Tnpsc Current Affairs in Tamil & English – 29th & 30th September 2024
1. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா கிராமம் விருது’ பெற்ற ஆண்ட்ரோ கிராமம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. மணிப்பூர்
ஆ. நாகாலாந்து
இ. அஸ்ஸாம்
ஈ. மிசோரம்
- மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஆண்ட்ரோ கிராமம் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில் பாரம்பரியப்பிரிவில் சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருதை வென்றது. புது தில்லியில் நடந்த உலக சுற்றுலா நாள் கொண்டாட்டத்தின்போது சுற்றுலா அமைச்சகத்தால் இந்த விருது வழங்கப்பட்டது. அக்கிராமத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான தீ வழிபாடு உட்பட தனித்துவமான மரபுகள் அதன் தேர்வுக்குப் பங்களித்தன. ஆண்ட்ரோ கிராமத்தின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.
2. சீனாவில் எந்த ஆற்றில், “மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை” அமைந்துள்ளது?
அ. மஞ்சளாறு
ஆ. மீகாங் ஆறு
இ. யாங்சே ஆறு
ஈ. முத்தாறு
- சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணையானது பேரளவிலான நீரை வெளியேற்றுவதால் பூமியின் சுழற்சியை அது பாதிக்கலாம் என NASA அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹூபே மாகாணத்தில் யாங்சே ஆற்றின் மீது அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும். 2012இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை 2,335 மீ நீளமும் 185 மீ உயரமும் கொண்டது. அதன் நீர்த்தேக்கத்தில் 40 கன கிமீ தண்ணீர் உள்ளது. 22,500 மெகாவாட் மின்சாரம் அதில் உற்பத்தி செய்யப்படுகிறது. விசையாழிகளை சுழற்றுவதற்கு இது குடாங்சியா, வுசியா மற்றும் ஜிலிங்க்ஸியா பள்ளத்தாக்குகளிலிருந்து பெறும் நீரைப் பயன்படுத்துகிறது.
3. அண்மையில், யாருக்கு மதிப்புமிக்க 2024 – சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு வழங்கப்பட்டது?
அ. ருயிக்ஸியாங் ஜாங்
ஆ. ஆதிநாராயண டோடி
இ. ரீட்டா சின்ஹா
ஈ. அலெக்சாண்டர் டன்
- 2024 – சாஸ்த்ரா இராமானுஜன் பரிசை அலெக்சாண்டர் டன் வென்றார். இப்பரிசு, 2005ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்டது. இது ஆண்டுதோறும் இராமானுஜனின் பிறந்தநாளான டிச.22 அன்று 32 வயதிற்குட்பட்ட கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வயது வரம்பு ராமானுஜனின் குறுகிய வாழ்நாளில் அவர் செய்த சாதனைகளை மதிக்கிறது. இந்த விருது ஒரு சான்றிதழ் மற்றும் $10,000 ரொக்கப்பரிசை உள்ளடக்கியது.
4. சிறு தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக “பனா கை” திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
அ. நாகாலாந்து
ஆ. அருணாச்சல பிரதேசம்
இ. மிசோரம்
ஈ. அஸ்ஸாம்
- சிறு தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளை ஆதரிப்பதற்காக மிசோரம் மாநில அரசு ‘பனா கை’ முயற்சியைத் தொடங்கியது. இஞ்சி, மஞ்சள் மற்றும் மிசோ மிளகாய் பயிரிடும் விவசாயிகளுக்கு இத்திட்டம் நிதியுதவி வழங்குகிறது. கிராமங்களில் உள்ள விவசாய சங்கங்கள் இந்தப் பயிர்களை அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச விலையுடன் கொள்முதல் செய்யும். இந்த விலைக்குக் கீழே விற்றால் விவசாயிகள் ஆதரவு விலையைப் பெறுவார்கள்; விலை அதிகமாக இருந்தால் அரசின் தலையீடு அதில் இருக்காது.
5. “ஜிஹாத்” என்று பெயரிடப்பட்ட எறிகணை அமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்திய நாடு எது?
அ. உக்ரைன்
ஆ. ஈராக்
இ. இஸ்ரேல்
ஈ. ஈரான்
- ஈரான் தெகுரானில் நடந்த இராணுவ அணிவகுப்பில், “ஜிஹாத்” என்று பெயரிடப்பட்ட அதன் சமீபத்திய எறிகணை அமைப்பை ஈரான் வெளியிட்டது. இந்த எறிகணையை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) விண்வெளிப் படை உருவாக்கியுள்ளது. இது ஈரானின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு புதிய திரவ எரிபொருள் எறிகணை தளத்தை அறிமுகப்படுத்துவதைக் குறிக்கிறது. ஈரானின் இப்புதிய எறிகணை, பிராந்தியத்தில் அதன் சாத்தியமான சீர்குலைவு விளைவுகள்குறித்து மேற்கத்திய நாடுகளிடையே கவலையை எழுப்பியுள்ளது.
