Tnpsc Current Affairs in Tamil & English – 24th September 2024
1. அண்மையில் 14ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2024ஐ வென்ற மாநிலம் எது?
அ. பஞ்சாப்
ஆ. உத்தர பிரதேசம்
இ. ஹரியானா
ஈ. குஜராத்
- ஜலந்தரில் உள்ள ஒலிம்பியன் சுர்ஜித் சிங் ஹாக்கி அரங்கத்தில் உத்தர பிரதேச மாநில அணியை வீழ்த்தி 14ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் – 2024இல் பஞ்சாப் அணி வென்றது. 3-3 என டிரா நிலையில் முடிவடைந்த ஆட்டம் ஷூட்-ஔட்மூலம் முடிவுசெய்யப்பட்டது; அதில் பஞ்சாப் 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. ஹரியானா 5-0 என்ற கோல்கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி மூன்றாமிடத்தைப் பிடித்தது.
2. அண்மையில், “2024 – நதி உற்சவம்” தொடங்கப்பட்ட இடம் எது?
அ. தலைக்காவேரி
ஆ. வாரணாசி
இ. புது தில்லி
ஈ. கும்பகோணம்
- 2024 – நதி உற்சவம் புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் (IGNCA) தொடங்கப்பட்டது. இத்திருவிழாவின் 5ஆம் பதிப்பு, “Rivers in Reverse: Making of a Lifeline” என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தியது. நதி சூழலியல் அமைப்புகளையும் அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தையும் இவ்விழா எடுத்துக்காட்டுகிறது. முதல் நாளில் கன்சாபதி ஆற்றின் நிழற்படக்கண்காட்சி, தனிச்சிறப்பு வாய்ந்த படகுக் கண்காட்சி, ஆறுகளை மையமாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
3. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரால் அண்மையில் தொடங்கப்பட்ட, ‘வெண்மைப் புரட்சி 2.0’இன் முதன்மை நோக்கம் என்ன?
அ. பெண் விவசாயிகளை மேம்படுத்த, உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க, பால் உள்கட்டமைப்பு மற்றும் பால் ஏற்றுமதியை மேம்படுத்த
ஆ. பாசுமதி அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியை அதிகரிப்பது
இ. அங்ககக் காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பது
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பால்வள மேம்பாட்டின்மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப்போராடவும் ‘வெண்மைப்புரட்சி 2.0’க்கான நிலையான செயல்பாட்டு நடை முறையைத் தொடங்கினார். பெண் உழவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பது, பால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் பால் ஏற்றுமதியை அதிகரிப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும்.
- உள்ளடக்கப்படாத கிராமங்களில் சந்தை அணுகலை வழங்குவதன்மூலம் 5 ஆண்டுகளில் பால் கூட்டுறவுமூலம் பால் கொள்முதலை 50% அதிகரிப்பதே இதன் இலக்கு. AMCU, DPMCU மற்றும் மொத்த பால் குளிர்விப்பான்கள் போன்ற தேவையான உள்கட்டமைப்புகளுடன் பால் வழித்தடங்களுடன் இணைக்கப்பட்ட 100,000 கூட்டுறவு சங்கங்களை அமைத்து வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
4. ‘TRISHNA’ திட்டம் என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுத்திட்டமாகும்?
அ. இந்தியா மற்றும் பிரான்ஸ்
ஆ. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே
இ. இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா
ஈ. இந்தியா மற்றும் தெற்கு சூடான்
- பிரெஞ்சு விண்வெளி முகமையின் (CNES) தலைவர் அண்மையில் அறுபதாண்டு பிரெஞ்சு-இந்தியா விண்வெளி கூட்டாண்மை மற்றும் ‘ககன்யான்’ மற்றும் ‘TRISHNA’ போன்ற வரவிருக்கும் திட்டங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளைப்பற்றி விவாதித்தார். ‘TRISHNA’ திட்டம் என்பது ISRO மற்றும் CNES ஆகியவற்றின் ஒத்துழைப்பாகும். பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை, தாவர நலம் மற்றும் நீர் சுழற்சி இயக்கவியல் ஆகியவற்றின் உயர்தெளிவுத்திறன் கண்காணிப்புகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கங்களாகும். இந்தத் திட்டம் நகர்ப்புற வெப்பத்தீவுகளை மதிப்பிடும், எரிமலை செயல்பாட்டின் வெப்ப முரண்பாடுகளைக் கண்டறியும், மற்றும் பனி உருகும் ஓட்டம் மற்றும் பனிப்பாறை இயக்கவியல் ஆகியவற்றை கண்காணிக்கும்.
