TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 26th September 2024

1. பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றிலும் எவ்வளவு சேறு படிந்துள்ளது என்பதை அளக்க நீராழ அளவீட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் வெள்ள மேலாண்மைக்கு அவசியமான இந்த ஆய்வு, ஆக்கிரமிப்புகள் மற்றும் கழிவுநீர் வெளியேற்றத்தின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு விடையிறுப்பாகும். சதுப்பு நிலம் என்பது நன்னீர் மற்றும் ஓரளவு உப்பு நிறைந்த ஈரநிலம் ஆகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தமிழ்நாட்டின் சென்னைக்கு தெற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வெள்ளத்தடுப்புக்காடாக செயல்படுகிறது. ஒக்கியம் மடவு மற்றும் கோவளம் சிற்றோடை வழியாக வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுள்ள 65 சதுப்புநிலங்கள் இச்சதுப்பு நிலத்தில் அடங்கும். பள்ளிக்கரணை என்பது இந்தியாவில் உள்ள ராம்சர் தலமாகும்.

2. இந்தியா-அமெரிக்க கூட்டாண்மைமூலம் அண்மையில் நிறுவப்பட்ட குறைகடத்தி உற்பத்தி ஆலையின் பெயர் என்ன?

அ. பரமேஷ்

ஆ. சக்தி

இ. சூர்யா

ஈ. சிவம்

  • அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தனது முதல் தேசிய பாதுகாப்பு குறைகடத்தி உற்பத்தி ஆலையை, ‘சக்தி’ என்ற பெயரில் நிறுவுகிறது. அகச்சிவப்பு, காலியம் நைட்ரைடு மற்றும் சிலிக்கான் கார்பைடு குறைகடத்திகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, அமெரிக்க விண்வெளிப்படை மற்றும் இந்திய வணிகங்களை உள்ளடக்கிய முதல் தொழில்நுட்ப கூட்டாண்மையை இந்த முயற்சி குறிக்கிறது. இந்தத் திட்டம் மேம்பட்ட உணர்திறன், தகவல் தொடர்பு மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இராணுவ மற்றும் சிவிலியன் பயன்பாடுகளில் முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், குறைகடத்தி இறக்குமதியில் இந்தியாவின் சார்ந்திருக்கும் தன்மையை இது குறைக்கிறது.

3. ‘கேன்சர் மூன்ஷாட்’ என்ற முயற்சியைத் தொடங்கிய நாடுகள் எவை?

அ. சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

ஆ. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான்

இ. இந்தோனேசியா மற்றும் மலேசியா

ஈ. இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான்

  • குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை புற்றுநோயைச் சமாளிக்க குவாட் கேன்சர் மூன்ஷாட் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன. இது விரிவாக்கப்பட்ட தடுப்புமுறைகள் மற்றும் HPV தடுப்பூசிகள்மூலம் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையேயான இந்தக் கூட்டு முயற்சியானது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சுகாதார நெருக்கடியை நிவர்த்தி செய்கிறது. தொடக்கத்தில் இது கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயில் கவனம் செலுத்துகிறது. கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் என்பது பெரும்பாலும் தடுக்கக்கூடிய நோயாகும். எண்ம சுகாதாரம் தொடர்பான WHOஇன் உலகளாவிய முன்முயற்சிக்கு இந்தியா $10 மில்லியனை வழங்கும் மற்றும் HPV கருவிகள் மற்றும் தடுப்பூசிகளின் உற்பத்திக்காக $7.5 மில்லியன் வழங்கும்.

