TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 21st and 22nd September 2024

1. 2026 – காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தவுள்ள நகரம் எது?

அ. கிளாஸ்கோ

ஆ. பாரிஸ்

இ. கலிபோர்னியா

ஈ. லண்டன்

  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் விலைவாசி உயர்வின் காரணமாக விலகிக்கொண்டதைத் தொடர்ந்து 2026 – காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளை ஸ்காட்லாந்தின் தலைநகரமான கிளாஸ்கோ நடத்தவுள்ளது. இதற்கு முன்பு 2014 – காமன்வெல்த் போட்டிகளை கிளாஸ்கோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கடந்த 1930ஆம் ஆண்டில் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கின்றன.

2. பிதர்கனிகா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. மேகாலயா

  • பிதர்கனிகா தேசியப்பூங்காவில் கூடுகட்டும் பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. பிதர்கனிகா தேசியப்பூங்கா ஒடிஸா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ளது. இது பிராமணி, பைதரணி மற்றும் தாமரா ஆறுகளால் உருவாக்கப்பட்ட டெல்டாவில் அமைந்துள்ளது. 672 ச.கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்டுள்ள இந்தப் பூங்கா, இந்தியாவின் இரண்டாவது பெரிய சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பாகும். சதுப்புநிலக்காடுகள், ஆறுகள், சிறு ஓடைகள் மற்றும் ஓத டெல்டாக்களைக் கொண்டுள்ள இது, வங்காள விரிகுடாவின் அருகில் செறிவுடன் உள்ளது. சிலிகா ஏரிக்குப்பிறகு ஒடிஸா மாநிலத்தின் இரண்டாவது ராம்சர் தளம் பிதர்கனிகா ஆகும்.

3. குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதிய அறக்கட்டளை திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்

ஆ. வேளாண்மை அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • பெண்களுக்குச் சொந்தமான குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தற்போது CGTMSE திட்டத்தின்கீழ் 90% கடன் உத்தரவாதத்தைப் பெறும். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டமானது கடந்த 2000 ஆம் ஆண்டில் MSME அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இதன் இலக்கானது MSME-களுக்கு, குறிப்பாக புதிய தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் பின்தங்கிய துறைகளுக்கு நிறுவன கடனோட்டத்தை அதிகரிப்பதாகும். பிணையம் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் கடன் பெறுவதை இந்தத்திட்டம் அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த MSME மற்றும் SIDBI அமைச்சகத்தால் CGTMSE அமைக்கப்பட்டது. 4:1 பங்களிப்பு விகிதத்துடன் இந்திய அரசு மற்றும் SIDBIஇலிருந்து நிதியுதவி பெறப்படுகிறது.

4. கரம் திருவிழாவுடன் முதன்மையாக தொடர்புடையது எது?

அ. சூரிய வழிபாடு

ஆ. அறுவடை செய்து கரம் மரத்திற்குப் படைப்பது

இ. பழங்குடி வீரரைப் போற்றுவது

ஈ. நதி தெய்வ வழிபாடு

  • பல இந்திய மாநிலங்களில் உள்ள பழங்குடி சமூகங்கள் அண்மையில் கரம் விழா என்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடின. சூல்கொள்தன்மை, செழிப்பு மற்றும் மங்களம் ஆகியவற்றைக் குறிக்கும் கரம் வழிபாடு கரம் மரத்தை போற்றுகிறது. பழங்குடி சமூகங்களின் விவசாயப் பணியுடன் திருவிழா தொடங்கியது. ஒரு வாரத்திற்கு முன்பு, இளம் பெண்கள் ஏழு வகையான தானியங்களை தூயமணலில் நடவுசெய்கிறார்கள். திருவிழா நாளன்று, ஒரு முற்றத்தில் ஒரு கரம் மரக்கிளையை நட்டு, பூசாரி, கரம்ராஜாவை வணங்குகிறார். கொண்டாட்டத்தில் பாரம்பரிய நடனம், பாடல் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை அடங்கும். இது முதன்மையாக ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள முண்டா, ஹோ, ஓரான் மற்றும் பிற பழங்குடியினரால் கொண்டாடப்படுகிறது.

5. அண்மையில், ‘கல்வாரி நீர்மூழ்கிக்கப்பல் தவிர்த்தல் பயிற்சி வசதி (VINETRA)’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. நாகப்பட்டினம்

இ. விசாகப்பட்டினம்

ஈ. கொச்சி

  • ‘வினேத்ரா’ எனப்படும் கல்வாரி நீர்மூழ்கிக்கப்பல் தவிர்த்தல் பயிற்சி வசதி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் சாதவாகனத்தில் கடற்படைத் துணைத்தளபதி ராஜேஷ் பெந்தார்க்கரால் தொடங்கப்பட்டது. இந்தியக்கடற்படையின் முக்கிய அமைப்பான கிழக்குக்கடற்படைப்பிரிவுக்கு விசாகப்பட்டினம் தளமாக அமைந்துள்ளது. இந்நகரம் கடற்படை கப்பல்துறை உட்பட முக்கிய கடற்படை வசதிகளை வழங்குகிறது மற்றும் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் ஒரு உத்திசார் பாத்திரத்தை அது வகிக்கிறது. ‘வினேத்ரா’ ஆனது கல்வாரி-வகுப்பு நீர்மூழ்கிக்கப்பல்களில் இருந்து குழு உறுப்பினர்களின் தவிர்க்கும் திறனை மேம்படுத்துகிறது.

6. ஒவ்வோர் ஆண்டும் “உலக மூங்கில் நாள்” கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 17 செப்டம்பர்

ஆ. 18 செப்டம்பர்

இ. 19 ஆகஸ்ட்

ஈ. 20 ஆகஸ்ட்

  • ஒவ்வோர் ஆண்டும் செப்.18ஆம் தேதி உலக மூங்கில் நாள் கொண்டாடப்படுகிறது. உலக மூங்கில் அமைப்பால் 2009இல் உருவாக்கப்பட்ட இந்த நாள் கமேஷ் சலாம் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ளது. 2009 செப்.18 அன்று பாங்காக்கில் நடைபெற்ற 8ஆவது உலக மூங்கில் மாநாடு, உலக மூங்கில் நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் உலகளவில் புதிய தொழில்களுக்கு மூங்கில் சாகுபடியை ஊக்குவிப்பது இந்த நாளின் நோக்கமாகும்.

7. அண்மையில், இந்தியாவின் முதல் CO2-டூ-மெத்தனால் முன்னோடி ஆலை தொடங்கப்பட்ட இடம் எது?

அ. திருவள்ளூர்

ஆ. புனே

இ. பெலகாவி

ஈ. வாரணாசி

  • இந்தியாவின் முதல் CO2-டூ-மெத்தனால் முன்னோடி ஆலை மகாராஷ்டிராவின் புனேவில் தொடங்கப்பட்டுள்ளது; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஆதரிக்கப்படும் இது, அரசாங்கம்-தனியார் கூட்டாண்மையின்கீழ் ஒரு நாளைக்கு 1.4 டன் உற்பத்தித்திறன்கொண்டது. CO2-டூ-மெத்தனால் மாற்றமானது மின்னுற்பத்தி நிலையங்கள் போன்ற தொழில்துறைமூலங்களிலிருந்து (அ) நேரடியாக காற்றிலிருந்து CO2 உமிழ்வைக் கைப்பற்றுகிறது.
  • கைப்பற்றப்பட்ட CO2 ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. இந்நுட்பம் பைங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்க உதவுகிறது மற்றும் நிலையான எரிபொருள் மூலத்தை வழங்குகிறது. இந்தியாவின் பஞ்சாமிர்த தட்பவெப்பநிலை இலக்குகளுடன் இணைந்து, உள்நாட்டு Carbon Capture மற்றும் Utilisation (CCU) தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இந்த ஆலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது.

8. அண்மையில், நடுவண் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட பிரதமர் ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் (PMJUGA) திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு?

அ. ரூ.79,156 கோடி

ஆ. ரூ.89,186 கோடி

இ. ரூ.98,861 கோடி

ஈ. ரூ.97,516 கோடி

  • பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப்பின்பற்றுவதன்மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தற்காக, `79,156 கோடி மொத்த ஒதுக்கீட்டில் (நடுவண் அரசு: `56,333 கோடி மற்றும் மாநில அரசு: `22,823 கோடி) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இது 2024-25 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்களுக்குப் பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை உள்ளடக்கும். இது முப்பது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 வட்டாரங்களை உள்ளடக்கும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பழங்குடியின மக்கள்தொகை 10.45 கோடியாக உள்ளது.

