TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 20th August 2024

1. தேசிய நிலக்கரி குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

. நிலக்கரி அமைச்சகம்

இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • தேசிய நிலக்கரி குறியீடு (தற்காலிகமானது) 2023 ஜூனில் 147.25 புள்ளிகளாக இருந்த நிலையில், 2024 ஜூனில் 3.48% குறைந்து 142.13 புள்ளிகளாக உள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சந்தையில் போதுமான அளவு நிலக்கரி இருப்பில் உள்ளதையே எடுத்துக்காட்டுகிறது.
  • தேசிய நிலக்கரி குறியீடு (NCI) என்பது, அறிவிக்கப்பட்ட விலைகள், ஏல விலைகள் மற்றும் இறக்குமதி விலைகள் போன்ற அனைத்து விற்பனை வழிகளிலும் நிலக்கரி விலையை ஒருங்கிணைக்கும் ஒரு விலைக்குறியீடாகும். முறைப்படுத்தப்பட்ட (மின்சாரம் மற்றும் உரம்) மற்றும் முறைப்படுத்தப்படாத துறைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி, சமையலல்லா உபயோகங்களுக்கான நிலக்கரி விலைகளை உள்ளடக்கியதாகும். 2017-18ஆம் நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக்கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய நிலக்கரி குறியீடு, சந்தை தந்திரங்களுக்கான நம்பகமான குறியீடாக பயன்பட்டு வருவதுடன், விலை ஏற்றத் தாழ்வுகள் குறித்த ஆழமான கருத்தையும் வழங்குகிறது.

2. Glyptobasis dentifera’ என்றால் என்ன?

அ. தவளை

ஆ. ஆந்தை ஈ

இ. சிலந்தி

ஈ. பாம்பு

  • 75 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் ஓர் அரிய வகை ஆந்தை ஈ இனமான, ‘Glyptobasis dentifera’ஐ ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர். Neuroptera வரிசையைச் சார்ந்த இந்த ஆந்தை ஈக்கள் ஒத்த தோற்றம் காரணமாக பெரும்பாலும் தட்டாம்பூச்சிகள் என்று தவறாகக் கருதப்படுகின்றன. வான்வழி வேட்டையாடும் இந்த ஆந்தை ஈக்கள், பிற உயிரினத்தால் அச்சுறுத்தப்படும்போது கஸ்தூரிபோன்ற இரசாயனத்தை வெளியிடுகிறது. அவற்றின் இளம் உயிரிகள் பொதுவாக மண்ணில் அல்லது மரங்களில் தற்காப்புக்காக கொத்தாக வாழ்கின்றன.

3. ‘பவிஷ்யா’ என்ற மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய செயலாக்க மென்பொருளை அண்மையில் அறிமுகப்படுத்திய துறை எது?

அ. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை

ஆ. பொருளாதார விவகாரங்கள் துறை

இ. அணுசக்தி துறை

ஈ. தொழிலாளர் துறை

  • ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையானது மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள்/துறைகளுக்கு ‘பவிஷ்யா’ என்ற மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய செயலாக்க மென்பொருளை அறிமுகப்படுத்தியது. ‘பவிஷ்யா’ என்பது ஓய்வூதியச்செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்கள், எழுத்தர் பிழைகள் மற்றும் நிதியிழப்பை நிவர்த்தி செய்வதற்கான ஓர் இணையவழி ஓய்வூதிய அனுமதி மற்றும் கட்டண கண்காணிப்பு அமைப்பாகும். மென்பொருளானது ஓய்வூதியம் பெறுவதற்கு 15 மாதங்களுக்கு முன்பு ஓய்வூதிய செயல்முறையைத் தொடங்குகிறது மற்றும் ஓய்வூதியதாரருக்கென ஒரு சிறப்புப் படிவத்தைப் பயன்படுத்துகிறது. இது தடையற்ற மின்னணு ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு பொது நிதி மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைகிறது.

4. ஆரோக்கிய மைத்ரி கியூப் என்பதுடன் தொடர்புடைய முன்னெடுப்பு எது?

