Tnpsc Current Affairs in Tamil & English – 29th July 2024
1. மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, 2024-25 நிதியாண்டில் நடுவண் ரெயில்வே அமைச்சகம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளது?
அ. ரூ.1.78 லட்சம் கோடி
ஆ. ரூ.2.55 லட்சம் கோடி
இ. ரூ.4.34 லட்சம் கோடி
ஈ. ரூ.3.78 லட்சம் கோடி
- 2024-25 நிதியாண்டில், மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே அமைச்சகத்திற்கு இதுவரை இல்லாத அளவு `2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இது முந்தைய ஆண்டின் `2.41 லட்சம் கோடியை ஒப்பிடுகையில் 5.85% அதிகமாகும். இக்குறிப்பிடத்தக்க நிதி ஊக்கம் இருந்தபோதிலும், பொருளாதார ஆய்வு 2023-24 முக்கிய பாதுகாப்பு முயற்சிகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது; இதில் தானியங்கி ரெயில் பாதுகாப்பு அமைப்பான் ‘கவாச்’ ஐ பயன்படுத்துதல் மற்றும் ரெயில் நிலையங்களில் சமிக்ஞை அமைப்புகளை மாற்றியமைத்தல் ஆகியவை அடங்கும்.
2. மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, ‘கேலோ இந்தியா’ முன்னெடுப்புக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
அ. ரூ.600 கோடி
ஆ. ரூ.800 கோடி
இ. ரூ.900 கோடி
ஈ. ரூ.400 கோடி
- 2024-25 மத்திய பட்ஜெட்டில், கேலோ இந்தியா முன்னெடுப்பு `900 கோடியைப் பெற்றது; இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட `880 கோடியைவிட `20 கோடி அதிகமாகும். அடிமட்ட விளையாட்டு மேம்பாட்டில் கவனம் செலுத்தும் கேலோ இந்தியாவுக்கு, அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2018இல் தொடங்கப்பட்ட இது, கேலோ இந்தியா பல்கலை விளையாட்டுகள், குளிர்கால விளையாட்டுகள் மற்றும் பாரா விளையாட்டுகள் என விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதற்காக பல மாநில சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
3. ‘ஹென்லே கடவுச்சீட்டு குறியீடு – 2024’இல் இந்தியாவின் தரநிலை என்ன?
அ. 25ஆவது
ஆ. 52ஆவது
இ. 82ஆவது
ஈ. 28ஆவது
- இந்தோனேசியா, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து உட்பட 58 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாத அணுகலை வழங்கி ஹென்லே கடவுச்சீட்டு குறியீடு – 2024இல் இந்திய கடவுச்சீட்டு 82ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 195 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாத அணுகலை வழங்கி, இக்குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 192 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாத அணுகலை வழங்கி இரண்டாவது இடத்தில் உள்ளன. ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகியவை 191 நாடுகளுடன் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. இங்கிலாந்து, நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 190 நாடுகளுடன் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.
4. ‘வரி நிகழ்வு’ என்றால் என்ன?
அ. வரி விகிதங்களை அமைக்கும் செயல்முறை
ஆ. பங்காளர்களுக்கிடையே வரி சுமையைப் பிரித்தல்
இ. வரி வசூலிக்கும் முறைகள்
ஈ. வரி சட்டத்தின் வரலாறு
- சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) சாமானிய மக்களின் வரிச்சுமையை குறைத்துள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது. ‘வரி நிகழ்வு’ என்பது வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்போன்ற பங்காளரிடையே வரிச்சுமை எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது. இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன: சட்டரீதியான நிகழ்வுகள்: வரி செலுத்துவதற்கு யார் சட்டப்பூர்வமாக பொறுப்பு என்பதை தீர்மானிக்கிறது மற்றும் பொருளாதார நிகழ்வுகள்: இது பொருளாதார நலன் மீதான இறுதிச்சுமையை பிரதிபலிக்கிறது.
