Tnpsc Current Affairs in Tamil & English – 21st August 2024
1. சமீபத்தில், 24*7 ONCOURTS எனப்படும், காசோலை பௌன்ஸ் வழக்குகளை கையாளுவதற்கான இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் திறக்கப்பட்ட இடம் எது?
அ. இந்தூர், மத்திய பிரதேசம்
ஆ. கொல்லம், கேரளா
இ. சென்னை, தமிழ்நாடு
ஈ. சூரத், குஜராத்
- நீதியரசர் பூஷன் இராமகிருஷ்ண கவாய், கேரள மாநிலத்தின் கொல்லத்தில், காசோலை பௌன்ஸ் வழக்குகளை கையாளுவதற்காக, இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றமான 24*7 ஆன்கோர்ட்களை திறந்து வைத்தார். இந்த டிஜிட்டல் நீதிமன்றம், வழக்கைத் தாக்கல்செய்வது முதல் தீர்ப்புகள் வரை முழுக்க முழுக்க இணையவழியிலேயே செயல்படுகிறது. 2024 செப்டம்பர் மாதம் முதல் காசோலை பௌன்ஸ் வழக்குகளை நீதிமன்றம் ஏற்கத்தொடங்கும்.
2. அண்மையில் காலஞ்சென்ற இராகேஷ் பால் என்பவருடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?
அ. இந்தியக்கடற்படை
ஆ. இந்தியக் கடலோரக் காவல்படை
இ. இந்திய விமானப்படை
ஈ. தேசிய பாதுகாப்புப் படை
- இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் இராகேஷ் பால் மாரடைப்பு காரணமாக சென்னையில் தனது 59ஆம் வயதில் காலமானார். அவர் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங்குடன் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் இருந்த அவர், 1989 ஜன.இல் கடலோரக் காவல்படையில் சேர்ந்தார்; 2023 ஜூலையில் 25ஆவது தலைமை இயக்குநராக ஆனார். முக்கிய நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ள அவர், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், குடியரசுத்தலைவர் தத்ரக்ஷக் பதக்கம் மற்றும் தத்ரக்ஷக் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
3. குவாம் தீவு அமைந்துள்ள பெருங்கடல் எது?
அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. இந்தியப் பெருங்கடல்
இ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ. ஆர்க்டிக் பெருங்கடல்
- INS சிவாலிக் சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கடல்சார் பயிற்சியான RIMPAC-2024இல் பங்கேற்ற பிறகு செயல்பாட்டுப் பேணல் பணி நிறுத்தத்திற்காக குவாமுக்கு வந்தடைந்தது. குவாம் என்பது வட பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளிலேயே மிகப்பெரியதும் தென்கோடியில் உள்ளதும் ஆகும். இது ஓர் அமெரிக்க பிரதேசமாகும். 1898 வரை ஸ்பானிய காலனியாக இருந்த இது, ஸ்பானிய-அமெரிக்கப் போருக்குப் பிறகு அமெரிக்கப் பிரதேசமாக மாறியது. குவாம் வர்த்தக காற்று மற்றும் பூமத்திய ரேகை நீரோட்டங்களுடன் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. குவாமின் தலைநகரம் ஹகட்னா ஆகும்.
4. அண்மையில், 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்த அமைச்சகம் எது?
அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஆ. கலாச்சார அமைச்சகம்
இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. தேசிய திரைப்பட விருதுகள் 1954இல் நிறுவப்பட்டது; இது அழகியல், தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் சமூகப்பொருத்தம்கொண்ட திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக, இந்தியா முழுவதும் கலாச்சார பாராட்டுதலை ஊக்குவிக்கிறது. ஆரம்பத்தில் ‘மாநில விருதுகள்’ என்று அழைக்கப்பட்ட அவை குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் தங்கப்பதக்கங்கள் மற்றும் தகுதிச்சான்றிதழ்களை உள்ளடக்கியவை.
- விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன: சிறந்த முழுநீளப்படம், முழுநீளமல்லாத சிறந்த திரைப்படம் மற்றும் திரைத்துறையில் சிறந்த எழுத்து. 1973ஆம் ஆண்டு முதல், திரைப்பட விழாக்களின் இயக்குநரகம் இந்த விருதுகளை நிர்வகித்து வருகிறது.
5. ‘இம்போர்ட்டின்-7 (IPO7)’ என்றால் என்ன?
அ. புரதம்
ஆ. செயற்கை மருந்து
இ. ஆக்கிரமிப்புக்களை
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- இம்போர்டின்-7 (IPO7) எனப்படும் ஒரு புரதத்தை ஓர் ஆய்வு அடையாளம் கண்டுள்ளது. இது பிளேவிவைரஸ் கோர் புரதத்தை கருவுக்குள் கொண்டுசெல்கிறது. பிளேவிவைரசுகள் Flaviviridae குடும்பத்தைச் சேர்ந்தவை. கோள வடிவ முதிர்ந்த நச்சுயிரிகள் 40-60 நானோமீட்டர்கள் அளவில் உள்ளன. இந்த வைரஸ்கள் ஒற்றை இழையுடன் கூடிய நேர்மறை உணர்வு RNA மரபணுவைக் கொண்டுள்ளன. பிளேவிவைரசுகள் நரம்புத்தொற்றுகள் உட்பட பிற கடும் ஏற்படுத்தலாம். இது கடுமையான உடல்நலப்பிரச்சினைகள் அல்லது மரணத்திற்குக்கூட வழிவகுக்கும்.
6. அண்மையில், நிகர சுழிய கரிம உமிழ்வு விமான நிலைய நிலையை அடைந்த முதல் இந்திய விமான நிலையம் எது?
அ. இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், தில்லி
ஆ. சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம், ஆமதாபாத்
இ. சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை
ஈ. இராஜீவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஹைதராபாத்
- தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையமானது இந்தியாவிலேயே முதன்மையாக நிகர சுழிய கரிம உமிழ்வு விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றுள்ளது. நிகர சுழிய கரியமில வாயு உமிழ்வு சமநிலையை பராமரிப்பதில் அவ்விமான நிலையத்தின் வெற்றியை இந்த நிலை-5 சான்றிதழ் அங்கீகரிக்கிறது. அந்நிலையம் ஸ்கோப்-1 மற்றும் ஸ்கோப்-2 உமிழ்வுகளில் 90% குறைத்துள்ளது மற்றும் மீதமுள்ளவற்றை ஈடுகட்டியுள்ளது. முதலில் 2030ஆம் ஆண்டிற்குள் நிகர சுழியத்தை இலக்காகக்கொண்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின் வாகனங்கள், சுழிய கழிவுத் திட்டங்கள் மற்றும் பசுமை உள்கட்டமைப்புமூலம் இலக்கை அடைந்தது. இப்போது 2050ஆம் ஆண்டுக்குள் ஸ்கோப்-3 உமிழ்வில் நிகர சுழியத்தை அடைவதை அந்நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. 2024 – பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியக்கொடியேந்திகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் யார்?
அ. கிருஷ்ணா நகர் மற்றும் அஜீத் சிங்
ஆ. மணீஷ் நர்வால் மற்றும் அவனி லெகாரா
இ. சுமித் ஆன்டில் மற்றும் பாக்யஸ்ரீ ஜாதவ்
ஈ. யோகேஷ் கதுனியா மற்றும் நிஷாத் குமார்
- 2024 ஆகஸ்ட்.28 அன்று 2024-பாரிஸ் பாராலிம்பிக் தொடக்க விழாவில் சுமித் ஆன்டில் மற்றும் பாக்யஸ்ரீ ஜாதவ் ஆகியோர் இந்தியாவிற்கான கொடியேந்தியகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17ஆவது கோடைகால பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸில் 2024 ஆக.28 முதல் செப்.08 வரை நடைபெறும். உலக சாம்பியனான சுமித் ஆன்டில் (25) 2020 – டோக்கியோ பாராலிம்பிக்கில் ஈட்டியெறிதலில் தங்கம் வென்றதோடு F64 பிரிவில் உலக சாதனையும் படைத்தார். பாக்யஸ்ரீ ஜாதவ் (39), 2024 மேயில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு மற்றும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் குண்டெறிதலில் (F34 பிரிவு) வெள்ளி வென்றார்.
