TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 28th September 2024

1. அண்மையில், கோவா கடல்சார் கருத்தரங்கத்தின் (GMS -24) ஐந்தாவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. கோவா

ஆ. கொச்சி

இ. காந்திநகர்

ஈ. மும்பை

  • இந்தியக்கடற்படை ஐந்தாவது கோவா கடல்சார் கருத்தரங்கத்தை கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கம் இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள முக்கிய கடல் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் புரிதலை ஊக்குவிக்கிறது. “Common Maritime Security Challenges in the Indian Ocean Region” என்பது இந்த கருத்தரங்கத்தின் கருப்பொருளாகும். சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் கடல்சார் குற்றங்கள்போன்ற பிரச்சினைகளில் இது கவனம் செலுத்துகிறது. வங்காளதேசம், மாலத்தீவுகள் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 12 இந்தியப் பெருங்கடல் நாடுகளின் பிரதிநிதிகள், கென்யா மற்றும் தான்சானியாவைச் சேர்ந்த பார்வையாளர்களுடன் இதில் பங்கேற்றனர். இந்தியக்கடற்படையால் 2016இல் தொடங்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கமானது ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

2. 2024 – சர்வதேச சைகை மொழிகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Sign Up for Sign Language Rights

ஆ. Sign Language Unite Us

இ. We sign for Human Rights

ஈ. Sign Language for All

  • சர்வதேச சைகை மொழிகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் செப்.23 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சைகை மொழிகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் உலகெங்கிலும் உள்ள காதுகேளாத சமூகத்தின் உரிமைகளை ஆதரிக்கிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Sign Up for Sign Language Rights” என்பதாகும். சைகை மொழிகளை அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது. காதுகேளாத நபர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமூக சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதிசெய்வதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. லோயி நிறுவனம் வெளியிட்ட ஆசியா பவர் இன்டெக்ஸ் அறிக்கை-2024இல் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. இரண்டாவது

ஆ. மூன்றாவது

இ. ஐந்தாவது

ஈ. ஏழாவது

  • லோயி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசிய ஆற்றல் குறியீட்டு அறிக்கை – 2024இல், ஆசியாவில் இந்தியா ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தக் குறியீடு 27 நாடுகளை இராணுவத்திறன், பொருளாதார உறவுகள் மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுகிறது. அமெரிக்காவும் சீனாவும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளன. பிராந்திய செல்வாக்கில் அதன் முழு திறனை இன்னும் எட்டவில்லை என்றாலும், அதன் பரந்த மக்கள்தொகை மற்றும் வளங்களால் தூண்டப்பட்ட வளர்ச்சிக்கான இந்தியாவின் திறனை இந்த அறிக்கை சிறப்பித்துக்காட்டுகிறது.

4. அண்மையில், இரஷ்யாவும் சீனாவும், “பெருங்கடல்-24” என்ற கடற்படைப் பயிற்சியை கீழ்க்காணும் எந்த நீர்நிலையில் தொடங்கின?

அ. கருங்கடல்

ஆ. தென்சீனக்கடல்

இ. ஜப்பான் கடல்

ஈ. செங்கடல்

  • ரஷ்யாவும் சீனாவும் ஜப்பான் கடலில் “ஓஷன்-24” என்ற கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன; இது அந்நாடுகளின் வளர்ந்து வரும் இராணுவ கூட்டுறவை எடுத்துக்காட்டுகிறது. ஜப்பான் கடல் என்பது ரஷ்யா, வட கொரியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள ஒரு சிறிய கடல் ஆகும். இது கிழக்குச்சீனக்கடல், ஓகோட்ஸ்க் கடல், ஜப்பானின் உள்நாட்டுக்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுடன் பல்வேறு நீரிணைகள் வழியாக இணைகிறது. ஜப்பான் கடலின் ஆழமான பகுதி டோகோகு என்ற நீரடி எரிமலையாகும்.