4. புடாபெஸ்டில் நடைபெற்ற 2024 – செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்ற நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. இந்தியா

இ. நேபாளம்

ஈ. ரஷ்யா

  • 2024ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற 45ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்க அணிகள் தங்கம் வென்றன. ஆடவர் அணி (அர்ஜுன் எரிகாசி, பிரக்ஞானந்தா, குகேஷ், விதித், ஹரி கிருஷ்ணா) தங்கப்பதக்கத்தையும் ஹாமில்டன்-ரஸ்ஸல் கோப்பையையும் வென்றது. மகளிர் அணி (வந்திகா அகர்வால், திவ்யா தேஷ்முக், ஹரிகா துரோணவல்லி, வைஷாலி, தானியா சச்தேவ்) தங்கப்பதக்கத்தையும், வேரா மெஞ்சிக் கோப்பையையும் வென்றது. 46ஆம் ஒலிம்பியாட் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் 2026இல் நடக்கும்.

5. அண்மையில், தூய மற்றும் நியாய பொருளாதாரம் தொடர்பான அமெரிக்க தலைமையிலான செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) கீழ் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. இந்தியா

ஆ. நேபாளம்

இ. மியான்மர்

ஈ. பூடான்

  • பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்கா தலைமையிலான செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் (IPEF) கீழ் தூய மற்றும் நியாய பொருளாதாரம் குறித்த ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்கள் தூய எரிசக்தி மேம்பாடு, காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வரி வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. அக்டோபர் 2021இல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அறிமுகப்படுத்தப்பட்ட IPEF, அதிகாரப்பூர்வமாக 2023 மே மாதத்தில் டோக்கியோவில் தொடங்கப்பட்டது.
  • இது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. IPEF நான்கு தூண்களை உள்ளடக்கியது: வர்த்தக வசதி, டிஜிட்டல் பொருளாதாரத் தரநிலைகள், நெகிழ்திறன்மிக்க விநியோகச் சங்கிலி மற்றும் கரிம நீக்கல்.

6. ஆபரேஷன் ஃப்ளட் என்பது இந்தியாவில் கீழ்க்காணும் எந்தத் துறையை மாற்றியமைத்த ஒரு முயற்சியாகும்?

அ. ஜவுளி

ஆ. பால்வளம்

இ. விவசாயம்

ஈ. மீன்வளம்

  • 1970இல் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் ஃப்ளட்’, இந்தியாவின் பால்வளத் துறையை நிறுவுவதில் முக்கியமானது; இது வெண்மைப்புரட்சிக்கு வழிவகுத்தது. கூட்டுறவு சங்கங்கள்மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புறத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக, 2028-29-க்குள் தினசரி கொள்முதல் இலக்கு கணிசமாக உயரும் என்ற நிலையில், உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா ஆனது. இந்திய அரசு தற்போது, ‘வெண்மைப்புரட்சி 2.0’இல் கவனம் செலுத்தி கூட்டுறவு உள்ளடக்கலை மேம்படுத்தவும், பால் பண்ணையாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, இந்தத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் முனைகிறது.

7. 2024 – உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாட்டில் தொடங்கப்பட்ட, ‘உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கைகள்’ இணைய நுழைவை உருவாக்கிய அமைப்பு எது?

அ. இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் (FSSAI)

ஆ. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR)

இ. தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனம்

ஈ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கைகள் (FIRA) இணைய நுழைவானது FSSAIஆல் உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாடு – 2024இல் தொடங்கப்பட்டது. இந்த இணைய நுழைவு இந்திய எல்லைகளில் உணவு இறக்குமதி நிராகரிப்புகள்பற்றி அறிவிக்கிறது. இந்த நிராகரிப்புகள்குறித்து பொதுமக்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். உலகளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் குறித்த விரைவான தகவல் பரிமாற்றத்தை இந்த இணைய நுழைவு எளிதாக்குகிறது. இது அபாயங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது. நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் கண்காணிப்பதற்கும் இடர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் FIRA ஒரு தரவுத்தளமாகவும் செயல்படுகிறது.