8. ஆண்டுதோறும் உலக கொசு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 20 ஆகஸ்ட்
ஆ. 21 ஆகஸ்ட்
இ. 22 ஆகஸ்ட்
ஈ. 23 ஆகஸ்ட்
- கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆக.20ஆம் தேதி உலக கொசு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கொசுக்கள் மலேரியா, டெங்கு, ஜிகா மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்ற இடர்மிகு நோய்களைப் பரப்புகின்றன; இது லட்சக்கணக்கான மக்களை பாதித்து உலகளவில் இறப்புகளை ஏற்படுத்துகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Accelerating the fight against malaria for a more equitable world” என்பதாகும். இந்தக் கருப்பொருள், மலேரியா சிகிச்சை, நோய் கண்டறிதல் மற்றும் அதன் தடுப்புக்கான அணுகலை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
9. தேசிய புவி அறிவியல் விருதுகளை வழங்கும் அமைச்சகம் எது?
அ. புவி அறிவியல் அமைச்சகம்
ஆ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
இ. விவசாய அமைச்சகம்
ஈ. சுரங்க அமைச்சகம்
- புது தில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் நிகழ்வில், மதிப்புமிக்க தேசிய புவி அறிவியல் விருதுகள்-2023ஐ, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.
- தேசிய புவி அறிவியல் விருது என்பது மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால், புவி அறிவியல் துறையில் 1966ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மதிப்புமிக்க விருதாகும். 2009ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்த விருதுகள் தேசிய சுரங்க விருதுகள் என்று அழைக்கப்பட்டு வந்தன. தாதுப்பொருட்கள் கண்டுபிடிப்பு, வெட்டியெடுத்தல், சுரங்க தொழில்நுட்பம், தாதுப்பயன்பாடு, அடிப்படை/பயன்பாட்டு புவி அறிவியல்போன்ற, புவி அறிவியல்சார்ந்த பல்வேறு துறைகளில் தலை சிறந்த சாதனை படைத்த மற்றும் பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிப்பதே இந்த விருதின் நோக்கமாகும். புவி அறிவியல் துறையின் எந்தவொரு பிரிவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இந்தியக்குடிமக்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
10. ‘மியாவாக்கி முறை’ என்றால் என்ன?
அ. மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி தோட்டத்தை உருவாக்குவது
ஆ. நகர்ப்புற காடு வளர்ப்பு முறை
இ. வறண்ட பகுதிகளில் வணிக முறையிலான விவசாயத்தை ஊக்குவிப்பது
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- சத்தீஸ்கர் வனத்துறை, மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நடும் ‘வனமகோத்சவம்’ ஒன்றை நடத்தியது. மியாவாக்கி முறை, ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி என்பவரால் உருவாக்கப்பட்ட நகர்ப்புற காடு வளர்ப்பு முறையாகும். ஒரு சதுர மீட்டருக்கு 2-4 வகையான நாட்டு மரங்களை நடுவது இதில் அடங்கும். நாற்றுகள் சூரிய ஒளிக்குப் போட்டியிடுவதால், அடர்த்தியான நடவு விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உள்ளூர் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மற்றும் இயற்கையாக மனித குறுக்கீடு இல்லாமல் விளையும் பூர்வீக இனங்கள் மட்டுமே நடப்படுகின்றன. கன்றுகள் தன்னிறைவுபெற்று மூன்று ஆண்டுகளில் முழு வளர்ச்சியை அடைகின்றன. மியாவாக்கி காடுகள் 10 மடங்கு வேகமாகவும், 30 மடங்கு அடர்த்தியாகவும், 100 மடங்கு அதிக பல்லுயிர் வளத்தையும் கொண்டவையாக உள்ளன.
