TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 26th 27th and 28th July 2024

1. அண்மையில், அமீபிய மூளையுறை-மூளையழற்சி என்ற அரிய நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்வது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

. கேரளா

இ. கர்நாடகா

ஈ. குஜராத்

  • அமீபிய மூளையுறை-மூளையழற்சி (amoebic meningoencephalitis) நோயைக் கண்டறிவதற்கும் நிர்வகிப்பதற்கும் கேரள மாநிலம் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. Primary Amoebic Meningoencephalitis (PAM) என்பது நன்னீரில் காணப்படும் Naegleria fowleri என்னும் மூளையை உண்ணும் அமீபாவால் ஏற்படும் ஓர் அரிய, ஆபத்தான தொற்றுநோய் ஆகும். இதன் அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். PAM ஆனது 97%-க்கும் அதிகமான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த நோய்க்கு முறையான சிகிச்சை என்றவொன்று இதுவரை கண்டறியப்படவில்லை. இதற்கான பொதுவான மருந்தாக அமிபிசைடல் என்ற மருந்து தரப்படுகிறது.

2. கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. கர்நாடகா

ஈ. கேரளா

  • கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணைக்கு 69,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருவதால், அணையின் கீழ்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. KRS அணையின் நீர்வரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக 60,000 கனஅடியைத் தாண்டியதால், 50,000 கனஅடி வீதம் தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. கபினி அணைக்கும் அதிகளவு நீர்வரத்து பதிவாகியுள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ரங்கநதிட்டு பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

3. 2025இல் முதல் ஒலிம்பிக் இ-விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?

அ. ஈரான்

ஆ. சவூதி அரேபியா

இ. ஜோர்டான்

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

  • பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் (IOC) மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய ஒலிம்பிக் குழுமம் (NOC) ஆகியவை சவூதி அரேபியா 2025ஆம் ஆண்டில் தொடக்க ஒலிம்பிக் இ-விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் என அறிவித்தன. இந்த வரலாற்று கூட்டாண்மை 12 ஆண்டுகளுக்கு நீடிப்பதோடு ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்யும்.

4. அண்மையில், மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. உத்தரகாண்ட்

இ. இமாச்சல பிரதேசம்

ஈ. மேகாலயா

  • சுற்றுச்சூழலில் மேம்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கத்தை அளவிடும் மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி (GEI – Gross Environment Index) குறியீட்டை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஆனது. அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியால் தொடங்கப்பட்ட GEP சமன்பாடு என்பது காற்று, நீர், மண் மற்றும் காடுகளின் தரக்குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த முன்முயற்சியானது வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பொருளாதாரம் & சூழலியலை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. அண்மையில், பன்னாட்டு ஒலிம்பிக் குழுமத்தால் ஒலிம்பிக் விருது பெற்ற இந்திய துப்பாக்கிச்சுடும் வீரர் யார்?

அ. அபினவ் பிந்த்ரா

ஆ. ஜஸ்பால் ராணா

இ. மனு பாக்கர்

ஈ. பிரஞ்சு சோமானி

  • இந்திய துப்பாக்கிச்சுடும் வீரரான அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக ஒலிம்பிக் விருதை IOC வழங்கியுள்ளது. இதற்கான விழா ஆக.10ஆம் தேதி பாரிஸில் 142ஆவது IOC அமர்வின்போது நடைபெறும். இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, 2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் ஆடவரருக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் வென்றார். அவர் ISSF தடகளக்குழு மற்றும் IOC தடகள ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.

6. மேல் கர்னாலி புனல்மின்சாரத் திட்டம் அமைந்துள்ள நாடு எது?

அ. பூடான்

ஆ. நேபாளம்

இ. இந்தியா

ஈ. மியான்மர்

  • இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA) நேபாளத்தின் கர்னாலி ஆற்றில் 900 மெகாவாட் (MW) உற்பத்தித் திறன்கொண்ட மேல் கர்னாலி புனல்மின்சாரத்திட்டத்தில் `290 கோடி முதலீடு செய்யும். நேபாளம், இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு இந்த ஆற்றின்மூலம் மின்சாரம் வழங்கப்படும். கடந்த 2008இல் GMR மேல் கர்னாலி கர்னாலி புனல்மின்சார நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இது, ஆண்டுக்கு 3,466 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதன்மூலம் 2 மில்லியன் டன் பைங்குடில் வளி வெளியேற்றம் தடுக்கப்படும்.

7. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கான திட்டங்களை உருவாக்குவதற்காக உலக அறிவுசார் சொத்து அமைப்புடனான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?

அ. WAPCOS

ஆ. உலக வங்கி

இ. NITI ஆயோக்

ஈ. ஐஐடி, தில்லி

  • ஜூலை.22 அன்று உயர்மட்ட WIPO தூதுக்குழு புது தில்லியில் NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உலகளாவிய தெற்கில் புதுமை, தொழில்முனைவு மற்றும் அறிவு சார் சொத்துக்கான திட்டங்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓர் ஐநா நிறுவனமான WIPO, வருடாந்திர உலகளாவிய புத்தாக்க குறியீட்டை வெளியிடுகிறது. 2023இல், இந்தியா 40ஆவது இடத்தில் இருந்தது. 2022இல், இந்தியாவின் காப்புரிமை தாக்கல் வீதம் 31.6%ஆக வளர்ச்சியைக் கண்டது.

