Tnpsc Current Affairs in Tamil & English – 28th October 2024
1. தோல் நிறமியிழத்தல் (Vitiligo) என்பது என்ன வகையான நோயாகும்?
அ. தோல் கோளாறு
ஆ. இருதய நோய்
இ. அரிதான நோய்
ஈ. மரபணுக் கோளாறு
- ஒரு புதிய கன்னடத் திரைப்படம், இந்தியாவில் பொதுவாக தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஒரு நாள்பட்ட தோல் நோயான தோல் நிறமியிழத்தலைச் (Vitiligo) சுற்றியுள்ள களங்கத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தோல் நிறமியை உருவாக்கும் மெலனோசைட்டுகள் அழிக்கப்படும்போது தோல் நிறமியிழத்தல் நோய் ஏற்படுகிறது; இது தோல், முடி மற்றும் வாயில் நிறமிகுந்த திட்டுகளுக்கு வழிவகுக்கிறது. இக்கோளாறுக்கான சரியான காரணம் தெளிவாக தெரியவில்லை; ஆனால் தன்எதிர்ப்புத் துலக்கம், மரபணுக்காரணிகள் மற்றும் அதிர்ச்சி அல்லது சூரிய ஒளிபோன்ற சுற்றுச்சூழல் தூண்டுதல்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். எவ்வயதிலும் வரும் இது, பொதுவாக 30 வயதிற்குக் குறைவான மக்களிடையே காணப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 0.5% முதல் 2% (100 மில்லியன்) வரை இக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. ஒவ்வோர் ஆண்டும் காவலர் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 20
ஆ. அக்டோபர் 21
இ. அக்டோபர் 22
ஈ. அக்டோபர் 23
- லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் 1959ஆம் ஆண்டு சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் அக்டோபர்.21ஆம் தேதி அன்று காவலர் நினைவுநாளை இந்தியா அனுசரிக்கிறது. நாட்டைக்காக்கும் காவலர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் இந்நாள் அங்கீகரிக்கிறது. 1959 அக்டோபர்.21 அன்று, உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக்காவலர்கள் சீனப் படைகளால் தாக்கப்பட்டனர்; இதன் விளைவாக பலர் வீரமரணம் எய்தினர். 1960 ஜனவரியில் காவல்துறை தலைமை இயக்குநர்களின் வருடாந்திர மாநாட்டின்போது இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
3. இந்தியா-சிங்கப்பூர் இடையேயான 12ஆவது கூட்டு இராணுவப்பயிற்சி நடத்தப்பட்ட இடம் எது?
அ. விமானப்படை நிலையம் பிதார், கர்நாடகா
ஆ. விமானப்படை நிலையம் கலைகுந்தா, மேற்கு வங்காளம்
இ. விமானப்படை நிலையம் பேகம்பேட், தெலுங்கானா
ஈ. விமானப்படை நிலையம் ஜோத்பூர், இராஜஸ்தான்
- இந்திய வான்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு வான்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா வான் படை நிலையத்தில் கூட்டு இராணுவப்பயிற்சியின் 12ஆவது பதிப்பைத் தொடங்கின. பயிற்சியின் இருதரப்பு கட்டம் நவம்பர்.13-21 வரை நடத்தப்படும்; இது இருபடைகளுக்கும் இடையே தீவிர ஒத்துழைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ஏனெனில் அவை மேம்பட்ட வான் போர் உருவகப்படுத்துதல்கள், கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் விளக்க அமர்வுகளில் ஈடுபடுகின்றன.
- எஃப்-16, எஃப்-15 ஸ்குவாட்ரன்கள், ஜி-550 வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு மற்றும் சி-130 விமானங்களைச்சேர்ந்த விமானப்பணியாளர்கள் மற்றும் ஆதரவு வீரர்களை உள்ளடக்கிய சிங்கப்பூர் வான்படை இன்று வரை அதன் மிகப்பெரிய குழுவுடன் பங்கேற்கிறது. ரஃபேல், மிராஜ் 2000 ஐடிஐ, சுகோய் -30 எம்கேஐ, தேஜஸ், மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானங்களுடன் இந்திய வான்படை பங்கேற்கிறது.
