TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil & English – 18th October 2024

1. விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு பணியின் முதன்மை நோக்கம் என்ன?

அ. விண்வெளி ஆய்வு

. படைத்துறை மற்றும் இராணுவப் பயன்பாடுகளுக்கு சிறந்த நிலம் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு

இ. செயற்கைக்கோள் தொடர்பு மேம்பாடு

ஈ. வழிசெலுத்தல் உதவி

  • படைத்துறை & இராணுவப் பயன்பாட்டிற்கான அதிநவீன நிலம் மற்றும் கடல்சார் விழிப்புணர்வுக்கான விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு பணியின் மூன்றாம் கட்டத்திற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் மற்றும் பாதுகாப்பு விண்வெளி நிறுவனம் இந்தத் திட்டத்தை கையாள்கின்றன. SBS-1 2001இல் நான்கு கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது; SBS-2 2013இல் 6 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது. SBS-3, அடுத்த 10 ஆண்டுகளில் 52 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும்; இதன் மதிப்பீடு `26,968 கோடியாகும். ISRO 21 செயற்கைக்கோள்களையும், தனியார் நிறுவனங்கள் 31 செயற்கைக்கோள்களையும், ராணுவம், கடற்படை மற்றும் வான்படைக்கென செலுத்தும்.

2. 2024 – உலகளாவிய பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 102

ஆ. 103

இ. 104

ஈ. 105

  • 27.3 மதிப்பெண்களுடன் ‘தீவிரமான’ பிரிவில் 2024 – உலகளாவிய பட்டினிக் குறியீட்டில், 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. அதன் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், பசி & ஊட்டச்சத்து குறைபாட்டைக் கையாள்வதில் பல தெற்காசிய அண்டை நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. இக்குறியீடானது பட்டினியின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய அளவில் பட்டினியை அளவிடுகிறது மற்றும் கண்காணிக்கிறது. கடந்த 2006ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இது, ஆரம்பத்தில் IFPRI மற்றும் Welthungerhilfe ஆல் வெளியிடப்பட்டது; இப்போது Welthungerhilfe மற்றும் Concern Worldwide ஆகியவற்றால் இணைந்து வெளியிடப்படுகிறது.

3. இந்திய அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில் அறிவிக்கப்பட்ட பிரச்சாரத்தின் பெயரென்ன?

அ. அரசியலமைப்பு விழிப்புணர்வு இயக்கம்

ஆ. அரசியலமைப்பு மேன்மைப்படுத்தல் பிரச்சாரம்

இ. ஜனநாயக இலட்சிய திட்டம்

ஈ. மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை

  • நடுவண் அமைச்சர் கிரண் ரிஜிஜு நவம்பர்.26 அன்று இந்திய அரசியலமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவிற்காக “அரசியலமைப்பு மேன்மைப்படுத்தல் பிரச்சாரத்தை” அறிவிக்கவுள்ளார். இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும். அரசியலமைப்பு, அதன் முக்கியத்துவம் & சட்டசபை விவாதங்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். அரசியலமைப்புச் சட்டத்தை அரசாங்கம் எவ்வாறு பலப்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். பிரச்சாரத்தை மத்திய கலாசார அமைச்சகம் நிர்வகிக்கும்.

4. நாடாளுமன்றங்களுக்கு இடையிலான சங்கத்தின் 149ஆவது பேரவை நடைபெற்ற இடம் எது?

அ. ஜெனீவா

ஆ. லண்டன்

இ. பாரிஸ்

ஈ. புது தில்லி

  • ஜெனீவாவில் நடந்த நாடாளுமன்றங்களுக்கு இடையிலான சங்கத்தின் 149ஆவது பேரவையில் நாடாளுமன்றக் குழு ஒன்று கலந்துகொண்டது. அமைதியான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்துவதில் அவை கவனம் செலுத்தியது. உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான IPU இன் நிர்வாகக்குழுவின் கூட்டங்களில் தூதுக்குழு பங்கேற்றது. அவர்கள் சட்டசபையின்போது மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர். ஜெனீவாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடனும் தூதுக்குழு உரையாடியது. பெரிய மற்றும் சிறிய நாடுகள் என 180 உறுப்பினர்கள் மற்றும் 15 துணை உறுப்பினர்களை IPU உள்ளடக்கியது.

5. சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் மூன்றாவது மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. மகாராஷ்டிரா

இ. தெலுங்கானா

ஈ. குஜராத்

  • தெலுங்கானா மாநில அரசு அனைத்து சமூகத்தினரிடையேயும் நியாயமான வள விநியோகத்தை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக ஒரு விரிவான குடும்ப சாதி கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஆந்திரா மற்றும் பீகாரைத் தொடர்ந்து சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்தும் 3ஆவது மாநிலமாக தெலுங்கானா ஆனது. OBC, SC, ST மற்றும் பிற நலிவடைந்த பிரிவினரின் சமூகப்பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவதை இக்கணக்கெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநிலத்தில் இச்சமூகங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

6. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதலாவது பதக்கத்தை வென்று வரலாறு படைத்த இரண்டு வீரர்கள் யார்?

