TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 30th July 2024

1. அண்மையில், இந்தியாவின் எந்தப்பகுதியில் ‘காந்தப் புதைபடிவங்களை’ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்?

அ. லடாக்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. குஜராத்

  • இந்தியாவின் லடாக்கில் உள்ள பாறை வண்ண இழைவு அடுக்குகளில் மேக்னடோடாக்டிக் பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் காந்தத்துகள்களின் புதைபடிவ எச்சங்களை (காந்தப்புதைபடிவங்கள் – Magnetofossils)) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் புரோகாரியோடிக் உயிரினங்கள் பூமியின் காந்தப்புலத்துடன் இணைந்து நன்னீர் மற்றும் உவர்நீர் வாழ்விடங்களில் காணப்படுகின்றன. அவை உகந்த உயிர்வளி அளவைக் கண்டறிய காந்தப்புலத்தைப்பயன்படுத்துகின்றன. இந்தப் பாக்டீரியாவில் இரும்புச்சத்து நிறைந்த துகள்கள் சிறிய பைகளில் உள்ளன; அவை திசைகாட்டிகளாக செயல்படுகின்றன; அது மேக்னடைட் அல்லது கிரீஜிட்டின் என்ற சிறிய படிகங்களை உருவாக்குகிறது. இந்தப் படிகங்கள் தண்ணீரில் உயிர்வளி அளவை மாற்றுவதற்கு உதவுகின்றன.

2. அண்மையில் மேம்படுத்தப்பட்ட எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பான SIMS 2.0ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண் அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. எஃகுத்துறை அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • எஃகுத்துறை அமைச்சகம், ‘எஃகு இறக்குமதி கண்காணிப்பு அமைப்பு’ (SIMS) 2.0 இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது நிலையான மற்றும் மெய்யான தரவுகளுக்கான வலுவான தரவு நுழைவு அமைப்பைக் கொண்டு உள்ளதோடு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துகிறது. மத்திய எஃகுத்துறை மற்றும் கனரக தொழிற்துறை அமைச்சர், பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும், “இரும்பு மற்றும் எஃகுத்துறைக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்” இரண்டாவது தொகுதியை வெளியிட்டார்.
  • 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட SIMS, விரிவான எஃகு இறக்குமதித் தரவை வழங்குகிறது; கொள்கை உருவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. SIMS 2.0, API ஒருங்கிணைப்பு மற்றும் தரவுத்தள இணைப்புகளுடன், தரக்கட்டுப்பாடு, இடர் மேலாண்மை மற்றும் எஃகு இறக்குமதி பற்றிய சுங்கப்பகுப்பாய்வை மேம்படுத்துகிறது; இது உள்நாட்டு எஃகுத்தொழிலுக்குப் பயனளிக்கிறது.

3. அண்மையில், அணுக்கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகமானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் 1600 டன் லித்தியம் வளங்களைக் கண்டுபிடித்தது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. ஜார்கண்ட்

ஈ. இராஜஸ்தான்

  • கர்நாடகாவின் மாண்டியா, யாத்கிரி மாவட்டங்களில் லித்தியம் வளங்கள் இருப்பதை அணுசக்தித்துறையின் ஓர் அமைப்பான அணுக்கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான இயக்குநரகம் (AMD) கண்டறிந்துள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மார்லகல்லா பகுதியில் 1,600 டன் (G3 நிலை) லித்தியம் வளங்களை AMD நிறுவியுள்ளது.
  • முதன்முதலில் 1817இல் ஜோஹன் ஆகஸ்ட் அர்ப்வெட்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட லித்தியம் என்பது உலக அளவில் மிகவும் விரும்பப்படும் ஒரு தனிமமாகும். கல்லைக்குறிக்கும் ‘லித்தோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ‘லித்தியம்’ குறைந்த அடர்த்திகொண்ட உலோகமாகும். தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிற இந்த உலோகம் இயற்கையில் மிகவும் நச்சுத்தன்மைகொண்டது.

