TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 23rd July 2024

1. பொதுச்சேவை மையங்களுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நிதி அமைச்சகம்

ஆ. பாதுகாப்பு அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • பொதுச்சேவை மையங்கள் சிறப்ப நோக்கு ஊர்தி (CSC SPV) அதன் 15ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. நிறுவனங்கள் சட்டம், 1956இன்கீழ் நடுவண் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) தொடங்கப்பட்ட CSC SPV, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான CSC திட்டத்தை மேற்பார்வை செய்கிறது. CSCகள் கிராமப்புற குடிமக்களுக்கு அரசு, தனியார் மற்றும் சமூகத்துறை சேவைகளை வழங்குவதற்கான அணுகல் மையங்களாக செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் டிஜிட்டல் & நிதி சேர்த்தலை இவை மேம்படுத்துகின்றன.

2. U-WIN இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. COVID-19 பாதிப்புகளைக் கண்காணிப்பது

ஆ. வழமையான நோய்த்தடுப்பு மருந்துகளின் மின்னணு பதிவேட்டைப் பராமரிப்பது

இ. சுகாதார நியமனங்களை நிர்வகிப்பது

ஈ. தொலைமருத்துவச் சேவைகளை எளிதாக்குவது

  • ஆகஸ்ட்.15 அன்று தொடங்கப்படவுள்ள U-WIN, தடுப்பூசி பதிவுகளை எண்மமயமாக்குவதன்மூலம் இந்தியாவில் தாய் -சேய் சுகாதாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும். இந்த முறையானது ASHA மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் கைமுறை செயல்பாட்டுக்கு மாற்றாக இருக்கும். Co-WIN அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், U-WIN வழமையான நோய்த்தடுப்பு மருந்துகளின் மின்னணுப் பதிவேட்டைப் பராமரிக்கிறது. தற்போது மேற்கு வங்க மாநிலம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இம்முறையானது, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 0 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி நிகழ்வுகளை பதிவுசெய்கிறது.

3. அண்மையில், இந்தியா முழுவதும் மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தி நிறுவல்களை அமைப்பதற்காக, $240.5 மில்லியன் அளவிலான கடனுக்கு ஒப்புதல் அளித்த நிறுவனம் எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டு செலவாணி நிதியம்

ஈ. ஐரோப்பிய முதலீட்டு வங்கி

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அணுகலை மேம்படுத்தும் வகையில், இந்தியா முழுவதும் மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தி நிறுவல்களை மேம்படுத்துவதற்காக $240.5 மில்லியன் அளவிலான கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் தூய தொழில்நுட்ப நிதி மற்றும் சாதாரண மூலதன வளங்களின் நிதியுடன், பல்தவணை நிதி வசதியின் (MFF) கீழ் சூரிய மேற்கூரை முதலீட்டுத் திட்டம் ஆதரிக்கப்படுகிறது. பாரத வங்கி (SBI) மற்றும் NABARD வங்கிமூலம் கடன்கள் விநியோகிக்கப்படும். இந்தியாவின் தற்போதைய சூரிய மேற் கூரை நிறுவல் திறன் 11.08 கிகாவாட் (GW) ஆகும்.

4. அண்மையில், ‘உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை – 2024’ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNDP

ஆ. UNEP

இ. IMF

ஈ. UNESCO

  • UNESCOஇன் ‘உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை-2024’ கல்வியில் தட்பவெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘கல்வி-2030 இன்சியோன் பேரரறிவிப்பு மற்றும் செயலுக்கான கட்டமைப்பு’மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இது, SDG-4ஐ (தரமான கல்வி) கண்காணிக்கிறது.
  • இவ்வறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்: கடந்த 20 ஆண்டுகளில், தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணத்தால் 75% பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; இதன் காரணமாக 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், ஆரம்பகால மழைப்பொழிவு சொல்லறிவு, கணிதம் மற்றும் அறிவாற்றல் சாரா திறன்களை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

5. அண்மையில் குழந்தைகளில், ‘சண்டிபுரா வைரஸ் தொற்று’ பாதிப்புகளைப் பதிவுசெய்த மாநிலம் எது?