5. அண்மையில் எந்த அமைப்பால், “எதிர்கால ஒப்பந்தம் – Pact for the Future” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ. ஐநா பொதுச்சபை (UNGA)

ஆ. உலக வர்த்தக அமைப்பு (WTO)

இ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)

ஈ. உலக வங்கி

  • உலகளாவிய நிர்வாகத்தை மறுவடிவமைப்பு செய்வதற்காக ஐநா பொதுச்சபை, “எதிர்காலத்திற்கான ஒப்பந்தத்தை” ஏற்றுக்கொண்டது. வளங்குன்றா வளர்ச்சி, அமைதி மற்றும் வலுவான நிர்வாகத்திற்கான ஐநா உறுப்புநாடுகளின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதையும், மோதல்களின் மூலகாரணங்களுக்குத் தீர்வுகாண்பதையும் வலியுறுத்துகிறது.
  • ஐநா இலக்குகளை முன்னேற்றுவதில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் பங்கை இந்த ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. இது தேசிய மற்றும் உலகளவில் முடிவெடுப்பதில் இளையோரைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. சிவில் சமூகம், தனியார்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் வலுவான கூட்டாண்மைக்கு இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது.

6. அண்மையில், நாகாலாந்து மாநிலத்தின் எந்த ஆற்றில் கிளைப்டோஸ்டெர்னைன் கெளுத்தியின் புதிய இனமான ‘Exostoma sentiyonoae’ கண்டுபிடிக்கப்பட்டது?

அ. தன்சிரி ஆறு

ஆ. சுங்கி ஆறு

இ. சுலேக் ஆறு

ஈ. டிசு ஆறு

  • கிளைப்டோஸ்டெர்னைன் கெளுத்தியின் புதிய இனமான, ‘Exostoma sentiyonoae’ நாகாலாந்தில் உள்ள சுலேக் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. மேல் வால்-துடுப்புக் கதிர்களுடன் இணைக்கப்பட்டுள்ள கொழுப்புத்துடுப்பு, அதன் முதுகுத்துடுப்பு முதுகுத்தண்டில் உள்ள முடிச்சுகள், மெல்லிய தலை, சிறிய கண்கள் மற்றும் 41 முதுகெலும்புகள் போன்ற தனித்துவமான அம்சங்களை இந்த மீன்கொண்டுள்ளது. இது அதன் முதுகு மற்றும் கொழுப்பு துடுப்புகளுக்கு இடையே நீண்ட தூரத்தையும் கொண்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படும் E. berdmorei மற்றும் E. gaoligongense போன்ற தொடர்புடைய இனங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் இதை வேறுபடுத்தியுள்ளனர்.

7. செப்.26 அன்று கடைப்பிடிக்கப்பட்ட 2024 – உலக கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. MARPOL at 50 – Our commitment goes on

ஆ. Navigating the Future: safety first

இ. New technologies for greener shipping

ஈ. Seafarers: at the core of shipping’s future

  • பன்னாட்டு கடல்சார் அமைப்பு (IMO) ஏற்பாடு செய்த உலக கடல்சார் நாளானது, ஆண்டுதோறும் செப்டம்பர் கடைசி வியாழனன்று கொண்டாடப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், இந்நாள் செப்டம்பர்.26ஆம் தேதியன்று வருகிறது. இந்த ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Navigating the Future: safety first” என்பதாகும். இந்நாள் கடல்சார் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய வளர்ச்சியில் அத்தொழில்துறையின் பங்களிப்புகளையும் எடுத்துக்கூறுகிறது. கடல்சார் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் புதுமைகள் பற்றிய விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.

8. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது அண்மையில் எந்த அமைப்புடன் இணைந்து, ‘தட்பவெப்பநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா மாநாட்டை’ தொடக்கியது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டு செலாவணி நிதியம்

ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

  • சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தில்லியில் தட்பவெப்பநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா மாநாட்டை தொடங்கின. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் இந்த இரண்டு நாள் நிகழ்வு கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் சுகாதாரத் துறைக்கான உத்திகளை உருவாக்க கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பங்காளர்கள் கூட்டிணைந்து வருகின்றனர். தட்பவெப்ப நிலை நெகிழ்திறன்மிக்க சுகாதார அமைப்பை உருவாக்குவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

9. இந்தியாவின் எந்தப்பகுதியில், ஜிவித்புத்ரிகா விழா முதன்மையாகக் கொண்டாடப்படுகிறது?

