TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 23rd August 2024

1. சிமிலிபால் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. குஜராத்

இ. ஒடிசா

ஈ. மகாராஷ்டிரா

  • ஒடிசா மாநிலத்தில் உள்ள சிமிலிபால் புலிகள் காப்பகமானது தேசியப்பூங்காவில் மூங்கில் புல்லை வளர்க்கவுள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2,750 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள இது, ஜோராண்டா மற்றும் பரேகிபானிபோன்ற அருவிகளைக் கொண்டுள்ளது. இது 1973இல் புலிகள் காப்பகமாகவும், 1979இல் வனவிலங்கு சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த 1980இல், 303 சதுர கிமீ பரப்பளவுடன் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்ட இது, 2009ஆம் ஆண்டில், UNESCO உயிர்க்கோளக் காப்பகப் பட்டியலில் இணைந்தது.

2. சந்திர பாறைக்குழம்பு பெருங்கடல் (Lunar Magma Ocean) என்றால் என்ன?

அ. நிலவில் காணப்படும் ஒரு பனியடுக்கு

ஆ. நிலவின் மேற்பரப்பு உருகியபோது உருவானதாகக் கருதப்படும் ஓர் ஆரம்ப நிலை

இ. நிலவினைச் சுற்றி காணப்படும் ஒரு புயல் காற்று

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது சந்திர பாறைக்குழம்பு பெருங்கடல் கோட்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ளது. இது நிலவின் ஆரம்பகால உருவாக்கத்தை விளக்குகிறது. சந்திரயான்-3இன் பிரக்யான் ரோவர் சந்திரனின் தென் துருவத்தில் ஃபெரோன் அனர்த்தோசைட் பாறைகளைக் கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்பு LMO கோட்பாட்டை ஆதரிக்கிறது; ஏனெனில் இந்தப் பாறைகள் பண்டைய பாறைக்குழம்பு கடலின் எச்சங்கள் என்று நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பல்லோ மற்றும் லூனா பயணங்களின் முந்தைய கூர்நோக்குகளுடன் ஒத்துப்போகிறது; LMO இருப்பதை உறுதிப்படுத்துகிறது மற்றும் நிலவின் உருவாக்கம்பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

3. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (PMEGP) நிர்வகிக்கிற அமைச்சகம் எது?

அ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. விவசாய அமைச்சகம்

ஈ. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்

  • KVIC, அஞ்சல் துறை ஆகியவை இந்தியா முழுவதும் PMEGPஐ செயல்படுத்துவதை மேம்படுத்த ஒத்துழைக்கின்றன. PMEGP என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு மத்திய திட்டமாகும். புதிய சுயதொழில் முயற்சிகளை ஆதரிப்பதன்மூலம் கிராமப்புற & நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் வேலையிலா இளையோர்க்கு உள்நாட்டில் வேலைதேட உதவுகிறது; கிராமத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைக் குறைக்கிறது. இது தொழிலாளர்களின் ஊதியம்பெறும் திறனை அதிகரிப்பது மற்றும் கிராமப்புற & நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. நெல் சாகுபடி குறித்து மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. மகாராஷ்டிரா

  • கர்நாடக மாநிலத்தின் சுல்லியாவில் உள்ள ஒரு கன்னடவழி பள்ளி, அதன் கல்வி அணுகுமுறையின் ஒருபகுதியாக அதன் வளாகத்தில் ஒரு நெல் வயலைப் பயன்படுத்துகிறது. இந்தத் திட்டம் மாணாக்கர்களுக்கு உணவு சாகுபடியில் அனுபவத்தை அளிக்கிறது. 1973 முதல் இயங்கி வரும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்தப்பள்ளி, இந்த முயற்சிக்காக 3,500 சமீ மைதானத்தை அர்ப்பணித்துள்ளது. விவசாயத்தில் மாணவர்களுக்கு நடைமுறைக் கற்றலை வழங்குவதே இதன் குறிக்கோளாகும்.

