Tnpsc Current Affairs in Tamil & English – 1st and 2nd September 2024
1. அண்மையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் கடற்கரையில் உருவான புயலின் பெயர் என்ன?
அ. குலாபி
ஆ. ஜாவர்
இ. அஸ்னா
ஈ. சத்ராங்
- அஸ்னா புயல் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்திலிருந்து உருவாகி அரபிக் கடலில் வெப்பமண்டலப் புயலாக மாறவுள்ளது. சூடான கடல்நீரில் உருவாகும் வழக்கமான புயல்கள் போலல்லாமல், அஸ்னா குஜராத் மாநிலத்தில் நிலத்தில் உருவானது. வரலாற்று ரீதியாக, புயல்கள் ஆகஸ்ட் (1976, 1964, மற்றும் 1944) மும்முறை மட்டுமே இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தோன்றி அரபிக்கடலுக்குள் நகர்ந்தபோது வலுப் பெற்றுள்ளன.
2. நவம்பரில், ‘பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை – 2024’ நடைபெறவுள்ள மாநிலம் எது?
அ. பீகார்
ஆ. ஹரியானா
இ. உத்தரபிரதேசம்
ஈ. ஒடிசா
- 2024ஆம் ஆண்டு பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிரில் நவ.11-20 வரை நடைபெறவுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ராஜ்கிர் ஹாக்கி அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வு பீகாருக்கு ஒரு சாதனையாகும். இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட முன்னணி ஆசிய அணிகள் பங்கேற்கின்றன.
3. அண்மையில், உலக சுகாதார அமைப்பால், நேபாளத்தின் எந்நகரம் ‘நலமான நகரம்’ என அங்கீகரிக்கப்பட்டது?
அ. பரத்பூர்
ஆ. பிரத்நகர்
இ. துளிகேல்
ஈ. தரன்
- உலக சுகாதார அமைப்பால், ‘நலமான நகரம்’ என அங்கீகரிக்கப்பட்ட நேபாள நாட்டின் முதல் நகரமாக துளிகேல் ஆனது. காத்மாண்டுவில் இருந்து 18 மைல் தொலைவில் அமைந்துள்ள காவ்ரேபாலஞ்சோக் மாவட்டத்தில் துளிகேல் அமைந்துள்ளது. 2024 ஆகஸ்டில் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு WHO துளிகேலை இரண்டு ஆண்டுகள் கண்காணித்தது. WHOஇன் முடிவு சுற்றுச்சூழல் மேம்பாடுகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பில் முன்னேற்றம் மற்றும் ஏழைமக்களுக்கான சுகாதார அணுகல்போன்ற காரணிகளின் அடிப்படையில் அமைந்தது. ஆசியாவின் 2ஆவது ‘நலமான நகரமாக’ துளிகேல் ஆனது.
4. அரசுப்பள்ளிகளில் இசை மற்றும் நடனக்கல்வியை மேம்படுத்துவதற்காக ‘இசை குடில்’ திட்டத்தைத் தொடங்கிய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. புதுச்சேரி
இ. கேரளா
ஈ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
- அரசுப்பள்ளிகளில் இசை மற்றும் நடனக்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘இசை குடில்’ திட்டம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம் இந்த முன்னெடுப்புக்கு உதவுகிறது. சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசைக்குடில் அமைக்கப்பட்டு வருகிறது. வாரம் இருமுறை இசை வகுப்புகள் இரண்டு மணி நேரம் நடைபெறும். இத்திட்டம் வெவ்வேறு வகுப்பு நிலைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களைக் கொண்டுள்ளது.
5. இந்திய அரசின் புதிய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அ. அலோக் பானர்ஜி
ஆ. T V சோமநாதன்
இ. S C மஜூம்தார்
ஈ. ரிங்கு டுக்கா
- இந்தியாவின் 33ஆவது அமைச்சரவைச் செயலாளராக T V சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ஆகஸ்ட் முதல் நீண்டகாலம் பதவி வகித்த அமைச்சரவைச் செயலாளரான இராஜீவ் கௌபாவைத் தொடர்ந்து அவர் பதவியேற்றார். 1982ஆம் ஆண்டுத்தொகுதி இஆப அதிகாரியான இராஜீவ் கௌபா, 2024 ஆகஸ்ட் வரை 3 ஓராண்டு நீட்டிப்புகளைப் பெற்றார். இராஜீவ் கௌபாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க அரசாங்கம் ஓய்வு விதிகளை திருத்தியது.
- இராஜீவ் கௌபாவுக்கு முன், பிரதீப் குமார் சின்ஹா 4 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சரவைச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தார். 1987ஆம் ஆண்டுத்தொகுதி தமிழ்நாடு பிரிவு இஆப அதிகாரியான சோமநாதன், முன்பு நிதித்துறைச்செயலாளராகவும், செலவினச் செயலாளராகவும் இருந்தார். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், பட்டயக்கணக்காளராக உள்ளார். தமிழ்நாட்டிலும் உலக வங்கியிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளார்.
6. குளம்புவாய் நோய் என்றால் என்ன?
அ. பறவைகளைத் தாக்கும் பூஞ்சை நோய்
ஆ. கால்நடைகளைத் தாக்கும் வைரஸ் நோய்
இ. தாவர நோய்
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய எட்டு மாநிலங்களில் குளம்புவாய் நோய் இல்லாத மண்டலங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குளம்புவாய் நோய் என்பது கால்நடைகள், பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் ஆடுகள்போன்ற கால் நடைகளைப்பாதிக்கும் தொற்று வைரஸ் நோயாகும். ஆனால் இவ்வைரஸ் குதிரைகள், நாய்கள் (அ) பூனைகளைப் பாதிப்பது கிடையாது. கால்நடை உற்பத்தியைப் பாதிப்பதோடு வர்த்தகத்தை சீர்குலைக்கின்ற இதனால் மனித நலம் அல்லது உணவு பாதுகாப்பிற்கு அபாயமேதுமில்லை.
7. அண்மையில், ‘ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்’ போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
அ. ஹிமான்ஷி டோகாஸ்
ஆ. துலிகா மான்
இ. ஜெயா சவுத்ரி
ஈ. சுசீலா தேவி
- ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் ஹிமான்ஷி டோகாஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். தென் கொரியாவின் முங்கியோங் நகரில் இந்நிகழ்வு நடைபெற்றது. பெண்களுக்கான 63 கிகி எடைப்பிரிவில் ஹிமான்ஷி டோகாஸ் போட்டியிட்டார். 19 வயதான அவர் கேலோ பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக பங்கேற்றார். இந்தியாவில் இருந்து 12 உறுப்பினர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். முங்கியோங் ஜிம்னாசியத்தில் இந்நிகழ்வு நிறைவுறும்.
8. அண்மையில், ‘7ஆவது ராஷ்ட்ரிய போஷன் மா’ தொடங்கப்பட்ட இடம் எது?
அ. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
ஆ. காந்திநகர், குஜராத்
இ. பாட்னா, பீகார்
ஈ. போபால், மத்திய பிரதேசம்
- ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்ட ஏழாவது ராஷ்டிரிய போஷன் மா ஆனது செப்.01 முதல் குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், “தாயின் பெயரில் ஒரு மரம்” என்றழைக்கப்படும் நாடு தழுவிய மரம்நடும் இயக்கத்துடன் இது தொடங்கியது.
- நடுவண் அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ‘போஷன் 2.0’இன் தூண்களை கோடிட்டுக்காட்டினார்: நல்ல நிர்வாகம், ஒருங்கிணைப்பு, திறன்மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பு. இந்தப் பரப்புரையானது இரத்த சோகை, வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது; இது ‘சுபோஷித் பாரத்’ என்ற நோக்கத்தை ஆதரிக்கிறது.
9. 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முதல் வெண்கலப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்த இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?
அ. பாலக் கோஹ்லி
ஆ. ஏக்தா பயான்
இ. கரம்ஜோதி தலால்
ஈ. ப்ரீத்தி பால்
- ப்ரீத்தி பால், 2024 பாரீஸ் பாராலிம்பிக்கில் தடகளப்போட்டிகளில் இரண்டு பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப்பெண்மணி ஆனார். பெண்களுக்கான 200 மீ T35 வகுப்பில் 30.01 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து அவர் வெண்கலம் வென்றார். முன்னதாக, இதே போட்டியில் 100 மீ T35 வகுப்பில் மற்றொரு வெண்கலம் வென்றார். சீனாவைச் சேர்ந்த சியா சோவ் மற்றும் குவோ கியான்கியான் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.