4. அண்மையில், 15ஆவது ITU கலையுருக்கருவி கல்வி மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி
ஆ. குருகிராம்
இ. இந்தூர்
ஈ. ஜெய்ப்பூர்
- 15ஆவது ITU கலையுருக்கருவி கல்வி மாநாடு புது தில்லியில் அக்.21 அன்று தொடங்கியது. ITU கலையுருக்கருவி – 2024 என்பது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) நடத்திய ஒரு சர்வதேச மாநாடு ஆகும். கண்டுபிடிப்பு மற்றும் கூட்டுறவை மேம்படுத்துவதற்காக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களில் (ICT) கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே பேச்சுவார்த்தையை இது வளர்க்கிறது. இந்த நிகழ்வானது உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ICT தீர்வுகளை ஆராயவும், வளர்ந்துவரும் போக்குகளைப்பற்றி விவாதிக்கவும் கூடியது. உலகளாவிய தகவல் தொடர்பு வலையமைப்புகள் மற்றும் தரப்படுத்தலை பாதிக்கும் எதிர்கால தொழில்நுட்பங்களில் இது கவனம் செலுத்துகிறது. “Innovation and Digital Transformation for a Sustainable World” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.
5. அண்மையில், அஸ்ஸாமின் எந்தத் தேசியப்பூங்காவில், ‘Crepidium assamicum’ என்ற புதிய மந்தாரை இனம் கண்டுபிடிக்கப்பட்டது?
அ. ஒராங் தேசியப்பூங்கா
ஆ. மனாஸ் தேசியப்பூங்கா
இ. திப்ரு-சைகோவா தேசியப்பூங்கா
ஈ. மனாஸ் தேசியப்பூங்கா
- அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரு-சைகோவா தேசியப்பூங்காவில், ‘Crepidium assamicum’ என்ற புதிய மந்தாரை இனம் கண்டுபிடிக்கப்பட்டது. “அஸ்ஸாமின் மந்தாரை மனிதன்” என்று அழைக்கப்படும் Dr ஜிந்து சர்மா மற்றும் கியன்ஜீத் கோகோய் ஆகியோரால் இந்தக் கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டது. ‘Crepidium assamicum’ என்பது ‘Crepidium’ இனத்தைச் சேர்ந்தது. இக்கண்டுபிடிப்பு இந்தியாவில் அதன் மொத்த இனங்களின் எண்ணிக்கையை 19ஆகவும், உலகளவில் மொத்தம் 281ஆகவும் அதிகரித்துள்ளது. உலகளவில், சுமார் 27,000 மந்தாரை இனங்கள் உள்ளன; அவற்றில் இந்தியாவில் சுமார் 1,265உம் வடகிழக்கிந்தியாவில் மட்டும் 800உம் உள்ளன. அஸ்ஸாமில் மட்டும் சுமார் 414 இனங்கள் உள்ளன.
6. 2024 – பொருளாதார சுதந்திர அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
அ. 34ஆவது
ஆ. 65ஆவது
இ. 74ஆவது
ஈ. 84ஆவது
- ஃப்ரேசர் நிறுவனமானது 2024 – உலக பொருளாதார சுதந்திர அறிக்கையை வெளியிட்டது. பொருளாதார தேர்வு அடிப்படையில் 165 நாடுகளை இவ்வறிக்கை தரவரிசைப்படுத்தியுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், சுவிச்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை பொருளாதார ரீதியாக சுதந்திரமான முதல் ஐந்து நாடுகளாகும். இந்த அறிக்கையில் இந்தியா 84ஆவது இடத்தில் உள்ளது. அரசாங்க அளவு, சொத்துரிமைகள், பணவியல் கொள்கை மற்றும் வர்த்தக சுதந்திரம் உட்பட 42 மாறிகளை இந்த அறிக்கை பயன்படுத்துகிறது.
7. அண்மையில், நமோ பாரத் திவாஸ் கொண்டாடப்பட்ட இடம் எது?
அ. சென்னை
ஆ. புது தில்லி
இ. கோயம்புத்தூர்
ஈ. ஹைதராபாத்
- நமோ பாரத் ரெயில்களின் முதலாமாண்டு நினைவுநாள் நமோ பாரத் திவாஸ் என தில்லியில் கொண்டாடப்பட்டது. நமோ பாரத் ரெயில்கள் இந்தியாவின் முதல் பிராந்திய விரைவுப்போக்குவரத்து அமைப்பாகும் (RRTS). சாகிபாபாத் மற்றும் துகாய் டிப்போ (17 கிலோமீட்டர்) இடையேயான முதல் பகுதி 2023 அக்டோபர்.20 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கி வைக்கப்பட்டது. துகாய் முதல் மோதிநகர் வடக்கு (2024 மார்ச்) மற்றும் மீரட் தெற்கு (ஆகஸ்ட் 2024) உட்பட மேலும் இருபிரிவுகள் செயல்பாட்டுக்கு வந்தன. தற்போதைய 42 கிலோமீட்டர் வழித்தடம் ஒன்பது நிலையங்களை உள்ளடக்கியுள்ளது. RRTS என்பது அதிவேக, திறமையான புறநகர் இணைப்பை வழங்குவதோடு, நிலையான நகர்ப்புற போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
8. 2024 – வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியர் யார்?
அ. தீபிகா குமாரி
ஆ. பாம்பேலா தேவி
இ. பர்னீத் கௌர்
ஈ. முஸ்கன் கிரார்
- நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற தீபிகா குமாரி, மெக்சிகோவின் டிலாக்ஸ்காலாவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெண்களுக்கான ரீகர்வ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் சீன வில்வித்தை வீரர் லி ஜியாமானிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 2024 – பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன வில்வித்தை அணியில் லீ ஜியாமன் இடம்பெற்றிருந்தார். 18ஆம் வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டி உலக வில்வித்தை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு 2024 அக்.19-20 வரை மெக்சிகோவில் உள்ள டிலாக்ஸ்கலாவில் நடைபெற்றது.
9. அண்மையில், உயிரொளி உமிழ்வு அலைகளைக் கண்ட இந்திய நகரம் எது?
அ. சென்னை
ஆ. கன்னியாகுமரி
இ. திருவனந்தபுரம்
ஈ. கோழிக்கோடு
- இருகசை உயிரிகள்போன்ற கடல்வாழ் உயிரினங்களால் ஏற்படும் இயற்கையான நிகழ்வான உயிரொளி உமிழ்வு (bioluminescent) அலைகளை சென்னை அண்மையில் கண்டது. இந்த நுண்ணிய அலைவாழிகள் இரவில் ஒளியை வெளியிடுகின்றன; அது கடலின் மேற்பரப்பில் தெரியும். ஜெல்லிமீன்கள், மீன்கள் மற்றும் பாசிகள்போன்ற பல கடல் வாழ் விலங்குகளிடையே பொதுவாக காணப்படுகிற இந்த உயிரொளி உமிழ்வு நிகழ்வு, வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்கு, இரையை ஈர்ப்பதற்கு அல்லது இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. லூசிஃபெரேஸ் நொதி உயிர்வளி முன்னிலையில் லூசிஃபெரினுடன் வினைபுரியும்போது இது நிகழ்கிறது. இந்த நிகழ்வு மிகவெப்பமான வானிலை மற்றும் குறைவான வெளிச்சத்தில் அடிக்கடி தெரியும்.
10. அண்மையில், மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாடு எது?
அ. கியூபா
ஆ. இந்தியா
இ. கென்யா
ஈ. எகிப்து
- உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் எகிப்து ‘மலேரியா இல்லாத நாடு’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிற மலேரியா, பாதிக்கப்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள்மூலம் பரவுகிறது. முதன்மையாக வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிற இது, உயிருக்கு ஆபத்தானது என்றாலும் தொற்றக்கூடியது அன்று. ஐந்து ஒட்டுண்ணி இனங்கள் மலேரியாவை ஏற்படுத்துகின்றன; அதில் Plasmodium falciparum மற்றும் Plasmodium vivax ஆகியவை மிகவும் ஆபத்தானவை. காய்ச்சல், தலைவலி மற்றும் குளிர்போன்ற அறிகுறிகள் கொசுக்கடித்த 10-15 நாட்களுக்குப்பிறகு தோன்றும். மலேரியா நோய் பரவும் பகுதிகளில் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இத்தொற்று இருக்கலாம். மலேரியாவைத் தடுப்பதற்கும் பரவுவதைக் குறைப்பதற்கும் ஏந்திகள் கட்டுப்பாடு முக்கிய முறையாக உள்ளது.
11. ஒவ்வோர் ஆண்டும் உலக அயோடின் குறைபாடு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 21
ஆ. அக்டோபர் 22
இ. அக்டோபர் 23
ஈ. அக்டோபர் 24
- ஆரோக்கியத்திற்கு அயோடினின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்.21ஆம் தேதி உலக அயோடின் குறைபாடு நாள் அனுசரிக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்களை (T3 மற்றும் T4) உற்பத்தி செய்வதற்கு அயோடின் அவசியம், இது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கரு மற்றும் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது உணவுகள் மற்றும் அயோடிய உப்பு ஆகியவற்றில் காணப்படுகிறது; இது முக்கியமாக வயிற்றில் அயோடைடாக உறிஞ்சப்பட்டு தைராய்டால் பயன்படுத்தப்படுகிறது.
12. அண்மையில், உடான் திட்டத்தின்கீழ், உத்தரபிரதேசத்தின் எந்த மாவட்டத்தில் புதிய விமான நிலையத்தை இந்தியப்பிரதமர் திறந்து வைத்தார்?
அ. ரேபரேலி
ஆ. சஹரன்பூர்
இ. மிர்சாபூர்
ஈ. மீரட்
- பிராந்திய இணைப்புத் திட்டத்தின்கீழ் (RCS) மூன்று விமான நிலையங்களை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார் – வாரணாசியில் இருந்து உடான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்): ரேவா (எம்பி), அம்பிகாபூர் (சத்தீஸ்கர்), மற்றும் சஹாரன்பூர் (உபி). RCS-UDAN திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் விரைவில் இயக்கப்படும். RCS-UDAN ஆனது இந்தியாவின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கையின் கீழ் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொலைதூர மற்றும் குறைவான பிராந்தியங்களில் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் RCS-UDAN விமானம், சிம்லாவிலிருந்து டெல்லிக்கு 2017 இல் தொடங்கியது. இந்தத் திட்டம் 144 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்கியுள்ளது, இந்தியா முழுவதும் விமானப் பயண அணுகலை அதிகரிக்கிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. அரசமைப்புச்சட்ட 75 ஆண்டுகள் நிறைவு: நவ.26இல் நாடாளுமன்ற சிறப்பு அமர்வு.
அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச்சட்டம் கடந்த 1949ஆம் ஆண்டு நவ.26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், 1950 ஜன.26ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
நவ.26ஆம் தேதி தேசிய சட்ட நாள் கொண்டாடப்பட்டு வந்தது. 2015ஆம் ஆண்டு B R அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாளில் (ஏப்.14) அரசமைப்புச்சட்ட விழுமியங்களைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்க நவ.26ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட விழிப்புணர்வு நாளாக நடுவண் அரசு அறிவித்தது.
2. குறைவான காற்று மாசு: தமிழ்நாட்டின் 3 நகரங்கள் சாதனை!
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகம் / குறைவான காற்று மாசுடைய நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட காற்று தரக் குறியீட்டில் (AQI) பட்டியலில் சுத்தமான காற்றுடைய பகுதியாக திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதேபோல் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் தலைநகரம் தில்லி முதலிடத்தில் உள்ளது. தேசிய தலைநகரத்தின் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் அறுவடைக்குப்பின் மீதமாகும் பயிர்க்கழிவுகளை எரிப்பதால், அந்தப்புகையானது குளிர்கால புகையுடன் சேர்ந்து தில்லியை பனிப்புகை மூட்டமாக சூழ்ந்துகொள்கிறது. இப்படிப்பட்ட அதிகப்படியான வளிமாசின் பாதிப்பில் தலைநகர் தில்லி முதலிடத்தில் இருக்கிறது.
பிரிவுகள்: AQIஇல் பல்வேறு பிரிவுகளின்கீழ் காற்று மாசுபாடு அளவீடு செய்யப்படுகிறது.
0-50: சிறப்பு.
51-100: திருப்திகரம்.
101-200: மிதமானது.
201-300: மோசம்.
301-400: மிகமோசம்.
401-500: கடுமையான பாதிப்பு.