அ. அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி

ஆ. மதுரிகா பட்கர் மற்றும் இந்து பூரி

இ. மாணிக்க பத்ரா மற்றும் சத்தியன் ஞானசேகரன்

ஈ. நேஹா அகர்வால் மற்றும் பவினா படேல்

  • கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி மகளிர் இரட்டையர் ஜோடியான அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தனர். இந்தச் சாதனை, சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா பெற்ற முதலாவது பதக்கத்தைக் குறிக்கிறது. இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் அகில இந்திய பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவ்விருவர் பெற்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் கடைசியாக கடந்த 1952இல் ஜப்பானின் யோஷிகோ தனகா மற்றும் கோல் நாசிக்வாலா இணை தங்கம் வென்றது.

7. ‘Tenkana Jayamangali’ என்பது சார்ந்த இனம் எது?

அ. பாம்பு

ஆ. சிலந்தி

இ. தவளை

ஈ. பல்லி

  • தேவராயனதுர்கா காப்புக்காட்டில் ஜெயமங்கலி ஆற்றின் தோற்றுவாயில், ‘Tenkana Jayamangali’ என்ற புதிய வகை சிலந்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலந்தியானது ‘Tenkana’ குதிக்கும் சிலந்திகளின் புதிய இனமாக சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்களால்அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய இனமானது தற்போது ‘மனு’ குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள ஈரினங்களைக் கொண்டுள்ளது. நிலத்தில் வாழும் இச்சிலந்தி, தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வட இலங்கையில் காணப்படுகிறது. காய்ந்த மக்குகளுடன்கூடிய நிழல்தரும் புற்கள் மற்றும் பாறை, வறண்ட பகுதிகளில் குட்டையான புற்களைக்கொண்ட எளிமையான பகுதிகள்போன்ற சிக்கலான நுண்ணுயிரிகளில் இது வாழ்கிறது.

8. EnviStats India – 2024 அறிக்கையின்படி, சிறுத்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்துள்ள புலிகள் காப்பகம் எது?

அ. தடோபா அந்தாரி புலிகள் காப்பகம்

ஆ. நாகார்ஜுன சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம்

இ. சரிஸ்கா புலிகள் காப்பகம்

ஈ. பெஞ்ச் புலிகள் காப்பகம்

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட, ‘EnviStats India-2024’ என்ற அறிக்கையானது, நாகார்ஜுனா சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் (NSTR) அதன் சிறுத்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் 55 புலிகள் காப்பகங்களில், முதலிடத்தில் உள்ளது. அந்தக்காப்பகத்தில் 360 சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தல் காப்பகத்தில் 270 சிறுத்தைகள் வசிப்பதாகவும், மேலும் 90 சிறுத்தைகள் அப்பகுதியில் நடமாடுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த சிறுத்தைகள் எண்ணிக்கை 13,874 என மதிப்பிடப்பட்டுள்ளது; ஆந்திர பிரதேசத்தில் 569 சிறுத்தைகள் உள்ளன. NSTR ஆனது 1,401 சகிமீ பரப்பளவில் 80-க்கும் மேற்பட்ட புலிகளைக்கொண்டுள்ளது.

9. அண்மையில், மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கேரளாவின் எந்த மாவட்டத்தில் X-கற்றை ரேடாரை நிறுவ ஒப்புதல் அளித்தது?

அ. வயநாடு

ஆ. கண்ணூர்

இ. மலப்புரம்

ஈ. அங்கமாலி

  • அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப்பிறகு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் X-கற்றை ரேடார் நிறுவ மத்திய புவி அறிவியல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு X-கற்றை ரேடார் 8-12 GHz அதிர்வெண் வரம்பில் கதிர்வீச்சை வெளியிடுகிறது; அது அதன் குறைந்த அலைநீளங்கள் காரணமாக உயர்-தெளிவுத்திறன் நிழற்படங்களை உருவாக்குகிறது. அதிக அதிர்வெண்கள் விரைவான தணிப்புக்கு வழிவகுக்கும் அதே வேளையில், ரேடாரின் பயன்பாடுகளில் நிலச்சரிவு எச்சரிக்கைகளை வழங்ககுவதற்கு, மண்போன்ற துகள் இயக்கங்களைக் கண்காணிப்பதும் அடங்கும். X-கற்றை ரேடார்கள் பெரும்பாலும் மேக உருவாக்கம் மற்றும் ஒளிவீழ்படிவைப் ஆராய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

10. “சிறார்கள் மற்றும் இளையோரின் மனநலம் – சேவை வழிகாட்டுதல்” என்ற அறிக்கையை கூட்டாக வெளியிட்ட நிறுவனங்கள் எவை?

