TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 24th and 25th July 2024

1. உலகின் முதல் இரட்டை-கோபுர சூரிய அனல்மின்னுற்பத்தி ஆலையை உருவாக்கியுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. இந்தியா

ஈ. தென் கொரியா

  • சீனா உலகின் முதல் இரட்டை-கோபுர சூரிய அனல்மின்னுற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளது. இது ஆற்றல் செயல்திறனை 24% அதிகரிக்கிறது. இந்த நிலையம் இரண்டு 200-மீ உயர கோபுரங்களைக் கொண்டுள்ளது; அது சூரியனைக்கண்காணிக்கும் ஆயிரக்கணக்கான ஆடிகளுடன் 94% பிரதிபலிப்பு செயல்திறனை கொண்டுள்ளது. இரவில்கூட தொடர்ச்சியான மின்னுற்பத்தியைச் செயல்படுத்துவதற்காக இது அதீத வெப்பத்தைத் தக்கவைப்பதற்கு உருகிய உப்பைப் பயன்படுத்துகிறது. இந்தப் புதுமையான வடிவமைப்பு ஆற்றல் சேமிப்பை அதிகரிப்பதோடு சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது.

2. அண்மையில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. J N தீட்சித்

ஆ. வினை மோகன் குவாத்ரா

இ. நிருபமா மேனன்

ஈ. சுரேந்திர குமார் அதானா

  • அமெரிக்காவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக வினை மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. ஓய்வுற்ற இந்திய வெளியுறவுத்துறை தூதரான, வினை மோகன் குவாத்ரா இந்தியாவின் அண்டை நாடான சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான உறவுகளில் விரிவான நிபுணத்துவம் பெற்றவர்.

3. கீழ்க்காணும் எந்த இரண்டு நீர்நிலைகளால் இராமர் பாலம் பிரிக்கப்பட்டுள்ளது?

அ. வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல்

ஆ. மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை

இ. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா

ஈ. மெக்ஸிக்கோ வளைகுடா மற்றும் கரீபியன் கடல்

  • ISRO அறிவியலாளர்கள் இராமேஸ்வரம் தீவையும் (இந்தியா) மன்னார் தீவையும் (இலங்கை) இணைக்கும் 48 கிமீ நீளமுள்ள தொடர்ச்சியான சுண்ணாம்புப் பாறைகளாலான இராமர் பாலத்தின் (ஆதாமின் பாலம்) நீரில் மூழ்கிய கட்டமைப்பை வெற்றிகரமாக வரைபடமாக்கினர். இந்தப் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணையை பிரிக்கிறது. இதன் இடைப்பட்ட தூரத்தின் ஆழம் 1-10 மீட்டராக உள்ளது. இராமாயணம் மற்றும் இசுலாமிய புராணங்களில் புவியியல் சான்றுகளாக குறிப்பிடப்பட்டுள்ள இது, ஒரு முன்னாள் நில இணைப்பு ஆகும். இயற்கைப் பேரிடர்கள் காரணமாக 1480 ஆண்டுக்குப் பிறகு இது நீரில் மூழ்கியது.

4. மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தைச் (MISS) செயல்படுத்துகிற இரண்டு நிறுவனங்கள் எவை?

அ. NABARD மற்றும் RBI

ஆ. RBI மற்றும் SEBI

இ. NABARD மற்றும் SEBI

ஈ. SEBI மற்றும் NITI Aayog

  • மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் (Modified Interest Subvention Scheme – MISS)கீழ் குறுகியகால பயிர்க்கடன்களின் உச்சவரம்பை `3 லட்சத்திலிருந்து `5 லட்சமாக உயர்த்த நடுவணரசு திட்டமிட்டுள்ளது. 2006-07 கரீப் பருவத்து முதல் செயல்படுத்தப்பட்ட MISS, விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய குறுகியகாலக்கடனை வழங்குகிறது. இது 2022-23 முதல் 2024-25 வரை செயலில் உள்ளது. பல்வேறு வங்கிகளுக்கு வட்டி மானியம் அளிக்கும் இத்திட்டத்தை NABARD மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நிர்வகிக்கிறது. தகுதியான பயனாளிகளில் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் சுய-உதவிக்குழுக்கள் அடங்குவர்.

5. பிரளய் ஏவுகணையை உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. JAXA

ஈ. CNSA

  • இந்தியாவின் பிரளய் ஏவுகணை மீதான ஆர்மீனியாவின் ஆர்வம் இந்தியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. பிரளய் ஏவுகணை என்பது 350-500 கிமீ தாக்குதல் வரம்பையும், தரையிலிருந்து தரையிலுள்ள மற்றோர் இலக்கைத்தாக்கும் ஓர் ஏவுகணை ஆகும். இதனால் 500-1,000 கிலோ வரை எடையைச் சுமந்து செல்ல முடியும். பாதுகாப்பு தேவைகளுக்காக DRDOஆல் இது உருவாக்கப்பட்டது.

6. அண்மையில், நடுவண் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையத்தை கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறந்து வைத்தார்?

அ. ஜெய்ப்பூர்

ஆ. போபால்

இ. கொல்கத்தா

ஈ. வாரணாசி

  • கொல்கத்தா உப்பேரி நகரத்தில் உள்ள தாரித்ரி வளாகத்தில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு கழகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிலச்சரிவு முன்னெச்சரிக்கை மையத்தை நடுவண் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் தொடக்கி வைத்தார். ‘பூஷான்கேத்’ என்ற இணையதளம் மற்றும் ‘பூஷ்கலான்’ திறன்பேசி செயலியை அமைச்சர் அப்போது தொடக்கி வைத்தார். கடந்த 1851இல் நிறுவப்பட்ட GSI, ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிமூலம் புவி அறிவியல் தகவல் மற்றும் கனிமவள மதிப்பீட்டில் கவனம் செலுத்துகிறது. GSIஇன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. இந்தியா முழுவதும் ஆறு பிராந்திய அலுவலகங்கள் அதற்கு உள்ளன.

