TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 27th September 2024

1. ஓர் அண்மைய அறிக்கையின்படி, தலித்துகள்மீதான வன்கொடுமை வழக்குகள் கீழ்க்காணும் எந்த மாநிலங்களில் அதிகம் பதிவுசெய்யப்பட்டுள்ளன?

அ. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா

ஆ. ஜார்கண்ட் மற்றும் பீகார்

இ. உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா

  • 2022இல் பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமைகளில் கிட்டத்தட்ட 97.7% 13 மாநிலங்களில் இருந்து பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன. அதே 13 மாநிலங்களில் 98.91% வன்கொடுமைகள் பழங்குடியினருக்கு எதிரானவையாக நிகழ்ந்துள்ளன. 2022இல் பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின்கீழ் மொத்தம் 51,656 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் 12,287 வழக்குகள் (மொத்தத்தில் 23.78%), ராஜஸ்தானில் 8,651 வழக்குகள் (16.75%), மத்திய பிரதேசத்தில் (14.97%) 7,732 வழக்குகள் பதிவாகியுள்ளன.

2. அண்மையில், இந்தியாவின் முதல் CO2-டூ-மெத்தனால் ஆலை தொடங்கப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. கோரக்பூர்

இ. புனே

ஈ. கொச்சி

  • 1.4 TPD திறன்கொண்ட இந்தியாவின் முதல் CO2-டூ-மெத்தனால் ஆலை புனேவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை துணைபுரிகிறது. இது ஐஐடி தில்லி மற்றும் தெர்மாக்ஸ் லிட் ஆகியவற்றின்கீழ் ஓர் அரசு-தனியார் கூட்டாண்மையின் கூட்டுப்பணியாகும். COP26இலிருந்து இந்தியாவின் தட்பவெப்பநிலை இலக்குகளுடன் இணைந்து Carbon Capture & Utilisation தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை இந்த ஆலை நோக்கமாகக் கொண்டுள்ளது. NITI ஆயோக் மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, 15% மெத்தனால் கலந்த டீசலை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கையை உருவாக்கி வருகின்றன. இதற்கான திட்டச்செலவு தோராயமாக `31 கோடி ஆகும்.

3. தில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்து துணைநிலை ஆளுநரால் சமீபத்தில் தொடங்கப்பட்ட முயற்சியின் பெயர் என்ன?

அ. தூசற்ற தில்லி இயக்கம் (Dust-free Delhi Drive)

ஆ. பசுமை தில்லி முன்னெடுப்பு

இ. மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • தில்லி துணைநிலை ஆளுநர் VK சக்சேனா குளிர்காலத்திற்கு முன் காற்று மாசுபாட்டை குறைக்க, ‘தூசற்ற தில்லி’ இயக்கத்தைத் தொடங்கினார். 10 நாள் நடைபெறும் இந்த இயக்கத்தில் MCD மற்றும் PWDபோன்ற பல முகமைகள் ஈடுபட்டுள்ளன. தூசி குவிவதைத் தடுக்க சாலைகள் மற்றும் வடிகால்களை தூய்மைப்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது. அண்மைய வறண்ட தட்பவெப்பநிலையின் காரணமாக உருவான உலர்ந்த சேறு மற்றும் வண்டல் மாசுபாட்டிற்கு கணிசமாக பங்களிக்கிறது. குளிர்கால மாதங்களில் மாசு அளவை சமாளிக்க தில்லி அரசாங்கத்தின் குளிர்கால செயல் திட்டத்துடன் இந்த முயற்சி இணைந்துள்ளது.

4. அண்மையில், “10ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய மண்டல மாநாடு” நடைபெற்ற இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. புது தில்லி

இ. சென்னை

ஈ. பெங்களூரு

  • இந்திய நாடாளுமன்றம் 10ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (CPA) இந்திய மண்டல மாநாட்டை புது தில்லியில் இரண்டு நாட்கள் நடத்தியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 46 தலைமை அதிகாரிகள், 25 சபாநாயகர்கள் மற்றும் இதர சட்டமன்ற அதிகாரிகள் கலந்துகொண்டனர். “The Role of Legislative Bodies in the Attainment of Sustainable and Inclusive Development – நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் சட்டமன்ற அமைப்புகளின் பங்கு” என்பது இதன் கருப்பொருளாகும். 2004இல் நிறுவப்பட்ட CPA இந்திய மண்டலமானது இந்திய நாடாளு மன்றம் மற்றும் 30 மாநில & யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் உட்பட 31 உறுப்பினர் கிளைகளை உள்ளடக்கியது.

5. வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சகம் எது?

அ. வேளாண்மை அமைச்சகம்

. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. சுற்றுலா அமைச்சகம்

  • 15ஆவது நிதிக்குழு சுழற்சிக்கான வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தைத்தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. இது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் நிதியுதவியில் இயங்கும் திட்டமாகும். “தேசியப்பூங்காக்கள் & சரணாலயங்களின் வளர்ச்சிக்கான உதவி” என்ற முந்தைய திட்டத்திலிருந்து இது உருவானது. புலிகள் மற்றும் பிற வனவிலங்குகளின் வாழ்விடங்களில் தொழில்நுட்பத் தலையீடுகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது 55 புலிகள் காப்பகங்கள், 33 யானைகள் காப்பகங்கள் மற்றும் 718 பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அவற்றின் வளங்காப்பு மண்டலங்களுக்குப் பயனளிக்கும்.

6. மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் நறுமணப்பொருட்கள் துறைக்காக அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

அ. SPICED திட்டம்

ஆ. IDEAS திட்டம்

இ. பாதுகாப்பான நறுமணப் பொருட்கள் திட்டம்

ஈ. ஏலக்காய் உற்பத்தித் திட்டம்

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நறுமணப்பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, “Sustainability in spice sector through progressive, innovative and collaborative interventions for export development (SPICED)” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது நறுமணப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட நறுமணப்பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துதல், ஏலக்காய் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான நறுமணப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் 2025-26 வரை, மீதமுள்ள 15ஆவது நிதி ஆணையத்தின் காலத்தை உள்ளடக்கி செயல்படுத்தப்படும். இது மசாலா பொருட்கள் துறையில் மதிப்புக்கூட்டல், புதுமை & நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது.

7. டெர்சான் 6 கோளக விண்மீன் கொத்தில், ஒரு புதிய மில்லி விநாடி துடிப்பு விண்மீனைக் கண்டறிவதற்காக வானியலாளர்களால் பயன்படுத்தப்பட்ட தொலைநோக்கி எது?

அ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

ஆ. கிரீன் பேங்க் தொலைநோக்கி

இ. சந்திரா எக்ஸ்கதிர் கூர்நோக்ககம்

ஈ. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

  • கிரீன் பேங்க் தொலைநோக்கியைப் பயன்படுத்தும் வானியலாளர்கள் டெர்சான் 6 கோளக விண்மீன் கொத்தில் ஒரு புதிய மில்லி விநாடி துடிப்பு விண்மீனைக் கண்டுபிடித்தனர். துடிப்பு விண்மீன்கள் என்பவை வேகமாகச்சுழலும் நியூட்ரான் விண்மீன்களாகும்; அவை வழக்கமான துடிப்புகளில் (நொடிகள் முதல் மில்லி விநாடிகள் வரை) கதிர் வீச்சை வெளியிடுகின்றன. வலுவான காந்தப்புலங்களைக் கொண்டுள்ள அவை காந்த துருவங்களில் துகள் தாரைகளை ஊடுருவி, ஆற்றல்வாய்ந்த ஒளிக்கற்றைகளை உருவாக்குகின்றன. காந்தப்புலம் மற்றும் சுழல் அச்சுக்கு இடையே உள்ள தவறான சீரமைப்பு காரணமாக விண்மீன் சுழலும்போது இந்த விட்டங்கள் சுழற்றப்படுகின்றன.

8. பெங்களூரு விண்வெளி கண்காட்சி – 2024இல் “புராஜெக்ட் 200”ஐ வெளியிட்ட விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனம் எது?