9. அண்மையில், நடுவண் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட, ‘சந்திராயன்-4’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. நிலவின் மாதிரிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது

ஆ. சூரியப்புயல்களை ஆய்வுசெய்வது

இ. நிலவில் விண்வெளி நிலையத்தை உருவாக்குவது

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்குத் திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளைச் சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் ‘சந்திரயான்-4’ என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதலளிக்கப்பட்டது. இச்சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத்திரும்பும். இதை 2040ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இவ்வாறு செய்துள்ளன.
  • விண்கலத்தை உருவாக்கி, செலுத்தும் பணியை ISRO மேற்கொள்ளும். இத்திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செயலில் உள்ள நடைமுறைகள்மூலம் திறம்பட நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படும். சந்திரயான்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்த `2104.06 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்தச் செலவில் விண்கல மேம்பாடு, உணர்தல், LVM-3இன் இரண்டு ஏவூர்தி பயணங்கள், வெளிப்புற ஆழமான விண்வெளி வலையமைப்பு ஆதரவு, வடிவமைப்பு சரிபார்ப்புக்கான சிறப்புச் சோதனைகளை நடத்துதல், இறுதியாக சந்திர மேற்பரப்பில் தரையிறங்குதல், சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரியுடன் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புதல் ஆகியவை அனைத்தும் அடங்கும். மனிதர்களை அனுப்புவதற்கான முக்கியமான அடிப்படை தொழில்நுட்பங்கள், சந்திர மாதிரி திரும்பப்பெறுதல், சந்திர மாதிரிகளின் அறிவியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவுபெற இந்தப்பணி உதவும்.

10. 2024 – தூய்மையே சேவை இயக்கத்தின் கருப்பொருள் என்ன?

அ. ஸ்வபாவ் ஸ்வச்சதா – சன்ஸ்கார் ஸ்வச்சதா

ஆ. ஸ்வச்சதா ஹி சேவா – ஏக் சங்கல்ப்

இ. ஸ்வச் பாரத்- ஹரித் பாரத்

ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை

  • 2024 – தூய்மையே சேவை இயக்கம் 2024 செப்.17 முதல் அக்.02 வரை நடைபெற்றது. 2024ஆம் ஆண்டுக்கான கருப்பொருள், “ஸ்வபாவ் ஸ்வச்சதா – சன்ஸ்கார் ஸ்வச்சதா” என்பதாகும். விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் தூய்மை நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும். நாடு முழுவதும் சவாலான மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழிவுப்பகுதிகளைக் குறிவைத்து பெரிய அளவிலான தூய்மை இயக்கங்களில் இது கவனஞ்செலுத்தும். இது தூய்மைப்பணியாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து கௌரவிக்கிறது.
  • 2024 செப்.19 அன்று மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் நடந்த சஃபாய் மித்ரா சம்மேளனத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இவ்வியக்கத்தின் இருவார நடவடிக்கைகளின் ஒருபகுதியாக சஃபாய் மித்ரா சம்மேளனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

11. “வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுக்காக” நடுவண் அமைச்சரவை ஒதுக்கீடு செய்த மொத்த நிதி எவ்வளவு?

அ. ரூ.1236 கோடி

ஆ. ரூ.536 கோடி

இ. ரூ.1539 கோடி

ஈ. ரூ.1400 கோடி

  • பிரதமர் தலைமையிலான நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில், வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெள்ளிக்கோளின் மேற்பரப்பு மற்றும் துணை மேற்பரப்பு, வளிமண்டல செயல்முறைகள் மற்றும் வெள்ளி வளிமண்டலத்தில் சூரியனின் தாக்கம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்காக, விண்வெளித் துறையால் நிறைவேற்றப்படவுள்ள ‘வீனஸ் ஆர்பிட்டர் மிஷன்’ வெள்ளிக்கோளின் சுற்றுப்பாதையில் ஓர் அறிவியல் விண்கலத்தை சுற்றிவரச்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒருகாலத்தில் வாழக்கூடியது மற்றும் பூமிக்கு மிக ஒத்ததாக நம்பப்படும் வெள்ளியின் மாற்றத்திற்கான அடிப்படை காரணங்களைப் பற்றிய ஆய்வு, வெள்ளி மற்றும் பூமி ஆகிய சகோதரி கோள்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் பேருதவியாக இருக்கும். விண்கலத்தை உருவாக்குவதற்கும், அதை செலுத்துவதற்கும் ISRO பொறுப்பேற்கும். வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுக்காக (VOM) ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த நிதி `1236 கோடியாகும், இதில் `824.00 கோடி விண்கலத்திற்காக செலவிடப்படும்.

12. அண்மையில், “2024 – உலக உணவு இந்தியா” நிகழ்வை நடத்திய அமைச்சகம் எது?

