Tnpsc Current Affairs in Tamil & English – 20th and 21st July 2024
1. தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள நகரம் எது?
அ. சென்னை
ஆ. ஹைதராபாத்
இ. மும்பை
ஈ. கொல்கத்தா
- தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute – NGRI) அறிவியலாளர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையிலான பண்டைய தொடர்பை எடுத்துக்காட்டும் ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 1961இல் நிறுவப்பட்டு, ஹைதராபாத்தில் இயங்கி வருகின்ற NGRI, அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் (CSIR) ஒருபகுதியாகும். இந்த நிறுவனம் புவி இயக்கவியல், நிலநடுக்க இடர்கள் மற்றும் இயற்கை வளங்கள் ஆகியவற்றில் நிலையான புவிவளப்பயன்பாட்டைத் தெரிவிக்கவும் மற்றும் இயற்கை இடர்களுக்கு நெகிழ்தன்மையை மேம்படுத்தவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
2. மேகப்புண் நோயை ஏற்படுத்தும் காரணி எது?
அ. வைரஸ்
ஆ. பாக்டீரியா
இ. பூஞ்சை
ஈ. புரோட்டோசோவா
- 2018-19 மற்றும் 2022-23க்கு இடையில் 6,000-க்கும் மேற்பட்ட மேகப்புண் நோய் (Syphilis) பாதிப்புகளை மும்பை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (MDACS) மேம்படுத்தப்பட்ட சோதனை அமைப்பு கண்டறிந்துள்ளது. Treponema pallidum பாக்டீரியாவால் ஏற்படும் மேகப்புண் நோய் என்பது பாலியல் ரீதியாக பரவும் ஒரு நோய்த்தொற்று ஆகும்; அறிகுறி எதுவும் காட்டாமல் பல்லாண்டுகளாக உடம்பிலிருக்கும் இது; திடீரென மீண்டும் செயல்படும். பாலியல் தொடர்புமூலம் பரவுகிற இது, பிறவாத குழந்தைகளையும் கூட பாதிக்கின்றது. வலியற்ற புண்கள் மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பென்சிலின் போன்றவை இந்நோய்க்குத் தரப்படும் மிகப்பொதுவான மருந்துகளாகும்.
3. இ-ஃபாஸ்ட் இந்தியா என்ற முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
அ. சாலை உள்கட்டமைப்பை அதிகரிப்பது
ஆ. சாலை அடிப்படையிலான சரக்குப்போக்குவரவை சுழிய உமிழ்வாக மாற்றுவது
இ. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது
ஈ. சரக்குந்துகளில் எரிபொருள் செயல்திறனை அதிகரிப்பது
- IIM பெங்களூரு உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இணைந்து, NITI ஆயோக், ‘NITI GearShift Challenge’ எனப்படும் போட்டியை அறிவித்துள்ளது. இந்த முன்னோடி ஹேக்கத்தான் இந்தியாவில் சுழிய-உமிழ்வுடன் சரக்குந்துகளை இயக்கும் சூழலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்ட e-FAST முன்னெடுப்பானது தேசிய மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புகள், சோதனைத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவற்றின்மூலம் தூய்மையான சரக்குப் போக்குவரவுத் தீர்வுகளை ஊக்குவிக்கிறது. இந்த முன்முயற்சியானது பன்னிரு அறிவுசார் கூட்டாளர்களின் ஆதரவுடன் சரக்குப் போக்குவரத்துத் துறையில் மின்சாரத் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை மேம்படுத்துவதற்காக அரசாங்க அமைப்புகள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள் உட்பட பங்குதாரர்களிடையே விவாதங்களை மேற்கொள்கிறது.
4. ‘பேணுநர்கள் – Chaperones’ என்றால் என்ன?
அ. முக்கியமான கனிமங்கள்
ஆ. அவை புரதங்களின் குழுவாகும்
இ. இவை ஆக்கிரமிப்பு தாவரங்கள்
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல் விலங்குகளின் இனங்கள்
- SN போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கோவலன்ட் மேக்னடிக் டுவீசரை (CMT) பயன்படுத்தி புரத மூலக்கூறுகள் மற்றும் அவற்றின் மடிப்புகளில் பேணுநர்களின் பங்கை ஆய்வுசெய்கின்றனர். புரதங்களின் குழுவான பேணுநர்கள், தவறான மடிப்பு மற்றும் திரட்டலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன; சரியான புரத உருவாக்கத்திற்கும் அவை உதவுகின்றன. முக்கிய மனித பேணுநர்களில் HSP70 மற்றும் HSP90 ஆகியவை அடங்கும். தவறாக மடிக்கப்பட்ட புரதங்கள் பார்கின்சன், அல்சைமர் மற்றும் பிறவி கண்புரைபோன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
5. வருடாந்திர, ‘கப்பற்படை விருதுகள் விழா-2024’இல் கிழக்குக்கடற்படையின் சிறந்த கப்பலாக தேர்வான INS எது?
அ. INS தில்லி
ஆ. INS கரஞ்ச்
இ. INS சக்தி
ஈ. INS வாகீர்
- ஜூலை.14 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வருடாந்திர ‘கப்பற்படை விருதுகள் விழா-2024’இல், கடந்த ஆண்டு அதன் செயல்பாட்டு சாதனைகளுக்காக கிழக்குக்கடற்படையின் சிறந்த கப்பலாக INS தில்லி தேர்வானது. சேமக்கலம்/OPV/LST பிரிவில் சிறந்த கப்பலுக்கான விருதை INS கவராட்டி பெற்றது. கூடுதலாக, INS ஷிவாலிக், INS சுமேதா மற்றும் INS சுமித்ரா ஆகியவை பல்வேறு சவாலான பணிகளில் செயல்பட்டதற்காக, மிகவும் உற்சாகமான கப்பல்களாக அங்கீகரிக்கப்பட்டன.
6. அண்மையில், “Navigating New Horizons: A Global Foresight” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
ஆ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
இ. உலக வங்கி
ஈ. பன்னாட்டு செலாவணி நிதியம்
- ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிக்கையான, “Navigating New Horizons: A Global Foresight” மாசுபாடு, பல்லுயிர் இழப்பு மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் ஆகிய 3 கோள் நெருக்கடியை அதிகப்படுத்தும் முக்கியமான உலகளாவிய மாற்றங்களை அடையாளம் காட்டுகிறது. உலகமயமாக்கலால் நிகழ்த்தப்படும் போர்கள், தீவிர வானிலை மற்றும் தொற்றுநோய்களை உள்ளடக்கிய இன்றைய உலகளாவிய பல்லிடர்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மனித-சுற்றுச்சூழல் உறவுகளை மாற்றுவது, உலகளாவிய பாதுகாப்பைப் பாதிக்கும் வளப்பற்றாக்குறை, AIபோன்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், தன்னறிவு ஆயுதங்களால் ஏற்படும் இடர்கள், 1.5% மக்கள் பெருமளவில் இடம்பெயர்தல் ஆகியவை கூர்நோக்கப்படும் முக்கிய சிக்கல்களாகக் குறிப்பிடப்படுள்ளன.
7. இந்தியாவின் செஸ் திறன்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கானத் திட்டங்களை அண்மையில் வெளியிட்ட நிறுவனம் எது?
அ. ஐஐடி கான்பூர்
ஆ. ஐஐடி மெட்ராஸ்
இ. ஐஐடி மண்டி
ஈ. ஐஐடி அகமதாபாத்
- ஐஐடி மெட்ராஸின் விளையாட்டு மற்றும் பகுப்பாய்வியலுக்கான சிறப்பு மையம் (CESSA) இந்தியாவின் செஸ் திறன்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த முன்முயற்சி ரசிகர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதையும், மோசடிக்கு எதிரான தீர்வுகளை வழங்குவதையும், செஸ் பயிற்சி திட்டங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. NPTEL மற்றும் எதிர்கால விளையாட்டுக் கல்வித் திட்டங்களைப் பற்றிய புதிய படிப்புகளைத் தொடங்குவதும் இதில் அடங்கும்.
8. APSTAR-6E என்ற செயற்கைக்கோளை உருவாக்கிய நாடு எது?
அ. இந்தியா
ஆ. சீனா
இ. ஜப்பான்
ஈ. ரஷ்யா
- சுற்றுப்பாதை மற்றும் ஹாங்காங்கில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு சீனாவின் APSTAR-6E என்ற செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியுள்ளது. சீன வான்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கழக்கத்தால் உருவாக்கப்பட்ட இது, சீனாவின் முதல் அனைத்து-எலக்ட்ரிக் புரொபல்ஷன் கம்யூனிகேஷன் செயற்கைக்கோள் ஆகும்; இது 2023 ஜன.13 அன்று ஏவப்பட்டது. 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையில் இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா முழுவதும் அதிக திறன்கொண்ட அகலக்கற்றை சேவைகளை இது வழங்குகிறது.
9. அண்மையில், இந்தியாவின் சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கீழ்க்காணும் எந்த நாட்டில், ‘உயர் செயல்திறனுடைய’ மலேரியா தடுப்பூசியான ‘R21/Matrix-M’ஐ அறிமுகப்படுத்தியுள்ளன?
அ. மாலி
ஆ. ஐவரி கோஸ்ட்
இ. கானா
ஈ. நைஜீரியா
- இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட R21/Matrix-M என்னும் மலேரியா தடுப்பூசியை பயன்படுத்திய முதலாவது நாடு ஐவரி கோஸ்ட் ஆகும். பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, தொடக்க நிலையில் 250,000 குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு WHOஆல் பரிந்துரைக்கப்படும் இத்தடுப்பூசி, ஆண்டுதோறும் 600,000 இறப்புகளுக்கு காரணமான மலேரியாவை முதன்மையாக ஆப்பிரிக்காவிலிருந்து ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. அண்மையில் ஷில்லாங்கில் தொடங்கப்பட்ட, ‘NERACE’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
அ. வடகிழக்கில் சுற்றுலாவை மேம்படுத்துவது
ஆ. வடகிழக்குப் பிராந்தியத்தில் உழவர்கள் மற்றும் பொருள் வாங்குவோரை இணைப்பது
இ. மாணவர்களுக்குக் கல்வி வளங்களை வழங்குதல்
ஈ. உள்ளூர் கலை மற்றும் கைவினைகளுக்கு உதவுதல்
- நடுவண் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள உழவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து பொருள் வாங்குவோர்க்குப் பயனளிக்கும் வகையில் ஷில்லாங்கில், “North East Region Agri Commodity E-Connect (NERACE)” என்ற இணையதளம் மற்றும் செயலியை தொடக்கி வைத்தார். NERACE மசாலாப்பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள்போன்ற தயாரிப்புகளை வாங்க உதவுவதோடு உழவர்களுக்கு பெரிய சந்தைகளையும் சிறந்த விலையையும் வழங்குகிறது. ஏழு மொழிகளில் கிடைக்கப் பெறும் இத்தளம், உலகளவில் உற்பத்தியாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை இணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
11. அண்மையில், வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், கீழ்க்காணும் எந்த நாட்டில் நட்பின் அடையாளமாக, “மைத்ரீ உதயன்” என்றவொன்றைத் தொடங்கினார்?
அ. வியட்நாம்
ஆ. ஆஸ்திரேலியா
இ. மொரிஷியஸ்
ஈ. சிங்கப்பூர்
- வெளியுறவு அமைச்சர் Dr S ஜெய்சங்கர், 2024 ஜூலை.16 அன்று போர்ட் லூயிஸில் இந்தியா-மொரிஷியஸ் நட்பின் அடையாளமாக ‘மைத்ரீ உதயனைத்’ திறந்து வைத்தார். மொரிஷியஸ் வெளியுறவு அமைச்சர் மனீஷ் கோபினுடன் இணைந்து மரக்கன்று ஒன்றை அவர் நட்டார். தனது இரண்டு நாள் பயணத்தின்போது, Dr S ஜெய்சங்கர், பிரதமர் பிரவிந்த் ஜக்நாத்தை சந்தித்து, இந்தியாவின் உதவியில் இயங்கி வரும் குடிமைப் பணிகள் கல்லூரி திட்டத்தை பார்வையிட்டார்.
12. அண்மையில், இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட எடை-இழப்புக்குப் பயன்படும் மருந்தின் பெயர் என்ன?
அ. டிரஸ்படைட் (Tirzepatide)
ஆ. பைராசினமைடு (Pyrazinamide)
இ. நியாசினமைடு (Niacinamide)
ஈ. அடோவகோன் (Atovaquone)
- எடையைக் குறைக்கும் மருந்தான, ‘Tirzepatide’க்கு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. FDAஆல் அங்கீகரிக்கப்பட்ட Tirzepatide மற்றும் Semaglutide ஆகிய இரண்டும் GLP-1ஐ அதிகரிக்கும் பாலிபெப்டைடுகள் ஆகும். Tirzepatide ஆனது GIP, எடை மற்றும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 27க்கு மேல் BMI உள்ளவர்களுக்கும், அதுதொடர்பான சுகாதார நிலைகளுக்கும் ஏற்ற வகையில், அவை நியூரான்களைத் தூண்டி திருப்தியை ஏற்படுத்துகின்றன. இதன் பக்க விளைவுகளில் குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுவலி ஆகியவை அடங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ஆளுநர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் 361ஆவது பிரிவை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
ஆளுநர்களுக்கு எந்தவொரு குற்றவழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 361 (2)இன் வரையறைகளை ஆய்வுசெய்ய இந்திய உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
2. காலணி தயாரிப்பில் உலகில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா: மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் தகவல்.
காலணி தயாரிப்பில் உலகில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது என மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு காலணிகள் தயாரிப்பில் இந்தியா அளவில் முதலிடத்தில் உள்ளது.
3. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது: NITI ஆயோக் பாராட்டு.
வறுமை ஒழிப்பு உள்ளிட்ட 13 இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக NITI ஆயோக் பாராட்டுத் தெரிவித்துள்ளது எனத் தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்புடைய தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு:
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்று சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் – சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும், பசிப்பிணி ஒழித்தல், பொருளாதாரம், சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம், சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.
அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தலைசிறந்து விளங்குகிறது என்பது உள்பட 11 இனங்களில் தமிழ்நாடு வளங்குன்றா வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், 2 இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது.
4. தில்லியில் முதன்முறையாக உலகப்பாரம்பரிய குழுக்கூட்டம்.
உலகப் பாரம்பரிய குழுவின் கூட்டம் முதன்முறையாக தில்லியில் நடைபெறுகிறது. இதன் 46ஆவது அமர்வை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கிவைத்தார். UNESCO (ஐநாஇன் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பு) உலக பாரம்பரியக் குழுவினரால் உலகப் பாரம்பரியக் களங்கள் நிர்வகிக்கப்படுகிறது. உலகப் பாரம்பரிய பட்டியலில் வைக்கப்பட வேண்டிய தளங்களை இந்தப் பாரம்பரியக் குழுவே தீர்மானிக்கிறது. தற்போது 157 நாடுகளில் 962 களங்களில் பண்பாட்டு, மலை, ஏரி, பாலைவனம் போன்ற இயற்கைசார் களங்கள், நினைவுச்சின்னங்கள், கட்டடங்கள், நகரம் என அமைந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரத்தின் எல்லோரா குகைகள், ஹம்பி கல்ரதம் உள்ளிட்டவைகள் உலகப் பாரம்பரிய களங்களாக உள்ளன.
5. பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு.
புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன. இதுவரையிலான அகழாய்வில் இரும்பினால் ஆன ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 3 செமீ நீளமுள்ள ‘அஞ்சனக்கோல்’ எனப்படும் மை தீட்டும் குச்சி ஒன்றும் கிடைத்துள்ளது.
1. National Geophysical Research Institute is located in which city?
A. Chennai
B. Hyderabad
C. Mumbai
D. Kolkata
- Scientists from the National Geophysical Research Institute (NGRI) have discovered evidence highlighting the ancient connection between the Indian subcontinent and Antarctica. Established in 1961, NGRI, based in Hyderabad, is part of the Council of Scientific and Industrial Research (CSIR). The institute conducts research in geodynamics, earthquake hazards, and natural resources to inform sustainable geo-resource use and improve resilience to natural hazards.
2. Syphilis disease is caused by which agent?
A. Virus
B. Bacteria
C. Fungi
D. Protozoa
- Improved testing by the Mumbai AIDS Control Society (MDACS) has identified over 6,000 syphilis cases between 2018-19 and 2022-23. Syphilis, caused by the Treponema pallidum bacterium, is a sexually transmitted infection that can remain symptomless for years but may reactivate. It spreads through sexual contact and can affect unborn babies. Symptoms include painless sores and skin rashes. Treatable with antibiotics, penicillin is the most common medication, especially effective in early stages.
3. What is the primary objective of e-FAST India initiative?
A. Increase road infrastructure
B. Decarbonize road-based freight transportation
C. Promote electric vehicles for personal use
D. Enhance fuel efficiency in trucks
- NITI Aayog has launched the ‘NITI GearShift Challenge’ under the e-FAST India initiative, aimed at decarbonizing road-based freight transportation in India to meet 2070 net zero commitments. Launched in September 2022, e-FAST promotes cleaner freight solutions through national and international collaborations, supporting pilot programs and technology integration. The initiative fosters discussions among stakeholders, including government bodies and logistics providers, to enhance the adoption of electric technologies in the freight sector, backed by 12 knowledge partners.
4. What are ‘Chaperones’?
A. Critical Minerals
B. They are group of proteins
C. These are invasive plants
D. Newly discovered species of marine animals
- Researchers at the SN Bose National Centre for Basic Sciences are using a Covalent Magnetic Tweezer (CMT) to investigate protein molecules and the role of chaperones in their folding. Chaperones, group of proteins, crucial for preventing misfolding and aggregation, assist in proper protein formation, particularly under stress. Major human chaperones include HSP70 and HSP90. Misfolded proteins can lead to diseases such as Parkinson’s, Alzheimer’s, and congenital cataracts, highlighting the importance of chaperones in cellular function.
5. Which INS has been adjudged the Best Ship of the Eastern Fleet at the annual ‘Fleet Awards Function-2024’?
A. INS Delhi
B. INS Karanj
C. INS Shakti
D. INS Vagir
- At the annual ‘Fleet Awards Function-2024’ in Visakhapatnam on July 14, INS Delhi was recognized as the Best Ship of the Eastern Fleet for its operational achievements over the past year. INS Kavaratti received the award for Best Ship in the Corvettes/OPVs/LSTs category. Additionally, INS Shivalik, INS Sumedha, and INS Sumitra were acknowledged as the most spirited ships of the Sunrise Fleet for their performance in various challenging missions.
6. Which organization recently released the ‘Navigating New Horizons: A Global Foresight’ report?
A. United Nations Environment Programme
B. United Nations Development Programme
C. World Bank
D. International Monetary Fund
- The UNEP’s report “Navigating New Horizons” identifies critical global shifts exacerbating the triple planetary crisis of pollution, biodiversity loss, and climate change.
- It highlights the interconnectedness of today’s global polycrisis, which includes wars, extreme weather, and pandemics, driven by globalization. Key issues addressed include changing human-environment relationships, resource scarcity impacting global security, technological innovations like AI, increased risks from autonomous weapons, mass displacement of 1.5% of the population, and rising eco-anxiety.
7. Which institute recently unveiled plans to use technology to enhance India’s chess capabilities?
A. IIT Kanpur
B. IIT Madras
C. IIT Mandi
D. IIT Ahmedabad
- The IIT Madras Centre of Excellence in Sports Science and Analytics (CESSA) announced plans to leverage technology to enhance India’s chess capabilities. This initiative aims to boost fan engagement, provide anti-cheating solutions, and enhance chess training programs. It includes launching new courses on NPTEL and future sports education programs.
8. APSTAR-6E Satellite was developed by which country?
A. India
B. China
C. Japan
D. Russia
- China’s APSTAR-6E satellite has commenced operations after successful technical reviews in orbit and Hong Kong. Developed by the China Aerospace Science and Technology Corporation, it is China’s first all-electric propulsion communication satellite, launched on January 13, 2023. The satellite, designed to last 15 years, provides high-capacity broadband services across Southeast Asia.
9. Recently, the Serum Institute of India and Oxford University have launched a ‘high efficacy’ malaria vaccine, R21/Matrix-M, in which country?
A. Mali
B. Ivory Coast
C. Ghana
D. Nigeria
- Ivory Coast is the first country to deploy the R21 malaria vaccine developed by the Serum Institute of India and Oxford University. Authorized by multiple African countries, the vaccine aims to initially immunize 250,000 children, with plans to reach millions more with Gavi’s support. Recommended by WHO for children under five, the vaccine targets a disease responsible for over 600,000 deaths annually, predominantly in Africa.
10. What is the primary purpose of the ‘NERACE’ web portal, recently launched in Shillong?
A. To promote tourism in the Northeast
B. To connect the farming community and buyers in the Northeastern region
C. To provide educational resources for students
D. To support local art and crafts
- Union Minister Jyotiraditya Scindia launched the North East Region Agri Commodity E-Connect (NERACE) web portal and app in Shillong to benefit Northeastern farmers and buyers. NERACE supports products like spices, fruits, and vegetables, providing farmers with larger markets and better pricing. The platform supports seven languages and aims to connect producers, buyers, and service providers globally.
11. Recently, the External Affairs Minister S Jaishankar inaugurated “Maitree Udyan” as a symbol of friendship in which country?
A. Vietnam
B. Australia
C. Mauritius
D. Singapore
- External Affairs Minister Dr. S. Jaishankar inaugurated the India-Mauritius Maitree Udyan in Port Louis on July 16, 2024. He planted a tree alongside Mauritius Foreign Minister Maneesh Gobin. During his two-day visit, Dr. Jaishankar met with Prime Minister Pravind Jugnauth, visited the India-assisted Civil Service College project.
12. What is the name of the weight-loss drug recently approved by India’s drug regulator?
A. Tirzepatide
B. Pyrazinamide
C. Niacinamide
D. Atovaquone
- India’s drug regulator has approved tirzepatide, a weight-loss drug. Both tirzepatide and semaglutide, FDA-approved, are polypeptides that boost GLP-1 and, in tirzepatide’s case, GIP, regulating weight and glucose levels. They target neurons and brain mechanisms to induce satiety, suitable for those with a BMI over 27 and related health conditions. Side effects include nausea, diarrhea, vomiting, and abdominal pain.