Tnpsc Current Affairs in Tamil & English – 17th October 2024
1. தெற்காசிய வளர்ச்சி முன்னேற்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. IMF
இ. UNDP
ஈ. UNEP
- உலக வங்கி தெற்காசிய வளர்ச்சி முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது. இது தெற்காசியாவில் உற்பத்தி வளர்ச்சி மற்ற வளர்ந்துவரும் சந்தைப்பகுதிகளைவிட அதிகமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது. தட்பவெப்பநிலை மாற்றம் தெற்காசியாவை கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் பிற வானிலை தொடர்பான சிக்கல்களுக்கு ஆட்படுத்துகி -றது. இந்தப் பகுதியில் பெண் தொழிலாளர் பங்கேற்பு 32% குறைவாக உள்ளது; இது பாலின சமத்துவத்தின்மூலம் வருமான வளர்ச்சிக்கான சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது. பூடானின் பொருளாதாரம் 2024-25 நிதியாண்டில் 7.2% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2. ஜார்க்கண்டில் உள்ள எந்த நிலக்கரி வயல், நிலக்கரி படுகை மீத்தேன் உற்பத்திக்கு அதிக சாத்தியம் உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளது?
அ. ஜாரியா நிலக்கரி வயல்
ஆ. தெற்கு கரன்புரா நிலக்கரி வயல்
இ. கிரிடி நிலக்கரி வயல்
ஈ. ஔரங்கா நிலக்கரி வயல்
- லக்னோவில் உள்ள பீர்பால் சகானி இன்ஸ்டிடியூட் ஆப் பேலியோ சயின்சஸ் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், ஜார்க்கண்டில் உள்ள கிழக்கத்திய தெற்கு கரன்புரா நிலக்கரி வயல்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நுண்ணிய பாலினோமார்ப் பகுப்பாய்வு மற்றும் புவி வேதியியல் மதிப்பீடுகளைப் பயன்படுத்தியது; கிழக்கு சிர்கா நிலக்கரி வயல் கிடி நிலக்கரி வயல்களை விட அதிக ஹைட்ரோகார்பன் திறனைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. தெற்கு கரன்புரா நிலக்கரி வயல் 28 முக்கிய நிலக்கரித் தொகுதிகளைக் கொண்டுள்ளது; அது இந்தியாவின் எரிசக்தித்துறைக்கு இன்றியமையாதது.
3. ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த நகரத்தில் இந்தியா, ‘ஸ்டடி இன் இந்தியா’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது?
அ. துபாய்
ஆ. அபுதாபி
இ. ஷார்ஜா
ஈ. அல் ஐன்
- பன்னாட்டு மாணவர்களை தனது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்ப்பதற்காக ஷார்ஜாவில் நடந்த 20ஆவது பன்னாட்டு கல்விக் கண்காட்சியில் இந்தியா, ‘இந்தியாவில் படிப்பது’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. EdCILஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப்பிரச்சாரமானது, இந்தியாவை உலகளாவிய கல்வி மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பல்வேறு படிப்புகள் மற்றும் உதவித்தொகைபோன்ற பலன்களை வழங்குகின்றன.
- மையப்படுத்தப்பட்ட, ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணைய நுழைவு, மாணவர் சேர்க்கைகளை எளிதாக்குவதோடு மாணாக்கர் திட்டங்களை ஆராயவும், விண்ணப்பிக்கவும், விசாக்களை ஒரே இடத்தில் நிர்வகிக்கவும் உதவுகிறது. இந்தத் திட்டம் 2024-25 கல்வியாண்டில் 69,000 மாணவர்களை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 4,000 அயல்நாட்டு மாணாக்கர் பயின்று வருகின்றனர்.
4. வயநாடு வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. சிக்கிம்
- வயநாடு வனவிலங்கு சரணாலயத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கழுகுகள் கணக்கெடுப்பில் ஒன்பது இடங்களில் எண்பது (80) கழுகுகள் பதிவாகின. வயநாடு வனவிலங்கு சரணாலயம் கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது UNESCOஇன் உலக பாரம்பரிய தளமான நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தின் ஒருபகுதியாகும். இச்சரணாலயம் கர்நாடகாவின் நாகர்ஹோல் மற்றும் பந்திப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் முதுமலைபோன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. இக்காடுகளில் பணியர், குருமக்கள், ஊராளிகள், காட்டுநாயக்கன், அடியார்கள், குறிச்சியர்கள் உட்பட பல்வேறு ஆதிவாசிகள் வாழ்கின்றனர்.