7. Transiting Exoplanet Survey Satellite (TESS) என்பது எந்த விண்வெளி அமைப்பின் திட்டமாகும்?

அ. CNSA

ஆ. JAXA

இ. NASA

ஈ. ISRO

  • Transiting Exoplanet Survey Satellite (TESS) நடத்திய ஆய்வில், 4 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் OJ 287இன் மையத்தில் இரண்டு கருந்துளைகள் இருப்பதை உறுதிசெய்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் NASAஆல் தொடங்கப்பட்ட TESS, பிரகாசமான விண்மீன்களைச்சுற்றியுள்ள புறக்கோள்களைத் தேடுகிறது. சிறிய பாறை முதல் பெரும்பாறைகள் வரை 410 உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோள்களை இது கண்டறிந்துள்ளது. TESS ஒரு தனித்துவமான உயர்மட்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவருகிறது.

8. அண்மையில், “Towards Justice: Ending Child Marriage” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNICEF

ஆ. சர்வதேச குழந்தைப்பருவ கல்வி (CEI)

இ. இந்திய குழந்தைகள் பாதுகாப்பு (ICP)

ஈ. தில்லி குழந்தைகள் நலக் கூட்டமைப்பு (DCCW)

  • இந்திய குழந்தைகள் பாதுகாப்பு (ICP) அமைப்பானது “நீதியை நோக்கி: குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குழந்தைகள் உரிமைகள் மற்றும் பல நம்பிக்கை முன்முயற்சியின் ஒருபகுதியான ICP, குழந்தைகளிடம் தவறான நடத்தை, கடத்தல், எண்ம சுரண்டல் மற்றும் குழந்தைத்திருமணம் ஆகியவற்றுக்குத் தீர்வுகாண்கிறது. அஸ்ஸாமின் சட்டபூர்வ நடவடிக்கைகள் 2021-22 முதல் 2023-24 வரை குழந்தைத் திருமணங்களை 81% குறைத்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • ஒவ்வொரு நிமிடமும் 3 சிறுமிகளுக்குத் திருமணம் ஆனபோதிலும் (மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011), தினமும் மூன்று வழக்குகள் மட்டுமே பதிவாகின்றன. 2023-24இல் 14,137 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 92% வழக்கு நிலுவையில் இருப்பதால், அதைத்தீர்க்க 19 ஆண்டுகள் ஆகலாம் என இந்த அறிக்கை கூறுகிறது.

9. E.coli என்றால் என்ன?

அ. புரோட்டோசோவா

ஆ. பாக்டீரியா

இ. பூஞ்சை

ஈ. வைரஸ்

  • பாரிஸின் தற்காலத்துக்கு ஒவ்வாத கழிவுநீர் அமைப்பு சென்னாற்றை E.coli என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா கொண்டு கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. 775 கிமீ நீளமுள்ள பிரான்சின் இரண்டாவது நீளமான ஆறான சென் (Seine), பாரிஸ் வழியாக 13 கிமீ பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. மனித மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படும் E.coli என்ற பாக்டீரியா, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும். இது அசுத்தமான உணவு மற்றும் மலங்கழிக்கப்பட்ட நீர்மூலம் பரவுகிறது.

10. ஒவ்வோர் ஆண்டும் ‘உலக செஸ் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.20

ஆ. ஜூலை.02

இ. ஜூன்.02

ஈ. ஜூன்.20

  • உலக செஸ் நாளானது ஆண்டுதோறும் ஜூலை.20 அன்று கொண்டாடப்படுகிறது. இது 1924இல் பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டதைக் குறிக்கிறது. கடந்த 1966இல் UNESCOஆல் முன்மொழியப்பட்ட இந்நாள், சதுரங்கத்தின் அறிவுசார் நன்மைகள் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய செஸ், எல்லா வயதினருக்கும் பின்னணிக்கும் ஒரு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படுகிறது. எட்டு நாடுகளைச் சேர்ந்த செஸ் அமைப்புகளால் FIDE நிறுவப்பட்டது.

11. அண்மையில், “6Gக்கான கிளாசிக்கல் & குவாண்டம் கம்யூனிகேஷன்ஸ்” என்ற சிறப்பு மையம் திறக்கப்பட்ட இடம் எது?

அ. கொல்கத்தா

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. போபால்

  • சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சிப்பூங்காவில், “6Gக்கான கிளாசிக்கல் மற்றும் குவாண்டம் கம்யூனிகேஷன்ஸ்” குறித்த சிறப்பு மையத்தை தொலைத்தொடர்புத்துறை செயலர் டாக்டர் நீரஜ் மிட்டல் திறந்து வைத்தார். இது டெலிகாம் சென்டர்ஸ் ஆப் எக்ஸலன்ஸ் இந்தியாவின் துணை மையமாகும்; மேலும் இது 6G தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வகை செய்து தலைமை தாங்கும். இது முன்னோடியில்லாத வேகம், மிகக்குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றை உறுதியளிக்கும்.
  • இது உலகளாவிய 6G தரநிலைகள் மற்றும் உள்கட்டமைப்பை புதுமைப்படுத்தவும் வடிவமைக்கவும் கல்வி மற்றும் தொழில்துறை நிபுணர்களை ஒன்றிணைக்கும். இது 6G R&D திட்டங்களில் ஒத்துழைப்பை வளர்க்கும்.

