TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 1st and 2nd October 2024

1. அண்மையில், மார்பர்க் வைரஸ் பாதித்ததாக அறிவித்த ஆப்பிரிக்க நாடு எது?

அ. தான்சானியா

ஆ. கென்யா

இ. சோமாலியா

ஈ. ருவாண்டா

  • அண்மையில், ருவாண்டாவில் மார்பர்க் வைரஸ் பாதித்ததால் ஆறு பேர் இறந்தனர். மார்பர்க் வைரஸ் நோய் (MVD) என்பது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் அரிதான ஆனால் கடுமையான இரத்தக்கசிவு காய்ச்சலாகும். MVD ஆனது Filoviridae குடும்பத்தைச் சேர்ந்த எபோலா வைரஸைப் போலவே மார்பர்க் வைரஸால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1967இல் ஜெர்மனியின் மார்பர்க் நகரத்தில் கண்டறியப்பட்டது; இது பாதிக்கப்பட்ட பச்சை குரங்குகளுடன் தொடர்புடையதாகும். ஆப்பிரிக்க பழ வௌவால்களே இவ்வைரஸின் முதன்மை ஓம்புயிரி ஆகும்; உடல் திரவங்களுடனான நேரடி தொடர்புமூலம் இது பரவுகிறது.

2. ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினருக்கான முன்னெடுப்பை ஆதரித்த நாடு எது?

அ. நேபாளம்

ஆ. இலங்கை

இ. பூடான்

ஈ. மியான்மர்

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 79ஆவது அமர்வின்போது, ​​சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர இடம்பெறுவதற்கான இந்தியாவின் முன்னெடுப்புக்கு பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே தனது வலுவான ஆதரவை தெரிவித்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள தலைமை இந்த அந்தஸ்துக்கு தகுதியானது என்று அவர் வலியுறுத்தினார். சமீபத்தில் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரிவில் பூடான் இடம்பெற்றது.

3. அண்மைய தரவுகளின்படி, பிரதமர் சூர்யா கர்: மஃப்ட் பிஜிலி யோஜனாவின்கீழ் மேற்கூரை சூரியவொளி மின் ஆற்றல் உற்பத்தி நிறுவுந்திறனில் நாட்டிலேயே முன்னணியில் உள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. மத்திய பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • குஜராத் மாநிலத்தில் பிரதமர் மஃப்ட் பிஜிலி சோலார் யோஜனா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சூரியவொளித் தகடுகளை பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டார். பிரதமர் சூர்யா கர்: மஃப்ட் பிஜிலி சோலார் யோஜனாவானது நிதி மானியங்கள் மற்றும் எளிதான நிறுவலை வழங்குவதன்மூலம் மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் 300 அலகு வரை இலவச மின்சாரம் பெறலாம். 4,195 MW உடன் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், 2,487 MW உடன் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 1,269 MW உடன் ராஜஸ்தான் மூன்றாமிடத்திலும் உள்ளது. இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட மேற்கூரை சூரியவொளி மின்னுற்பத்தித் திறன் 13,889 MW ஆகும்.

4. ஹெபடைடிஸ் E வைரஸின் (HEV) ரோகாஹெபெவைரஸ் ராட்டி வகையின் முதன்மை மூலம் எது?

அ. பன்றிகள்

ஆ. எலிகள்

இ. கொசுக்கள்

ஈ. பறவைகள்

  • “எலி HEV” என்று பொதுவாக அழைக்கப்படும் ரோகாஹெப் வைரஸ் ராட்டி திரிபானது முதன்மையாக எலிகளில் வாழ்கிறது மற்றும் மனிதர்களைப் பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2018இல் அதன் முதல் மனித பாதிப்பு பதிவாகியது; அவை பெரும்பாலும் பச்சை பன்றி இறைச்சியின் நுகர்வுடன் இணைக்கப்படுகிறது. எலி HEV பன்றிகளைப்பாதித்து அவற்றில் பரவக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹெபடைடிஸ் E ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார பிரச்சினையாக உள்ளது.

5. அண்மையில், தொழுநோயை ஒழித்த உலகின் முதல் நாடாக மாறிய நாடு எது?

அ. ஜோர்டான்

ஆ. இந்தியா

இ. கென்யா

ஈ. ரஷ்யா

  • தொழுநோயை ஒழித்த முதல் நாடாக ஜோர்டான் மாறியுள்ளதென உலக சுகாதார நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இந்தச் சாதனைக்கு விரிவான பொது சுகாதார பிரச்சாரங்கள், முன்கூட்டியே கண்டறிதல் முயற்சிகள் மற்றும் இலவச சிகிச்சை திட்டங்கள் காரணமாகக் கூறப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நோயின் பரவலைத் தடுப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சமூகக்கல்வி முக்கியப்பங்காற்றியுள்ளது.

6. சவுக்கு மரத்தின் பூர்வீக நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. ஆஸ்திரேலியா

இ. இலங்கை

ஈ. பிரான்ஸ்

  • கஜா புயல் தாக்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில், விவசாயிகள் சவுக்கு மரத்தின் முதல் அறுவடைக்குத் தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சவுக்கு மரம், 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டது. Casuarina equisetifolia, glauca, cunninghamaina, மற்றும் junghuniana அக்கையா 4 சவுக்கு இனங்கள் இந்தியாவில் பயிரிடப்படுகின்றன. அதன் நைட்ரஜனை நிலைநிறுத்தும் திறன் மற்றும் பல்வேறு மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்வது போன்றவை அதனை நடவுசெய்வதற்கு ஏற்றதாக மாற்றுகிறது. சவுக்கு இனங்கள் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் நன்றாக வளரும். 10°C முதல் 33°C வரையிலான வெப்பநிலையிலும், 700-2000 மிமீ மழைப்பொழிவிலும் இது நான்கு செழித்து வளரும்.

7. உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகத்தின் கூற்றுப்படி, உலக அளவில் எத்தனால் உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 1ஆவது

ஆ. 2ஆவது

இ. 3ஆவது

ஈ. 4ஆவது

  • முதன்மையாக கரும்பிலிருந்து பெறப்பட்ட எத்தனாலின் உலகின் மூன்றாவது மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக இந்தியா மாறியுள்ளது. உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கூற்றுப்படி, கடந்த பத்தாண்டுகளில் கரும்பு சாகுபடி 18% அதிகரித்து, சர்க்கரை உற்பத்தியில் 40 சதவீதம் உயர்வுக்கு பங்களித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைமூலம் அரசினாதரவு உழவர்களின் வருவாயை மேம்படுத்தியுள்ளது.

8. “Garra zubzaensis மற்றும் Psilorhynchus kosygini” என்றால் என்ன?

அ. மீன்

ஆ. சிலந்தி

இ. தவளை

ஈ. நாய்

  • நாகாலாந்தில் இரு புதிய மீன் இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை, Garra zubzaensis மற்றும் Psilorhynchus kosygini ஆகும். இவை வேகமாக ஓடும் நீரோடைகளில் காணப்படும் சிறிய நன்னீர் மீன்களாம். Garra zubzaensis ஆனது கோஹிமாவில் பாயும் பிரம்மபுத்திராவின் துணையாறான சூப்சா ஆற்றில் காணப்பட்டது. Psilorhynchus kosygini ஆனது டெபுய்கி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது; இது பெரெனில் உள்ள பராக் ஆற்றின் துணை ஆறாகும்.

9. 2024 – ஜூனியர் உலக வுஷு சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?

அ. 5

ஆ. 8

இ. 7

ஈ. 2

  • புருனேயில் நடைபெற்ற ஜூனியர் உலக வுஷு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஏழு (07) பதக்கங்களை வென்றது. இந்தியா இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலப்பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான ஜூனியர் 48 கிகி பிரிவில் சீனாவின் காங் ஹுவான்ரானை வீழ்த்தி ஆர்யன் தங்கம் வென்றார். சிறுவர்களுக்கான 48 கிலோ (குழந்தைகள்) பிரிவில் ஈரானின் அலிரேசா ஜமானியை வீழ்த்தி சௌர்யா மற்றொரு தங்கம் வென்றார். தாவோலு ஜியான் ஷு சி குரூப் பிரிவில் நங் மிங்பி போர்புகன் வெள்ளிப்பதக்கம் வென்றார். 56 கிலோ பிரிவில் தனிஷ் நாகர் வெண்கலம் வென்றார். அபிஜீத் (60 கிலோ), திவ்யன்ஷி (60 கிலோ பெண்கள்), யுவராஜ் (42 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கங்களையும் பெற்றனர். இதில் 24 பேர்கொண்ட இந்திய அணி பங்கேற்றது.

10. செயற்கைக்கோள் சிதைவு நிகழ்வை ஆராய்வதற்காக அண்மையில் ‘DRACO பணி’யை அறிவித்த விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO

ஆ. ESA

இ. NASA

ஈ. CNSA

  • ஐரோப்பிய விண்வெளி முகமையானது (ESA) 2027ஆம் ஆண்டில் DRACO (Destructive Reentry Assessment Container Object) என்ற செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. செயற்கைக்கோள்கள் எவ்வாறு பிரிகின்றன என்பது குறித்த தரவுகளைச் சேகரிப்பதன்மூலம் விண்வெளிக் குப்பைகளைக் குறைக்க உதவுவதை DRACO நோக்கமாகக் கொண்டுள்ளது. வளிமண்டலத்துடனான பொருள் தொடர்புகள் உட்பட, மீண்டும் நுழைவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கத்தையும் இந்தப் பணி ஆய்வுசெய்யும். ஐரோப்பிய நிறுவனமான டீமோஸ் 200 கிகி எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளது.

11. அண்மையில், உலக தடகள கான்டினென்டல் டூரில் ஆடவருக்கான 5,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ. குல்வீர் சிங்

ஆ. பிரகாஷ் தோமர்

இ. விஜேந்திர சர்மா

ஈ. யோகேஷ் குமார்

  • ஜப்பானில் நடந்த உலக தடகள கான்டினென்டல் டூரில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 26 வயதான இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 13 நிமிடம் 11.82 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். முன்னதாக மார்ச் மாதம், கலிபோர்னியாவில் 27 நிமிடங்கள் 41.81 வினாடிகளில் 10,000 மீ தேசிய சாதனையை அவர் படைத்தார். அவரது முயற்சி சுரேந்தர் சிங்கின் பதினாறு ஆண்டுகால சாதனையை முறியடித்தது.

12. லெப்டோஸ்பிரோசிஸ் என்பது எந்த வகையான உயிரினத்தால் ஏற்படுகிறது?

அ. பாக்டீரியா

ஆ. வைரஸ்

இ. பூஞ்சை

ஈ. புரோட்டோசோவா

  • பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அண்மையில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) நோயால் பாதிக்கப்பட்டார். லெப்டோஸ்பிரோசிஸ் என்பது மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கும் ஒரு பாக்டீரியா நோயாகும்; இது பாதிக்கப்பட்ட விலங்கின் சிறுநீர் அல்லது அசுத்தமான சூழலில் தொடர்புமூலம் பரவுகிறது. இது வெட்டுக்காயங்கள் அல்லது சளிமூலம் உடலில் நுழையலாம். உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு குறிப்பிடத்தக்க (குறிப்பாக வெப்பமண்டல பகுதிகளில்) பொதுச் சுகாதார அச்சுறுத்தலாக அங்கீகரிக்கிறது. காய்ச்சல், தசைவலி, கடுமையான சந்தர்ப்பங்களில் கல்லீரல் பாதிப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.

2024-25 நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபர்.01 முதல் டிச.31 வரையிலான காலகட்டத்தில் முந்தைய மூன்று மாதங்களில் இருந்த வட்டி விகிதம் தொடரும். பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படும். 3 ஆண்டு நிரந்தர வைப்புக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும்.

பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1%, அஞ்சலக சேமிப்புக் கணக்கு வட்டி 4 சதவீதமாகவே இருக்கும். 115 மாதங்களில் முதிர்வடையும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.5% என்ற அளவில் தொடர்ந்து வழங்கப்படும். தேசிய சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 7.7%ஆக தொடரும், மாதந்தோறும் வட்டி வழங்கப்படும் நிரந்தர வைப்புக்கு 7.4 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று நிதியமைச்சக அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஷமீம் அகமது பொறுப்பேற்பு.

அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி ஷமீம் அகமது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 8 நீதிபதி பணியிடங்கள் காலியாகவே உள்ளன.

3. அக்டோபர்.01: தன்னார்வ இரத்த தான நாள்.

இரத்ததானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல்நலனும் காக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு ரத்த மையங்களும், 247 தனியார் ரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக ‘e-RaktKosh’ என்ற இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் தளத்தில் முகாம் மற்றும் இரத்த கொடையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

4. அக்டோபர்.01: சர்வதேச முதியோர் நாள்.

சர்வதேச முதியோர் நாளானது ஆண்டுதோறும் அக்டோபர்.01ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. “தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு” என்கிற கருப்பொருளை மையமாகக்கொண்டு, முதியவர்களை மதித்து கவனித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒருமாதகால நிகழ்வுகளுக்கு நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. “60இல் வாழ்க்கை தொடங்குகிறது” என்கிற தலைப்பில் ஒரு கலாசார நிகழ்வு அக்.24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு உதவி சாதனங்களை வழங்கவும், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், நாடு முழுவதும் 51 இடங்களில் “ராஷ்ட்ரிய வயோஸ்ரீ” முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

1. Which African country recently reported an outbreak of the Marburg virus?

A. Tanzania

B. Kenya

C. Somalia

D. Rwanda

  • Recently, six people have died in Rwanda due to a Marburg virus outbreak. Marburg Virus Disease is a rare but severe hemorrhagic fever affecting humans and primates. MVD is caused by the Marburg virus, similar to the Ebola virus, both from the Filoviridae family. The virus was first identified in 1967 in Marburg, Germany, linked to infected green monkeys. The African fruit bat is the reservoir host, and transmission occurs through direct contact with bodily fluids.

2. Which country recently supported India’s bid for permanent membership in the UN Security Council?

A. Nepal

B. Sri Lanka

C. Bhutan

D. Myanmar

  • During the 79th session of the UN General Assembly, Bhutan’s Prime Minister Tshering Tobgay expressed strong support for India’s bid for a permanent seat in a reformed UN Security Council. He emphasized India’s significant economic growth and leadership within the Global South as deserving of this status. Bhutan, which recently graduated from the Least Developed Countries (LDC) category.

3. As per recent data, which state leads the country in installed capacity for rooftop solar power under the PM Surya Ghar: Muft Bijli Yojana?

A. Gujarat

B. Rajasthan

C. Madhya Pradesh

D. Karnataka

  • PM Modi visited solar panels installed under the PM Muft Bijli Solar Yojana in Gujarat. The PM Surya Ghar Muft Bijli Solar Yojana encourages rooftop solar adoption by offering financial subsidies and easier installation. Households can get up to 300 units of free electricity each month. Gujarat leads in rooftop solar capacity with 4,195 MW, followed by Maharashtra with 2,487 MW, and Rajasthan with 1,269 MW. India’s total installed rooftop solar power capacity is 13,889 MW.

4. What is the primary reservoir of the Rocahepevirus ratti strain of hepatitis E virus (HEV)?

A. Pigs

B. Rats

C. Mosquitoes

D. Birds

  • Recent studies indicate that the Rocahepevirus ratti strain, commonly known as “rat HEV,” primarily resides in rats and has been found to infect humans. Since its first human case in 2018, at least 20 cases have been reported, often linked to the consumption of raw pork. Researchers discovered that rat HEV could infect pigs and spread among them. Hepatitis E remains a significant global health issue, particularly in developing regions.

5. Recently, which country becomes the first in the world to eliminate leprosy?

A. Jordan

B. India

C. Kenya

D. Russia

  • Jordan has become the first country globally to eliminate leprosy, with the World Health Organisation confirming this milestone. This success is attributed to extensive public health campaigns, early detection initiatives, and free treatment programs. Community education played a crucial role in raising awareness and preventing the spread of this historically significant disease.

6. “Casuarina tree” is native to which country?

A. Russia

B. Australia

C. Sri Lanka

D. France

  • Six years after Cyclone Gaja, farmers in Vedaranyam, Tamil Nadu, are preparing for their first harvest of casuarina (savukku) plantations. Casuarina, native to Australia, was introduced in India in the 19th century.
  • There are four cultivated species: Casuarina equisetifolia, glauca, cunninghamaina, and junghuniana. Its nitrogen-fixing ability and adaptability to diverse soil and climates make it ideal for commercial and environmental planting. Casuarinas grow well in tropical, subtropical, and Mediterranean regions, thriving in temperatures from 10°C-33°C and rainfall of 700-2000 mm.

7. According to Ministry of Food and Public Distribution, what is the position of India in ethanol production and consumption globally?

A. 1st

B. 2nd

C. 3rd

D. 4th

  • India has become the world’s third largest producer and consumer of ethanol, primarily derived from sugarcane. The Food and Public Distribution Minister, Pralhad Joshi, highlighted that sugarcane cultivation increased by 18% over the last decade, contributing to a 40% rise in sugar production. The government’s support through Minimum Support Price has improved farmers’ income.

8. What are “Garra zubzaensis and Psilorhynchus kosygini”?

A. Fish

B. Spider

C. Frog

D. Dog

  • Researchers discovered two new fish species in Nagaland: Garra zubzaensis and Psilorhynchus kosygini. These are torrent minnows, small freshwater fish found in fast-flowing streams. Garra zubzaensis was found in the Zubza River, a Brahmaputra tributary in Kohima, with its habitat being fast-flowing, rocky streams. Psilorhynchus kosygini was discovered in the Tepuiki River, a Barak River tributary in Peren.

9. How many medals were won by India at the Junior World Wushu Championship 2024?

A. 5

B. 8

C. 7

D. 2

  • Indian team won seven medals at the Junior World Wushu Championship in Brunei. India secured two golds, one silver, and four bronze medals. Aryan won gold in the Boys’ Junior 48 kg category, defeating China’s Gong Huanran. Shaurya won another gold in the Boys’ 48kg (children) category, beating Iran’s Alireza Zamani. Nang Mingbi Borphukan earned a silver in Taolu Jian Shu C Group. Tanish Nagar won bronze in the 56kg category. Abhijeet (60kg), Divyanshi (60kg women), and Yuvraj (42kg) also secured bronze medals. A 24-member Indian team participated.

10. Which space organization recently announced ‘DRACO Mission’ to study satellite disintegration phenomenon?

A. ISRO

B. ESA

C. NASA

D. CNSA

  • ESA will launch a satellite called DRACO (Destructive Reentry Assessment Container Object) mission in 2027 to study satellite disintegration during reentry. DRACO aims to help reduce space debris by collecting data on how satellites break apart. The mission will also study the environmental impact of reentry, including material interactions with the atmosphere. Deimos, a European company, will build the 200-kilogram satellite.

11. Recently, who won gold medal in men’s 5,000 meters race at World Athletics Continental Tour?

A. Gulveer Singh

B. Prakash Tomar

C. Vijendra Sharma

D. Yogesh Kumar

  • Gulveer Singh, a 26-year-old Indian athlete, won gold in the 5,000m race at the World Athletics Continental Tour in Japan. He set a new national record of 13 minutes and 11.82 seconds, breaking his earlier record of 13 minutes and 18.92 seconds. Earlier in March, he set the 10,000m national record in California with a time of 27 minutes and 41.81 seconds. His effort broke Surender Singh’s 16-year-old record.

12. Leptospirosis is caused by which type of organism?

A. Bacteria

B. Virus

C. Fungus

D. Protozoa

  • Punjab chief minister Bhagwant Mann was recently diagnosed with leptospirosis. Leptospirosis is a bacterial disease affecting humans and animals, transmitted through contact with infected animal urine or contaminated environments.
  • It can enter the body through cuts or mucous membranes. The World Health Organization recognizes it as a significant public health concern, especially in tropical regions. Symptoms include fever, muscle aches, and in severe cases, liver damage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!