Tnpsc Current Affairs in Tamil & English – 29th October 2024
1. 18ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ள நகரம் எது?
அ. மதுரை
ஆ. புவனேசுவரம்
இ. கொல்கத்தா
ஈ. நவகாளி
- ஒடிஸா 2024 ஜன.08-10 வரை புவனேசுவரத்தில் 18ஆவது வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு முதல்வர் மோகன் சரண் மாஜி ஒப்புதல் அளித்தார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் நடைபெறும். வெளிநாடுவாழ் இந்தியர் நாள் 1915 ஜன.09 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பியதைக் கொண்டாடுகிறது; மேலும் இந்திய புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புகளை இது அங்கீகரிக்கிறது. சென்ற முறை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
2. அண்மையில், ககாடு என்ற பயிற்சியை நடத்திய நாடு எது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. அமெரிக்கா
இ. இந்தியா
ஈ. ஜப்பான்
- குவாட் நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகியவை நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புப் போரில் கவனம் செலுத்தும் கடற்படைப்பயிற்சிகளை நடத்தின. அக்.08-18 வரை விசாகப்பட்டினம் கடற்கரையில் ‘மலபார் பயிற்சி’ நடந்தது. இது சிக்கலான செயல்பாட்டுக் காட்சிகளுடன் இன்னும் விரிவான பதிப்பாக நடந்தேறியது. முன்னதாக ஆஸ்திரேலியா நடத்திய, ‘ககாடு பயிற்சி’யில் 30 நாடுகளைச்சேர்ந்த 3,000 பேர் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சிக்காக இந்தியக்கடற்படை P-8I கடல்சார் ரோந்து விமானத்தை வழங்கியது.
3. SPADEX திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. பெரிய விண்கலத்தை உருவாக்குவது
ஆ. இரண்டு விண்கலங்களை இணைக்கும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குதல்
இ. செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது
ஈ. ஆழ்கடலை ஆராய்வது
- விண்வெளி பொருத்து சோதனைகளில் கவனஞ்செலுத்தும் SPADEX திட்டத்திற்காக இந்திய விண்வெளி நிறுவனம் இரண்டு 400 கிலோ செயற்கைக்கோள்களை வாங்கியுள்ளது. இந்தச் செயற்கைக்கோள்கள் ஒரே ஏவுகலம்மூலம் சற்று வித்தியாசமான சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது மற்றும் ‘சேசர்’ மற்றும் ‘டார்கெட்’ எனப் பெயரிடப்பட்ட இரண்டு விண்கலங்களுக்கிடையில் இணைப்பை நிரூபிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சந்திரயான்-4 மற்றும் முன்மொழியப்பட்ட பாரதீய அந்தரிக்ஷா விண்வெளி நிலையம்போன்ற எதிர்கால பயணங்களுக்கு இந்தச் சோதனை மிக முக்கியமானதாகும்.
4. 27ஆவது அகில இந்திய வன விளையாட்டுப் போட்டிகள் – 2024இல் ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. சத்தீஸ்கர்
இ. கேரளா
ஈ. அருணாச்சல பிரதேசம்
- சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 27ஆவது அகில இந்திய வன விளையாட்டுப் போட்டிகள் நிறைவுபெற்றன. சத்தீஸ்கர் 174 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியனானது. கேரளா 103 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், மத்திய பிரதேசம் 88 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 26 பிரிவுகளில் சுமார் 300 போட்டிகள் நடத்தப்பட்டன.
5. அண்மையில், 16ஆவது BRICS உச்சிமாநாடு – 2024 நடைபெற்ற இடம் எது?
அ. பெய்ஜிங், சீனா
ஆ. சால்வடார், பிரேசில்
இ. கசான், ரஷ்யா
ஈ. புது தில்லி, இந்தியா
- 16ஆவது BRICS உச்சிமாநாடு ரஷ்யாவின் கசானில் 2024 அக்டோபர் 22 முதல் 24 வரை நடந்தது. BRICS ஆனது முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கியிருந்தது. 2024இல், BRICS நான்கு புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொண்டது: எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் UAE. BRICS இப்போது உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியையும் உலகப்பொருளாதாரத்தில் கால்பகுதியையும் கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக வங்கி மற்றும் IMF போன்ற நிறுவனங்களுக்கு ஒரு சமநிலையாக இந்தக் குழு செயல்படுகிறது. “BRIC” என்ற சொல் முதன்முதலில் 2001ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் தாளில் பயன்படுத்தப்பட்டது.
6. ‘Caenorhabditis elegans’ என்றால் என்ன?
