Tnpsc Current Affairs in Tamil & English – 19th and 20th September 2024
1. அண்மையில், ‘நமோ பாரத் விரைவு ரெயில்’ என மறுபெயரிடப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரெயிலின் சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
அ. ஹரியானா
ஆ. குஜராத்
இ. உத்தர பிரதேசம்
ஈ. கர்நாடகா
- இந்தியாவின் முதல் வந்தே மெட்ரோ ரெயில் ‘நமோ பாரத் விரைவு ரெயில்’ எனப் பெயர்மாற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோதியின் குஜராத் பயணத்தின்போது இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இது அதிநவீன வசதிகள் மற்றும் மோதல்களைத் தடுக்க ‘கவாச்’ போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலில் தானியங்கி புகை/தீயைக் கண்டறியும் இயந்திரம் மற்றும் 1,150 பயணிகள் அமரும் வசதியும் உள்ளது.
2. கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்துடன் (INCOIS) தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
ஆ. புவி அறிவியல் அமைச்சகம்
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
ஈ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
- கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) ஓர் ஒருங்கிணைந்த கடல் ஆற்றல் வரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரைபடம் கடல்மூலங்களிலிருந்து ஆற்றலை உருவாக்கும் அதிக திறன்கொண்ட பகுதிகளை அடையாளம் காட்டுகிறது. சூரியவொளி, வளி, அலை, நீரோட்டங்கள், கடல் வெப்பம் மற்றும் உப்புத் தன்மை வாட்டம்போன்ற பல்வேறு வகையான கடல் ஆற்றலின் தரவு இதில் அடங்கும். இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்கள், தொழில்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக இந்த வரைபடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக 1999இல் நிறுவப்பட்ட INCOIS, பல்வேறு துறைகளுக்கு கடல் தரவு மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
3. ஆபரேஷன் சக்ரா-III உடன் தொடர்புடைய நிறுவனம் எது?
அ. NITI ஆயோக்
ஆ. மத்திய புலனாய்வு அமைப்பு
இ. தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஈ. தேசிய பேரிடர் மீட்புப் படை
- மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) ஆபரேஷன் சக்ரா-IIIமூலம் மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் பொன் சம்பந்தப்பட்ட சைபர் கிரைம் வலையமைப்பை வெற்றிகரமாக உருக்குலைத்தது. இந்த நடவடிக்கை அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டில் CBIஆல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சக்ரா, ஒழுங்கமைக்கப்பட்ட சைபர்-இயக்கப்பட்ட நிதிசார்ந்த குற்றங்களைச் சமாளிக்க INTERPOLஆல் ஆதரிக்கப்படும் உலகளாவிய முயற்சியாகும். செயல்பாட்டின் முதல் கட்டம் 2022இல் தொடங்கியது; அதைத்தொடர்ந்து 2023இல் கட்டம்-2 ஆனது, கட்டம்-3 அண்மையில் முடிவடைந்தது.
4. அண்மையில், எந்தக்கண்டத்திலுள்ள வயது வந்தோர்க்கு முதல் mpox தடுப்பூசியைச் செலுத்த WHO ஒப்புதல் அளித்தது?
அ. ஐரோப்பா
ஆ. ஆசியா
இ. ஆஸ்திரேலியா
ஈ. ஆப்பிரிக்கா
- உலக சுகாதார அமைப்பு (WHO) அண்மையில் அதன் முதல் Mpox தடுப்பூசியை ஆப்பிரிக்காவில் பயன்படுத்த ஒப்புதல் அளித்தது. பவேரியன் நோர்டிக் A/Sஆல் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, ஆப்பிரிக்க பிராந்தியத்தில் Mpoxஐச் சமாளிப்பதில் ஒரு முக்கிய படியாகும். இந்த ஒப்புதலின்மூலம், இத்தடுப்பூசி GAVI மற்றும் UNICEFபோன்ற சர்வதேச கொடையாளர்கள் வாங்குவதற்கு முன்தகுதி பெறுகிறது. ஒரேயொரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் குறைந்த விநியோகமே உள்ளதெனினும், ஆப்பிரிக்காவில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுச்சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்தத் தடுப்பூசி மிக முக்கியமானதாகும்.
5. அண்மையில், இந்தியப்பிரதமர், “உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீட்டாளர் சந்திப்பு (RE-INVEST) – 2024”ஐ கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் தொடக்கி வைத்தார்?
அ. இராஜஸ்தான்
ஆ. குஜராத்
இ. மத்திய பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா
- குஜராத் மாநிலத்தில் RE-INVEST-2024ஐ பிரதமர் தொடக்கி வைத்தார்; இது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீட்டாளர்கள் சந்திப்பு மற்றும் கண்காட்சியின் 4ஆவது பதிப்பாகும். இந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் `9,000 கோடி மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இது குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றது; தில்லிக்கு வெளியே நடக்கும் முதல் முதலீட்டாளர்கள் சந்திப்பு இதுவாகும்.
6. சமீபத்தில், இந்திய நிதியமைச்சரால் தொடங்கப்பட்ட, ‘NPS வாத்சல்யா திட்டத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?
அ. பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளைத் திட்டமிட உதவுவது
ஆ. உயர்கல்விக்காக மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது
இ. பழங்குடியின குடும்பங்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்குவது
ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறார்களுக்கான NPS வாத்சல்யா திட்டத்தை 17 செப்டம்பர் 2024 அன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் 75 இடங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தத் திட்டம் 2024-25 யூனியன் பட்ஜெட்டில் முதலில் அறிவிக்கப்பட்டது. NPS வாத்சல்யா ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. இது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்கால நிதி தேவைகளுக்காக ஒரு வைப்புக் கணக்கைத் திறக்க உதவுகிறது. குழந்தைக்கு 18 வயதாகும் வரை நிதிகள் குவிந்து, அதன் பிறகு அவை நிலையான NPS கணக்கிற்கு மாற்றப்படும்.