5. இந்தியாவில், ‘கார்கில் வெற்றி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 25 ஜூலை
ஆ. 26 ஜூலை
இ. 27 ஜூலை
ஈ. 28 ஜூலை
- ஜூலை.26 அன்று அனுசரிக்கப்பட்ட கார்கில் வெற்றி நாளானது 1999 கார்கில் மோதலில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் வெற்றியை நினைவுகூருகிறது. அதன் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டி, லடாக்கில் உள்ள டிராஸ் செக்டாரில் கார்கில் போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த பிரதமர் நரேந்திர மோதி வருகை தந்தார். 1999 மே.08 முதல் ஜூலை.26 வரை நடைபெற்ற கார்கில் போரில் பாகிஸ்தான் படைகள் முஜாகிதீன் போல் மாறுவேடமிட்டு இந்திய நிலைகளில் ஊடுருவின. இந்தியாவின் ‘ஆபரேஷன் விஜய்’ அவர்களை வெற்றிகரமாக வெளியேற்றியது.
6. கான் குவெஸ்ட்-2024 என்ற பன்னாட்டு கூட்டு இராணுவப்பயிற்சியின் 21ஆவது பதிப்பை நடத்துகிற நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா
இ. மங்கோலியா
ஈ. ஜப்பான்
- 2024 ஜூலை.27 முதல் ஆகஸ்ட்.09 வரை மங்கோலியாவின் உலான்பாதரில் நடந்த 21ஆவது கான் குவெஸ்ட் பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவம் பங்கேற்றுள்ளது. அமெரிக்க இந்தோ-பசிபிக் தலைமையின் இணை அனுசரணையுடன் மங்கோலிய ஆயுதப்படைகளால் நடத்தப்படும் கான் குவெஸ்ட் பயிற்சி, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. ஆரம்பத்தில் 2003இல் அமெரிக்கா-மங்கோலியா இருதரப்புப் பயிற்சியாக நடத்தப்பட்ட இது, 2008இல் பலதரப்புப்பயிற்சியாக மாற்றப்பட்டது. இந்தப் பயிற்சி அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதோடு எதிர்கால ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்கான திறன்களையும் மேம்படுத்துகிறது.
7. அண்மையில், நாட்டின் 500ஆவது சமூக வானொலி நிலையம் திறக்கப்பட்ட இடம் எது?
அ. ஷில்லாங்
ஆ. ஐஸ்வால்
இ. கோஹிமா
ஈ. காங்டாக்
- 10ஆவது தேசிய சமூக வானொலி விருதுகளை நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர், மிசோரம் முதலமைச்சர் லால்டுகோமா ஆகியோர் முன்னிலையில், இந்தியாவின் 500ஆவது சமூக வானொலி நிலையத்தையும் அமைச்சர் தொடக்கி வைத்தார். ‘அப்னா ரேடியோ 90.0 FM’ நிலையம் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிலையமாகும்.
- இது வானிலை அறிவிப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் வேளாண் தகவல்களை வழங்கும். சமூக வானொலிகள், பொது மற்றும் வணிக வானொலியைப் போலல்லாமல், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, உள்ளூர் சமூகங்களால் உள்ளூர் மொழிகளில் இயக்கப்படும் தாழ்திறன் நிலையங்கள் ஆகும். அவை கல்வி நிறுவனங்கள், சமூகஞ்சார் அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளால் அமைக்கப்படலாம்.
- சமூக வானொலி நிலையங்களிடையே, புதுமை & நலன்மிகு போட்டியை ஊக்குவிப்பதற்காக, அமைச்சகம் 2011-12ஆம் ஆண்டில் தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவியது. இவ்வாண்டுக்கான விருதுகளில், “மிகவும் புதுமையான சமூக ஈடுபாடு விருது”க்கு மதுரை வயலக வானொலிக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “உள்ளூர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் விருது” பிரிவில் 2ஆம் பரிசு நீலகிரி வானொலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
8. சமீபத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தல்வார் வகை போர்க்கப்பலான ‘திரிபுத்’ஐ அறிமுகப்படுத்திய கப்பல்கட்டும் தளம் எது?