12. 2024 – இந்திய மொபைல் மாநாட்டின் கருப்பொருள் என்ன?

அ. The Future is Now

ஆ. New Digital Universe

இ. Inclusive Innovations

ஈ. IMAGINE: A new CONNECTED world Intelligent

  • 2024 – இந்திய மொபைல் மாநாட்டின் கருப்பொருளான, “எதிர்காலம் இப்போது” என்ற தலைப்பை மத்திய தகவல் தொடர்பு & மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டார். 6G தொழினுட்பம் மற்றும் தொலைத் தொடர்புகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வானது புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதோடு 1,000+ முதலீட்டாளர்களுடன் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தும். இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்சமயம் நடைபெறும்.

13. ‘Sagittarius A*’ என்றால் என்ன?

அ. சிறுகோள்

ஆ. கருந்துளை

இ. AI மாதிரி

ஈ. ஆக்கிரமிப்புக்களை

  • அறிவியலாளர்கள் பால்வீதியில் ஒரு விண்மீன் கூட்டத்தின் மையத்தில், மீநிறைக் கருந்துளையான Sagittarius A* (Sgr A*)-க்கு அருகில் ஓர் இடைநிலை-நிறைக் கருந்துளையைக் கண்டுபிடித்துள்ளனர். Sgr A* விண்மீனின் மையத்தில், Sagittarius விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள இது, சூரியனைவிட 4.3 மில்லியன் மடங்கு எடை கொண்டது. இது 14.6 மில்லியன் மைல்கள் (23.5 மில்லியன் கிமீ) விட்டம் கொண்டது. இது ஒரு வலுவான ரேடியோ அலை மூலமாகும்.

14. அண்மையில் இராஜீவ் காந்தி சிவில் அபய ஹஸ்தம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?

அ. தெலுங்கானா

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, 2024-இராஜீவ் காந்தி சிவில் அபய ஹஸ்தம் என்ற திட்டத்தைத் தொடங்கினார். இது UPSC முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சிபெற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணாக்கர்க்கு (EWS/BC/SC/ST) `1 லட்சம் நிதியுதவியை வழங்குகிறது. இத்திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

15. சமீபத்தில், தோட்டக்கலை அறிவியல் துறையில் அதன் முன்னோடி பணிக்காக சிறந்த தொழில்நுட்ப விருதைப் பெற்ற நிறுவனம் எது?

அ. மத்திய துணை வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனம்

ஆ. இந்திய நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்

இ. இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்

ஈ. மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்

  • இந்திய நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனமானது தோட்டக்கலை அறிவியலுக்கான சிறந்த தொழில்நுட்ப விருதைப் பெற்றது. ICARஇன் 96ஆவது நிறுவன நாளின்போது நடுவண் வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் இவ்விருதை வழங்கினார். “உடன் கரையக்கூடிய மஞ்சள்-செறிவூட்டப்பட்ட மசாலா சுவையூட்டப்பட்ட பால் பொடிக்கான செயல்முறை”க்காக  இந்திய நறுமணப்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் இவ்விருதைப்பெற்றது. மலபார் பால் உற்பத்தியாளர்கள் யூனியனால் வணிகமயமாக்கப்பட்டதன் விளைவாக கோல்டன் பால் மற்றும் கோல்டன் மில்க் மிக்ஸ் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டன.

16. ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின்மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளை நீக்குதல் திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் WTO-இணக்க திட்டமாகும்?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. வணிக அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • தேயிலை தொழிற்துறையானது ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிக்க ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளை நீக்குதல் திட்டத்தின்கீழ் அதிக விகிதங்களை நாடுகிறது. நடுவண் வர்த்தக அமைச்சகத்தின் முதன்மையான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டமான ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின்மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளை நீக்குதல் திட்டம், உள்ளீடுகள் மீதான மத்திய, மாநில மற்றும் உள்ளூர் சுங்கங்களைத் திரும்பப்பெறுகிறது. 2019 செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இது, WTO விதிமுறையைத் தொடர்ந்து MEIS திட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது. கடந்த 2021 ஜன.01 முதல், தற்சார்பு இந்தியாவை இலக்காகக்கொண்டு, போட்டித் தன்மையை அதிகரிக்கவும், வேலைகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் முக்கியமான ஏற்றுமதித் துறைகளை ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான சுங்கங்கள் மற்றும் வரிகளை நீக்குதல் திட்டம் ஆதரிக்கிறது.

17. அண்மையில், அமெரிக்காவின் நியூபோர்ட்டில் உள்ள பன்னாட்டு டென்னிஸ் வாழ்த்தரங்கில் சேர்க்கப்பட்ட முன்னாள் இந்திய வீரர்கள் யாவர்?

அ. விஜய் அமிர்தராஜ் மற்றும் லியாண்டர் பயஸ்

ஆ. அஜய் இராமசாமி மற்றும் ரோகித் இராஜ்பால்

இ. மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபண்ணா

ஈ. கரண் இரஸ்தோகி மற்றும் ஜெய் இராயப்பா

  • இந்திய டென்னிஸ் வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் பன்னாட்டு டென்னிஸ் வாழ்த்தரங்கில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய மற்றும் ஆசிய டென்னிஸ் வீரர்களாக ஆனார்கள். இதன்மூலம் பிரதிநிதித்துவப்படுத்தும் 28ஆவது நாடாக இந்தியா மாறியது. பிரித்தானிய விளையாட்டு ஊடகவியலாளரான ரிச்சர்ட் எவன்ஸும் இதில் சேர்க்கப்பட்டார். லியாண்டர் பயஸ் வீரர் பிரிவிலும் விஜய் அமிர்தராஜ் மற்றும் ரிச்சர்ட் எவன்ஸ் ஆகியோர் பங்களிப்பாளர் பிரிவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்த வாழ்த்தரங்கில் இப்போது 28 நாடுகளைச் சேர்ந்த 267 டென்னிஸ் வீரர்/வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

18. Rapid Apophis Mission for Space Safety (RAMSES) என்பது எந்த விண்வெளி முகமையின் புவிப் பாதுகாப்புத் திட்டமாகும்?

அ. தேசிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA)

ஆ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

இ. ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA)

ஈ. ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA)

  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் RAMSES விண்கலம் 2029இல் பூமியை நெருங்கிச்செல்லும், ‘அபோபிஸ் – Apophis’ என்ற சிறுகோளுடனேயே செல்லும். விண்வெளி பாதுகாப்பிற்கான Rapid Apophis Mission for Space Safety (RAMSES) ஆனது 2029 ஏப்.13 அன்று பூமியிலிருந்து 32,000 கிமீ தொலைவில் நெருங்கிவரும் அபோபிஸை இடைமறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு பில்லியன் மக்களால் நேரடியாக காணக்கூடிய இந்த அரிய நிகழ்வானது, பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக அபோபிஸின் மாற்றப்பட்ட பண்புகளை ஆய்வுசெய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது; மேலும், இது புவிப் பாதுகாப்பு திறன்களையும் மேம்படுத்துகிறது.

19. பிரான்ஸின் அல்பானோ ஒலிவெட்டியுடன் இணைந்து, 2024 – ATP சுவிஸ் ஓபனில் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்திய டென்னிஸ் வீரர் யார்?

அ. சுமித் நாகல்

ஆ. யூகி பாம்ப்ரி

இ. சோம்தேவ் தேவ்வர்மன்

ஈ. திக்விஜய் பிரதாப்

  • ஜூலை 15-21 வரை சுவிட்சர்லாந்தின் ஜிஸ்டாடில் நடைபெற்ற 2024 சுவிஸ் ஓபன் போட்டியில், இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பானோ ஒலிவெட்டியுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றார். இந்த ATP-250 நிகழ்வு போட்டியின் 56ஆவது பதிப்பைக் குறித்தது. இவ்வெற்றி யூகி பாம்ப்ரியின் மூன்றாவது ATP பட்டமாகும். இந்த இணை இறுதிப்போட்டியில் ஃபேப்ரைஸ் மார்ட்டின் மற்றும் உகோ ஹம்பர்ட்டை தோற்கடித்தது. யூகி பாம்ப்ரி இதற்கு முன்பு 2023 மல்லோர்கா ஓபன் மற்றும் 2024 BMW ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.

20. ரேடாமின் முதன்மை நோக்கம் என்ன?

அ. சமிக்ஞையின் வலிமையை அதிகரிப்பது

ஆ. சுற்றுச்சூழல் கூறுகளிலிருந்து ரேடார் அல்லது அலைவாங்கி அமைப்பைக் காப்பது

இ. அலைவாங்கியின் அளவை அதிகரிப்பது

ஈ. அலைவாங்கியின் மின் நுகர்வைக் குறைப்பது

  • பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகமானது ஏவுகணைகளுக்கான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிலிக்கா ரேடாம்களை உருவாக்கியுள்ளது. ரேடாம்கள் என்பது ரேடார் அல்லது அலைவாங்கி அமைப்புகளை சுற்றுச்சூழல் கூறுகளிலிருந்து சமிக்ஞை பரிமாற்றத்தை பாதிக்காமல் காக்கும் ஒரு பாதுகாப்பு உறைகளாகும்.
  • திடமான (அ) நெகிழ்வான பொருட்களால் ஆன இது, சுற்றுச்சூழலின் தாக்கத்தை குறைப்பதன்மூலமும், மின்னணு உபகரணங்களை மறைப்பதன்மூலமும், அண்மைப்பொருட்களுடன் மோதுவதைத் தடுப்பதன்மூலமும் ரேடார்கள் / அலைவாங்கியின் செயல்திறனைப் பராமரிக்கின்றன. அவை அலைவாங்கியின் ஆயுள் மற்றும் செயல்திறனை உறுதிசெய்கின்றன.

21. ‘Mesembrius bengalensis’ என்றால் என்ன?

அ. சிலந்தி

ஆ. தவளை

இ. மீன்

ஈ. மிதவை ஈ

  • இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் உள்ள ஷட்பாடா பூச்சியியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (SERL) ஆராய்ச்சியாளர்கள், கேரளத்தின் கோலே சதுப்புநிலங்கள் மற்றும் விளகன் குன்னு மலைப்பகுதிகளில் ‘Mesembrius bengalensis’ மற்றும் ‘M. quadrivittatus’ ஆகிய இரண்டு புதிய மிதவை ஈ இனங்களைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ‘Syrphidae’ குடும்பத்தைச் சேர்ந்த மிதவை ஈக்கள், தோற்றத்தில் தேனீக்கள் அல்லது குளவிகள் போன்றே உள்ளன பிற மகரந்தச்சேர்க்கையாளர்களாகும். கேரள மாநிலத்தின் மிகப்பெரிய உவர் வெப்பமண்டல சுற்றுச்சூழல் அமைப்பான கோலே ஈரநிலங்கள், சாலக்குடி & பாரதப்புழை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