அ. வேளாண்மை அமைச்சகம்

ஆ. உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகமானது புது தில்லியிலுள்ள பாரத மண்டபத்தில் 2024 – உலக உணவு இந்தியா நிகழ்வை நடத்தியது. இந்த உலகளாவிய நிகழ்வு 2024 செப்.19-22 வரை 90க்கும் மேற்பட்ட நாடுகள், 26 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 18 நடுவண் அமைச்சகங்கள் மற்றும் தொடர்புடைய அரசமைப்புகளின் பங்கேற்பைக் கண்டது.
  • உணவுப்பதப்படுத்துதல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய ஒருங்கிணைப்பாக இந்த நிகழ்வு இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இது உணவுப்பதப்படுத்துதலில் உலகளாவிய அதிகார மையமாக இந்தியாவின் வளர்ந்துவரும் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

1. Which city will host the 2026 Commonwealth Games?

A. Glasgow

B. Paris

C. California

D. London

  • Glasgow, Scotland’s capital, will host the 2026 Commonwealth Games after Victoria, Australia, withdrew due to rising costs. Glasgow had previously hosted the 2014 Commonwealth Games successfully. The Commonwealth Games started in 1930, with countries from the Commonwealth participating.

2. Bhitarkanika National Park is located in which state?

A. Bihar

B. Odisha

C. Jharkhand

D. Meghalaya

  • The population of nesting birds has slightly increased in Bhitarkanika National Park. Bhitarkanika National Park is in Odisha’s Kendrapara district. It is located in the delta formed by the Brahmani, Baitarani, and Dhamara rivers. The park covers 672 sqkm, making it India’s second-largest mangrove ecosystem. It consists of mangrove forests, rivers, creeks, and tidal deltas, enriched by its proximity to the Bay of Bengal. Bhitarkanika is Odisha’s second Ramsar site, after Chilika Lake.

3. Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises (CGTMSE) scheme was introduced by which ministry?

A. Ministry of Micro, Small & Medium Enterprises

B. Ministry of Agriculture

C. Ministry of Rural Development

D. Ministry of Defence

  • Women-owned micro and small enterprises will now receive 90% credit guarantee coverage under the CGTMSE scheme. The Credit Guarantee Scheme for Micro & Small Enterprises (MSEs) was launched by the Ministry of MSME in 2000. Its goal is to increase institutional credit flow to MSEs, particularly for new-generation entrepreneurs and underserved sectors.
  • The scheme allows credit access without collateral or third-party guarantees. CGTMSE was set up by the Ministry of MSME and SIDBI to implement the scheme. The funding comes from the Government of India and SIDBI, with a 4:1 contribution ratio.

4. Karam Festival is primarily associated with which ritual?

A. The worship of the sun

B. Harvest and tribute to the Karam tree

C. Celebration of a tribal warrior

D. Worship of river goddesses

  • Tribal communities in several Indian states recently celebrated the harvest festival of Karma or Karam Parv. Karma Puja honors the Karam tree, symbolizing fertility, prosperity, and auspiciousness. The festival began with the start of agriculture by tribal communities. A week before, young women plant seven types of grains in clean sand. On the festival day, a Karam tree branch is planted in a courtyard, and the priest worships the Karam Raja. The celebration includes traditional dancing, singing, and offerings. It is mainly celebrated by Munda, Ho, Oraon, and other tribes in states like Jharkhand, West Bengal, and Odisha.

5. Recently, where was the ‘Kalvari Submarine Escape Training Facility (Vinetra)’ commissioned?

A. Chennai

B. Nagapattinam

C. Visakhapatnam

D. Kochi

  • The Kalvari Submarine Escape Training Facility, known as VINETRA, was commissioned at INS Satavahana in Visakhapatnam by Vice Admiral Rajesh Pendharkar. Visakhapatnam is the base for the Eastern Naval Command, a key formation of the Indian Navy. The city hosts vital naval facilities, including the Naval Dockyard, and plays a strategic role in India’s maritime defence. VINETRA improves the escape skills of crew members from distressed Kalvari-class submarines.

6. Which day is celebrated as “World Bamboo Day” every year?

A. 17 September

B. 18 September

C. 19 August

D. 20 August

  • September 18th is celebrated as World Bamboo Day each year. The World Bamboo Organization established this day in 2009, founded by Kamesh Salam. The organization’s headquarters were in Antwerp, Belgium. The 8th World Bamboo Congress, held in Bangkok on September 18, 2009, officially recognized World Bamboo Day. The day aims to protect natural resources and encourage bamboo cultivation for new industries globally.