4. அண்மையில், “Wind Demon” என்றழைக்கப்படும், வானிலிருந்து தரையிலுள்ள இலக்கைத்தாக்கும் ஒரு புதிய ஏவுகணையை அறிமுகம் செய்துள்ள நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. சீனா

இ. இஸ்ரேல்

ஈ. இந்தியா

  • இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) அண்மையில் “Wind Demon” என்ற ஏவுகணையை அறிமுகம் செய்தது. இது குறைந்த செலவில் துல்லியமான, நீண்டதூர தாக்குதல்களுக்காக வடிவமைக்கப்பட்ட, மேம்பட்ட, வானிலிருந்து தரையிலுள்ள இலக்கைத்தாக்கும் ஒரு சீர்வேக ஏவுகணையாகும. IAIஆல் உருவாக்கப்பட்ட இது, இயக்கியின் துணை ஏதுமில்லாமல் நகர்ந்துகொண்டுள்ள மற்றும் நிலையான இலக்குகளைத் தாக்க ஹெலிகாப்டர்கள் அல்லது விமானங்களிலிருந்து ஏவப்படலாம். இந்த ஏவுகணை 200 கிமீட்டருக்கு மேல் சென்று தாக்கும் திறன்கொண்டது.

5. மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, இந்திய அரசின் உதவிபெறும் அயல்நாடுகளில் முதலிடம் பெற்ற நாடு எது?

அ. நேபாளம்

. பூடான்

இ. மாலத்தீவுகள்

ஈ. வங்காளதேசம்

  • வெளியுறவுக்கொள்கை இலக்குகளை அடைய நிதி உதவியை ஓர் உத்தியாகப் பயன்படுத்தும் நோக்கோடு மத்திய வெளியுறவு அமைச்சகம் 2024-25 மத்திய பட்ஜெட்டில் `4,883 கோடி நிதியைப் பெற்றது. முக்கிய ஒதுக்கீடுகளில் பூடானுக்கு அதிகபட்ச உதவியும், நேபாளம் மற்றும் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க உதவிகளும் அடங்கும். கடந்த கால அரசியல் ரீதியான பதட்டங்கள் இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளுக்கான உதவிகளும் தொடர்கின்றன. பிராந்திய உதவியின் ஒருபகுதியாக மியான்மரும் உதவி பெறுகிறது. ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவின் பலதரப்பு & இருதரப்பு உதவித்திட்டங்களால் பயனடைகின்றன. ஈரானில் உள்ள சபகர் துறைமுகத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக மாறாமல் ஆண்டுதோறும் `100 கோடி பெற்று வருகிறது.

6. “போஷான் பி பதாய் பி” என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?

அ. பள்ளிகளில் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவது

ஆ. அங்கன்வாடி மையங்களில் குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை மேம்படுத்துவது

இ. வயது வந்தோருக்கான கல்வியை ஊக்குவிப்பது

ஈ. இடைநிலைக் கல்விக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது

  • 2023 மே.10 அன்று தொடங்கப்பட்ட, “போஷன் பி பதாய் பி” முன்னெடுப்பானது, 6 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான குழந்தைப்பருவ பராமரிப்பு, கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக அங்கன்வாடி பணியாள -ர்களின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஜூனுக்குள், 11,364 மாநில அளவிலான முதுநிலைப்பயிற்சியாளர்கள் மற்றும் 1,877 அங்கன்வாடி பணியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
  • தரமான உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் அங்கன்வாடி மையங்களை கற்றல் மையங்களாக மாற்றுவதில் இத்திட்டம் கவனஞ்செலுத்துகிறது. இது 2 பாடத்திட்ட கட்டமைப்புகளை உள்ளடக்கியது: பிறப்பு முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான “நவசேதனா” (முழுமையான ஆர்வத்தைத் தூண்டும்), மற்றும் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கான “ஆதர்ஷிலா” (அனைத்து வளர்ச்சிக் களங்களையும் உள்ளடக்கியது). மாற்றுத்திறன் குழந்தைகளுக்குச் சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது.

7. கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தில், “மரவள்ளிக்கிழங்கு கிராமங்கள்” அமைந்துள்ளது?

அ. நாகாலாந்து

ஆ. மணிப்பூர்

இ. அஸ்ஸாம்

ஈ. மிசோரம்

  • நாகாலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தில் உள்ள “மரவள்ளிக்கிழங்கு கிராமங்கள்” நெகிழிகளுக்குப் பதிலாக, MSME எகோஸ்டார்ச்மூலம் தயாரிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கின் மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மக்கும் உயிரி-நெகிழிப்பைகளை பயன்படுத்துகின்றன. தென்னமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட வெப்பமண்டலப்பயிரான மர வள்ளிக்கிழங்கு, அதிக மாவுப்பொருளுக்கு பெயர் பெற்றதாகும்; இது உயிரி–நெகிழி மற்றும் உயிரி-எத்தனால் உற்பத்திக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.

8. SAMADHAN என்ற இணையதளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?

அ. விவசாய அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • தொழில் தகராறுகள் சட்டம்-1947இன்கீழ் பணியாளர்கள், வேலைவாய்ப்பளிப்போர், தொழிற்சங்கங்கள் ஆகியோர் தொழில் தகராறுகளைத் தாக்கல் செய்ய வசதியாக சமாதான் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பணிக்கொடை வழங்கல் சட்டம்-1972, குறைந்தபட்ச ஊதியச் சட்டம்-1948, ஊதியம் வழங்கல் சட்டம்-1936, சம ஊதியச் சட்டம் -1976, மகப்பேறு நலச்சட்டம்-1961 ஆகியவற்றின்கீழ் தொழிலாளர்கள் உரிமைகோரல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வசதிகளும் இதிலுள்ளன. இந்த இணையதளம் பயனாளிகளுக்கு எளிதான செயல்முறையைக் கொண்டுள்ளதுடன் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது.

9. “இந்தியாவில் இளம்பருவத்தினரின் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான பொருளாதாரம்” என்ற தலைப்பிலான விரிவான அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் “இந்தியாவில் இளம்பருவத்தினரின் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான பொருளாதாரம்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இது இளம்பருவத்தினரின் நல்வாழ்வில் முதலீடு செய்வதற்கான முக்கிய பகுதிகளை எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் இந்தியாதான் அதிக இளம்பருவத்தினரை (253 மில்லியன்) கொண்டுள்ளது. 2000 மற்றும் 2019க்கு இடையில், இளம்பருவத்தினரின் இறப்பு விகிதம் 50%
    -க்கும் அதிகமாக குறைந்துள்ளது; மேலும் கருவுறுதல் விகிதம் 83% குறைந்துள்ளது. இடைநிலைப்பள்ளி நிறைவு விகிதம் 2005இல் இருந்த 22%இலிருந்து 2020இல் 50%ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • இருப்பினும், 2021-2022 வரை 18 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினரிடையே ஏற்படும் அபாயகரமான சாலை விபத்துகள் 22.7% அதிகரித்துள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை 10.1%ஆக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. அண்மையில், பழங்காலப் பொருட்களை சட்டத்துக்குப்புறம்பாகக் கடத்துவதை தடுக்கவும் ஒழிக்கவும் வகை செய்யும், ‘கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில்’ இந்தியாவும் கீழ்க்காணும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளன?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. சீனா

ஈ. ஜப்பான்

  • 2024 ஜூலை.26 அன்று பழங்காலப் பொருட்களை சட்டத்துக்குப்புறம்பாகக் கடத்துவதை எதிர்த்து இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் முதல் கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. புது தில்லியில் உள்ள உலக பாரம்பரியக்குழுவில் ஸ்ரீ கோவிந்த் மோகன் மற்றும் அமெரிக்கத்தூதர் எரிக் கார்செட்டி ஆகியோர் கையெழுத்திட்ட இந்தக் கலாச்சார சொத்து ஒப்பந்தம், 1970 UNESCO தீர்மானத்துடன் ஒத்துப்போகிறது. இந்தக் கலாச்சார சொத்து ஒப்பந்தம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைக் காப்பதையும், கடத்தப்பட்ட கலைப்பொருட்களை திரும்பப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. அண்மையில், கீழ்க்காணும் எந்தத் துறைமுகத்திற்காக இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையம் அங்கீகரிக்கப்பட்டது?