5. இந்திய பயண விருதுகளில், ‘சிறந்த விமான நிலைய’ பட்டம் வழங்கப்பெற்ற விமான நிலையம் எது?

அ. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம்

ஆ. ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம்

இ. இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ஈ. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

  • ஹைதராபாத்தில் உள்ள இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (RGIA) தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா டிராவல் விருதுகளில் சிறந்த விமான நிலையமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இந்த விருது RGIAஇன் விதிவிலக்கான பயணிகள் அனுபவத்தை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது மற்றும் விமானத் துறையில் அதன் நற்பெயரை உயர்த்துகிறது. RGIA ஆனது, ‘இந்தியா மற்றும் தெற்காசியா-2024’இல் சிறந்த வானூர்தி நிலைய ஊழியர்களுக்கான ‘Skytrax’ விருதையும் வென்றது; இது ஒரு சிறந்த விமான நிலையமாக அதன் நிலையை வலுப்படுத்தியது.

6. அண்மையில், புதிய மத்திய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கோவிந்த் மோகன்

ஆ. சுசீல் குமார் திரிவேதி

இ. ஜிதேந்திர குமார்

ஈ. ஆதித்ய குமார் ஆனந்த்

  • மூத்த இஆப அதிகாரி கோவிந்த் மோகன் 2024 ஆக.22 அன்று அஜை குமார் பல்லாவுக்கு அடுத்து மத்திய உள்துறை செயலாளராக ஆனார். இதற்கு முன், கோவிந்த் மோகன், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார். கேபினட் செயலாளருக்குப் பிறகு (இராஜீவ் கௌபா), இந்தியாவின் இரண்டாவது மிகவும் சக்திவாய்ந்த செயலர் பதவி உள்துறைச்செயலர் பதவியாகும். சிக்கிம் பிரிவின் 1989ஆம் ஆண்டுத் தொகுதி இஆப அதிகாரியான கோவிந்த் மோகன், BHUஇல் எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் பட்டமும், IIM ஆமதாபாத்தில் PG டிப்ளமோவும் பெற்றுள்ளார்.

7. 2024 – CEAT கிரிக்கெட் விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்’ விருது பெற்றவர் யார்?

அ. ஜஸ்பிரித் பும்ரா

ஆ. ஹர்திக் பாண்டியா

இ. ரோகித் சர்மா

ஈ. சூர்யா யாதவ்

  • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் ஷர்மா, 2023-24 சீசனில் சிறப்பாக செயல்பட்டதற்காக 26ஆவது CEAT சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றார். ரோகித் சர்மாவின் தலைமையின்கீழ், இந்தியா, 13ஆம் ICC ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டியது; அதில் அவர் உலகக்கோப்பையில் 597 ரன்கள் உட்பட சுமார் 1800 ரன்கள் எடுத்தார். விராட் கோலி, 2023-24 சீசனில் 1377 ரன்கள் குவித்து, 50 ஒருநாள் சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ‘ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்டர்’ என்ற விருதைப் பெற்றார். வீரர் மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தனது பங்களிப்பிற்காக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

8. தசரா பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. கேரளா

இ. மத்திய பிரதேசம்

ஈ. இமாச்சல பிரதேசம்

  • மைசூரு தசரா என்பது கர்நாடக மாநிலத்தின் மைசூருவில் 10 நாட்கள் நடைபெறும் ஒரு பெருந்திருவிழாவாகும்; நவராத்திரியின்போது கொண்டாடப்படுகிற இது, விஜயதசமி அன்று முடிவடைகிறது. இது துடிப்பான ஊர்வலங்கள், ஒளியேற்றப்பட்ட அரண்மனைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 1610ஆம் ஆண்டு அரசர் வாடியார்-I மூலம் தொடங்கப்பட்ட இத்திருவிழா, சாமுண்டேஸ்வரி தேவி அரக்கனை வென்றதைக் குறிக்கிறது. மைசூரு வாடியார்கள் பல நூற்றாண்டுகளாக இத்திருவிழாவின் பாரம்பரியத்தை வளப்படுத்தியுள்ளனர்.

