TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 1st August 2024

1. நாட்டின் முதல் மூழ்கிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள இடம் எது?

அ. செங்கோட்டை

ஆ. ஃபதேபூர் சிக்ரி

இ. ஹுமாயூன் கல்லறை

ஈ. புலந்த் தர்வாசா

  • 2024 ஜூலை.29 அன்று, UNESCO உலகப் பாரம்பரிய தலமான ஹுமாயூனின் கல்லறையில் இந்தியாவின் முதல் மூழ்கிய அருங்காட்சியகத்தை தில்லி திறந்து வைத்தது. இந்தப் புதுமையான அருங்காட்சியகம், வரலாற்றுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன்மூலம் முகலாய வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் தனித்துவம் மிக்க காட்சியை வழங்கும். இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) இந்தியாவின் வளமான வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

2. மோங்லா துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?

அ. மியான்மர்

ஆ. வங்காளதேசம்

இ. இலங்கை

ஈ. மாலத்தீவுகள்

  • வங்காளதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான மோங்லா துறைமுகத்தில் ஒரு முனையத்தின் செயல்பாட்டு உரிமைகளைப் பெறுவதன்மூலம் இந்தியா ஓர் உத்திசார் சாதனையை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல்சார் செல்வாக்கை அதிகரிக்கிறது மற்றும் சீனாவின் பிராந்திய விரிவாக்கத்திற்கு எதிராக அதன் எல்லைப்புற உத்தியை வலுப்படுத்துகிறது. இந்தியன் போர்ட் குளோபல் லிட் (ஐபிஜிஎல்) சம்பந்தப்பட்ட இந்த ஒப்பந்தம், ஈரானில் சபஹார் மற்றும் மியான்மரில் உள்ள சிட்வே போன்ற அயல்நாட்டு துறைமுகங்களை நிர்வகிப்பதில் இந்தியாவின் முந்தைய தடத்தைப் பின்பற்றுகிறது.

3. கார்பன் சேர்ப்பு வர்த்தக திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. மின்சார அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம்

  • வேளாண் துறை தற்போது கார்பன் சேர்ப்பு வர்த்தக திட்டம் (Carbon Credit Trading Scheme), 2023இன் ஒரு பகுதியாகும் என்று மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். மின்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், கரியமில வாயு உமிழ்வு குறைப்பு இலக்குகளை மீறும் நிறுவனங்களுக்கு எரிசக்தித் திறன் பணியகத்தால் (BEE) கார்பன் சேர்ப்பு சான்றிதழ்களை வழங்குவதும் அடங்கும்.
  • இலக்குகளை அடையத் தவறிய நிறுவனங்கள் இந்தச் சான்றிதழ்களை கட்டாயம் வாங்க வேண்டும். உமிழ்வு தீவிர இலக்குகளை சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் அமைச்சகம் நிர்ணயிக்கிறது; அதே வேளையில் மின்துறை செயலர் தலைமையிலான தேசிய வழிகாட்டுதல் குழு திட்டத்தை மேற்பார்வையிடுகிறது. இது வேளாண் துறையில் கரியமில வாயு மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4. அதன் காடுகளுக்குள் நிகழ்நேர கண்காணிப்பு கேமரா மற்றும் Wi-Fi இணைப்புக்கான ஆற்றலை உருவாக்க காற்றாலை விசையாழியை நிறுவியுள்ள புலிகள் காப்பகம் எது?

அ. பெரியார் புலிகள் காப்பகம்

ஆ. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

இ. பாந்தவ்கர் புலிகள் காப்பகம்

ஈ. நம்தாபா புலிகள் காப்பகம்

  • கேரளத்தின் தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயம் (PTR) அதன் காடுகளில் நிகழ்நேர கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் Wi-Fiஐ இயக்குவதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக காற்றாலை விசையாழியை நிறுவ உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள PTR ஆனது பெரியாற்றின் பெயரால் அழைக்கப்படுகிறது. வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மற்றும் ஈரம்மிகு இலையுதிர் காடுகள் உட்பட பல்வேறு சூழலமைப்பை இக் காப்பகம் தன்னக்கத்தே கொண்டுள்ளது. யானைகள், புலிகள், காட்டுப்பன்றிகள் மற்றும் அரிய சிங்கவால் குரங்குகள் போன்ற பல்வேறு விலங்குகள் அங்கு உள்ளன.
  • மன்னர் மற்றும் பளியர்போன்ற பழங்குடி சமூகங்களின் இருப்பிடமான இந்தக்காப்புக்காடு, தேக்கு மற்றும் மூங்கில் போன்ற முக்கிய தாவரங்களையும் கொண்டுள்ளது. காற்றாலை விசையாழிகள் இந்த முக்கியமான வாழ்விடத்தில் பாதுகாப்பு மற்றும் இணைய இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

5. Jupiter Icy Moons Explorer (JUICE) என்ற திட்டத்தை உருவாக்கிய விண்வெளி நிறுவனம் எது?

அ. CNSA

ஆ. ISRO

இ. ESA

ஈ. NASA

  • ஐரோப்பிய விண்வெளி முகமையின் Jupiter Icy Moons Explorer (JUICE) என்ற திட்டம் வியாழன் மற்றும் அதன் நிலவுகளான யூரோபா, காலிஸ்டோ மற்றும் கனிமீடு ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உயிரினங்களின் சாத்தியக்கூறுகளை ஆராயவும் வியாழனின் தோற்றத்தைப் புரிந்துகொள்ளவும் எண்ணுகிறது. ‘JUICE’ வியாழனின் காந்த, கதிர்வீச்சு மற்றும் பிளாஸ்மா சூழல்களை ஆராயும். அடுத்த 4 ஆண்டுகளில் கனிமீடின் சுற்றுப்பாதையில் நுழையும் இது, பூமியின் நிலவைத் தாண்டி பிறிதொரு கோளின் நிலவைச் சுற்றி வரும் முதல் விண்வெளி ஆய்வுத் திட்டமாகும்.

6. உலோகவியல் துறையில் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக அண்மையில் தேசிய உலோகவியலாளர் விருதுகளை வழங்கிய அமைச்சகம் எது?

அ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. சுரங்க அமைச்சகம்

இ. எஃகு அமைச்சகம்

ஈ. புவி அறிவியல் அமைச்சகம்

  • இந்திய அரசின் எஃகு அமைச்சகம், செயல்பாடுகள், R&D, கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்புபோன்ற பல்வேறு துறைகளில் உலோகவியலில் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், தேசிய உலோகவியல் நிபுணர் விருதுகளை வழங்கி வருகிறது. 2024-க்கான இந்த விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் தொழிற்துறை, ஆராய்ச்சி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. பின்வரும் நான்கு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது: வாழ்நாள் சாதனையாளர் விருது; தேசிய உலோகவியலாளர் விருது; இளம் உலோகவியலாளர் விருது அ) சூழல் ஆ) உலோக அறிவியல் இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது.
  • தொழில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது கல்வியில் தங்கள் பணிமூலம் இந்தியாவில் உலோகவியல் துறையில் பங்களித்த இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.

7. நிபுண் (NIPUN) பாரதம் திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?

அ. மின்சார அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. வேளாண்மை அமைச்சகம்

ஈ. சுரங்க அமைச்சகம்

  • தேசியக் கல்விக்கொள்கை-2020இன்கீழ் கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட புரிதல் மற்றும் எண்ணியல் (NIPUN Bharat) நோக்கத்துடன் படித்தல் நிபுணத்துவத்திற்கான தேசிய முன்முயற்சி, 3 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு & எண்ணறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசிய, மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் பள்ளி மட்டங்களில் ஐந்து அடுக்கு அமைப்புமூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் 2026-27ஆம் ஆண்டுக்குள் அனைவரும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அடைய எண்ணுகிறது. இது பள்ளிக் கல்விக்கான அணுகலை மேம்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி, கற்றல் வளங்களை மேம்படுத்துதல் மற்றும் மாணவர் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது. நிபுண் பாரதம் திட்டம் என்பது சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒருபகுதியாகும். இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

8. அண்மையில், ஆங்கிலக் கால்வாயைக் கடந்த உலகின் இளம் பாரா நீச்சல் வீரர் / வீராங்கனை யார்?

அ. நிரஞ்சன் முகுந்தன்

ஆ. ரிமோ சாஹா

இ. சத்யேந்திர சிங்

ஈ. ஜியா ராய்

  • மும்பையைச் சேர்ந்த பதினாறு வயது ஜியா ராய், 2024 ஜூலை 28-29 அன்று 17 மணி 25 நிமிடங்களில் 34 கிமீ தூரத்தை நீந்தி ஆங்கிலக் கால்வாயைக் கடந்த இளம் மற்றும் அதிவேக பாரா நீச்சல் வீராங்கனை ஆனார். மதி இறுக்க கோளாறு உடையவரும், பாக் நீரிணையைக் கடந்து சாதனை படைத்த இந்திய கடற்படை வீரர் ஒருவரின் மகளுமானவர் ஜியா ராய். ஆங்கிலக் கால்வாயானது இங்கிலாந்தை பிரான்சிலிருந்து பிரிக்கிறது. முதன்முதலில் 1875இல் கேப்டன் மேத்யூ வெப் இதனை நீந்திக்கடந்தார்.

9. அண்மையில், நீரிழிவு மருத்துவத்தில் தனது பங்களிப்பிற்காக, “வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்ற மத்திய அமைச்சர் யார்?

அ. அன்னபூர்ணா தேவி

ஆ. ஜகத் பிரகாஷ்

இ. ஜிதேந்திர சிங்

ஈ. நிரந்தர் குமார் சிங்

  • முன்னணி மருத்துவ பிரபலங்கள், வல்லுநர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு நீரிழிவு மருத்துவம், நீரிழிவு பராமரிப்பு, நீரிழிவு ஆராய்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக மதிப்புமிக்க “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய நீரிழிவு நிபுணர்கள் சங்கமான RSSDIஇன், “வாழ்நாள் நலன்விரும்பியாகவும்” அவர் அப்போது கௌரவிக்கப்பட்டார்.

10. மேகேதாட்டு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • மேகேதாட்டு திட்டம் குறித்து தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க கர்நாடக மாநில முதலமைச்சர் தயாராகவுள்ளார். இந்தப் பல்நோக்கு திட்டம் தமிழ்நாட்டிற்கு அருகில் கர்நாடக மாநிலத்தில் கனகபுரம் அருகே சமன்செய் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காவேரி மற்றும் ஆர்காவதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் 66,000 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டி பெங்களூருவுக்கு 4 டிஎம்சி குடிநீரை வழங்குவது இந்தத் திட்டத்தில் அடங்கும். இதற்கு `14,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

11. “உலகின் சதுப்புநிலங்களின் நிலை–2024” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. அனைத்துலக சதுப்புநிலங்கள் கூட்டமைப்பு

ஆ. IUCN

இ. UNDP

ஈ. UNEP

  • அனைத்துலக சதுப்புநிலங்கள் கூட்டமைப்பின், “உலகிலுள்ள சதுப்புநிலங்களின் நிலை-2024” அறிக்கையானது இந்தோனேசியாவின் 21%த்துடன் தென்கிழக்காசியா உலகிலுள்ள சதுப்புநிலங்களில் கிட்டத்தட்ட 1/3 பகுதியைக் கொண்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது. இலட்சத்தீவுகள் மற்றும் தமிழ்நாடு உட்பட உலகின் பாதி சதுப்புநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. தட்பவெப்பநிலை மாற்றம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தொழில்முறை ரீதியான இறால் மீன் வளர்ப்பு மற்றும் எண்ணெய்ப்பனை தோட்டங்கள் உருவாக்கம் மற்றும் நெல் சாகுபடிக்கு மாறுதல் ஆகியவை சதுப்புநிலங்கள் இழப்பின் முக்கிய காரணிகளாக உள்ளன.

12. சார்லஸ் டார்வினின் தவளை என்பது இந்தியாவின் எந்தப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது?

