Ministers, Union Ministers, and NITI Aayog members.
2. What is the primary mission of the GROWTH-India Telescope?
A. To study the sun
B. To observe explosive transients and variable sources, including near-Earth asteroids
C. To monitor weather patterns
D. To track satellite movements
- The GROWTH-India Telescope recently made a remarkable observation, capturing a 116-meter, building-sized asteroid during its closest approach to Earth. As India’s first fully robotic optical research telescope, its primary mission is to observe explosive transients and variable sources, including near-Earth asteroids.
- Located at the Indian Astronomical Observatory in Hanle, Ladakh, at 4500 meters above sea level, it is among the highest observatory sites globally. Constructed through a partnership between the Indian Institute of Astrophysics (IIA) and IIT Bombay, with support from DST and the Indo-US Science and Technology Forum, it is part of the international GROWTH network, providing continuous monitoring of celestial events.
3. Recently, where was the 33rd edition of the Olympics started?
A. London
B. Paris
C. Beijing
D. Chennai
- The 33rd edition of the Olympics began in Paris, featuring 32 different sports. The first-ever Olympics were held in Athens, Greece, in 1896, and the Games occur every four years.
- The five Olympic rings symbolize the ‘five parts of the world’ where the Olympic movement prevails. The Olympic motto, ‘Citius-Altius-Fortius,’ translates from Latin to ‘Faster-Higher-Stronger’ in English.
4. Which day is observed as ‘World Hepatitis Day’ every year?
A. 28 July
B. 27 July
C. 25 July
D. 24 July
- World Hepatitis Day, observed on 28 July, raises awareness about viral hepatitis, an inflammation of the liver that can lead to severe liver disease and cancer. Millions die from hepatitis-related illnesses globally, highlighting the need for better prevention, diagnosis, and treatment. Hepatitis is typically caused by viral infections but can also result from autoimmune conditions, medications, drugs, toxins, and alcohol. The theme for World Hepatitis Day 2024 is “It’s Time for Action”.
5. Recently, India has set a target to gasify 100 million tonnes of coal by which year?
A. 2025
B. 2030
C. 2035
D. 2040
- India has set a target to gasify 100 million tonnes of coal by 2030. Coal gasification is a thermo-chemical process that converts coal into carbon monoxide and hydrogen, producing syngas, dimethyl ether, ammonium nitrate, and methanol. Syngas can substitute for LPG and electricity generation, while dimethyl ether is an alternative for diesel engines, and ammonium nitrate can be used for explosives. This initiative aims to reduce reliance on imports, conserve foreign exchange, and support India’s oil, gas, fertilizer, and petrochemical sectors. Currently, India imports about 83% of its oil, over 90% of its methanol, and 13-15% of its ammonia.
6. Mettur Dam is located in which district of Tamil Nadu?
A. Salem
B. Erode
C. Dharmapuri
D. Karur
- A warning has been issued to residents in low-lying areas near the Mettur Dam due to increased inflow. The Mettur Dam, built in 1934, is one of India’s largest dams, located in Salem, Tamil Nadu, where the Kaveri River enters the plains. It is a masonry gravity dam with a length of 1700 meters, a maximum level of 120 feet, and a capacity of 93.4 tmc ft, creating the Stanley Reservoir.
- The dam supports the Mettur hydroelectric and thermal power plant, generating 32 MW. It irrigates 271,000 acres of farmland across Salem, Erode, Namakkal, Karur, Tiruchirappalli, and Thanjavur districts.
7. ‘Tell Umm Amer’ is located in which region?
A. London
B. Moscow
C. Palestine
D. Iran
- The World Heritage Committee (WHC) has recently included Palestine site of Tell Umm Amer in the UNESCO World Heritage Site List and the List of World Heritage in Danger. Located on coastal dunes south of Gaza City, Tell Umm Amer, also known as the Monastery of Saint Hilarion, was founded in the fourth century by Hilarion the Great. It represents the first monastic community in the Holy Land and was strategically positioned on key trade routes between Asia and Africa. UNESCO, a UN specialized agency established in 1946, aims to foster international collaboration in education, science, and culture to promote peace and sustainable development.
8. Which day is observed as ‘International Tiger Day’ every year?
A. 27 July
B. 28 July
C. 29 July
D. 30 July
- International Tiger Day, observed on 29 July since 2010, raises public awareness about threats faced by tigers due to illegal hunting and habitat destruction. The day originated from an international summit in St. Petersburg, Russia, in 2010, attended by 13 countries with significant tiger populations, including India. The summit aimed to address the dwindling tiger population caused by human encroachment and launched the TX2 goal to double the number of wild tigers by 2022. The 2024 theme, “Call for Action”.
9. Recently, who became the first Indian woman to win an Olympic medal in shooting with a bronze at Paris?
A. Vedika Sharma
B. Manu Bhaker
C. Anjali Bhagwat
D. Manisha Keer
- Manu Bhaker of Haryana opened India’s medal account at the 33rd Summer Olympics in Paris, winning a bronze in the 10-meter air pistol event on 28 July 2024. She became the first Indian woman shooter to win an Olympic medal in shooting. The Paris Olympics, held from 26 July to 11 August 2024, features 32 sports, with India competing in 16 disciplines. Bhaker, 22, scored 221.7 points to finish third in the eight-woman final. South Korean Oh Ye Jin won gold with an Olympic record of 243.2 points, and silver went to South Korean Yeji Kim with 241.3 points.
10. Recently, which country secured their first Women’s Asia Cup title?
A. China
B. India
C. Sri Lanka
D. Bangladesh
- The host Sri Lankan women’s cricket team won their maiden Women’s Cricket Asia Cup, upsetting the defending champion Indian team. In the final of the 9th Women’s Cricket Asia Cup, held on 28 July 2024 at Rangiri Dambulla International Stadium in Dambulla, Sri Lanka, the hosts defeated India by 8 wickets with 8 balls to spare. Sri Lanka became the third team to win the Women’s Cricket Asia Cup, after India (seven times) and Bangladesh (once).
11. What is the main objective of Integrated Disease Surveillance Programme (IDSP)?
A. To provide free healthcare services
B. To strengthen and maintain a decentralized laboratory-based IT-enabled disease surveillance system
C. To promote vaccination programs
D. To conduct medical research on rare diseases
- In the past year, 1,862 disease outbreaks were reported to the Integrated Disease Surveillance Programme (IDSP), with Kerala recording the highest number. The IDSP, launched in November 2004 with World Bank assistance, is a decentralized, state-based program by India’s Ministry of Health and Family Welfare.
- Its objectives include monitoring disease trends and responding to outbreaks through trained Rapid Response Teams (RRTs). The program integrates surveillance activities at central, state, and district levels, utilizes ICT for data management, and strengthens public health laboratories. Weekly data collection on epidemic-prone diseases helps identify trends.
12. E-Upahaar Portal was developed by which ministry?
A. Ministry of Urban Development
B. Ministry of Defence
C. Ministry of Electronics and Information Technology
D. Ministry of Home Affairs
- Rashtrapati Bhavan will auction selected gifts presented to the President and former Presidents via the online portal E-Upahaar. Launched on July 25, 2024, by the President of India, E-Upahaar is designed by the National Informatics Centre (NIC), Ministry of Electronics and Information Technology, to increase citizen engagement and support a noble cause, with proceeds going to children in need. Established in 1976, the NIC provides technology-driven solutions to Central and State Governments and operates under the Ministry of Electronics and Information Technology.