8. ஒவ்வோர் ஆண்டும், ‘தேசிய ஒலிபரப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி து?

அ. ஜூலை.20

ஆ. ஜூலை.23

இ. ஜூலை.25

ஈ. ஜூலை.31

  • கடந்த 1927ஆம் ஆண்டு பம்பாயிலிருந்து இந்திய ஒலிபரப்பு நிறுவனத்தால் இதே நாளில் வானொலி ஒலிபரப்பு தொடங்கியதைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை.23 அன்று இந்தியாவில் தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது. 1936ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி (AIR) எனப் பெயர் மாற்றப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக வளர்ந்தது. இந்தியாவை இணைப்பதிலும், செய்திகள், இசை மற்றும் கதைகளை வழங்குவதிலும், விடுதலைப் போராட்டம்போன்ற வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப்பங்கு வகிப்பதிலும் வானொலி முக்கியமானதாக விளங்கி வருகிறது.

9. துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCPOR) என்பது எந்த அமைச்சகத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிமிக்க ஆராய்ச்சி நிறுவனமாகும்?

அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையமானது (NCPOR) இந்தியப்பெருங்கடலில் உள்ள அரிய கனிமங்களை ஆராய்வதற்காக இந்தியாவின் ஆழ்கடல் பணிக்காக ஒரு புதிய கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலை உருவாக்கவுள்ளது. கடந்த 1998இல் நிறுவப்பட்ட NCPOR, துருவ மற்றும் தென்பெருங்கடல் ஆராய்ச்சிக்கான இந்திய நாட்டின் முன்னணி R&D நிறுவனமாகும். இது அண்டார்டிகா, ஆர்க்டிக், இமயமலை மற்றும் தென்பெருங்கடலில் மேற்கொள்ளப்படும் துருவப்பயணங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. இது நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் கோவாவின் வாஸ்கோடகாமாவில் அமைந்துள்ளது.

10. சராய்தேவ் மேடாம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர்

இ. நாகாலாந்து

ஈ. சிக்கிம்

  • சராய்தேவ் மேடாம் ஆனது வடகிழக்கு இந்தியாவின் முதல் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், கலாச்சாரப் பிரிவில் இந்தியாவின் 43ஆவது தலமாகவும் மாறவுள்ளது. அஸ்ஸாமில் அமைந்துள்ள இந்தப்புராதன இடுகாட்டு மேடுகள் அஹோம் மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் இடுகாட்டு மேடுகளாகும். இவை யாவும் 13-18ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. அஹோம் சமூகத்தால் புனிதமானதாகப் போற்றப்படும், மேடாம்கள் பெரிய புல் மூடிய மலைகளை ஒத்திருக்கின்றன. காசிரங்கா மற்றும் மனாஸ் தேசியப்பூங்காக்கள் வடகிழக்கிந்தியாவில் அமைந்துள்ள இயற்கைப் பிரிவில் இடம்பெற்றுள்ள பிற உலகப் பாரம்பரிய தலங்களாகும்.

11. ‘S. thermophilus’ என்றால் என்ன?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. பூஞ்சை

ஈ. புரோட்டோசோவா

  • S. thermophilus’ஐ ஆராயும்போது, ​​இந்தியாவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் ஒரு புதிய வகை லாக்டிக் அமில பாக்டீரியாவைக் கண்டுபிடித்தனர். செரிமான மண்டலத்தில் காணப்படும் இந்த கிராம்-நேரி, இயக்கமில்லா பாக்டீரியா, லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்வதோடு உணவு முறிவு, ஊட்டச்சத்து உறிஞ்சல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உயிரினங்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது லாக்டோஸ் செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கத்தைக் குறைத்து குடல் அழற்சியின் அபாயத்தைக் குறைக்கிறது. ‘S. thermophilus’ ஆனது தயிர் உற்பத்தி மற்றும் நார்ச்சத்துபோன்ற கூடுதல் சத்துக்களில் பயன்படுத்தப்படுகிறது.

12. அண்மையில், ‘உலகின் காடுகளின் நிலை – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. SEBI

ஆ. NABARD

இ. உணவு மற்றும் உழவு அமைப்பு

ஈ. வேளாண் அமைச்சகம்

  • உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO), “Accelerating forest solutions through innovation” என்ற கருப்பொருளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட “உலகின் காடுகளின் நிலை – 2024” என்ற அறிக்கை, 1990-2000ஆம் ஆண்டில் 15.8 மில்லியன் ஹெக்டேராக இருந்த காடழிப்பு விகிதம் 2015-2020 ஆம் ஆண்டில் 10.2 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது. சராசரி வருடாந்திர நிகர வனப்பரப்பு அதிகரிப்பில் (2010-2020) இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மரமல்லாத வனப்பொருட்கள் மட்டும் 275 மில்லியன் இந்திய வாழ்வாதாரங்களை ஆதரிக்கின்றன. தட்பவெப்பநிலை நெகிழ்தன்மை, உயிரியல் பொருளாதார மாற்றங்கள் மற்றும் மரமல்லா காடுகளின் ஊட்டச்சத்து நன்மைகளை மேம்படுத்துவதற்கு புத்தாக்கம் முக்கியமானது என இவ்வறிக்கை கூறுகிறது.