அ. மேற்கு மற்றும் தென்னிந்தியா

ஆ. வட மற்றும் கிழக்கிந்தியா

இ. மத்திய இந்தியா

ஈ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

  • பீகாரில் ஜிவித்புத்ரிகா விழாவில் புனித நீராடும்போது 37 குழந்தைகள் உட்பட 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜிவித்புத்ரிகா அல்லது ஜித்தியா நோன்பு, முக்கியமாக இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் நேபாளத்தில் அனுசரிக்கப்படும் ஓர் இந்து பண்டிகையாகும். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் மூன்று நாட்கள் நோன்பிருப்பர்; இரண்டாவது நாளில் ‘நிர்ஜலா’ என்ற கடுமையான நோன்பினை அவர்கள் கடைப்பிடிப்பார்கள். இந்தத் திருவிழா மன்னன் ஜிமுத் வான்கனின் புராணக்கதையுடன் தொடர்புடையது. ஒரு குளியலுடன் (நஹாய்-காய்) தொடங்கும் இந்த நோன்பு ‘பரணம்’ என்ற சடங்குடன் முடிவடைகிறது.

10. அண்மையில், NASAஆல் முன்னிலைப்படுத்தப்பட்ட “கால்டுவெல்-45” என்றால் என்ன?

அ. சுருள் விண்மீன் மண்டலம்

ஆ. சிறுகோள்

இ. கருந்துளை

ஈ. புறக்கோள்

  • NASAஇன் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியானது “கால்டுவெல்-45” (NGC 5248) என்ற சுருள் விண்மீன் மண்டலத்தின் காணொளியைப்பகிர்ந்துள்ளது. சுருள் விண்மீன் மண்டலங்கள் என்பது விண்மீன்கள் மற்றும் வாயுக்களின் தொகுப்பாகும்; அவை மையத்திலிருந்து நீண்டு கொண்டிருக்கும் சுருள் கரங்களைக் கொண்டுள்ளன.
  • இந்த விண்மீன் மண்டலங்கள் இளம், சூடான விண்மீன்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் அவற்றின் அழகான வடிவங்களுக்கு அறியப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் மண்டலங்களில் சுமார் 60% பால்வெளி உட்பட சுருள் வடிவில் உள்ளன. சுருள் விண்மீன் மண்டலங்கள் ஒரு தட்டையான, சுழலும் விண்மீன்களின் வட்டத்தால் சூழப்பட்ட மைய வீக்கத்தைக் கொண்டுள்ளன. அவை நீள்வட்ட மற்றும் ஒழுங்கற்ற விண்மீன் மண்டலங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை.

11. ‘உலகளாவிய புத்தாக்க குறியீடு (GII) – 2024’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 35ஆவது

ஆ. 37ஆவது

இ. 39ஆவது

ஈ. 41ஆவது

  • 2024ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், 133 உலகளாவிய பொருளாதாரங்களில் இந்தியா 39ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய மற்றும் தெற்காசியாவிலுள்ள 10 பொருளாதாரங்களில் 1ஆம் இடத்திலும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் 1ஆம் இடத்திலும் உள்ளது. உலக அறிவுசார் சொத்து அமைப்பின் (WIPO) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொத்து தரவரிசையில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை உலகின் சிறந்த நூறு S&T கொத்துகளில் உள்ளன. 2015இல் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, புலனாகாச் சொத்து தீவிரத்தில் உலகளவில் 7ஆம் இடத்தில் உள்ளது. உலகளாவிய புத்தாக்க போக்குகளை மதிப்பிடுகிற GIIஇல் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் UK ஆகியவை உலகளவில் முன்னணியில் உள்ளன.

12. “உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் பேரவையை (WTSA 2024)” நடத்தும் நாடு எது?