8. ஒவ்வோர் ஆண்டும் உலக காண்டாமிருக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 22 செப்டம்பர்

ஆ. 23 செப்டம்பர்

இ. 24 செப்டம்பர்

ஈ. 25 செப்டம்பர்

  • அழிந்துவரும் காண்டாமிருக இனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செப்டம்பர்.22ஆம் தேதி உலக காண்டாமிருக நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் காண்டாமிருகங்களின் முக்கியத்துவத்தையும் அவை எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்களையும் எடுத்துக்காட்டுகிறது. ஐந்து அழிந்து வரும் காண்டாமிருக இனங்கள் உள்ளன: ஜாவான், சுமத்ரான், கருப்பு, பெரிய ஒற்றைக்கொம்பு மற்றும் வெண் காண்டாமிருகங்கள். மிகவும் அரிதான ஜாவான் காண்டாமிருகம் உலகளவில் 75 மட்டுமே மீதமுள்ளது; மிகச்சிறிய காண்டாமிருகமான சுமத்ரான் 80 மீதம் உள்ளது.

9. அண்மையில், புது தில்லியில், ‘பாலின முக்கியத்துவத்திற்கான தேசிய மாநாட்டை’ நடத்திய அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சுகாதார அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

  • ஊரக வளர்ச்சி அமைச்சகமானது புது தில்லியில் பாலின முக்கியத்துவத்திற்கான தேசிய மாநாட்டை நடத்தியது. இந்நிகழ்ச்சி தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் நடைபெற்றது. பாலினம் சார்ந்த சமூக நிறுவனங்கள் மற்றும் பாலின ஒருங்கிணைப்புக்கான உத்திகளை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.

10. கிழக்குப் பாலம் – VII என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப்பயிற்சியாகும்?

அ. தாய்லாந்து

ஆ. ஓமன்

இ. இந்தோனேசியா

ஈ. ஈரான்

  • இந்திய வான்படை மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆஃப் ஓமன் (RAFO) ஆகியவற்றால் ராணுவ ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக, ‘கிழக்குப்பாலம்-VII’இன் 7ஆம் பதிப்பு நடத்தப்பட்டது. மசிராவில் (ஓமன்) நடைபெற்ற இது, சிக்கலான விமான நடவடிக்கைகள் மற்றும் உத்திசார் பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரு திறன் மேம்பாட்டு பயிற்சியாகும். பிராந்திய அமைதி & பாதுகாப்பிற்கான இருநாடுகளின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், கூட்டுப்பயிற்சிகள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள்மூலம் இந்தப் பயிற்சி நட்புறவை பேணியது. இந்த ஒத்துழைப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், பிராந்தியத்தில் எழும் பாதுகாப்பு சவால்களுக்கு தயாராகுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. “Staphylococcus aureus (S. aureus)” என்றால் என்ன?

அ. வைரஸ்

ஆ. பூஞ்சை

இ. பாக்டீரியா

ஈ. புரோட்டோசோவா

  • நுண்ணுயிரெதிர்ப்பு மறுப்பு என்பது 21ஆம் நூற்றாண்டின் ஒரு பெரிய சிக்கலாகும்; இதில் Staphylococcus aureus குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. கோள வடிவிலான இனக்கீற்று ஏற்கும் பாக்டீரியாவான Staphylococcus aureus ஆனது பொதுவாக தோலிலும் சுமார் 30% நபர்களின் மூக்கிலும் காணப்படுகிறது. பொதுவாக பாதிப்பில்லாத இது, தொற்றுநோய்களை ஏற்படுத்த வல்லது; குறிப்பாக தோல் நோய்த்தொற்றுகள். இது கொப்புளங்கள், புண்கள் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தப் பாக்டீரியா இரத்த ஓட்டம் வழியாக இதய வால்வுகள் மற்றும் எலும்புகள்போன்ற உறுப்புகளுக்குப் பரவுகிறது. நேரடி தொடர்பு, அசுத்தமான பொருள்கள் அல்லது தும்மல் அல்லது இருமலில் இருந்து வெளியேறும் நீர்த்திவலைகளை சுவாசிப்பதன்மூலம் இது பரவுகிறது.

12. அண்மையில், கீழ்க்காணும் எந்த நாட்டின் அதிபராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார்?