அ. கொச்சி துறைமுகம்

ஆ. ஜவகர்லால் நேரு துறைமுகம்

இ. தீனதயாள் துறைமுகம்

ஈ. மங்களூரு துறைமுகம்

  • மும்பை ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி மையத்திற்கு நடுவண் கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திறன்களை மேம்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இது அமையும். அரசு-தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • இம்முன்னோடித் திட்டம் போக்குவரத்துகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும். வேளாண் பொருட்களின் அடுக்கு ஆயுளை நீட்டிக்கும். எதிர்பார்க்கப்படும் நன்மைகளில் வேளாண் பொருட்களுக்கு சிறந்த விலை, வேலை உருவாக்கம் மற்றும் வேளாண் துறையில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவை அடங்கும். பாசுமதி அல்லாத அரிசி, மக்காச்சோளம், மசாலாப்பொருட்கள், வெங்காயம், கோதுமைபோன்ற முக்கிய பொருட்களின் ஏற்றுமதியை இது பூர்த்தி செய்யும்.

12. அண்மையில், 2024-25 காலகட்டத்திற்கான ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்ற நாடு எது?

அ. இந்தியா

ஆ. இந்தோனேசியா

இ. தாய்லாந்து

ஈ. பிலிப்பைன்ஸ்

  • இந்திய அரசின் பிரதிநிதியாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர், இராஜேந்திர சிங், 2024-25ஆம் ஆண்டிற்கான ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைவராக தாய்லாந்தின் பாங்காக்கில் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசிய பேரிடர் தயார்நிலை மையம் என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பேரிடர் தணிப்பு & பருவநிலை நெகிழ்திறனை உருவாக்குவதில் ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கான ஒரு தன்னாட்சி மிகுந்த பன்னாட்டு அமைப்பாகும். இந்தியா, வங்காளதேசம், கம்போடியா, சீனா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 8 அண்டை நாடுகள் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன. தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் ஐந்தாவது அறங்காவலர் குழு கூட்டத்திற்கும் இந்தியா தலைமை தாங்கியது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மாணாக்கர் தற்கொலைகளைத் தடுக்க ‘மனோதர்பன்’ முன்னெடுப்பு: நடுவண் அரசு.

மாணாக்கர் தற்கொலை செய்வதை தடுப்பதற்காக, ‘மனோதர்பன்’ என்ற முன்னெடுப்பை மத்திய கல்வியமைச்சகம் தொடங்கியுள்ளது. அதன்படி மாணாக்கர்க்கு வல்லுநர்களால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகளில் தோல்வியடைபவர்கள் தற்கொலைச் செய்துகொள்ளும் சம்பவங்கள் 1.2%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2. ‘குவாட்’ மாநாடு.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

3. மகப்பேறு இறப்பு இல்லா நிலை..

மகப்பேறு இறப்பு விகிதத்தில் ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 70 மரணங்கள் என்கிற சர்வதேச இலக்கை இந்தியா எட்டியிருக்கிறது. தமிழ்நாடு இலக்கை எட்டியதோடு மட்டுமல்லாமல், குறைந்த அளவிலான இறப்புகள் என்கின்ற வகையில் சாதனையும் படைத்திருக்கிறது. கடந்த ஆண்டு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1 லட்சம் பிறப்புகளுக்கு 54 ஆக குறைந்திருந்தது. தேசிய அளவிலான இறப்பு விகிதம் 70 என்றிருந்தாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 54 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் 45.5ஆக குறைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் மகப்பேறு இறப்பு பூஜ்ஜியம் என்னும் நிலையை அடைந்துள்ளது.

தமிழ்நாட்டைப்பொருத்தவரை 99.9% பிரசவங்கள் அதாவது 8.70 லட்சம் பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. அதில் அரசு மருத்துவமனைகளில் 59% பிரசவங்கள் நடக்கின்றன.

4. உழவர்களின் சந்தேகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலிமூலம் விடை.

உழவர்களுக்கு வேளாண்மையில் ஏற்படும் ஐயங்களுக்கு செயற்கை நுண்ணறிவு செயலிமூலம் விடை கிடைக்க உள்ளது. இதற்கான தனித்த செயலியை சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் துணையுடன் தமிழ்நாடரசு உருவாக்க உள்ளது.

அக்ரி-பாட்: தமிழ்மொழியில் வேளாண்மைக்கென தனித்துவம் வாய்ந்த சாட் GPT போன்று அக்ரி – பாட் என்ற செயற்கை நுண்ணறிவு இணையதளம் உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச்செயலிமூலம் வேளாண் தொழில்நுட்பங்களையும் வேளாண்சார்ந்த தகவல்களையும் துரிதமாக நமது விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க இயலும். விவசாயிகள் தங்களது திறன்பேசிமூலமாக அனைத்து ஐயங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்.

1. Recently, researchers have spotted ‘Magnetofossils’ in which region of India?

A. Ladakh

B. Assam

C. Manipur

D. Gujarat

  • Researchers have discovered magnetofossils, fossil remains of magnetic particles produced by magnetotactic bacteria, in rock varnish layers in Ladakh, India. These prokaryotic organisms align with the earth’s magnetic field and are found in freshwater and marine habitats. They use the magnetic field to locate optimal oxygen levels. The bacteria contain iron-rich particles in small sacs acting as compasses, forming tiny crystals of magnetite or greigite. These crystals help them navigate changing oxygen levels in water.

2. Which ministry recently launched SIMS 2.0, the upgraded Steel Import Monitoring System?

A. Ministry of Agriculture

B. Ministry of Power

C. Ministry of Steel

D. Ministry of Science and Technology

  • The Ministry of Steel launched the ‘Steel Import Monitoring System’ (SIMS) 2.0 Portal, featuring a robust data entry system for consistent and authentic data, promoting transparency and accountability. Union Minister of Steel and Heavy Industries released the second volume of “Safety Guidelines for Iron and Steel Sector,” aiming to enhance safety standards and reduce accidents.
  • SIMS, introduced in 2019, provides detailed steel import data, aiding policy-making and industry growth. SIMS 2.0, with API integration and database connections, improves quality control, risk management, and Customs’ analysis of steel imports, benefiting the domestic steel industry.

3. Recently, the Atomic Minerals Directorate for Exploration and Research (AMD) discovered 1600 tonnes of lithium resources in which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Jharkhand

D. Rajasthan

  • Union Minister Dr. Jitendra Singh announced the discovery of 1,600 tonnes of lithium resources in Karnataka’s Mandya and Yadgiri districts. The Atomic Minerals Directorate for Exploration and Research (AMD), under the Department of Atomic Energy, identified these resources through preliminary surveys and subsurface exploration in the Marlagalla area.
  • Lithium, a highly sought-after element globally, was first discovered in 1817 by Johan August Arfvedson. Derived from the Greek word “lithos” meaning stone, lithium is the metal with the lowest density, reacts vigorously with water, and is toxic in nature.

4. Recently, which country has unveiled the country’s new air-to-surface missile dubbed “Wind Demon”?

A. Japan

B. China

C. Israel

D. India

  • Israel Aerospace Industries (IAI) recently unveiled the “Wind Demon,” an advanced air-to-surface cruise missile designed for precise, long-range attacks at low cost. Developed by IAI, it can be launched from helicopters or aircraft to strike mobile and stationary targets without operator intervention. The missile has a range of over 200 kilometers.

5. Which country has emerged as the top recipient of Indian government aid to foreign countries, according to the Union Budget 2024-25?

A. Nepal

B. Bhutan

C. Maldives

D. Bangladesh

  • The Ministry of External Affairs allocated ₹4,883 crore for aid in the 2024 union budget, strategically using financial assistance to meet foreign policy goals. Key allocations include the highest aid to Bhutan, and significant increases for Nepal and Sri Lanka. Despite past diplomatic tensions, Afghanistan and Maldives maintain previous aid levels. Myanmar receives aid as part of regional assistance. Africa, Central Asia, South Asia, and Latin America benefit from India’s multilateral and bilateral aid programs. The Chabahar Port Project in Iran continues to receive ₹100 crore annually, unchanged for the past three years.

6. What is the main objective of the ‘Poshan Bhi Padhai Bhi’ initiative?

A. To improve nutritional standards in schools

B. To enhance early childhood care and education in Anganwadi centres

C. To promote adult education

D. To develop infrastructure for secondary education

  • Launched on May 10, 2023, the ‘Poshan Bhi Padhai Bhi’ (PBPB) initiative aims to upskill Anganwadi workers to enhance early childhood care, education, and nutrition services for children under six. By June 2024, 11,364 State Level Master Trainers and 1,877 Anganwadi Workers have been trained.
  • The program focuses on transforming Anganwadi centres into learning hubs with quality infrastructure and play equipment. It includes two curriculum frameworks: “Navchetana” for children from birth to three years, emphasizing holistic stimulation, and “Aadharshila” for children aged three to six years, covering all developmental domains. Special attention is given to Divyang children.

7. ‘Cassava villages’ are located in which Northeastern state?

A. Nagaland

B. Manipur

C. Assam

D. Mizoram

  • In Mokokchung district, Nagaland, ‘Cassava villages’ are replacing plastics with compostable bioplastic bags made from Cassava starch, produced by the MSME Ecostarch. Cassava, a tropical crop native to South America, is known for its high starch content, making it ideal for bioplastics and bioethanol production.

8. SAMADHAN Portal was launched by which ministry?

A. Ministry of Agriculture

B. Ministry of Defence

C. Ministry of Labour & Employment

D. Ministry of Urban Development

  • The Ministry of Labour & Employment launched the SAMADHAN Portal to address industrial disputes for workmen, employers, and trade unions under the Industrial Disputes Act, 1947. It promotes efficiency and transparency through online filing, faster disposal, and internal monitoring. The portal also covers cases under the Payment of Gratuity Act, 1972, Minimum Wages Act, 1948, Payment of Wages Act, 1936, Equal Remuneration Act, 1976, and Maternity Benefit Act, 1961.

9. Recently, which ministry has unveiled a comprehensive report titled “Economic Case for Investment in the Well-being of Adolescents in India”?

A. Ministry of Home Affairs

B. Ministry of Agriculture

C. Ministry of Health & Family Welfare

D. Ministry of Rural Development

  • Ministry of Health & Family Welfare released a report titled “Economic Case for Investment in the Well-being of Adolescents in India,” highlighting key areas for investment in adolescent health. India has the largest adolescent population (253 million) globally. Between 2000 and 2019, the adolescent mortality rate dropped by over 50%, and fertility rates fell by 83%.
  • Secondary school completion rates more than doubled from 22% in 2005 to over 50% in 2020. However, fatal road accidents among adolescents under 18 increased by 22.7% from 2021 to 2022. Recommended interventions are projected to boost India’s economy by 10.1% of annual GDP.

10. Recently, India signed a ‘Cultural Property Agreement’ with which country to prevent and curb the illicit trafficking of antiquities?

A. USA

B. Russia

C. China

D. Japan

  • On July 26, 2024, India and the USA signed their first-ever Cultural Property Agreement (CPA) to combat the illicit trafficking of antiquities. The agreement, signed by Shri Govind Mohan and US Ambassador Eric Garcetti at the World Heritage Committee in New Delhi, aligns with the 1970 UNESCO Convention. The CPA aims to secure India’s cultural heritage and return smuggled artifacts.

11. India’s first integrated agri-export facility has recently been approved for which port?

A. Cochin Port

B. Jawaharlal Nehru Port

C. Deendayal Port

D. Mangaluru Port

  • India’s first Integrated Agri-Export Facility will be established at Jawaharlal Nehru Port in Mumbai, enhancing agricultural export and import capabilities. Ports Minister Sarbananda Sonowal approved the project to be developed in a public-private partnership. The facility aims to streamline logistics, reduce wastage, and provide better prices for agricultural products. It will support the export of key items such as non-basmati rice, maize, spices, onion, and wheat. Sonowal emphasized that this initiative is a significant step toward empowering farmers and boosting India’s agricultural sector.

12. Recently, which country has assumed the Chair of Asian Disaster Preparedness Centre (APDC) for 2024-25?

A. India

B. Indonesia

C. Thailand

D. Philippines

  • India assumed the chairmanship of the Asian Disaster Preparedness Center (ADPC) for 2024-25 on July 25, 2024, in Bangkok, Thailand, taking over from China. Rajendra Singh, Head of the National Disaster Management Authority, represents India. As chairman, he also chaired the 5th Board of Trustee meeting of the ADPC.
  • Established in 1986, ADPC is a non-profit regional organization promoting disaster risk reduction and climate resilience in Asia and the Pacific. It addresses the impacts of natural hazards and climate change, supporting global initiatives on climate and urban resilience. Founding members include China, India, Nepal, Bangladesh, Cambodia, Pakistan, Philippines, Sri Lanka, and Thailand.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!