Tnpsc Current Affairs in Tamil & English – 19th & 20th October 2024
1. உலக உணவு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 16
ஆ. அக்டோபர் 17
இ. அக்டோபர் 18
ஈ. அக்டோபர் 20
- உலக உணவு நாள் ஒவ்வோர் ஆண்டும் அக்.16 அன்று ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவு & ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. சிறந்த விதைகள், நீர்ப்பாசனம் மற்றும் திறமையான பண்ணை இயந்திரங்கள்மூலம் உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 2.33 பில்லியன் மக்கள் இன்னமும் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்; இது உலகளாவிய உணவுப்பாதுகாப்பை அடைவதற்கான மிகப்பெரிய சவாலாகும். “Right to Foods for a Better Life and a Better Future” என்பது நடப்பாண்டின் கருப்பொருள் ஆகும். 2013இல் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
2. 2024 – பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
அ. டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ராபின்சன்
ஆ. ஜோசப் ஈ. ஸ்டிக்லிட்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஜே. ஹெக்மேன்
இ. பால் க்ரூக்மேன் மற்றும் எஸ்தர் டஃப்லோ
ஈ. ஜேம்ஸ் ஜே. ஹெக்மேன் மற்றும் ஆண்ட்ரி ஷ்லீஃபர்
- 2024 – பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு, நிறுவனங்கள் பொருளாதார வளத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சிக்காக டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன் மற்றும் ஜேம்ஸ் ஏ ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உலக நாடுகளின் வளமைக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள மூவரின் ஆராய்ச்சி உதவியதற்காகவும், நாட்டின் வளமைக்கு சமூக நிறுவனங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை மூவரின் ஆராய்ச்சி எடுத்துரைத்ததற்காகவும் அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. அன்ன பாக்யா திட்டத்தைத் தொடங்கிய மாநில அரசு எது?
அ. இராஜஸ்தான்
ஆ. குஜராத்
இ. கர்நாடகா
ஈ. மகாராஷ்டிரா
- அன்ன பாக்யா திட்டம் என்பது கர்நாடகாவில் தொடங்கப்பட்ட பணப்பரிமாற்ற முயற்சியாகும்; இது பயனாளிகளுக்கு நிபந்தனையற்ற பணப்பரிமாற்றங்களை வழங்குவதன்மூலம் உணவுப்பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கம் எனக்கொண்டது. இந்தப் புதுமையான அணுகுமுறை குடும்பநலனை மேம்படுத்தவும், நிதி உள்ளடக்கலை அதிகரிக்கவும், விளிம்புநிலை சமூகங்களிடையே சேமிப்பையும் எளிதாக்குகிறது. வழக்கமான உணவுப்பொருள் வழங்கல் முறைகளிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக்குறிக்கும் வகையில், விநியோகிப்பதற்கான கூடுதல் அரிசி கிடைக்காததற்குப் பதிலளிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
4. ‘eMigrate V2.0’ இணைய நுழைவு மற்றும் திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. வெளியுறவு அமைச்சகம்
இ. பாதுகாப்பு அமைச்சகம்
ஈ. சுற்றுலா அமைச்சகம்
- தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் Dr S ஜெய்சங்கர் ‘eMigrate V2.0’ இணைய நுழைவு மற்றும் திறன்பேசி செயலியை தொடங்கி வைத்தார். ‘eMigrate’ இணைய நுழைவானது இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிக்கிறது. புதிய பதிப்பு இந்திய புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இது ஐநா வளங்குன்றா வளர்ச்சி இலக்குகளின் இலக்கு-10 (பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இடம்பெயர்வு) உடன் இணைகிறது. திறமையான தொழிலாளர்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, 2015ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்வுக்கான ஒப்பந்தங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
5. இந்தியக்கடற்படையால் இரண்டு பல்நோக்குக்கப்பல் திட்டத்தின்கீழ் பணியில் சேர்க்கப்பட்ட முதலாவது கப்பலின் பெயர் என்ன?
அ. விக்சித்
ஆ. காவேரி
இ. சமர்த்தக்
ஈ. சமுத்திரா
- சமீபத்தில் இரண்டு பல்நோக்குக்கப்பல் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட ‘சமர்த்தக்’ என்ற முதல் கப்பலை காட்டுப்பள்ளியில் உள்ள L&T கப்பல்கட்டுந்தளத்தில் இந்தியக்கடற்படை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியானது இந்தியாவின் தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய திட்டங்களின் ஒருபகுதியாகும்; இது உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்கிறது. “ஆதரவாளர்” என்று பொருள்படும் “சமர்த்தக்” கப்பல்களை இழுத்துச்செல்வது, ஏவுகணைகளை செலுத்துவது மற்றும் ஆயுதங்களைச் சோதனைசெய்வது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 106 மீ நீளம், 16.8 மீ அகலம் கொண்ட இந்தக் கப்பல் 15 நாட் வேகத்தில் பயணிக்கும்.
6. 5ஆவது தேசிய நீர் விருதுகள் – 2023இல், ‘சிறந்த மாநிலம்’ பிரிவில் விருதைப் பெற்ற மாநிலம் எது?
அ. ஒடிஸா
ஆ. ஜார்கண்ட்
இ. பீகார்
ஈ. குஜராத்
- 5ஆவது தேசிய நீர் விருதுகள் – 2023 ஆனது புது தில்லியில் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த மாநிலத்திற்கான முதல் பரிசை ஒடிஸாவும், இரண்டாம் பரிசை உத்தரபிரதேசமும் பெற்றன. குஜராத் மற்றும் புதுச்சேரி கூட்டாக மூன்றாவது இடத்தைப்பிடித்தன. மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான முயற்சிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. வளங்குன்றா நீர் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்த மொத்தம் 38 வெற்றியாளர்கள் பல்வேறு பிரிவுகளின்கீழ் கௌரவிக்கப்பட்டனர்.
7. ITU – உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம், 2024 தொடங்கப்பட்ட இடம் எது?
அ. ஹைதராபாத்
ஆ. சென்னை
இ. புது தில்லி
ஈ. கொல்கத்தா
- இந்தியா சமீபத்தில் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் (WTSA) 2024ஐ புது தில்லியில் நடத்தியது. இந்தியாவிலும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் இந்த முக்கிய நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
- 6G, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையவெளிப் பாதுகாப்புபோன்ற தொழில்நுட்பங்களுக்கான எதிர்கால தர நிலைகளை விவாதிக்கவும் நிறுவவும் WTSA 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்தது.
8. மின்சார வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்த அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ANRF) தொடக்கிய இயக்கத்தின் பெயர் என்ன?
அ. MAHA-EV இயக்கம்
ஆ. வளங்குன்றா EV இயக்கம்
இ. EMPS இயக்கம்
ஈ. சார்தக் இயக்கம்
- அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையானது (Anusandhan National Research Foundation) அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் முன்னேற்றத்திற்கான இயக்கம் – மின்சார வாகனம் (MAHA-EV) இயக்கத்தை அறிவித்தது. MAHA-EV இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், EV துறையில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதற்கும் முக்கிய EV தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. MAHA-EV இயக்கம் மின்சார வாகன (EV) கூறுகளுக்கான வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழலமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மின்கலங்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள் மற்றும் இயக்கிகள் (PEMD) மற்றும் மின்னேற்ற உள்கட்டமைப்பு.
- MAHA- EV இயக்கம் என்பது முக்கியமான அறிவியல் சவால்களைச் சமாளிக்க பல நிறுவன, பல ஒழுங்குமுறை மற்றும் பல புலனாய்வாளர் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குடன் ஒத்துப்போவதுடன் இப்பகுதியில் உலகளாவிய நிலைப்பாட்டை உருவாக்க, நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியத் துறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தி செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
9. அண்மையில், உத்தரபிரதேச மாநில அரசு கீழ்க்காணும் எந்த நகரத்தில், ஹிந்தி இலக்கியத்திற்கான நாட்டின் முதல் மொழி அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது?