6. 2024 – ஹாங்சோ ஓபன் (ATP 250) ஆடவர் இரட்டையர் பிரிவில் ஜெர்மனியை வீழ்த்தி பட்டத்தை வென்ற இந்திய வீரர்கள் யார்?
அ. திக்விஜய் பிரதாப் மற்றும் சுரேஷ் குமார்
ஆ. ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த்
இ. விஜய் அமிர்தராஜ் மற்றும் சித்தார்த் ராவத்
ஈ. முகுந்த் சசிகுமார் மற்றும் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்
- 2024 – ஹாங்சோ ஓபன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் மற்றும் விஜய் சுந்தர் பிரசாந்த் இணை பட்டத்தை வென்றது. அவர்கள் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் கான்ஸ்டான்டின் ஃபிரான்ட்சன் மற்றும் ஹென்ட்ரிக் ஜெபன்ஸை தோற்கடித்தனர். ஒரு மணி நேரம் 49 நிமிடங்களில் இந்திய ஜோடி 4-6, 7 (7)-6 (5), 10-7 என்ற கணக்கில் வென்றது. இது அவர்களின் முதல் ATP டூர் பட்டமாகும் மற்றும் ஜீவன் நெடுஞ்செழியனின் இரண்டாவது ATP பட்டமாகும் இது.
7. உலகளவில் அதிகரித்துள்ள டெங்கு காய்ச்சல், முதன்மையாக எந்த வகை கொசுக்களால் பரவுகிறது?
அ. ஏடிஸ் எஜிப்டி
ஆ. அனோபிலிஸ் ஸ்டீபன்சி
இ. கியூலெக்ஸ் பைபியன்ஸ்
ஈ. ஏடிஸ் அல்போபிக்டஸ்
- டெங்கு காய்ச்சல் என்பது முதன்மையாக ஏடிஸ் எஜிப்டி கொசுவினால் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இந்தக் கொசு நகர்ப்புறங்களில், குறிப்பாக தூய்மையான, தேங்கி நிற்கும் நீரில் நன்கு வளர்கிறது; இது மக்கள் அடர்த்தியான பகுதிகளில் தொற்றுநோய்களுக்கு காரணமாகிறது.
- 2024ஆம் ஆண்டில், உலகளவில் 12 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன; பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் காணப்படுகின்றன. டெங்கு பாதிப்பின் அதிகரிப்புக்கு நகரமயமாக்கல், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் அதிகரித்த உலகளாவிய போக்குவரவுபோன்ற காரணிகள் காரணமாகும்; இது வைரஸ் மற்றும் அதன் நோய்க்கிருமிகளின் பரவலை எளிதாக்குகிறது.
8. அண்மையில், கீழ்க்காணும் எந்த விமான நிலையத்திற்கு, “ஜகத்குரு சந்த் துக்காராம் மகராஜ் விமான நிலையம்” எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது?
அ. ஜோர்ஹட் விமான நிலையம்
ஆ. புனே விமான நிலையம்
இ. கயா விமான நிலையம்
ஈ. ராய்பூர் விமான நிலையம்
- புனே விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த் துக்காராம் மகராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்த் துக்காராம் மகாராஜ் 17ஆம் நூற்றாண்டின் மராத்தி கவிஞரும் ஓர் இந்து சமயத்துறவியும் ஆவார். அவர் மகாராஷ்டிராவில் துகா, துகோபராய அல்லது துகோபா என்று பரவலாக அறியப்படுகிறார்.
9. அண்மையில், பயிர் சேதத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக எந்த விலங்குகளைக்கொல்ல பீகார் மாநில அரசு முடிவுசெய்துள்ளது?
அ. நீலான் மற்றும் காட்டுப்பன்றிகள்
ஆ. குரங்குகள்
இ. யானைகள்
ஈ. காட்டுப்பூனைகள்
- பயிர் சேதத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து மாவட்டங்களில் நீலான் (நீலக்காளைகள்) மற்றும் காட்டுப்பன்றிகளைக் கொல்ல பீகார் அரசு முடிவுசெய்துள்ளது. இந்த முயற்சி கிழக்குச் சம்பரான், வைஷாலி, பக்ஸார், சிவான் மற்றும் சமஸ்திபூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொடங்கும். அதிகாரிகளுடனான விரிவான கலந்துரையா -டலைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த முடிவு, இந்த விலங்குகளால் நஷ்டத்தை எதிர்கொள்ளும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. நிறுவப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க கொல்லும் செயல்முறைகள் பின்பற்றப்படும்; இது தொடர்புடைய செலவுகளுக்கு விவசாயத்துறை பொறுப்பேற்கும்.
10. நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் எந்தத்தேதி “அந்தியோதயா நாள்” என்று கொண்டாடப்படுகிறது?
அ. 25 செப்டம்பர்
ஆ. 26 செப்டம்பர்
இ. 27 செப்டம்பர்
ஈ. 28 செப்டம்பர்
- பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2024 செப்டம்பர்.25 அன்று அந்தியோதயா நாள் அனுசரிக்கப்படுகிறது. அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக “அந்தியோதயா”வை ஊக்குவித்தார்.
- “ஒருங்கிணைந்த மனிதநேயம்” என்ற அவரது தத்துவம் சமூக நீதி, பொருளாதார சமத்துவம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்தியது. அவர் பாரதிய ஜனசங்கத்தை (BJS) இணைந்து நிறுவினார்; அது பின்னர் பாரதிய ஜனதா கட்சியாக (BJP) ஆனது. கடந்த 2014 முதல், அந்தியோதயா நாள் அவரது பங்களிப்புகளை நினைவுகூருகிறது. தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (NRLM) 2015இல் அவரது பெயரில் மறுபெயரிடப்பட்டது. 2018இல், முகல் சராய் சந்திப்புக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. 1968இல் முகல் சராயில்தான் அவர் இறந்தார்.
11. 2024 – உலக ஆறுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Waterways of Life
ஆ. Waterways in our Communities
இ. Water is wealth
ஈ. Our Watershed in our Communities
- ஆண்டுதோறும் செப்டம்பர் நான்காவது ஞாயிற்றுக்கிழமையன்று ஆறுகளின் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் உலக ஆறுகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 22 அன்று இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இது சூழல் அமைப்புகளிலும் சமூகங்களிலும் ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்கிறது. “Waterways of Life” என்பது 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். வன விலங்குகள், விவசாயம் மற்றும் சமூகங்களுக்காக ஆறுகளைப் பாதுகாப்பதில் இது கவனம் செலுத்துகிறது. ஆறுகள் மாசு, காடழிப்பு மற்றும் அதிகப்படியான பயன்பாடுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன, விழிப்புணர்வை ஏற்படுத்துதற்கும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் இந்நாள் முக்கியமானதாக உள்ளது.
12. விண்வெளி அறிவியலில் பெண்களின் தலைமைத்துவத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட முன்னெடுப்பின் பெயர் என்ன?
அ. விண்வெளி அறிவியல் வழிகாட்டுதல் திட்டம்
ஆ. பெண்கள் அறிவியலாளர் திட்டம்
இ. விஞ்ஞான ஜோதி
ஈ. விண்வெளியில் பெண்கள் தலைமைத்துவ திட்டம் (WiSLP)
- விண்வெளியில் பெண்கள் தலைமைத்துவ திட்டத்தை (Women in Space Leadership Programme – WiSLP) பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தொடங்கியுள்ளது. இது UK-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்னெடுப்பின் (UKIERI) ஒருபகுதியாகும். விண்வெளி அறிவியலில் பாலினத்தை உள்ளடக்கிய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தலைமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவதை இந்தத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது விண்வெளி மற்றும் அது தொடர்புடைய துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
13. ஒவ்வோர் ஆண்டும் உலக சுற்றுச்சூழல் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 26 செப்டம்பர்
ஆ. 27 செப்டம்பர்
இ. 28 செப்டம்பர்
ஈ. 29 செப்டம்பர்
- ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கும் மனித நல்வாழ்வுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்.26ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது. 2011இல் சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார கூட்டமைப்பால் தொடங்கப்பட்ட இந்நாள், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. “Environmental Health: Creating Resilient Communities through Disaster Risk Reduction and Climate Change Mitigation and Adaptation” என்பது 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இக்கருப்பொருள், மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பாதுகாப்பான சமூகங்களை உருவாக்குகிறது. பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக காலநிலை தாக்கங்களுக்கு எதிரான நெகிழ்திறனை ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள்.
14. அண்மையில், ‘ABHED’ எனப்பெயரிடப்பட்ட லேசான எடைகொண்ட குண்டு துளையா கவசத்தை உருவாக்கிய அமைப்பு எது?