அ. ஸ்பேஸ்X

ஆ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ்

இ. அக்னிகுல் காஸ்மோஸ்

ஈ. புளூ ஆர்ஜின்

  • பெங்களூருவைச் சார்ந்த விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனமான பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், பெங்களூரு விண்வெளி கண்காட்சி – 2024இல், ‘புராஜெக்ட் 200’ஐ அறிமுகப்படுத்தியது. புராஜெக்ட் 200 என்பது மிகு தாழ் புவி சுற்றுப்பாதைக்காக (180 கிமீ-250 கிமீ) வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான செயற்கைக்கோளாகும். செயற்கைக் கோள்கள் 200 கிமீ சுற்றுப்பாதையை பல ஆண்டுகளுக்குத் தக்கவைக்க அனுமதிக்கும் புதிய உள்-உந்துவிசை அமைப்பை இத்திட்டம் கொண்டிருக்கும்.

9. 2016ஆம் ஆண்டிலிருந்து பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவது எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?

அ. 50%

ஆ. 60%

இ. 86%

ஈ. 68%

  • அஸ்ஸாமில் உள்ள UNESCOஇன் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசியப்பூங்கா, இந்திய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கைக்கு புகழ்பெற்றது. 2016ஆம் ஆண்டு முதல் இந்தப் பூங்காவில் காண்டாமிருக வேட்டையாடுதல் 86% குறைந்துள்ளது. இந்திய காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமே மிகப்பெரிய ஆசிய காண்டாமிருக இனமாகும். இதன் அறிவியல் பெயர் Rhinoceros unicornis. இந்தக் காண்டாமிருகங்கள் முதன்மையாக இந்தியா மற்றும் நேபாளத்தில் குறிப்பாக இமயமலை அடிவாரத்தில் மிகுந்து காணப்படுகின்றன.

10. “நகர் வன யோஜனா” என்பதைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை அமைச்சகம்

ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்ற அமைச்சகம்

ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • நகர் வன யோஜனா அரசாங்கத்தின் முதல் 100 நாட்களில் 100 நகர்ப்புற காடுகளை (நகர் வனம்) அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. தற்போது 111 நகர் வனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த நகர வனங்கள் ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளன. 2020இல் தொடங்கப்பட்ட இது, வாழ்க்கைத்தரம் மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கோடு நகர்ப்புறத்தின் பசுமையை மேம்படுத்துகிறது. பசுமைவெளி நிர்வாகத்தில் குடிமக்கள் மற்றும் பங்குதாரர்களை உள்ளடக்கிய உருவாக்கம் மற்றும் பராமரிப்புக்காக ஒவ்வொரு நகர வனமும் ஹெக்டேருக்கு `4 இலட்சம் பெறுகிறது.
  • இந்த முயற்சி பல்லுயிர் பெருக்கம், பூர்வீக இனங்களை நடவுசெய்தல் மற்றும் பல்வேறு திட்டங்கள்மூலம் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதில் கவனஞ்செலுத்துகிறது. மாசு & வாழ்விட இழப்பு போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்த்து 2027ஆம் ஆண்டுக்குள் 1,000 நகர வனங்களை உருவாக்குவதே இதன் இலக்கு.

11. அண்மையில், கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ஒரு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின்போது பெருங்கற்கால முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மத்திய பிரதேசம்

  • கேரள மாநிலத்தில் ஒரு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின்போது குந்திலிக்காடு மலையில் பல பெருங்கற்கால முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கண்டெடுப்புகள், 2500 ஆண்டுகளுக்கும் மேலானவை, தனித்துவமான முதுமக்கள் தாழிகள் அம்சங்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட அடக்க நுட்பங்களையும் இவை வெளிப்படுத்துகின்றன. ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு மட்பாண்ட பாணிகள் மற்றும் பாறைகளில் உளி அடையாளங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது இடைக்கற்காலம் மற்றும் இரும்புக்காலத்திற்கிடையிலான வரலாற்று தொடர்புகளைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

12. ஒவ்வோர் ஆண்டும் உலக மனிதக்குரங்குகள் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 22 செப்டம்பர்

