TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 29th August 2024

1. அண்மையில், தேசிய பாதுகாப்புப்படையின் (NSG) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. B சீனிவாசன்

ஆ. R K விஸ்வகர்மா

இ. அசோக் குமார்

ஈ. அருண் சிங்

  • 2024 ஆக.27 அன்று, மூத்த இகாப அதிகாரி B சீனிவாசனை தேசிய பாதுகாப்புப்படையின் (NSG) புதிய தலைமை இயக்குநராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. தற்காலிகமாக NSG-க்குத் தலைமைதாங்கிய CRPF தலைமை இயக்குநர் அனிஷ் தயாள் சிங்குக்குப் பதிலாக B சீனிவாசன் நியமிக்கப்பட்டார். NSGஇன் தலைமை இயக்குநராக இருக்கும் B சீனிவாசனின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட்.31 அன்று அவர் ஓய்வு பெறும் வரை நீடிக்கும். 1986இல் நிறுவப்பட்ட NSG, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் படையாகும்.

2. Mimetus spinatus மற்றும் Mimetus parvulus ஆகியவை சார்ந்த இனம் எது?

அ. பாம்பு

ஆ. சிலந்தி

இ. மீன்

ஈ. தவளை

  • இந்திய விலங்கியல் ஆய்வு மையமானது (ZSI) தென்மேற்குத்தொடர்ச்சி மலையில் Mimetus spinatus மற்றும் Mimetus parvulus என்ற இரண்டு புதிய சிலந்தி இனங்களைக் கண்டறிந்துள்ளது. இந்தச் சிலந்திகள் கர்நாடக மாநிலத்தின் மூகாம்பிகை வனவிலங்கு சரணாலயம் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. Mimetidae குடும்பத்தைச் சேர்ந்த இவ்விரண்டு சிலந்திகளும், ‘கொள்ளையர்’ அல்லது ‘நரமாமிசம் உண்ணும் சிலந்திகள்’ என அழைக்கப்படுகின்றன. 118 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் முதன்முதலாக Mimetus இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3. டாலே பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள வடகிழக்கு மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. குஜராத்

இ. கேரளா

ஈ. பீகார்

  • மும்பையைச் சேர்ந்த செதிலிறக்கையின நிபுணர் ஒருவர் அருணாச்சல பிரதேசத்தின் கீழ் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டாலே வனவிலங்கு சரணாலயத்தில் தான் மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின்போது 85 பட்டாம்பூச்சி இனங்களைப் பதிவுசெய்தார். டாலே பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயமானது அருணாச்சல பிரதேசத்தின் கீழ் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயம் 337 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு பீடபூமியாகும். 2400 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. பாங்கே, சிபு, கரிங் மற்றும் சுபன்ஸ்ரீ போன்ற ஆறுகள் இந்தச் சரணாலயத்தின் வழியாகப் பாய்கின்றன. இது அபதானி பழங்குடியினரின் தாயகமாகும். துணை வெப்ப மண்டல மற்றும் அல்பைன் காடுகளை இச்சரணாலயம் கொண்டுள்ளது.

4. அண்மையில், 156 Fixed-Dose Combination மருந்துகளை தடைசெய்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. பூடான்

ஈ. மியான்மர்

  • இந்திய அரசாங்கம் 156 Fixed-Dose Combination (FDC) மருந்துகளைத் தடைசெய்துள்ளது. FDC மருந்துகளின் ஒரு மாத்திரை, பொதிமருந்து அல்லது ஊசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துப்பொருட்கள் இணைக்கப்படுகின்றன. காசநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர்-இரத்த அழுத்தம்போன்ற நிலைமைகளுக்கு அவை பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன; இதன்காரணமாக நோயாளிகள் நாள்தோறும் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளின் எண்ணிக்கை குறைகிறது. தடைசெய்யப்பட்ட FDCகள், கூடுதல் சிகிச்சை பலன்களை வழங்குவதில்லை என்ற காரணத்தால் அவை “அறிவுக்கொவ்வாதவை” என்று கருதப்படுகின்றன.

5. அண்மையில், ‘7ஆவது அனுபவ விருதுகள் விழா’ நடைபெற்ற இடம் எது?