அ. DRDO
ஆ. ISRO
இ. HAL
ஈ. BHEL
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் IIT தில்லி ஆகியவை ABHED எனப்படும் இலகுரக குண்டு துளைக்காத கவசங்களை உருவாக்கியுள்ளன. இந்தக் கவசங்கள் பாலிமர்கள் மற்றும் உள்நாட்டு போரான் கார்பைடு பீங்கான் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. DRDOஇன் ஒத்துழைப்புடன்கூடிய உயர் ஸ்ட்ரைன் ரேட் மெட்டீரியல் கேரக்டரைசேஷன், மாடலிங் மற்றும் சிமுலேஷன் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது இந்த வடிவமைப்பு. இந்தக் கவசத்தகடுகள் தேவையான அனைத்து R&D சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளன. இந்தக் கவசங்கள் உயர் அச்சுறுத்தல் நிலை பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் இந்திய இராணுவத்தின் எடை வரம்புகளைவிட இலகுவானவை (8.2 கிலோ மற்றும் 9.5 கிலோ எடைகொண்டவை).
1. Andro, recently bagged ‘Best Heritage Tourism Village Award 2024’, is located in which state?
A. Manipur
B. Nagaland
C. Assam
D. Mizoram
- Andro Village in Manipur won the Best Tourism Village award in the Heritage category at the 2024 Best Tourism Villages Competition. The award was given by the Ministry of Tourism during World Tourism Day celebrations in New Delhi. The village’s rich cultural heritage and unique traditions, including centuries-old fire worship, contributed to its selection. Andro Village’s cultural heritage and historical temple attract tourists from around the world.
2. The “Three Gorges Dam” is located on which river in China?
A. Yellow River
B. Mekong River
C. Yangtze River
D. Pearl River
- NASA scientists suggest China’s Three Gorges Dam may affect Earth’s rotation due to shifting massive amounts of water. Located on the Yangtze River in Hubei Province, it’s the world’s largest hydroelectric power station. The dam, completed in 2012, is 2,335 meters long and 185 meters high. Its reservoir holds 40 cubic kilometers of water, generating up to 22,500 megawatts of electricity. It uses water from the Qutangxia, Wuxia, and Xilingxia gorges to spin turbines.
3. Recently, who has been awarded the prestigious 2024 SASTRA Ramanujan Prize?
A. Ruixiang Zhang
B. Adinarayana Doddi
C. Rita Sinha
D. Alexander Dunn
- Alexander Dunn won the 2024 SASTRA Ramanujan Prize. The prize was instituted in 2005 by SASTRA University in Tamil Nadu. It is awarded annually on Ramanujan’s birth anniversary, December 22, to mathematicians under 32. The age limit honors Ramanujan’s achievements during his short life. The award includes a citation and a cash prize of $10,000.
4. Which state government recently launched the “Bana Kaih scheme” to support small entrepreneurs and farmers?
A. Nagaland
B. Arunachal Pradesh
C. Mizoram
D. Assam
- Mizoram launched the Bana Kaih initiative to support small entrepreneurs and farmers. The scheme offers financial assistance to farmers growing ginger, turmeric, and Mizo chilli. Farmer societies in villages will purchase these crops, with minimum prices set by the government. Farmers will receive support prices if they sell below these rates; no government intervention if prices are higher.
5. Which country recently launched its ballistic missile system named “Jihad”?
A. Ukraine
B. Iraq
C. Israel
D. Iran
- Iran unveiled its latest ballistic missile, named “Jihad,” in a military parade in Tehran. The missile was developed by the Islamic Revolutionary Guard Corps’ (IRGC) Aerospace Force. This marks the introduction of a new liquid-fuel missile platform in Iran’s defense technology. Iran’s missile development has raised concerns among Western nations about its potential destabilizing effects in the region.
6. Which Indian players clinched the Hangzhou Open 2024 (ATP 250) men’s doubles title by defeating Germany?
A. Digvijay Prathap and Suresh Kumar
B. Jeevan Nedunchezhiyan and Vijay Sundar Prashanth
C. Vijay Amritraj and Sidharth Rawat
D. Mukund Sasikumar and Prajnesh Gunneswaran
- India’s Jeevan Nedunchezhiyan and Vijay Sundar Prashanth won the Hangzhou Open 2024 doubles title. They defeated Germany’s Constantin Frantzen and Hendrik Jebens in the final. The Indian pair came from behind to win 4-6, 7(7)-6(5), 10-7 in one hour and 49 minutes. This was their first ATP Tour title together and Jeevan’s second career ATP title.