11. சௌர்ய சம்பிரவா 1.0 என்பதுடன் தொடர்புடைய ஆயுதப்படை எது?
அ. இந்திய இராணுவம்
ஆ. இந்தியக் கடற்படை
இ. இந்திய விமானப்படை
ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை
- தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில், ஜெனரல் உபேந்திரா திவேதி தலைமையில், சௌர்ய சம்பிரவா 1.0 என்ற முதன்மை நிகழ்வை இந்திய இராணுவம் நடத்தியது. இராணுவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் மூத்த அதிகாரிகளின் அனுபவம் மற்றும் நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்நிகழ்வு. ஜெனரல் திவிவேதி, படைவீரர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தற்போதைய தலைமை மற்றும் படைவீரர்களுக்கு இடையே கருத்துப்பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இந்நிகழ்வைக் கூறினார். இந்நிகழ்வில் நவீனமயமாக்கல் மற்றும் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் “மாற்றத்தின் தசாப்தம் – Decade of Transformation” பற்றிய விரிவான விளக்கக்காட்சி இடம்பெற்றது.
12. அண்மையில் காலமான சுந்தரராஜன் பத்மநாபன் என்பவர் கீழ்க்காணும் எந்த ஆயுதப்படையின் முன்னாள் தலைவராக இருந்தார்?
அ. இந்திய இராணுவம்
ஆ. இந்தியக் கடற்படை
இ. இந்திய விமானப்படை
ஈ. இந்தியக் கடலோரக் காவல்படை
- 20ஆவது இராணுவத்தளபதியாக பணியாற்றிய ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் (ஓய்வு) தனது 83ஆம் வயதில் சென்னையில் காலமானார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1940 டிச.05 அன்று பிறந்த ஜெனரல் சுந்தரராஜன் பத்மநாபன் டேராடூனில் உள்ள தேசிய இந்திய இராணுவக்கல்லூரி (RMIC) மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய ராணுவ அகாடமி (NDA) ஆகியவற்றின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் ஆவார். அவர் 1959 டிச.13 அன்று பீரங்கிப் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.
- அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. “Paddy – நெல்” என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் 43 ஆண்டுகால சேவைக்குப்பிறகு கடந்த 2002இல் ஓய்வுபெற்றார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சிக்கிம் அலுவல் மொழியாக ‘நேபாளி’ சேர்ப்பு.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அலுவல் மொழியாக ‘நேபாளி’ மொழி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆங்கிலம் மட்டுமே மாநிலத்தின் அலுவல் மொழியாக இருந்த நிலையில் இப்போது ‘நேபாளி’ மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.
நேபாளி மொழி 1992ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது. நேபாளம், பூடான், இந்தியா, மியான்மரில் இந்த மொழி பேசப்படுகிறது. இது பெரும்பாலும் சமற்கிருதம் சார்ந்து இயங்கும் மொழியாகும். தேவநாகரி எழுத்துமுறையைக் கொண்டது. சிக்கிம் அலுவல் மொழிச்சட்டம், 1977இன்படி சிக்கிமின் அலுவல் மொழியாக நேபாளி மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2. விடுதலைப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253ஆவது நினைவு நாள்: ஆக:21.
அடக்குமுறை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நின்று, சுதந்திரத்துக்காக உச்சபட்ச தியாகத்தைச் செய்த அசாதாரண வீரரும் திடமான உறுதியின் உருவகமாகவும் திகழ்ந்த ஒண்டிவீரனின் 253ஆவது நினைவு நாள் ஆக:21 அன்று அனுசரிக்கப்பட்டது. தென்மலைப் போரில் வெளிக்காட்டிய ஒப்பிலா வீரத்தால் வரலாற்றில் நிலைத்து விட்ட விடுதலைத் தீரர் ஒண்டிவீரனாவார். பூலித்தேவரின் படைத்தளபதியாகவும் இவர் விளங்கினார்.
3. தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாடு.
சென்னையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் `51,000 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
1. Recently, where was the India’s first digital court for handling cheque bounce cases, called 24*7 ONCOURTS inaugurated?
A. Indore, Madhya Pradesh
B. Kollam, Kerala
C. Chennai, Tamil Nadu
D. Surat, Gujarat
- Justice Bhushan Ramkrishna Gavai inaugurated India’s first digital court, 24*7 ONCOURTS, in Kollam, Kerala, to handle cheque bounce cases. This digital court operates entirely online, from case filing to judgments, aiming to increase efficiency and reduce case backlog. The court will start accepting cheque bounce cases in September 2024.
2. Rakesh Pal, who recently passed away, was associated with which armed force?
A. Indian Navy
B. Indian Coast Guard
C. Indian Air Force
D. National Security Guard
- Director-General of Indian Coast Guard Rakesh Pal passed away in Chennai at age 59 due to a cardiac arrest. He was in Chennai for an event with Defence Minister Rajnath Singh. He had over 30 years of service, joining the Coast Guard in January 1989 and becoming the 25th Director-General in July 2023. He led major operations and was awarded the Ati Vishisht Seva Medal, President Tatrakshak Medal, and Tatrakshak Medal.
3. Guam Island is located in which ocean?
A. Pacific Ocean
B. Indian Ocean
C. Atlantic Ocean
D. Arctic Ocean
- INS Shivalik recently arrived in Guam for an operational turnaround after participating in RIMPAC 2024, the world’s largest multinational maritime exercise. Guam is the largest and southernmost of the Mariana Islands in the Northern Pacific Ocean and is a US territory. It was a Spanish colony until 1898, becoming a US territory after the Spanish-American War. Guam has a tropical climate with trade winds and equatorial currents. The capital of Guam is Hagatna.
4. Recently, the winners of the 70th National Film Awards were announced by which ministry?
A. Ministry of Electronics and Information Technology
B. Ministry of Culture
C. Ministry of Information and Broadcasting
D. Ministry of Home Affairs
- The winners of the 70th National Film Awards were recently announced by the Ministry of Information and Broadcasting. The National Film Awards was established in 1954 to encourage films of aesthetic, technical excellence, and social relevance, promoting cultural appreciation across India. Initially called ‘State Awards,’ they included President’s Gold Medals and certificates of merit. Awards are given in three sections: Feature Films, Non-Feature Films, and Best Writing in Cinema. Since 1973, the Directorate of Film Festivals has administered these awards.
5. What is ‘Importin-7 (IPO7)’?
A. Protein
B. Synthetic drug
C. Invasive weed
D. None of the above
- A study identified a protein called importin-7 (IPO7) that transports flavivirus core protein into the nucleus. Flaviviruses belong to the Flaviviridae family, with spherical virions measuring 40-60 nanometers. These viruses have a single-stranded positive-sense RNA genome. Flaviviruses can cause serious diseases, including neuro-infections, which may lead to severe health issues or death.
6. Recently, which airport became the first Indian airport to achieve Net Zero Carbon Emission Airport status?
A. Indira Gandhi International Airport, Delhi
B. Sardar Vallabhbhai Patel International Airport, Ahmedabad
C. Chhatrapati Shivaji Maharaj International Airport, Mumbai
D. Rajiv Gandhi International Airport, Hyderabad
- Indira Gandhi International Airport in Delhi achieved Net Zero Carbon Emission Airport status, the first in India. This Level 5 certification recognizes the airport’s success in maintaining a net zero carbon balance. The airport reduced 90% of Scope 1 and Scope 2 emissions and offset the rest. Originally aiming for net zero by 2030, it met the goal earlier through renewable energy, electric vehicles, zero waste programs, and green infrastructure. The airport now aims to achieve net zero in Scope 3 emissions by 2050.
7. Which two Indian athletes were selected as the flag bearers for India in the opening ceremony of 2024 Paris Paralympics Games?