5. அண்மையில், ‘அக்னியஸ்த்ரா’ என்ற பல்லிலக்கு வெடிக்கும் கருவியை, கீழ்க்காணும் எந்த நகரத்தில் வைத்து இராணுவத்தலைவர் அறிமுகப்படுத்தினார்?
அ. புது தில்லி
ஆ. காங்டாக்
இ. கோகிமா
ஈ. ஷில்லாங்
- காங்டாக்கில் நடைபெற்ற இராணுவத்தளபதிகள் மாநாட்டில் இராணுவத்தளபதி உபேந்திர திவிவேதி, பல்-இலக்கு வெடிக்கும் கருவியான, ‘அக்னியஸ்திராவை’ வெளியிட்டார். இது பதுங்குக்குழிகளை அழிப்பதை மேம்படுத்துகிறது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் உதவுகிறது. WEDC என அழைக்கப்படும் இச்சாதனம், 400 மீ வரை தூர வரம்பைக்கொண்ட பழைய கருவியைவிட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தது. மேஜர் ராஜ்பிரசாத் உருவாக்கிய புதிய நுண்செயலி அடிப்படையிலான இவ்வெடிப்பு அமைப்பு, 2.5 கிமீ வரம்பில் கம்பி மற்றும் கம்பியில்லா ஆகிய 2 முறைகளிலும் செயல்படுகிறது. இது பல்-இலக்குகளைத் தேர்ந்தெடுத்து ஒரே நேரத்தில் சுட அனுமதிக்கிறது.
6. 2024 – உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Protect Insects, Protect Birds
ஆ. Water: Sustaining Bird Life
இ. Dim the Lights for Birds at Night
ஈ. Sing, Fly, Soar – Like a Bird
- உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாள் என்பது புலம்பெயர்ந்த பறவைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய நாளாகும். அவற்றின் பாதுகாப்பிற்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. 2024ஆம் ஆண்டில், இது இரண்டு அரைக்கோளங்களிலும் பருவகால புலம்பெயர்வுகளைக் குறிக்கும் வகையில், மே.11 மற்றும் அக்.12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. 2024ஆம் ஆண்டின் கருப்பொருள் “பூச்சிகளைப் பாதுகாத்தல், பறவைகளைப் பாதுகாத்தல்” என்பதாகும்.
7. 2024 – இந்தியா டிஜிட்டல் வேளாண் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. ஹைதராபாத்
ஈ. கொல்கத்தா
- ICFA மற்றும் IIT ரோபார் இணைந்து ஏற்பாடு செய்த 2024 – இந்திய டிஜிட்டல் வேளாண் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. சிறந்த முடிவெடுப்பதற்கும் கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் நிகழ்நேர தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பாரம்பரிய விவசாயத்தை புதுமைப்படுத்தவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் மற்றும் காலநிலை-நெகிழ் அமைப்புகளை உருவாக்கவும் தொழில்நுட்பம் மற்றும் ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதை இந்த நிகழ்வு வலியுறுத்தியது.
8. ஆண்டுதோறும் உலக மூட்டுவலி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. அக்டோபர் 11
ஆ. அக்டோபர் 12
இ. அக்டோபர் 13
ஈ. அக்டோபர் 14
- மூட்டுவலி மற்றும் முடக்குவாத நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்.12ஆம் தேதி உலக மூட்டுவலி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் தாக்கம்பற்றிய புரிதலை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரம்பகால நோயறிதல், சுய மேலாண்மை மற்றும் சரியான சிகிச்சைக்கான அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், “Informed Choices, Better Outcomes” என்பதாகும்.
9. டாரஸ் ஏவுகணையை கூட்டாக உருவாக்கிய நாடுகள் எவை?
அ. ரஷ்யா மற்றும் சீனா
ஆ. ஜெர்மனி மற்றும் சுவீடன்
இ. மியான்மர் மற்றும் நேபாளம்
ஈ. பிரான்ஸ் மற்றும் இந்தியா
- ரஷ்யாவை எதிர்கொள்வதற்காக உக்ரைன் டாரஸ் ஏவுகணைகளை கேட்டுவரும் நிலையில், தென்கொரிய வான் படை ஜெர்மனியின் டாரஸ் ஏவுகணையைக்கொண்டு நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சியை நடத்தியுள்ளது. டாரஸ் ஏவுகணை என்பது 1990களின் நடுப்பகுதியில் ஜெர்மன் மற்றும் சுவீட நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு துல்லியமான-வழிகாட்டப்பட்ட, நீண்டதூரம் செல்லும் ஓர் ஏவுகணையாகும். நிலையான இது, இலக்குகளை அதீத துல்லியத்துடன் தாக்கும். 1,400 கிகி எடையும் சுமார் 5.1 மீ நீளமும் கொண்ட இதனை பல்வேறு தளங்களிலிருந்து ஏவலாம்.
10. சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி இன்னுயிரிழந்த வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ள நினைவிடத்தின் பெயர் என்ன?
அ. பிரேர்னா ஸ்தலம்
ஆ. வீர் ஸ்மாரக்
இ. அமர் ஜவான் ஜோதி
ஈ. மேற்கூறியவை எதுவுமில்லை
- சிக்கிம் மாநிலத்தின் தெற்கு லோனக் ஏரியில் கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த 22 வீரர்களின் நினைவாக பர்டாங்கில் பிரேர்னா ஸ்தலத்தை பாதுகாப்பு அமைச்சர் இராஜ் நாத் சிங் 2024 அக்.11 அன்று திறந்து வைத்தார். இந்த நினைவுச்சின்னம் அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தை அடையாளப்படுத்துவதோடு தேசிய பெருமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உள்ளது. புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தைப் போலவே, இது மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
11. 2024 – அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற ஜப்பானிய அமைப்பின் பெயர் என்ன?
அ. தியான்சுய் சங்கம்
ஆ. நிஹான் ஹிடாங்கியோ
இ. சோம்போ நல அறக்கட்டளை
ஈ. ஜப்பானிய சமூகநலக் கவுன்சில்
- அணுவாயுதங்களை ஒழிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏற்கத்தகா விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்களின் ஜப்பானிய அமைப்பான, ‘நிஹான் ஹிடாங்கியோ’ 2024 – அமைதிக்கான நோபல் பரிசு பெற்றது. ஹிபாகுஷாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இக்குழு, கடந்த 1956ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து, அணுவாயுதக்குறைப்புக்கான உலகளாவிய இயக்கத்தில் முக்கியப்பங்காற்றியுள்ளது.
12. பதுகம்மா திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
அ. தெலுங்கானா
ஆ. கர்நாடகா
இ. மகாராஷ்டிரா
ஈ. கேரளா
- ‘பதுகம்மா’ என்பது தெலுங்கானா மாநிலத்திலும் ஆந்திராவின் சிலபகுதிகளிலும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது சரத் அல்லது ஷரத் ருத்து பருவத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் மலர் திருவிழாவாகும். பொதுவாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் துர்கா நவராத்திரியின்போது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. தெலுங்கானாவின் கலாசார அடையாளத்தின் சின்னமாக பதுகம்மா உள்ளது. கண்கவர் மலர்கள், இனிய பாடல்கள் மற்றும் மதநல்லிணக்கத்துடன் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
1. Which organization released the South Asian Development Update report?
A. World Bank
B. IMF
C. UNDP
D. UNEP
- The World Bank released the South Asian Development Update report, indicating that output growth in South Asia will exceed that of other emerging market regions. Climate change is exposing South Asia to extreme heat, floods, and other weather-related shocks, with smaller firms in India being particularly vulnerable. Female labor force participation in the region is low at 32%, highlighting the potential for income growth through gender equity. Bhutan’s economy is projected to grow by 7.2% in FY25.
2. Which coalfield in Jharkhand has been identified as having high potential for coal bed methane generation?
A. Jharia coalfield
B. South Karanpura coalfield
C. Giridih coalfield
D. Auranga coalfield
- A study by scientists from the Birbal Sahni Institute of Palaeosciences in Lucknow found significant potential for hydrocarbon generation in the eastern South Karanpura coalfield in Jharkhand. The research used microscopic palynomorph analysis and geochemical assessments, showing the eastern Sirka coalfield has more hydrocarbon potential than the Giddi coalfield. The South Karanpura coalfield has 28 major coal blocks and is vital for India’s energy sector.
3. India has recently launched the ‘Study in India’ campaign in which city of UAE?
A. Dubai
B. Abu Dhabi
C. Sharjah
D. Al Ain
- India launched the ‘Study in India’ campaign at the 20th International Education Show in Sharjah to attract international students to its universities. Organized by EdCIL, the campaign aims to position India as a global education hub, showcasing over 590 universities offering diverse courses and benefits like scholarships. The centralized Study in India portal simplifies admissions, helping students explore programs, apply, and manage visas in one place. The program has attracted over 69,000 students for the 2024-25 academic year, with 4,000 already in India.
4. Wayanad Wildlife Sanctuary is located in which state?
A. Tamil Nadu
B. Kerala
C. Karnataka
D. Sikkim
- A recent two-day vulture survey in Wayanad Wildlife Sanctuary recorded 80 vultures across nine locations. Wayanad Wildlife Sanctuary is located in Kerala, within the southern part of the Western Ghats. It is part of the Nilgiri Biosphere Reserve, a UNESCO World Heritage Site. The sanctuary is bordered by protected areas like Nagarhole and Bandipur in Karnataka and Mudumalai in Tamil Nadu. Several adivasi tribes, including Paniyas, Kattunaikkans, Kurumas, Ooralis, Adiyans, and Kurichiyas, live in these forests.