அ. ஒடிஸா

. குஜராத்

இ. ஹரியானா

ஈ. பஞ்சாப்

  • சமீபத்தில், குஜராத் மாநில அரசாங்கம், ஜூலை.10 முதல், சண்டிபுரா வைரஸ் (CHPV) தொற்றினால் ஆறு குழந்தைகள் இறந்ததாக அறிவித்தது. Rhabdoviridae குடும்பத்தின் ஒருபகுதியான CHPV, ஏடிஸ் ஈஜிப்டி உட்பட இரத்தத்தை உணவாக உட்கொள்ளும் கொசுக்களால் பரவுகிறது. பூச்சிகளின் உமிழ்நீர் சுரப்பிகளில் வசிக்கும் இந்த வைரஸ், மனிதர்களையும் வீட்டு விலங்குகளையும் பாதிக்கிறது. விரைவாக மூளையழற்சிக்கு வழிவகுக்கும் இது மூளையின் செயலில் உள்ள திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கிறது.

6. அண்மையில், 9ஆவது மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையை நடத்திய நாடு எது?

அ. மியான்மர்

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. இலங்கை

  • 9ஆவது மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பை போட்டிகள் 2024 ஜூலை.19ஆம் தேதி, இலங்கையின் தம்புல்லாவில் தொடங்குகிறது. முதல் போட்டியாக நேபாளம் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. ஜூலை.28 அன்று T20 வடிவத்தில் நடக்கும் இறுதிப்போட்டி உட்பட அனைத்து போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு மைதானத்தில் நடைபெறும். ICC உடன் இணைந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) இந்தப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது ACC ஆனது BCCI பொதுச்செயலர் ஜெய் ஷா தலைமையில் உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா, 2022இல் இக்கோப்பையை வென்றது.

7. சமீபத்தில், உலக விண்வெளி மாநாட்டில் புகழ்பெற்ற அமைப்பான விண்வெளி ஆராய்ச்சிக்குழுவின் (COSPAR) கௌரவத்தைப் பெற்ற இரண்டு இந்திய விண்வெளி அறிவியலாளர்கள் யார் ?

அ. பிரகலாத் சந்திர அகர்வால் மற்றும் அனில் பரத்வாஜ்

ஆ. அஜய் குமார் சூத் மற்றும் பவன் குமார்

இ. லலிதா ஆபிரகாம் மற்றும் இராஜீவ் கௌபா

ஈ. அஸ்வின் வாசவடா மற்றும் ஷர்மிளா பட்டாச்சார்யா

  • இந்திய விண்வெளி அறிவியலாளர்களான பிரகலாத் சந்திர அகர்வால் மற்றும் அனில் பரத்வாஜ் ஆகியோர் தென் கொரியாவின் பூசானில் நடந்த 45ஆவது அறிவியல் மாநாட்டின்போது COSPARஇன் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றனர். TIFRஇலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியரான பிரகலாத் சந்திர அகர்வால், X-கதிர் வானியல் மற்றும் AstroSatக்கான பங்களிப்புகளுக்காக ஹாரி மாஸ்ஸி விருதைப்பெற்றார். 2017ஆம் ஆண்டு முதல் PRL இயக்குநராக உள்ள அனில் பரத்வாஜ், புவி விண்வெளி அறிவியலுக்கான தனது பணிக்காகவும், ISROஇன் பணிகளில் முக்கிய பங்கு வகித்ததற்காகவும் விக்ரம் சாராபாய் பதக்கத்தை பெற்றார்.

8. அண்மையில், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில், ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலம்’ பிரிவின்கீழ் முதலிடத்தைப் பெற்ற மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. பீகார்

  • COVID-19 காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வீதியோர வியாபாரிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் மத்திய பிரதேசம், ‘சிறந்த செயல்திறன்கொண்ட மாநிலம்’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ‘புதுமை மற்றும் சிறந்த நடைமுறைகள் விருது’ பிரிவில் அஸ்ஸாம் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தில்லி மாநகராட்சி கடன் செயல்திறனில் முன்னணியில் உள்ளது; அதைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. DAY-NULM SPARK பிரிவில் கேரளா முதலிடத்தைப் பெற்றது; உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. PM SVANidhi திட்டமானது பெறத்தகு கடன்களை வழங்குவதோடு டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் ஊக்குவிக்கிறது.

9. ‘Phlogacanthus Sudhansusekharii’ என்றால் என்ன?