அ. நூற்புழு
ஆ. சிலந்தி
இ. ஆக்கிரமிப்புக்களை
ஈ. மந்தாரை
- உடலியல் / மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறும்போது கேரி ருவ்குன், சிறிய நூற்புழுவான ‘Caenorhabditis elegans’ குறித்து தெரிவித்தார். ஒரு சிறிய, எளிய உயிரினமான ‘Caenorhabditis elegans’ என்பது அதன் துல்லியமான அமைப்பு மற்றும் விரைவான வளர்ச்சிக்காக (3-5 நாட்கள்) ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது. அதன் முழு மரபணுவும் வரிசைப்படுத்தப்பட்ட மற்றும் நரம்பியல் தொகுப்பு வரைபடமாக்கப்பட்ட முதல் பலசெல் உயிரினம் இது ஆகும். இது இரண்டு பாலினங்களைக் கொண்டுள்ளது: இருபாலினம் மற்றும் ஆண். ஏராளமாக உள்ள நூற்புழு இனங்கள், ஒட்டுண்ணிகளாகவும் மண் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற பல்வேறு சூழல்களிலும் சுதந்திரமாக வாழ்கின்றன.
7. அண்மையில், இந்தியாவின் எப்பகுதியில் ‘Tenkana’ என்ற புதுவகை குதிக்கும் சிலந்திகள் கண்டுபிடிக்கப்பட்டது?
அ. லடாக்
ஆ. வடகிழக்கிந்தியா
இ. தென்னிந்தியா
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- தென்னிந்தியா முழுவதும் குதிக்கும் சிலந்திகளின் புதிய இனமான, ‘Tenkana’ கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வினத்தில் இரண்டு அறியப்பட்ட இனமும் ஒரு புதிய இனமுமான, ‘Tenkana jayamangali’, கர்நாடகாவில் கண்டறியப்பட்டதாகும்.
- ‘Tenkana’ என்ற பெயர் கன்னடத்திலிருந்து பெறப்பட்டதாகும்; அதன் பொருள் “தெற்கு” என்பதாகும். தென்னிந்தியா மற்றும் வட இலங்கை இருப்பை இது பிரதிபலிக்கிறது. வறண்ட, நிலத்தடி வாழ்விடங்களில் வாழ்கின்ற இந்தச் சிலந்திகள் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் காணப்படுகின்றன.
8. அகில இந்திய குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. காந்திநகர்
ஆ. ஜெய்ப்பூர்
இ. போபால்
ஈ. பாட்னா
- காந்திநகரில் அமைந்துள்ள மகாத்மா மந்திரில் 14ஆவது அகில இந்திய குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையினர் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் 1,200 உறுப்பினர்கள் பங்கேற்றனர். வரைவு குடிமக்கள் பாதுகாப்பு மசோதா மற்றும் மாதிரி ஊர்க்காவல் படை மசோதா குறித்து விவாதிப்பதில் இதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தின்மூலம் செயல்திறனை மேம்படுத்துவதை இந்த மாநாடு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
9. அண்மையில், மேற்கு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘Anguiculus dicaprioi’ என்றால் என்ன?
அ. சிலந்தி
ஆ. தட்டான்பூச்சி
இ. பாம்பு
ஈ. தவளை
- நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக பெயரிடப்பட்ட ‘Anguiculus dicaprioi’ என்ற புதிய பாம்பினத்தை மேற்கு இமயமலையில் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘Colubridae’ குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பாம்பு இனத்தில், 1800க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. பல சிறிய பற்களைக் கொண்டுள்ள இந்தப்புதிய இனம், சுமார் 22 அங்குல நீளம் வரை வளர்கிறது. வலுவான மண்டையோடு மற்றும் செங்குத்தான குவிமாடம் போன்ற மூக்கு கொண்ட இது, சுமார் 6000 அடி உயரத்தில் வாழ்கிறது. பொதுவாக, ‘டிகாப்ரியோவின் இமயமலைப் பாம்பு’ என்று அழைக்கப்படும் இது இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. மே மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இந்த பாம்புகள் நஞ்சற்றவையாகும்.
10. 392 புள்ளிகளுடன் 2024 – தேசிய பாரா-நீச்சல் சாம்பியன்ஷிப்பை வென்ற மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கர்நாடகா
இ. கேரளா
ஈ. மகாராஷ்டிரா
- 24ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டியில் கர்நாடகா 392 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றது. மகாராஷ்டிரா 378 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தான் 248 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. 2024 – தேசிய பாரா-நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவா மாநிலத்தின் பனாஜியில் நடந்தது.