அ. IMF மற்றும் UNDP

ஆ. WMO மற்றும் ILO

இ. WHO மற்றும் UNICEF

ஈ. FAO மற்றும் WHO

  • WHO மற்றும் UNICEF ஆனது “சிறார்கள் மற்றும் இளையோரின் மனநலம் – சேவை வழிகாட்டுதல்” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.10ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மனநல நாளன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. 10-19 வயதுடைய 7 சிறார்களில் 1 சிறார் மனநல நிலைமைகளால், கவலை, மனச்சோர்வு மற்றும் நடத்தை கோளாறுகளால் பாதிக்கப்பட்டுகின்றனர். மனநல நிலைமைகளில் 1/3 பங்கு 14 வயதிற்கு முன்பாகவும், சரிபாதி 18 வயதிற்கு முன்பாகவும் வெளிப்படுகிறது.

11. 2025இல் ISSF ஜூனியர் உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?

அ. நேபாளம்

ஆ. மியான்மர்

இ. இந்தியா

ஈ. பூட்டான்

  • ISSF ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டிகள் 2025இல் இந்தியாவில் நடத்தப்படும் என்பதை ISSF தலைவர் லூசியானோ ரோஸி உறுதிப்படுத்தினார். புது தில்லியில் நடைபெறும் ISSF உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லூசியானோ ரோஸி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்தின் தலைவர் கலிகேஷ் நாராயண் சிங் தியோ செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

12. iDEX என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் திட்டமாகும்?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. விவசாய அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • பாதுகாப்பு அமைச்சகம் innovations for Defence EXcellence (iDEX) திட்டத்தை விரிவுபடுத்த அதிக நிதியை நாடுகிறது. iDEX என்பது சிறந்த பாதுகாப்புக்கான கண்டுபிடிப்புகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய முயற்சியாகும். iDEX ஆனது தற்காப்பு மற்றும் விண்வெளியில் தன்னம்பிக்கை மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக 2018 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இது MSME-கள், புத்தொழில்கள், தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள், R&D நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளை ஈடுபடுத்துகிறது.

1. What is the primary objective of Space Based Surveillance (SBS) mission?

A. Space Exploration

B. Better land and maritime domain awareness for civilian and military applications

C. Satellite communication improvement

D. Navigation assistance

  • The Cabinet Committee on Security approved phase III of the Space Based Surveillance (SBS) mission for enhanced land and maritime awareness for civilian and military use. The National Security Council Secretariat and Defence Space Agency are handling the project.
  • SBS 1 began in 2001 with the launch of four surveillance satellites; SBS 2 followed in 2013 with six satellites. SBS 3 will see India launch 52 satellites in the next decade, costing Rs 26,968 crore. ISRO will launch 21 satellites, and private companies will launch 31, with dedicated satellites for the Army, Navy, and Air Force.

2. What is the rank of India in the 2024 Global Hunger Index?

A. 102

B. 103

C. 104

D. 105

  • India ranks 105th out of 127 countries in the 2024 Global Hunger Index (GHI), with a score of 27.3, placing it in the ‘serious’ category. Despite its economic growth, India lags behind several South Asian neighbors in tackling hunger and malnutrition. The GHI measures and tracks hunger globally, regionally, and nationally, reflecting various dimensions of hunger. Created in 2006, it was initially published by IFPRI and Welthungerhilfe; now co-published by Welthungerhilfe and Concern Worldwide.

3. What is the name of the campaign announced to commemorate the 75th anniversary of the Indian Constitution?

A. Constitution Awareness Drive

B. Constitution Glorification Campaign

C. Democratic Ideals Program

D. None of the Above

  • Union Minister Kiren Rijiju announced a “Constitution Glorification Campaign” for the 75th anniversary of the Indian Constitution on November 26. The campaign will take place in every village across the country. Its goal is to raise awareness about the Constitution, its significance, and the Assembly debates. The initiative aims to highlight how the government has strengthened the Constitution. The campaign will be managed by the Union Ministry of Culture.

4. Where was the 149th assembly of the Inter-Parliamentary Union held?

A. Geneva

B. London

C. Paris

D. New Delhi

  • A parliamentary delegation attended the 149th Assembly of the Inter-Parliamentary Union (IPU) in Geneva. The assembly focused on harnessing science, technology, and innovation for a peaceful and sustainable future. The delegation participated in meetings of the IPU’s governing council, the highest decision-making body. They met counterparts from other parliaments during the assembly. The delegation also interacted with the Indian diaspora in Geneva. The IPU included 180 member parliaments and 15 associate members from both large and small countries.

5. Which state has become the third state to conduct a caste-based census?

A. Kerala

B. Maharashtra

C. Telangana

D. Gujarat

  • The Telangana government has started a comprehensive household caste survey to ensure fair resource distribution among all communities. This makes Telangana the third state to conduct a caste-based headcount, following Andhra Pradesh and Bihar. The survey aims to plan and implement various opportunities for the socio-economic and educational improvement of OBCs, SCs, STs, and other weaker sections. It focuses on enhancing employment and political opportunities for these communities in the state.

6. Which two players created history by winning India’s first medal at the Asian Table Tennis Championships?

A. Ayhika Mukherjee and Sutirtha Mukherjee

B. Madhurika Patkar and Indu Puri

C. Manika Batra and Sathiyan Gnanasekaran

D. Neha Agarwal and Bhavina Patel

  • India’s top women’s doubles pair, Ayhika Mukherjee and Sutirtha Mukherjee, made history by winning a bronze medal at the Asian Table Tennis Championships in Astana, Kazakhstan. This achievement marks India’s first-ever medal in women’s doubles at the championships. They became the first all-India women’s doubles pair to win a medal in this competition. The last medal in women’s doubles was won in 1952 by Gool Nasikwala, who secured gold with Japan’s Yoshiko Tanaka.

7. Tenkana Jayamangali belongs to which species?

A. Snake

B. Spider

C. Frog

D. Lizard

  • A new species of spider, named Tenkana jayamangali, has been discovered at the origin of the Jayamangali River in the Devarayanadurga reserve forest. This spider has been recognized as a new genus of Tenkana jumping spiders by arachnologists. The new genus contains two species currently classified within the ‘manu’ group.
  • The male and female specimens were analyzed, revealing DNA that did not match any known species, leading to the new genus identification. The spider is ground-dwelling and found in southern Indian states and northern Sri Lanka. It inhabits complex microhabitats like shaded grasses with dry leaf litter and simpler areas with short grasses in rocky, dry regions.

8. According to EnviStats India-2024 report, which tiger reserve has been ranked first for its leopard population?

A. Tadoba Andhari Tiger Reserve

B. Nagarjuna Sagar-Srisailam Tiger Reserve

C. Sariska Tiger Reserve

D. Pench Tiger Reserve

  • The recently released ‘EnviStats India-2024’ report ranked the Nagarjuna Sagar-Srisailam Tiger Reserve (NSTR) first among India’s 55 tiger reserves for its leopard population, estimating around 360 leopards. The report states that 270 leopards inhabit the reserve, while another 90 move through the area. India’s overall leopard population is estimated at 13,874, with 569 leopards in Andhra Pradesh. NSTR also hosts more than 80 tigers across 1,401 square kilometers.

9. Recently, the Union Ministry of Earth Sciences approved an X-band radar to be installed in which district of Kerala?

A. Wayanad

B. Kannur

C. Malappuram

D. Angamaly

  • The Union Ministry of Earth Sciences approved the installation of an X-band radar in Kerala’s Wayanad district after recent floods and landslides. An X-band radar emits radiation in the 8-12 GHz frequency range, producing high-resolution images due to its shorter wavelengths.
  • While higher frequencies lead to faster attenuation, the radar’s applications include monitoring particle movements, such as soil, to provide landslide warnings. X-band radars are often used to study cloud development and light precipitation.

10. Which organizations jointly released the ‘Mental health of children and young people – Service guidance’ Report?

A. IMF and UNDP

B. WMO and ILO

C. WHO and UNICEF

D. FAO and WHO

  • WHO and UNICEF released a report titled ‘Mental Health of Children and Young People – Service Guidance.’ The report was launched on World Mental Health Day, celebrated every year on October 10 since 1992. Approximately 1 in 7 children aged 10 to 19 are affected by mental health conditions, with anxiety, depression, and behavioral disorders being the most common. One-third of mental health conditions emerge before age 14, and half before age 18, highlighting the importance of early intervention.

11. Which country is the host of ISSF Junior World Cup in 2025?

A. Nepal

B. Myanmar

C. India

D. Bhutan

  • The ISSF Junior World Cup will be hosted by India in 2025, confirmed by ISSF President Luciano Rossi. Mr. Rossi made this announcement at a press conference before the ISSF World Cup Final in New Delhi. Kalikesh Narayan Singh Deo, president of the National Rifle Association of India (NRAI), attended the press conference.

12. iDEX is a scheme of which ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of Agriculture

C. Ministry of Defence

D. Ministry of Science and Technology

  • The Ministry of Defence is seeking more funds to expand the Innovations for Defence Excellence (iDEX) scheme. iDEX stands for Innovations for Defence Excellence and is a key initiative by the Ministry of Defence. iDEX was launched in April 2018 to promote self-reliance and innovation in defence and aerospace. It engages various sectors, including MSMEs, start-ups, individual innovators, R&D institutes, and academia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!