Tnpsc Current Affairs in Tamil & English – 25th September 2024
1. கீழ்க்காணும் எவ்வெவற்றால் INSPIRE-MANAK திட்டம் செயல்படுத்தப்படுகிறது?
அ. நிதித் துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF)-இந்தியா
இ. தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மற்றும் பொருளாதாரத் துறை
ஈ. கல்வித் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
- 11ஆவது தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் திட்டப்போட்டியானது சமீபத்தில் புது தில்லியில் INSPIRE–MANAK வெற்றியாளர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்றது. INSPIRE–MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் (DST) முதன்மைத் திட்டமாகும். இது பள்ளி மாணவர்களின் புதுமையான யோசனைகளை ஆதரிப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடர அவர்களை ஊக்குவிக்கிறது. இத்திட்டம் DST மற்றும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (NIF) – இந்தியா ஆகியவற்றால் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது. இது 6 முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள 10-15 வயதுடைய மாணவர்களை குறிவைத்து, எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விமர்சன சிந்தனையாளர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. அண்மையில், “AIKYA – 2024” என்ற பயிற்சியை நடத்திய அமைப்பு எது?
அ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
ஆ. நிதி ஆயோக்
இ. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA)
ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் இந்திய இராணுவத்தின் தெற்குப்படைப்பிரிவானது சென்னையில் பேரிடர் மேலாண்மை குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கமான, ‘AIKYA’ பயிற்சியை ஏற்பாடு செய்தன. தமிழில் “AIKYA” என்பதன் பொருள் “ஒற்றுமை” என்பதாகும். இது இந்தியாவின் பேரிடர் மேலாண்மை சமூகத்தை ஒன்றிணைக்கும் இலக்கைக்குறிக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய ஆறு தென் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பங்குதாரர்களை இது ஒன்றிணைத்தது. அவசரநிலைகளை உருவகப்படுத்திய இந்தப் பயிற்சி, பேரிடர் நிவாரண தொழில்நுட்பங்கள்பற்றி விவாதித்தது. ஆழிப்பேரலை, நிலச்சரிவு, வெள்ளம், சூறாவளி, தொழில்துறை சம்பவங்கள் மற்றும் காட்டுத்தீபோன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தியது.
3. அண்மையில், இந்தியாவின் மிகப்பெரிய ஊதுலை தொடங்கப்பட்ட இடம் எது?
அ. சேலம், தமிழ்நாடு
ஆ. பொகாரோ, ஜார்கண்ட்
இ. கலிங்காநகர், ஒடிசா
ஈ. பர்தமான், மேற்கு வங்காளம்
- இரண்டாம் கட்ட விரிவாக்கத்தின் ஒருபகுதியாக ஒடிஸா மாநிலத்திலுள்ள கலிங்காநகர் ஆலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஊது உலையை டாடா ஸ்டீல் இயக்கியுள்ளது. ஒரு ஊது உலை என்பது தீ-எதிர்ப்பு பொருட்களால் உண்டான ஒரு செங்குத்து எஃகுத்தண்டாகும்; அது உலோகத்தாது, கல்கரி மற்றும் இளக்கி ஆகியவற்றுடன் காற்றை வினைபுரிந்து திரவ உலோகங்களை உருவாக்குகிறது.
- 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயங்கும் இந்த உலையின் வெப்பமான பகுதி நீரால்-குளிரூட்டப்பட்டு எஃகு சட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது இரும்புத் தாதுவில் இருந்து கச்சா இரும்பை உற்பத்திசெய்வதோடு ஈயம் & தாமிரம்போன்ற பிற உலோகங்களை செயலாக்க பயன்படுகிறது.
4. “World Audio Visual & Entertainment Summit (WAVES) – 2025”ஐ நடத்தும் நாடு எது?
