Tnpsc Current Affairs in Tamil & English – 23rd September 2024
1. பிரதமர் அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியானின் (PM-AASHA) முதன்மை நோக்கம் என்ன?
அ. விவசாயிகளுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது
ஆ. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதிசெய்வது
இ. விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவது
ஈ. விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது
- நடுவண் அமைச்சரவை அண்மையில் விவசாயத்தில் பிரதமர் அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA) விலை ஆதரவு திட்டத்தை 2025-26 வரை நீட்டித்தது. PM-AASHA (அ) பிரதமர் அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதிசெய்கிறது. இந்தத் திட்டத்தில் 3 கூறுகள் உள்ளன, மேலும் எதைச் செயல்படுத்த வேண்டும் என்பதை மாநிலங்கள் தேர்வுசெய்யலாம். விலை ஆதரவு திட்டத்தின்கீழ், NAFED மற்றும் FCIபோன்ற நடுவண் முகமைகள் மாநில ஆதரவுடன் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்யும். விதிமுறைகளின்படி கொள்முதல் செலவுகள் மற்றும் ஏதேனும் இழப்புகளை நடுவண் அரசு ஈடுசெய்யும்.
2. அண்மையில், இந்திய விமானப்படையின் உயரடுக்கு 18 ‘பறக்கும் தோட்டாக்கள்’ படைப்பிரிவில் சேர்ந்த முதல் பெண் போர் விமானி யார்?
அ. அவனி சதுர்வேதி
ஆ. மோகனா சிங்
இ. பாவனா காந்த்
ஈ. பிரீத்தி சௌகான்
- இந்திய விமானப்படையின் உயரடுக்கு 18 ‘பறக்கும் தோட்டாக்கள்’ படைப்பிரிவில் சேர்ந்த முதல் பெண் போர் விமானியான படையணித்தலைவர் மோகனா சிங், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தை ஓட்டினார். ஜோத்பூரில் நடந்த ‘தரங் சக்தி’ பயிற்சியில் பங்கேற்ற அவர், தேஜாஸ் விமானம் குறித்து ராணுவம் மற்றும் கடற்படையின் துணைத்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
3. அண்மையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. பிரகாஷ் தோமர்
ஆ. நிஷாந்த் சர்மா
இ. அனுராக் கர்க்
ஈ. விக்ரம் சௌத்ரி
- இமாச்சல பிரதேச பணிப் பிரிவைச் சேர்ந்த 1993ஆம் ஆண்டுத் தொகுதி இகாப அதிகாரியான அனுராக் கார்க், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையில் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார். அமைச்சரவை நியமனக்குழு 2026 மே.23 வரை அல்லது அடுத்த ஆணை வரும் வரை அவரது நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது. NCB என்பது, நாடு முழுவதும் அலுவலகங்களைக்கொண்ட இந்தியாவின் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனமாகும்.
4. “பயோ-ரைட்” திட்டத்திற்கு மைய அமைச்சகமாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சகம் எது?
அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆ. வேளாண் அமைச்சகம்
இ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம்
ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
- பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை, உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, “உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development -Bio- RIDE)” என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22 முதல் 2025-26 வரையிலான 15ஆவது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான ‘உயிரி-ரைடு’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு `9,197 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இது இந்தியாவை உயிரி உற்பத்தியில் உலகத்தலைவராக மாற்ற எண்ணுவதோடு 2030ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர் உயிரிப்பொருளாதாரத்தை அடைய எண்ணுகிறது. இத்திட்டம் 3 பரந்த அம்சங்களைக் கொண்டுள்ளது: 1) உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி – மேம்பாடு; 2) தொழில்துறையினர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் 3) உயிரி உற்பத்தி, உயிரி பவுண்டரி ஆகும்.
5. அண்மையில், ‘காண்டாமிருகத்தின் நிலை – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. பன்னாட்டு காண்டாமிருக அறக்கட்டளை (IRF)
இ. UNEP
ஈ. WWF
- பன்னாட்டு காண்டாமிருக அறக்கட்டளையானது அண்மையில், ‘காண்டாமிருகத்தின் நிலை – 2024’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களுக்கான நேர்மறையான போக்குகளை இது எடுத்துக்காட்டுகிறது. கடந்த பத்தாண்டில் அவற்றின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது; தற்போது அவற்றின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டியுள்ளது. அவை இந்தோ-நேபாள தெராய், வடக்கு மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் காணப்படுகின்றன. இந்தியாவில் 3,262 பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் (2021) உள்ளன. அவற்றில் பெரும்பாலும் (90%) அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப்பூங்காவில் உள்ளன.
6. ‘உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாட்டின்’ இரண்டாவது பதிப்பை நடத்துகிற நகரம் எது?
அ. லக்னோ
ஆ. புது தில்லி
இ. புனே
ஈ. சென்னை
- 2024 செப்.19-21 வரை புது தில்லியில் இந்தியா 2ஆவது உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாட்டை நடத்துகிறது. இது சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் FSSAIஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 5,000 பேர் நேரிலும் 1.5 லட்சம் பேர் மெய்நிகர் முறையிலும் இதில் கலந்துகொள்வார்கள். இவ்வுச்சிமாநாடு உணவு பாதுகாப்பு, இடர் மதிப்பீடு & ஒழுங்குமுறை உத்திகள் ஆகியவற்றில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. FSSAI ஆனது உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை இணைய நுழைவு, உணவு இறக்குமதி அனுமதி அமைப்பு 2.0போன்ற புதிய முயற்சிகளை தொடங்குவதோடு மாநில உணவுப்பாதுகாப்பு குறியீடு – 2024ஐயும் புதுப்பிக்கும்.
7. சமீபத்தில், இந்திய சீனியர் மகளிர் கால்பந்தணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. ஜஸ்பிரீத் சிங்
ஆ. சந்தோஷ் காஷ்யப்
இ. ராகவ் குமார்
ஈ. ஆயுஷ் சின்ஹா
- அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் (AIFF) இந்திய சீனியர் பெண்கள் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்தோஷ் காஷ்யப் நியமிக்கப்பட்டுள்ளார். பிரியா பிவி உதவி பயிற்சியாளராகவும், ரகுவீர் பிரவின் கானோல்கர் கோல்கீப்பர் பயிற்சியாளராகவும் உள்ளனர். சந்தோஷ் காஷ்யப்பின் முதல் பணி நேபாளத்தின் காத்மாண்டுவில் அக்டோபர்.17-30 வரை நடைபெறும் SAFF மகளிர் சாம்பியன்ஷிப்பில் தொடங்கும். சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தயாராக 29 பேர்கொண்ட அணி கோவாவில் செப்.20 முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
8. அண்மையில், ஹைதராபாத் விடுதலை நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
அ. 17 செப்டம்பர்
ஆ. 18 செப்டம்பர்
இ. 19 செப்டம்பர்
ஈ. 20 செப்டம்பர்
- ஹைதராபாத் விடுதலை நாள் செப்.17 அன்று கொண்டாடப்படுகிறது. 1948ஆம் ஆண்டு ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு, நிஜாமின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பொன்னான திருநாளை இது நினைவுபடுத்துகிறது. இந்நாள் ஹைதராபாத் விடுதலை இயக்கத்தின் தியாகிகளையும், நிஜாம் ஆட்சியிலிருந்து இப்பகுதியை விடுவிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேற்கொண்ட அருந்தியாகங்களையும் போற்றுகிறது. இளைய தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை வளர்க்கவும் இது உதவுகிறது.
9. அண்மையில், அல்ஜீரியாவுக்கான இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. சுவாதி விஜய் குல்கர்னி
ஆ. அபய் தாக்கூர்
இ. சீதா ராம் மீனா
ஈ. வினய் மோகன் குவாத்ரா
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தபடி, அல்ஜீரியாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதராக சுவாதி விஜய் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். 1995ஆம் ஆண்டு பணித்தொகுதியைச்சேர்ந்த இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரியான சுவாதி விஜய் குல்கர்னி, தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக உள்ளார். இந்தியாவிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான அரசியல் ரீதியிலான உறவுகள் 1962 ஜூலையில் தொடங்கி இன்று வரை நட்பாக இருந்து வருகிறது. இருநாடுகளும் பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றுக்கொன்று ஆதரவாக உள்ளன. 1981ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கூட்டு ஆணைய முறைமையானது நாடுகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பை எளிதாக்குகிறது.
10. அண்மையில், கடும் வறட்சி காரணமாக 200 யானைகளைக் கொல்லும் திட்டத்தை அறிவித்த நாடு எது?
அ. தாய்லாந்து
ஆ. இந்தோனேசியா
இ. இலங்கை
ஈ. ஜிம்பாப்வே
- கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வாட்டி வதைத்து வரும் கடும் வறட்சி காரணமாக ஆப்பிக்க நாடான ஜிம்பாப்வேயில் 200 யானைகளைக் கொன்று அதன் இறைச்சியை மக்களுக்கு உணவளிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் எல்-நினோ பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வறட்சியினால் பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு 68 இலட்சம் மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
- கடந்த 1988ஆம் ஆண்டுக்குப்பின் நாட்டிலேயே முதன்முதலாக யானைகள் கொல்லப்படவுள்ளன. மேலும் அண்டை நாடான நமீபியா கடந்த மாதம் 83 யானைகளை கொல்வதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இறைச்சி உணவை வழங்குவதற்கும் எடுத்த முடிவை ஜிம்பாப்வேயும் பின்பற்றுகிறது. ஹவாங்கே, மிபிரி, டிஸோலோட்சோ, ஷிரேட்சி ஆகிய மாவட்டங்களில் வாழக்கக்கூடிய யானைகள் முதற்கட்டமாக கொல்லப்படவுள்ளன. யானைகளைக் கொல்லுதல் உணவு வழங்குவது மற்றும் யானைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதை நோக்கமாக உடையது. 55,000 யானைகள் வசிக்கக்கூடிய பூங்காவில் 84,000-த்துக்கும் அதிகமான யானைகள் உள்ளன.
11. 2024இல் 55ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (IFFI) நடத்துகிற மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கோவா
ஈ. மகாராஷ்டிரா
- இந்தியாவின் 55ஆவது சர்வதேச திரைப்பட விழாவானது (IFFI) 2024 நவம்பர்.20-28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக, ‘சிறந்த அறிமுக இந்தியத் திரைப்படப் பிரிவு’ என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தப் பிரிவில் ஐந்து அறிமுக திரைப்படங்கள் வரை இடம்பெறும்; புதிய திறமையாளர்களுக்கு அவர்களின் படைப்புகளை வெளிப்படுத்த இதன்மூலம் ஒரு தளம் கிடைக்கும். IFFIஇன் பாரம்பரிய நடத்துநரான கோவா, உலகெங்கிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரைத்துறை ஆர்வலர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
12. அண்மையில், “சர்வதேச WASH மாநாடு – 2024”ஐ ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?
அ. வேளாண் அமைச்சகம்
ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
இ. ஜல் சக்தி அமைச்சகம்
ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
- ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச WASH மாநாடு -2024 ஆனது செப்.17-21 வரை புது தில்லியில் நடைபெற்றது. தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமமான மற்றும் திறன்மிக்க நீராதார பயன்பாட்டிற்கான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது.” Sustaining Rural Water Supply :: கிராமப்புற நீர் வழங்கலைத் தக்கவைத்தல்” என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். உலகளாவிய நீர், தூய்மை மற்றும் சுகாதாரம் (WAter, Sanitation, and Hygiene –WASH) குறித்த சவால்களை நிவர்த்தி செய்வதில் இது கவனம் செலுத்தும்.
