TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 19th August 2024

1. அண்மையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ‘EOS-08’ஐ ஏவிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. NASA

இ. CNSA

ஈ. JAXA

  • ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சிறு செயற்கைக்கோள் ஏவுகலம் (SSLV)-D3ஐப் பயன்படுத்தி, SSLV-D3/EOS-08 திட்டத்தின்கீழ் ISRO ஆனது புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், ‘EOS-08’ஐ விண்ணில் செலுத்தியது. இந்தச் செயற்கைக்கோள் 475 கிலோமீட்டர் உயரத்தில் 37.4° சாய்வுடன் வட்ட வடிவ தாழ்புவி சுற்றுப் பாதையில் இயங்கும். இதன் பணி ஆயுள் ஓர் ஆண்டாகும். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவால் உருவாக்கப்பட்ட SR-0 டெமோசாட் இந்தத் திட்டத்தில் அடங்கும். EOS-08இன் நோக்கங்களில் நுண்செயற்கைக்கோளை வடிவமைத்தல், இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்கால செயல்பாட்டு செயற்கைக்கோள்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை அடங்கும்.

2. 2024 – விடுதலை நாளன்று, எத்தனை வீரதீரச்செயல் விருதுகள் குடியரசுத்தலைவரால் வழங்கப்பட்டன?

அ. 97

ஆ. 100

இ. 103

ஈ. 110

  • இந்திய விடுதலை நாளன்று ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதக்காவல் படைகளுக்கான 103 வீரதீரச்செயல் விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விருதுகளில் நான்கு கீர்த்தி சக்கரங்கள் (மூன்று மரணத்திற்குப் பிந்தையது), 18 சௌர்ய சக்ராக்கள் (நான்கு மரணத்திற்குப் பிந்தையது), மற்றும் ஒரு சேனா பதக்கம் (வீரதீரச்செயல்) ஆகியவை அடங்கும். கூடுதல் விருதுகளில் 63 சேனா பதக்கங்கள் (வீரதீரச்செயல், 2 மரணத்திற்குப் பிந்தையது), 11 நவசேனா பதக்கங்கள் (வீரதீரச்செயல்) மற்றும் 6 வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச்செயல்) ஆகியவை அடங்கும். இராணுவ நாய் கென்ட் உட்பட 39 மென்ஷன்-இன்-டெஸ்பாட்ச்கள் அங்கீகரிக்கப்பட்டன.
  • இந்தியக் கடலோரக் காவல்படைக்கான குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் (சிறந்த சேவை), ஒரு தத்ரக்ஷக் பதக்கம் (வீரதீரச்செயல்) மற்றும் இரண்டு தத்ரக்ஷக் பதக்கங்கள் (சிறப்புத்தகுதி) ஆகியவற்றுடன், தலைசிறந்த சேவைகளுக்கான குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம் மற்றும் சிறந்த சேவைக்கான காவல் பதக்கத்தையும் குடியரசுத்தலைவர் வழங்கினார்.

3. அண்மையில், மொத்த சுற்றுச்சூழல் தயாரிப்பு குறியீட்டை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

அ. இமாச்சல பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. மத்திய பிரதேசம்

ஈ. குஜராத்

  • மொத்த சுற்றுச்சூழல் தயாரிப்பு குறியீட்டை (GEPI) அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் உத்தரகாண்ட் ஆகும். GEPI மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சூழலியல் வளர்ச்சியை மதிப்பிடுகிறது. இது நான்கு பொருள்களில் (காற்று, மண், மரங்கள் மற்றும் நீர்) கவனம் செலுத்துகிறது. இதன் சூத்திரம்: GEP இன்டெக்ஸ் = (Air-GEP index + Water-GEP index + Soil-GEP index + Forest-GEP index) ஆகும். GEPI ஆனது சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை மதிப்பிட உதவுகிறது; சுற்றுச்சூழலுக்கான பங்களிப்புகளை அளவிடுகிறது மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் பொருளாதார மற்றும் நலன்புரி நன்மைகளை அளவிடுகிறது.

4. ‘DengiAll – டெங்கிஆல்’ என்றால் என்ன?