அ. மியான்மர்

ஆ. இந்தியா

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

  • ITUஇன் நூற்றைம்பது ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக வரலாற்றுச்சிறப்புமிக்க உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் பேரவை (WTSA 2024) 2024 அக்.14-24 வரை இந்தியாவில் நடக்கவுள்ளது. உலகளாவிய இணைப்பு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதில் தொலைத்தொடர்பு தரநிலைகளின் முக்கிய பங்கை மையமாகக் கொண்டு, 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு தலைமைகள் மற்றும் நிபுணர்களை இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வு வரவேற்கும். முக்கிய இந்திய நகரங்களில் நடைபெறவுள்ள அமர்வுகள், மாணாக்கரை ஈடுபட செய்வதையும், 5G மற்றும் 6Gபோன்ற எதிர்கால தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவுப்பரிமாற்றத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

1. Recently, where was the fifth edition of Goa Maritime Symposium (GMS -24) held?

A. Goa

B. Kochi

C. Gandhinagar

D. Mumbai

  • Indian Navy hosted the fifth Goa Maritime Symposium at the Naval War College in Goa. This symposium promotes collaboration and understanding among India and key maritime nations in the Indian Ocean Region. The theme for 2024 is “Common Maritime Security Challenges in the Indian Ocean Region,” focusing on issues like illegal fishing and maritime crimes. Representatives from 12 Indian Ocean countries, including Bangladesh, Maldives, and Thailand, participated, along with observers from Kenya and Tanzania. The Goa Maritime Symposium was started by the Indian Navy in 2016 and is held every two years.

2. What is the theme of “International Day of Sign Languages 2024”?

A. Sign Up for Sign Language Rights

B. Sign Language Unite Us

C. We sign for Human Rights

D. Sign Language for All

  • The International Day of Sign Languages is celebrated on September 23 every year. This day raises awareness about the importance of sign languages and supports the rights of the deaf community worldwide. The theme for 2024 is “Sign up for Sign Language Rights.” This theme stresses the need to recognize sign languages as official languages. It aims to ensure equal access to education, employment, healthcare, and social services for deaf individuals.

3. What is the rank of India in the Asia Power Index Report 2024, recently published by the Lowy Institute?

A. Second

B. Third

C. Fifth

D. Seventh

  • The Asia Power Index Report 2024, published by the Lowy Institute, shows India has overtaken Japan to become the third-ranked power in Asia. This index evaluates 27 countries based on military capability, economic relationships, and cultural influence, among other factors. The United States and China hold the first and second positions, respectively. The report highlights India’s potential for growth, driven by its vast population and resources, despite it not yet reaching its full potential in regional influence.

4. Recently, Russia and China launched the “Ocean-24” naval exercise in which water body?

A. Black Sea

B. South China Sea

C. Sea of Japan

D. Red Sea

  • Russia and China have launched joint naval exercises, “Ocean-24,” in the Sea of Japan, highlighting their growing military cooperation. The Sea of Japan is a marginal sea in the western Pacific, bordered by Russia, North Korea, South Korea, and Japan. It connects to the East China Sea, Okhotsk Sea, Inland Sea of Japan, and the Pacific Ocean through various straits. The deepest point of the Sea of Japan is the Dohoku Seamount, an underwater volcano.

5. “Pact for the Future” was adopted by which organization?

A. United Nations General Assembly (UNGA)

B. World Trade Organization (WTO)

C. International Labour Organization (ILO)

D. World Bank

  • The UN General Assembly adopted the “Pact for the Future” to reshape global governance. It reaffirms UN Member States’ commitment to sustainable development, peace, and stronger governance. It emphasizes building peaceful, inclusive societies and addressing conflict root causes. The Pact highlights the role of science, technology, and innovation in advancing UN goals. It prioritizes youth inclusion in decision-making at national and global levels. The Pact calls for stronger partnerships with civil society, the private sector, and local authorities.

6. Recently, a new species of glyptosternine catfish, ‘Exostoma sentiyonoae’, has been discovered in which river of Nagaland?