9. ஆற்றல் திறன் பணியகத்தின்படி, நாட்டிலேயே அதிக பொது மின்சார வாகன மின்னேற்ற நிலையங்கள் உள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. கேரளா

இ. மத்திய பிரதேசம்

ஈ. மகாராஷ்டிரா

  • ஆற்றல் திறன் பணியகத்தின் (BEE) கூற்றுப்படி, கர்நாடக மாநிலம் 5,765 பொது EV மின்னேற்ற நிலையங்களுடன் இந்தியாவில் முன்னணியில் உள்ளது; அதில் 85% (4,462) பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மின் வாகனத்தை மின்னேற்றும் செய்யும் உள்கட்டமைப்பில் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம் மற்றும் தில்லியை விட கர்நாடகாவை முன்னிலைப்படுத்துகிறது.
  • எரிசக்தி அமைச்சர் KJ ஜார்ஜ், FAME திட்டம், BESCOM முதலீடுகள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைபோன்ற முன்முயற்சிகளால் ஆதரிக்கப்படும் மின்சார போக்குவரவிற்கான கர்நாடகாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் EV கொள்கையை கர்நாடக மாநிலம் அறிமுகப்படுத்தியது; மேலும் மாநிலம் முழுவதும் மாதிரி EV நகரங்களை உருவாக்க அது திட்டமிட்டுள்ளது. 2024 – மாநில பட்ஜெட் PPP வழியாக 2,500 புதிய EV மின்னேற்ற நிலையங்களையும், மின்சார நிறுவனங்களுடன் இணைந்து `35 கோடி முதலீட்டில் மேலும் 100 மின்னேற்ற நிலையங்கள் அமைப்பதற்கான திட்டத்தையும் அறிவித்தது.

10. அண்மையில், மருத்துவர்களின் பாதுகாப்பை நிர்வகிக்கும் நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தேசிய பணிக் குழுவை நிறுவ ஆணை பிறப்பித்த அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

இ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது 2024 ஆக.21 அன்று, மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பிற்காக 14 பேர்கொண்ட தேசிய பணிக்குழுவை உருவாக்கி ஓர் ஆணையை வெளியிட்டது.
  • கொல்கத்தாவில் உள்ள RG கர் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த நாடு தழுவிய போராட்டங்களை அடுத்து, 2024 ஆக.20 அன்று உச்சநீதிமன்றத்தால் இந்தப் பணிக்குழு நிறுவப்பட்டது. கேபினட் செயலர் இராஜீவ் கௌபா இந்தப் பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணிக்குழுவில் 9 பிரபல மருத்துவர்கள், உள்துறைச்செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு வாரியத்தின் தலைவர்கள் உள்ளனர். இந்தப்பணிக்குழுவிற்கான அனைத்து செலவுகளையும் மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கும்.

11. இந்தியாவில், ‘தேசிய விண்வெளி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 23 ஆகஸ்ட்

ஆ. 22 ஆகஸ்ட்

இ. 21 ஆகஸ்ட்

ஈ. 20 ஆகஸ்ட்

  • இந்தியா தனது முதல் தேசிய விண்வெளி நாளை 2024 ஆகஸ்ட்.23 அன்று கொண்டாடுகிறது. இது விண்வெளி ஆய்வில் நமது இந்தியத்தாய்த் திருநாட்டின் சாதனைகளை எடுத்தியம்புகிறது. இந்திய விண்வெளித்திட்டமானது கடந்த 1963ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தின் தும்பாவிலிருந்து ஏவப்பட்ட ஆய்வு எறிகணையின் ஏவுதலுடன் தொடங்கியது. தற்போது அது திங்களில் ஊர்திகளை தரையிறக்குவதற்கும் செவ்வாய் மற்றும் சூரியன்போன்ற வான் பொருட்களை ஆராய்வதற்கும் முன்னேறியுள்ளது. 2023 ஆகஸ்ட்.23 அன்று திங்களின் தென் துருவத்தில் சந்திரயான்-3 மிஷனிலிருந்து ‘விக்ரம்’ தரையிறங்கி வெற்றிகரமாக தரையிறங்கியதைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விண்வெளி நாள் அறிவிக்கப்பட்டது. இந்த தரையிறங்கும் தளம் பின்னர் இந்திய அரசாங்கத்தால், “சிவசக்தி புள்ளி” என்று பெயரிடப்பட்டது.