5. ‘விவாத் சே விஸ்வாஸ் திட்டம் – 2024 (VSV 2.0)’இன் முதன்மை நோக்கம் என்ன?
அ. புதிய வரி வகைகளை அறிமுகப்படுத்துவது
ஆ. வருமான வரி தொடர்பான வழக்குகளைக் குறைப்பது
இ. வரி விகிதங்களை அதிகரிப்பது
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- நேரடி வரி விவாத் சே விஸ்வாஸ் திட்டம்-2024 (VSV 2.0)இன் இரண்டாவது பதிப்பு விரைவில் செயல்படும் என்று நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இத்திட்டம் வருமானவரி வழக்குகளை குறைப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. VSV 2.0 ஆனது வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையை ஒரு நெறிப்படுத்தப்பட்ட மேல்முறையீட்டு செயல்முறைமூலம் சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண அனுமதிக்கிறது. இது 2024 ஜூலை.22 வரை நிலுவையிலுள்ள மேல்முறையீடுகளை உள்ளடக்கியது மற்றும் தீர்வுகளுக்கான அபராதம் மற்றும் வட்டியைத் தள்ளுபடி செய்கிறது. இத்திட்டம் தேடல்கள் (அ) கடுமையான குற்றங்கள்போன்ற சில வழக்குகளை விலக்குகிறது. வரி செலுத்துவோர் மற்றும் நீதித்துறை அமைப்பு மீதான சுமையைக் குறைப்பது, சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு செலவுகுறைந்த வழியை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.
6. IWF ஜூனியர் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் – 2024இல் ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பளுதூக்கும் வீரர் யார்?
அ. முகுந்த் சந்தோஷ் அஹர்
ஆ. தனுஷ் லோகநாதன்
இ. ஹர்ஷதா கருட்
ஈ. ஞானேஸ்வரி யாதவ்
- ஸ்பெயினின் லியோனில் நடந்த IWF ஜூனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்-2024இல், ஆடவருக்கான 55 கிகி எடைப்பிரிவில் இந்திய பளுதூக்கும் வீரர் தனுஷ் லோகநாதன் வெண்கலப்பதக்கம் வென்றார். 17 வயதான அவர், ‘ஸ்னாட்ச்’ முறையில் 107 கிலோகிராமும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 124 கிலோகிராமும் என மொத்தம் 231 கிலோகிராம் எடையைத் தூக்கினார்.
7. “2024 PT5” என்றால் என்ன?
அ. சிறுகோள்
ஆ. கருந்துளை
இ. AI கருவி
ஈ. செயற்கைக்கோள்
- “2024 PT5” எனப்பெயரிடப்பட்ட ஒரு சிறிய சிறுகோள் 2024 செப்.29 முதல் நவ.25 வரை தற்காலிகமாக பூமியைச் சுற்றிவரும். இது “சிறு-நிலா” என்றும் அழைக்கப்படுகிறது. பூமியின் ஈர்ப்புவிசையால் அது தன் பாதையை மாற்றி சுற்றுகிறது. இது 2024 ஆக.07 அன்று ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS)மூலம் கண்டறியப்பட்டது. இது பூமிக்கருகில் சுற்றும் பாறைகளைக்கொண்ட அர்ஜுனா சிறுகோள் பட்டையைச் சார்ந்ததாக இருக்கலாம். “2024 PT5” 2025 ஜனவரி மற்றும் மீண்டும் 2055இல் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமிக்கருகிலுள்ள சிறுகோள்கள்பற்றிய மதிப்புமிக்க தரவை வழங்கும்.
8. 4ஆவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியின்போது அதிக விருதுகளை வென்ற மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. குஜராத்
இ. மகாராஷ்டிரா
ஈ. இராஜஸ்தான்
- 4ஆவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியை குஜராத் மாநிலம் நடத்தியது. முதல் முறையாக தில்லிக்கு வெளியே நடைபெற்ற இம்மூன்று நாள் நிகழ்வின்போது அதிக விருதுகளை வென்ற மாநிலமாக குஜராத் ஆனது. ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உட்பட பலவகைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் குஜராத் மாநிலம் இடம்பிடித்துள்ளது. ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் காற்றாலை ஆற்றல் திறனில் குஜராத் முதலிடத்தைப் பெற்றுள்ளது; அதே சமயம் சூரிய சக்தி திறனில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது; இராஜஸ்தான் முன்னணியில் உள்ளது.
9. அண்மையில், உலக சுகாதார அமைப்பால் (WHO) தொழுநோய் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நாடு எது?
அ. சீனா
ஆ. ஜோர்டான்
இ. இந்தியா
ஈ. தாய்லாந்து
- உலக சுகாதார அமைப்பு (WHO) தொழுநோயை ஒழித்த உலகின் முதல் நாடாக ஜோர்டானை அறிவித்துள்ளது. WHOஇன் தலைமை இயக்குநர் Dr டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தொழுநோய் பரவுவதைத் தடுப்பதற்கும் அதன் களங்கத்தைக் குறைப்பதற்கும் ஜோர்டான் எடுத்த முயற்சிகளைப் பாராட்டினார். ஜோர்டானில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொழுநோய் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. தொழுநோயானது இன்னும் 120 நாடுகளில் பரவியுள்ளது; ஆண்டுதோறும் 200,000க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகி வருக்கின்றன.
10. அண்மையில், மகாராட்டிரத்தின் எப்பகுதியில் அமையவுள்ள ‘PM MITRA’ பூங்காவுக்கு இந்தியப்பிரதமர் அடிக்கல் நாட்டினார்?
அ. லத்தூர்
ஆ. அமராவதி
இ. நாசிக்
ஈ. புனே
- மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள “PM Mega Integrated Textile Regions & Apparel (PM MITRA)” பூங்காவிற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். ஜவுளித்தொழிலை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக்கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ஏழு “PM MITRA” பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
11. அண்மையில், மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு – 2024இல் முதலிடத்தைப் பிடித்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கோவா
ஈ. மகாராஷ்டிரா
- மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI) – 2024இல் கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. FSSAI உலகளாவிய உணவு ஒழுங்குமுறையாளர்கள் உச்சிமாநாடு-2024இன்போது இக்குறியீடு வெளியிடப்பட்டது. இந்திய உணவுப் பாதுகாப்பு & தரநிலைகள் ஆணையம் (FSSAI) 2018-19 முதல் ஆண்டுதோறும் இந்தக் குறியீட்டை வெளியிட்டு வருகிறது. SFSI ஆனது இந்தியாவில் உணவுப்பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஐந்து அளவீடுகளின் அடிப்படையில் மாநிலங்களை அது மதிப்பிடுகிறது: தரவு மேலாண்மை, இணக்கம், உணவுப்பரிசோதனை, பயிற்சி & நுகர்வோர் அதிகாரமளித்தல். 2023ஆம் ஆண்டில், “SFSI தரவரிசையில் முன்னேற்றம்” என்ற புதிய அளவுரு சேர்க்கப்பட்டது. இந்தக் குறியீடு மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்க ஊக்குவிக்கிறது.
12. 2024 – பன்னாட்டு அமைதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. End racism. Build peace
ஆ. Cultivating a Culture of Peace
இ. Actions for Peace
ஈ. Recovering better for an equitable and sustainable world
- பன்னாட்டு அமைதி நாளானது ஆண்டுதோறும் செப்.21ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது அமைதியை மேம்படுத்துவதையும், அமைதியான மற்றும் நிலையான உலகத்திற்கான உலகளாவிய ஒற்றுமையின் முக்கியத்து -வத்தை எடுத்துக்காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “Cultivating a Culture of Peace” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். அனைத்து சமூக மற்றும் இனங்களுக்கிடையில் அமைதியான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. ஐநா பொதுச்சபையின் பேரறிவிப்பு மற்றும் அமைதி கலாச்சாரம் குறித்த செயல்திட்டத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் இந்த நாள், நிலையான மற்றும் நல்லிணக்கமான உலகிற்கு பங்களிக்கும் செயல்களை ஊக்குவிக்கிறது.
1. Which state recently clinched the 14th Hockey India Junior Men’s National Championship 2024?
A. Punjab
B. Uttar Pradesh
C. Haryana
D. Gujarat
- Punjab won the 14th Hockey India Junior Men’s National Championship 2024 by defeating Uttar Pradesh at the Olympian Surjit Singh Hockey Stadium in Jalandhar. The match ended in a 3-3 draw and was decided by a shootout, where Punjab emerged victorious with a 4-3 score. Haryana secured third place by defeating Karnataka 5-0.
2. Recently, where was the “Nadi Utsav 2024” inaugurated?
A. Talakaveri
B. Varanasi
C. New Delhi
D. Kumbakonam
- Nadi Utsav 2024 was inaugurated at the Indira Gandhi National Centre for the Arts (IGNCA) in New Delhi. The 5th edition of the festival focuses on the theme ‘Rivers in Reverse: Making of a Lifeline’, highlighting river ecosystems and their cultural importance. The first day featured various activities, including a photo exhibition of the Kansabati River, a unique boat display, and paintings by school students centered around rivers.
3. What is the primary objective of ‘White Revolution 2.0’, recently launched by Union Home and Cooperation Minister?
A. To empower women farmers, increase local milk production, improve dairy infra & dairy exports
B. Increase the export of basmati rice and wheat
C. Increase the production of organic vegetables
D. None of the above
- The Union Home and Cooperation Minister launched the standard operating procedure for ‘White Revolution 2.0’ to empower women and combat malnutrition through dairy development. The initiative aims to empower women farmers, increase local milk production, improve dairy infrastructure, and boost dairy exports.
- The goal is to increase milk procurement by dairy cooperatives by 50% over five years by providing market access in uncovered villages. It plans to set up and strengthen 100,000 cooperative societies linked to milk routes with necessary infrastructure like AMCU, DPMCU, and Bulk Milk Coolers.
4. ‘TRISHNA mission’ is a collaborative project between which two countries?
A. India and France
B. India and Zimbabwe
C. India and Papua New Guinea
D. India and South Sudan
- The President of the French Space Agency (CNES) recently discussed various topics, including 60 years of French-India space cooperation and upcoming missions like Gaganyaan and TRISHNA. The TRISHNA mission is a collaboration ISRO and CNES. Its main objectives are to provide high-resolution observations of Earth’s surface temperature, vegetation health, and water cycle dynamics. The mission will assess urban heat islands, detect thermal anomalies from volcanic activity, and monitor snow-melt runoff and glacier dynamics.
5. What is the primary objective of the ‘Vivad Se Vishwas Scheme 2024 (VSV 2.0)’?
A. To introduce new tax categories
B. To reduce ongoing litigations related to income tax
C. To increase tax rates
D. None of the above
- The Finance Ministry announced that the second edition of the Direct Tax Vivad se Viswas scheme 2024 (VSV 2.0) will soon be operational. This scheme aims to reduce ongoing income tax litigations.
- VSV 2.0 allows taxpayers and the Income Tax Department to resolve disputes through a streamlined appeals process. It covers appeals pending as of July 22, 2024, and waives penalties and interest for settlements, ensuring no prosecution for resolved cases. The scheme excludes certain cases, such as those involving searches or serious offenses. Its goal is to provide a cost-effective way to settle disputes, easing the litigation burden on taxpayers and the judicial system.
6. Which Indian weightlifter won the bronze medal in the men’s 55kg event at the IWF Junior World Weightlifting Championships 2024?