ஆ. 23 செப்டம்பர்

இ. 24 செப்டம்பர்

ஈ. 25 செப்டம்பர்

  • உலக மனிதக்குரங்குகள் நாள், செப்டம்பர்.24 அன்று, சிம்பன்சிகளுக்குப் பிறகு நமது நெருங்கிய உறவினர்களான கொரில்லாக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. காட்டு விலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம்போன்ற சர்வதேச ஒப்பந்தங்களைப் பின்பற்றி, கொரில்லாக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை இந்நாள் ஊக்குவிக்கிறது. “கொரில்லா” என்ற பெயர் முதன்முதலில் 1847ஆம் ஆண்டில் தாமஸ் ஸ்டாடன் சாவேஜ் மற்றும் ஜெஃப்ரிஸ் வைமன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது.

1. According to recent report, which states recorded the highest number of atrocities cases on dalits?

A. Tamil Nadu, Kerala and Karnataka

B. Jharkhand and Bihar

C. Uttar Pradesh, Rajasthan and Madhya Pradesh

D. Maharashtra, Karnataka and Kerala

  • Nearly 97.7% of atrocities against Scheduled Castes in 2022 were reported from 13 states. Uttar Pradesh, Rajasthan, and Madhya Pradesh recorded the highest number of such cases. The same 13 states reported 98.91% of atrocities against Scheduled Tribes. A total of 51,656 cases were registered under the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act in 2022. Uttar Pradesh had 12,287 cases (23.78% of total), Rajasthan had 8,651 cases (16.75%), and Madhya Pradesh had 7,732 cases (14.97%).

2. Recently, where was the India’s first CO2-to-methanol pilot plant launched?

A. Chennai

B. Gorakhpur

C. Pune

D. Kochi

  • India’s first CO2-to-Methanol pilot plant with 1.4 TPD capacity launched in Pune. The project is supported by the Department of Science and Technology (DST), Government of India. It is a collaboration between IIT Delhi and Thermax Limited under a Public-Private Partnership (PPP). The plant aims to advance Carbon Capture and Utilisation (CCU) technologies, aligning with India’s climate goals from COP 26. NITI Aayog and the Ministry of Petroleum are working on a policy to introduce 15% methanol-blended diesel, reducing crude oil imports. The project cost is approximately Rs. 31 crores.

3. What is the name of the initiative recently launched by the Lieutenant-Governor to combat air pollution in Delhi?

A. Dust-free Delhi Drive

B. Green Delhi Initiative

C. Pollution Control Program

D. None of the Above

  • Delhi Lieutenant Governor V K Saxena has launched a ‘Dust-free Delhi’ drive to reduce air pollution before winter. This 10-day campaign involves multiple agencies like the MCD and PWD, focusing on cleaning roads and drains to prevent dust accumulation.
  • Dried mud and silt from recent dry weather contribute significantly to pollution. The initiative aligns with the Delhi government’s Winter Action Plan to tackle pollution levels during winter months.

4. Recently, where was the “10th Commonwealth Parliamentary Association India Region Conference” held?

A. Hyderabad

B. New Delhi

C. Chennai

D. Bengaluru

  • The Indian Parliament hosted the 10th Commonwealth Parliamentary Association (CPA) India Region Conference in New Delhi for two days. Lok Sabha Speaker Om Birla chaired the conference, attended by 46 Presiding Officers, 25 Speakers, and other legislative officials from States and Union Territories. The theme is ‘The Role of Legislative Bodies in the Attainment of Sustainable and Inclusive Development.’ The CPA India Region was established in 2004 and includes 31 Member Branches, including the Indian Parliament and 30 State and Union Territory Legislatures.

5. Which ministry is responsible for implementing the ‘Integrated Development of Wildlife Habitats scheme’?

A. Ministry of Agriculture

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Ministry of Rural Development

D. Ministry of Tourism

  • The Union cabinet approved the continuation of the Integrated Development of Wildlife Habitats scheme for the 15th Finance Commission cycle. It is a Centrally Sponsored Scheme launched by the Ministry of Environment, Forest, and Climate Change. It evolved from the earlier scheme, “Assistance for the Development of National Parks and Sanctuaries.” The scheme aims to enhance technological interventions in tiger and other wildlife habitats. It will benefit 55 tiger reserves, 33 elephant reserves, and 718 protected areas and their zones of influence.