அ. பிரான்ஸ்
ஆ. இந்தியா
இ. நேபாளம்
ஈ. ரஷ்யா
- 2025 பிப்.05-9 வரை உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாட்டை (WAVES) இந்தியா நடத்துகிறது. இந்த உச்சிமாநாடு இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையை மேம்படுத்துவதையும் அதன் உலகளாவிய இருப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது. ஊடகங்கள் & பொழுதுபோக்குத் துறையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முதல் உலகளாவிய உச்சிமாநாடு WAVES ஆகும். இது தொழில் துறை தலைவர்களிடையே உரையாடல், வர்த்தக கூட்டாண்மை & புதுமைகளை ஊக்குவிக்க எண்ணுகிறது.
5. UNESCO உலக பாரம்பரிய தளத்திற்கு அண்மையில் பரிந்துரைக்கப்பட்ட செஞ்சிக்கோட்டை, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
அ. விழுப்புரம்
ஆ. பெரம்பலூர்
இ. புதுக்கோட்டை
ஈ. வேலூர்
- தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சிக்கோட்டை, UNESCOஇன் உலக பாரம்பரிய தளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டில் UNESCOஇன் உலக பாரம்பரிய தள அந்தஸ்துக்கான மராட்டிய இராணுவப்பரப்பு பரிந்துரையின் ஒருபகுதியாக இக்கோட்டை உள்ளது. பரிந்துரையின் 12 கூறுகளுள் மகாராட்டிர மாநிலத்தில் இருந்து 11 தளங்களும் தமிழ்நாட்டிலிருந்து ஒரே தளமான செஞ்சிக்கோட்டையும் இடம்பெற்றுள்ளது.
- ‘கிழக்கின் டிராய்’ என்று அழைக்கப்படும் செஞ்சிக்கோட்டை ராஜகிரி, கிருஷ்ணகிரி மற்றும் சந்திரகிரி ஆகிய மூன்று மலைகளின் மேல் அமைந்துள்ளது. இது பொ.ஆ 1200இல் கோனார் வம்சத்தின் ஆனந்தகோனார் என்பவரால் கட்டப்பட்டது. இது விஜயநகர வம்சத்து நாயக்கர்கள், மராட்டியர்கள், மொகலாயர்கள், நவாபுகள், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்ட கோட்டையாகும்.
6. அண்மையில், மத்திய சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘U-WIN’ இணைய நுழைவுடன் தொடர்புடைய துறை எது?
அ. மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது
ஆ. தடுப்பூசி சேவைகள்
இ. COVID-19 பாதிப்புகளைக் கண்காணித்தல்
ஈ. சுகாதாரக் காப்பீடு
- மத்திய சுகாதார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ‘U-WIN’ என்ற இணைய நுழைவு, தடுப்பூசி சேவைகளை எண்மமயமாக்குகிறது. தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிற இது, தடுப்பூசி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதையும், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி பதிவுகளை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 செப்டம்பர்.16 நிலவரப்படி, 6.46 கோடி பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். எளிதாக அணுகுவதற்கு ஹிந்தி உட்பட 11 பிராந்திய மொழிகளை இந்த இணைய நுழைவு ஆதரிக்கிறது. குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ABHA) எண்களை உருவாக்கவும் இந்த இணைய நுழைவு உதவுகிறது.
7. ஒவ்வோர் ஆண்டும் “உலக அல்சைமர் நாள்” அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 21 செப்டம்பர்
ஆ. 22 செப்டம்பர்
இ. 23 செப்டம்பர்
ஈ. 24 செப்டம்பர்
- நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமறதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சவால் விடுப்பதற்கும் உலக அல்சைமர் நாள் செப்.21 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Time to act on dementia, Time to act on Alzheimer’s”என்பது 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். முதுமறதி நோயுடன் தொடர்புடைய களங்கம் மற்றும் பாகுபாட்டைக் குறைப்பதில் இந்த நாள் தனது கவனத்தைச் செலுத்துகிறது.
8. அண்மையில், இராஜஸ்தானில் நடைபெற்ற இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர் என்ன?