7. Dengue fever, which has surged globally, is primarily transmitted by which mosquito species?
A. Aedes aegypti
B. Anopheles stephensi
C. Culex pipiens
D. Aedes albopictus
- Dengue fever is a viral infection transmitted primarily by the Aedes aegypti mosquito. This mosquito thrives in urban areas, particularly in clean, stagnant water, making densely populated regions susceptible to outbreaks. In 2024, more than 12 million cases were reported globally, with significant spikes in countries like Brazil and India. The rise in dengue cases is attributed to factors such as urbanization, climate change, and increased global movement, which facilitate the spread of the virus and its vectors.
8. Recently, which airport has been named as “Jagadguru Sant Tukaram Maharaj Airport”?
A. Jorhat Airport
B. Pune Airport
C. Gaya Airport
D. Raipur Airport
- The Maharashtra government approved renaming Pune airport as Jagadguru Sant Tukaram Maharaj Pune International Airport. Sant Tukaram Maharaj was a 17th-century Marathi poet and Hindu saint. He is widely known as Tuka, Tukobaraya, or Tukoba in Maharashtra.
9. Recently, the Bihar government has decided to cull which animals to protect farmers from crop damage?
A. Nilgai and Wild Boars
B. Monkeys
C. Elephants
D. Wild cats
- The Bihar government has decided to cull Nilgai (blue bulls) and wild boars in five districts to protect farmers from crop damage. This initiative will begin in five districts: East Champaran, Vaishali, Buxar, Siwan, and Samastipur. The decision follows extensive discussions with officials and aims to alleviate the burden on farmers, who face losses due to these animals. The culling will adhere to established regulations, with the Agriculture Department covering associated costs.
10. Which day is celebrated as “Antyodaya Diwas” every year across the country?
A. 25 September
B. 26 September
C. 27 September
D. 28 September
- Antyodaya Diwas is observed on September 25, 2024, to honor Pandit Deendayal Upadhyaya’s birth anniversary. He promoted “Antyodaya,” focusing on uplifting the most disadvantaged in society. His philosophy of “Integral Humanism” emphasized social justice, economic equality, and self-reliance. He co-founded the Bharatiya Jana Sangh (BJS), which later became the Bharatiya Janata Party (BJP). Since 2014, Antyodaya Diwas commemorates his contributions. The National Rural Livelihood Mission (NRLM) was renamed after him in 2015. In 2018, Mughalsarai Junction was renamed after him, where he passed away in 1968.
11. What is the theme for “World Rivers Day 2024”?
A. Waterways of Life
B. Waterways in our Communities
C. Water is wealth
D. Our Watershed in our Communities
- World Rivers Day is observed annually on the fourth Sunday of September to promote river conservation, this year on September 22. It highlights the importance of rivers in ecosystems and communities and encourages protection efforts. The 2024 theme, ‘Waterways of Life,’ focuses on safeguarding rivers for wildlife, agriculture, and communities. Rivers face threats like pollution, deforestation, and overuse, making the event crucial for raising awareness and promoting sustainable practices.
12. What is the name of initiative recently launched by government to support women’s leadership in space sciences?
A. Space Science Mentorship Program
B. Women Scientist Scheme
C. Vigyan Jyoti
D. Women in Space Leadership Programme (WiSLP)
- The Women in Space Leadership Programme (WiSLP) was launched by the Department of Science and Technology with the British Council. It is part of the UK-India Education and Research Initiative (UKIERI). The program aims to create a leadership framework to promote gender-inclusive practices in space sciences. It focuses on fostering women’s leadership in space and related fields.
13. Which day is observed as “World Environmental Health Day” every year?
A. 26 September
B. 27 September
C. 28 September
D. 29 September
- World Environmental Health Day is observed on September 26 each year to highlight the link between a healthy environment and human well-being. Initiated by the International Federation of Environmental Health (IFEH) in 2011, the day emphasizes the need for environmental protection. The 2024 theme is “Environmental Health: Creating Resilient Communities through Disaster Risk Reduction and Climate Change Mitigation and Adaptation.”
- This theme focuses on addressing pollution, waste management, and sanitation to create safe communities. The goal is to promote resilience against climate impacts to enhance public health and environmental sustainability.
14. Recently, which organization developed the Light Weight Bullet Proof Jackets named ‘ABHED’?
A. DRDO
B. ISRO
C. HAL
D. BHEL
- The Defence Research & Development Organisation (DRDO) and IIT Delhi have developed lightweight bulletproof jackets called ABHED. These jackets are made from polymers and indigenous boron carbide ceramic material. The design is based on high strain rate material characterization, modeling, and simulation with DRDO’s collaboration. The armour plates have successfully passed all necessary R&D trials. The jackets offer high threat level protection and are lighter than the Indian Army’s weight limits, weighing 8.2 kg and 9.5 kg.