அ. இலங்கை

ஆ. பூடான்

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

  • 1968 நவம்பர்.24 அன்று கலேவலையில் பிறந்த அனுரகுமார திஸாநாயக்க, 42.31% வாக்குகளைப் பெற்று, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்று இலங்கை அரசியலை மாற்றியமைத்துள்ளார். கிராமப்புற பின்னணியிலிருந்து அதிபர் பதவிக்கு அவர் உயர்ந்தது நாட்டின் அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாரம்பரிய அரசியல் உயரடுக்கின்மீதான பொது மக்களின் அதிருப்தியைத்தொடர்ந்து அவரது இந்த வெற்றி வந்துள்ளது.

1. Pallikaranai Marshland is located in which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Maharashtra

  • A bathymetric study is being conducted around Pallikaranai marshland to measure the amount of sludge that can be removed. This study, essential for wetland restoration and flood management, is a response to the increasing pressures from encroachments and sewage discharge. The marsh is a freshwater and partly saline wetland located 20 km south of Chennai, Tamil Nadu. It acts as a flood buffer for the Chennai and Chengalpattu districts. The marsh includes 65 wetlands connected to the Bay of Bengal through Okkiyam Madavu and Kovalam Creek. Pallikaranai is a Ramsar site in India.

2. What is the name of the semiconductor fabrication plant recently established through the India-US partnership?

A. Paramesh

B. Shakti

C. Surya

D. Shivam

  • India establishes its first national security semiconductor fabrication plant named ‘Shakti’ through a collaboration with the US. This initiative marks the first technology partnership involving the US Space Force and Indian businesses, with an emphasis on manufacturing infrared, gallium nitride, and silicon carbide semiconductors. The project aims to enhance capabilities in advanced sensing, communication, and power electronics, addressing critical needs in both military and civilian applications, while reducing India’s reliance on semiconductor imports.

3. ‘Cancer Moonshot initiative’ is launched by which countries?

A. China, UK and France

B. United States, Australia, India, and Japan

C. Indonesia and Malaysia

D. India, Russia, France and Japan

  • The Quad countries—India, the US, Australia, and Japan—launched the Quad Cancer Moonshot Initiative to tackle cancer. It aims to combat cervical cancer through expanded screenings and HPV vaccinations.
  • This collaborative effort among India, the United States, Australia, and Japan addresses a significant health crisis in the Indo-Pacific region, focusing initially on cervical cancer, a largely preventable disease. India will contribute $10 million to the WHO’s Global Initiative on Digital Health and provide $7.5 million in HPV tools and vaccines.

4. Which country won gold medals in both the men’s and women’s categories at the 2024 Chess Olympiad held in Budapest?

A. France

B. India

C. Nepal

D. Russia

  • Indian men’s and women’s chess teams won gold at the 45th FIDE Chess Olympiad in Budapest, 2024. The men’s team (Arjun Erigasi, Praggnanandhaa, Gukesh, Vidit, Harikrishna) won the gold medal and the Hamilton-Russell Cup. The women’s team (Vantika Agarwal, Divya Deshmukh, Harika Dronavalli, Vaishali, Tania Sachdev) won the gold medal and Vera Menchik Cup. The 46th Olympiad will be held in Tashkent, Uzbekistan, in 2026.

5. Recently, which country signed agreements under the US-led Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF) on clean and fair economy?

A. India

B. Nepal

C. Myanmar

D. Bhutan

  • India signed agreements on clean and fair economy under the US-led Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF) during PM Modi’s US visit. These agreements focus on clean energy development, climate-friendly technologies, anti-corruption measures, and tax transparency.
  • IPEF was introduced by US President Biden in October 2021 and officially launched in May 2023 in Tokyo. It aims to boost economic growth, peace, and prosperity in the Indo-Pacific region without lowering tariff barriers. IPEF includes four pillars: trade facilitation, digital economy standards, supply chain resilience, and decarbonization.