13. களரிப்பயட்டு என்பது எந்த மாநிலத்தில் பிரபலமாக நடைமுறையில் உள்ள பாரம்பரிய தற்காப்புக் கலையாகும்?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • இந்தியாவில் களரிப்பயட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய களரிப்பயட்டு கூட்டமைப்பு மண்டல விளையாட்டு கூட்டமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய இளையோர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மக்களவையில் அறிவித்தார். கேரளாவில் தோன்றிய இந்தப் பாரம்பரிய தற்காப்புக்கலை, போர்வீரரான பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. “களரிபயட்டு” என்ற சொல் “களரி” (போர்க்களம்) மற்றும் “பயட்டு” (சண்டை) ஆகிய இரு மலையாளச் சொற்களின் இணைவாகும்.

14. அண்மையில், எரிகாற்றிழுப்பு முன்செலுத்தல் தொழில்நுட்பத்திற்கான (Air Breathing Propulsion Technology) இரண்டாவது பறப்புச்சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?

அ. CNSA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. NASA

  • வளிமண்டல உயிர்வளியை (O2) ஆக்சிகரணியாகப் பயன்படுத்தும் எரிகாற்றிழுப்பு முன்செலுத்தல் தொழில்நுட்பத்தி -ற்கான (Air Breathing Propulsion Technology) இரண்டாவது பறப்புச் சோதனையை ISRO வெற்றிகரமாக நடத்தியது. இது ஏவுகலங்களை இலகுவாகவும் திறமையாகவும் ஆக்குகிறது. இருப்பினும், இத்தொழில்நுட்பமானது பூமியின் வளிமண்டலத்தின் அடர்த்தியான அடுக்குகளுக்குள் (70 கிலோமீட்டர் உயரம் வரை) மட்டுமே இயங்கும். இதற்கு அப்பால், ஏவுகலங்கள் எரிபொருள் மற்றும் ஏவுகலத்திலேயே உள்ள ஆக்சிகரணி ஆகிய இரண்டையுங்கொண்ட ஒரு நிலைக்கு மாறவேண்டும்.

15. ஒவ்வோர் ஆண்டும், ‘தேசிய வருமான வரி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 23 ஜூலை

ஆ. 24 ஜூலை

இ. 25 ஜூலை

ஈ. 26 ஜூலை

  • 1860ஆம் ஆண்டில் சர் ஜேம்ஸ் வில்சன் முதன்முறையாக வருமான வரி விதித்ததை நினைவுகூரும் வகையில், 2010ஆம் ஆண்டு முதல், ஜூலை.24 அன்று இந்தியா தேசிய வருமான வரி நாளை அனுசரித்து வருகிறது. தேசிய வளர்ச்சிக்காக சரியான நேரத்தில் வரி செலுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்கூறுகிறது. முதல் முறையாக இந்நாள் அனுசரிக்கப்பட்ட 2010 என்பது வருமான வரி கொண்டுவரப்பட்ட 150ஆம் ஆண்டு நிறைவைக் குறித்தது. 1922இன் வருமான வரிச் சட்டம் நேரடி வரிகள் நிர்வாகத்திற்கான கட்டமைப்பை நிறுவியது; பின்னர் விடுதலைக்குப்பிறகு 1961 சட்டத்துடன் அது ஒருங்கிணைக்கப்பட்டது.

16. MSME-TEAM முன்னெடுப்பின் முதன்மை இலக்கு என்ன?

அ. MSMEகள் கடன் பெற உதவுவது

ஆ. ONDC தளத்தில் ஐந்து லட்சம் MSMEகளை இணைப்பது

இ. MSME ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பது

ஈ. MSMEகளுக்கான புதிய சந்தைப்படுத்தல் உத்திகளை உருவாக்குவது

  • MSME அமைச்சகமானது RAMP திட்டத்தின்கீழ், “MSME வர்த்தக இயக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு” (MSME-TEAM Initiative)ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Open Network Digital Commerce (ONDC) தளத்தில் சேர்வதில் 2 ½ லட்சம் பெண்களுக்குச் சொந்தமான MSEகள் உட்பட ஐந்து லட்சம் MSME களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பட்டியல் தயாரிப்பு, போக்குவரவு மற்றும் பொதிகட்டல் ஆகியவற்றிற்கான நிதியுதவியை வழங்குகிறது. விழிப்புணர்வு பயிலரங்குகள் அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களில் நடத்தப்படும். இதன் துணைத் திட்டம் 2027 மார்ச் வரை இயங்கும்.