அ. வாரணாசி
ஆ. கோரக்பூர்
இ. அயோத்தி
ஈ. பிரயாக்ராஜ்
- பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்றத் தொகுதியான காசியில் ஹிந்தி இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மொழி அருங்காட்சியகத்தை உத்தர பிரதேச அரசு தொடங்கியுள்ளது. இந்த அருங்காட்சியகம் கபீர்தாஸ் மற்றும் முன்ஷி பிரேம்சந்திராபோன்ற புகழ்பெற்ற ஹிந்திமொழி அறிஞர்களின் கையெழுத்துப்பிரதிகள், நிழற்படங்கள் மற்றும் ஆவணங்களை காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. `25 கோடி மதிப்பீட்டில், இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்தும் விதமாக இது நிறுவப்பட்டுள்ளது.
10. 2024 – உலக தரநிலைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Protecting the planet with standards
ஆ. Shared Vision for a Better World: Standards for the Changing Climate
இ. Shared Vision for a Better World
ஈ. Video standards create a global stage
- பாதுகாப்பு & நுகர்வோர் திருப்திக்காக தன்னார்வத் தரங்களை உருவாக்கும் நிபுணர்களை கௌரவிப்பதற்காக அக்.14 அன்று உலக தரநிலைகள் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1946ஆம் ஆண்டில் உருவான இது, 1947இல் தரநிலைப்படுத்தலுக்கான பன்னாட்டு அமைப்பு (ISO) உருவாவதற்கு வழிவகுத்தது. முதல் அதிகாரப்பூர்வ உலக தரநிலை நாள் 1970இல் அனுசரிக்கப்பட்டது. தேசிய தரநிலை அமைப்புகளும் ISO, ITU, ASME மற்றும் IESBAபோன்ற அமைப்புகளும் இந்நாளைக் குறிக்கின்றன. “Shared Vision for a Better World: Standards for the Changing Climate” என்பது நடப்பாண்டின் கருப்பொருளாகும்.
11. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்டிகோ இன்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
அ. ஆகர்ஷி காஷ்யப்
ஆ. அஷ்மிதா சாலிஹா
இ. தன்யா ஹேமந்த்
ஈ. மானசி ஜோஷி
- ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்டிகோ இன்டர்நேஷனல் சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்யா ஹேமந்த் பட்டம் வென்றார். அவர் 21-17, 21-17 என்ற நேர் செட்களில் தைபேயின் துங் சியோ-டாங்கை தோற்கடித்தார். இது தன்யாவின் மூன்றாவது பன்னாட்டு அளவிலான பட்டமும் 2024இல் அவரது முதல் பட்டமும் ஆகும். அவர் போலந்து ஓபன் மற்றும் அஜர்பைஜான் இன்டர்நேஷனல்-2024இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 2022இல் இந்தியா இன்டர்நேஷனல் மற்றும் 2023இல் ஈரான் ஃபஜ்ர் இன்டர்நேஷனல் பட்டங்களை அவர் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் மற்றும் ரூபன் குமார் ரெத்தினசபாபதி ஆகியோர் தைபேயின் சென் செங் குவான் மற்றும் பொலி-வேயிடம் தோற்றனர்.
12. மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின் (ICDRA) 19ஆவது பன்னாட்டு மாநாட்டை நடத்திய நாடு எது?
அ. இந்தியா
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. ஆஸ்திரேலியா
- இந்தியாவால் நடத்தப்படும் மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின் (ICDRA) 19ஆவது பன்னாட்டு மாநாடானது மருந்துக்கட்டுப்பாடு, அறிவைப்பகிர்ந்துகொள்வது மற்றும் நுண்ணுயிரெதிர்ப்பு மறுப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் AIஇன் பங்குபோன்ற சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒழுங்குமுறை ஆணையங்களை ஒன்றிணைத்தது. COVID-19-க்குப் பிந்தைய தரமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான அணுகலை உறுதிசெய்வதன்மூலம் “உலகின் மருந்தகம்” என்ற அதன் நிலையை இந்தியா அங்கீகரித்துள்ளது.
1. Which day is observed as World Food Day?
A. October 16
B. October 17
C. October 18
D. October 20
- World Food Day is celebrated on October 16 each year by the United Nations Food and Agriculture Organisation (FAO). It highlights the commitment to ensure food and nutritional security globally. Significant advancements in food production have been made through better seeds, irrigation, and efficient farm machinery. About 2.33 billion people still face food insecurity, which is a challenge for achieving global food security. This year’s theme is “Right to Foods for a Better Life and a Better Future.” The National Food Security Act (NFSA), passed in 2013, aimed to provide subsidized grains to two-thirds of India’s population.
2. Who have been awarded the Nobel Prize in Economics 2024?
A. Daron Acemoglu, Simon Johnson, and James Robinson
B. Joseph E. Stiglitz and James J. Heckman
C. Paul Krugman and Esther Duflo
D. James J. Heckman and Andrei Shleifer
- The 2024 Nobel Prize in Economic Sciences was awarded to Daron Acemoglu, Simon Johnson, and James A Robinson for their research on how institutions affect economic prosperity. They distinguished between inclusive and extractive institutions, emphasizing that societies with poor rule of law and concentrated power do not foster growth. Their findings link the historical choices made by colonizers regarding institutions to present-day economic disparities, highlighting the importance of inclusive systems for long-term prosperity.
3. Which state government launched the Anna Bhagya Scheme?
A. Rajasthan
B. Gujarat
C. Karnataka
D. Maharashtra
- The Anna Bhagya Scheme is a cash transfer initiative launched in Karnataka, aimed at enhancing food security by providing unconditional cash transfers to beneficiaries, enabling them to purchase food grains. This innovative approach has shown to improve household welfare, increase financial inclusion, and facilitate savings among marginalized communities. The scheme was introduced as a response to the unavailability of additional rice for distribution, marking a significant shift from traditional food rationing methods.
4. Which ministry launched eMigrate V2.0 web portal and mobile app?
A. Ministry of Home Affairs
B. Ministry of External Affairs
C. Ministry of Defence
D. Ministry of Tourism
- External Affairs Minister Dr S Jaishankar inaugurated the eMigrate V2.0 web portal and mobile app in Delhi. The eMigrate portal promotes safe and legal migration for Indian workers. The new version reflects the government’s commitment to protecting the rights and dignity of Indian migrants. It aligns with Goal 10 of the UN Sustainable Development Goals, supporting safe and responsible migration. Global demand for skilled workers is increasing, and India is negotiating migration agreements since 2015.
5. What is the name of the first vessel launched under the two Multi-Purpose Vessel (MPV) project by the Indian Navy?
A. Viksit
B. Kaveri
C. Samarthak
D. Samudra
- The Indian Navy recently launched Samarthak, the first vessel of the Multi-Purpose Vessel (MPV) project at L&T Shipyard, Kattupalli. This initiative is part of India’s Aatmanirbhar Bharat and Make in India programs, promoting indigenous shipbuilding. Samarthak, meaning “Supporter,” is designed for various roles including towing ships, launching targets, and testing weapons. The vessel is 106 meters long, 16.8 meters wide, and can reach speeds of 15 knots.
6. Which state has bagged the best state award in 5th National Water Awards 2023?
A. Odisha
B. Jharkhand
C. Bihar
D. Gujarat
- The 5th National Water Awards 2023 were announced in New Delhi. Odisha won the first prize for Best State, followed by Uttar Pradesh in second place. Gujarat and Puducherry jointly secured third place. The event, led by Union Minister C.R. Patil, aimed to recognize efforts in water conservation and management. A total of 38 winners were honored in various categories, promoting awareness of sustainable water practices.
7. Where was the ITU – World Telecommunication Standardization Assembly, 2024 inaugurated?
A. Hyderabad
B. Chennai
C. New Delhi
D. Kolkata
- India recently hosted the World Telecommunication Standardization Assembly (WTSA) 2024 in New Delhi, marking the first time this pivotal event is held in India and the Asia-Pacific region. The WTSA brings together industry leaders, policymakers, and tech experts from over 190 countries to discuss and establish future standards for technologies like 6G, Artificial Intelligence, and cybersecurity.
8. What is the name of the mission initiated by Anusandhan National Research Foundation (ANRF) to advance Electric Vehicle technology?
A. MAHA-EV Mission
B. Sustainable EV mission
C. EMPS mission
D. Sarthak mission
- The Anusandhan National Research Foundation (ANRF) launched the MAHA-EV Mission to advance electric vehicle (EV) technology. It aims to reduce import dependency, boost domestic innovation, and make India a global leader in the EV sector. The mission is part of ANRF’s program to tackle critical scientific challenges through collaboration. Focus areas include Tropical EV Batteries, Power Electronics, Machines and Drives (PEMD), and EV Charging Infrastructure. It will enhance India’s capability in EV component design and development. The mission supports global competitiveness, innovation, and promotes a greener, sustainable future with electric mobility.
9. Recently, the Uttar Pradesh government has established country’s first language museum of Hindi literature in which city?
A. Varanasi
B. Gorakhpur
C. Ayodhya
D. Prayagraj
- The Uttar Pradesh government is launching India’s first language museum dedicated to Hindi literature in Kashi, the parliamentary constituency of PM Narendra Modi. This museum aims to showcase manuscripts, photographs, and documents of renowned Hindi scholars like Kabirdas and Munshi Premchandra. With a budget of Rs 25 crore, it will include an amphitheater and garden, enriching the cultural heritage of the region.
10. What is the theme of World Standards Day 2024?
A. Protecting the planet with standards
B. Shared Vision for a Better World: Standards for the Changing Climate
C. Shared Vision for a Better World
D. Video standards create a global stage
- World Standards Day is celebrated on October 14 to honor experts who create voluntary standards for safety and consumer satisfaction. It originated in 1946, leading to the creation of the International Organisation for Standardisation (ISO) in 1947. The first official World Standards Day was held in 1970. National standards bodies and organisations like ISO, ITU, ASME, and IESBA mark the day with events like seminars and exhibitions. This year’s theme is “Shared Vision for a Better World: Standards for the Changing Climate.”
11. Who has won women’s singles title at the Bendigo International Challenge badminton tournament in Australia?
A. Aakarshi Kashyap
B. Ashmita Chaliha
C. Tanya Hemanth
D. Manasi Joshi
- Tanya Hemanth won the women’s singles title at the Bendigo International Challenge badminton tournament in Australia. She beat Taipei’s Tung Ciou-Tong in straight games, 21-17, 21-17. This is Tanya’s third international title and her first in 2024. She was the runner-up at the Polish Open and Azerbaijan International in 2024. Tanya won titles at the India International in 2022 and Iran Fajr International in 2023. In men’s doubles, India’s Hariharan Amsakarunan and Ruban Kumar Rethinasabapathi lost to Taipei’s Chen Cheng Kuan and Po Li-Wei.
12. Which country hosted 19th International Conference of Drug Regulatory Authorities (ICDRA)?
A. India
B. Russia
C. China
D. Australia
- The 19th ICDRA, hosted by India, brings together global regulatory authorities to enhance cooperation in drug regulation, share knowledge, and address challenges like antimicrobial resistance and AI’s role in healthcare. The conference underscores India’s commitment to global health standards, recognizing its position as the “Pharmacy of the World” by ensuring access to quality medicines and vaccines, especially post-COVID-19.