6. Operation Flood is an initiative that transformed which sector in India?

A. Textile

B. Dairy

C. Agriculture

D. Fisheries

  • Operation Flood, launched in 1970, was pivotal in establishing India’s dairy sector, leading to the White Revolution. This initiative aimed to increase milk production and improve rural livelihoods through cooperative societies. As a result, India became the world’s largest milk producer, with a daily procurement target set to rise significantly by 2028-29. The government is now focusing on “White Revolution 2.0” to enhance cooperative coverage and empower dairy farmers, particularly women, while generating employment in the sector.

7. Which organization developed ‘Food Import Rejection Alerts’ portal, recently launched at the Global Food Regulators Summit 2024?

A. Food Safety Standards Authority of India (FSSAI)

B. Indian Council of Agricultural Research (ICAR)

C. National Institute of Food Technology

D. Ministry of Health and Family Welfare

  • The Food Import Rejection Alerts (FIRA) portal was launched at the Global Food Regulators Summit 2024 by FSSAI. This online portal notifies about food import rejections at Indian borders. It aims to inform the public and food safety authorities about these rejections. The portal facilitates quick information exchange on food safety and health risks globally. It enables authorities to take immediate action to prevent risks. FIRA also serves as a database for tracking rejected food products, improving risk management.

8. Which day is observed as “World Rhino Day” every year?

A. 22 September

B. 23 September

C. 24 September

D. 25 September

  • World Rhino Day is celebrated on September 22 to raise awareness about endangered rhino species. It highlights the importance of rhinos and the threats they face. There are five endangered rhino species: Javan, Sumatran, Black, Greater One-Horned, and White rhinos. The Javan rhino is extremely rare, with only 75 lefts, while the Sumatran rhino is the smallest and has about 80 remaining.

9. Which ministry recently hosted the ‘National Conclave on Gender Mainstreaming’ in New Delhi?

A. Ministry of Home Affairs

B. Ministry of Health

C. Ministry of Rural Development

D. Ministry of Agriculture

  • The Ministry of Rural Development hosted the National Conclave on Gender Mainstreaming in New Delhi. This event was held under the Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission. It focused on strengthening gender-responsive community institutions and strategies for gender integration.

10. Exercise Eastern Bridge VII is a joint military exercise between India and which country?

A. Thailand

B. Oman

C. Indonesia

D. Iran

  • 7th edition of ‘Exercise Eastern Bridge VII’ was conducted by the Indian Air Force (IAF) and the Royal Air Force of Oman (RAFO) to enhance military cooperation and interoperability. It was held at Masirah (Oman). It involved complex air operations and tactical drills, improving strategic capabilities. The exercise fostered camaraderie through joint briefings and cultural exchanges, highlighting the commitment of both nations to regional peace and security. This collaboration aims to strengthen ties and prepare for emerging security challenges in the region.

11. What is “Staphylococcus aureus (S. aureus)”?

A. Virus

B. Fungi

C. Bacteria

D. Protozoa

  • Antimicrobial resistance is a major crisis of the 21st century, with Staphylococcus aureus playing a significant role. S. aureus is a gram-positive, sphere-shaped bacterium commonly found on the skin and in the noses of about 30% of people. Usually harmless, it can cause infections, particularly skin infections, which may lead to blisters, abscesses, and swelling. The bacteria can spread through the bloodstream to organs like heart valves and bones. Transmission occurs through direct contact, contaminated objects, or inhaling droplets from sneezing or coughing.

12. Recently, Anura Kumara Dissanayake has been elected as the president of which country?

A. Sri Lanka

B. Bhutan

C. Bangladesh

D. Nepal

  • Anura Kumara Dissanayake, born on November 24, 1968, in Galewela, has transformed Sri Lankan politics by leading the Janatha Vimukthi Peramuna (JVP) party to victory in a groundbreaking election, securing 42.31% of the vote. His rise from a rural background to the presidency marks a significant shift in the country’s political landscape, particularly following the economic crises and public dissatisfaction with the traditional political elite.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!