அ. மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனம்

ஆ. வடகிழக்கிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தாவர இனம்

இ. ஒரு பழைமையான நீர்ப்பாசன நுட்பம்

ஈ. மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மீனினம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தின் இட்டாநகர் வனவிலங்கு சரணாலயத்தில், ‘Phlogacanthus Sudhansusekharii’ என்றவொரு புதிய தாவர இனத்தை இந்திய தாவரவியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Acanthaceae குடும்பம் மற்றும் Phlogacanthus இனத்தின் ஒருபகுதியான இவ்வினத்திற்கு, Dr சுதன்சு சேகர்தாஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரிடல் தாவர ஆராய்ச்சிக்கான அவரது பங்களிப்புகளை கௌரவிக்கிறது.

10. NITI ஆயோகின் அறிக்கையின்படி, எந்த ஆண்டுக்குள் மின்னணு உற்பத்தியில் $500 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?

அ. 2025

ஆ. 2027

இ. 2030

ஈ. 2032

  • 2030ஆம் ஆண்டிற்குள் மின்னணு உற்பத்தியில் $500 பில்லியன் டாலர்களை எட்டுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. முடிவுற்ற பொருட்களிலிருந்து $350 பில்லியன் டாலர்களும் உதிரிபாகங்கள்மூலம் $150 பில்லியன் டாலர்களும் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணைத்தலைவர் சுமன் பெரியால் வெளியிடப்பட்ட NITI ஆயோக் அறிக்கை, இந்தத் துறையின் வளர்ச்சி மற்றும் சவால்களை பகுப்பாய்வு செய்கிறது.
  • கடந்த 2017இல் $48 பில்லியனிலிருந்த இத்துறையின் மதிப்பு 2023இல் $101 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலும் திறன்பேசி உற்பத்தியே காரணமாக உள்ளது. உலகளாவிய மின்னணுவியல் உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்குத் தேவையான முன்னெடுப்புகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.

11. கீழ்க்காணும் எந்த விண்வெளி நிறுவனத்தால் ‘கையா’ என்ற விண்கலம் ஏவப்பட்டது?

அ. CNSA

ஆ. NASA

இ. ESA

ஈ. ISRO

  • 2013 டிசம்பரில் ஐரோப்பிய விண்வெளி முகமையால் (ESA) ஏவப்பட்ட கையா விண்கலம், இரண்டாவது சூரியன்-புவி லாக்ரேஞ்ச் புள்ளியில் (L2) இருந்து பால்வீதியின் ஒரு பில்லியன் விண்மீன்களை வரைபடமாக்குகிறது. இது விண்மீன்களை ஆண்டுக்கு பதினான்கு முறை கண்காணித்து, அவற்றின் நிலைகள், தூரங்கள், இயக்கங்கள் மற்றும் பிரகாசம் ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது. புதிய வான்பொருட்களைக் கண்டுபிடிப்பதையும், தொலைதூர துடிப்பண்டங்களை ஆராய்வதையும், ஐன்ஸ்டீனின் பொதுசார்பியல் கோட்பாட்டைச் சோதித்து, நமது பால்வெளியின் துல்லியமான முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குவதையும் ‘கையா’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. ‘உள்ளாட்சித் தணிக்கைக்கான பன்னாட்டு மையம் (iCAL)’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?

அ. இந்தூர், மத்திய பிரதேசம்

ஆ. இராஜ்கோட், குஜராத்

இ. ஜெய்ப்பூர், இராஜஸ்தான்

ஈ. வாரணாசி, உத்தர பிரதேசம்

  • உள்ளாட்சித் தணிக்கைக்கான பன்னாட்டு மையம் (iCAL) குஜராத் மாநிலத்தின் இராஜ்கோட்டில் 2024 ஜூலை.18 அன்று திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் மையமான இது, உள்ளூர் நிர்வாகத்தை தணிக்கை செய்வதற்கான உலகளாவிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கான கூட்டுத்தளமாக செயல்படுவதோடு, உள்ளாட்சி தணிக்கையாளர்களின் தன்னிச்சை செயல்பாட்டை மேம்படுத்தி, அறிவு மையமாக செயல்படுகிறது. iCAL இந்தியாவின் 2.5 லட்சம் பஞ்சாயத்துகள் மற்றும் 8,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்தியில் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்வுகாணும் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ‘பிக்மி’ எண்.