அ. மிஷன் இந்திரதனுஷ்

ஆ. BHISHM திட்டம்

இ. தேசிய சுகாதார திட்டம்

ஈ. ஜனனி சுரக்ஷா யோஜனா

  • சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலமாக ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப்பினை வழங்கும் முதல் செயல்முறையை இந்திய இராணுவமும் வான்படையும் இணைந்து நடத்தின.
  • BHISM திட்டத்தின்கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப்’ என்பது உலகின் முதல் சிறு மருத்துவமனையாகும். சிறு ICU, அறுவை அரங்கம், சமையல் நிலையம், உணவு, தண்ணீர், மின் இயற்றி, இரத்தப்பரிசோதனை கருவி, X-கதிர் இயந்திரம்போன்ற மருத்துவ உபகரணங்கள் இதில் அடங்கும். இந்தப் புதுமையான மருத்துவமனை தொலைதூர மற்றும் உயரமான பகுதிகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5. எரி பட்டு என்பது கீழ்க்காணும் எந்த வடகிழக்கு மாநிலத்தின் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பாகும்?

அ. நாகாலாந்து

. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. மணிப்பூர்

  • வடகிழக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NEHHDC) அதன் எரி பட்டிற்கு ஓகோ-டெக்ஸ் சான்றிதழைப் பெற்றது. அந்துப்பூச்சி இயற்கையாகவே கொல்லப்படாமல் கூட்டைவிட்டு வெளியேறிய பின் தயாரிக்கப்படுகிற காரணத்தால் எரி பட்டென்பது உலகின் ஒரே சைவப்பட்டாக விளங்குகிறது. இப்பட்டு முக்கியமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது; மேலும் இது புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்பு ஆகும்.
  • ‘Oeko-Tex’ சான்றிதழானது எரி பட்டு தீங்குவிளைவிக்கும் பொருட்களிலிருந்து விடுபட்டது மற்றும் சுற்றுச்சூழல் நட்பு சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிசெய்கிறது. இந்தச்சான்றிதழ் எரி பட்டின் உலகளாவிய ஏற்றுமதி திறனை மேம்படுத்துகிறது மற்றும் அதன் நிலைத்தன்மை மற்றும் பிராந்திய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

6. MUDA ஊழலுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சாத்தியமான நியாயமற்ற நடைமுறைகள் குறித்து MUDA விசாரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, ஒரு பிரதான பகுதியில் 14 மனைகளைப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன, இது சட்ட ரீதியான கவலைகளை எழுப்பியது. கடந்த 1904ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட MUDA, மைசூருவில் நகர்ப்புற திட்டமிடலை நிர்வகிக்கிறது மற்றும் முழுமையடையாத நிலம் கையகப்படுத்துதல் காரணமாக சட்ட சிக்கல்களை எதிர்கொண்டது.

7. அண்மையில், மகாராஷ்டிர மாநில அரசு அதன் எம்மாவட்டத்தில் முதல் ‘சூரிய கிராமத்தை’ அறிமுகப்படுத்தியது?

அ. வார்தா

ஆ. சதாரா

இ. அமராவதி

ஈ. கொங்கன்

  • மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தின் முதல் ‘சூரிய கிராமத்தை’ சதாரா மாவட்டத்தில் உள்ள மன்யாச்சிவாடியில் தொடக்கிவைத்தார். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிப்பதும், பாரம்பரிய மின்சக்தி ஆதாரங்களை நம்பியிருப்பதைக் குறைப்பதும் மாநில அரசின் நோக்கமாக உள்ளது. பிரதமர் சூரியா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க உதவியது; அதே நேரத்தில் முக்யமந்திரி சவுர் க்ருஷி பம்ப் யோஜனாவின்கீழ் சோலார் பம்ப் செட்டுகளுக்கு 90-95% மானியம் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகளுக்கு இலவச பகல் நேர மின்சாரத்தை உறுதிசெய்யும் வகையில் அடுத்த 1.5 ஆண்டுகளில் 12,000 MW சூரியவொளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

8. அண்மையில், தண்ணீர் மற்றும் உணவுப்பொருட்களின் பாதுகாப்பை மேம்படுத்த, ‘சயனைடு உணரி’ ஒன்றை உருவாக்கிய நிறுவனம் எது?

