TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 2nd August 2024

1. ‘நாணயம் மற்றும் நிதி 2023-24’ குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?

அ. SEBI

ஆ. NABARD

இ. RBI

ஈ. FCI

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) “நாணயம் மற்றும் நிதி அறிக்கை 2023-24”, “இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி” என்ற கருப்பொருளில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சியை எடுத்துக்கூறுகிறது. இது இப்போது இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%ஆக உள்ளது மற்றும் 2026ஆம் ஆண்டுக்குள் 20%ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் காரணிகள் இணைய அணுகல், குறைந்த தரவு செலவுகள் மற்றும் ஒரு பெரிய புத்தொழில் சூழலமைப்பு ஆகும். ஆதார் மற்றும் நிகழ்நேரப் பணம் செலுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் வறுமையைக் கணிசமாகக் குறைக்க டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை இந்திய நாடு பயன்படுத்துகிறது.

2. அண்மையில் புனித பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற ரஷ்ய கடற்படை நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கடற்படைக் கப்பல் எது?

அ. ஐஎன்எஸ் கரஞ்ச்

ஆ. ஐஎன்எஸ் தபார்

இ. ஐஎன்எஸ் வாகீர்

ஈ. ஐஎன்எஸ் கரியல்

  • அண்மையில் ரஷ்ய கடற்படை நாள் கொண்டாட்டத்தின்போது ஐஎன்எஸ் தபார் கப்பலிலுள்ள இந்தியக் கடற்படை வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார். INS தபார் என்பது ரஷ்யாவில் கட்டப்பட்ட மறைந்திருந்து தாக்கும் தல்வார் வகுப்புப் போர்க்கப்பல் வரிசையில் மூன்றாவது கப்பல் ஆகும். 2004 ஏப்ரல்.19இல், கலினின்கிராட்டில் பணியில் சேர்க்கப்பட்ட இந்தக் கப்பலால், பல்வேறு கடற்படைப் பணிகளை தன்னிச்சயாகவோ அல்லது ஒரு பெரிய பணிக்குழுவின் ஒருபகுதியாகவோ இருந்து கையாள முடியும்.

3. ஒவ்வோர் ஆண்டும், “ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.28

ஆ. ஜூலை.29

இ. ஜூலை.30

ஈ. ஜூலை.31

  • ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதையும் ஆட்கடத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஜூலை.30 அன்று ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Leave No Child Behind in the Fight Against Human Trafficking” என்பதாகும். 2010இல் ஐநாஆல் நிறுவப்பட்ட இந்த நாள், ஆட்கடத்தலுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளை வலியுறுத்துவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐநா அமைப்பின் தன்னார்வ அறக்கட்டளையை நிறுவுவதையும் உள்ளடக்கியுள்ளது.

4. ‘ஹமாஸ்’ என்றால் என்ன?

அ. பாலஸ்தீனிய போராளிக் குழு

ஆ. ரஷ்ய போராளிக் குழு

இ. சீனாவின் உளவு நிறுவனம்

ஈ. உக்ரேனிய பாதுகாப்புப் படை

  • ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே 2024 ஜூலை.31 அன்று தெகுரானில் இஸ்ரேலிய வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் புதிய அதிபரான டாக்டர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் அவர் தாக்கப்பட்டார். பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் இஸ்ரேலை அழித்து இசுலாமிய பாலஸ்தீன அரசை நிறுவுவதை தனது தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. அண்மையில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சுமன் சர்மா

. பிரீத்தி சுதன்

இ. பிரதீப் குமார் ஜோஷி

ஈ. இராஜீவ் நயன்

  • 2024 ஜூலை.31 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டாக்டர் மனோஜ் சோனியைத் தொடர்ந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக 1983ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இஆப அதிகாரியும் முன்னாள் மத்திய சுகாதாரச் செயலாளருமான பிரீத்தி சுதன் என்பவரை நியமித்தார். இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணான பிரீத்தி சுதன், ‘ஆயுஷ்மான் பாரத்’ மற்றும் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ போன்ற நடுவணரசுத்திட்டங்களில் முக்கியப்பங்கு வகித்துள்ளார். UPSC என்பது கடந்த 1950இல் நிறுவப்பட்ட ஒரு தன்னிச்சையாக இயங்கும் ஓர் அரசியலமைப்பு ரீதியான அமைப்பாகும்.

6. ‘வேளாண் பொருளாதார நிபுணர்களின் பன்னாட்டு மாநாட்டை’ நடத்துகிற நாடு எது?