அனைத்து கர்ப்பிணிகளும், பேறுகாலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான, ‘பிக்மி’ இணைய தளத்தில் பதிவுசெய்தல் அவசியம். இவ்வாறு பதிவுசெய்பவர்களுக்கு, ‘RCH ID’ என்ற தாய்சேய் நல அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த பிக்மி பதிவு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம அல்லது நகர சுகாதார செவிலியர் வாயிலாக பதிவுசெய்யப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, கர்ப்ப காலத்தை, கர்ப்பிணிகள் தாங்களாகவே, இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

`18,000 பெறலாம்: அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு, முதல் தவணையாக கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் `6,000; இரண்டாம் தவணையாக குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் `6,000; மூன்றாம் தவணையாக குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் `2,000 வழங்கப்படும்.

மேலும், கர்ப்பகாலத்தில் `2,000 மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகம் என `18,000 முதல் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும். இத்தொகை, ஆதாருடன் இணைந்த வங்கி சேமிப்புக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்.

1. Common Services Centres is an initiative of which ministry?

A. Ministry of Finance

B. Ministry of Defence

C. Ministry of Electronics and Information Technology

D. Ministry of Urban Development

  • The Common Services Centres Special Purpose Vehicle (CSC SPV) celebrated its 15th anniversary. Incorporated under the Companies Act, 1956 by the Ministry of Electronics and Information Technology (MeitY), CSC SPV oversees the CSC Scheme, part of the Digital India Programme. CSCs serve as access points for delivering government, private, and social sector services to rural citizens, promoting digital and financial inclusion across India.

2. What is the primary aim of the U-WIN portal?

A. To track COVID-19 cases

B. To maintain an electronic registry of routine immunizations

C. To manage healthcare appointments

D. To facilitate telemedicine services

  • U-WIN, launching on August 15, will transform maternal and child healthcare in India by digitizing vaccination records, replacing the manual system used by ASHA and other healthcare workers. Replicating the Co-WIN system, U-WIN maintains an electronic registry of routine immunizations. Currently in pilot mode in all states and Union Territories except West Bengal, it records vaccination events for pregnant women and children aged 0-5 under the Universal Immunization Programme (UIP).

3. Recently, which institution has approved $240.5 million in loans to advance rooftop solar system installations across India?

A. Asian Development Bank

B. World Bank

C. International Monetary Fund

D. European Investment Bank

  • The Asian Development Bank (ADB) has approved $240.5 million in loans to advance rooftop solar system installations across India, enhancing renewable energy access.
  • The financing supports the Solar Rooftop Investment Programme under the Multi-tranche Financing Facility (MFF), with funds from ADB’s Clean Technology Fund and Ordinary Capital Resources. Loans will be distributed through the State Bank of India and NABARD. As of now, India’s rooftop solar capacity is 11.08 GW.

4. Which organization recently published the ‘Global Education Monitoring Report 2024’?

A. UNDP

B. UNEP

C. IMF

D. UNESCO

  • UNESCO’s Global Education Monitoring (GEM) Report 2024 highlights the impact of climate change on education. Mandated by the ‘Education 2030 Incheon Declaration and Framework for Action’, it monitors SDG 4 (Quality Education). Key findings: Over 20 years, schools closed during 75% of extreme weather events, affecting over 5 million people. In India, early-life rainfall shocks impaired vocabulary, math, and non-cognitive skills.

5. Which state recently reported the cases of ‘Chandipura virus infection’ in children?

A. Odisha

B. Gujarat

C. Haryana

D. Punjab

  • Recently, the Gujarat government reported six children dying from suspected Chandipura virus (CHPV) infection since July 10. CHPV, part of the Rhabdoviridae family, is transmitted by sandflies and mosquitoes, including Aedes aegypti. The virus, residing in the insects’ salivary glands, can infect humans and domestic animals through bites. It can quickly progress to encephalitis, causing inflammation of the brain’s active tissues and potentially affecting organs like the kidneys and liver.