11. அண்மையில், ஐம்பது ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் அமேசான் எதிர்கால பொறியாளர் திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
அ. பழங்குடி மாணாக்கருக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS)
ஆ. CBSE
இ. ISRO
ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
- பழங்குடியின மாணாக்கருக்கான தேசிய கல்விச்சங்கமும் (NESTS) அமேசான் நிறுவனமும் இணைந்து அமேசான் எதிர்கால பொறியாளர் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை 50 ஏகலைவன் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் (EMRS) அறிமுகப்படுத்தியது. ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, பிளாக் புரோகிராமிங் மற்றும் கோடிங்போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் பயிற்சியளித்தலில் கவனம் செலுத்துகிறது. நவீன தொழில்நுட்ப கல்வியறிவுமூலம் பழங்குடியின மாணாக்கரை STEM வாழ்க்கைக்கு தயார்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
12. வேளாண்மையில் நீர்ப்பற்றாக்குறை குறித்த ரோம் பேரரறிவிப்பை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு வேளாண்மை மற்றும் உயிரி-அறிவியல்கள் மையம் (CABI)
ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)
இ. மண் மற்றும் நீர் பாதுகாப்பு சங்கம் (SWCS)
ஈ. நீர் மற்றும் வேளாண் தகவல் மையம் (WAIC)
- ஐநா அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO) உறுப்புநாடுகள், பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் மற்றும் வேளாண்மையில் நீர்ப்பற்றாக்குறைகுறித்த உலகளாவிய கட்டமைப்பின் பங்காளர்கள் உயர்மட்ட ரோம் நீர் உரையாடலின்போது வேளாண்மையில் நீர்ப்பற்றாக்குறைகுறித்த ரோம் பேரறிவிப்பை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு FAOஇன் வருடாந்திர உலக உணவு மன்றத்துடன் இணைந்து நடந்தது. தட்பவெப்பநிலை நெருக்கடியால் மோசமடைந்து வரும் நீர்ப்பற்றாக்குறையை சமாளிப்பதை இந்த பேரறிவிப்பு நோக்கமாகக்கொண்டுள்ளது.
- 2016இல் மராகேஷில் நடந்த ஐநா தட்பவெப்பநிலை மாநாட்டில் நீர்ப்பற்றாக்குறை சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவுவதற்காக வேளாண்மையில் நீர்ப்பற்றாக்குறைகுறித்த உலகளாவிய கட்டமைப்பு (WASAG) தொடங்கப்பட்டது. நீர்ப்பற்றாக்குறை பிரச்சினைகளை திறம்பட நிர்வகிப்பதில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது.
1. Which city is the host of 18th Pravasi Bharatiya Divas?
A. Madurai
B. Bhubaneswar
C. Kolkata
D. Noakhali
- Odisha will host the 18th Pravasi Bharatiya Divas in Bhubaneswar from January 8 to 10, 2024. Chief Minister Mohan Charan Majhi approved the proposal from the Ministry of External Affairs. The event will be held at Janata Maidan in Bhubaneswar, attended by President Droupadi Murmu, Prime Minister Narendra Modi, and other dignitaries. Pravasi Bharatiya Divas celebrates Mahatma Gandhi’s return to India from South Africa on January 9, 1915, and recognizes the contributions of the Indian diaspora. The last event was held in Indore, Madhya Pradesh.
2. Which country recently hosted the Exercise Kakadu?
A. Australia
B. United States
C. India
D. Japan
- The Quad countries—India, Australia, Japan, and the U.S.—conducted back-to-back naval exercises, focusing on anti-submarine warfare. ‘Exercise Malabar’ took place off the coast of Visakhapatnam from Oct.8 to 18. It was termed the most comprehensive edition yet, with complex operational scenarios. The earlier ‘Exercise Kakadu,’ hosted by Australia, involved nearly 3,000 personnel from 30 nations. The Indian Navy contributed a P-8I Maritime Patrol Aircraft for the exercise.
3. What is the primary objective of the SPADEX mission?
A. To build larger spacecraft
B. To develop indigenous technology for docking two spacecraft
C. To send humans to Mars
D. To explore the deep sea
- The Indian Space Agency has acquired two 400kg satellites for the SPADEX mission, which focuses on space docking experiments. These satellites will be launched into slightly different orbits by a single rocket. The mission aims to develop technology and demonstrate docking between two spacecraft, named Chaser and Target. This experiment is crucial for future missions like Chandrayaan-4 and the proposed Bharatiya Antariksha Space Station.
4. Which state emerged as the overall champion at the 27th All India Forest Sports Meet 2024?
A. Tamil Nadu
B. Chhattisgarh
C. Kerala
D. Arunachal Pradesh
- The 27th All India Forest Sports Meet concluded in Raipur, Chhattisgarh. Chhattisgarh emerged as the overall champion, winning 174 medals. Kerala finished second with 103 medals, and Madhya Pradesh secured third place with 88 medals. Nearly 3,000 athletes from various states and Union Territories participated. Around 300 competitions were held across 26 disciplines during the five-day event.