A. Krishna Nagar and Ajeet Singh
B. Manish Narwal and Avani Lekhara
C. Sumit Antil and Bhagyashri Jadhav
D. Yogesh Kathuniya and Nishad Kumar
- Sumit Antil and Bhagyashri Jadhav were selected as flag bearers for India at the 2024 Paris Paralympics opening ceremony on 28 August 2024. The 17th Summer Paralympics will take place in Paris from 28 August to 8 September 2024. Sumit Antil, a 25-year-old World Champion, won gold in javelin at the 2020 Tokyo Paralympics and holds the world record in the F64 category. Bhagyashri Jadhav, 39, won silver in shotput (F34 category) at the Asian Para Games and World Para Athletics Championships in May 2024.
8. Which day is observed as ‘World Mosquito Day’ every year?
A. 20 August
B. 21 August
C. 22 August
D. 23 August
- World Mosquito Day is observed on August 20 to highlight the importance of protecting against mosquito-borne diseases. Mosquitoes spread diseases like malaria, dengue, Zika, and West Nile virus, affecting millions and causing deaths worldwide. The 2024 theme is “Accelerating the fight against malaria for a more equitable world.” This theme stresses the need to improve access to malaria treatment, diagnosis, and prevention.
9. National Geoscience Award is instituted by which ministry?
A. Ministry of Earth Sciences
B. Ministry of Science and Technology
C. Ministry of Agriculture
D. Ministry of Mines
- The President of India will present the National Geoscience Awards 2023 at Rashtrapati Bhavan in New Delhi. These awards are among the oldest and most prestigious in geosciences, established in 1966 by the Ministry of Mines. Initially called the National Mineral Awards, the name changed in 2009. The awards honor individuals and teams for exceptional contributions in geosciences, including mineral discovery, mining technology, and fundamental/applied geosciences. Any Indian citizen with significant contributions in geosciences is eligible for the award.
10. What is ‘Miyawaki method’?
A. Development of garden using genetically modified seeds
B. Urban afforestation method
C. Promotion of commercial farming in arid areas
D. None of the above
- The Chhattisgarh Forest Department held a Van Mahotsav in the Manendragarh-Chirmiri-Bharatpur district, planting saplings using the Miyawaki method. The Miyawaki method, is a urban afforestation method, developed by Japanese botanist Akira Miyawaki. It involves planting 2-4 types of native trees per square meter.
- Dense planting leads to rapid growth as seedlings compete for sunlight. Only native species, suited to the local climate and naturally occurring without human interference, are planted. Trees become self-sustainable and reach full growth in about three years. Miyawaki forests grow 10 times faster, are 30 times denser, and have 100 times more biodiversity.
11. Shaurya Sampravah 1.0 is associated with which armed force?
A. Indian Army
B. Indian Navy
C. Indian Air Force
D. Indian Coast Guard
- The Indian Army held a landmark event, Shaurya Sampravah 1.0, at the Manekshaw Centre in Delhi, led by General Upendra Dwivedi. The event aimed to harness the experience and insights of veteran officers to shape the Army’s future and contribute to national growth. General Dwivedi expressed gratitude to veterans and emphasized the event as a platform for idea exchange between current leadership and veterans. The event featured a detailed briefing on the “Decade of Transformation” roadmap, focusing on modernization and enhancing operational capabilities.
12. Sundararajan Padmanabhan, who recently passed away, was former chief of which armed force?
A. Indian Army
B. Indian Navy
C. Indian Air Force
D. Indian Coast Guard
- General Sundararajan Padmanabhan, former Chief of Army Staff, passed away in Chennai at age 83. He served as the Chief of Army Staff from 2000 to 2002. Born in Kerala, he was an alumnus of RIMC, NDA, and IMA, and was commissioned into the Regiment of Artillery in 1959. He was awarded the Ati Vishisht Seva Medal (AVSM) and Vishisht Seva Medal (VSM). He retired in 2002 after 43 years of service, known affectionately as “Paddy.”