10. அண்மையில், 2024 – பாரிஸ் பாராலிம்பிக்கில், கீழ்க்காணும் எந்த நிகழ்வில் நிஷாத் குமார் வெள்ளி வென்றார்?
அ. உயரந்தாண்டுதல்
ஆ. துப்பாக்கிச் சுடுதல்
இ. மல்யுத்தம்
ஈ. டேபிள் டென்னிஸ்
- செப்.02ஆம் தேதி நடந்த பாரிஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் T47 உயரந்தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2.04 மீ உயரந்தாண்டி இரண்டாவது இடத்தைப்பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இதற்கு முன்பு வெள்ளிவென்ற அவரது இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவாகும். அமெரிக்காவைச் சேர்ந்த டன்சென்ட்-ராபர்ட்ஸ் 2.08 மீ உயரந்தாண்டி தங்கம் வென்றார். ரஷ்யாவைச் சேர்ந்த ஜார்ஜி மார்கிவ் வெண்கலம் வென்றார்.
11. அண்மையில், எந்த ஜப்பானிய அனிமேட்டருக்கு, 2024ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது?
அ. கோரோ புஜிடா
ஆ. ஹயாவோ மியாசாகி
இ. ஹிரோயுகி இமைஷி
ஈ. கோஜி நான்கே
- ஜப்பானிய அனிமே இயக்குநர் ஹயாவோ மியாசாகி அண்மையில் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ரமோன் மகசேசே விருதை வென்றார். இந்த விருதின் வெற்றியாளர்கள் ரமோன் மகசேசேயின் சுயவிவரத்துடன் சான்றிதழ் மற்றும் பதக்கத்தைப்பெறுவார்கள். 1958 முதல் 2008 வரை, அரசுப்பணி, பொதுப்பணி, சமூகத்தலைமை, இதழியல் மற்றும் படைப்பாற்றல் கலை, அமைதி மற்றும் பன்னாட்டு புரிதல் மற்றும் வளர்ந்து வரும் தலைமைத்துவம் ஆகிய ஆறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் ஆக.31ஆம் தேதி பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும். ரமோன் மகசேசேயின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது.
12. அண்மையில் அதன் 7ஆவது நிறுவன நாளைக் கொண்டாடிய இந்தியா அஞ்சல் கட்டண வங்கியுடன் (IPPB) தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. வர்த்தக அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. தகவல் தொடர்பு அமைச்சகம்
- இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (IPPB) அண்மையில் தனது 7ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்திய அரசின் 100% உரிமையுடன், தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையின்கீழ் IPPB நிறுவப்பட்டது. இது இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் திறமையான வங்கிச்சேவைகளை வழங்குவதையும், நிதிப் பாதுகாப்பையும் அதிகாரமளிப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. IPPB நாடு முழுவதும் உள்ள 1,61,000 அஞ்சல் அலுவலகங்களின் பரந்த அஞ்சல் வலையமைப்பை தனது சேவைக்குப் பயன்படுத்துகிறது.
- IPPBஆல் வழங்கப்படும் சேவைகளில் சேமிப்பு மற்றும் நடப்புக்கணக்குகள், நேரடிப்பலன் பரிமாற்றங்கள், கட்டணம் மற்றும் பயன்பாட்டுப்பணம் மற்றும் கடன்கள் மற்றும் காப்பீடுபோன்ற மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் குறித்த வலைத்தொடர்: நடுவண் அரசு ஒப்புதல்.
ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கிப்புலிகள் குறித்த 4 பாகங்கள் கொண்ட ஆவண வலைத்தொடரை (web-series) படமாக்க நடுவண் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வாழ்விட இழப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப்புலி (சீட்டா) இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் ‘சிவிங்கிப்புலி திட்டம்’ கடந்த 2009ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கடந்த 2022 செப்டம்பரில் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளைக்கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டுவரப்பட்டது. 2ஆம் கட்டமாக கடந்தாண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கிப்புலிகளுடன் சேர்த்து இதுவரை இருபது சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளன.