12. மேட்டுக்குறிஞ்சி (Strobilanthes sessilis) இந்தியாவின் எந்தப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்?

அ. லடாக்

ஆ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

இ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஈ. தார் பாலைவனம்

  • மேட்டுக்குறிஞ்சி (அ) டாப்லி கார்வி என்பது மேற்குத்தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும், ‘Acanthaceae’ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சியைப்போலவே ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் பூ பூக்கும். 160-க்கும் மேற்பட்ட Strobilanthes இனங்கள் இந்தியாவில் உள்ளன; அவற்றில் 72 சயாத்திரி மலைகளை பூர்வீகமாகக் கொண்டவை. ஊதா, லாவெண்டர், நீலம் ஆகிய நிறங்களில் பூக்கும் ‘மேட்டுக்குறிஞ்சி’ மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. ஒரேயொருமுறை பூத்துக்கனி கொடுக்கும் பாங்கு, நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் பார்வையாளர்களின் இடையூறு ஆகியவற்றால் இந்தத் தாவரம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது; இது அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நீலக்குறிஞ்சி IUCNஆல், ‘அச்சுறுத்தலுக்கு உள்ளான’ இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னை மாநகரத்தின் 385ஆவது நாள் கடைப்பிடிப்பு.

ஆங்கிலேயர் தங்களது கம்பெனியைத் தொடங்க கடற்கரையையொட்டிய சிறிய கிராமத்தை 1639இல் வாங்கினர். சென்னப்பட்டினம் என்னும் பெயரில் பதிவுசெய்யப்பட்டு ஆக.22ஆம் தேதி அதிகாரபூர்வமாக தங்களது கம்பெனியை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். சென்னை உருவாகக் காரணமான இந்நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் ஆக.22ஆம் தேதி சென்னை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 1688-இல் நாட்டின் முதல் நகராட்சி அந்தஸ்தை பெற்று தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கா்நாடகத்தை உள்ளடக்கிய ‘மெட்ராஸ் மாகாணம்’ உருவானது.

இந்தியா விடுதலை அடைந்தபின் தனி மாநிலமாக ‘தமிழ்நாடு’ என்றும், தலைநகரம் மெட்ராஸ் 1966இல் ‘சென்னை’ என்றும் பெயர் மாற்றப்பட்டது. கடந்த 2004 ஆக.22 முதல் சென்னை நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

2. கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை.

‘கலைஞர்’ கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்வளர்ச்சித்துறையால் தமிழ்ச்சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு `14.42 கோடி நூலுரிமைத்தொகை அரசால் வழங்கப்பட்டுள்ளது.

கருணாநிதி தனது 15ஆம் வயதில் “மாணவ நேசன்” என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18ஆம் வயதில் ‘பேரறிஞர்’ அண்ணா அவர்களின், “திராவிட நாடு” இதழில் ‘இளமைப்பலி’ என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தம்முடைய 20ஆம் வயதில், “திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். தமது 23ஆம் வயதில் ‘இராஜகுமாரி’ திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன்முதலில் “முரசொலி” என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942ஆம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953இல் சென்னையில் திங்கள் இதழாகத் தொடங்கி 1960ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். “நெஞ்சுக்கு நீதி” என்னும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

1. Similipal Tiger Reserve is located in which state?

A. Karnataka

B. Gujarat

C. Odisha

D. Maharashtra

  • Similipal Tiger Reserve in Odisha will grow bamboo grass in the National Park. It is located in Mayurbhanj District, Odisha. It covers 2,750 sq km and features waterfalls like Joranda and Barehipani. It was designated as a tiger reserve in 1973 and a wildlife sanctuary in 1979. In 1980, 303 sq km was proposed as a National Park, and in 2009, UNESCO added it to its Biosphere Reserves list.