- அறிவைப் பகிர்வதற்கும், புதுமைகளைக் காட்சிப்படுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகளைக் காட்சிப்படுத்துவதற்கும் இது ஒரு தளமாகச் செயல்படுகிறது. இந்த நிகழ்வு வளங்குன்றா வளர்ச்சி இலக்கு – 6 (SDG-6)ஐ அடைவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
1. What is the main objective of the Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA)?
A. To provide health insurance to farmers
B. To ensure remunerative prices to farmers for their produce
C. To offer free education to farmers children
D. To provide free electricity to agricultural fields
- The Union Cabinet recently extended the Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan (PM-AASHA) price support scheme in agriculture until 2025-26. PM-AASHA, or Pradhan Mantri Annadata Aay SanraksHan Abhiyan, ensures fair prices for farmers’ produce. The scheme has three components, and states can choose which to implement. Under the Price Support Scheme (PSS), central agencies like NAFED and FCI will procure pulses, oilseeds, and copra with state support. The Central Government will cover procurement costs and any losses as per norms.
2. Recently, who has become the first woman fighter pilot to join the Indian Air Force’s elite 18 ‘Flying Bullets’ squadron?
A. Avni Chaturvedi
B. Mohana Singh
C. Bhawna Kanth
D. Preeti Chauhan
- Squadron Leader Mohana Singh became the first woman fighter pilot in the Indian Air Force’s elite 18 ‘Flying Bullets’ squadron, flying the indigenously made LCA Tejas fighter jet. She participated in the ‘Tarang Shakti’ exercise in Jodhpur, where she instructed the vice chiefs of the Army and Navy on the LCA Tejas.
3. Recently, who has been appointed as the new director general of the Narcotics Control Bureau?
A. Prakash Tomar
B. Nishant Sharma
C. Anurag Garg
D. Vikram Chaudhary
- Anurag Garg, a 1993 batch IPS officer from the Himachal Pradesh cadre, has been appointed as the new Director General of the Narcotics Control Bureau (NCB). He is currently serving as Additional DG in the Border Security Force (BSF). The Appointments Committee of the Cabinet (ACC) approved his appointment on deputation until May 23, 2026, or until further orders. The NCB is India’s federal anti-narcotics agency with offices across the country.
4. Which ministry has been appointed as the nodal ministry for “Bio-RIDE Scheme”?
A. Ministry of Science and Technology
B. Ministry of Environment, Forest and Climate Change
C. Ministry of Agriculture
D. Ministry of Urban Development
- The Union Cabinet approved the Biotechnology Research Innovation and Entrepreneurship Development (Bio-RIDE) Scheme. It aims to leverage bio-innovation to address challenges in healthcare, agriculture, and environmental sustainability. The scheme is managed by the Department of Biotechnology, Ministry of Science & Technology. It seeks to make India a global leader in biomanufacturing and achieve a US$300 billion Bioeconomy by 2030.
- Bio-RIDE has 3 components: Biotechnology R&D, Industrial and Entrepreneurship Development, and a new Biomanufacturing and Biofoundry component for promoting a Circular Bioeconomy. The scheme has a funding of Rs. 9,197 crores for 2021-26.
5. Which organization recently published the report named ‘State of the Rhino 2024’ report?
A. World Bank
B. International Rhino Foundation (IRF)
C. UNEP
D. WWF
- International Rhino Foundation recently published the report named ‘State of the Rhino 2024’ report. It highlights positive trends for Greater One-Horned Rhinos. Their population has increased by 20% in the last decade, now exceeding 4,000. They are found in the Indo-Nepal Terai, northern West Bengal, and Assam. India has 3,262 Greater One-Horned Rhinos (2021), mostly in Assam. Over 90% of them are in Kaziranga National Park.
6. India hosts the second edition of the ‘Global Food Regulators Summit’ in which city?
A. Lucknow
B. New Delhi
C. Pune
D. Chennai
- India hosts the second Global Food Regulators Summit from September 19-21, 2024, in New Delhi. It is organized by FSSAI under the Ministry of Health and Family Welfare. Delegates from over 70 countries are expected, with 5,000 attending in person and 1.5 lakh joining virtually. The summit aims to enhance global collaboration on food safety, risk assessment, and regulatory strategies. FSSAI will launch new initiatives like the Food Import Rejection Alert Portal, Food Import Clearance System 2.0, and update the State Food Safety Index 2024.