A. Dhansiri River

B. Zungki River

C. Dzuleke River

D. Tizu River

  • A new species of glyptosternine catfish, Exostoma sentiyonoae, was discovered in the Dzuleke River, Nagaland. The fish has unique features like an adipose fin attached to the upper caudal-fin rays, tubercles on its dorsal-fin spine, a slender head, small eyes, and 41 vertebrae. It also has a long distance between its dorsal and adipose fins. Researchers distinguished it from related species found in Myanmar and Thailand, like E. berdmorei and E. gaoligongense.

7. What is the theme of World Maritime Day 2024, observed on September 26?

A. MARPOL at 50 – Our commitment goes on

B. Navigating the Future: safety first

C. New technologies for greener shipping

D. Seafarers: at the core of shipping’s future

  • World Maritime Day, organized by the International Maritime Organization (IMO), is celebrated annually on the last Thursday of September. In 2024, it falls on September 26. The theme for this year is “Navigating the future: safety first!” This day emphasizes the significance of maritime activities and the industry’s contributions to global development, raising awareness about safety measures and innovations in the maritime sector.

8. Ministry of Health and Family Welfare recently inaugurated the ‘Climate and Health Solutions India Conclave’ with which organization?

A. Asian Development Bank

B. World Bank

C. International Monetary Fund

D. United Nations Environment Programme

  • The Ministry of Health and Family Welfare and Asian Development Bank launched the Climate and Health Solutions India Conclave in Delhi. The two-day event focuses on addressing climate change and public health challenges. Policymakers, experts, and stakeholders are collaborating to develop strategies for India’s health sector. The conclave aims to build a climate-resilient health system.

9. Jivitputrika Festival is primarily observed in which part of India?

A. Western and Southern India

B. Northern and Eastern India

C. Central India

D. Western Ghats

  • At least 46 people, including 37 children, drowned during the Jivitputrika festival in Bihar while taking a holy dip. Jivitputrika, or Jitiya Vrat, is a Hindu festival mainly observed in northern and eastern part of India especially in Bihar, Uttar Pradesh, Jharkhand, and Nepal. Mothers fast for three days for the well-being and long life of their children, with a strict ‘nirjala’ fast on the second day. The festival is linked to the mythological story of King Jimutavahana. It starts with a purifying bath (Nahai-Khai) and ends with breaking the fast (Paaran).

10. What is “Caldwell 45”, recently highlighted by NASA?

A. Spiral galaxy

B. Asteroid

C. Black hole

D. Exoplanet

  • NASA’s Hubble Space Telescope shared a video of the spiral galaxy Caldwell 45 (NGC 5248). Spiral galaxies are collections of stars and gas, featuring spiral arms extending from their center. These galaxies contain young, hot stars and are known for their beautiful shapes. Around 60% of discovered galaxies are spiral, including the Milky Way. Spiral galaxies have a central bulge surrounded by a flat, rotating disk of stars. They are distinct from elliptical and irregular galaxies.

11. What is the rank of India in the ‘Global Innovation Index (GII) 2024’?

A. 35th

B. 37th

C. 39th

D. 41st

  • India ranked 39th among 133 global economies in the Global Innovation Index (GII) 2024. It is also 1st among 10 economies in Central and Southern Asia and 1st among lower-middle-income economies. India ranks 4th in the World Intellectual Property Organization (WIPO) Science & Technology Cluster Ranking. Mumbai, Delhi, Bengaluru, and Chennai are in the World’s Top 100 S&T clusters. India is 7th globally in intangible asset intensity, up from 81st in 2015. GII evaluates global innovation trends, with Switzerland, Sweden, the US, Singapore, and the UK leading innovation globally.

12. Which country is the host of “World Telecom Standardization Assembly (WTSA 2024)”?

A. Myanmar

B. India

C. Bangladesh

D. Nepal

  • The World Telecom Standardization Assembly (WTSA2024) will take place in India from 14th-24th October 2024, marking a historic first for the country in the ITU’s 150-year history. This significant event will gather telecom leaders and experts from over 190 nations, focusing on the critical role of telecom standards in enhancing global connectivity and innovation. Outreach sessions in major Indian cities aim to engage students and foster knowledge exchange about future technologies like 5G and 6G.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin