Tnpsc Current Affairs in Tamil & English – 30th & 31st October 2024
1. 2024 – பெண்கள் இந்தியா ஓபன் கோல்ஃப் நிகழ்வு நடைபெறும் நகரம் எது?
அ. சென்னை
ஆ. இந்தூர்
இ. குருகிராம்
ஈ. ஜெய்ப்பூர்
- ஹரியானா மாநிலம் குருகிராமில் 16ஆவது பெண்கள் இந்திய ஓபன் கோல்ஃப் போட்டியை இந்தியா நடத்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 27 பேர் உட்பட 31 நாடுகளைச் சேர்ந்த 114 வீரர்கள் கலந்துகொண்டனர். இந்திய வீராங்கனைகளுள் ஹிட்டாஷி பக்ஷி, வாணி கபூர், கௌரிகா பிஷ்னோய், அமந்தீப் டிரால் மற்றும் ரிதிமா திலாவாரி ஆகியோர் அடங்குவர். அதிதி அசோக் 2016இல் இந்த மதிப்புமிக்க போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். 2007இல் நிறுவப்பட்ட மகளிர் இந்திய ஓபன், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மகளிர் கோல்ஃப் போட்டியாகும்.
2. Remove Debris In-Orbit Servicing (RISE) திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி அமைப்பு எது?
அ. ISRO
ஆ. ESA
இ. CNSA
ஈ. NASA
- Remove Debris In-Orbit Servicing (RISE) திட்டம் என்பது ஓர் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) திட்டமாகும்; இது புவிநிலை துணைக்கோள்களின் சுற்றுப்பாதையில் பொருத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் திறனை நிரூபிக்கும். எரிபொருள் நிரப்புதல் மற்றும் புதுப்பித்தல்மூலம் செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. RISE ஆனது புதிய விண்வெளிக் குப்பைகளைத் தடுக்கும் மற்றும் சுற்றுப்பாதையில் ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். 2028இல் தொடங்கப்படும் இந்தப் பணிக்கு இணை-நிதியளிப்பதற்காக D-Orbit உடனான €119 மில்லியன் ஒப்பந்தத்தில் ESA கையெழுத்திட்டுள்ளது.
3. ஒவ்வோர் ஆண்டும் ஐநா நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
அ. அக்டோபர் 22
ஆ. அக்டோபர் 23
இ. அக்டோபர் 24
ஈ. அக்டோபர் 25
- ஐநா நாள் அக்.24 அன்று கொண்டாடப்படுகிறது; இது 1945இல் ஐநா நிறுவப்பட்டதைக் குறிக்கிறது. ஐநா சாசனம் என்பது பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட கையொப்பமிட்ட பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் WHO போன்ற சிறப்பு அமைப்புகளின்மூலம் பன்னாட்டு அமைதி மற்றும் ஓர் அமைதியான உலகத்தை உருவாக்க ஐநா முனைகிறது. முதல் ஐநா மாநாடு 1945இல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது; அது ஐநா சாசனத்தை அங்கீகரிக்க வழிவகுத்தது. 1971ஆம் ஆண்டில், ஐநா பொதுச்சபை ஐநா நாளை பொது விடுமுறையாகக் கடைப்பிடிக்க பரிந்துரைத்தது.
4. அண்மையில் இந்தியாவின் 13ஆவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்ட பன்னாட்டு கொள்கலன் ஊர்தி மாற்ற துறைமுகம் (International Container Transshipment Port) அமைந்துள்ள தீவு எது?