7. Recently, who has been appointed as the new head coach of the Indian senior women’s football team?
A. Jaspreet Singh
B. Santosh Kashyap
C. Raghav Kumar
D. Ayush Sinha
- Santosh Kashyap has been appointed as the head coach of the Indian senior women’s football team by the All-India Football Federation (AIFF). Priya PV is the assistant coach, and Raghuvir Pravin Khanolkar is the goalkeeper coach. Kashyap’s first task will be the SAFF Women’s Championships in Kathmandu, Nepal, from October 17 to 30. A 29-member squad will train in Goa starting from September 20 to prepare for the championships.
8. Recently, Hyderabad Liberation Day is celebrated on which day?
A. 17 September
B. 18 September
C. 19 September
D. 20 September
- Hyderabad Liberation Day is celebrated on September 17th. It commemorates the day in 1948 when the princely state of Hyderabad was incorporated into the Indian Union, ending the rule of the Nizam. The day honors the martyrs of the Hyderabad Liberation Movement and the sacrifices made by freedom fighters to liberate the region from the Nizam’s rule. It also helps to instill a sense of patriotism in the younger generation.
9. Recently, who has been appointed as ambassador of India to Algeria?
A. Swati Vijay Kulkarni
B. Abhay Thakur
C. Sita Ram Meena
D. Vinay Mohan Kwatra
- Swati Vijay Kulkarni has been appointed as India’s next Ambassador to Algeria, as announced by the Ministry of External Affairs (MEA). Kulkarni, a 1995 batch Indian Foreign Service Officer, is currently an Additional Secretary in the MEA. She will assume her new role in Algeria soon. Diplomatic relations between India and Algeria began in July 1962 and have been friendly, with both nations supporting each other on various issues. High-level visits and the Joint Commission Mechanism (JCM), established in 1981, facilitate bilateral cooperation between the countries.
10. Recently, which country has announced plans to cull 200 elephants due to severe drought?
A. Thailand
B. Indonesia
C. Sri Lanka
D. Zimbabwe
- Zimbabwe plans to cull 200 elephants to help feed communities facing severe hunger due to the worst drought in 40 years. The El Niño-induced drought affected 68 million people in southern Africa, causing widespread food shortages. The cull, the first since 1988, will occur in Hwange, Mbire, Tsholotsho, and Chiredzi districts, and follows Namibia’s recent cull of 83 elephants. The culling aims to provide food and reduce the elephant population, which exceeds the parks’ capacity of 55,000. Zimbabwe has over 84,000 elephants.
11. Which state is the host of the 55th International Film Festival of India (IFFI) in 2024?
A. Tamil Nadu
B. Kerala
C. Goa
D. Maharashtra
- The 55th International Film Festival of India (IFFI) will be held in Goa from November 20th to 28th, 2024. A new section called the ‘Best Debut Indian Film Section’ will be introduced to support young filmmakers. This category will feature up to five debut feature films, giving new talent a platform to showcase their work. Goa, a traditional host for IFFI, continues to attract filmmakers, actors, and cinema lovers from across the globe.
12. Which ministry recently organized the “International WASH Conference 2024”?
A. Ministry of Agriculture
B. Ministry of Environment, Forest & Climate Change
C. Ministry of Jal Shakti
D. Ministry of New and Renewable Energy
- The International WASH Conference 2024, organized by the Department of Drinking Water and Sanitation, Ministry of Jal Shakti, held from September 17-21 in New Delhi. It aims to promote dialogue and collaboration for equitable and efficient water resource use for current and future generations. The conference theme is ‘Sustaining Rural Water Supply’ and will focus on addressing global water, sanitation, and hygiene (WASH) challenges. It serves as a platform for sharing knowledge, showcasing innovations, and best practices. The event has a special focus on achieving Sustainable Development Goal 6 (SDG 6).