2. ஏழாவது தேசிய ஊட்டச்சத்து மாதம்: 2024 செப்டம்பர்.01 முதல் செப்டம்பர்.30 வரை.
3. திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.
திமுக சார்பில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘பெரியார் விருது’ – பாப்பம்மாள், ‘அண்ணா விருது’ – அறந்தாங்கி மிசா இராமநாதன், ‘கலைஞர் விருது’ – ஜெகத்ரட்சகன், ‘பாவேந்தர் விருது’ – தமிழ்தாசன், ‘பேராசிரியர் விருது’ – வி பி இராஜன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
1. What is the name of the cyclone that recently formed over the Kutch coast in Gujarat?
A. Cyclone Gulabi
B. Cyclone Jawar
C. Cyclone Asna
D. Cyclone Satrang
- Cyclone Asna formed from a deep depression over Gujarat’s Kutch region and is set to become a tropical cyclone over the Arabian Sea. Unlike typical cyclones that form over warm ocean waters, Asna developed over land in Gujarat. Historically, cyclones have originated over mainland India only three times in August (1976, 1964, and 1944) and strengthened as they moved into the Arabian Sea.
2. Which state will host the ‘Women’s Asian Champions Trophy 2024’ in November?
A. Bihar
B. Haryana
C. Uttar Pradesh
D. Odisha
- The Women’s Asian Champions Trophy hockey tournament in 2024 will be held in Rajgir, Bihar, from November 11-20. This event is a milestone for Bihar, as it will take place at the newly-developed Rajgir Hockey Stadium. Top Asian teams, including India, China, Japan, and Korea, will compete in the tournament.
3. Which city of Nepal recently recognized as a ‘healthy city’ by the World Health Organization?
A. Bharatpur
B. Biratnagar
C. Dhulikhel
D. Dharan
- Dhulikhel, Nepal, is the first city in the country to be recognized as a “healthy city” by the World Health Organization (WHO). Dhulikhel is located in the Kavrepalanchok district, about 18 miles from Kathmandu. The WHO monitored Dhulikhel for two years before making the announcement in August 2024. The WHO’s decision was based on factors like environmental improvements, progress in primary health care, and access to health for poor citizens. Dhulikhel was also named the second healthiest city in Asia.
4. Which state/UT recently launched ‘Isai Kudil Scheme’ to enhance music and dance education in government schools?
A. Tamil Nadu
B. Puducherry
C. Kerala
D. Andaman & Nicobar Islands
- The Isai Kudil scheme was launched in Puducherry to boost music and dance education in government schools. Bharathiar University supports this initiative. A musical hut is being set up at Chinnatha Government Girls Higher Secondary School. Music classes will be held twice a week for two hours. The scheme offers tailored syllabi for different class levels.
5. Who has been appointed as the new Cabinet Secretary for the Government of India?
A. Alok Banerjee
B. T.V. Somanathan
C. S.C.Majumdar
D. Rinku Dugga
- TV Somanathan has been appointed as the 33rd Cabinet Secretary of India. He succeeded Rajiv Gauba, the longest-serving Cabinet Secretary since August 2019. Rajiv Gauba, a 1982 batch IAS officer, got three one-year extensions until August 2024.
- The government amended retirement rules to extend Gauba’s term. Before Gauba, Pradeep Kumar Sinha held the longest term as Cabinet Secretary for over four years. Somanathan, a 1987 batch Tamil Nadu cadre IAS officer, was previously Finance Secretary and Expenditure Secretary. He has a PhD in Economics, is a Chartered Accountant, and has held significant roles in Tamil Nadu and the World Bank.
6. What is Foot-and-mouth disease?
A. Fungus disease of Birds
B. Viral disease of livestock
C. Plant disease
D. None of the above
- The Union government has decided to establish foot-and-mouth disease-free zones in eight states: Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Telangana, Uttarakhand, Punjab, Haryana, Gujarat and Maharashtra. Foot-and-mouth disease (FMD) is a highly contagious viral illness affecting livestock such as cattle, swine, sheep, and goats, but not horses, dogs, or cats. It impacts livestock production and disrupts trade but poses no human health or food safety risk.
7. Recently, which Indian athlete won the silver medal at the ‘Asian Cadet Judo Championships’?
A. Himanshi Tokas
B. Tulika Maan
C. Jaya Chaudhary
D. Sushila Devi
- Himanshi Tokas won a silver medal at the Asian Cadet and Junior Judo Championships. The event took place in Mungyeong, South Korea. Himanshi competed in the women’s 63-kilogram weight category. She is 19 years old and part of the Khelo Bharat program. 12 members from India participated in the competition. The event is concluded at the Mungyeong Gymnasium.
8. Recently, where was the ‘7th Rashtriya Poshan Maah’ launched?
A. Jaipur, Rajasthan
B. Gandhinagar, Gujarat
C. Patna, Bihar
D. Bhopal, Madhya Pradesh
- The 7th Rashtriya Poshan Maah began from 1 September at Mahatma Mandir in Gandhinagar, Gujarat, focusing on nutrition awareness and well-being. Union Minister Annpurna Devi, Gujarat’s Chief Minister Bhupendrabhai Patel, and other officials attended the event.
- The day started with a nationwide tree-planting drive called “Ek Ped Maa Ke Naam,” promoting nutrition and environmental sustainability. Union Minister Annpurna Devi outlined Poshan 2.0’s pillars: good governance, convergence, capacity building, and community participation. The campaign will focus on issues like anemia, growth monitoring, and complementary feeding, supporting the vision of a ‘Suposhit Bharat.’
9. Which Indian athlete created a history by winning India’s first bronze medal in 200m race at 2024 Paris Paralympics?
A. Palak Kohli
B. Ekta Bhyan
C. Karamjyoti Dalal
D. Preeti Pal
- Preethi Pal became the first Indian woman to win two Paralympic medals in track and field events at Paris Paralympics 2024. She won bronze in the women’s 200m T35 class with a personal best time of 30.01 seconds. Earlier, she had secured another bronze in the 100m T35 class at the same event. She was outpaced by Xia Zhou and Guo Qianqian from China, who won gold and silver, respectively.
10. Nishad Kumar recently won a silver medal in which event at the 2024 Paris Paralympics?
A. High Jump
B. Shooting
C. Wrestling
D. Table Tennis
- Nishad Kumar won a silver medal in the men’s T47 high jump at the Paris Paralympics on September 2. He achieved a season-best jump of 2.04 meters to secure second place. This was his second silver medal, having previously won silver at the Tokyo Paralympics. Townsend-Roberts from the United States won the gold medal with a jump of 2.08 meters. Georgii Margiev from Russia secured the bronze medal.
11. Recently, which Japanese animator has been honored with the prestigious Ramon Magsaysay Award for 2024?
A. Goro Fujita
B. Hayao Miyazaki
C. Hiroyuki Imaishi
D. Koji Nanke
- Japanese anime director Hayao Miyazaki recently won the Ramon Magsaysay Award, known as Asia’s Nobel Prize. Winners receive a certificate and a medallion with Ramon Magsaysay’s profile.
- From 1958 to 2008, the award was given in six categories: Government Service, Public Service, Community Leadership, Journalism and Creative Arts, Peace and International Understanding, and Emergent Leadership. The award ceremony is held annually on Aug.31 in Manila, Philippines, marking the birth anniversary of President Ramon Magsaysay, after whom the award is named.
12. India Post Payments Bank (IPPB), recently marked its 7th foundation day, operates under which ministry?
A. Ministry of Home Affairs
B. Ministry of Commerce
C. Ministry of Finance
D. Ministry of Communication
- India Post Payment Bank (IPPB) recently celebrated its 7th Foundation Day. IPPB was established under the Department of Posts, Ministry of Communication, with 100% ownership by the Government of India. It aims to provide efficient banking services to every household in India, enhancing financial security and empowerment.
- IPPB leverages a vast postal network of over 1,61,000 post offices across the country. Services offered include savings and current accounts, Direct Benefit Transfers, bill and utility payments, and access to third-party products like loans and insurance.