7. Recently, where was the India’s first CO2-to-methanol pilot plant introduced?

A. Tiruvallur

B. Pune

C. Belagavi

D. Varanasi

  • India’s first CO2-to-Methanol Pilot Plant was introduced in Pune, Maharashtra, with a capacity of 1.4 tons per day under a Public-Private Partnership supported by the Department of Science and Technology. CO2-to-methanol conversion captures carbon emissions from industrial sources like power plants or directly from the air.
  • The captured CO2 is reacted with hydrogen to produce methanol. This technology helps reduce greenhouse gas emissions and provides a sustainable fuel source. The plant marks a significant step in advancing indigenous Carbon Capture and Utilisation (CCU) technologies, aligning with India’s Panchamrit climate goals.

8. What is the total allocation for the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan (PMJUGA) scheme, recently approved by Union Cabinet?

A. Rs.79,156 crore

B. Rs.89,186 crore

C. Rs.98,861 crore

D. Rs.97,516 crore

  • The Union Cabinet approved the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan (PMJUGA) on 18 September 2024. This scheme aims to improve the socio-economic conditions of tribal-majority villages and aspirational districts. Proposed by Finance Minister Nirmala Sitharaman in the 2024-25 Union Budget. The scheme will last five years with a total allocation of Rs 79,156 crore. The central government will contribute Rs 56,333 crore, and states will contribute Rs 22,823 crore. It will cover 549 districts, 2,740 blocks, and 63,000 villages, benefiting over 5 crore tribal people. India’s tribal population was 10.45 crore in 2011.

9. What is the primary objective of the ‘Chandrayaan-4 mission’, recently approved by Union Cabinet?

A. To bring lunar samples back to Earth

B. To study Solar storms

C. Building a space station on the moon

D. None of the above

  • The Union Cabinet approved the Chandrayaan-4 mission on 18 September 2024, aiming to collect lunar samples and bring them to Earth. Only the USA, Russia, and China have done this before. The long-term goal is to land an Indian astronaut on the Moon by 2040.
  • ISRO will lead the mission, continuing its work from Chandrayaan-1, 2, and 3. A budget of Rs 2104.06 crore has been allocated, with the mission expected to take 36 months. The budget covers spacecraft development, two LVM3 rocket launches, deep space network support, and special tests. Success will pave the way for future manned lunar missions.

10. What is the theme of the Swachhata Hi Seva – 2024 campaign?

A. Swabhav Swachhata – Sanskaar Swachhata

B. Swachhata Hi Seva – Ek Sankalp

C. Swachh Bharat- Harit Bharat

D. None of the Above

  • The Swachhata Hi Seva—2024 campaign ran from 17 September to 2 October 2024. The theme for 2024 was ‘Swabhav Swachhata – Sanskaar Swachhata’. The campaign aims to raise awareness and increase public participation in cleanliness activities. It will focus on large-scale cleanliness drives targeting challenging and neglected waste areas across the nation. It also acknowledges and honour the contributions of sanitation workers.
  • President Droupadi Murmu attended the Safai Mitra Sammelan in Ujjain, Madhya Pradesh, on 19 September 2024. The Safai Mitra Sammelan was organised as part of the campaign’s fortnightly activities initiated by the Indian government.

11. What is the total financial outlay recently approved by the Union Cabinet for “Venus Orbiter Mission (VOM)”?

A. Rs.1236 Cr

B. Rs.536 Cr

C. Rs.1539 Cr

D. Rs.1400 Cr

  • The Union Cabinet of India approved the Venus Orbiter Mission (VOM) to study Venus. The mission aims to explore Venus’s surface, subsurface, and atmosphere, and understand the Sun’s influence on it. It will help uncover why Venus, once similar to Earth, became uninhabitable.
  • The mission will address key scientific questions and provide valuable insights into the evolution of both Venus and Earth. ISRO will develop and launch the spacecraft, with a planned launch window in March 2028. The project cost is Rs. 1236 crores, with Rs. 824 crores allocated for the spacecraft and related elements.

12. Recently, which ministry hosted the event “World Food India 2024”?

A. Ministry of Agriculture

B. Ministry of Food Processing Industries

C. Ministry of Science and Technology

D. Ministry of Home Affairs

  • World Food India 2024 was held from September 19 to 22 at Bharat Mandapam, New Delhi. The event was hosted by the Ministry of Food Processing Industries. More than 90 countries, 26 Indian states and union territories, and 18 central ministries participated in the event. It showcased innovations, technology, and sustainability in food processing and highlighted India’s growing role in the global food sector. Government initiatives and future plans for food processing development were featured.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!