அ. கிரேட் நிகோபார்
ஆ. இலட்சத்தீவுகள்
இ. திருவரங்கம்
ஈ. பாம்பன்
- கிரேட் நிகோபார் தீவின் கலாத்தியா விரிகுடாவில் உள்ள பன்னாட்டு கொள்கலன் ஊர்திமாற்ற துறைமுகம் (ICTP) தற்போது இந்தியாவின் 13ஆவது மிகப்பெரிய துறைமுகமாகும். இது சிங்கப்பூர், கிள்ளான் மற்றும் கொழும்புபோன்ற முக்கிய மையங்களுக்கருகில் கிழக்கு-மேற்கு பன்னாட்டு வர்த்தகப்பாதையில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகம் மலாக்கா நீரிணையிலிருந்து 40 கடல்மைல் தொலைவில் உள்ளது; இது உலக கடல்சார் வர்த்தகத்தில் 35%ஐ கையாளுகிறது. இந்தியாவின் 75% ஊர்திமாற்றம் செய்யப்பட்ட சரக்குகள் தற்போது வெளிநாட்டில் கையாளப்பட்டு வருகிறது; இதனை ICTP வெகுவாகக் குறைப்பதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரை, வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து சரக்குகளை ஏற்றிச்செல்லும் இடமாக இது பேராற்றலைக் கொண்டுள்ளது.
5. ‘Clostridioides difficile’ பாக்டீரியாவால் உடலின் எந்தப்பகுதியில் தொற்று ஏற்படுகிறது?
அ. மூளை
ஆ. ஆசனவாய்
இ. பெருங்குடல்
ஈ. மலக்குடல்
- அதீத தொற்று பாக்டீரியமான ‘Clostridioides difficile’க்கு ஆராய்ச்சியாளர்கள், mRNA-அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர். ‘Clostridioides difficile’ என்பது பெருங்குடலின் மிகநீளப்பகுதியான முன்பெருங்குடலில் வயிற்றுப்போக்கு முதல் உயிருக்கு ஆபத்தான பெருங்குடல்சேதம் வரையிலான அறிகுறிகளுடன் தொற்றினை ஏற்படுத்துகிறது. இத்தொற்று பெரும்பாலும் நோய்க் கிருமி கட்டுப்படுத்தியின் பயன்பாட்டிற்குப் பிறகு ஏற்படுகிறது. முக்கியமாக மருத்துவமனைகள் அல்லது நீண்டகால பராமரிப்பிலிருந்த மூத்தோர்களை இது பாதிக்கிறது. அதே நேரம் பிற வயதினரும் இதனால் பாதிக்கப்படலாம்.
- இதன் அறிகுறிகளில் நீர் வயிற்றுப்போக்கு, லேசான வயிற்றுப்பிடிப்பு, நீரிழப்பு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், நச்சு மெகாகோலன் (பெருங்குடல் அழற்சி மற்றும் விரிவாக்கம்) ஆகியவை அடங்கும். இத்தடுப்பூசி இக்கடினமான-சிகிச்சையளிக்கக் கூடிய இத்தொற்றுநோயைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
6. அண்மையில், இந்திய இராணுவம், சாணக்கிய பாதுகாப்பு பேச்சுவார்த்தையை நடத்திய இடம் எது?
அ. சென்னை
ஆ. ஜெய்ப்பூர்
இ. குருகிராம்
ஈ. புது தில்லி
- 2024 அக்.24-25 அன்று புது தில்லியில் இரண்டாவது சாணக்யா பாதுகாப்பு பேச்சுவாரத்தையை இந்திய ராணுவம் நடத்தியது. தேசிய மற்றும் பன்னாட்டுக் கொள்கை வகுப்பில் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும் இதன் கருப்பொருள், “Drivers in Nation Building: Fuelling Growth Through Comprehensive Security” என்பதாகும். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இலங்கையிலிருந்து கொள்கை வகுப்பாளர்கள், பாதுகாப்புப்பணியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆகியோர் முக்கிய பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்த நிகழ்வு, “விக்ஷித் பாரத் @2047”க்கான இந்தியாவின் உத்திசார் இலக்குகளை ஆராயும்.