அ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

ஆ. கேரளா பல்கலைக்கழகம்

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி பம்பாய்

  • Dr. இரவிக்குமார் கனபர்த்தி தலைமையிலான கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழு, குடிநீர் மற்றும் உணவில் பாதுகாப்பை மேம்படுத்த அதிநவீன ‘சயனைடு உணரி’ ஒன்றை உருவாக்கியது. சயனைடு என்பது சில தாவரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு, பாதாம் மற்றும் ஆப்பிள் விதைகள்போன்ற உணவுகளில் காணப்படும் ஒரு ஆபத்தான நச்சு ஆகும். குடிநீரில் இதன் செறிவு 0.19 mg/L-க்கும் குறைவாக இருக்குமாறு WHO பரிந்துரைக்கிறது. இடுக்கியில் 13 பசுக்கள் இறந்ததுபோன்ற அண்மைய சயனைடு நஞ்சு சார்ந்த சம்பவங்கள், திறம்பட கண்டறிவதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. இந்த உணரி சயனைடு முன்னிலையில் மஞ்சள் நிறத்தில் இருந்து நிறமற்ற அல்லது நீல-பச்சை நிறத்திற்கு மாறுகிறது; இது எளிதாகவும் துல்லியமாகவும் கண்டறிய அனுமதிக்கிறது.

9. அண்மையில், எந்த நகரத்தில் இந்தியக் கடலோரக் காவல்படையின் (ICG) புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார்?

அ. போர்பந்தர்

ஆ. சென்னை

இ. விசாகப்பட்டினம்

ஈ. கண்ணூர்

  • சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள பிராந்திய கடல் மாசு தடுப்பு மையத்தையும் புதுச்சேரியில் கடலோரக் காவல்படை விமானம் நிறுத்துமிடத்தையும் அவர் அப்போது தொடக்கி வைத்தார்.
  • இந்த அதிநவீன வசதி, கடலில் ஆபத்துக்குள்ளான மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கான மீட்புப்பணிகளின் ஒருங்கிணைப்பையும் செயல்திறனையும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தேடல் மற்றும் மீட்பு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்தியக் கடலோரக் காவல்படையின் பயிற்சி பெற்ற பணியாளர்கள், மீட்பு விமானம், கப்பல்கள் மற்றும் பிற வசதிகளுடன், நிகழ்நேர எச்சரிக்கை நிர்வாகத்திற்காக மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன.

10. அண்மையில், பல-பரிமாண பாதிப்புக் குறியீட்டை (Multidimensional Vulnerability Index (MVI)) அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

அ. ஐக்கிய நாடுகள் அவை

ஆ. SAARC

இ. உலக வங்கி

ஈ. NATO

  • ஐநா பொதுச்சபையானது, சிறிய தீவு நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு குறைந்த வட்டியில் நிதியுதவி பெற உதவுவதற்காக பல பரிமாண பாதிப்புக் குறியீட்டை (MVI) அண்மையில் அறிமுகப்படுத்தியது. MVI என்பது தேசிய மட்டத்தில் நிலையான வளர்ச்சியில் பாதிப்பு மற்றும் நெகிழ்திறனை அளவிடுவதற்கான ஒரு புதிய பன்னாட்டு அளவுகோலாகும். தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட குறைந்த வட்டி நிதியுதவிக்கு தகுதிபெறாத தனித்துவமான பாதிப்புகள் உள்ள நாடுகளின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதன்மூலம் இது GDPபோன்ற வழமையான அளவீடுகளை நிறைவு செய்கிறது. MVI-ஐ உருவாக்கி செயல்படுத்துவதற்காக ஐநா ஆனது வளர்ந்து வரும் சிறிய தீவு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

11. ஹக்கி பிக்கி பழங்குடியினர் முதன்மையாக வாழும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. ஒடிஸா

ஈ. மத்திய பிரதேசம்

  • ஹக்கி பிக்கி பழங்குடியினர் முடியெண்ணெய் தொழிலில் வெற்றிகண்டுள்ளனர். பாரம்பரியமாக, அரை-நாடோடி வாழ்க்கை முறையைக்கொண்ட குருவிக்காரர்கள் மற்றும் வேட்டையாடிகளான அவர்கள் முதன்மையாக கர்நாடக மாநிலத்தின் சிவமோகா, தாவணகெரே மற்றும் மைசூரு மாவட்டங்களில் வாழ்கின்றனர்; வட இந்தியாவில் இருந்து அவர்கள் இடம்பெயர்ந்தவர்களாவர். அவர்கள் இந்தியாவில் ஒரு பட்டியல் பழங்குடியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் இந்தோ-ஆரிய மொழியான ‘வாக்ரி’யை பேசுகிறார்கள்; ஆனால் வணிகத்திற்காக கன்னடத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