அ. பூட்டான்

ஆ. மியான்மர்

இ. நேபாளம்

ஈ. இந்தியா

  • இந்தியா, 32ஆவது பன்னாட்டு வேளாண் பொருளாதார நிபுணர்களின் மாநாட்டை புது தில்லியில் உள்ள பூசா நிறுவனத்தில் 66 ஆண்டுகளுக்குப்பிறகு 2024 ஆக.2 முதல் 7 வரை நடத்துகிறது. கடைசியாக கடந்த 1958ஆம் ஆண்டு இது நடத்தப்பட்டது. மூவாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டை, பல்வேறு இந்திய மற்றும் பன்னாட்டு விவசாய & பொருளாதார அமைப்புகளுடன் இணைந்து பன்னாட்டு வேளாண் சங்கம் ஏற்பாடு செய்கிறது.

7. அண்மையில் ஓய்வுபெறுவதாக அறிவித்த அஸ்வினி பொன்னப்பாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கால்பந்து

ஆ. ஹாக்கி

இ. பூப்பந்து

ஈ. டென்னிஸ்

  • இந்திய பூப்பந்து வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா, 2024 – பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் முன்கூட்டியே வெளியேறியதை அடுத்து, ஒலிம்பிக் அரங்கிலிருந்து உணர்ச்சிவசப்பட்டு ஓய்வு பெற்றார். தனிஷா கிராஸ்டோவுடன் கூட்டிணைந்த அவர் ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா மற்றும் ஏஞ்சலா யுவிடம் இறுதிப்போட்டியில் தோற்றார். மும்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள அஸ்வினி பொன்னப்பா, 2010 – காமன்வெல்த் போட்டியில் தங்கமும் 2011 – உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றார்.

8. எந்தக் கொசுவின்மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது?

அ. கியூலெக்ஸ் கொசு

ஆ. ஏடிஸ் கொசு

இ. அனோபிலஸ் கொசு

ஈ. மான்சோனியா கொசு

  • ஜிகா வைரஸ் நோயை நிர்வகிப்பதற்கான புதிய செயல் திட்டத்தை இந்திய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். ஜிகா என்பது 1947ஆம் ஆண்டு உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொசுக்களால் பரவும் ஒரு RNA வைரஸ் ஆகும். இது, 1952இல் மனிதர்களிடம் முதன்முதலில் பதிவானது. முக்கியமாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவுகிற இது, ஏடிஸ் இனக் கொசுக்கள் கடிப்பதன்மூலம் பரவுகிறது. இத்திட்டம் வைரஸின் தாக்கத்தை திறம்பட நிர்வகிப்பதையும் கட்டுப்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. ‘வட்டெழுத்து’ என்றால் என்ன?

அ. அசைசார்ந்த எழுத்துக்கள்

ஆ. வடகீழை மாநிலத்துத் திருவிழா

இ. தற்காப்புக்கலை

ஈ. செவ்வியல் நடனம்

  • தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தளிகீஸ்வரர் திருக்கோவிலில் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டெழுத்து மற்றும் எட்டு தமிழ்க்கல்வெட்டுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையில் பயன்படுத்தப்படும், ‘வட்டெழுத்து’ என்ற அசைசார்ந்த எழுத்து முறை ஒருகாலத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இது பொ.ஆ 4ஆம் நூற்றாண்டில் தமிழ்-பிராமி எழுத்துக்களிலிருந்து தோன்றி 15ஆம் நூற்றாண்டில் நவீன மலையாள எழுத்துகளாக உருவானது.

10. 500 மெகாவாட் எலக்ட்ரிக் (MWe) சோடியம்-குளிரூட்டப்பட்ட முதலுறு வேக ஈனுலை (Prototype Fast Breeder Reactor) அமைந்துள்ள இடம் எது?

அ. கல்பாக்கம், தமிழ்நாடு

ஆ. கொச்சி, கேரளா

இ. ஜெய்ப்பூர், இராஜஸ்தான்

ஈ. போபால், மத்திய பிரதேசம்

  • அணுவாற்றல் ஒழுங்குமுறை வாரியமானது தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் 500 MWe சோடியம்-குளிரூட்டப்பட்ட முதலுறு வேக ஈனுலைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது முதலுறு வேக ஈனுலையாகும். இது அணுவாற்றல் துறையின்கீழ் உள்ள அரசாங்க நிறுவனமான பாரதீய நபிகியா வித்யுத் நிகாம் நிறுவனத்தால் (BHAVINI) உருவாக்கப்பட்டதாகும்.

11. ‘தரங் சக்தி – 2024’ என்ற பன்னாட்டு விமானப்பயிற்சியை நடத்துகிற நாடு எது?