அ. கொச்சின் கப்பல்கட்டும் நிறுவனம்
ஆ. மசாகன் கப்பல்கட்டும் நிறுவனம்
இ. ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனம்
ஈ. கோவா கப்பல்கட்டும் நிறுவனம்
- இந்திய கடற்படைக்காக கோவா கப்பல்கட்டும் நிறுவனத்தின் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மேம்பட்ட போர்க் கப்பல்களில் முதலாவது கப்பல், கோவாவில் பணியில் சேர்க்கப்பட்டது. இந்தக் கப்பலுக்கு வலிமைமிக்க அம்பைக் குறிக்கும், ‘திரிபுத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இரண்டு திரிபுத் நவீன போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் மத்திய பாதுகாப்பு அமைச்சகம், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு இடையே 2019இல் கையெழுத்தானது. இக்கப்பல் எதிரிகளின் மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘திரிபுத்’ வகை கப்பல்கள் 124.8 மீ நீளமும் 15.2 மீ அகலமும் கொண்டவை. அவற்றின் இடப்பெயர்ச்சி தோராயமாக 3600 டன் ஆகும். வேகம் அதிகபட்சமாக 28 கடல் மைல்கள். இந்தக் கப்பல்களில் மேம்பட்ட இரகசிய அம்சங்கள், நவீன ஆயுதங்கள், சென்சார்கள், இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
- கோவாவில் கட்டப்படும், ‘திரிபுத்’ வகை கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட டெக் மற்றும் தல்வார் வகை கப்பல்களை மாதிரியாகக்கொண்டுள்ளன. இப்போர்க்கப்பல்கள் முதன்முறையாக இந்திய கப்பல்கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன.
9. ‘NPS வாத்சல்யா’ என்ற திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. பழங்குடியினக் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது
ஆ. உயர்கல்விக்காக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது
இ. பெற்றோர்கள் & பாதுகாவலர்கள் தங்கள் சிறார்களின் எதிர்கால நிதித்தேவைகளைத் திட்டமிட உதவுவது
ஈ. பெற்றோரின் ஓய்வூதியத்தைத் திட்டமிடுவது
- சிறுவர்களுக்கென, ‘வாத்சல்யா’ எனப்படும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பங்களிப்பை சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் செலுத்துவார்கள் என நடுவண் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் இணையும் சிறுவர்கள் பருவ வயதை எட்டும்போது, அவர்களது கணக்கை வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
10. 2024-25 மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட, ‘திறன் கடன் திட்டத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?
அ. உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குதல்
ஆ. திறன் மேம்பாட்டு படிப்புகளுக்கு நிறுவனஞ்சார் கடன் வழங்குதல்
இ. புத்தொழிலுக்கு நிதியளித்தல்
ஈ. திறமையான தொழிலாளர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்குதல்
- நிதியமைச்சர் மாதிரி திறன் கடன் திட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் இத்திட்டத்தின்கீழ் `7.5 லட்சம் வரையிலான கடனை அரசு ஊக்குவித்த நிதி உத்தரவாதத்தின் ஆதரவுடன் பெறமுடியும். 2015 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத்திட்டம், NSQF-இணக்கமான பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் தேசிய தொழில்கள் தரநிலைகள் மற்றும் தகுதித்தொகுப்புகளுடன் இணைந்த திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கு நிறுவனஞ் சார் கடன் வழங்குகிறது. இது அனைத்து இந்திய வங்கிகள் சங்கத்தின் உறுப்பினர் வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி-ஆலோசனை பெற்ற நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
11. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டிற்கான IndiaAI பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
அ. ரூ.551 கோடி
ஆ. ரூ.558 கோடி
இ. ரூ.547 கோடி
ஈ. ரூ.548 கோடி
- மத்திய பட்ஜெட் 2024-25இல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2024-25க்கான IndiaAI பணிக்காக `551 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட, ‘IndiaAI’ பணி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, நிர்வாகத்தை மேம்படுத்த, குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது.
- அதிநவீன AI உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், AI பயன்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் AI கல்வி மற்றும் புத தொழில்களை ஆதரிப்பதன்மூலம் AI கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய தலைமையாக நிலைநிறுத்துவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
12. அண்மையில், 14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. பெய்ஜிங், சீனா
ஆ. வியன்டியான், லாவோ PDR
இ. புது தில்லி, இந்தியா
ஈ. ஜகார்த்தா, இந்தோனேசியா
- வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர் 2024 ஜூலை.26 அன்று, லாவோ PDR, வியன்டியானில் இந்தியாவுடனான ASEAN மாநாட்டில் கலந்து கொண்டார். ஜூலை.25-27 வரையிலான அவரது மூன்று நாள் பயணத்தில் ASEAN-இந்தியா, கிழக்காசிய உச்சிமாநாட்டிலும் பங்கேற்றார். ASEAN தலைமைப் பொறுப்பை கொண்டுள்ளது என்ற முறையில் லாவோ இந்நிகழ்வுகளை நடத்தியது. லாவோவின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சலேயும்சே கொம்மசித் அவர்களும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் 10 ASEAN உறுப்புநாடுகளைச்சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்.
பாரீஸ் ஒலிம்பிக்கில், துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு பன்னீராண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு பதக்கம் மீண்டும் வசமாகியிருக்கிறது.
1. According to the Union Budget 2024-25, how much financial allocation has the Ministry of Railways received for the fiscal year 2024-25?
A. Rs 1.78 lakh crore
B. Rs 2.55 lakh crore
C. Rs 4.34 lakh crore
D. Rs 3.78 lakh crore
- For the fiscal year 2024-25, the Union Budget allocated a record ₹2.55 lakh crore to the Ministry of Railways, marking a 5.85% increase from the previous year’s ₹2.41 lakh crore. Despite this significant funding boost, the Economic Survey 2023-24 highlights limited progress on key safety initiatives, including the deployment of the automatic train protection system Kavach and the overhaul of signaling systems at railway stations.
2. According to Union Budget 2024-25, how much funding has been allocated for the ‘Khelo India’ initiative?
A. Rs 600 crore
B. Rs 800 crore
C. Rs 900 crore
D. Rs 400 crore
- In the Union Budget 2024-25, the Khelo India initiative received ₹900 crore, a ₹20 crore increase from the previous year’s allocation of ₹880 crore. Khelo India, focused on grassroots sports development, continues to be a top priority for the government. Launched in 2018, it has expanded to include Khelo India University Games, Winter Games, and Para Games. Numerous State Centres of Excellence have been established to support young athletes.
3. What is the rank of India in ‘Henley Passport Index 2024’?
A. 25th
B. 52nd
C. 82nd
D. 28th
- The Henley Passport Index 2024 ranks the Indian passport 82nd, providing visa-free access to 58 countries, including Indonesia, Maldives, and Thailand. Singapore tops the index with visa-free entry to 195 countries, while France, Italy, Germany, Spain, and Japan are second with 192 destinations. Austria, Finland, Ireland, Luxembourg, Netherlands, South Korea, and Sweden share third place (191 countries), and the UK, New Zealand, Norway, Belgium, Denmark, and Switzerland are fourth (190 countries).
4. What is ‘Tax Incidence’?
A. The process of setting tax rates
B. The division of tax burden between stakeholders
C. The methods of collecting taxes
D. The history of tax legislation
- The Union government has stated that the Goods and Services Tax (GST) has reduced the tax burden on common people. Tax incidence refers to how a tax burden is divided between stakeholders such as buyers and sellers. There are two forms: statutory incidence, which determines who is legally responsible for paying the tax, and economic incidence, which reflects the final burden on economic welfare.
5. Which day is observed as ‘Kargil Vijay Diwas’ in India?
A. 25 July
B. 26 July
C. 27 July
D. 28 July
- Kargil Vijay Diwas, observed on 26 July, commemorates the Indian Army’s victory over Pakistan in the 1999 Kargil Conflict. On its 25th anniversary, Prime Minister Narendra Modi visits the Drass sector in Ladakh to honor the martyrs at the Kargil War Memorial. The Kargil War, fought from May 8 to July 26, 1999, saw Pakistani forces disguised as mujahideen infiltrating Indian posts. India’s Operation Vijay successfully evicted them.
6. Which country hosts 21st edition of the multinational joint military exercise Khaan Quest 2024?
A. China
B. India
C. Mongolia
D. Japan
- Indian Army has participated in the 21st KHAAN QUEST multinational military exercise in Ulaanbaatar, Mongolia from 27 July to 9 August 2024. Co-sponsored by the US Indo-Pacific Command and hosted by the Mongolian Armed Forces, KHAAN QUEST promotes regional peace and security. Initially a US-Mongolia bilateral exercise in 2003, it became multilateral in 2008. The exercise focuses on peacekeeping operations, enhancing skills for future UN peacekeeping missions.