காற்று மாசு குறைவான தமிழ்நாட்டு நகரங்கள்.
முதலிடம் – பல்கலைப்பேரூர், திருச்சி.
நான்காமிடம் – இராமநாதபுரம்.
ஏழாமிடம் – மதுரை.
3. 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவக் காப்பீடு!
மத்திய அரசின், ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி அக்.29 அன்று தொடங்கவுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் `5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்படுவதை பதிவுசெய்யும் யு-வின் வலைத் தளத்தையும் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கவுள்ளார். கரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டதை பதிவு செய்ய தொடங்கப்பட்ட ‘CO-WIN’ இணையதளத்தை முன்மாதிரியாகக்கொண்டு இத்தடுப்பூசியைப் பதிவுசெய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
1. What kind of disease is Vitiligo?
A. Skin disorder
B. Heart disease
C. Rare disease
D. Genetic disorder
- A new Kannada film aims to reduce the stigma around vitiligo, a chronic skin disorder often misunderstood in India. Vitiligo occurs when melanocytes, which produce skin pigment, are destroyed, leading to depigmented patches on the skin, hair, and mouth. The exact cause is unclear but may involve autoimmune responses, genetic factors, and environmental triggers like trauma or sunburn. It can develop at any age but is most common before 30 and affects 0.5 to 2 percent of the global population, with around 100 million people living with the condition.
2. Which day is observed as Police Commemoration Day every year?
A. October 20
B. October 21
C. October 22
D. October 23
- India observes Police Commemoration Day on October 21 to honor the policemen who died in a 1959 ambush by Chinese troops at Hot Springs, Ladakh. The day recognizes the bravery and sacrifice of police personnel protecting the nation. On October 21, 1959, Indian policemen on a reconnaissance mission were attacked by Chinese forces, resulting in several deaths. The day was officially designated in January 1960 during the Annual Conference of Inspectors General of Police.
3. Where was the 12th edition of Joint Military Training (JTM) exercise between the India and Singapore conducted?
A. Air Force Station Bidar, Karnataka
B. Air Force Station Kalaikunda, West Bengal
C. Air Force Station Begumpet, Telangana
D. Air Force Station Jodhpur, Rajasthan
- On October 21, 2024, the Indian Air Force (IAF) and Republic of Singapore Air Force (RSAF) started the 12th Joint Military Training (JMT) exercise at Air Force Station Kalaikunda, West Bengal. The bilateral phase will run from November 13 to 21, 2024, focusing on advanced air combat simulations and joint mission planning.
- This phase aims to improve interoperability and combat readiness while promoting knowledge exchange. RSAF is sending its largest contingent yet, including aircrew and support for F-16, F-15, G-550 AEW&C, and C-130 aircraft. The IAF will use Rafale, Mirage 2000, Su-30 MKI, Tejas, MiG-29, and Jaguar aircraft.
4. Recently, where was the 15th ITU Kaleidoscope Academic Conference held?
A. New Delhi
B. Gurugram
C. Indore
D. Jaipur
- The 15th ITU Kaleidoscope Academic Conference began on 21 October at Bharat Mandapam, New Delhi. ITU Kaleidoscope 2024 is an international conference organized by the International Telecommunication Union (ITU). It fosters dialogue between academics, researchers, and industry in information and communication technologies (ICT) to promote innovation and collaboration.
- The event gathered global researchers, industry leaders, and policymakers to explore ICT solutions and discuss emerging trends. The focus is on future technologies that impact global communication networks and standardization. The theme of the conference is “Innovation and Digital Transformation for a Sustainable World.”
5. Recently, a new orchid species named Crepidium assamicum was discovered in which national park of Assam?
A. Orang National Park
B. Manas National Park
C. Dibru-Saikhowa National Park
D. Manas National Park
- A new orchid species, Crepidium assamicum, was discovered in Dibru Saikhowa National Park, Assam. The discovery was made by Dr Jintu Sarma and Khyanjeet Gogoi, known as the “Orchid Man of Assam.” Crepidium assamicum belongs to the genus Crepidium, increasing India’s total species count to 19 and the global total to 281. Globally, there are around 27,000 orchid species, with India home to about 1,265 and Northeast India hosting 800. Assam alone has about 414 species of orchids.