அ. இங்கிலாந்து

ஆ. இந்தியா

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

  • இந்தியா, ‘தரங் சக்தி’ என்ற மிகப்பெரிய பன்னாட்டு விமானப் பயிற்சியை தமிழ்நாட்டில் ஆகஸ்டிலும் இராஜஸ்தானில் செப்டம்பரிலும் என இரு கட்டங்களாக நடத்தவுள்ளது. இந்நிகழ்வானது உத்திசார் உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் நாடுகளான 30 உட்பட மொத்தம் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் கட்டப்பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கும். இராஜஸ்தானில் நடைபெறும் இரண்டாம் கட்டப்பயிற்சியில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், கிரேக்கம், சிங்கப்பூர், UAE மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும். இப்பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துகிறது.

12. கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. குஜராத்

ஈ. கேரளா

  • காவேரிப்படுகையில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் (KRS) அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ளது. காவேரி ஆற்றின் குறுக்கே கண்ணம்பாடியில் உடையார் வம்சத்தால் கட்டப்பட்ட இது, 1917ஆம் ஆண்டில் மன்னர் கிருஷ்ணராஜ ஒடேயா IVஇன் நினைவாக கிருஷ்ணராஜ சாகரம் என்று அழைக்கப்பட்டது. இந்த அணையானது சிவசமுத்திரத்தின் புனல்மின்னுற்பத்தி நிலையத்திற்கும், மைசூரு நகரத்தின் குடிநீர் மற்றும் பாசன நோக்கங்களுக்கும் நீரை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. SC, ST பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

“பட்டியலின, பழங்குடியின (SC, ST) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை தள்ளுபடிசெய்து, உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி D Y சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

SC பிரிவில் இடம்பெற்றுள்ள பல்வேறு சமூகங்களின் சமூக-பொருளாதார நிலை ஒரேமாதிரியாக இல்லா நிலையில், இந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசை சட்டப்பிரிவுகள் 15, 16 அல்லது 341 என எந்தப் பிரிவும் தடுக்காது. அரசமைப்பு சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342இன்கீழ் SC/ST பிரிவுகளை அறிவிக்கை செய்யும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது.

2. நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டம்.

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து பொருட்களை விநியோகம் செய்ய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலத்தில் ஒரு நியாயவிலை கடையில் தற்போது பொருட்கள் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக சேலத்தில் ஒரு நியாயவிலை கடையில் தற்போது பொருட்கள் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை ணேலும் அதிகரிக்கும் வகையில் 234 தொகுதிகளில் தலா ஒரு நியாயவிலை கடையை தேர்வு செய்யப்பட்டு பாக்கெட்மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

3. வன்னியருக்கு உள்இடஒதுக்கீடு: அரசு ஆணையத்துக்கு கால நீட்டிப்பு.

வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீட்டுக்கு உரிய பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்துக்கு கால நீட்டிப்பளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையிலான குழு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

1. Which organization recently released the report on ‘Currency and Finance 2023-24’?

A. SEBI

B. NABARD

C. RBI

D. FCI

  • The Reserve Bank of India’s “Report on Currency and Finance 2023-24,” themed “India’s Digital Revolution,” highlights the rapid growth of the digital economy. It now makes up 10% of India’s GDP and is expected to reach 20% by 2026. Factors driving this growth include internet access, low data costs, and a large startup ecosystem. India leads in biometric ID (Aadhaar) and real-time payments, and has used Digital Public Infrastructure to significantly reduce poverty.

2. Which Indian naval ship recently participated in the Russian Navy Day celebrations in St. Petersburg?

A. INS Karanj

B. INS Tabar

C. INS Vagir

D. INS Gharial

  • Russian President recently greeted Indian Navy personnel aboard INS Tabar during Russia’s Navy Day celebrations. INS Tabar, a stealth frigate built in Russia, is the third ship of the Talwar class. Commissioned on April 19, 2004, in Kaliningrad, it can handle various naval missions independently or as part of a larger task force.

3. Which day is observed as ‘World Day Against Trafficking in Persons’ every year?

A. July.28

B. July.29

C. July.30

D. July.31

  • World Day Against Trafficking in Persons, observed on July 30th, aims to raise awareness and protect the rights of human trafficking victims. The 2024 theme is “Leave No Child Behind in the Fight Against Human Trafficking.” Established by the UN in 2010, the Global Plan of Action urges worldwide efforts against trafficking and includes setting up a UN Voluntary Trust Fund for victims.