அ. லடாக்

ஆ. அந்தமான் தீவுகள்

இ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஈ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

  • அந்தமான் தீவுகளைப் பூர்வீகமாகக் கொண்ட சார்லஸ் டார்வின் தவளை இனமானது வாழ்விட இழப்பு மற்றும் வளப் போட்டி காரணமாக இயற்கைக்கு மாறான இடங்களில் இனப்பெருக்கம் செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ‘Dicroglossidae’ குடும்பத்தின் ஒருபகுதியான இந்தத் தவளை, வித்தியாசமான குரலழைப்புகள், போட்டியாளர்களுடன் சண்டையிடுவது உட்பட, தனித்துவமான இனச்சேர்க்கை நடத்தையை வெளிப்படுத்துகிறது. இந்த இனங்கள் தற்போது IUCNஆல் ‘பாதிக்கப்படக்கூடியவை’ பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்ப்புதல்வன் திட்டம்: கோயம்புத்தூரில் ஆக.09இல் தொடக்கம்.

அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் `1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை கோயம்புத்தூரில் ஆக.09ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

1. Recently, where was the country’s first sunken museum inaugurated?

A. Red Fort

B. Fatehpur Sikri

C. Humayun Tomb

D. Buland Darwaza

  • On July 29, 2024, Delhi unveiled India’s first sunken museum at the UNESCO World Heritage site, Humayun’s Tomb. This innovative museum will offer a unique view of Mughal history and architecture by integrating advanced technology with historical displays. The Archaeological Survey of India (ASI) has spearheaded the project in collaboration with various stakeholders, aiming to enhance the preservation and presentation of India’s rich historical legacy.

2. Mongla Port is located in which country?

A. Myanmar

B. Bangladesh

C. Sri Lanka

D. Maldives

  • India has achieved a strategic milestone by securing operational rights to a terminal at Mongla port, Bangladesh’s largest seaport. This development boosts India’s maritime influence in the Indian Ocean and strengthens its border strategy against China’s regional expansion. The deal, involving Indian Port Global Limited (IPGL), follows India’s previous successes in managing overseas ports like Chabahar in Iran and Sittwe in Myanmar.

3. Carbon Credit Trading Scheme is an initiative of which ministry?

A. Ministry of Rural Development

B. Ministry of Agriculture

C. Ministry of Power

D. Ministry of Defence

  • The Union Minister for Agriculture and Farmers’ Welfare recently announced that the agriculture sector is now part of the Carbon Credit Trading Scheme, 2023. This scheme, initiated by the Ministry of Power, involves issuing carbon credit certificates by the Bureau of Energy Efficiency (BEE) to entities that exceed their emission reduction targets.
  • Entities failing to meet targets must buy these certificates. The Ministry of Environment, Forest, and Climate Change sets emission intensity targets, while a National Steering Committee chaired by the Power Secretary oversees the scheme. This inclusion aims to enhance carbon management in agriculture.

4. Recently, which tiger reserve has installed a wind turbine to generate power for real-time monitoring camera and Wi-Fi connectivity within its forests?

A. Periyar Tiger Reserve

B. Kalakkad Mundanthurai Tiger Reserve

C. Bandhavgarh Tiger Reserve

D. Namdapha Tiger Reserve

  • Periyar Tiger Reserve (PTR) in Thekkady, Kerala, has taken a significant step by installing a wind turbine to power real-time monitoring cameras and Wi-Fi in its forest. Located in the Western Ghats, PTR is named after the Periyar River and supports a diverse ecosystem, including tropical evergreen and moist deciduous forests.
  • Its wildlife comprises elephants, tigers, wild pigs, and various primates such as the rare lion-tailed macaque. The reserve, home to tribal communities like the Mannans and Palians, also features key flora like teak and bamboos. The wind turbine aims to enhance conservation and connectivity in this critical habitat.

5. Jupiter Icy Moons Explorer (JUICE) Mission was developed by which space agency?

A. CNSA

B. ISRO

C. ESA

D. NASA

  • The European Space Agency’s Jupiter Icy Moons Explorer (JUICE) is aimed at exploring Jupiter and its moons Europa, Callisto, and Ganymede, seeks to investigate the potential for life and understand Jupiter’s origins. JUICE will study Jupiter’s magnetic, radiation, and plasma environments, and in about four years, it will enter orbit around Ganymede, marking the first probe to orbit a planetary moon other than Earth’s.

6. Which ministry has recently conferred National Metallurgist Awards to recognize outstanding contributions in the metallurgical field?

A. Ministry of Science and Technology

B. Ministry of Mines

C. Ministry of Steel

D. Ministry of Earth Sciences

  • The Ministry of Steel, Government of India, has awarded the National Metallurgist Awards, honoring contributions in metallurgy across various fields such as Operations, R&D, Waste Management, and Energy Conservation.
  • The awards are open to individuals from industry, research, and academia. They are presented in four categories: Lifetime Achievement Award, National Metallurgist Award, Young Metallurgist Award, and the Award for R&D in the Iron & Steel Sector. These awards recognize significant achievements and advancements in metallurgical science and practice.

7. NIPUN Bharat Mission is launched by which ministry?

A. Ministry of Power

B. Ministry of Education

C. Ministry of Agriculture

D. Ministry of Mines

  • The National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy (NIPUN Bharat) mission, launched by the Ministry of Education under NEP 2020, aims to enhance foundational literacy and numeracy among children aged 3 to 9 years. Implemented through a five-tier system at national, state, district, block, and school levels, this mission seeks to achieve universal FLN skills by 2026-27.
  • It focuses on improving access to schooling, teacher training, development of learning resources, and tracking student progress. NIPUN Bharat is part of the Samagra Shiksha scheme, applying to all government, aided, and private schools.

8. Recently, which Indian became the youngest para swimmer in the world to cross the English Channel?

A. Niranjan Mukundan

B. Rimo Saha

C. Satyendra Singh

D. Jiya Rai

  • Sixteen-year-old Jiya Rai from Mumbai became the youngest and fastest para swimmer to cross the English Channel, swimming 34 kilometers in 17 hours and 25 minutes on July 28-29, 2024. Jiya, who has autism spectrum disorder and is the daughter of an Indian Navy personnel, also holds the record for crossing the Palk Strait. The English Channel separates England from France, first swum by Captain Matthew Webb in 1875.

9. Recently, which Union Minister received the “Lifetime Achievement Award” for his contributions in diabetology?

A. Annpurna Devi

B. Jagat Prakash

C. Jitendra Singh

D. Nirantar Kumar Singh

  • At an international medical meet, Union Minister Dr. Jitendra Singh received the “Lifetime Achievement Award” for his contributions to diabetology, diabetes care, and research. He was also honored as the Lifetime Patron of RSSDI, India’s largest diabetologists’ association.

10. Mekedatu Project is associated with which state?

A. Tamil Nadu

B. Karnataka

C. Kerala

D. Andhra Pradesh

  • The Karnataka Chief Minister is ready to discussing the Mekedatu project with Tamil Nadu. This multi-purpose project aims to build a balancing reservoir near Kanakapura in Karnataka, close to Tamil Nadu. The project involves constructing a dam at the confluence of the Cauvery and Arkavathi rivers, with a capacity of 66,000 TMC, supplying over 4 TMC of drinking water to Bengaluru. The estimated cost is around Rs 14,000 crores.

11. Which organization recently released the report titled “The State of the World’s Mangroves 2024”?

A. Global Mangrove Alliance

B. IUCN

C. UNDP

D. UNEP

  • The “State of the World’s Mangroves 2024” report by the Global Mangrove Alliance highlights that Southeast Asia holds nearly one-third of global mangroves, with Indonesia having 21%. Half of the world’s mangroves are threatened, including those in Lakshadweep and Tamil Nadu. Key drivers of mangrove loss are climate change, industrial shrimp aquaculture in Andhra Pradesh, West Bengal, Gujarat, and conversion to oil palm plantations and rice cultivation.

12. Charles Darwin’s frog is endemic to which region of India?

A. Ladakh

B. Andaman Islands

C. Western Ghats

D. Eastern Ghats

  • Researchers found that the Charles Darwin’s frog, native to the Andaman Islands, may be breeding in unnatural sites due to habitat loss and resource competition. This frog, part of the Dicroglossidae family, exhibits unique mating behavior, including males using complex calls and fighting rivals. The species is currently listed as Vulnerable by the IUCN.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!