5. Recently, where was the 16th BRICS Summit 2024 held?
A. Beijing, China
B. Salvador, Brazil
C. Kazan, Russia
D. New Delhi, India
- The 16th annual BRICS summit took place in Kazan, Russia, from October 22 to 24, 2024. BRICS originally included Brazil, Russia, India, China, and South Africa. In 2024, BRICS admitted four new members: Egypt, Ethiopia, Iran, and the UAE. BRICS now represents nearly half of the world’s population and a quarter of the global economy. The group acts as a counterbalance to institutions like the World Bank and IMF, dominated by Western countries. The term “BRIC” was first used in a 2001 Goldman Sachs paper predicting their rise among the world’s largest economies.
6. What is Caenorhabditis elegans?
A. Nematode
B. Spider
C. Invasive weed
D. Orchid
- Gary Ruvkun, while accepting the Nobel Prize in Physiology or Medicine, praised Caenorhabditis elegans (C. elegans), a tiny nematode worm. C. elegans is a small, simple organism used in research for its precise structure and fast growth (3-5 days). It was the first multicellular organism to have its full genome sequenced and neural wiring mapped. It has two sexes: hermaphrodite and male. Nematodes are abundant, living as parasites or in free-living forms in diverse environments like soil and marine ecosystems.
7. Recently, a new genus of jumping spiders named Tenkana was discovered in which region of India?
A. Ladakh
B. Northeast India
C. Southern India
D. None of the Above
- A new genus of jumping spiders, ‘Tenkana,’ was discovered across southern India. The genus includes two known species and a new species, Tenkana jayamangali, from Karnataka. The name “Tenkana” comes from Kannada, meaning “south,” reflecting its southern India and northern Sri Lanka presence. These spiders prefer dry, ground habitats and are found in Tamil Nadu, Karnataka, Telangana, and Andhra Pradesh.
8. Where was the All India Civil Defence and Home Guards conference held?
A. Gandhinagar
B. Jaipur
C. Bhopal
D. Patna
- Union Home Minister Amit Shah inaugurated the 14th All India Civil Defence and Home Guards conference at Mahatma Mandir in Gandhinagar. The conference was held after 19 years. More than 60 senior officials and 1,200 members from different states participated in this event. The focus was on discussing the draft Civil Defence Bill and Model Home Guard Bill. The conference aims to enhance efficiency through modern technology in civil defense and home guard operations across India.
9. What is Anguiculus dicaprioi, which was recently discovered in the Western Himalayas?
A. Spider
B. Dragonfly
C. Snake
D. Frog
- Scientists have discovered a new snake species in the Western Himalayas, named Anguiculus dicaprioi after actor Leonardo DiCaprio. It belongs to the Colubridae family, which includes over 1,800 snake species. The new species has many small teeth, grows about 22 inches long, and features a broad collar with dark brown spots. It has a robust skull and steeply domed snout, living at around 6,000 feet elevation.
- Commonly known as ‘DiCaprio’s Himalayan snake,’ it is found in Himachal Pradesh, Uttarakhand, and Nepal. These snakes are most active from late May to August and are non-venomous.
10. Which state won the National Para-Swimming Championship 2024 with 392 points?
A. Tamil Nadu
B. Karnataka
C. Kerala
D. Maharashtra
- Karnataka won the 24th National Para-Swimming Championship with 392 points. Maharashtra finished second with 378 points, and Rajasthan took third with 248 points. The National Para-Swimming Championship 2024 took place in Panaji, Goa.
11. Which organization has recently launched the Amazon Future Engineer Program in 50 Eklavya Model Residential Schools (EMRS)?
A. National Education Society for Tribal Students (NESTS)
B. CBSE
C. ISRO
D. Ministry of Science and Technology
- The National Education Society for Tribal Students (NESTS) and Amazon launched the third phase of the Amazon Future Engineer Program in 50 Eklavya Model Residential Schools (EMRS). The program was implemented in schools across Andhra Pradesh, Gujarat, Karnataka, Madhya Pradesh, Odisha, Telangana, and Tripura. It focused on training in emerging technologies like blockchain, artificial intelligence, block programming, and coding. The objective was to prepare tribal students for STEM careers through modern technological literacy.
12. Which organization members recently adopted the Rome Declaration on Water Scarcity in Agriculture?
A. Centre for Agriculture and Biosciences International (CABI)
B. Food and Agriculture Organization (FAO)
C. Soil and Water Conservation Society (SWCS)
D. Water and Agriculture Information Centre (WAIC)
- Member countries of the Food and Agriculture Organization (FAO) of the United Nations, Heads of Delegations and partners of the Global Framework on Water Scarcity in Agriculture (WASAG) adopted the Rome Declaration on Water Scarcity in Agriculture during the High-level Rome Water Dialogue. This event occurred alongside FAO’s annual World Food Forum.
- The declaration aims to tackle water scarcity, which is worsened by the climate crisis. WASAG was launched at the 2016 UN Climate Conference in Marrakesh to help countries with water scarcity challenges. The initiative focuses on supporting nations in managing water scarcity issues effectively.