17. எண்ம அஞ்சல் குறியீட்டெண்ணின் (DIGIPIN) முதன்மை நோக்கம் என்ன?

அ. புதிய அஞ்சல் குறியீட்டமைப்பை உருவாக்குவது

ஆ. பாரம்பரிய முகவரிகளை QR குறியீடுகளுடன் மாற்றுவது

இ. புதிய அஞ்சல் வரிசையாக்க முறையை செயல்படுத்துவது

ஈ. இந்தியாவில் தரப்படுத்தப்பட்ட, நிலக்குறியீடு செய்யப்பட்ட முகவரி அமைப்பை நிறுவுவது

  • ஐஐடி ஹைதராபாத் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிலக்குறியிடப்பட்ட முகவரி அமைப்பான DIGIPINஇன் சோதனைப்பதிப்பை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. DIGIPIN ஆனது பொது & தனியார் சேவைகளுக்கான முகவரிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு பொதுச்சேவை வழங்கல், அவசரகால பதிலளிப்பு மற்றும் போக்குவரவுச் செயல்திறனை மேம்படுத்தும். இது துல்லியமான முகவரி தேவைப்படும் பல்வேறு சூழலமைப்புகளுக்கு அடிப்படை அடுக்காகப் பயன்படுத்தப்படும்.

18. மத்திய பட்ஜெட் 2024-25இன்படி, தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத்திட்டத்தின் (National Industrial Corridor Development Programme (NICDP))கீழ் எத்தனை தொழிற்பூங்காக்கள் நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளன?

அ. 10

ஆ. 01

இ. 12

ஈ. 21

  • மத்திய பட்ஜெட் 2024-25 ஆனது தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் பன்னிரண்டு தொழிற் பூங்காக்களை உருவாக்க முன்மொழிகிறது. மாநிலங்கள் மற்றும் தனியார் துறையுடன் கூட்டிணைந்து நூறு (100) நகரங்களில் அல்லது அதற்கருகில் முதலீட்டுக்குத் தயாரான தொழிற்பூங்காக்களை அரசாங்கம் உருவாக்கும். ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி SEZ போன்ற தொழிற்பூங்காக்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன, உள்கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்கின்றன, உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றன, மேலும் அயல்நாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கின்றன, உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன.

19. மின்சார வாகனப் போக்குவரவு ஊக்குவிப்புத் திட்டத்தை தொடங்கிய எந்த அமைச்சகம் எது?

அ. மின்சார அமைச்சகம்

ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

இ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • EV பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகத்தால் 2024 மார்ச்சில் Electric Mobility Promotion Scheme (EMPS) தொடங்கப்பட்டது; இது 2024 ஜூலை.31 அன்று முடிவடையும். `500 கோடி மதிப்பீட்டிலான இந்தத் திட்டம், இரு சக்கர வாகனங்கள் (தனியார், பெருநிறுவனம் மற்றும் வணிகம்) மற்றும் மூன்று சக்கர வாகன (இ-ரிக்‌ஷாக்கள் மற்றும் வண்டிகள் உட்பட) விற்பனையை ஊக்குவிக்கிறது. தகுதியான EVகள் இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்திற்குள் தயாரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

20. பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியானின் முதன்மை நோக்கம் என்ன?

அ. நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

ஆ. பழங்குடி சமூகங்களின் சமூகப்பொருளாதார நிலையை மேம்படுத்துதல்

இ. கிராமப்புறங்களில் எண்மக்கல்வியறிவை மேம்படுத்துதல்

ஈ. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல்

  • பழங்குடியின சமூகங்களின் சமூகப்பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம் அபியானை மத்திய பட்ஜெட் அறிமுகப்படுத்தியது. கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனஞ்செலுத்தும், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களை இலக்காகக் கொள்ள இந்தத் திட்டம் செறிவூட்டல் அணுகுமுறையைப் (saturation approach) பயன்படுத்தும். இது 63,000 கிராமங்களை உள்ளடக்கியதாகவும், நாடு முழுவதும் உள்ள 5 கோடி பழங்குடியின மக்கள் பயன்பெறவும் திட்டமிட்டுள்ளது.

21. அண்மையில், நடுவண் நிதி அமைச்சகத்தால் நமோ டிரோன் சகோதரிகள் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது?

அ. ரூ.600 கோடி

ஆ. ரூ.500 கோடி

இ. ரூ.400 கோடி

ஈ. ரூ.300 கோடி

  • 2023-24 முதல் 2025-2026 வரை 15,000 பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு டிரோன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நமோ டிரோன் சகோதரிகள் திட்டத்திற்கு நடுவண் நிதியமைச்சகம் `500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த முன்னெடுப்பு பெண்களுக்கு உரம் தெளித்தல், விதை விதைத்தல் மற்றும் பயிர் கண்காணிப்புபோன்ற பணிகளில் விவசாயிகளுக்கு உதவுவதன்மூலம் டிரோன் ஓட்டிகளாக ஆவதற்கு பயிற்சி அளிக்கிறது. இந்தத் திட்டம் விவசாயத்தை நவீனமயமாக்கவும் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் நோக்கம் கொண்டுள்ளது. ஒரு சுய உதவிக்குழுவிற்கு `8 இலட்சம் வரை டிரோன் செலவில் 80% மானியம் வழங்கப்படுகிறது.

22. நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, ‘ஆபரேஷன் பிரஹார்’ தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. சத்தீஸ்கர்

இ. ஜார்கண்ட்

ஈ. ஒடிசா

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் பழங்குடியினத்து முதலமைச்சர் பதவியேற்றதிலிருந்து, நக்சலைட்டுகள் தொடர்பான நிகழ்வுகள் கொலைகள், கைதுகள் மற்றும் சரணடைதல் போன்றவை 5 மடங்கு அதிகரித்துள்ளன. இதனை அடுத்து “ஆபரேஷன் பிரஹார்” என்ற நடவடிக்கையை அம்மாநிலம் தொடங்கியுள்ளது. இது மாவோயிஸ்ட் தலைவர்களை குறிவைக்கும் கிளர்ச்சி எதிர்ப்பு முயற்சியாகும். கிளர்ச்சியாளர்களை ஒன்றுமில்லாமலாக்குவது மற்றும் ஆட்சேர்ப்பை சீர்குலைப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த நடவடிக்கை, அதிகப்படியான அரச அதிகாரம் மற்றும் செயற்கை மோதல்களை நடத்தியதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டது. மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபடாத உள்ளூர் ஆதிவாசி சமூகங்கள்மீதான அதன் தாக்கம் கவலைகளை எழுப்புகிறது.

23. 2024-25க்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘தட்பவெப்பநிலை நிதி வகைபிரிப்பை’ உருவாக்குவதன் நோக்கம் என்ன?

அ. பசுமைப்பத்திரங்கள் போன்ற தட்பவெப்பநிலை தொடர்பான நிதிக்கருவிகளை வகைப்படுத்துவதற்கான தரநிலைகளை உருவாக்குவது

ஆ. தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நிலையான திட்டங்களை நோக்கிவரும் முதலீடுகளை வழிநடத்துவதில் முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு வழிகாட்டுவது

இ. தட்பவெப்பநிலை மாற்றத்துடன் தொடர்புடைய அபாயங்களை நிர்வகிப்பது

ஈ. தட்பவெப்பநிலை நிதியத்தில் நாடுகளின் முன்னேற்றத்தைக் குறிப்பது

  • 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், “தட்பவெப்பநிலை நிதி வகைபிரிப்பை” உருவாக்குவதாக நடுவண் நிதியமைச்சர் அறிவித்தார். இந்த அமைப்பு பொருளாதாரத்தின் சில பகுதிகளை நிலையான முதலீடுகளாக வகைப்படுத்துகிறது; தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளை வழிநடத்துகிறது. இது பசுமைப்பத்திரங்கள் மற்றும் தட்பவெப்பநிலை இடர் மேலாண்மை மற்றும் நிகர-சுழிய மாற்றம் திட்டமிடல்போன்ற தட்பவெப்பநிலை தொடர்பான நிதிக்கருவிகளுக்கான தரநிலைகளை அமைக்கிறது. தென்னாப்பிரிக்கா, தென்கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை ஏற்கனவே இதேபோன்ற நிதி வகைபிரித்தல்களை உருவாக்கியுள்ளன.

24. ‘பழுப்புநிறக்குறளிகள்’ என்றால் என்ன?

அ. வான் பொருள்கள்

ஆ. ஆக்கிரமிப்பு தாவரங்கள்

இ. மீனினங்கள்

ஈ. காசநோய்க்கான மருந்துகள்

  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் பழுப்புநிறக்குறளிகளின் (Brown dwarfs) வளிமண்டல நிலைமைகளை ஆய்வுசெய்துள்ளனர். இந்த வான் பொருட்கள், கோள்களைவிட பெரியவை ஆனால் விண்மீன்களைவிட சிறியவை, பெரிய கோள்களுக்கும் சிறிய விண்மீன்களுக்கும் இடையில் உள்ளன. அவை விண்மீன்கள்போன்ற பொருட்களைத் திரட்டி சூடான சிலிக்கேட் மேக அமைப்புகளை உருவாக்குகின்றன. விண்மீன்களைப் போல் பழுப்புநிறக்குறளிகளால் அணுக்கரு இணைவைத் தாங்க முடியாது, அதனால்தான் அவை “தோல்வியுற்ற விண்மீன்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தை கோள்களை விட சிறப்பாக தக்கவைத்து, குறைந்த உலோக உள்ளடக்கம் கொண்டவையாக உள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 10% அதிகரிக்கும்: வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் `1,000 அளிக்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ என்ற திட்டத்தால், உயர்கல்வி சேர்க்கை 10% அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் இணையவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தோராயமாக 3.28 லட்சம் இருக்கும் எனக்கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, 6 முதல் +2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் `1,000 வழங்கப்படவுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு வரை பயின்று, அதன்பிறகு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இந்தத்திட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள், முதல் 3 ஆண்டுகள் மட்டும் திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகை பெற இயலும். பிற மாநிலங்களில் நடுவணரசின்கீழ் செயல்படும் IIT, NIT போன்ற நிறுவனங்களில் பயிலக் கூடிய, தமிழ்வழியில் பள்ளிப்பாடம் பயின்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு அலுவலராக, சமூகநல ஆணையர் செயல்படுவார்.

2. கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

“கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள்மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கனிம வளம் நிறைந்த நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு மாநில அரசுக்கு வழங்கப்படும் உரிமத்தொகை என்பது வரி கிடையாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. தமிழ்நாடு அரசு எதிர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் இடையேயான வழக்கில் இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் 49ஆவது பிரிவின்படி, நிலம் மற்றும் கட்டடங்கள்மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. அதுபோல, 50ஆவது பிரிவு, கனிம மேம்பாடு சட்டத்தின்மூலம் நாடாளுமன்றம் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு, கனிமங்கள்மீது வரி விதிக்க மாநிலங்களை அனுமதிக்கிறது. 54ஆவது பிரிவின்படி, கனிமங்கள்மீது வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை.

3. பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா!

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கத்தை வென்றது.

1. Recently, which state has released guidelines on the prevention, diagnosis, and treatment of the rare disease amoebic meningoencephalitis?

A. Tamil Nadu

B. Kerala

C. Karnataka

D. Gujarat

  • Kerala has issued technical guidelines for diagnosing and managing amoebic meningoencephalitis. Primary amoebic meningoencephalitis (PAM) is a rare, often fatal infection caused by the brain-eating amoeba Naegleria fowleri, found in freshwater. Symptoms include headache, fever, nausea, and vomiting, typically after exposure to warm, stagnant freshwater. PAM has a high mortality rate over 97%. Treatment remains uncertain but should involve amebicidal drugs that can cross the blood-brain barrier.

2. Krishnaraja Sagar and Kabini dams are located in which state?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Karnataka

D. Kerala

  • A flood alert has been issued for low-lying areas downstream of Karnataka’s Krishnaraja Sagar (KRS) dam due to a water inflow exceeding 69,000 cusecs. The alert affects regions along the Cauvery River in Mysuru and Chamarajanagar districts. The KRS dam’s inflow surpassed 60,000 cusecs for the second consecutive day, prompting a release of 50,000 cusecs. The Kabini dam also recorded high inflows. Rising water levels have led to the closure of tourist sites like Ranganathittu Bird Sanctuary.

3. Which country will host the inaugural Olympic Esports Games 2025?

A. Iran

B. Saudi Arabia

C. Jordan

D. UAE

  • The International Olympic Committee (IOC) and the National Olympic Committee (NOC) of Saudi Arabia announced that Saudi Arabia will host the inaugural Olympic Esports Games in 2025. This historic partnership will last for 12 years, ensuring that the Olympic Esports Games are held regularly.

4. Recently, which state became the first in the country to introduce the concept of Gross Environment Product index?

A. Kerala

B. Uttarakhand

C. Himachal Pradesh

D. Meghalaya

  • Uttarakhand became the first state in India to introduce the Gross Environment Product (GEP) index, which measures the impact of developmental activities on the environment. Launched by Chief Minister Pushkar Singh Dhami, the GEP equation is based on air, water, soil, and forest quality indices. This initiative follows aims to balance economy and ecology by assessing environmental conditions directly affected by development.

5. Recently, which Indian Shooter has been awarded the Olympic Order by the International Olympic Committee?

A. Abhinav Bindra

B. Jaspal Rana

C. Manu Bhaker

D. Pranju Somani

  • Indian shooting legend Abhinav Bindra has been awarded the Olympic Order by the IOC for his outstanding contributions to the Olympic Movement. The ceremony will be held on August 10 during the 142nd IOC Session in Paris. Bindra, India’s first individual Olympic gold medallist, won the men’s 10m air rifle event at the 2008 Beijing Games. He has also served on the ISSF Athlete Committee and the IOC Athlete Commission.

6. Upper Karnali Hydro-Electric Power Project is located in which country?

A. Bhutan

B. Nepal

C. India

D. Myanmar

  • The Indian Renewable Energy Development Agency Limited (IREDA) will invest ₹290 crore in the 900 MW Upper Karnali Hydro-Electric Power Project on Nepal’s Karnali River. This run-of-the-river project will supply power to Nepal, India, and Bangladesh for 25 years. Awarded to GMR Upper Karnali Hydro Power Limited in 2008, it will generate 3,466 million units of electricity annually, offsetting two million tons of greenhouse gas emissions.

7. Which institution recently signed a Joint Letter of Intent with World Intellectual Property Organization to develop programs for countries in the global south?

A. WAPCOS

B. World Bank

C. NITI Aayog

D. IIT, Delhi

  • On July 22, 2024, a high-level WIPO delegation signed a Joint Letter of Intent (JLoI) with Atal Innovation Mission (AIM) of NITI Aayog in New Delhi. The JLoI aims to develop programs for innovation, entrepreneurship, and intellectual property in the Global South. WIPO, a UN agency, releases the annual Global Innovation Index (GII). In 2023, India ranked 40th, and in 2022, India saw the highest global patent filing growth at 31.6%.