2. What is the ‘Lunar Magma Ocean (LMO)’?

A. A layer of ice on the moon

B. A hypothesized early stage when the moon’s surface was molten

C. A stormy atmosphere around the moon

D. None of the above

  • India’s Chandrayaan-3 mission has revived interest in the Lunar Magma Ocean (LMO) theory, which explains the moon’s early formation. Chandrayaan-3’s Pragyan rover discovered ferroan anorthosite rocks in the lunar south pole. This discovery supports the LMO theory, as these rocks are believed to be remnants of the ancient magma ocean. The finding aligns with earlier observations from Apollo and Luna missions, confirming the existence of the LMO and providing insights into the moon’s early formation.

3. Prime Minister’s Employment Generation Programme (PMEGP) is administered by which ministry?

A. Ministry of Urban Development

B. Ministry of Labour & Employment

C. Ministry of Agriculture

D. Ministry of Micro, Small & Medium Enterprises

  • KVIC and the Department of Posts are collaborating to enhance the implementation of PMEGP across India. PMEGP is a central scheme under the Ministry of Micro, Small, and Medium Enterprises. It aims to create employment in rural and urban areas by supporting new self-employment ventures. The scheme helps traditional artisans and unemployed youth to find work locally, reducing rural-to-urban migration. It also aims to increase the wage-earning capacity of workers and boost employment growth in rural and urban areas.

4. Recently, which state has launched a unique project to educate students about the cultivation of rice?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Maharashtra

  • A Kannada Medium school in Sullia, Karnataka, is using a paddy field on its campus as part of its educational approach. This project gives students hands-on experience in food cultivation. The school, with over 500 students and operating since 1973, has dedicated a 3,500 square-meter field for this initiative. The goal is to provide students with practical learning in agriculture.

5. Recently, which airport has been awarded the best airport title at the India Travel Awards?

A. Netaji Subhash Chandra Bose International Airport

B. Jaipur International Airport

C. Rajiv Gandhi International Airport

D. Sardar Vallabhbhai Patel International Airport

  • Rajiv Gandhi International Airport (RGIA) in Hyderabad has been named the Best Airport at the India Travel Awards for the third consecutive year. This award highlights RGIA’s commitment to providing an exceptional passenger experience and boosts its reputation in the aviation industry. RGIA also won the Skytrax award for ‘Best Airport Staff in India & South Asia 2024,’ reinforcing its status as a top airport.

6. Recently, who has been appointed as the new Union Home Secretary?

A. Govind Mohan

B. Susheel Kumar Trivedi

C. Jitendra Kumar

D. Aditya Kumar Anand

  • Senior IAS officer Govind Mohan became the Union Home Secretary on August 22, 2024, succeeding Ajay Kumar Bhalla. Before this, Govind Mohan was the Secretary of the Union Ministry of Culture. The Home Secretary role is the second most powerful secretarial post in India, after the Cabinet Secretary, currently Rajiv Gauba. Govind Mohan, a 1989 batch IAS officer of the Sikkim cadre, has an electrical engineering degree from BHU and a PG Diploma from IIM Ahmedabad.

7. Who was awarded the Men’s International Cricketer of the Year at the CEAT Cricket Awards 2024?

A. Jasprit Bumrah

B. Hardik Pandya

C. Rohit Sharma

D. Surya Yadav

  • Rohit Sharma, Indian men’s cricket team captain, won the 26th CEAT International Cricketer of the Year Award for his outstanding performance in the 2023-24 season. Under Rohit’s captaincy, India reached the final of the 13th ICC Men’s ODI World Cup, where he scored around 1800 runs, including 597 in the World Cup.
  • Virat Kohli received the Best ODI Batter of the Year award, scoring 1377 runs in the 2023-24 season and surpassing Sachin Tendulkar’s record with 50 ODI centuries. Rahul Dravid was honored with the Lifetime Achievement Award for his contributions as a player and coach.