6. What is the name of the recently approved scheme by the Union Ministry of Commerce and Industry for the spice sector?

A. SPICED scheme

B. IDEAS scheme

C. Safe Spices scheme

D. Cardamom Productivity Scheme

  • The Union Ministry of Commerce and Industry approved the Sustainability in spice sector through progressive, innovative and collaborative interventions for export development (SPICED) scheme to boost spice exports. It aims to enhance the export of spices and value-added spice products, improve cardamom productivity, and upgrade spice quality for export. The scheme will be implemented until 2025-26, covering the remaining 15th Finance Commission term. It focuses on value addition, innovation, and sustainability in the spice sector.

7. Which telescope was recently used by astronomers to detect the new millisecond pulsar in the Terzan 6 globular cluster?

A. Hubble Space Telescope

B. Green Bank Telescope

C. Chandra X-ray Observatory

D. James Web Space Telescope

  • Astronomers using the Green Bank Telescope (GBT) discovered a new millisecond pulsar in the Terzan 6 globular cluster. Pulsars are rapidly rotating neutron stars that emit radiation in regular pulses, from seconds to milliseconds. They have strong magnetic fields, funneling particle jets along magnetic poles, producing powerful beams of light. These beams are swept around as the star rotates due to misalignment between the magnetic field and spin axis.

8. Which space startup company recently unveiled “Project 200” at the Bengaluru Space Expo 2024?

A. SpaceX

B. Bellatrix Aerospace

C. Agnikul Cosmos

D. Blue Origin

  • Bellatrix Aerospace, a Bengaluru-based space startup, launched Project 200 at the Bengaluru Space Expo 2024. Project 200 is an innovative satellite designed for Ultra-Low Earth Orbit (180 km-250 km). This mission will demonstrate a new in-house propulsion system that allows satellites to maintain 200 km orbits for years.

9. What percentage drop in poaching of the greater one-horned rhino has been recorded since 2016?

A. 50%

B. 60%

C. 86%

D. 68%

  • Kaziranga National Park, a UNESCO World Heritage Site in Assam, is famous for its population of the Indian one-horned rhinoceros.
  • The park has seen an 86% reduction in rhino poaching since 2016. The greater one-horned rhino, also known as the Indian rhinoceros, is the largest Asian rhino species. Its scientific name is Rhinoceros unicornis. These rhinos are primarily found in India and Nepal, especially in the Himalayan foothills.

10. “Nagar Van Yojana” is launched by which ministry?

A. Ministry of Agriculture

B. Ministry of Urban Development

C. Ministry of Environment, Forest and Climate Change

D. Ministry of Rural Development

  • The Nagar Van Yojana aimed to approve 100 urban forests (Nagar Vans) in the first 100 days of the government but exceeded expectations by sanctioning 111. These Nagar Vans are located across six states and one union territory. It was launched in 2020. The scheme enhances urban greenery to improve life quality and social cohesion. Each Nagar Van receives ₹4 lakh per hectare for creation and maintenance, involving citizens and stakeholders in green space management.
  • The initiative focuses on biodiversity, planting native species, and fostering community engagement through various programs. The goal is to develop 1,000 Nagar Vans by 2027 to combat environmental issues like pollution and habitat loss.

11. Recently, a rainwater harvesting project in which state uncovered megalithic urn burials?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Madhya Pradesh

  • A rainwater harvesting project in Kerala revealed many megalithic urn burials on Kundlikkad hill. These findings, over 2,500 years old, show unique urn features and organized burial techniques. Researchers discovered different pottery styles and chisel marks on rocks, offering insights into the historical connections between the Mesolithic and Iron Age periods.

12. Which day is observed as “World Gorilla Day” every year?

A. 22 September

B. 23 September

C. 24 September

D. 25 September

  • World Gorilla Day, on September 24, emphasizes the need to protect gorillas, our closest relatives after chimpanzees. The day encourages action to help gorillas, following international agreements like the Convention on the Conservation of Migratory Species of Wild Animals. The name “gorilla” was first used in 1847 by Thomas Staughton Savage and Jeffries Wyman.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin