Tnpsc Current Affairs in Tamil & English – 18th July 2024
1. ஷிஜெல்லா தொற்று என்பது எந்தக் காரணியால் ஏற்படும் ஒரு குடல் தொற்றாகும்?
அ. வைரஸ்
ஆ. பூஞ்சை
இ. பாக்டீரியா
ஈ. புரோட்டோசோவா
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஷிஜெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் குடல் நோயான ஷிஜெல்லா தொற்றுக்கு ஒரு தடுப்பூசியை உருவாக்குதற்காக ஓர் இந்திய உற்பத்தியாளருடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஷிஜெல்லா தொற்றானது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் குமட்டல்போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இது முதன்மையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. தற்போது தடுப்பூசி எதுவும் இல்லை. ஷிஜெல்லா ஆண்டுதோறும் சுமார் 125 மில்லியன் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் மற்றும் 160,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.
2. SDG (வளங்குன்றா வளர்ச்சி இலக்குகள்) இந்தியா குறியீடு 2023-24இன் நான்காவது பதிப்பை வெளியிட்ட நிறுவனம் எது?
அ. NABARD
ஆ. NITI ஆயோக்
இ. ஜல் சக்தி அமைச்சகம்
ஈ. SEBI
- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 13 குறிகாட்டிகளில் அதன் முன்னேற்றத்தை மதிப்பிடும் SDG இந்தியா குறியீடு 2023-24இன் நான்காவது பதிப்பை NITI ஆயோக் வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளங்குன்றா வளர்ச்சி குறியீட்டு மதிப்பீடு 2023-24ஆம் ஆண்டில் 71ஆக உள்ளது; இது 2020-21ஆம் ஆண்டில் 66ஆகவும், 2018ஆம் ஆண்டில் 57ஆகவும் இருந்தது. இலக்குகள் 1, 8, மற்றும் 13 ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாடு கண்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் கேரளா ஆகியவை பட்டியலில் 79 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளன. சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் முன்னணியில் உள்ளது.
3. பாறுகளின் (Vulture) பாதுகாப்பு காரணமாக சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாவட்டம் எது?
அ. ஈரோடு
ஆ. கோயம்புத்தூர்
இ. தென்காசி
ஈ. கன்னியாகுமரி
- தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் முக்கிய வாழ்விடங்களில் பாறுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததை ஓர் அண்மைய ஆய்வு வெளிப்படுத்தியது. 2013இல் நிறுவப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் முதுமலை & பந்திப்பூர் புலிகள் காப்பகங்களுடன் இணைக்கப்பட்டு பல்வேறு வனப்பரப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இது யானைகள், புலிகள் மற்றும் தேன்கரடிகள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வனவிலங்குகளின் தாயகமாகும். சந்தனமரக்கடத்தல் மற்றும் வேட்டையாடுதல் ஆகியவை இந்தக் காப்புக்காட்டிற்கான முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.
4. அண்மையில், ஒவ்வோராண்டும் எந்நாளை, ‘அரசமைப்பு படுகொலை நாள்’ என்று அனுசரிக்க நடுவணரசாங்கம் முடிவு செய்துள்ளது?
அ. ஜூன்.25
ஆ. ஜூன்.26
இ. ஜூலை.25
ஈ. ஜூலை.26
- 1975ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலையை நினைவுகூரும் வகையில் ஜூன்.25ஆம் தேதியை, ‘சம்விதான் ஹாத்ய திவாஸ் – அரசமைப்பு படுகொலை நாள்’ என்று நடுவண் அரசாங்கம் கடைப்பிடிக்கவுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அடிப்படை உரிமைகள் பரவலாக இடைநிறுத்தப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுப்புக்காவல் மற்றும் பத்திரிகை தணிக்கை ஆகியவற்றைக் கண்டனர். 38ஆவது திருத்தச்சட்டம் அவசரகால அறிவிப்புகளை நீதித்துறை மறுஆய்வுக்குத் தடையாக மாற்றியது; பின்னர் 1978இல் 44ஆவது திருத்தம் மூலம் இந்த ஏற்பாடு இரத்துசெய்யப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்தக் கொடூரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நாள் மரியாதை அளிக்கிறது.
5. அண்மையில், எந்த நாடு கொலம்பியாவை தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக COPA அமெரிக்கா சாம்பியன்ஷிப்பை வென்றது?
அ. அர்ஜென்டினா
ஆ. பெரு
இ. வெனிசுலா
ஈ. சிலி
- மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொலம்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா தனது 16ஆவது COPA அமெரிக்கா பட்டத்தை வென்றது. இரண்டாவது முறையாக அமெரிக்கா நடத்திய இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. கூடுதல் நேரத்தில் லௌடாரோ மார்டினெஸ் வெற்றி கோலை அடித்தார். இந்த வெற்றி அர்ஜென்டினாவின் தொடர்ச்சியான கோபா அமெரிக்கா வெற்றியைக் குறித்தது; 2022 FIFA உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து அர்ஜென்டினா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.
6. 2024 – விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
அ. ரோஜர் பெடரர்
ஆ. நோவக் ஜோகோவிச்
இ. கார்லோஸ் அல்கராஸ்
ஈ. மேக்ஸ் பர்செல்
- 2024 – விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றனர். நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து கார்லோஸ் அல்கராஸ் தனது இரண்டாவது விம்பிள்டன் பட்டத்தையும், பார்போரா கிரெஜ்சிகோவா தனது முதல் விம்பிள்டன் பட்டத்தையும் வென்றனர். 2024 ஜூலை.01-14 வரை நடைபெற்ற இந்தப் போட்டியானது, இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாகும். மேலும், இந்தப் போட்டி இயற்கையாக வளரும் புல் தரையில் விளையாடப்படும் ஒரே டென்னிஸ் போட்டியாகும்.
7. அண்மையில், கட்கா பிரசாத் சர்மா ஓலி என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் பிரதமரானார்?
அ. நேபாளம்
ஆ. பூட்டான்
இ. மியான்மர்
ஈ. வங்காளதேசம்
- கட்கா பிரசாத் ஷர்மா ஓலியை (K P ஷர்மா ஓலி) நான்காவது முறையாக நேபாளத்தின் பிரதமராக 2024 ஜூலை.15 அன்று நேபாளத்தின் குடியரசுத்தலைவர் இராம் சந்திர பவுடால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, கூட்டணி ஆட்சியை KP சர்மா ஓலி வழிநடத்துகிறார்.
- நேபாள அரசியலமைப்பின்படி, புதிய அரசாங்கம் முப்பது நாட்களுக்குள் கீழ்சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும். KP சர்மா ஓலியின் முந்தைய பதவிக்காலங்கள் 2015-2016, 2018-2021 மற்றும் 2021இல் இருந்தன.
8. 2024 நவ.20-24 வரை கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் முதல் உலக ஒலி-காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (WAVES) இந்தியா நடத்தவுள்ளது?
அ. கேரளா
ஆ. மகாராஷ்டிரா
இ. குஜராத்
ஈ. கோவா
- கோவாவில் 2024.நவ.20-24ஆம் தேதி வரை உலக ஒலி-காட்சி, பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை (World Audio Visual and Entertainment Summit – WAVES) இந்தியா நடத்தவுள்ளது என்று நடுவண் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். புது தில்லியில் நடைபெற்ற இதுதொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் Dr L முருகன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
- ஊடகம், பொழுதுபோக்குத் துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், திறமைசாலிகளை அதிகரிப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். இந்த முயற்சிகள், உயர்தர உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் எனவும் நாட்டில் அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்கிப் பாதுகாக்கும் ஓர் அமைப்பை உருவாக்குவதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
9. எந்த மாநிலத்தின் இயற்கை வேளாண்மை மாதிரியானது மனிதநேயத்திற்கான 2024ஆம் ஆண்டுக்கான குல்பென்கியன் பரிசை வென்றுள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. சிக்கிம்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. கேரளா
- 2016இல் ரைத்து சதிகரா சம்ஸ்தா (RySS)ஆல் தொடங்கப்பட்ட ‘ஆந்திர பிரதேச சமூகம் நிர்வகிக்கும் இயற்கை வேளாண்மை’ முன்னெடுப்பானது, மனிதநேயத்திற்கான 2024ஆம் ஆண்டுக்கான குல்பென்கியன் பரிசை வென்றுள்ளது. போர்த்துகலைச் சார்ந்த காலௌஸ்டி குல்பென்கியன் அறக்கட்டளையால் வழங்கப்படும் இந்தப் பரிசு, உலகளாவிய உணவுப்பாதுகாப்பு, தட்பவெப்பநிலை நெகிழ்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான பங்களிப்புகளை கௌரவிக்கிறது. ஆந்திர பிரதேச சமூகம் நிர்வகிக்கும் இயற்கை வேளாண்மை முன்னெடுப்பானது €1 மில்லியன் மதிப்பிலான இப்பரிசை மண் விஞ்ஞானி ரத்தன் லால் மற்றும் எகிப்தைச் சார்ந்த SEKEMஉடன் பகிர்ந்துகொள்கிறது. 181 பரிந்துரைகளிலிருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் நடுவர் குழுவிற்கு முன்னாள் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் தலைமைதாங்கினார்.
10. அண்மையில், மத்திய உள்துறை அமைச்சரால் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘பிரதமர் சிறப்புக் கல்லூரிகள்’ தொடக்கி வைக்கப்பட்டன?
அ. மத்திய பிரதேசம்
ஆ. அருணாச்சல பிரதேசம்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. உத்தர பிரதேசம்
- மத்திய பிரதேசத்தின் 55 மாவட்டங்களில் பிரதமரின் சிறப்புக்கல்லூரிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோதியின் புதிய கல்விக்கொள்கையை முதல் மாநிலமாக அமல்படுத்தியதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2020இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கையை வலியுறுத்திய அவர், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகளவில் சிறந்து விளங்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதியின் பார்வையையும் எடுத்துரைத்தார். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் மத்திய பிரதேசம் என்றும், பொறியியல் & மருத்துவப்பாடத்திட்டங்களை உள்ளூர் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு பல மாணவர்களுக்கு உதவிய மாநிலம் என்றும் அமித் ஷா பாராட்டினார்.
11. மகாபோதி திருக்கோவில் வளாகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. பீகார்
ஆ. ஒடிசா
இ. மேற்கு வங்காளம்
ஈ. உத்தர பிரதேசம்
- செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நில ஆய்வுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு புவியியல் பகுப்பாய்வு, பீகார் மாநிலம் புத்தகயாவில் அமைந்துள்ள மகாபோதி திருக்கோவில் வளாகத்தில் புதையுண்ட, “பெரும் கட்டிடக் கலை செல்வம்” உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. 2002ஆம் ஆண்டு முதல் UNESCOஇன் உலக பாரம்பரிய தளமாக விளங்கி வரும் மகாபோதி திருக்கோவில், புத்தரின் ஞானம்பெற்ற இடத்தைக்குறிக்கிறது. பொ ஆ மு 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகாவால் கட்டப்பட்டதாகும் இத்திருக்கோவில். அதன் தற்போதைய எஞ்சியுள்ள அமைப்பு 5 முதல் 6ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகும். ஆரம்பகால செங்கல் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு ஆகும்.
12. கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் அசுரர் சமூக மக்கள் முதன்மையாக வசித்து வருகின்றனர்?
அ. தமிழ்நாடு
ஆ. ஜார்கண்ட்
இ. ஒடிசா
ஈ. கேரளா
- குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவான அசுரர் சமூகத்தினர் ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லாவில் உள்ள நெதர்ஹாட் பீடபூமி பகுதியில் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். வனவுரிமைச் சட்டத்தின்கீழ் அம் மக்களுக்கு விரைவில் பலன்கள் கிடைக்கவுள்ளன. 2011 – மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 23,000 மக்கள்தொகைகொண்ட அசுரர்கள் பாரம்பரியமாக இரும்புருக்கிகளாவர். இப்போது முதன்மையாக வேளாண்மை செய்து வருகின்றனர். அவர்கள் முண்டா குடும்பத்தின் ஒருபகுதியான அசூர் மொழியைப் பேசுகிறார்கள்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘கலைஞர்’ மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம்: விலை `2,500.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் `100 நினைவு நாணயத்திற்கு நடுவண் அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டு இந்நாணயத்தை அச்சிடுவதற்கு நடுவண் அரசின் நிதித்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. வெள்ளியும் தாமிரமும் கலந்த இந்த நாணயத்தின் விலை `2,500 ஆகும்.
தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகவும் 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்தவர் ‘கலைஞர்’ மு. கருணாநிதி. இந்த நாணயத்தின் ஒருபக்கம் அரிமாவின் தலையுடன்கூடிய அசோகத் தூண், “சத்தியமேவ ஜெயதே”, “பாரத்” ஆகிய சொற்கள் தேவநாகரி எழுத்திலும் “இந்தியா” என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் ‘கலைஞர்’ மு. கருணாநிதி உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய. “தமிழ் வெல்லும்” என்ற வாசகமும் இடம்பெறுகிறது. “கலைஞர் மு. கருணாநிதி பிறந்த நூற்றாண்டு” (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
2. பாரீஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்கு சென்னாறு தயார்.
பிரான்ஸின் வடக்குப்பகுதியில் 777 கிமீ நீளம் ஓடி கடலில் கடக்கும் சென்னாறு, பாரீஸ் நகரின் ஊடாகவும் கடந்து செல்கிறது. பிரபலமான இந்த ஆற்றில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின்போது தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பையும், நீச்சல் பந்தயங்களையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1. Shigella infection is an intestinal infection caused by which agent?
A. Virus
B. Fungus
C. Bacteria
D. Protozoa
- The Indian Council of Medical Research (ICMR) has partnered with an Indian manufacturer to produce a breakthrough vaccine for shigella infection, an intestinal disease caused by Shigella bacteria. Shigella causes symptoms like diarrhea, stomach pain, fever, and nausea. Highly contagious, it primarily affects children under five. No vaccine currently exists. Shigella causes about 125 million diarrheal cases and 160,000 deaths annually.
2. Which institution recently released the 4th edition of SDG (Sustainable Development Goal) India Index 2023-24?
A. NABARD
B. NITI Aayog
C. Ministry of Jal Shakti
D. SEBI
- NITI Aayog has released the 4th edition of the SDG India Index 2023-24, assessing progress across 113 indicators for all States and Union Territories (UTs). India’s composite score improved from 66 in 2020-21 to 71 in 2023-24, with significant advancements in Goals 1, 8, and 13. Thirty-two States and UTs are classified as front-runners, while Uttarakhand and Kerala topped the list with scores of 79. Chandigarh is the leading Union Territory.
3. Sathyamangalam Tiger Reserve, recently seen in news due to vulture conservation, is located in which district?
A. Erode
B. Coimbatore
C. Tenkasi
D. Kanyakumari
- A recent study reveals a lack of awareness regarding vulture conservation in the key habitats of Sathyamangalam Tiger Reserve in Erode district of Tamil Nadu. Established in 2013, Sathyamangalam Tiger Reserve connects with Mudumalai and Bandipur Tiger Reserves and features diverse forests. It is home to notable wildlife, including elephants, tigers, and sloth bears. Key concerns for the reserve include sandalwood smuggling and poaching, which threaten its ecological balance and conservation efforts.
4. Recently, the government has decided to observe which day as ‘Samvidhan Hatya Diwas’ every year?
A. June.25
B. June.26
C. July.25
D. July.26
- The government will observe June 25 as ‘Samvidhaan Hatya Diwas’ to commemorate the 1975 Emergency imposed by former Prime Minister Indira Gandhi. This period saw widespread suspension of fundamental rights, detention of opposition leaders, and press censorship. The 38th Amendment Act made emergency declarations immune to judicial review, a provision later revoked by the 44th Amendment in 1978. The day honors those who suffered during this tumultuous time in Indian history.
5. Recently, which country secured their 2nd consecutive Copa America championship by defeating Colombia?
A. Argentina
B. Peru
C. Venezuela
D. Chile
- Argentina won their 16th Copa America title by defeating Colombia 1-0 in the final, held at the Hard Rock Stadium in Miami. The tournament, hosted by the USA for the second time, featured 16 teams. Lautaro Martinez scored the winning goal in extra time. This victory marked Argentina’s consecutive Copa America win and added to their 2022 FIFA World Cup triumph.