அ. செயற்கை இனிப்பூட்டி

ஆ. டெங்கு தடுப்பூசி

இ. AI கருவி

ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் மண்டலம்

  • டெட்ராவேலண்ட் டெங்கு தடுப்பூசியான ‘டெங்கிஆல்’ கட்டம்-3 மருத்துவ பரிசோதனைக்கு தேர்வாகியுள்ளது. இந்தச் சோதனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் Panacea Biotec ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைபெறுகிறது. டெங்கு என்பது பாதிக்கப்பட்ட பெண் ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் தொற்றாகும். இது சிக்குன்குனியா மற்றும் ஜிகாவிற்கும் காரணமாக அமைகிறது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில், முக்கியமாக நகர்ப்புற மற்றும் பாதி-நகர்ப்புற பகுதிகளில் பொதுவானதாக உள்ளது. ‘டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல்’ மற்றும் ‘டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி’போன்ற கடுமையான நிலைமைகளுக்கு டெங்கு வழிவகுக்கும். தற்போது, ​​இந்தியாவில் டெங்குவுக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சையோ உரிமம் பெற்ற பிற தடுப்பூசியோ இல்லை.

5. PM-PRANAM திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வேதியுரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது

. மாநிலங்களை ஊக்குவிப்பதன்மூலம் வேதியுரங்களின் பயன்பாட்டைக் குறைப்பது

இ. விவசாயிகளுக்கு வேதியுரங்களை இலவசமாக வழங்குவது

ஈ. கரிம உரங்களை மீறி வேதியுரங்களை ஊக்குவிப்பது

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு 2023 ஜூன்.28 அன்று தாய்-பூமியின் மறுசீரமைப்பு, விழிப்புணர்வு உருவாக்கம், ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டுக்கான பிரதமரின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உரங்களின் நிலையான மற்றும் சீரான பயன்பாட்டை ஊக்குவித்தல், மாற்று உரங்களை ஏற்றுக்கொளல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்றவற்றின்மூலம் அன்னை பூமியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதே இதன் நோக்கமாகும்.
  • அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. இத்திட்டத்தின்கீழ், முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில், இரசாயன உரங்களின் (யூரியா, DAP, NPK, MOP) பயன்பாட்டைக்குறைப்பதன்மூலம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் மாநிலம், யூனியன் பிரதேசங்களால் சேமிக்கப்பட்ட உர மானியத்தில் 50% அந்த மாநிலம் யூனியன் பிரதேசத்திற்கு மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் உட்பட மாநிலத்திலுள்ள மக்களின் நலனுக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இம்மானியத்தைப் பயன்படுத்தலாம். மக்களவையில் எழுந்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

6. அண்மையில், ‘பன்னாட்டு பொதுச்சுகாதார அவசரநிலையாக’ உலக சுகாதார அமைப்பால் (WHO) அறிவிக்கப்பட்ட வைரஸ் எது?

அ. எபோலா வைரஸ்

ஆ. ஜிகா வைரஸ்

இ. குரங்கம்மை வைரஸ்

ஈ. SARS-CoV-2 வைரஸ்

  • WHO ஆனது இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, ‘mpox’ஐ “பன்னாட்டு பொதுச்சுகாதார அவசரநிலை” (Public Health Emergency of International Concern – PHEIC) என அறிவித்துள்ளது. PHEIC என்பது ஒரு தீவிரமான மற்றும் எதிர்பாராத சுகாதார நிகழ்வாகும். பன்னாட்டளவில் பரவுகிற இதற்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய பதிலளிப்பு முறைமை தேவைப்படுகிறது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச்சேர்ந்த இரட்டை இழைகள்கொண்ட டிஎன்ஏ வைரஸான குரங்கம்மை வைரஸால் (MPXV) ‘mpox’ ஏற்படுகிறது. MPXVஇல் இரண்டு மரபணு உயிரினக் கிளைகள் உள்ளன: உயிரினக்கிளை I மற்றும் உயிரினக்கிளை II. ‘mpox’ முதன்முதலில் 1970இல் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதர்களுக்குப் பரவியது.

7. அண்மையில், “உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் 3ஆவது குரல்” நிகழ்வை நடத்திய நாடு எது?

அ. நேபாளம்

ஆ. பூடான்

இ. இந்தியா

ஈ. மியான்மர்

  • பிரதமர் நரேந்திர மோதி 2024 ஆக.17 அன்று 3ஆவது உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டைத் தொடக்கி வைத்தார். இது பல உலகளாவிய தென் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. “வசுதைவ குடும்பகம்” என்ற இந்திய தத்துவத்தில் வேரூன்றிய இவ்வுச்சிமாநாடு, உலகளாவிய தென்னாடுகளுக்கு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க ஒரு தளத்தை வழங்குகிறது. “An Empowered Global South for a Sustainable Future” என்பது இந்த உச்சி மாநாட்டிற்கான கருப்பொருளாகும். போர்கள், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவற்றை இது மையமாகக் கொண்டது.

8. அண்மையில், பன்னாட்டு புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 17ஆவது பதிப்பு நடைபெற்ற இடம் எது?

அ. பெய்ஜிங், சீனா

ஆ. புது தில்லி, இந்தியா

இ. லண்டன், UK

ஈ. மாஸ்கோ, ரஷ்யா

  • 2024 ஆக.08-16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 17ஆவது பன்னாட்டு புவி அறிவியல் ஒலிம்பியாடில் (IESO) இந்திய மாணவர் அணி பல பதக்கங்களை வென்றது. இது கடந்த 2003இல் நிறுவப்பட்டது. IESO என்பது உலகளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர போட்டியாகும். குழுப்பணி, ஒத்துழைப்பு மற்றும் போட்டிமூலம் புவி அறிவியல்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு இளையோரை புவி அறிவியலில் ஈடுபடவும் சுற்றுச்சூழல் சவால்களில் விவாதிக்கவும் ஊக்குவிக்கிறது. IESO ஆனது புவி அறிவியல் அமைச்சகத்தின், ‘REACHOUT’ திட்டத்தின் ஒருபகுதியாகும். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இதில் பங்கேற்று வரும் இந்தியா, இந்நிகழ்வின் 10ஆவது பதிப்பை மைசூரில் நடத்தவுள்ளது.

9. கேரளம் மற்றும் பீகாரைத் தொடர்ந்து, அண்மையில், வேலையிலுள்ள பெண்களுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்திய மூன்றாவது மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. கர்நாடகா

இ. மத்திய பிரதேசம்

ஈ. கேரளா

  • அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய்கால விடுமுறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக ஒடிஸா ஆனது. இதன்கீழ், பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் அல்லது இரண்டாவது நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என துணை முதலமைச்சர் பிரவதி பரிதா அறிவித்துள்ளார்.
  • இந்தப் புதிய கொள்கை அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பொருந்தும். பீகார் மற்றும் கேரளாவும் இதே போன்று மாதவிடாய்கால விடுமுறையை வழங்குகின்றன. பீகார் மாநிலம் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்களையும், கேரள மாநிலம் மாதத்திற்கு மூன்று நாட்களையும் விடுப்பாக வழங்குகிறது.

10. வரவிருக்கும் ஞாயிற்று வட்டத்தின் (solar cycle) வீச்சைக் கணிப்பதற்காக புதிய முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்

ஆ. இந்திய வானியற்பியல் நிறுவனம்

இ. இந்திய தொலையுணரி நிறுவனம்

ஈ. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

  • இந்திய வானியற்பியல் கழகத்தின் வானியலாளர்கள் வரவிருக்கும் ஞாயிற்று வட்டத்தின் வலிமையைக் கணிக்க ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர். இக்கண்டுபிடிப்பு IIAஇன் கொடைக்கானல் சூரிய கூர்நோக்ககத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலான ஞாயிற்று தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் (393.3 nm) எடுக்கப்பட்ட சூரியனின் நிழற்படங்கள் ஞாயிற்று வட்டத்தின் குறைந்தபட்ச கட்டத்தில் சூப்பர் கிரானுலர் செல்களின் அகலத்திற்கும் அடுத்த அதிகபட்ச கட்டத்தில் சூரியப்புள்ளிகளின் எண்ணிக்கைக்கும் இடையே ஒரு தொடர்பை வெளிப்படுத்தியது. இந்த முறை ஞாயிற்றின் செயல்பாட்டைக் கணிக்க எளிய மற்றும் பயனுள்ள வழியை வழங்குகிறது. விண்வெளி சார்ந்த வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கு துல்லியமான ஞாயிற்று வட்டக் கணிப்புகள் மிக முக்கியமானவை.

11. மலபார் மரத்தேரையானது இந்தியாவின் எந்தப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்?

அ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

ஆ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

இ. லடாக்

ஈ. வடகிழக்குப்பகுதி

  • ஓர் அண்மைய ஆய்வின்படி, தட்பவெப்பநிலை மாற்றம் இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மலபார் மரத்தேரையின் எண்ணிக்கையை 68.7% வரை குறைக்கலாம். இந்தத் தேரை ‘Pedostibes’ இனத்தில் உள்ள ஒரே இனமாகும்; முதன்முதலில் 1876இல் கண்டுபிடிக்கப்பட்ட இது, 1980 வரை மீண்டும் தென்படவேயில்லை. இது கேரள மாநிலத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப்பூங்காவில் மீண்டும் தென்பட்டது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பூர்வீகமாகக் கொண்ட ஓர் இனமாகும். பசுமையான மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளில் வாழ்கிற இத்தேரை, மரமேறுகிறது மற்றும் மரப்பொந்துகளில் வாழ்கிறது.

12. அண்மையில், ஆப்பிரிக்காவிற்கு வெளியே கொடிய ‘mpox’ மாறுபாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பைத் தெரிவித்த நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. பார்படாஸ்

இ. சுவீடன்

ஈ. பிரான்ஸ்

  • 2023 செப்டம்பர் முதல் காங்கோ மக்களாட்சிக் குடியரசில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய, ‘mpox’ வைரஸின் ஆபத்தான உயிரினக்கிளை-1b மாறுபாட்டின் முதல் பாதிப்பை சுவீடன் அறிவித்தது. இந்தப் பாதிப்பு ஸ்டாக்ஹோமில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்காவுக்குச் சென்று வந்த ஒருவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரை, விளக்கு.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3ஆம் கட்ட அகழாய்வுப்பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, நாயக்கர் கால செம்புக்காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கற்பந்து, கல்லாலான சில்லு வட்டு ஆகியவை தற்போது கண்டறியப்பட்டன. இதன்மூலம், முன்னோர்கள் விலங்குகளை விரட்டுவதற்காக கற்பந்தைப் பயன்படுத்தியதும், முத்திரைமூலம் வணிகம் செய்து வந்ததும் உறுதி செய்யபட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

1. Which organization recently launched Earth Observation Satellite ‘EOS-08’?

A. ISRO

B. NASA

C. CNSA

D. JAXA

  • ISRO launched the Earth Observation Satellite EOS-08 under the SSLV-D3/EOS-08 mission using the Small Satellite Launch Vehicle (SSLV)-D3 from Sriharikota. The satellite will operate in a circular Low Earth Orbit at 475 km altitude with a 37.4° inclination and has a mission life of 1 year. The mission also included SR-0 DEMOSAT, developed by Space Kidz India. Objectives of EOS-08 include designing a microsatellite, developing compatible payload instruments, and incorporating new technologies for future operational satellites.

2. How many Gallantry Awards were approved by the President on Independence Day 2024?

A. 97

B. 100

C. 103

D. 110

  • President Droupadi Murmu approved 103 Gallantry awards for Armed Forces and Central Armed Police Forces on Independence Day. The awards include four Kirti Chakras (three posthumous), 18 Shaurya Chakras (four posthumous), and one Bar to Sena Medal (Gallantry). Additional awards include 63 Sena Medals (Gallantry, two posthumous), 11 Nao Sena Medals (Gallantry), and six Vayu Sena Medals (Gallantry). 39 Mention-in-Despatches were approved, including for Army Dog Kent.
  • The President also approved one President’s Tatrakshak Medal (Distinguished Service), one Tatrakshak Medal (Gallantry), and two Tatrakshak Medals (Meritorious Service) for the Indian Coast Guard, along with the President’s Police Medal for Distinguished Services and Police Medal for Meritorious Service.

3. Recently, which state has become the first Indian state to launch a Gross Environment Product Index?

A. Himachal Pradesh

B. Uttarakhand

C. Madhya Pradesh

D. Gujarat

  • Uttarakhand is the first Indian state to launch a Gross Environment Product Index (GEPI). GEPI evaluates ecological development influenced by human actions. It focuses on four pillars: air, soil, trees, and water. The formula is: GEP index = (Air-GEP index + Water-GEP index + Soil-GEP index + Forest-GEP index).
  • GEPI helps assess the impact of human activities on ecosystems, measures contributions back to the environment, and quantifies the economic and welfare benefits of natural ecosystems.

4. What is ‘DengiAll’?

A. Artificial sweetener

B. Dengue vaccine

C. AI tool

D. Newly discovered galaxy

  • The tetravalent dengue vaccine, DengiAll, has entered phase-3 clinical trials. The trials are a collaboration between the Indian Council of Medical Research and Panacea Biotec. Dengue is a viral infection transmitted by infected female Aedes mosquitoes, also responsible for chikungunya and Zika. It is common in tropical and subtropical areas, mainly in urban and semi-urban regions. Dengue can lead to severe conditions like dengue hemorrhagic fever and dengue shock syndrome. Currently, there is no antiviral treatment or licensed vaccine for dengue in India.

5. What is the primary objective of the PM-PRANAM scheme?

A. To increase the use of chemical fertilisers

B. To reduce the use of chemical fertilisers by incentivizing states

C. To provide free chemical fertilisers to farmers

D. To promote chemical fertilisers over organic ones

  • The Union Minister of State for Chemicals and Fertilisers discussed the PM-PRANAM initiative in the Lok Sabha recently. The Cabinet approved the PM Programme for Restoration, Awareness Generation, Nourishment, and Amelioration of Mother-Earth (PM-PRANAM) on June 28, 2023.
  • The scheme aims to reduce chemical fertilizer use by incentivizing states. States that cut chemical fertilizer use will receive a subsidy based on the savings. The goal is to promote balanced fertilizer use, including bio and organic fertilizers. States/UTs will get 50% of the saved subsidy as a grant, which can be used for benefiting farmers and other state needs.

6. Recently, World Health Organization (WHO) declared which virus a Public Health Emergency of International Concern (PHEIC)?

A. Ebola virus

B. Zika virus

C. Monkeypox virus

D. SARS-CoV-2 virus

  • The WHO declared mpox a “public health emergency of international concern” (PHEIC) for the second time in two years. A PHEIC is a serious and unexpected health event that spreads internationally and needs a coordinated global response.
  • Mpox is caused by the monkeypox virus (MPXV), a double-stranded DNA virus from the Orthopoxvirus genus. There are two genetic clades of MPXV: clade I and clade II. mpox was first reported in humans in 1970 in the Democratic Republic of the Congo.

7. Recently, which country hosted the “3rd Voice of Global South Summit”?

A. Nepal

B. Bhutan

C. India

D. Myanmar

  • Prime Minister Narendra Modi inaugurated the 3rd Voice of Global South Summit on August 17, 2024, held virtually with participation from many Global South leaders. The summit is rooted in the Indian philosophy of Vasudhaiva Kutumbakam, providing a platform for Global South countries to discuss vital issues. The theme is “An Empowered Global South for a Sustainable Future,” focusing on conflicts, food and energy security, and climate change.

8. Recently, where was the 17th edition of the International Earth Sciences Olympiad (IESO) held?

A. Beijing, China

B. New Delhi, India

C. London, UK

D. Moscow, Russia

  • The Indian student team won multiple medals at the 17th International Earth Sciences Olympiad (IESO) held in Beijing, China, from August 8-16, 2024. It was established in 2003. IESO is an annual competition for secondary school students worldwide. It aims to raise awareness of earth sciences through teamwork, collaboration, and competition.
  • The event encourages young people to engage in earth system sciences and discuss environmental challenges. IESO is part of the REACHOUT scheme by the Ministry of Earth Sciences, with India participating since 2007 and hosting the 10th edition in Mysore.

9. Recently, which state has become the third state after Kerala and Bihar to introduce menstrual leave policy for working women?

A. Odisha

B. Karnataka

C. Madhya Pradesh

D. Kerala

  • Odisha became the third state in India to introduce menstrual leave for working women in both public and private sectors. Deputy Chief Minister Pravati Parida announced that women can take one day of leave on the first or second day of their menstrual cycle.
  • This new policy applies to both government and private sector employees. Bihar and Kerala also provide menstrual leave, with Bihar offering two days per month for women employees and Kerala offering three days for female students.

10. Recently, which institute has developed a new method to predict the amplitude of the upcoming solar cycle?

A. National Atmospheric Research Laboratory

B. Indian Institute of Astrophysics

C. Indian Institute of Remote Sensing

D. Indian Institute of Space Science and Technology

  • Astronomers at the Indian Institute of Astrophysics (IIA) developed a method to predict the strength of upcoming solar cycles. This discovery uses over 100 years of solar data from IIA’s Kodaikanal Solar Observatory.
  • Solar images at a specific wavelength (393.3 nm) revealed a correlation between the width of supergranular cells during the solar cycle’s minimum phase and the number of sunspots in the next maximum phase. This method offers a simple and effective way to predict solar activity. Accurate solar cycle predictions are crucial for improving space weather forecasting.

11. Malabar tree toad is endemic to which region of India?

A. Western Ghats

B. Eastern Ghats

C. Ladakh

D. North Eastern

  • According to recent study, climate change may reduce the Malabar Tree Toad’s range by up to 68.7% in India’s protected areas. This toad is the only species in the genus Pedostibes and was first discovered in 1876 but not seen again until 1980. It was rediscovered in Silent Valley National Park, Kerala. It is endemic to India’s Western Ghats. It lives in evergreen to moist deciduous forests, climbing trees and dwelling in tree cavities.

12. Recently, which country reported the first confirmed case of deadly mpox variant outside Africa?

A. Germany

B. Barbados

C. Sweden

D. France

  • Sweden reported its first case of the dangerous Clade 1b variant of mpox, which has been causing a severe outbreak in the Democratic Republic of Congo since September 2023. The case was confirmed in Stockholm and contracted during a visit to Africa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!