அ. யுத் அபியாஸ்
ஆ. தரங் சக்தி
இ. மைத்ரீ
ஈ. கருட சக்தி
- 2004ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூட்டு ராணுவப்பயிற்சியான யுத் அபியாஸ், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதன் அண்மைய பதிப்பான 2024 – யுத் அபியாஸ் செப்.09-22 வரை இராஜஸ்தானில் உள்ள மஹாஜன் களத்தில் நடந்தது. இப்பயிற்சியானது, இயங்குதிறனை மேம்படுத்துவதையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கம் எனக்கொண்டுள்ளது. இருநாடுகளும் ஐநா சாசனத்தின் VII அத்தியாயத்தின்கீழ் ஒரு துணை வழமையான சூழலில் தங்கள் இராணுவ திறன்களை வலுப்படுத்த கூட்டுப்பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.
9. 2024 – தேசிய சாதனை ஆய்வானது கீழ்க்காணும் எந்த வகுப்புகளிலுள்ள மாணாக்கரின் கற்றல் சாதனைகளை மதிப்பிடுகிறது?
அ. 11ஆவது மற்றும் 12ஆவது
ஆ. 4ஆவது மற்றும் 5ஆவது
இ. 3ஆவது, 6ஆவது மற்றும் 9ஆவது
ஈ. 7ஆவது, 8ஆவது மற்றும் 11ஆவது
- 2024 – NAS ஆனது டிச.04 அன்று இந்தியாவில் 792 மாவட்டங்களில் சுமார் ஐந்து மில்லியன் மாணாக்கரை உள்ளடக்கியதாக நடத்தப்படும். 3ஆம், 6ஆம் மற்றும் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கரின் கற்றல் சாதனைகளை முந்தைய ஆய்வுகளிலிருந்து விரிவுபடுத்துவதை இந்தப் பேரளவிலான மதிப்பீட்டின் நோக்கமாகும். குறிப்பாக COVID -19 தொற்றுநோயால் ஏற்பட்ட இடையூறுகளுக்குப் பிறகு, கல்வியின் போக்குகளைக் கண்டறியவும் கொள்கை முடிவுகளைத் தெரிவிக்கவும் இந்த ஆய்வின் முடிவுகள் உதவும்.
10. ஷிங்கு லா சுரங்கப்பாதையானது கீழ்க்காணும் எந்த இரு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்துகிறது?
அ. அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம்
ஆ. லடாக் மற்றும் இமாச்சல பிரதேசம்
இ. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம்
ஈ. அருணாச்சல பிரதேசம் மற்றும் அஸ்ஸாம்
- ஷிங்கு லா சுரங்கப்பாதை என்பது மணாலி (இமாச்சல பிரதேசம்) மற்றும் லே (லடாக்) இடையே ஆண்டு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஓர் உத்திசார் உள்கட்டமைப்பு திட்டமாகும்; இது பயண தூரத்தை கணிசமாகக் குறைக்கிறது. விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிற 4.1 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கவழிப்பாதை லடாக்கில் நிலைகொண்டுள்ள இந்திய இராணுவ வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு வசதியாக இருக்கும் (குறிப்பாக கடுமையான பனிப்பொழிவு காரணமாக கணவாய்கள் மூடப்படும் கடுமையான குளிர்கால மாதங்களில்).
11. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் புதிய COVID திரிபின் பெயர் என்ன?
அ. XEC
ஆ. MV.1
இ. TNR
ஈ. FEP
- புதிய COVID திரிபான ‘XEC’, 2024 ஆகஸ்டில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவற்றின் இணைப்பால் உருவாக்கப்பட்ட மறுசீரமைப்பு திரிபாகும். இது மற்ற வகைகளைவிட விரைவு மிகுந்த வளர்ச்சியைக்காட்டுகிறது. 27 நாடுகளில் பாதிப்புகள் பதிவாகி மிக விரைவாக இது பரவி வருகிறது. மனித உயிரணுக்களுடன் பிணைக்கும் திறனை மேம்படுத்தும் அதன் மரபணு ஒற்றுமைகள் மற்றும் திரிபுகள் காரணமாக, ‘XEC’ உலகளவில் ஆதிக்க திரிபாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12. அண்மையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது எந்தத் துறையில் தனது பங்களிப்பிற்காக 2024 @UN இன்டர்-ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் விருதைப் பெற்றது?
அ. உழவு
ஆ. தொற்றாத நோய்கள்
இ. தடுப்பூசி சேவைகள்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது (ICMR) 2024ஆம் ஆண்டுக்கான @UN முகமைகளுக்கு இடையேயான செய்யலாக்கக் குழு விருதைப் பெற்றது. இது தொற்றாத நோய்களை (NCDs) தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மற்றும் மன நலத்தை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க அதன் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் தொடர்பான வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ICMRஇன் பங்களிப்பை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டுகிறது. இந்த அங்கீகாரம், உதவி சுகாதார தொழில்நுட்பத்திற்கான தேசிய மையங்களை நிறுவுதல் மற்றும் விரிவான ஆய்வுகளை நடத்துதல்போன்ற ICMRஇன் முன்முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.
1. INSPIRE–MANAK scheme is implemented by which organizations?
A. Department of Finance and Indian Council of Medical Research (ICMR)
B. Department of Science & Technology and National Innovation Foundation (NIF)-India
C. National Science Foundation (NSF) and Department of Economics
D. Department of Education and Indian Space Research Organisation (ISRO)
- The 11th National Level Exhibition and Project Competition (NLEPC) was recently held in New Delhi to felicitate INSPIRE–MANAK winners. INSPIRE–MANAK (Million Minds Augmenting National Aspiration and Knowledge) is a flagship scheme by the Department of Science and Technology (DST), Government of India. It supports innovative ideas from school students and encourages them to pursue science and research careers. The program is implemented jointly by DST and the National Innovation Foundation (NIF) – India. It targets students aged 10-15 in classes 6 to 10, aiming to nurture future innovators and critical thinkers.
2. Which organization recently conducted the “Exercise AIKYA 2024”?
A. Defence Research and Development Organisation (DRDO)
B. NITI Aayog
C. National Disaster Management Authority (NDMA)
D. Indian Space Research Organisation (ISRO)
- The National Disaster Management Authority (NDMA) and Southern Command of the Indian Army organized a two-day national symposium, ‘Exercise AIKYA’, on disaster management in Chennai. “Aikya” means “Oneness” in Tamil, symbolizing the goal to unite India’s Disaster Management community. It brought together stakeholders from six southern states/UTs: Tamil Nadu, Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, and Puducherry.
- The exercise simulated emergencies, tested roles, discussed disaster relief technologies, and reviewed recent operations. It focused on issues like tsunamis, landslides, floods, cyclones, industrial incidents, and forest fires.
3. Recently, the India’s largest blast furnace has commissioned at which place?
A. Salem, Tamil Nadu
B. Bokaro, Jharkhand
C. Kalinganagar, Odisha
D. Bardhaman, West Bengal
- Tata Steel has commissioned India’s largest blast furnace at its Kalinganagar plant in Odisha as part of Phase II expansion.
- A blast furnace is a vertical steel shaft lined with fire-resistant materials, producing liquid metals by reacting air with metallic ore, coke, and flux. The furnace operates at over 300°C, with the hottest part water-cooled and supported by a steel frame. It produces pig iron from iron ore and is used for processing other metals like lead and copper.
4. Which country is the host of “World Audio Visual & Entertainment Summit (WAVES) 2025”?
A. France
B. India
C. Nepal
D. Russia
- India will host the World Audio Visual & Entertainment Summit (WAVES) from February 5-9, 2025. The summit aims to boost India’s media and entertainment sector and enhance its global presence. WAVES is the first global summit covering all areas of the media and entertainment industry. It seeks to promote dialogue, trade partnerships, and innovation among industry leaders.
5. Gingee Fort, recently nominated for UNESCO World Heritage site, is located in which district of Tamil Nadu?
A. Villupuram
B. Perambalur
C. Pudukkottai
D. Vellore
- The Gingee Fort, situated in Tamil Nadu’s Villupuram district, has been nominated for UNESCO’s World Heritage Site. The fort is part of the Maratha Military Landscapes nomination for UNESCO World Heritage Site status in 2024-25. The nomination includes 12 components, with 11 sites in Maharashtra and Gingee Fort as the only site from Tamil Nadu. Known as the ‘Troy of the East’, Gingee Fort located atop three hillocks- Rajagiri, Krishnagiri and Chandragiri. It was built by Ananta Kon of the Konar Dynasty in 1,200 CE. It has seen rule by the Vijayanagar Nayaks, Marathas, Mughals, Nawabs, French, and British.