5. Recently, the Army Chief launched ‘Agniastra’ multi-target detonation device in which city?
A. New Delhi
B. Gangtok
C. Kohima
D. Shillong
- Army Chief General Upendra Dwivedi unveiled ‘Agniastra,’ a multi-target detonation device, at the Army Commanders Conference in Gangtok. It improves room interventions and bunker destruction, aiding counter-terrorism operations. The device, known as WEDC, enhances safety and reliability over the older one which had a limited range of 400 meters.
- The new microprocessor-based detonation system, developed by Major Rajprasad, operates in both wired and wireless modes with a range of 2.5 km. It allows selective and simultaneous firing of multiple targets, making it highly effective for safe demolition operations.
6. What is the theme of World Migratory Bird Day 2024?
A. Protect Insects, Protect Birds
B. Water: Sustaining Bird Life
C. Dim the Lights for Birds at Night
D. Sing, Fly, Soar – Like a Bird
- World Migratory Bird Day is a global campaign to raise awareness about conserving migratory birds. It emphasizes the importance of international cooperation for their protection. In 2024, it was celebrated on 11 May and 12 October, marking the seasonal migrations in both hemispheres. The 2024 theme is “Protect Insects, Protect Birds.”
7. Where was the India Digital Agri Conference 2024 organized?
A. New Delhi
B. Chennai
C. Hyderabad
D. Kolkata
- The India Digital Agri Conference 2024, co-organized by ICFA and IIT Ropar, was held in New Delhi. The mission aims to empower farmers with real-time information for better decision-making and boost rural livelihoods. The event emphasized using technology and collaboration to innovate traditional farming, promote sustainability, and build climate-resilient systems.
8. Which day is observed as World Arthritis Day annually?
A. October 11
B. October 12
C. October 13
D. October 14
- World Arthritis Day is observed on October 12 to raise awareness about arthritis and rheumatic diseases. It aims to improve understanding of these conditions and their impact on daily life. The focus is on early diagnosis, self-management, and access to proper treatment. The theme for 2024 is “Informed Choices, Better Outcomes”.
9. Taurus Missile is jointly developed by which countries?
A. Russia and China
B. Germany and Sweden
C. Myanmar and Nepal
D. France and India
- As Ukraine seeks Taurus missiles to counter Russia, the South Korean Air Force conducted a live fire drill with the German-origin Taurus missile. The Taurus missile is a precision-guided, long-range air-to-surface cruise missile developed in the mid-1990s by German and Swedish companies. It can strike stationary and semi-stationary targets with high accuracy. Weighing 1,400 kg and about 5.1 meters long, it can be launched from various platforms.
10. What is the name of the memorial inaugurated for soldiers who died in Sikkim’s flash floods?
A. Prerna Sthal
B. Veer Smarak
C. Amar Jawan Jyoti
D. None of the above
- The ‘Prerna Sthal’ memorial in Sikkim, inaugurated by Defence Minister Rajnath Singh, honors 22 soldiers who lost their lives in the October 2023 glacial lake outburst at South Lhonak Lake. The memorial symbolizes their courage and sacrifice, aiming to inspire national pride. Similar to the National War Memorial in New Delhi, it serves as a tribute to fallen heroes, fostering unity and remembrance across generations.
11. What is the name of the Japanese organization that was recently awarded the 2024 Nobel Peace Prize?
A. Tianshui Association
B. Nihon Hidankyo
C. Sompo Welfare Foundation
D. Japanese Council of Social Welfare
- Nihon Hidankyo, the Japanese organization of atomic bomb survivors, was awarded the 2024 Nobel Peace Prize for its efforts to eliminate nuclear weapons and raise awareness about the humanitarian consequences of their use. The group, representing the Hibakusha, has played a crucial role in the global movement for nuclear disarmament since its founding in 1956.
12. Bathukamma festival is mainly celebrated in which state?
A. Telangana
B. Karnataka
C. Maharashtra
D. Kerala
- Bathukamma is a festival celebrated in the state of Telangana and some parts of Andhra Pradesh. It is a floral festival that celebrates the beginning of the Sarad or Sharath Ruthu season. It is celebrated for nine days during Durga Navratri, usually in September or October. Bathukamma is a symbol of Telangana’s cultural identity and is celebrated with vibrant flowers, songs, and communal harmony.