6. Recently, which country hosted 9th Women’s Cricket Asia Cup?

A. Myanmar

B. Australia

C. France

D. Sri Lanka

  • The 9th Women’s Cricket Asia Cup begins on July 19, 2024, in Dambulla, Sri Lanka, with Nepal facing the UAE. Held in the T-20 format, all matches, including the final on July 28, will be at Rangiri Dambulla International Stadium. Organized by the Asian Cricket Council (ACC), affiliated with the ICC, the ACC is led by BCCI General Secretary Jay Shah. India, the defending champion, won the 2022 edition.

7. Which two Indian space scientists received the honour at the Global Space Conference from the prestigious organization Committee on Space Research (COSPAR)?

A. Prahlad Chandra Agrawal and Anil Bhardwaj

B. Ajay Kumar Sood and Pawan Kumar

C. Lalitha Abraham and Rajiv Gauba

D. Ashwin Vasavada and Sharmila Bhattacharya

  • Indian space scientists Prahlad Chandra Agrawal and Anil Bhardwaj received prestigious awards from COSPAR during its 45th scientific assembly in Busan, South Korea. Agrawal, a retired professor from TIFR, earned the Harrie Massey Award for contributions to X-ray astronomy and leading AstroSat. Bhardwaj, PRL Director since 2017, won the Vikram Sarabhai Medal for his work in planetary space sciences and key roles in ISRO’s missions.

8. Recently, which state has secured the first place under the ‘Best Performing State’ category in the Prime Minister SVANidhi scheme?

A. Madhya Pradesh

B. Odisha

C. Jharkhand

D. Bihar

  • Madhya Pradesh topped the ‘Best Performing State’ category in the Prime Minister SVANidhi scheme, aimed at supporting street vendors affected by COVID-19. Assam was second in the ‘Innovation and Best Practices Award’ category. In urban local bodies, Delhi’s Municipal Corporation led in loan performance, followed by Bengaluru and Ahmedabad. Kerala secured first place in the DAY-NULM SPARK category, with Uttar Pradesh and Rajasthan also recognized. The PM SVANidhi scheme provides affordable loans and promotes digital transactions.

9. What is ‘Phlogacanthus Sudhansusekharii‘?

A. A new frog species discovered in Maharashtra

B. Newly discovered plant species from northeast India

C. An ancient irrigation technique

D. Newly discovered fish species in Western Ghats

  • Researchers from the Botanical Survey of India discovered a new plant species, Phlogacanthus sudhansusekharii, in Itanagar Wildlife Sanctuary, Arunachal Pradesh. This species, part of the Acanthaceae family and Phlogacanthus genus, honors Dr. Sudhansu Sekhar Dash for his contributions to plant research.

10. According to NITI Aayog report, India has set a target to achieve 500 billion US dollar in electronics manufacturing in value terms by which year?

A. 2025

B. 2027

C. 2030

D. 2032

  • India aims to achieve $500 billion in electronics manufacturing by 2030, targeting $350 billion from finished goods and $150 billion from components. The NITI Aayog report, launched by Vice Chairman Suman Bery, analyzes the sector’s growth and challenges, highlighting a rise from $48 billion in 2017 to $101 billion in 2023, largely due to mobile phone manufacturing. The report outlines interventions needed for India to become a global electronics manufacturing hub.

11. Gaia Spacecraft was launched by which space agency?

A. CNSA

B. NASA

C. ESA

D. ISRO

  • The Gaia spacecraft, launched by the European Space Agency (ESA) in December 2013, is mapping over a billion stars in the Milky Way from the second Sun-Earth Lagrange point (L2). It monitors stars 14 times a year, charting their positions, distances, movements, and brightness. Gaia aims to discover new celestial objects, study distant quasars, and test Einstein’s General Theory of Relativity, creating a precise 3D map of our galaxy.

12. Recently, where was the ‘International Centre for Audit of Local Governance (iCAL)’ inaugurated?

A. Indore, Madhya Pradesh

B. Rajkot, Gujarat

C. Jaipur, Rajasthan

D. Varanasi, Uttar Pradesh

  • The International Centre for Audit of Local Governance (iCAL) was inaugurated in Rajkot, Gujarat, on 18th July 2024. As India’s first such center, iCAL aims to set global standards for auditing local governance. It serves as a collaborative platform for policymakers and auditors, enhancing local government auditors’ independence and acting as a knowledge center. iCAL addresses governance issues and promotes best practices among India’s 2.5 lakh panchayats and 8,000 Urban Local Bodies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!