22. ஆண்டுதோறும் ‘தேசியக்கொடி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூலை.22

ஆ. ஜூலை.26

இ. ஜனவரி.26

ஈ. ஜனவரி.22

  • ஜூலை.22 அன்று அனுசரிக்கப்படும் தேசியக்கொடி நாள், 1947ஆம் ஆண்டு விடுதலைக்கு சற்றுமுன்பு, ஆகஸ்ட்.15 அன்று அரசியலமைப்புச்சபையால் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூருகிறது. இந்த நாள் இந்தியாவின் வரலாற்றுச் சாதனை, பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையைக் கொண்டாடுகிறது. இது கல்விப்பயிலரங்குகள், பேச்சுக்கள் மற்றும் கண்காட்சிகள்மூலம் கொடியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதை ஊக்குவிக்கிறது. மக்களாட்சி, ஒற்றுமை மற்றும் தேசியப்பெருமை ஆகியவற்றின் மதிப்புகளை வலியுறுத்துகிறது.

23. இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மனோலோ மார்க்வெஸ் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஸ்பெயின்

இ. பிரான்ஸ்

ஈ. ருமேனியா

  • இந்தியன் சூப்பர் லீக் (ISL) 2024-25 சீசனில் FC கோவாவுடன் தனது பங்கைத்தொடரும் அதேவேளையில், இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ISL சீசனுக்குப்பிறகு மனோலோ மார்க்வெஸ் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை முழுநேரமாக ஏற்றுக்கொள்வார். AIFF தலைவர் கல்யாண் சௌபே இந்த நியமனம் குறித்து அறிவித்தார்.

24. அண்மையில், ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்மூலம் கரிம வர்த்தகம் மற்றும் கடன் சரிசெய்தலுக்கான கூட்டு கடன் பொறிமுறையை நிறுவ திட்டமிட்டுள்ள இரு நாடுகள் எவை?

அ. இந்தியா மற்றும் ஜப்பான்

ஆ. இந்தியா மற்றும் ரஷ்யா

இ. இந்தியா மற்றும் சீனா

ஈ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

  • கரிம வர்த்தகம் மற்றும் கடன் சரிசெய்தலுக்கான ஒரு கூட்டு கடன் பொறிமுறையை இந்தியாவும் ஜப்பானும் ஓர் ஒப்பந்தம்மூலம் நிறுவ திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டு கடன் பொறிமுறையானது பாரிஸ் ஒப்பந்தத்தின் 6.2ஆவது பிரிவின்கீழ் உருவாக்கப்படும். CO2 உமிழ்வைக்குறைத்தல், கரிமிகா தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டிருக்கும். இக்கூட்டு கடன் பொறிமுறை CO2 உமிழ்வு குறைப்பு வரவுகளை பகிர்வதற்கும், கரிநீக்கல் தொழில்நுட்பங்களின் பரவலுக்கும், மற்றும் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கும் உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஊரக மேம்பாட்டு அமைச்சக நிதி 12% அதிகரிப்பு.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு `86,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட `60,000 கோடியிலிருந்து சுமார் 43% அதிகமாகும். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்துக்கான ஒதுக்கீடு `54,500 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இத்திட்டத்துக்கு `54,487 கோடி ஒதுக்கப்பட்டது.

மகளிருக்கு அதிகாரமளிக்கும் “தேசிய வாழ்வாதார இயக்கம்-அஜீவிகா” திட்டத்துக்கு கடந்தாண்டைவிட கூடுதலாக `15,047 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மகளிர், சிறுமிகள் நலத் திட்டங்களுக்கு `3 லட்சம் கோடியும், பாதுகாப்புத் துறைக்கு `6.21 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு `90,528 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. ‘கவச்’ ரெயில் பாதுகாப்பு அமைப்பு நிறுவ முன்னுரிமை. ரெயில்வே ஒதுக்கீடு `2.6 இலட்சம் கோடி.

2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு `2,62,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி ‘கவச்’ தானியங்கி பாதுகாப்பு அமைப்பை நிறுவுதல் உள்பட ரெயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் செலவிடப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தானியங்கி பாதுகாப்பு அமைப்பின் மேம்படுத்தப்பட்ட ‘கவச் 4.0’ பதிப்புக்கு ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பிடமிருந்து அண்மையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.

3. ஒரு ரூபாயில் (`1) வரவு / செலவு.

வரவினங்கள்…

கடன்தொகை-27 காசு

நிறுவன வரி-17 காசு

வருமான வரி-19 காசு

சுங்க வரி- 4 காசு

கலால் வரி-5 காசு

சரக்கு மற்றும் சேவை வரி-18 காசு

வரி சாரா வருவாய்-9 காசு

கடன் சாரா மூலதன வரவு-1 காசு

செலவினங்கள்…

நடுவண் அரசு திட்டங்கள்-16 காசு

நடுவண் அரசின் நிதியுதவி திட்டங்கள்-8 காசு

வட்டி செலுத்துகை-19 காசு

பாதுகாப்பு துறை-8 காசு

மானியங்கள்-6 காசு

நிதி ஆணையம் மற்றும் பிற நிதிஒதுக்கீடு-9 காசு

மாநிலங்களுக்கான வரி பகிர்வு-21 காசு

ஓய்வூதியம்-4 காசு

இதர செலவுகள்-9 காசு

4. தொழில்முனைவோருக்கான ‘முத்ரா’ கடன் வரம்பு இரட்டிப்பு.