12. உணவுப்பொருட்களில் உள்ள நுண்நெகிழி மாசுபாட்டை மதிப்பிடுவதற்கான திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. FSSAI

ஆ. FAO

இ. FCI

ஈ. SIDBI

  • உணவுப்பொருட்களிலுள்ள நுண்நெகிழி (microplastics) மாசுபாட்டைக் கையாளுவதற்காக FSSAI ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உணவிலுள்ள நுண் மற்றும் நானோ நெகிழியைக் கண்டறிதல், மாசுபாட்டினளவை மதிப்பிடுதல், பகுப்பாய்வு தரநிலைகளை அமைத்தல் மற்றும் நிலையான ஆய்வக முடிவுகளை உறுதிசெய்வதற்கான முறைகளை உருவாக்குதல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது CSIR-இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம், ICAR-மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியவற்றுடன் கூட்டிணைகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதிய தலைமைச்செயலராக பொறுப்பேற்றார் நா. முருகானந்தம்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலராக இஆப அதிகாரி நா. முருகானந்தம்., IAS., பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதில் நா. முருகானந்தம்., IAS., புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் 50ஆவது தலைமைச்செயலர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு இஆப பிரிவு அதிகாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் MBA பட்டதாரியான இவர் 1991ஆம் ஆண்டு இஆப தேர்ச்சிபெற்று பணியில் சேர்ந்தார்.

1. National Coal Index (NCI) is introduced by which ministry?

A. Ministry of New & Renewable Energy

B. Ministry of Coal

C. Ministry of Urban Development

D. Ministry of Defence

  • The National Coal Index (NCI) declined by 3.48% in June 2024, showing ample coal availability to meet demand. NCI, introduced by the Ministry of Coal, tracks coal prices to determine revenue share in commercial auctions. It considers coking and non-coking coal prices from various sales channels, including imports, relative to the base year 2017-18.
  • The NCI reflects market dynamics and price fluctuations. The recent decline indicates a balanced market, aligning supply and demand.

2. What is ‘Glyptobasis dentifera’?

A. Frog

B. Owlfly

C. Spider

D. Snake

  • Researchers rediscovered the rare owlfly species Glyptobasis dentifera in Kerala after 75 years. Owlflies belong to Order Neuroptera and are often mistaken for dragonflies due to similar appearance. Owlflies are aerial predators and can release a musk-like chemical when threatened. Their larvae typically live in soil or trees in clusters for defense.

3. Which department recently introduced a centralized pension processing software ‘Bhavishya’?

A. Department of Pension & Pensioners’ Welfare

B. Department of Economic Affairs

C. Department of Atomic Energy

D. Department of Labor

  • The Department of Pension & Pensioners’ Welfare (DOPPW) introduced a centralized pension processing software called ‘Bhavishya’ for all central government Ministries/Departments. ‘Bhavishya’ is an online Pension Sanction & Payment Tracking System to address delays, clerical errors, and financial loss in pension processing. The software starts the pension process 15 months before retirement and uses a single form for the pensioner. It also integrates with the Public Financial Management System (PFMS) for seamless electronic pension payments.

4. Arogya Maitri cube is associated with which initiative?

A. Mission Indradhanush

B. Project BHISHM

C. National Health Mission

D. Janani Suraksha Yojana

  • The Indian Army and Air Force conducted the first paradrop of the Aarogya Maitri Health Cube at 15,000 feet elevation. Aarogya Maitri Health Cube is the world’s first portable hospital, designed indigenously under Project BHISHM. It includes medical equipment like a mini-ICU, operation theatre, cooking station, food, water, power generator, blood test equipment, and an X-ray machine. This innovative hospital can provide essential healthcare in remote and high-altitude areas.

5. Eri Silk is a Geographical Indication (GI) tagged product from which Northeastern state?

A. Nagaland

B. Assam

C. Mizoram

D. Manipur

  • The North Eastern Handicrafts and Handlooms Development Corporation (NEHHDC) obtained the Oeko-Tex certification for its Eri Silk. Eri Silk is the world’s only vegan silk, as the moth naturally exits the cocoon without being killed. This silk is produced mainly in the northeastern states of India, especially Assam, and is a Geographical Indication (GI) tagged product. The Oeko-Tex certification ensures that Eri Silk is free from harmful substances and produced in eco-friendly conditions. This certification enhances Eri Silk’s global export potential and emphasizes its sustainability and regional importance.

6. MUDA scam is associated with which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Maharashtra

D. Kerala

  • MUDA is being investigated for possible unfair practices in compensating for acquired private land. Allegations surfaced that Karnataka CM Siddaramaiah’s wife, Parvathi, received 14 plots in a prime area, raising legal and fairness concerns. MUDA, established in 1904, manages urban planning in Mysuru and has faced legal issues due to incomplete land acquisitions.

7. Recently, the Maharashtra government launched the first ‘Solar Village’ in which district?

A. Wardha

B. Satara

C. Amravati

D. Konkan

  • Maharashtra CM Eknath Shinde inaugurated the state’s first ‘Solar Village’ in Manyachiwadi, Satara district. The state government aims to promote renewable energy and reduce reliance on traditional power sources. The PM Surya Ghar: Muft Bijli Yojana has helped reduce electricity bills, while a 90-95% subsidy is provided for solar pump sets under the Mukhyamantri Saur Krushi Pump Yojana. Deputy CM Devendra Fadnavis announced that 12,000 MW of solar power will be generated in the next 1.5 years, ensuring free daytime electricity for farmers.

8. Recently, which institute developed a ‘Cyanide sensor’ to enhance safety of water and food products?

A. Banaras Hindu University

B. Kerala University

C. IIT Madras

D. IIT Bombay

  • A research team at Central University of Kerala, led by Dr Ravi Kumar Kanaparthi, developed an advanced cyanide sensor to improve safety in drinking water and food. Cyanide is a dangerous toxin found in certain plants and foods like cassava, almonds, and apple seeds, and the WHO recommends keeping its concentration below 0.19 mg/L in drinking water.
  • Recent cyanide poisoning incidents, like the death of 13 cows in Idukki, highlight the need for effective detection. The sensor changes color from yellow to colorless or bluish-green in the presence of cyanide, allowing for easy and accurate detection.

9. Recently, the Defence Minister inaugurated the new Indian Coast Guard (ICG) Maritime Rescue Coordination Centre in which city?

A. Porbandar

B. Chennai

C. Visakhapatnam

D. Kannur

  • Raksha Mantri Rajnath Singh inaugurated the new Indian Coast Guard Maritime Rescue Coordination Centre (MRCC) in Chennai, Tamil Nadu. He also virtually launched the Regional Marine Pollution Response Centre in Chennai and the Coast Guard Air Enclave in Puducherry.
  • The MRCC aims to enhance the coordination and effectiveness of maritime rescue operations, focusing on mariners and fishermen in distress. The Centre is equipped with advanced distress monitoring systems and real-time communication tools.

10. Which organization recently launched Multidimensional Vulnerability Index (MVI)?

A. United Nations

B. SAARC

C. World Bank

D. NATO

  • The UN General Assembly recently launched the Multidimensional Vulnerability Index (MVI) to help small island states and developing countries access low-interest financing. The MVI is a new international benchmark for measuring vulnerability and resilience in sustainable development at the national level.
  • It complements traditional metrics like GDP by addressing the specific needs of countries with unique vulnerabilities that don’t qualify for low-interest financing based solely on GDP per capita. The UN is working with small island developing states to develop and implement the MVI.

11. Hakki Pikki Tribe is a major tribal community of which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Odisha

D. Madhya Pradesh

  • The Hakki Pikki tribe has become successful in the hair oil industry. Traditionally, they were semi-nomadic bird catchers and hunters. They live mainly in Karnataka’s Shivamogga, Davanagere, and Mysuru districts, having migrated from Northern India. The tribe is recognized as a Scheduled Tribe in India. They speak ‘Vaagri,’ an Indo-Aryan language, at home, but use Kannada for business.

12. Which organization has recently initiated a project to evaluate microplastic contamination in food products?

A. FSSAI

B. FAO

C. FCI

D. SIDBI

  • The FSSAI has launched a project to tackle microplastic contamination in food. The project aims to develop and validate methods for detecting micro and nano-plastics in food, assess contamination levels, set analysis standards, and ensure consistent laboratory results.
  • It involves collaboration with CSIR-Indian Institute of Toxicology Research, ICAR-Central Institute of Fisheries Technology, and Birla Institute of Technology and Science.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!