8. Which day is observed as ‘National Broadcasting Day’ every year?

A. July.20

B. July.23

C. July.25

D. July.31

  • National Broadcasting Day is celebrated in India every July 23, marking the start of radio broadcasting on this day in 1927 by the Indian Broadcasting Company from Bombay. Renamed All India Radio (AIR) in 1936, it grew into one of the world’s largest networks. Radio has been vital in connecting India, offering news, music, and stories, and playing a key role in historical events like the freedom struggle.

9. National Centre for Polar and Ocean Research (NCPOR) is an autonomous research institute established under which ministry?

A. Ministry of Ports, Shipping and Waterways

B. Ministry of Defence

C. Ministry of Earth Sciences

D. Ministry of Urban Development

  • The National Centre for Polar and Ocean Research (NCPOR) is constructing a new ocean research vessel for India’s Deep Ocean Mission to explore rare minerals in the Indian Ocean. Established in 1998, NCPOR is India’s leading R&D institution for Polar and Southern Ocean research. It coordinates polar expeditions and scientific research in Antarctica, the Arctic, the Himalayas, and the Southern Ocean, and is located in Vasco da Gama, Goa, under the Ministry of Earth Sciences.

10. Charaideo Maidam is located in which state?

A. Assam

B. Manipur

C. Nagaland

D. Sikkim

  • Charaideo Maidam will become North East India’s first world heritage site in the cultural category and India’s 43rd overall. Located in Assam, these ancient burial mounds of Ahom kings and nobles date back to the 13th to 18th centuries. Revered as sacred by the Ahom community, the Maidams resemble large grass-covered hillocks. Kaziranga and Manas National Parks are the other world heritage sites from North East India in the natural category.

11. What is ‘S. thermophilus’?

A. Bacteria

B. Virus

C. Fungus

D. Protozoa

  • Scientists at the Agharkar Research Institute (ARI) in India discovered a new strain of lactic acid bacteria while studying S. thermophilus. This gram-positive, non-motile bacterium, found in the digestive tract, produces lactic acid, aiding in food breakdown, nutrient absorption, and fighting harmful organisms. It improves lactose digestion, reduces inflammation, and lowers the risk of inflammatory bowel disease. S. thermophilus is used in yogurt production and probiotic supplements.

12. Which organization recently released the ‘State of the World’s Forests 2024 Report’?

A. SEBI

B. NABARD

C. Food and Agriculture Organization

D. Ministry of Agriculture

  • The FAO’s “State of the World’s Forests 2024” report, themed “Accelerating Forest solutions through innovation,” highlights a decline in deforestation rates to 10.2 million ha per year in 2015–2020 from 15.8 million ha in 1990–2000. India ranks 3rd for average annual net forest area gain (2010-2020). Non-Timber Forest Products support 275 million Indian livelihoods. Innovation is crucial for climate resilience, bioeconomy shifts, and leveraging non-wood forest products’ nutritional benefits.

13. Kalarippayattu is the traditional martial art form popularly practiced in which state?

A. Tamil Nadu

B. Kerala

C. Arunachal Pradesh

D. Punjab

  • The Union Minister for Youth Affairs and Sports announced in the Lok Sabha that the Indian Kalarippayattu Federation has been recognized as the Regional Sports Federation to promote Kalarippayattu in India. This traditional martial art, originating in Kerala, is believed to have been established by the warrior sage Parasurama. The term “Kalaripayattu” combines “kalari” (place of combat) and “payattu” (fighting) in Malayalam.

14. Recently, which organization successfully carried out a second experimental flight for the demonstration of Air Breathing Propulsion Technology?

A. CNSA

B. ISRO

C. JAXA

D. NASA

  • ISRO successfully conducted the second experimental flight for Air Breathing Propulsion Technology, which uses atmospheric oxygen as an oxidizer instead of carrying one onboard. This makes rockets lighter and more efficient. However, the technology is applicable only within the denser layers of Earth’s atmosphere (up to 70 kilometers altitude). Beyond this, rockets must switch to a stage with both fuel and an onboard oxidizer.

15. Which day is observed as ‘National Income Tax Day’ every year?

A. 23 July

B. 24 July

C. 25 July

D. 26 July

  • Since 2010, India observes National Income Tax Day on July 24, commemorating the first imposition of income tax by Sir James Wilson in 1860. The day highlights the importance of timely tax payments for national development. The first observance marked the 150th anniversary in 2010. The Income Tax Act of 1922 established the framework for direct tax administration, later consolidated by the 1961 Act after Independence.

16. What is the primary goal of the MSME-TEAM Initiative?

A. To assist MSMEs in obtaining loans

B. To onboard five lakh MSMEs onto the ONDC platform

C. To provide training for MSME employees

D. To develop new marketing strategies for MSMEs

  • The Ministry of MSME launched the “MSME Trade Enablement and Marketing Initiative” (MSME-TEAM Initiative) under the RAMP scheme. It aims to assist five lakh MSMEs, including two and a half lakh women-owned MSEs, in onboarding the Open Network Digital Commerce (ONDC) platform. The initiative offers financial assistance for catalogue preparation, logistics, and packaging. Awareness workshops will target Tier 2 and Tier 3 cities. The sub-scheme runs until March 2027.