A. Mukund Santosh Aher
B. Dhanush Loganathan
C. Harshada Garud
D. Gyaneshwari Yadav
- Indian weightlifter Dhanush Loganathan won a bronze medal in the men’s 55kg event at the IWF Junior World Weightlifting Championships 2024 in Leon, Spain. The 17-year-old lifted a total of 231kg, with 107kg in the snatch and 124kg in the clean and jerk.
7. What is “2024 PT5”?
A. Asteroid
B. Black hole
C. AI Tool
D. Satellite
- A small asteroid named 2024 PT5 will temporarily orbit Earth from September 29 to November 25, 2024. It is also known as a “mini-moon”. It changes its path due to Earth’s gravity. It was detected by the Asteroid Terrestrial-impact Last Alert System (ATLAS) on August 7, 2024. It likely originated from the Arjuna asteroid belt, which contains rocks orbiting near Earth. 2024 PT5 is expected to return in January 2025 and again in 2055. It will provide valuable data on near-Earth asteroids.
8. Which state won the maximum number of awards during the 4th Global Renewable Energy Investors Meet and Expo?
A. Tamil Nadu
B. Gujarat
C. Maharashtra
D. Rajasthan
- Gujarat hosted the 4th Global Renewable Energy Investors Meet and Expo, winning the most awards during the three-day event, held outside Delhi for the first time. The state ranked among the top three in several categories, including overall renewable energy capacity, solar power, and wind power. Gujarat secured the top spot in overall renewable energy and wind power capacity, while it ranked second in solar power capacity, with Rajasthan leading.
9. Recently, which country has recently declared leprosy-free country by the World Health Organization (WHO)?
A. China
B. Jordan
C. India
D. Thailand
- The World Health Organization (WHO) has declared Jordan the first country in the world to eliminate leprosy, a major public health achievement. WHO Director-General Dr Tedros Adhanom Ghebreyesus praised Jordan for its efforts to stop leprosy transmission and reduce its stigma. Jordan has not reported any local cases of leprosy for over 20 years. The declaration followed an independent assessment of the situation in the country. Despite Jordan’s success, leprosy still affects over 120 countries, with more than 200,000 new cases reported annually.
10. Recently, the Prime Minister of India laid the foundation stone of ‘PM MITRA park’ in which region of Maharashtra?
A. Latur
B. Amravati
C. Nashik
D. Pune
- Prime Minister Narendra Modi laid the foundation stone for the PM Mega Integrated Textile Regions and Apparel (PM MITRA) Park in Amravati, Maharashtra, covering 1,000 acres. The park is part of a plan to establish seven PM MITRA Parks to boost the textile industry, developed by the Maharashtra Industrial Development Corporation (MIDC).
11. Recently, which state secured first spot in the State Food Safety Index (SFSI) 2024?
A. Tamil Nadu
B. Kerala
C. Goa
D. Maharashtra
- Kerala secured the top spot in the State Food Safety Index (SFSI) 2024 for the second consecutive year. The index was released during the FSSAI Global Food Regulators Summit 2024. The Food Safety and Standards Authority of India (FSSAI) releases this index annually since 2018-19. The SFSI aims to improve food safety standards in India. It evaluates states based on five metrics: data management, compliance, food testing, training, and consumer empowerment. In 2023, a new parameter, ‘Improvement in SFSI Rank,’ was added. The index promotes safe and nutritious food for the population.
12. What is the theme of ‘International Day of Peace 2024’?
A. End racism. Build peace
B. Cultivating a Culture of Peace
C. Actions for Peace
D. Recovering better for an equitable and sustainable world
- The International Day of Peace is celebrated annually on September 21. It aims to promote peace and highlight the importance of global unity for a peaceful and sustainable world. This year’s theme, ‘Cultivating a Culture of Peace,’ emphasizes the importance of fostering peaceful relations among all races and ethnicities. The day commemorates the 25th anniversary of the United Nations General Assembly’s Declaration and Programme of Action on a Culture of Peace, promoting awareness and actions that contribute to a sustainable and harmonious world.