7. 2024 அக்டோபரில் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)
இ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)
- பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) நடப்பு 2024 – அக்டோபரில் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையை வெளியிட்டது. 2024 & 2025ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வளர்ச்சி 3.2%ஆக நிலையானதாக இருக்கும் என கணித்துள்ளது. உலக GDP வளர்ச்சியின் மதிப்பீடுகளை வழங்கும் WEOஆனது IMFஆல் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2024இல் 7%ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப்பொருளாதாரம் 2024இல் 2.8%ஆகவும், 2025இல் 2.2%ஆகவும் இருக்கும். சீனாவின் வளர்ச்சி 2024இல் 4.8%ஆகவும், 2025இல் 4.5%ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
8. அண்மையில், 2024 – உலகளாவிய இனவெறி எதிர்ப்பு சாம்பியன்ஷிப் விருதை வென்ற ஊர்மிளா சௌத்ரி சார்ந்த நாடு எது?
அ. மியான்மர்
ஆ. பூடான்
இ. நேபாளம்
ஈ. இந்தியா
- நேபாளத்தைச்சேர்ந்த ஊர்மிளா சௌத்ரி, 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இனவெறி எதிர்ப்பு சாம்பியன்ஷிப் விருதை வென்றார்; இது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி J பிளிங்கனால் வழங்கப்பட்டது. இன சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் அவராற்றிய பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டு உள்ளது. ஊர்மிளா சௌத்ரி 17 வயதில் குழந்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு, முன்னாள் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அதிகாரமளித்து, ‘Freed Kamlari Development Forum’ஐ இணைந்து நிறுவினார்.
- நேபாளத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காகப் போராடும் அவர், தனது நோக்கத்தை மேம்படுத்துவதற்காக சட்டம் பயின்றுவருகிறார். சிறுமிகளை அடிமைத்தனத்திற்கு விற்கும் சட்டத்திற்குப் புறம்பான ‘கமலாரி’ அமைப்பு, மக்கள் எதிர்ப்புகளுக்குப்பிறகு 2013இல் ஒழிக்கப்பட்டது.
9. Laser Interferometer Space Antenna (LISA) திட்டமானது NASAஉக்கும் எந்த விண்வெளி நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டுத்திட்டமாகும்?
அ. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA)
ஆ. சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA)
இ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
ஈ. ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA)
- Laser Interferometer Space Antenna (LISA) திட்டத்திற்கான ஆறு தொலைநோக்கிகளின் முன்மாதிரியை NASA அறிமுகப்படுத்தியது. LISA என்பது நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (NASA) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டுத்திட்டமாகும்; இது 2030களின் நடுப்பகுதியில் தொடங்கப்படவுள்ளது. 1.6 மில்லியன் மைல்கள் இடைவெளியில் முக்கோண (△) வடிவில் நிலை நிறுத்தப்பட்ட மூன்று விண்கலங்களைப் பயன்படுத்தி ஈர்ப்பலைகளைக் கண்டறிவதே இதன் இலக்காகும். கருந் துளைகள், புவியீர்ப்பு மற்றும் பேரண்டத்தின் விரிவாக்கம் ஆகியவற்றை ஆராய்வதில் இது பங்குவகிக்கிறது.
10. ஆண்டுதோறும் உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 23
ஆ. அக்டோபர் 24
இ. அக்டோபர் 25
ஈ. அக்டோபர் 26
- முதல் போலியோ தடுப்பூசியை உருவாக்கிய ஜோனஸ் சாக்கை கௌரவிப்பதற்காக ரோட்டரி இன்டர்நேஷனலால் நிறுவப்பட்ட உலக போலியோ நாள் ஆண்டுதோறும் அக்டோபர்.24 அன்று அனுசரிக்கப்படுகிறது. போலியோ என்பது மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும்; இதனால் பக்கவாதம் மற்றும் மரணம்கூட ஏற்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளில் காணப்படும் இந்த நோய்த்தொற்றுக்கு எந்தச் சிகிச்சையும் கிடையாது. தடுப்பூசியின்மூலம் மட்டுமே இதனை தடுக்கமுடியும். கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ பாதிப்புகள் பதிவாகியுள்ளன; இது உலகளவில் அதிகம். இந்தியாவில் கடைசியாக 2011 ஜனவரியில் மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் போலியோ பாதிப்பு ஏற்பட்டது.