17. What is the primary objective of the Digital Postal Index Number (DIGIPIN)?

A. To create a new postal code system

B. To replace traditional addresses with QR codes

C. To implement a new mail sorting system

D. To establish a standardized, geo-coded addressing system in India

  • The Department of Posts launched the beta version of DIGIPIN, a geo-coded addressing system developed with IIT Hyderabad. DIGIPIN aims to simplify addressing for public and private services by creating and sensing geo-locations of addresses. This system will enhance public service delivery, emergency response, and logistics efficiency. It can be used as a base layer for various ecosystems requiring accurate addressing.

18. According to Union Budget 2024-25, how many industrial parks have been sanctioned under the National Industrial Corridor Development Programme (NICDP)?

A. 10

B. 01

C. 12

D. 21

  • The Union Budget 2024-25 proposes creating twelve industrial parks under the National Industrial Corridor Development Programme. The government will develop investment-ready industrial parks in or near 100 cities, partnering with states and the private sector. Industrial parks, like Andhra Pradesh’s Sri City SEZ, foster employment, shared infrastructure, enhanced productivity, and attract Foreign Direct Investment, expanding manufacturing activity.

19. Electric Mobility Promotion Scheme (EMPS) launched by which ministry?

A. Ministry of Power

B. Ministry of Urban Development

C. Ministry of Heavy Industries

D. Ministry of Defence

  • The Electric Mobility Promotion Scheme (EMPS) was launched in March 2024 by the Union Ministry of Heavy Industries to accelerate EV adoption and will end on July 31, 2024. With a total outlay of Rs. 500 crores, the scheme targets two-wheelers (private, corporate, and commercial) and three-wheelers (including e-rickshaws and carts). Eligible EVs must be manufactured and registered within the scheme’s validity period.

20. What is the primary aim of the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan?

A. To improve the infrastructure in urban areas

B. To enhance the socio-economic condition of tribal communities

C. To promote digital literacy in rural areas

D. To increase agricultural productivity

  • The Union Budget introduced the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan, aimed at improving the socio-economic status of tribal communities. The scheme will use a saturation approach to target tribal-majority villages and aspirational districts, focusing on education, health, and skill development. It plans to cover 63,000 villages and benefit 5 crore tribal people nationwide.

21. How much funding has the Finance Ministry recently allocated for the Namo Drone Didi scheme?

A. Rs 600 crore

B. Rs 500 crore

C. Rs 400 crore

D. Rs 300 crore

  • The Finance Ministry has allocated Rs 500 crore for the Namo Drone Didi scheme, aimed at providing drones to 15,000 women self-help groups (SHGs) from 2023-24 to 2025-2026. This initiative trains women to become drone pilots, helping farmers with tasks such as fertilizer spraying, seed sowing, and crop monitoring. The program seeks to modernize agriculture and boost productivity by subsidizing up to 80% of drone costs, up to Rs 8 lakh per SHG.

22. ‘Operation Prahar’ was launched by which state against the threats posed by the Naxalites?

A. Bihar

B. Chhattisgarh

C. Jharkhand

D. Odisha

  • Since Chhattisgarh’s first tribal Chief Minister took office, Naxalite-related incidents have surged fivefold, including killings, arrests, and surrenders. This increase coincides with “Operation Prahar,” a counter-insurgency effort targeting Maoist leaders. While aimed at neutralizing insurgents and disrupting recruitment, the operation has faced allegations of excessive state power and staged encounters, raising concerns about its impact on local Adivasi communities not involved with Maoist activities.

23. What is the purpose of developing a ‘climate finance taxonomy’ as announced in the Union Budget for 2024-25?

A. To create standards for classifying climate-related financial instruments like green bonds

B. To guide investors and banks in directing investments toward sustainable projects to address climate change

C. To manage risks associated with climate change

D. To benchmark countries’ progress in climate finance

  • The finance minister announced the development of a ‘climate finance taxonomy’ in the Union Budget 2024-25. This system classifies parts of the economy as sustainable investments, guiding investors and banks in directing funds to combat climate change. It sets standards for climate-related financial instruments like green bonds and aids in climate risk management and net-zero transition planning. Countries such as South Africa, South Korea, and the EU have already developed similar taxonomies.

24. What are ‘Brown Dwarfs’?

A. Celestial bodies

B. Invasive plants

C. Species of fish

D. Drugs for TB

  • Researchers using the James Webb Space Telescope have studied the atmospheric conditions of brown dwarfs. These objects, larger than planets but smaller than stars, are between giant planets and small stars in size. They accumulate material like stars and have hot silicate cloud formations. Unlike stars, brown dwarfs cannot sustain nuclear fusion, which is why they are called “failed stars.” They retain H & He better than planets and have low metal content.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!