பெருநிறுவனங்கள் அல்லாத மற்றும் முறைசாரா குறு, சிறு தொழில்முனைவோருக்கு வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளுக்காக பிணை ஏதுமின்றி எளிதாக அதிகபட்சமாக `10 இலட்சம் வரை குறு கடன் பெறும் வகையில் கடந்த 2015 ஏப்.8ஆம் தேதி, ‘பிரதமர் முத்ரா யோஜனா’ (PMMY) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, தொழில்முனைவோரை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே கடன்பெற்று வெற்றிகரமாக திரும்பச்செலுத்தியவர்களுக்கு, இந்தத் திட்டத்தின்கீழ் மீண்டும் கடன் பெறுவதற்கான கடன் உச்ச வரம்பு `20 லட்சமாக உயர்த்தப்ட்டுள்ளது.

5. புதிய வருமான வரிவிதிப்பில் சலுகைகள்.

புதிய வருமான வரிவிதிப்பு முறையில் தனிநபர்களுக்கு அளிக்கப்படும் நிலையான கழிவு 50% உயர்த்தப்பட்டு `50,000இலிருந்து `75,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரிவிதிப்பு முறையில் `3 லட்சம் வரை வருமான வரி விலக்கு தொடர்கிறது. அதே நேரத்தில் `3 லட்சம் முதல் `6 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி என்பது மாற்றப்பட்டு, `3 லட்சம் முதல் `7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. `7 லட்சம் முதல் `10 லட்சம் வரை 10%, `10 லட்சம் முதல் `12 லட்சம் வரை 15%, `12 லட்சம் முதல் `15 லட்சம் வரை 20%, `15 லட்சத்துக்கு மேலுள்ள வருமானத்துக்கு 30% என வருமான வரி விதிக்கப்படுகிறது.

ஏஞ்சல் வரி நீக்கம்: புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வோர்க்கு விதிக்கப்படும் ஏஞ்சல் வரி நீக்கப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன்மூலம் புத்தொழில் நிறுவனங்கள் அதிக முதலீடு பெற முடியும்.

6. சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் முதல் கூட்டுப்பயிற்சி: இந்தியா பங்கேற்பு.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (SCO) அங்கம் வகிக்கும் இந்தியா உள்பட அனைத்து உறுப்புநாடுகளின் பாதுகாப்புப் படையினர், சீனாவில் முதன்முறையாக கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை மேற்கொண்டனர். ‘இன்டராக்ஷ்ன்-2024’ என்னும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்டதாக அந்நாட்டின் பொதுப்பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

7. பொருளாதார பேராசிரியர் குரியன் மறைவு.

பொருளாதார பேராசிரியர் சி டி குரியன் (92) காலமானார். ‘தமிழக கிராமப்புற மாறுதல்கள’ என்ற அவருடைய ஆய்வு தமிழ்நாட்டில் முக்கிய பங்களிப்பை செய்தது.

1. Which country recently developed the world’s first dual-tower solar thermal plant?

A. China

B. Japan

C. India

D. South Korea

  • China has unveiled the world’s first dual-tower solar thermal power plant (TPP), enhancing energy efficiency by 24%. The plant features two 200-meter towers with thousands of mirrors that track the sun, achieving 94% reflection efficiency. It uses molten salt storage to retain excess heat, enabling continuous power generation even at night. This innovative design maximizes energy capture and storage, advancing solar power technology.

2. Recently, who has been appointed as the next Ambassador of India to the US?

A. J N Dixit

B. Vinay Mohan Kwatra

C. Nirupama Menon

D. Surendra Kumar Adhana

  • Vinay Mohan Kwatra has been appointed as India’s next Ambassador to the United States, as confirmed by the Ministry of External Affairs. A retired Indian Foreign Service diplomat, Kwatra has extensive expertise in relations with India’s neighbors, the US, China, and Europe.

3. Adam’s Bridge is separated by which two water bodies?

A. Bay of Bengal and Arabian Sea

B. Gulf of Mannar and Palk Strait

C. Red Sea and Gulf of Aden

D. Gulf of Mexico and Caribbean Sea

  • Scientists from ISRO successfully mapped the submerged structure of Adam’s Bridge (Ram Setu), a 48 km limestone chain connecting Rameswaram Island (India) to Mannar Island (Sri Lanka). The bridge separates the Gulf of Mannar and Palk Strait, with shallow waters of 1-10 meters. Geological evidence indicates it was a former land connection, referenced in the Ramayana and Islamic legend, but submerged since 1480 due to natural calamities.

4. Modified Interest Subvention Scheme (MISS) is implemented by which two organizations?

A. NABARD and RBI

B. RBI and SEBI

C. NABARD and SEBI

D. SEBI and NITI Aayog

  • The Union Government plans to raise the upper limit of short-term crop loans under the Modified Interest Subvention Scheme (MISS) from Rs 3 lakh to Rs 5 lakh. Implemented from Kharif 2006-07, MISS offers subsidized short-term credit to farmers and is active from 2022-23 to 2024-25. Interest subvention is available to various banks, and the scheme is managed by NABARD and RBI. Eligible recipients include owner cultivators, tenant farmers, and SHGs.

5. Pralay Missile was developed by which organization?

A. DRDO

B. ISRO

C. JAXA

D. CNSA

  • Armenia’s interest in India’s Pralay missile presents a significant opportunity for India. The Pralay missile is a 350-500 km short-range, quasi-ballistic surface-to-surface missile with a 500-1,000 kg payload, developed by DRDO for defense needs.