4. What is ‘HAMAS’?

A. Militant Palestinian Group

B. Russian Militant Group

C. Secret Agency of China

D. Security Force of Ukraine

  • Hamas political head Ismail Haniyeh was killed in an Israeli airstrike in Tehran on 31 July 2024. He was attacked after attending the swearing-in of Iran’s new president, Dr. Masoud Pezeshkian. Hamas, a militant Palestinian group, aims to destroy Israel and establish an Islamic Palestinian state.

5. Who has been appointed as the new Chairperson of the Union Public Service Commission (UPSC) recently?

A. Suman Sharma

B. Preeti Sudan

C. Pradeep Kumar Joshi

D. Rajiv Nayan

  • On 31 July 2024, President Droupadi Murmu appointed Preeti Sudan, a 1983 batch IAS officer and former Union Health Secretary, as the new Chairperson of the Union Public Service Commission (UPSC), succeeding Dr. Manoj Soni. Sudan, the second woman to hold this position, has played key roles in government programs like Ayushman Bharat and Beti Bachao, Beti Padhao. The UPSC, established in 1950, is an independent constitutional body.

6. Which country hosts ‘International Conference of Agricultural Economists’?

A. Bhutan

B. Myanmar

C. Nepal

D. India

  • India hosts the 32nd International Conference of Agricultural Economists at the Pusa Institute, New Delhi, from 2 to 7 August 2024, after 66 years since it last hosted in 1958. The conference, held every three years, is organized by the International Association of Agricultural Economists in collaboration with various Indian and international agricultural and economic organizations.

7. Ashwini Ponnappa, who recently announced her retirement, is associated with which sports?

A. Football

B. Hockey

C. Badminton

D. Tennis

  • Indian badminton star Ashwini Ponnappa emotionally retired from the Olympic stage after her early exit at the Paris 2024 Games. Partnering with Tanisha Crasto, they lost their final match to Australia’s Setyana Mapasa and Angela Yu, ending their campaign with three consecutive losses. Ashwini, a three-time Olympian, is celebrated for her achievements with Jwala Gutta, including gold at the 2010 Commonwealth Games and bronze at the World Championships in 2011.

8. Zika Virus is transmitted by which mosquito?

A. Culex mosquito

B. Aedes mosquito

C. Anopheles mosquito

D. Mansonia mosquito

  • India’s Health Minister announced a new action plan to manage Zika virus Disease. Zika is a mosquito-borne RNA virus discovered in Uganda in 1947 and first reported in humans in 1952. It mainly affects tropical and subtropical regions and spreads through bite of an infected Aedes species mosquito. The plan aims to manage and control the virus’s impact effectively.

9. What is ‘Vattezhuthu’?

A. Syllabic alphabet

B. Northeastern festival

C. Martial Art

D. Classical dance

  • Archaeologists recently found Vattezhuthu and eight Tamil inscriptions at the Thalikiswarar temple in Tirupur district, Tamil Nadu, dating back 1100 years. Vattezhuthu, a syllabic script used in Tamil Nadu, Kerala, and Sri Lanka, was used to write Tamil and Malayalam. It emerged around the 4th century AD from the Tamil-Brahmi script and evolved into the modern Malayalam script by the 15th century.

10. Where is the 500 MWe sodium-cooled Prototype Fast Breeder Reactor (PFBR) located?

A. Kalpakkam, Tamil Nadu

B. Kochi, Kerala

C. Jaipur, Rajasthan

D. Bhopal, Madhya Pradesh

  • The Atomic Energy Regulatory Board (AERB) has granted permission for the first criticality approach of India’s 500 MWe sodium-cooled Prototype Fast Breeder Reactor (PFBR) at Kalpakkam, Tamil Nadu. This is India’s first indigenous PFBR, commissioned by Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI), a government company under the Department of Atomic Energy (DAE).

11. Which country hosts the international air exercise ‘Tarang Shakti 2024’?

A. UK

B. India

C. Germany

D. France

  • India hosts ‘Tarang Shakti,’ largest international air exercise, in two phases: August in Tamil Nadu and September in Rajasthan. The event aims to strengthen strategic relations, inviting 51 countries with 30 participating. Phase one in Tamil Nadu features France, Germany, Spain, and the UK. Phase two in Rajasthan includes Australia, Bangladesh, Greece, Singapore, UAE, and the USA. This exercise enhances collaboration and operational skills.

12. Krishnaraja Sagar (KRS) Dam is located in which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Gujarat

D. Kerala

  • Heavy rainfall in the Cauvery basin has increased water release from the Krishna Raj Sagar (KRS) dam. Built across the River Cauvery at Kannambadi by the Wodeyar dynasty, it was named Krishnaraja Sagara in 1917 after King Krishnaraja Odeya IV. The dam supplies water to Shiva samudra’s hydro-electric power station, Mysore City’s drinking water, and irrigation purposes.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!