6. What is the rank of India in the Economic Freedom Report, 2024?
A. 34th
B. 65th
C. 74th
D. 84th
- The Fraser Institute released the 2024 Economic Freedom of the World Report, ranking 165 countries based on economic choice. The top 5 most-economically free countries were Hong Kong, Singapore, Switzerland, New Zealand, and the United States. India ranked 84th in the report. The report uses 42 variables, including government size, property rights, monetary policy, and trade freedom.
7. Where was the Namo Bharat Diwas celebrated recently?
A. Chennai
B. New Delhi
C. Coimbatore
D. Hyderabad
- The first anniversary of Namo Bharat Trains was celebrated as Namo Bharat Diwas in New Delhi. Namo Bharat Trains are India’s first Regional Rapid Transit System (RRTS). The first 17-kilometer section between Sahibabad and Duhai Depot was inaugurated by PM Narendra Modi on 20 October 2023. Two more sections became operational, including Duhai to Modinagar North (March 2024) and Meerut South (August 2024). The current 42-kilometer corridor covers nine stations. RRTS offers high-speed, efficient suburban connectivity, promoting sustainable urban transport solutions.
8. Which Indian recently won the silver medal at the Archery World Cup Final 2024?
A. Deepika Kumari
B. Bombayla Devi
C. Parneet Kaur
D. Muskan Kirar
- Four-time Olympian Deepika Kumari won a silver medal in the women’s recurve event at the 2024 Archery World Cup Final in Tlaxcala, Mexico. She lost 6-0 to Chinese archer Li Jiaman in the final. Li Jiaman was part of the Chinese archery team that won silver at the Paris 2024 Olympics. The 18th Archery World Cup Final was organized by World Archery and took place on 19-20 October 2024 in Tlaxcala, Mexico.
9. Which city in India recently witnessed bioluminescent waves?
A. Chennai
B. Kanyakumari
C. Thiruvananthapuram
D. Kozhikode
- Chennai recently witnessed bioluminescent waves; a natural phenomenon caused by marine organisms like dinoflagellates.
- These microscopic plankton emit light at night, visible on the ocean surface. Bioluminescence is common among many marine animals such as jellyfish, fish, and algae, used for evading predators, attracting prey, or mating. It occurs when the enzyme luciferase reacts with luciferin in the presence of oxygen. This phenomenon is often visible in warm weather and low light.
10. Recently, which country was officially declared malaria free by the World Health Organization?
A. Cuba
B. India
C. Kenya
D. Egypt
- Egypt was officially declared malaria-free by the World Health Organization (WHO). Malaria is caused by Plasmodium parasites, spread through the bites of infected female Anopheles mosquitoes. It is life-threatening but not contagious and mainly found in tropical regions.
- Five parasite species cause malaria, with Plasmodium falciparum and Plasmodium vivax being the most dangerous. Symptoms like fever, headache, and chills start 10–15 days after the mosquito bite. Some people in malaria-endemic areas may be infected but show no symptoms. Vector control is the key method for preventing malaria and reducing transmission.
11. Which day is observed as World Iodine Deficiency Day every year?
A. October 21
B. October 22
C. October 23
D. October 24
- World Iodine Deficiency Day is observed on 21st October to raise awareness about the importance of iodine for health. Iodine is essential for producing thyroid hormones (T3 and T4), which regulate metabolism and support fetal and infant development. It is found in foods and iodized salt, mainly absorbed in the stomach as iodide and used by the thyroid.
12. Recently, the Prime Minister of India inaugurated a new airport in which district of Uttar Pradesh under the UDAN scheme?
A. Raebareli
B. Saharanpur
C. Mirzapur
D. Meerut
- PM Narendra Modi inaugurated three airports under the Regional Connectivity Scheme (RCS) – UDAN (Ude Desh Ka Aam Nagrik) from Varanasi: Rewa (MP), Ambikapur (Chhattisgarh), and Saharanpur (UP). Flights will soon operate from these airports under the RCS-UDAN scheme.
- RCS-UDAN aims to improve connectivity in remote and underserved regions, launched in 2016 under India’s National Civil Aviation Policy. The first RCS-UDAN flight, Shimla to Delhi, began in 2017. The scheme has facilitated travel for over 144 lakh passengers, boosting air travel accessibility across India.