6. Recently, Union Minister of Coal and Mines inaugurated National Landslide Forecasting Centre in which city?

A. Jaipur

B. Bhopal

C. Kolkata

D. Varanasi

  • The Union Minister of Coal and Mines inaugurated the National Landslide Forecasting Centre at the Geological Survey of India (GSI) in Kolkata. The Bhusanket Web Portal and Bhooskhalan Mobile App were launched to facilitate landslide hazard data dissemination and forecasting. The GSI, established in 1851, focuses on geoscientific information and mineral resource assessment through surveys and research. The GSI headquarters is in Kolkata, with six regional offices across India.

7. Transiting Exoplanet Survey Satellite (TESS) is a mission of which space organization?

A. CNSA

B. JAXA

C. NASA

D. ISRO

  • A study by the Transiting Exoplanet Survey Satellite (TESS) confirmed two black holes at the center of galaxy OJ 287, four billion light-years away. Launched by NASA in 2018, TESS searches for exoplanets around the brightest stars. It has found 410 confirmed exoplanets, ranging from small rocky worlds to giants. TESS orbits Earth in a unique high orbit.

8. Which organization recently released ‘Towards Justice: Ending Child Marriage’ report?

A. UNICEF

B. Childhood Education International (CEI)

C. India Child Protection (ICP)

D. Delhi Council for Child Welfare (DCCW)

  • India Child Protection (ICP) released the “Towards Justice: Ending Child Marriage” report. ICP, part of the Child Rights and Multi-Faith Initiative, addresses child abuse, trafficking, digital exploitation, and child marriage. Key findings: Assam’s legal measures reduced child marriages by 81% from 2021-22 to 2023-24. Despite three girls marrying every minute (Census 2011), only three cases are reported daily. In 2023-24, 14,137 child marriages were prevented. With a 92% case backlog, clearing it could take 19 years.

9. What is E. coli?

A. Protozoa

B. Bacteria

C. Fungus

D. Virus

  • Paris’ outdated sewage system has severely contaminated the Seine River with E. coli, a harmful bacterium. The Seine, France’s second-longest river at 775 km, flows through Paris for 13 km and empties into the English Channel. E. coli, found in human and animal intestines, can cause severe symptoms like abdominal cramps, diarrhea, and kidney failure. It spreads via contaminated food and water tainted by fecal waste.

10. Which day is observed as ‘World Chess Day’ every year?

A. July.20

B. July.02

C. June.02

D. June.20

  • World Chess Day, celebrated annually on July 20th, marks the establishment of the International Chess Federation (FIDE) in Paris in 1924. UNESCO proposed this day in 1966, recognizing chess for its intellectual benefits and cultural diversity. Originating in India as “Chaturanga” nearly 1500 years ago, chess is promoted as a game for all ages and backgrounds. FIDE was founded by chess organizations from eight countries.

11. Recently, where was the centre of excellence on “Classical and Quantum Communications for 6G” inaugurated?

A. Kolkata

B. Chennai

C. Hyderabad

D. Bhopal

  • Dr. Neeraj Mittal, Secretary (Telecom), inaugurated the Centre of Excellence on “Classical and Quantum Communications for 6G” at IITM Research Park, Chennai. This Telecom Centres of Excellence (TCoE)-India sub-centre aims to advance 6G technology with unprecedented speeds, ultra-low latency, and enhanced connectivity. It will unite academic and industry experts to innovate and shape global 6G standards and infrastructure. A workshop will foster collaboration on 6G R&D proposals.

12. What is the theme of India Mobile Congress (IMC) 2024?

A. The Future is Now

B. New Digital Universe

C. Inclusive Innovations

D. IMAGINE: A new CONNECTED world Intelligent

  • Minister Jyotiraditya M Scindia unveiled the theme for India Mobile Congress (IMC) 2024, “The Future is Now,” highlighting India’s leadership in 6G technology and telecommunications. The event will showcase innovative solutions, host over 500 meetings with 1,000+ investors, and include MoUs to enhance cybersecurity.

13. What is ‘Sagittarius A*’?

A. Asteroid

B. Black hole

C. AI Model

D. Invasive weed

  • Scientists have discovered an intermediate-mass black hole at the center of a star cluster in the Milky Way, near the supermassive black hole Sagittarius A* (Sgr A*). Sgr A* is located at the galaxy’s center, in the constellation Sagittarius, with an estimated mass of 4.3 million times that of the sun. It has a diameter of 14.6 million miles (23.5 million km) and is a strong radio wave source.

14. Which state government recently launched the Rajiv Gandhi Civil Abhaya Hastham Scheme?

A. Telangana

B. Karnataka

C. Maharashtra

D. Kerala

  • Telangana Chief Minister Revanth Reddy has launched the Rajiv Gandhi Civil Abhaya Hastham Scheme 2024. This scheme provides Rs 1 lakh financial assistance to economically weaker students (EWS/BC/SC/ST) who have passed the UPSC preliminary exam to help them prepare for the mains. The scheme aims to increase the number of civil employees in the state.

15. Recently, which institute has received the best technology award for its pioneering work in the field of horticultural sciences?

A. Central Institute for Subtropical Horticulture

B. Indian Institute of Spices Research

C. Indian Institute of Horticultural Research

D. Central Institute for Research on Cotton Technology

  • The Indian Institute of Spices Research (IISR) received the best technology award for its work in horticultural sciences. Union Agriculture Minister Shivraj Singh Chouhan presented the award during ICAR’s 96th Foundation Day. IISR’s award-winning technology, “Process for instant soluble turmeric enriched spice flavoured milk powder,” has been commercialized with Malabar Milk Producers’ Union, resulting in products Golden Milk and Golden Milk Mix.