அ. போபால்

. புது தில்லி

இ. ஹைதராபாத்

ஈ. சென்னை

  • பிரதமரின் வழிகாட்டுதலின்கீழ் ஓய்வூதியம் & ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால் (DOPPW) 2015 மார்ச்சில் ‘அனுபவ்’ என்ற இணைய நுழைவு தொடங்கப்பட்டது. ஓய்வுபெறவுள்ள மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்கள் தங்கள் சேவையின்போது அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பகிர்ந்துகொள்ள இது அனுமதிக்கிறது. இதுவரை 54 அனுபவ விருதுகளும், 9 ஜூரி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 7ஆவது அனுபவ விருதுகள் வழங்கும் விழா 2024 ஆக.28 அன்று புது தில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. மத்திய அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் விருதுகளை வழங்கினார். ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்களின் அடிப்படையில் நல்லாட்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த விருதுகள்.

6. ‘சூரிய பரவளையவுரு’ என்பது என்ன வகையான தொழில்நுட்பமாகும்?

அ. செறிவூட்டும் சூரிய ஆற்றல்

ஆ. வளியாற்றல்

இ. புனல் மின்சாரம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • ‘சூரிய பரவளையவுரு – Solar Paraboloid’ தொழில்நுட்பம் என்பது சூரிய ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தற்கான ஒரு நம்பிக்கைக்குரிய நவீன செயல்முறையாகும். இது Parabolic Trough Collectorஐ பயன்படுத்தும் ஒரு வகையான செறிவூட்டும் சூரிய ஆற்றலாகும். பரவளைய கண்ணாடிகள் சூரியவொளியைக் குவியக்கோட்டில் உள்ள ரிசீவர் குழாயின்மீது செலுத்துகின்றன. இந்தத் தொழில்நுட்பம் வழமையான ஒளிமின்னழுத்த அமைப்புகளைவிட அதிக நன்மைகளை வழங்குகிறது; இதில் அதிக இயக்க வெப்பநிலை, அதிக வெப்பத்திறன் மற்றும் குறைக்கப்பட்ட வெப்ப இழப்புகள் ஆகியவை அடங்கும். இருப்பினும், அதிகமான முன்செலவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு தேவைகள்போன்ற சவால்களை இது எதிர்கொள்கிறது.

7. அண்மையில், தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் எத்தனை புதிய பைங்கள (greenfield) தொழிற்துறை சீர்மிகு நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?

அ. 10

ஆ. 11

இ. 12

ஈ. 13

  • தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 12 புதிய பைங்கள தொழிற்துறை நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கான மொத்த முதலீடு `28,602 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அந்நகரங்கள் 1 மில்லியன் நேரடி வேலைகளையும் 3 மில்லியன் மறைமுக வேலைகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு முக்கிய வழித்தடங்களில் பத்து மாநிலங்களில் இந்தத் திட்டங்கள் அமையும். திட்டமிடப்பட்ட இடங்களில் குர்பியா (உத்தரகாண்ட்), கயா (பீகார்), இராஜ்புரா-பாட்டியாலா (பஞ்சாப்), ஜஹீராபாத் (தெலுங்கானா), திகி (மகாராஷ்டிரா), ஓர்வகல் மற்றும் கொப்பார்த்தி (ஆந்திரம்), பாலக்காடு (கேரளா), ஜோத்பூர்-பாலி (இராஜஸ்தான்) மற்றும் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் (உத்தர பிரதேசம்) ஆகியவை அடங்கும்.

8. அண்மையில், பன்னாட்டுக் கிரிக்கெட் அவையின் (ICC) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ஜெய் ஷா

ஆ. ஷஷாங்க் மனோகர்

இ. குடாகேஷ் மோதி

ஈ. லோர்கன் டக்கர்

  • பன்னாட்டுக் கிரிக்கெட் அவையின் (ICC) புதிய தலைவராக 2024 ஆக.27 அன்று ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக பதவியேற்க விரும்பாத கிரெக் பார்க்லேக்குப் பதிலாக ஜெய் ஷா (35) ICCஇன் இளைய தலைவராக இருப்பார். ஜெய் ஷா தனது பதவிக்காலத்தை 2024 டிச.01 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவார். ஜெய் ஷா இதற்கு முன்பு ICCஐன் நிதி மற்றும் வணிக விவகார துணைக்குழுவின் தலைவராக இருந்துள்ளார்.

9. அண்மையில், அணுவாற்றலில் இயங்கும் இந்தியாவின் இரண்டாவது எறிகணை நீர்மூழ்கிக்கப்பலான INS அரிகாட், கீழ்க்காணும் எந்த இடத்தில் வைத்து பணியில் இணைக்கப்பட்டது?

அ. மும்பை, மகாராஷ்டிரா

ஆ. கொச்சி, கேரளா

இ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

ஈ. சென்னை, தமிழ்நாடு

  • அணுவாற்றலில் இயங்கும் இந்தியாவின் இரண்டாவது எறிகணை நீர்மூழ்கிக்கப்பலான INS அரிகாட் ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் வைத்து கடற்படையில் இணைக்கப்பட்டது. இது INS அரிஹந்தின் நவீன பதிப்பாகும்; இது இந்தியாவின் கடற்படை திறன்கள் மற்றும் அணுசக்தி தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. K15 எறிகணைகளுடன் ஆயுதமேந்திய INS அரிகாட்டால், 750 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கமுடியும்.

10. 61ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?

அ. நீலாஷ் சாஹா

ஆ. சூர்யா சேகர்

இ. கார்த்திக் வெங்கட்ராமன்

ஈ. விக்ராந்த் சிங்

  • குர்கானில் நடைபெற்ற 61ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் கார்த்திக் வெங்கட்ராமன் சாம்பியனானார். ஹரியானா செஸ் சங்கமானது RPS இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. கார்த்திக் வெங்கட்ராமன் கோப்பை மற்றும் `6 இலட்சம் ரொக்கப்பரிசினைப் பெற்றார். போட்டியை வழிநடத்திய சூர்யா கங்குலி, `5 லட்சம் ரொக்கப்பரிசுடன் இரண்டாமிடம் பிடித்தார். IM நீலாஷ் சாகாவும் ஒன்பது புள்ளிகளைப் பெற்றார்; ஆனால் குறைந்த டைபிரேக்குகள் காரணமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார்; அவருக்கு `4 இலட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

11. ஆண்டுதோறும், ‘தேசிய விளையாட்டு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 27 ஆகஸ்ட்

ஆ. 28 ஆகஸ்ட்

இ. 29 ஆகஸ்ட்

ஈ. 30 ஆகஸ்ட்

  • தேசிய விளையாட்டு நாளானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்.29 அன்று இந்தியாவில் விளையாட்டு மற்றும் உடல் தகுதியை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஹாக்கியில் இந்தியாவின் வெற்றிக்குப் பெரிதும் பங்களித்த புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை இந்த நாள் குறிக்கிறது. தேசிய விளையாட்டு நாள் இளைஞர்களை விளையாட்டில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப் பொருள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட இந்நாளுக்கானக் கருப் பொருள், “Sports are an enabler to an inclusive and fit society” ஆகும்.

12. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. புதிய & புதுப்பிக்கத்தக்க அமைச்சகம்

  • காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (BPR&D) புது தில்லியில் தனது 54ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது. காவல்துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்குழுவிற்கு மாற்றாக 1970ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின்கீழ் BPR&D நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. BPR&D என்பது காவல்துறையின் தேவைகளைக்கண்டறிதல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் மற்றும் சவால்களுக்கான தீர்வுகளைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது காவல்துறையில் அறிவியல் & தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. BPR&D ஆனது காவல் துறை பயன்படுத்தும் உபகரணங்களுக்கான தரநிலைகளை உருவாக்க உதவுகிறது மற்றும் தேசிய காவல்துறை பணியை ஒருங்கிணைக்கிறது. இது நாடு முழுவதும் 5 மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘ஹெலன் கெல்லர்’ விருது: தமிழ்நாடு அரசு ஆணை.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியளிக்கும் ஆசிரியர்களுக்கான, ‘ஹெலன் கெல்லர்’ விருது குறித்த ஆணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. பார்வை மற்றும் செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வியளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் நாளன்று (டிச.03) வழங்கப்படும் அரசு விருது, ‘ஹெலன் கெல்லர்’ பெயரில் அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

2. நல்லி – திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு கடந்த 2004 முதல் ‘நல்லி – திசை எட்டும் மொழியாக்க விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

விருதாளர்கள் விவரம்: சமயவேல் – ‘கருமை’ – சிறுகதைத் தொகுப்பு; க. மூர்த்தி – ‘ஆரண்ய தாண்டவம்’ – புதினம்; எம். டி. முத்துக்குமாரசாமி – ‘நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்’ – கவிதைத் தொகுப்பு; ஜெ. பிரியதர்ஷினி – ‘பிளாக் சாயில்’ – ஆங்கில மொழியாக்க புதினம்; பி. இராம்கோபால் – ‘பால்ம் லைன்ஸ்’ – ஆங்கில மொழியாக்க புதினம்; பாபுராஜ் களம்பூர் – ‘பார்த்திபன் கனவு’ – மலையாள மொழியாக்க புதினம்; கொ.மா.கோ. இளங்கோ – ‘ புத்திசாலி பெட்டூனியா’ – சிறார் சிறுகதைத் தொகுப்பு.

1. Recently, who has been appointed as the new Director General of the National Security Guard?

A. B Srinivasan

B. RK Vishwakarma

C. Ashok Kumar

D. Arun Singh

  • The Appointment Committee of the Union Cabinet approved the appointment of senior IPS officer B. Srinivasan as the new Director General of the National Security Guard (NSG) on August 27, 2024. B Srinivasan replaced CRPF Director General Anish Dayal Singh, who temporarily led the NSG. Srinivasan’s term as NSG Director General will last until his retirement on Aug.31, 2027. The NSG, established in 1986, is an elite counter-terrorism force under the Union Ministry of Home Affairs.

2. Mimetus spinatus and Mimetus parvulus are belongs to which species?

A. Snake

B. Spider

C. Fish

D. Frog

  • The Zoological Survey of India (ZSI) discovered two new spider species, named Mimetus spinatus and Mimetus parvulus, in the southern Western Ghats. These spiders were found in Karnataka’s Mookambika Wildlife Sanctuary and Kerala’s Ernakulam district. Both belong to the Mimetidae family, known as pirate or cannibal spiders. These discoveries mark the first Mimetus species in India after 118 years.

3. Talle Valley Wildlife Sanctuary is located in which northeastern state?

A. Arunachal Pradesh

B. Gujarat

C. Kerala

D. Bihar

  • A Mumbai-based lepidopterist recorded 85 butterfly species during a four-day expedition at Tale Wildlife Sanctuary in Arunachal Pradesh’s Lower Subansiri district. Talley Valley Wildlife Sanctuary is located in Arunachal Pradesh’s Lower Subansiri district. The sanctuary is a plateau covering 337 sq. km and is situated at an altitude of 2400 meters. Rivers like Pange, Sipu, Karing, and Subansiri flow through the sanctuary. It is home to the Apatani tribe. The sanctuary features subtropical and alpine forests.

4. Which country has recently banned 156 Fixed-Dose Combination (FDC) drugs?

A. India

B. Nepal

C. Bhutan

D. Myanmar

  • The Indian government has banned 156 Fixed-Dose Combination (FDC) drugs. FDC drugs combine two or more Active Pharmaceutical Ingredients (APIs) in one pill, capsule, or injection. They are commonly prescribed for conditions like tuberculosis, diabetes, and hypertension to make it easier for patients by reducing the number of pills they need to take daily. The banned FDCs were considered “irrational” because they do not offer any additional therapeutic benefits.

5. Recently, where was the ‘7th Anubhav Awards Ceremony’ held?

A. Bhopal

B. New Delhi

C. Hyderabad

D. Chennai

  • The ‘Anubhav’ online platform was launched in March 2015 by the Department of Pension & Pensioners’ Welfare (DOPPW) under the Prime Minister’s directions. It allows retiring and retired employees to share their significant achievements during their service. So far, 54 Anubhav Awards and 9 Jury Certificates have been given out.
  • The 7th Anubhav Awards Ceremony took place on August 28, 2024, at Vigyan Bhawan, New Delhi. Dr. Jitendra Singh, Minister of State, presented the awards. The awards aim to promote good governance and administrative reforms based on the experiences shared by retiring central government employees.

6. What type of technology is a ‘Solar Paraboloid’?

A. Concentrating Solar Power (CSP)

B. Wind Power

C. Hydroelectric Power

D. None of the above

  • Solar Paraboloid technology is a promising advancement for improving solar energy efficiency. It is a type of Concentrating Solar Power (CSP) that uses a Parabolic Trough Collector (PTC). Parabolic mirrors focus sunlight onto a receiver tube at the focal line. This technology offers advantages over traditional photovoltaic (PV) systems, including higher operating temperatures, greater thermal efficiency, and reduced heat losses. However, it faces challenges like high upfront costs and significant infrastructure needs.

7. Recently, how many new greenfield industrial smart cities have been approved under the National Industrial Corridor Development Programme?

A. 10

B. 11

C. 12

D. 13

  • The Union Cabinet has approved twelve new greenfield industrial smart cities under the National Industrial Corridor Development Programme.The total investment for these projects is estimated at 28,602 crore rupees. They are expected to create 1 million direct jobs and up to 3 million indirect jobs. The projects will be located across ten states along six major corridors.
  • The planned locations include Khurpia (Uttrakhand), Gaya (Bihar), Rajpura-Patiala (Punjab), Zaheerabad (Telangana), Dighi (Maharashtra), Orvakal and Kopparthy (Andhra Pradesh), Palakkad (Kerala), Jodhpur-Pali (Rajasthan), and Agra and Prayagraj (Uttar Pradesh).

8. Recently, who has been elected as the new chairman of the International Cricket Council (ICC)?

A. Jay Shah

B. Shashank Manohar

C. Gudakesh Motie

D. Lorcan Tucker

  • Jay Shah was elected as the new chairman of the International Cricket Council (ICC) on August 27, 2024. At 35, Shah will be the youngest ICC chairman, succeeding Greg Barclay, who chose not to seek a third term. Shah will officially start his role on December 1, 2024. Shah has previously chaired the ICC’s Finance and Commercial Affairs subcommittee.

9. Recently, India’s second nuclear-powered ballistic missile submarine, INS Arighat, was commissioned at which place?

A. Mumbai, Maharashtra

B. Kochi, Kerala

C. Visakhapatnam, Andhra Pradesh

D. Chennai, Tamil Nadu

  • INS Arighat, India’s second nuclear-powered ballistic missile submarine, was commissioned into the Navy in Visakhapatnam, Andhra Pradesh. It is an upgraded version of INS Arihant, boosting India’s naval capabilities and nuclear deterrence. Armed with K-15 ballistic missiles, INS Arighat can strike targets up to 750 kilometers away.

10. Who won the 61st National Chess Championship?

A. Neelash Saha

B. Surya Shekhar

C. Karthik Venkataraman

D. Vikrant Singh

  • Grandmaster Karthik Venkataraman from Andhra Pradesh won the 61st National Chess Championship in Gurgaon. The event was organized by The Haryana Chess Association at RPS International School. Karthik received a trophy and a cash prize of six lakh rupees. Surya Ganguly, who led the tournament, finished second with a prize of five lakh rupees. IM Neelash Saha also scored nine points but placed third due to lower tiebreaks, earning four lakh rupees.

11. Which day is celebrated as ‘National Sports Day’ annually?

A. 27 August

B. 28 August

C. 29 August

D. 30 August

  • National Sports Day is celebrated every year on August 29 in India to honor the spirit of sports and physical fitness. The day marks the birth anniversary of Major Dhyan Chand, a legendary hockey player who greatly contributed to India’s success in hockey. National Sports Day aims to inspire youth participation in sports and promote a healthy, active lifestyle. The theme for 2024 has not been announced yet; last year’s theme was “Sports are an enabler to an inclusive and fit society.”

12. Bureau of Police Research & Development (BPR&D) comes under which ministry?

A. Ministry of Urban Development

B. Ministry of Defence

C. Ministry of Home Affairs

D. Ministry of New and Renewable Energy

  • The Bureau of Police Research and Development (BPR&D) celebrated its 54th Foundation Day in New Delhi. BPR&D was established in 1970 under the Ministry of Home Affairs, replacing the Police Research and Advisory Council. Its headquarters is in New Delhi. BPR&D aims to identify police needs, conduct research, and suggest solutions for challenges. It promotes the use of science and technology in police work. BPR&D helps develop standards for police equipment and coordinates the National Police Mission. It has five Central Detective Training Institutes across India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!