7. “8ஆவது இந்திய நீர் வாரம் – 2024”இன் கருப்பொருள் என்ன?
அ. Water Cooperation – Coping with 21st Century Challenges
ஆ. Water Security for Sustainable Development with Equity
இ. Partnership and cooperation for inclusive water development and management
ஈ. Water and Energy for Inclusive Growth
- குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு 8ஆவது இந்திய நீர் வாரத்தை 2024 செப்.17 அன்று புது தில்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு 2024 செப்.17-20 வரை பாரத மண்டபத்தில் நடைபெறும். இதன் தொடக்க விழாவில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்துகொண்டார். இந்திய நீர் வாரம் ஸ்டாக்ஹோம் நீர் வாரத்தை அடிப்படையாகக்கொண்டது; இது நீர்மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. சர்வதேச வாஷ் மாநாடு-2024 நிகழ்வுடன் இணைந்து நடைபெறுகிறது. “அனைவரையும் உள்ளடக்கிய நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான கூட்டாண்மையும் ஒத்துழைப்பும்” என்பது இந்திய நீர் வாரம் 2024இன் கருப்பொருளாகும்.
8. அண்மையில், இந்தியப்பிரதமர், “தூத்துக்குடி பன்னாட்டு சரக்குப் பெட்டக முனையத்தை” கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் திறந்து வைத்தார்?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. குஜராத்
ஈ. ஆந்திர பிரதேசம்
- இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பின் முக்கிய பகுதியாக விவரிக்கப்படும் தூத்துக்குடி பன்னாட்டு சரக்குப் பெட்டக முனையம் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த முனையம் வ உ சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இலக்கிற்குப் பங்களிக்கிறது. இது 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீ நீளமுள்ள படுகை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது போக்குவரவு செலவுகளைக் குறைக்கவும் அந்நியச்செலாவணியைச்சேமிக்கவும் உதவுகிறது. , துறைமுக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முதலீடுகள், வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையம் உட்பட இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்துறைமுகம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் கடல் சார் காற்றாலை ஆற்றலில் அதன் பங்கிற்காகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
9. அண்மையில், சஷஸ்த்ர சீமா பாலின் (SSB) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. விக்ராந்த் தாக்கூர்
ஆ. தல்ஜித் சிங் சௌத்ரி
இ. அம்ரித் மோகன் பிரசாத்
ஈ. சச்சின் சின்ஹா
- ஒடிஸா தொகுதியைச் சேர்ந்த மூத்த இந்தியக் காவல் பணி (இகாப) அதிகாரி அம்ரித் மோகன், சஷஸ்த்ர சீமா பால் (SSB) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மத்திய சேமக்காவல்படையின் (CRPF) சிறப்பு இயக்குநராக பணியாற்றி வருகிறார். 2025 ஆக.31 அன்று பணி ஓய்வுபெறும் வரை அவர் இப்பதவியில் இருப்பார். சஷஸ்த்ர சீமா பால் நேபாளம் மற்றும் பூட்டானுடனான இந்தியாவின் எல்லைகளைக் காத்து, எல்லைதாண்டிய குற்றங்கள் மற்றும் கடத்தலைத் தடுக்கிறது. SSBஇன் தலைமையகம், படைத்தலைமையகம் (FHQ), புது தில்லியில் உள்ளது; இது தலைமை இயக்குநர் தலைமையில் இயங்குகிறது. தலைமை இயக்குநருக்கு கூடுதல் தலைமை இயக்குநர் மற்றும் மூத்த அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் பல்வேறு இயக்குநரகங்கள் உதவுகின்றன.
10. செல்லழற்சி நோய்க்குக் காரணமான நோய்க்கிருமி எது?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. புரோட்டோசோவா
ஈ. பூஞ்சை
- ஒரு காலத்தில் அரிதாக காணப்பட்ட செல்லழற்சி நோய், தற்போது தெலுங்கானாவில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் மிகச் சாதாரணமாக காணப்படுகிறது. இது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிர தோல் தொற்று ஆகும்; முக்கியமாக கால்கள் மற்றும் கால்விரல்களை இது பாதிக்கிறது; ஆனால் உடலின் எப்பகுதியிலும் இது தோன்றும். இது பொதுவாக தோலில் காயம் அல்லது வெட்டுக்குப் பிறகு ஏற்படுகிறது; அது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் அல்லது ஸ்டேஃபிளோகாக்கஸ் போன்ற பாக்டீரியாவை உள்ளே நுழைய அனுமதிக்கிறது. வீக்கம், வலி, வெம்மை தோல், மற்றும் கொப்புளங்கள், புள்ளிகள் அல்லது தோல் மங்குதல் ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். பிற அறிகுறிகளில் காய்ச்சல், குளிர் மற்றும் குமட்டல் ஆகியவை அடங்கும். சிகிச்சையளிக்கப்படாவிடில், அது குருதியோட்டத்தில் பரவி உயிருக்கே ஆபத்தானதாக மாறும்.
11. ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. மேற்கு வங்காளம்
- ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள நீலகிரி பகுதியில் ஆய்வுக்காக தமிழ்நாடு வனத்துறை கண்காணிப்புக் கருவியை அண்மையில் பொருத்தியது. தென்மேற்குத்தொடர்ச்சிமலைகளில் பாலக்காடு இடைவெளிக்கு தெற்கே தமிழ்நாட்டின் ஆனைமலை மலைப்பகுதியில் இக்காப்புக்காடு அமைந்துள்ளது. இது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், சின்னாறு வனவிலங்கு சரணாலயம் மற்றும் எரவிகுளம் தேசியப்பூங்கா ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது. இப்பகுதியில் பசுமையான, இலையுதிர், முட்காடுகள் மற்றும் புல்வெளிகள் உட்பட பல்வேறு வாழ்விடங்கள் உள்ளன. இது மாம்பழம், பலாப்பழம், மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றின் காடுசார் வகைகள் உட்பட சுமார் 2,500 வகையான தாவரங்களைக் கொண்டுள்ளது.
12. அண்மையில், எந்தத் திட்டத்தின்கீழ், ‘ஸ்மார்ட் துல்லிய தோட்டக்கலை திட்டத்தை’த் தொடங்க வேளாண்மை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது?
அ. தேசிய தோட்டக்கலை இயக்கம்
ஆ. ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா
இ. பிரதமர் ஃபசல் பீமா யோஜனா
ஈ. தோட்டக்கலையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான இயக்கம் (MIDH)
- ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டிற்கான இயக்கத்தின் (MIDH) கீழ் ஸ்மார்ட் துல்லியமான தோட்டக்கலை திட்டத்தைத் தொடங்க மத்திய வேளாண் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் அதே வேளையில் உற்பத்தியை அதிகரிக்க IoT, AI, டிரோன்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுபோன்ற தொழில்நுட்பங்களை இத்திட்டம் பயன்படுத்தும். 2024-25 முதல் 2028-29 வரை சுமார் 60,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ஐந்து ஆண்டுகளில் 15,000 ஏக்கர் பரப்பளவை இது உள்ளடக்கும்.
- வேளாண் உள்கட்டமைப்பு நிதி ஸ்மார்ட் மற்றும் துல்லியமான விவசாயத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. நவீன விவசாய தீர்வுகளுக்காக நெதர்லாந்து மற்றும் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. 22 துல்லியமான வேளாண் மேம்பாட்டு மையங்கள் சோதனை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க நிறுவப்பட்டுள்ளன.
13. தேசிய சணல் வாரியத்தின் கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் சணல் உற்பத்தி எத்தனை சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
அ. 15%
ஆ. 20%
இ. 25%
ஈ. 30%
- தேசிய சணல் வாரியத்தின் கூற்றுப்படி, சணல் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் 20 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதன்மையாக காரணமாக இயற்கை சீற்றங்கள் குறிப்பிடப்படுகிறது. மே.வங்கம் மற்றும் அசாம் போன்ற சணல் உற்பத்தி செய்யும் முதன்மை மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு சாகுபடிப் பகுதிகளை கணிசமாக பாதிக்கிறது. இந்த இயற்கை இடையூறு ஒட்டுமொத்த சணல் விளைச்சலை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14. அண்மையில், “ஓசோன் மற்றும் UV தகவலேட்டை” வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வானிலை அமைப்பு (WMO)
ஆ. UNEP
இ. உலக வங்கி
ஈ. UNDP
- உலக வானிலை அமைப்பு (WMO) உலக ஓசோன் நாளன்று (செப்டம்பர்.16) ஓசோன் மற்றும் UV தகவலேட்டின் 2ஆவது பதிப்பை வெளியிட்டது. இந்த நாள் மாண்ட்ரீல் நெறிமுறை மற்றும் அதன் திருத்தம், கிகாலி ஒப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது. “Montreal Protocol: Advancing Climate Actions” என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும். ஓசோன் அடுக்கு மீண்டும் உருவாவதை சமீபத்திய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. 2066இல் அண்டார்டிகாவிலும், 2045இல் ஆர்க்டிக்கிலும், 2040இல் உலகளவில் முழு ஓசோன் அடுக்கும் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிகாலி திருத்தம் 2100ஆம் ஆண்டளவில் புவி வெப்பமடைதலை 0.5°C வரை குறைக்க எண்ணம் கொண்டுள்ளது. ஓசோன் படல சிதைவு முக்கியமாக அண்டார்டிகாவில் ஏற்படுகிறது.
15. நடுவணரசால் ஆதரிக்கப்படும் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் திட்டமானது எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
அ. 2020
ஆ. 2021
இ. 2019
ஈ. 2017
- விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (FTSCs) வன்புணர்வு வழக்குகள் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை கையாள்வதில் மிகவும் திறமையானவை. FTSCகள் 2019இல் மத்திய நிதியுதவி திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது; அது 2026 வரை நீட்டிப்புசெய்யப்பட்டது. மத்திய அரசு FTSC-களுக்கு நிர்பயா நிதியத்தின்மூலம் நிதியளிக்கிறது; மேலும் நீதித்துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. வன்புணர்வு மற்றும் POCSO வழக்குகளை விரைவாக தீர்த்து வைப்பதே குறிக்கோள். தற்போது, 410 பிரத்தியேக POCSO நீதிமன்றங்கள் உட்பட 755 FTSC-கள் 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுகின்றன. 2022இல், FTSCகள் 83% வழக்குகளுக்குத் தீர்வுகண்டுள்ளன.
16. அண்மையில், கடற்பாசி சாகுபடிக்கான சிறப்பு மையமாக அரசாங்கம் நியமித்த ஆராய்ச்சி நிறுவனம் எது?
அ. ICAR-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம்
ஆ. ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
இ. ICAR-மத்திய தீவு வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
ஈ. ICAR-மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்
- மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள மீன்வளத்துறை, ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தை கடற்பாசி சாகுபடிக்கான சிறப்பு மையமாக நியமித்துள்ளது. கடற்பாசி என்பது கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் வளரும் பல்வேறு வகையான கடல்சார் தாவரங்கள் மற்றும் பாசிகளைக் குறிக்கிறது. கடற்பாசி பச்சை (குளோரோபைட்டா), பழுப்பு (பயோபைட்டா) மற்றும் சிவப்பு (ரோடோஃபைட்டா) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து ரீதியாக கடற்பாசியானது கால்சியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களையும், வைட்டமின்கள் A, B12, C, D மற்றும் Eஐ வழங்குகிறது. இது அழற்சி-எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்போன்ற நல நன்மைகளை வழங்குகிறது மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. கடற்பாசி பற்பசை மற்றும் அழகுசாதனப்பொருட்களில் பிணைப்பு முகவராக உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது; மேலும் விவசாய உற்பத்தியை அதிகரிக்கிறது.
17. அண்மையில், டாப்கன் கோப்பையில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் யார்?
அ. அன்மோல் ஜெயின்
ஆ. சரப்ஜோத் சிங்
இ. சௌரப் சௌத்ரி
ஈ. அன்ஷு சிங்
- குருகிராமில் உள்ள டாப்கன் ஷூட்டிங் அகாதெமியில் நடைபெற்ற மதிப்புமிக்க டாப்கன் கோப்பைக்கான போட்டியில், இந்தியாவின் தலைசிறந்த பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர் அன்மோல் ஜெயின், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அமெரிக்க வீரர் ஜெஃப் பிரவுனிங் தங்கப்பதக்கம் வென்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப்போட்டியில் சிறந்த துப்பாக்கி சுடும் திறமைகள் வெளிப்பட்டன. முன்னாள் தேசிய சாம்பியனும், ISSF உலகக்கோப்பையில் பதக்கம் வென்றவருமான அன்மோல் ஜெயின், நிகழ்வின் உயர்தரத்தைப் பாராட்டினார்.
18. ‘சிவிங்கிப்புலிகள் திட்டம்’ தொடங்கப்பட்ட ஆண்டு எது?
அ. 2020
ஆ. 2021
இ. 2022
ஈ. 2023
- ஆப்பிரிக்க சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவரும் நோக்கிலான நடுவண் அரசின், ‘சிவிங்கிப் புலிகள்’ திட்டம், கடந்த 1952இல் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அந்தப்புலி இனம் ஈராண்டுகளுக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. 2022இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பெரும்பூனைகளின் முதல் கண்டங்களுக்கு இடையேயான வாழ்விடமாற்றத்தைக் குறிக்கிறது. இதுவரை, 20 சிவிங்கிப்புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசியப்பூங்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளன (2022 செப்டம்பரில் நமீபியாவிலிருந்து எட்டு மற்றும் 2023 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பன்னிரண்டு).
- இந்தியா வந்த சிவிங்கிப்புலிகளுள் எட்டு இறந்துவிட்டன. பிறந்த 17 குட்டிகளுள் 12 உயிருடன் உள்ளன. குனோவில் உள்ள சிவிங்கிப்புலிககளின் மொத்த எண்ணிக்கை தற்போது 24 ஆகும். இந்தத் திட்டம் இனங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலமைப்புகளை மீட்டெடுப்பது மற்றும் சூழல் சுற்றுலா மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
19. அண்மையில், விளையாட்டுகளில் ஊக்கமருந்து எதிர்ப்புபற்றிய உயர்மட்ட சர்வதேச கூட்டங்களை நடத்திய நாடு எது?
அ. இந்தியா
ஆ. நேபாளம்
இ. பூட்டான்
ஈ. மியான்மர்
- CPO9 அமைப்பின் இரண்டாவது முறையான கூட்டம் மற்றும் விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான UNESCO பன்னாட்டு மாநாட்டின்கீழ் நிதி ஒப்புதல் குழுவின் மூன்றாவது முறையான கூட்டம் 2024 செப்டம்பர்.17-18 ஆகிய தேதிகளில் புது தில்லியில் இந்தியா நடத்தியது.
- இளையோர் நலன் & விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் இக்கூட்டங்களில், அஜர்பைஜான், பார்படோஸ், எஸ்டோனியா, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, சவுதி அரேபியா, செனகல், சிங்கப்பூர், நெதர்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜாம்பியாபோன்ற நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்புப்பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான UNESCO பன்னாட்டு மாநாட்டின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஊக்கமருந்து பயன்பாடு எதிர்ப்பு, நியாயமான விளையாட்டு நடைமுறைகளின் வளர்ச்சி மற்றும் விளையாட்டில் ஒருமைப்பாட்டின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில், உலகளாவிய ஒத்துழைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடுகள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளுக்கு இக்கூட்டங்கள் ஒரு முக்கிய தளமாக செயல்படும்.
20. அண்மையில், பிரான்சின் லியோனில் நடைபெற்ற 2024 – உலகத் திறன்கள் போட்டியில், இந்தியா, எத்தனை பதக்கங்கள் மற்றும் சிறப்புப் பதக்கங்களைப் பெற்றுள்ளது?
அ. 16
ஆ. 18
இ. 26
ஈ. 28
- பிரான்சின் லியோனில் நடந்த 2024 – உலகத் திறன்கள் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி 4 வெண்கலப்பதக்கங்களையும், 12 சிறப்புப்பதக்கங்களையும் வென்றது. வெண்கலங்களை வென்றவர்கள்: பலகாரம் மற்றும் தின்பண்டம் பிரிவில் அஷ்விதா போலிஸ் (தெலுங்கானா), தொழில்துறை 4.0 பிரிவில் துருமில் குமார் காந்தி மற்றும் சத்யஜித் பாலகிருஷ்ணன் (குஜராத்), வரவேற்பு பிரிவில் ஜோதிராதித்யா ரவிக்குமார் (தில்லி) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் அமரேஷ் குமார் சாஹு (ஒடிஸா). தனது சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் சிறந்த விருதையும் அஸ்விதா போலிஸ் பெற்றார்.
21. அண்மையில், பேரிடர் மேலாண்மைகுறித்த தேசிய கருத்தரங்கமான, ‘ஐக்யா பயிற்சி’ நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை
ஆ. விசாகப்பட்டினம்
இ. வாரணாசி
ஈ. இந்தூர்
- சென்னையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய இராணுவத்தின் தென்னகப் படைப்பிரிவு இணைந்து, ‘AIKYA’ என்ற 2 நாள் தேசிய கருத்தரங்கத்தை நடத்தின.
- இது பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் முக்கிய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வில் உருவகப்படுத்துதல்கள், தொழில்நுட்ப விவாதங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பாத்திரங்கள் பற்றிய நிபுணர் நுண்ணறிவு ஆகியவை அடங்கும். பங்கேற்பாளர்களில் ரெயில்வே, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பேரிடர் அதிகாரிகள் மற்றும் இந்திய இராணுவத்தினர் ஆகியோர் அடங்குவர். IMD, தொலையுணரி மையங்கள் மற்றும் மத்திய நீராணைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
22. அண்மையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரவு மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எந்தத் துப்பாக்கிச்சுடும் வீரர் / வீராங்கனையை தனது விளம்பரத்தூதராக நியமித்துள்ளது?
அ. சரப்ஜோத் சிங்
ஆ. மானு பாக்கர்
இ. விஜய் குமார்
ஈ. சுவப்னில் குசலே
- மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கிச்சுடும் வீராங்கனையான மானு பாக்கரை அதன் விளம்பரத்தூதராக நியமித்தது. 2024 செப்டம்பர்.17 அன்று, தமிழ்நாட்டில், சென்னையில் நடந்த ஒரு நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் இதை அறிவித்தார். “நாட்டின் வளர்ச்சிக்கான பெண்ணாற்றலை பயன்படுத்தல்” எனப்படும் இந்த நிகழ்வு பெண் சாதனையாளர்களை கௌரவிக்கின்றது. சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக ஆணையம் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன. சென்னை துறைமுகத்தின் பன்னாட்டு கப்பல் முனையத்தில் இந்நிகழ்வு நடந்தது.
23. அண்மையில், தேசியத் தலைநகரப் பிரதேசமான தில்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
அ. விஜய் சிங்லா
ஆ. அரவிந்த் கெஜ்ரிவால்
இ. அதிஷி மர்லேனா
ஈ. ராகவ் சாதா
- 2024 செப்டம்பர்.17 அன்று, ஆம் ஆத்மி கட்சி (AAP) தில்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனாவைத் தேர்ந்தெடுத்தது. தில்லி மதுவிலக்கு வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பதவி விலகிய அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து இது நடந்தது. மூன்று முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், பிணைபெற்றபின் தனது பதவி விலகல் கடிதத்தை தில்லி துணைநிலை ஆளுநர் VK சக்சேனாவிடம் வழங்கினார். கல்காஜியின் சமஉ.ஆன அதிஷி மர்லேனா, தில்லியின் முதலமைச்சராக பணியாற்றும் மூன்றாவது பெண் மற்றும் எட்டாவது நபராவார். தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 பிப்.11 அன்று முடிவடைகிறது; 2020 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
24. 2024 – ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கானப் போட்டியில் வென்ற நாடு எது?
அ. இந்தியா
ஆ. சீனா
இ. பாகிஸ்தான்
ஈ. தென் கொரியா
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஹாக்கி அணி, செப்.17 அன்று ஐந்தாவது முறையாக ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. சீனாவின் மோகி ஹாக்கி பயிற்சித்தளத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜுக்ராஜ் சிங் கோலடிக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. 51ஆவது நிமிடத்தில் வெற்றி கோலடிக்கப்பட்டது. இந்தியா இதற்குமுன் 2011, 2016, 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து, இந்தியா போட்டியை வென்றது. தென் கொரியாவை வீழ்த்தி பாகிஸ்தான் 3ஆவது இடத்தைப் பெற்ற நிலையில், சீனா முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கிரேக் ஃபுல்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘நேரடி வரி பிரச்னைகள் தீர்வு திட்டம் 2.0’ : அக்டோபரில் தொடக்கம்.
‘நேரடி வரி பிரச்னைகள் தீர்வு திட்டம் 2.0’ அக்.01ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள `35 இலட்சம் கோடி மதிப்பிலான 2.7 கோடி நேரடி வரி பிரச்னைகளுக்கு தீர்வுகாண வழிவகுக்கும்.
கடந்த 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட நேரடி வரி பிரச்னைகள் தீர்வு திட்டத்தின் 1.0மூலம் வரிசெலுத்தும் 1 இலட்சம் பேர் பயனடைந்தனர். இதன்மூலம் அரசுக்கு `75,000 கோடி வரி வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
1. Recently, the first Vande Metro train renamed as ‘Namo Bharat Rapid Rail’ was inaugurated in which state?
A. Haryana
B. Gujarat
C. Uttar Pradesh
D. Karnataka
- India’s first Vande Metro train was renamed as ‘Namo Bharat Rapid Rail.’ The train was launched during Prime Minister Narendra Modi’s visit to Gujarat. It was equipped with modern facilities and advanced safety systems like KAVACH to prevent collisions. The train also had an automatic smoke/fire detection mechanism and a seating capacity of 1,150 passengers.
2. Indian National Centre for Ocean Information Services (INCOIS) comes under which ministry?
A. Ministry of Ports, Shipping and Waterways
B. Ministry of Earth Sciences
C. Ministry of Science and Technology
D. Ministry of New and Renewable Energy
- The Indian National Centre for Ocean Information Services (INCOIS) has launched the Integrated Ocean Energy Atlas. This atlas identifies areas with high potential for generating energy from marine sources. It includes data on various types of marine energy such as solar, wind, wave, tide, currents, ocean thermal, and salinity gradients. The atlas is intended to help policymakers, industries, and researchers utilize energy resources in India’s Exclusive Economic Zone (EEZ). INCOIS, established in 1999 as an autonomous body under the Ministry of Earth Sciences, provides ocean data and advisory services to various sectors.
3. Operation Chakra- III is associated with which institution?
A. NITI Aayog
B. Central Bureau of Investigation
C. National Human Rights Commission
D. National Disaster Response Force
- The Central Bureau of Investigation (CBI) successfully dismantled a cybercrime network involving virtual assets and bullion through Operation Chakra III. This operation was carried out in collaboration with the Federal Bureau of Investigation (FBI) of the US. Operation Chakra, initiated by the CBI in 2022, is a global effort supported by INTERPOL to tackle organized cyber-enabled financial crimes. Phase 1 of the operation began in 2022, followed by Phase 2 in 2023, with Phase 3 recently concluding.
4. Recently, the WHO granted approval for its first mpox vaccine for adults in which continent?
A. Europe
B. Asia
C. Australia
D. Africa
- The World Health Organization (WHO) recently approved its first Mpox vaccine for use in Africa. The vaccine, developed by Bavarian Nordic A/S, is a major step forward in tackling Mpox in the African region. With this approval, the vaccine can be pre-qualified for purchase by international donors like GAVI and UNICEF. Although there is limited supply due to having only one manufacturer, this vaccine is crucial for controlling outbreaks and enhancing public health in Africa.
5. Recently, the Prime Minister of India inaugurated the “Global Renewable Energy Investor’s Meet (RE-INVEST) 2024” in which state?
A. Rajasthan
B. Gujarat
C. Madhya Pradesh
D. Maharashtra
- The Prime Minister inaugurated RE-INVEST 2024 in Gujarat, which is the 4th edition of the Global Renewable Energy Investors Meet and Expo. This event highlights renewable energy, investment opportunities, and major infrastructure projects worth Rs 9,000 crore. It was held in Gandhinagar, Gujarat, marking the first time RE-INVEST was hosted outside Delhi.
6. What is the primary objective of the ‘NPS Vatsalya scheme’, recently launched by Finance Minister of India?
A. To help parents and guardians plan for their children’s future financial needs
B. To offer education loans to students for higher education
C. To provide health insurance to tribal families
D. None of the above
- Nirmala Sitharaman, the Union Finance Minister, launched the NPS Vatsalya scheme for minors on 17 September 2024 in New Delhi. The event was attended by schoolchildren and held in 75 locations across India. The scheme was initially announced in the 2024-25 union budget. NPS Vatsalya is regulated by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA).
- It allows parents or guardians to open an account for their children to save for future financial needs. The funds accumulate until the child turns 18, after which they are transferred to a standard NPS account.
7. What is the theme of “8th INDIA WATER WEEK 2024”?
A. Water Cooperation – Coping with 21st Century Challenges
B. Water Security for Sustainable Development with Equity
C. Partnership and cooperation for inclusive water development and management
D. Water and Energy for Inclusive Growth
- President Draupadi Murmu inaugurated the 8th India Water Week on 17 September 2024 in New Delhi. The event runs from 17 to 20 September 2024 and is held at Bharat Mandapam. The Union Jal Shakti Minister, Gajendra Singh Shekhawat, was present at the inauguration. India Water Week is based on Stockholm Water Week, focusing on water management and cooperation. The International Wash Conference 2024 is also taking place alongside the event. The theme is “Partnerships and Cooperation for Inclusive Water Development and Management.”
8. Recently, the Prime Minister of India inaugurated “Tuticorin International Container Terminal” in which state?
A. Tamil Nadu
B. Kerala
C. Gujarat
D. Andhra Pradesh
- The Tuticorin International Container Terminal in Tamil Nadu was inaugurated, described as a key part of India’s marine infrastructure. The terminal enhances the capacity of the VO Chidambaranar Port, contributing to India’s goal of becoming a developed nation. It has a deep draft of over 14 meters and a 300-meter-long berth, helping reduce logistics costs and save foreign exchange. Tamil Nadu plays a vital role in India’s economic growth, with significant investments in port development, including an Outer Harbour Container Terminal. The port is also recognized for its role in Green Hydrogen and offshore wind energy.
9. Recently, who has been appointed as the Director General, Sashastra Seema Bal (SSB)?
A. Vikrant Thakur
B. Daljit Singh Chaudhary
C. Amrit Mohan Prasad
D. Sachin Sinha
- A senior Indian Police Service (IPS) officer from the Odisha cadre, Amrit Mohan, has been appointed Director General of Sashastra Seema Bal (SSB). He is currently serving as Special Director General of the Central Reserve Police Force (CRPF). His appointment is approved until his superannuation on August 31, 2025.
- Sashastra Seema Bal (SSB) guards India’s borders with Nepal and Bhutan, preventing cross-border crime and smuggling. SSB’s headquarters, Force Headquarters (FHQ), is located in New Delhi, led by a Director-General. The Director-General is supported by an Additional Director-General and various directorates managed by senior officers.
10. ‘Cellulitis disease’ is caused by which pathogen?
A. Bacteria
B. Virus
C. Protozoa
D. Fungi
- Cellulitis disease, once rare, is now common in the erstwhile Karimnagar district, Telangana. It is a serious skin infection caused by bacteria, mainly affecting legs, feet, and toes, but can appear on any part of the body. It usually occurs after an injury or break in the skin, allowing bacteria like streptococcus or staphylococcus to enter. Symptoms include swollen, painful, warm skin, and possibly blisters, spots, or skin dimpling. Other signs include fever, chills, and nausea. If untreated, it can spread to the bloodstream and become life-threatening.
11. Anamalai Tiger Reserve is located in which state?
A. Tami Nadu
B. Kerala
C. Karnataka
D. West Bengal
- The Tamil Nadu Forest Department recently fitted a tracking device on a Nilgiri tahr in the Anamalai Tiger Reserve for research purposes. The reserve is located in the Anamalai Hills in Tamil Nadu, south of the Palakkad gap in the Southern Western Ghats. It is bordered by Parambikulam Tiger Reserve, Chinnar Wildlife Sanctuary, and Eravikulum National Park. The area has diverse habitats, including evergreen, deciduous, thorn forests, and grasslands. It has around 2,500 species of plants, including wild relatives of mango, jackfruit, turmeric, and pepper.
12. Recently, the Ministry of Agriculture is planning to launch the ‘Smart Precision Horticulture Programme’ under which scheme?
A. National Horticulture Mission
B. Rashtriya Krishi Vikas Yojana
C. Pradhan Mantri Fasal Bima Yojana
D. Mission for Integrated Development of Horticulture (MIDH)
- The Union Ministry of Agriculture plans to launch a Smart Precision Horticulture Programme under the Mission for Integrated Development of Horticulture (MIDH).
- The program will use technologies like IoT, AI, drones, and data analytics to boost production while reducing environmental impact. It will cover 15,000 acres over five years, benefiting around 60,000 farmers from 2024-25 to 2028-29. The Agriculture Infrastructure Fund (AIF) provides financing for smart and precision agriculture projects. The government is exploring collaborations with the Netherlands and Israel for modern farming solutions. 22 Precision Farming Development Centres have been set up for testing and adapting new technologies.
13. According to the National Jute Board, jute production is anticipated to decline by what percentage in the fiscal year 2024-25?
A. 15%
B. 20%
C. 25%
D. 30%
- According to the National Jute Board, jute production is anticipated to decline by 20% in the fiscal year 2024-25 primarily due to natural calamities, with floods significantly impacting cultivation areas in key jute-producing states like West Bengal and Assam; this disruption is expected to considerably affect the overall jute yield.
14. Recently, which organization has released “Ozone and UV Bulletin”?
A. World Meteorological Organization (WMO)
B. UNEP
C. World Bank
D. UNDP
- The World Meteorological Organisation (WMO) released the 2nd Edition of the Ozone and UV Bulletin on World Ozone Day (16 September). This day celebrates the Montreal Protocol and its amendment, the Kigali Agreement.
- The theme for this year is “Montreal Protocol: Advancing Climate Actions.” Key findings show the ozone layer is recovering, with ozone-depleting substances (ODS) decreasing. Full recovery is expected by 2066 over Antarctica, 2045 over the Arctic, and 2040 globally. The Kigali Amendment could reduce global warming by 0.5°C by 2100. Ozone depletion is mainly caused by ODS, especially in the Antarctic.
15. Fast-track special courts (FTSCs) is a centrally sponsored scheme launched in which year?
A. 2020
B. 2021
C. 2019
D. 2017
- Fast Track Special Courts (FTSCs) are more efficient in handling rape cases and those under the Protection of Children from Sexual Offences (POCSO) Act. FTSCs were launched in 2019 under a centrally sponsored scheme, extended until 2026. The Centre funds FTSCs through the Nirbhaya Fund, and the Department of Justice implements the scheme. The goal is swift disposal of rape and POCSO cases. Currently, 755 FTSCs, including 410 exclusive POCSO courts, are operational across 30 states/UTs. In 2022, FTSCs resolved 83% of cases.
16. Recently, the government has designated which research institute as a Centre of Excellence for seaweed cultivation?
A. ICAR-Central Institute Brackishwater Aquaculture
B. ICAR-Central Marine Fisheries Research Institute
C. ICAR-Central Island Agricultural Research Institute
D. ICAR-Central Institute of Agricultural Engineering
- The Department of Fisheries, under the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying, has designated the ICAR-Central Marine Fisheries Research Institute as a Centre of Excellence for seaweed cultivation. Seaweed refers to various species of marine plants and algae that grow in oceans, rivers, and lakes. Seaweed is classified into green (Chlorophyta), brown (Phaeophyta), and red (Rhodophyta). Nutritionally, seaweed provides minerals like calcium, sodium, and potassium, and vitamins A, B12, C, D, and E. It offers health benefits such as anti-inflammatory and antimicrobial properties and is used in cancer treatment. Seaweed is also used in manufacturing as a binding agent in toothpaste and cosmetics, and enhances agricultural productivity.