6. ‘U-WIN Portal’, recently launched by union health ministry, is associated with which field?
A. Improving hospital’s infrastructure
B. Vaccination services
C. Tracking COVID-19 cases
D. Health Insurance
- The U-WIN Portal, developed by the Union Health Ministry, digitizes vaccination services and is currently operational on a pilot basis. It aims to digitize vaccination services and maintain vaccination records for pregnant women and children up to 17 years old.
- As of September 16, 2024, over 6.46 crore beneficiaries are registered, with more. The portal supports 11 regional languages, including Hindi, for easy access. It also helps in creating Ayushman Bharat Health Account (ABHA) IDs for citizens.
7. Which day is observed as “World Alzheimer’s Day” every year?
A. 21 September
B. 22 September
C. 23 September
D. 24 September
- World Alzheimer’s Day is observed on September 21 to raise awareness and challenge stigma around Alzheimer’s and dementia. The theme for 2024 is “Time to act on dementia, Time to act on Alzheimer’s.” The focus is on reducing the stigma and discrimination associated with dementia.
8. What is the name of the joint military exercise between India and the US, recently held in Rajasthan?
A. Yudh Abhyas
B. Tarang Shakti
C. Maitree
D. Garuda Shakti
- The joint military exercise Yudh Abhyas, initiated in 2004, focuses on enhancing military cooperation between India and the US. The latest edition, Yudh Abhyas 2024, took place at Mahajan Field Firing Ranges in Rajasthan from September 9 to 22. This exercise aims to improve interoperability and conduct counter-terrorism operations. Both nations have emphasized the importance of joint training and sharing best practices to strengthen their military capabilities in a sub conventional context under the UN Charter’s Chapter VII.
9. National Achievement Survey (NAS) 2024 assesses learning achievements of students in which grades?
A. 11th and 12th
B. 4th and 5th
C. 3rd, 6th and 9th
D. 7th, 8th and 11th
- The NAS 2024 will be conducted on December 4, covering nearly five million students across 792 districts in India. This large-scale assessment aims to evaluate the learning achievements of students in Classes 3, 6, and 9, expanding from previous surveys. The results will help identify trends in educational outcomes and inform policy decisions, especially after the disruptions caused by the COVID-19 pandemic.
10. Shinku La Tunnel improves connectivity between which two states/UTs?
A. Arunachal Pradesh and Sikkim
B. Ladakh and Himachal Pradesh
C. Uttarakhand and Himachal Pradesh
D. Arunachal Pradesh and Assam
- The Shinku La Tunnel is a strategic infrastructure project aimed at enhancing year-round connectivity between Manali (Himachal Pradesh) and Leh (Ladakh), reducing travel distance significantly. Expected to open soon, this 4.1-km long tunnel will facilitate the transportation of essential supplies to Indian Army troops stationed in Ladakh, especially during harsh winter months when passes are closed due to heavy snowfall.
11. What is the name of the new COVID variant that is spreading rapidly worldwide?
A. XEC
B. MV.1
C. TNR
D. FEP
- The new COVID variant, XEC, first detected in Germany in August 2024, is a recombinant variant formed by the fusion of KS.1.1 and KP.3.3. It has shown a growth advantage over other variants and is spreading rapidly, with cases reported in 27 countries. XEC is expected to become the dominant variant globally due to its genetic similarities and mutations that enhance its ability to bind to human cells.
12. Recently, the Indian Council of Medical Research received the 2024 @UN Inter-Agency Task Force Award for its contribution in which field?
A. Agriculture
B. Non-communicable diseases
C. Vaccination services
D. None of the Above
- The Indian Council of Medical Research (ICMR) received the 2024 @UN Inter-Agency Task Force Award for its significant contributions to preventing and controlling non-communicable diseases (NCDs) and enhancing mental health. This recognition highlights ICMR’s contribution to achieving Sustainable Development Goals related to health. This recognition highlights ICMR’s initiatives, such as establishing national centres for Assistive Health Technology and conducting extensive surveys.