7. Recently, where was the country’s 500th Community Radio Station inaugurated?
A. Shillong
B. Aizawl
C. Kohima
D. Gangtok
- On 25 July 2024, Union Minister for Information and Broadcasting, Ashwini Vaishnaw, announced the winners of the 10th National Community Radio Award and inaugurated India’s 500th Community Radio Station at the Indian Institute of Mass Communication in Aizawl, Mizoram.
- Named Apna Radio 90.0 FM, it will provide weather updates, government schemes, and agriculture information. Community Radios, unlike public and commercial radio, are low-power stations operated by local communities in local languages, focusing on issues like nutrition and health. They can be set up by educational institutions, community-based organizations, registered societies, and trusts.
8. Recently, which shipyard has launched the first indigenously-built Talwar class frigate, ‘Triput’?
A. Cochin Shipyard Limited (CSL)
B. Mazagon Dock Shipbuilders Limited (MDL)
C. Hindustan Shipyard Limited
D. Goa Shipyard Limited (GSL)
- Goa Shipyard Limited (GSL) launched the first indigenously-built Talwar class frigate, ‘Triput.’ Part of a 2016 India-Russia deal, Triput is among four Admiral Grigorovich class frigates, with two built in India via technology transfer. The Indian Navy already operates six of this class.
- INS Triput, 124m long and 15.5m wide, is powered by four gas turbines, reaching speeds of 28 knots with a 3200-ton displacement. It features stealth-enhancing hull design, advanced weapons and sensors, an Integrated Platform and Bridge Management System, and a robust air defense system with vertical launch long-range surface-to-air missiles.
9. What is the primary objective of the ‘NPS Vatsalya Scheme’?
A. To provide health insurance to tribal families
B. To offer education loans to students for higher education
C. To help parents and guardians plan for their children’s future financial needs
D. To plan for parents’ retirement
- The finance minister announced NPS Vatsalya, a new scheme under the National Pension Scheme (NPS) to help parents and guardians plan for their children’s future financial needs. Parents can open an account for their minor children, with funds accumulating until the child turns 18. Upon adulthood, the amount transfers to a standard NPS account and can be converted into a non-NPS plan.
10. What is the main purpose of the ‘Skill Loan Scheme’, recently mentioned in Union Budget 2024-25?
A. To offer scholarships for higher education
B. To provide institutional credit for skill development courses
C. To fund start-up business
D. To support home loans for skilled workers
- The finance minister announced a revision to the model Skill Loan Scheme, now facilitating loans up to Rs 7.5 lakh, backed by a government-promoted fund guarantee. Introduced in July 2015, the scheme offers institutional credit for skill development courses aligned with National Occupations Standards and Qualification Packs, conducted by NSQF-compliant training institutes. It applies to all Indian Banks’ Association (IBA) member banks and RBI-advised financial institutions.
11. How much funding has been allocated for the IndiaAI Mission for 2024-25 by the Ministry of Electronics and IT?
A. Rs 551 crore
B. Rs 558 crore
C. Rs 547 crore
D. Rs 548 crore
- In the Union Budget 2024, the Ministry of Electronics and IT received ₹551 crore for the IndiaAI Mission for 2024-25. Launched by the Government of India, the IndiaAI Mission focuses on leveraging Artificial Intelligence (AI) to boost economic growth, enhance governance, and improve citizens’ quality of life. The mission aims to establish India as a global leader in AI innovation and adoption by developing advanced AI infrastructure, promoting AI applications, and supporting AI education and startups.
12. Recently, where was the 14th East Asia Summit Foreign Ministers’ Meeting (EAS FMM) held?
A. Beijing, China
B. Vientiane, Lao PDR
C. New Delhi, India
D. Jakarta, Indonesia
- External Affairs Minister S Jaishankar attended the ASEAN Post-Ministerial Conference with India in Vientiane, Lao PDR, on July 26, 2024. His three-day visit from July 25-27 included participation in ASEAN-India, East Asia Summit (EAS), and ASEAN Regional Forum (ARF) meetings. The Lao PDR, as ASEAN chairman, hosted these events. Saleumxay Kommasith, Lao PDR’s Deputy Prime Minister and Foreign Minister, also attended. The conference saw foreign ministers from the 10 ASEAN member states.