17. Recently, which Indian shooter won the gold medal in the men’s 10m air pistol event at the Topgun Cup?
A. Anmol Jain
B. Sarabjot Singh
C. Saurabh Chaudhary
D. Anshu Singh
- India’s top pistol shooter, Anmol Jain, won gold in the Men’s 10m Air Pistol event at the prestigious TOPGUN CUP, held at Topgun Shooting Academy in Gurugram. In the Men’s 10m Air Rifle, American shooter Jeff Browning took the gold. The two-day competition showcased top shooting talent. Anmol, a former National Champion and ISSF World Cup medalist, praised the event for its high standards and competitive spirit.
18. ‘Project Cheetah’ was launched in which year?
A. 2020
B. 2021
C. 2022
D. 2023
- The Central government’s Project Cheetah, aimed at reintroducing African cheetahs to India, has reached a significant milestone two years after the species was declared extinct in 1952. Launched in 2022, this ambitious project marks the first intercontinental translocation of big cats.
- So far, 20 cheetahs have been relocated to Kuno National Park in Madhya Pradesh—eight from Namibia in September 2022 and twelve from South Africa in February 2023. Since their arrival, eight adult cheetahs have died, but 17 cubs were born, with 12 surviving, bringing the total number of cheetahs in Kuno to 24. The project aims to conserve the species, restore ecosystems, and boost eco-tourism and local communities.
19. Recently, which country hosted high-level international meetings on anti-doping in sports?
A. India
B. Nepal
C. Bhutan
D. Myanmar
- India hosted two major international meetings on the global fight against doping in sports on September 17 and 18. These included the 2nd Formal Meeting of the COP9 Bureau and the 3rd Formal Meeting of the Fund Approval Committee under UNESCO’s International Convention against Doping in Sport.
- As Vice-Chairperson of the COP9 Bureau, India played a leading role in organizing the events, with participation from dignitaries from countries like Azerbaijan, France, Russia, and more. Discussions focused on strengthening anti-doping measures and promoting fair sports globally, with senior UNESCO officials also in attendance. High-profile dignitaries attended in-person, including ministers from Azerbaijan, Türkiye, and Saudi Arabia.
20. How many medals and medallions of excellence recently earned by India at the World Skills 2024 competition in Lyon, France?
A. 16
B. 18
C. 26
D. 28
- India performed impressively at the WorldSkills 2024 competition in Lyon, France. The Indian team won 4 Bronze medals and 12 Medallions of Excellence, showing its growing skills on the global stage. Bronze medals were earned by: Ashwitha Police (Telangana) in Patisserie and Confectionery, Dhrumilkumar Gandhi and Sathyajith Balakrishnan (Gujarat) in Industry 4.0, Joethir Adithya Ravikumar (Delhi) in Hotel Reception and Amaresh Kumar Sahu (Odisha) in Renewable Energy. Ashwitha Police also received the Best of Nation Award for her outstanding performance.
21. Recently, where was the national symposium ‘Exercise AIKYA’ on disaster management held?
A. Chennai
B. Visakhapatnam
C. Varanasi
D. Indore
- A two-day national symposium, Exercise AIKYA, was held by the National Disaster Management Authority and the Army Southern Command in Chennai. It aimed to improve disaster preparedness and foster collaboration among key stakeholders. The event included simulations, technology discussions, and expert insights on disaster management roles. Participants included representatives from various sectors like railways, transport, health, and environment, along with disaster authorities and the Indian army. Officials from IMD, remote sensing centers, and the Central Water Commission also attended.
22. Recently, the Ministry of Ports, Shipping and Waterways has appointed which olympic medalist shooter as its brand ambassador?
A. Sarabjot Singh
B. Manu Bhaker
C. Vijay Kumar
D. Swapnil Kusale
- The Union Ministry of Ports, Shipping & Waterways appointed Manu Bhaker, a double Olympic medalist shooter, as its Brand Ambassador. This was announced by Union Minister Sarbananda Sonowal during an event in Chennai, Tamil Nadu, on 17 September 2024. The event, called the 4th Harnessing of the Nari Shakti for the Development of the Nation, aimed to honor women achievers. It was jointly organized by the Chennai Port Authority and the Kamarajar Port Authority. The event took place at the International Cruise Terminal of the Chennai Port.
23. Recently, who became the new Chief Minister of NCT Delhi?
A. Vijay Singla
B. Arvind Kejriwal
C. Atishi Marlena
D. Raghav Chadha
- On 17 September 2024, Aam Aadmi Party (AAP) elected Atishi Marlena as the new Chief Minister of Delhi. This followed the resignation of Arvind Kejriwal, who stepped down after facing corruption charges in the Delhi Liquor Excise case.
- Kejriwal, a three-time Chief Minister, tendered his resignation to Lieutenant Governor V.K. Saxena after being granted bail. Atishi Marlena, MLA from Kalkaji, becomes the third woman and eighth person to serve as Delhi’s Chief Minister. Delhi’s Legislative Assembly term ends on 11 February 2025, with AAP holding 62 seats from the 2020 election.
24. Which country won the ‘Men’s Asian Hockey Champions Trophy 2024’?
A. India
B. China
C. Pakistan
D. South Korea
- The Indian men’s hockey team, led by Harmanpreet Singh, won the Men’s Asian Hockey Champions Trophy for a record fifth time on 17 September 2024. India defeated China 1-0 in the final held at Moqi Hockey Training Base, China, with Jugraj Singh scoring the winning goal in the 51st minute. India had won the trophy previously in 2011, 2016, 2018, and 2023.
- India remained unbeaten in the tournament, defeating China, Japan, Malaysia, South Korea, and Pakistan. China reached their first-ever final, while Pakistan secured 3rd place after defeating South Korea. Craig Fulton is the Indian team’s coach.