8. Dasara festival is celebrated in which state?

A. Karnataka

B. Kerala

C. Madhya Pradesh

D. Himachal Pradesh

  • Mysuru Dasara is a grand 10-day festival in Mysuru, Karnataka, celebrated during Navratri and culminating on Vijayadashami. It features vibrant processions, illuminated palaces, and cultural activities, attracting thousands of visitors. The festival began in 1610 with Raja Wadiyar I, symbolizing the victory of Goddess Chamundeshwari over a demon. The Wadiyars of Mysore have enriched the festival’s traditions over centuries, with the Mysore Palace as a central attraction.

9. According to the Bureau of Energy Efficiency, which state has the highest number of public electric vehicle charging stations in the country?

A. Karnataka

B. Kerala

C. Madhya Pradesh

D. Maharashtra

  • According to the Bureauof Energy Efficiency (BEE), Karnataka leads India with 5,765 public EV charging stations, with 85% (4,462) located in Bengaluru Urban district. This puts Karnataka ahead of Maharashtra, Uttar Pradesh, and Delhi in EV charging infrastructure.
  • Energy Minister KJ George highlighted Karnataka’s commitment to electric mobility, supported by initiatives like the FAME scheme, BESCOM investments, and public-private partnerships. Karnataka introduced India’s first EV policy in 2017 and plans to develop model EV cities statewide. The 2024 State Budget announced 2,500 new EV charging stations via PPP and ₹35 crore investment for 100 more in collaboration with electricity companies.

10. Recently, which ministry issued an order to establish the National Task Force (NTF) to formulate protocols governing the safety of doctors?

A. Ministry of Home Affairs

B. Ministry of Health and Family Welfare

C. Ministry of Law and Justice

D. Ministry of Defence

  • The Ministry of Health and Family Welfare issued an order on August 21, 2024, forming a 14-member National Task Force for the safety of medical professionals. The task force was established by the Supreme Court on August 20, 2024, after a postgraduate doctor was allegedly raped and murdered at RG Kar Medical College in Kolkata, leading to nationwide protests.
  • Cabinet Secretary Rajiv Gauba is appointed as the Chairperson. The task force includes 9 eminent doctors, the Home Secretary, Health Secretary, and leaders from the National Medical Commission and National Board of Examinations. The Health Ministry will cover all expenses for the task force.

11. Which day is observed as ‘National Space Day’ in India?

A. 23 August

B. 22 August

C. 21 August

D. 20 August

  • India celebrates its first National Space Day on 23 August 2024, highlighting the nation’s achievements in space exploration. The Indian space program began with a sounding rocket launch from Thumba, Kerala, in 1963, and has since advanced to landing rovers on the moon and exploring planets like Mars and the Sun.
  • National Space Day was announced to honor the successful landing of the Vikram lander from the Chandrayaan-3 mission on the moon’s south pole on 23 August 2023. The landing site was later named “Shiv Shakti Point” by the Indian government.

12. Mettukurinji (Strobilanthes sessilis) is endemic to which region of India?

A. Ladakh

B. Eastern Ghats

C. Western Ghats

D. Thar Desert

  • Mettukurinji, or Topli karvy, is a plant endemic to the Western Ghats and belongs to the Acanthaceae family. It flowers every seven years, similar to Neelakurinji, which blooms every 12 years. India has the highest diversity of Strobilanthes, with over 160 species, 72 of which are endemic to the Sahyadris. Mettukurinji’s flowers, in shades of purple, lavender, and blue, are a tourist attraction. The plant faces threats from monocarpy, landslides, floods, and visitor disturbance, leading to its decline. Neelakurinji is listed as a ‘threatened’ species by the IUCN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!