11. சமீபத்தில், 2024 – சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டுக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. ஆக்ஸ்பாம் மற்றும் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் இன்டர்நேஷனல்
இ. பன்னாட்டு செலாவணி நிதியம்
ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம்
- 2024 – சமத்துவமின்மையைக் குறைப்பதற்கான உறுதிப்பாட்டுக் குறியீடானது பல நாடுகள் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கத் தவறிவருகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆக்ஸ்பாம் மற்றும் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் இன்டர்நேஷனல் (DFI) வெளியிட்ட அறிக்கை, பொதுச்சேவைகள், முற்போக்கு வரிவிதிப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் 164 நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது. நார்வே, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவை; தெற்கு சூடான் மற்றும் நைஜீரியா ஆகியவை மோசமான செயல்திறன் கொண்டவை. இக்குறியீட்டில் இந்தியா 127ஆவது இடத்தில் உள்ளது.
- பெலாரஸ், கோஸ்டாரிகா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட நாடுகளில் முன்னணியில் உள்ளன.
12. இந்தியாவின் 55ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில் (IFFI) ‘கவனம் செலுத்தப்படும் நாடு – Country of Focus’ என்று அறிவிக்கப்பட்ட நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. ஆஸ்திரேலியா
இ. பிரான்ஸ்
ஈ. நியூசிலாந்து
- இந்தியாவின் 55ஆவது பன்னாட்டு திரைப்பட விழாவில் (IFFI) ஆஸ்திரேலியா “கவனம் செலுத்தப்படும் நாடு” என்று தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்பிரிவில் ஆஸ்திரேலியாவின் கதைசொல்லல் மரபுகள் மற்றும் பழங்குடி மற்றும் சமகால கதைகளை முன்னிலைப்படுத்துகிற ஏழு ஆஸ்திரேலிய திரைப்படங்கள் இடம்பெறும்.
- இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஓர் ஒலியும்-ஒளியும் இணை தயாரிப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, இணை-தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சலுகைகள், கலாச்சார பரிமாற்றம் மற்றும் புதுமையான சினிமா திட்டங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். 55ஆவது IFFI கோவாவில் 2024 நவ.20 முதல் 28 வரை நடைபெறும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்திய பொருளாதாரம் 7% வளரும்: மத்திய நிதியமைச்சகம்.
நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத பணவீக்க சரிவுக்குப்பின்னர், கடந்த செப்டம்பரில் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிகரித்தது. இதற்கு சீரற்ற பருவமழையால் சில காய்கறி விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே பிரதான காரணம்.
செப்டம்பர் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு $700 பில்லியன் டாலர்களை (சுமார் `58.85 இலட்சம் கோடி) தாண்டியது. இந்த அளவுக்கு அந்நிய செலாவணியை கையிருப்பு வைத்திருக்கும் முதல் 4 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. வேலைவாய்ப்பு சந்தையைப் பொருத்தவரை, உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது.
2. குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை.
குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
கடந்த 5-6 ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 1,000 பாதுகாப்புத்துறை புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) உருவாகியுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.
3. வெப்ப அலை வீச்சு பேரிடராக அறிவிப்பு: தமிழ்நாடு அரசு.
வெப்ப அலை வீச்சை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெப்ப அலை வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு `4 இலட்சம் நிவாரண நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
4. கபீர் புரஸ்கார் விருது.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வோராண்டும், முதலமைச்சரால் குடியரசு நாள் விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப்பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப்பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத்தகுதியுடையவராவர்.
இந்த விருது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக்கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. மூன்று பிரிவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே `20,000, `10,000 மற்றும் `5 ஆயிரத்துக்கான காசோலை இதில் அடங்கும்.
1. Which city is the venue of Women’s Indian Open Golf 2024 event?
A. Chennai
B. Indore
C. Gurugram
D. Jaipur
- India hosted the 16th edition of the Women’s Indian Open Golf in Gurugram, Haryana. The tournament featured 114 players from 31 nations, including 27 from India. Indian stars included Hitaashee Bakshi, Vani Kapoor, Gaurika Bishnoi, Amandeep Drall, and Ridhima Dilawari. Aditi Ashok made history in 2016 as the first Indian to win this prestigious tournament. The Women’s Indian Open, founded in 2007, is India’s most prestigious women’s golf event.
2. Which space organization is associated with Remove Debris In-Orbit Servicing (RISE) mission?
A. ISRO
B. ESA
C. CNSA
D. NASA
- The Remove Debris In-Orbit Servicing (RISE) mission is a European Space Agency (ESA) mission that will demonstrate the ability to dock with and control the orbit of geostationary satellites. The mission aims to extend satellite life through refueling and refurbishment. RISE will prevent new space debris and promote a circular economy in orbit. ESA signed a €119 million contract with D-Orbit to co-fund the mission, launching in 2028.
3. Which day is observed as United Nations Day every year?
A. October 22
B. October 23
C. October 24
D. October 25
- United Nations Day is celebrated on October 24, marking the establishment of the UN in 1945. The UN Charter was ratified by the majority of signatories, including the five permanent members of the Security Council. The UN promotes international peace and a fairer world through specialized organizations like the World Bank and WHO. The first UN Conference was held in San Francisco in 1945, leading to the ratification of the UN Charter. In 1971, the UN General Assembly recommended observing UN Day as a public holiday.
4. International Container Transshipment Port (ICTP), which was recently designated as India’s 13th major port, is located in which island?
A. Great Nicobar
B. Lakshadweep
C. Thiruvarangam
D. Pamban
- The International Container Transshipment Port (ICTP) at Galathea Bay, Great Nicobar Island, is now India’s 13th major port. It is strategically located on the East-West international trade route, near key hubs like Singapore, Klang, and Colombo. The port is 40 nautical miles from the Malacca Strait, which handles 35% of global sea trade. ICTP aims to reduce India’s dependency on foreign ports, as 75% of India’s transshipped cargo is currently handled abroad. It holds great potential as a transshipment hub for cargo from India’s east coast, Bangladesh, and Myanmar.
5. Clostridioides difficile bacteria causes an infection in which part of body?
A. Brain
B. Anus
C. Large intestine
D. Rectum
- Researchers are developing an mRNA-based vaccine for Clostridioides difficile (C. difficile), a highly contagious bacterium. C. difficile causes an infection of the colon, the longest part of the large intestine, with symptoms ranging from diarrhea to life-threatening colon damage.
- The infection often occurs after antibiotic use and mainly affects older adults in hospitals or long-term care settings, but others can also get infected. Symptoms include watery diarrhea, mild belly cramping, dehydration, and in severe cases, toxic megacolon (colon inflammation and enlargement). The vaccine aims to tackle this difficult-to-treat infection.
6. Recently, the Indian army hosted the Chanakya Defence Dialogue at which place?
A. Chennai
B. Jaipur
C. Gurugram
D. New Delhi
- The Indian Army hosted the second Chanakya Defence Dialogue on Oct.24-25, 2024, in New Delhi. The theme is “Drivers in Nation Building: Fuelling Growth Through Comprehensive Security,” focusing on integrating security into national and international policymaking. Key participants include policymakers, defence personnel, scientists, and speakers from the US, Russia, Israel, and Sri Lanka. The event will explore India’s strategic goals for “Viksit Bharat @2047.”