16. Remission of Duties and Taxes on Exported Products (RoDTEP) Scheme is a WTO- compliant scheme of which ministry?

A. Ministry of Defence

B. Ministry of Agriculture

C. Ministry of Commerce

D. Ministry of Finance

  • The tea industry seeks higher rates under the RoDTEP scheme to boost export competitiveness. RoDTEP, a flagship export promotion scheme by India’s Commerce Ministry, refunds unrebated central, state, and local duties on inputs.
  • Announced in September 2019, it replaced the MEIS scheme following a WTO ruling. Effective January 1, 2021, RoDTEP supports crucial export sectors to enhance competitiveness, create jobs, and promote economic growth, aiming for Aatmanirbhar Bharat.

17. Recently, which former Indian players were inducted into the International Tennis Hall of Fame in Newport, USA?

A. Vijay Amritraj and Leander Paes

B. Ajay Ramaswami and Rohit Rajpal

C. Mahesh Bhupathi and Rohan Bopanna

D. Karan Rastogi and Jay Royappa

  • Indian tennis legends Leander Paes and Vijay Amritraj became the first Indian and Asian men’s tennis players inducted into the International Tennis Hall of Fame, making India the 28th country represented. British sports journalist Richard Evans was also inducted. Paes was honored in the Player Category, while Amritraj and Evans were recognized in the Contributor Category. The Hall of Fame now includes 267 tennis legends from 28 nations.

18. Rapid Apophis Mission for Space Safety (RAMSES) is a planetary defence mission of which space agency?

A. National Aeronautics and Space Administration (NASA)

B. Indian Space Research Organisation (ISRO)

C. European Space Agency (ESA)

D. Japan Aerospace Exploration Agency (JAXA)

  • The European Space Agency’s Ramses spacecraft will accompany the asteroid Apophis during its close pass of Earth in 2029. The Rapid Apophis Mission for Space Safety (RAMSES) aims to intercept Apophis, which will pass within 32,000 km of Earth on April 13, 2029. Visible to 2 billion people, this rare event allows researchers to study Apophis’s altered characteristics due to Earth’s gravity, enhancing planetary defense capabilities.

19. Which Indian tennis player, in partnership with Albano Olivetti of France, has won the men’s doubles title at the ATP Swiss Open 2024?

A. Sumit Nagal

B. Yuki Bhambri

C. Somdev Devvarman

D. Digvijay Pratap

  • Indian tennis player Yuki Bhambri, with Albano Olivetti of France, won the 2024 Swiss Open Gstaad Men’s Doubles title, held from July 15-21 in Gstaad, Switzerland. This ATP 250 event marked the 56th edition of the tournament. This victory is Bhambri’s third ATP title. The pair defeated Fabrice Martin and Ugo Humbert in the final. Bhambri previously won titles at the 2023 Mallorca Open and 2024 BMW Open.

20. What is the primary purpose of a Radome?

A. Enhance the Signal strength

B. Shield a radar or antenna system from environmental elements

C. Increase the antenna’s size

D. Decrease the antenna’s power consuption

  • The Defence Metallurgical Research Laboratory (DMRL) has achieved a significant milestone by developing homegrown fused silica radomes for missiles. Radomes are protective enclosures that shield radar or antenna systems from environmental elements without affecting signal transmission. Made from rigid or flexible materials, radomes maintain antenna performance by reducing environmental impact, concealing electronic equipment, and preventing collisions with nearby objects. They ensure the antenna’s durability and efficiency.

21. What is ‘Mesembrius bengalensis’?

A. Spider

B. Frog

C. Fish

D. Flower fly

  • Researchers from the Shadpada Entomology Research Lab (SERL) at Christ College, Irinjalakuda, reported two new flower fly species, Mesembrius bengalensis and M. quadrivittatus, from Kerala’s Kole wetlands and Vilagan Kunnu hillocks. Flower flies, belonging to the Syrphidae family, mimic bees or wasps and are crucial pollinators. The Kole wetlands, Kerala’s largest brackish tropical ecosystem, lie between the Chalakudy and Bharathapuzha Rivers.

22. Which day is observed as ‘National Flag Day’ every year?

A. July.22

B. July.26

C. January.26

D. January.22

  • National Flag Day, observed on July 22, commemorates the 1947 adoption of India’s tricolour flag by the Constituent Assembly, shortly before independence on August 15. This day celebrates India’s historical achievement, diversity, and unity. It promotes understanding of the flag’s significance through educational workshops, talks, and exhibitions, emphasizing values of democracy, inclusivity, and national pride.

23. Manolo Marquez, who has been appointed as head coach of the Indian men’s football team, belongs to which country?

A. Australia

B. Spain

C. France

D. Romania

  • Spaniard Manolo Marquez has been appointed head coach of the Indian men’s football team, while also continuing his role with FC Goa in the Indian Super League (ISL) 2024-25 season. Marquez will assume the national team head coach role full-time after the ISL season. AIFF President Kalyan Chaubey announced the appointment.

24. Recently, which two countries are planning to establish a Joint Crediting Mechanism for carbon trading and credit adjustment through a Memorandum of Cooperation?

A. India and Japan

B. India and Russia

C. India and China

D. India and Australia

  • India and Japan are planning to establish a Joint Crediting Mechanism (JCM) for carbon trading and credit adjustment through a Memorandum of Cooperation (MOC). The JCM will be created under Article 6.2 of the Paris Agreement and will aim to reduce emissions, promote low-carbon technologies, and encourage economic growth. The JCM will also facilitate the sharing of emission reduction credits, the spread of decarbonizing technologies, and the implementation of mitigation actions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!