6. Who won the men’s single title at the 2024 Wimbledon Tennis Championships?
A. Roger Federer
B. Novak Djokovic
C. Carlos Alcaraz
D. Max Purcell
- Carlos Alcaraz of Spain and Barbora Krejcikova of Czech Republic won the men’s and women’s singles titles at the 2024 Wimbledon Tennis Championships. Alcaraz secured his second consecutive Wimbledon title by defeating Novak Djokovic, while Krejcikova won her first Wimbledon title. The tournament, held from 1-14 July 2024, is the third Grand Slam event of the year and the only one played on natural grass.
7. Recently, Khadga Prasad Sharma Oli has become Prime Minister of which country?
A. Nepal
B. Bhutan
C. Myanmar
D. Bangladesh
- Khadga Prasad Sharma Oli (K P Sharma Oli) was sworn in as Prime Minister of Nepal for the fourth time on 15 July 2024 by President Ram Chandra Paudel. Oli leads a coalition government after the fall of Pushpa Kamal Dahal ‘Prachanda’s government. Per Nepal’s constitution, the new government must seek a vote of confidence from the lower house within 30 days. Oli’s previous terms were in 2015-2016, 2018-2021, and 2021.
8. India will host the first World Audio Visual and Entertainment Summit (WAVES) in which state from November 20-24, 2024?
A. Kerala
B. Maharashtra
C. Gujarat
D. Goa
- India will host the first World Audio Visual and Entertainment Summit (WAVES) in Goa from 20-24 November 2024. The announcement was made by Union Minister Ashwani Vaishnaw, with Goa Chief Minister Pramod Sawant and Minister Dr L Murugan present.
- Vaishnaw emphasized the government’s commitment to supporting the media and entertainment sector and aims to make India a global content creation hub through supportive policies and strong intellectual property rights.
9. Which state’s natural farming model won the 2024 Gulbenkian Prize for Humanity?
A. Tamil Nadu
B. Sikkim
C. Andhra Pradesh
D. Kerala
- The Andhra Pradesh Community Managed Natural Farming (APCNF) initiative, launched by Rythu Sadhikara Samstha (RySS) in 2016, has won the 2024 Gulbenkian Prize for Humanity. Awarded by Portugal-based Calouste Gulbenkian Foundation, the prize honors contributions to global food security, climate resilience, and ecosystem protection. APCNF shares the €1 million prize with soil scientist Rattan Lal and Egypt-based SEKEM. Selected from 181 nominations, the award jury was chaired by former German Chancellor Angela Merkel.
10. Recently, Union Home Minister inaugurated ‘PM College of Excellence’ in which state?
A. Madhya Pradesh
B. Arunachal Pradesh
C. Andhra Pradesh
D. Uttar Pradesh
- Union Home Minister Amit Shah inaugurated the Pradhan Mantri Colleges of Excellence in 55 districts of Madhya Pradesh. He congratulated the state for being the first to implement Prime Minister Narendra Modi’s New Education Policy (NEP).
- He highlighted Prime Minister Narendra Modi’s vision for India to excel globally by 2047, emphasizing the New Education Policy (NEP) introduced in 2020. Shah praised Madhya Pradesh as the first state to implement the NEP and its initiative to translate engineering and medical curriculums into the local language, aiding many students.
11. Mahabodhi Temple Complex is located in which state?
A. Bihar
B. Odisha
C. West Bengal
D. Uttar Pradesh
- A geospatial analysis using satellite images and ground surveys revealed “huge architectural wealth” buried in the Mahabodhi temple complex in Bodh Gaya, Bihar. The Mahabodhi Temple, a UNESCO World Heritage Site since 2002, marks the Buddha’s Enlightenment spot. Built by Emperor Asoka in the 3rd century B.C., the current structure dates to the 5th-6th centuries and is a key example of early brick architecture and sculptural reliefs.
12. The Asur community primarily resides in which state?
A. Tamil Nadu
B. Jharkhand
C. Odisha
D. Kerala
- The Asur community, a particularly vulnerable tribal group (PVTG), resides in the Netarhat plateau region of Gumla, Jharkhand. They will soon receive benefits under the Forest Rights Act. The Asurs, with a population of around 23,000 as per the 2011 census, are traditionally iron-smelters and now primarily cultivators. They speak the Asur language, part of the Munda family.