7. Which organization released a World Economic Outlook (WEO) report in October 2024?
A. World Bank
B. International Monetary Fund (IMF)
C. United Nations Development Programme (UNDP)
D. United Nations Environment Programme (UNEP)
- The International Monetary Fund (IMF) released a World Economic Outlook (WEO) report in October 2024. It forecasts global growth to remain stable at 3.2% in 2024 and 2025. The WEO is published biannually by the IMF, providing estimates on global GDP growth, inflation, and more for 190 member countries. India’s GDP growth is expected to be 7% in 2024. The US economy is projected to grow at 2.8% in 2024 and 2.2% in 2025. China’s growth is forecasted at 4.8% in 2024 and 4.5% in 2025.
8. Urmila Chaudhary, who recently won the Global Anti-Racism Championship Award 2024, belongs to which country?
A. Myanmar
B. Bhutan
C. Nepal
D. India
- Urmila Chaudhary from Nepal won the Global Anti-Racism Championship Award 2024, presented by US Secretary of State Antony J Blinken. The award honors her work in advancing racial equity, justice, and human rights. Urmila was rescued from child servitude at age 17 and co-founded the Freed Kamlari Development Forum, empowering former bonded laborers. She fights for marginalized castes in Nepal and studies law to further her cause. The illegal Kamlari system, which sold girls into servitude, was abolished in 2013 after mass protests.
9. Laser Interferometer Space Antenna (LISA) mission is a collaborative project between NASA and which space agency?
A. Japan Aerospace Exploration Agency (JAXA)
B. China National Space Administration (CNSA)
C. Indian Space Research Organisation (ISRO)
D. European Space Agency (ESA)
- NASA revealed the prototype of six telescopes for the Laser Interferometer Space Antenna (LISA) mission. LISA is a joint mission between National Aeronautics and Space Administration (NASA) and European Space Agency (ESA), set to launch in the mid-2030s. Its goal is to detect gravitational waves using three spacecraft positioned in a triangular formation, 1.6 million miles apart. It will be the first gravitational wave detector in space, exploring black holes, gravity, and the universe’s expansion.
10. World Polio Day is observed annually on which day?
A. October 23
B. October 24
C. October 25
D. October 26
- World Polio Day is observed on October 24, established by Rotary International to honor Jonas Salk, who developed the first polio vaccine. Polio is a highly infectious viral disease causing paralysis and even death, mostly in children, with no cure—only prevention through vaccination. India reported 741 polio cases in 2009, the highest worldwide. The last polio case in India was in January 2011 in Howrah, West Bengal.
11. Which organization recently published the Commitment to Reducing Inequality Index (CRI) 2024?
A. World Bank
B. Oxfam and Development Finance International
C. International Monetary Fund
D. UN Development Programme
- The Commitment to Reducing Inequality (CRI) Index 2024 shows that many countries are failing to reduce socio-economic inequalities. The report, published by Oxfam and Development Finance International (DFI), ranks 164 countries based on Public Services, Progressive Taxation, and Labour Rights. Top performers include Norway, Canada, and Australia, while South Sudan and Nigeria are the worst performers. The rank of India is 127th in the index. Belarus, Costa Rica, and South Africa are leading among low- and middle-income countries.
12. Which country has been named the ‘Country of Focus’ for the 55th International Film Festival of India (IFFI)?
A. Russia
B. Australia
C. France
D. New Zealand
- The Ministry of Information & Broadcasting announced that Australia will be the “Country of Focus” at the 55th International Film Festival of India (IFFI). This segment will feature 7 Australian films, highlighting the country’s storytelling traditions and indigenous and contemporary narratives. The announcement comes after the signing of an Audio-Visual Co-production Treaty between India and Australia, aimed at encouraging co-productions. This treaty will provide incentives for filmmakers, promoting cultural exchange and collaboration on innovative cinematic projects. The 55th IFFI will take place in Goa from November 20 to 28, 2024.